ஜாதியைத் தூக்கிட்டு வராதீங்க!

அமெரிக்காவில் வாழும் குஜராத்தைச் சேர்ந்த டயலன் பட்டேல் என்பவர், “டல்லாஸில் எனது சாதிக்கான (லியுவா படிதார் சமாஜ் சாதி) வாலிபால் போட்டி நடைபெறுகிறது. அமெரிக்காவில் 40,000 பேர் எங்கள் சாதியினர். அதில் 8,000 பேர் இங்கு உள்ளனர். குஜராத்தின் ஒரு சில பகுதியைச் சேர்ந்தவர்கள் நாங்கள். நாங்கள் அனைவரும் அமெரிக்காவில் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறோம். நாங்கள் கிராமப்புற அமெரிக்காவில் மோட்டல் அல்லது பெட்ரோல் பம்ப் வைத்து உள்ளோம்” என்று ஜாதிப் பெருமையுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

இந்த பதிவுக்கு அமெரிக்காவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஜாதிப் பெருமை பேசிய இந்தியர்களை கடுமையாக விமர்சனம் செய்து அமெரிக்கா அரசியல்வாதிகள் போஸ்ட் செய்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிராண்டன் கில் செய்துள்ள பதிவில், “அமெரிக்கா என்பது தகுதி வாய்ந்தவர்களுக்கான நாடு. இதற்கு காரணம் நம்மிடம் சாதி அமைப்பு இல்லை. இந்தியா போன்ற வெளிநாட்டில் உள்ள வர்க்க வேறுபாட்டை, ஜாதி வேறுபாட்டை இங்கே இறக்குமதி செய்வதன் மூலம் அமெரிக்காவின் செழுமையையும் சுதந்திரத்தையும் நாம் சீர்குலைக்கப் போகிறோம். முறையற்ற குடியேற்றம் காரணமாக அமெரிக்காவின் தேசிய மற்றும் கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது” என்று கடுமையாகச் சாடியுள்ளார். பெரியார் முழக்கம் 13032025இதழ்

You may also like...