டார்வினி – குமரேசன் இணையேற்பு விழா
09.03.25 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணியளவில் விராலிமலை திருமுருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இணையர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அனிவித்து தாங்களும் மலர் மாலையை மாற்றிக் கொண்டனர். பால்.பிராபகரன் (பரப்புரை செயலாளர்) மற்றும் துரைசாமி (மாநில பொருளாளர்) அவர்களும் சேர்ந்து கழகக் கொடியினை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்
சிற்பி பிராஜன் அவர்கள் மந்திரமா?தந்திரமா? நிகழ்வு நடைபெற்றது.
புதியவன் வரவேற்புரை நிகழ்த்தினார்.ம கே பி எம் ஐயப்பன் திமுக மத்திய ஒன்றிய செயலாளர், இளங்குமரன் மேற்கு ஒன்றிய செயலாளர் திமுக, மெடிக்கல் குமார் திமுக மாவட்ட பிரதிநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணமக்களுக்கு சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார். திராவிட முன்னேற்றக் கழக தென்னலூர் பழனியப்பன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்.
பால் பிரபாகரன் பரப்புரை செயலாளர் திவிக, வீ.சிவகாமி தமிழ்நாடு அறிவியல் மன்றம் தலைவர், சூலூர் பன்னீர்செல்வம் தலைமைக்குழு உறுப்பினர், அய்யனார் தலைமைக்குழு உறுப்பினர், முகில் ராசு மாவட்டத் தலைவர் திருப்பூர் திவிக, மனோகரன் திருச்சி மாவட்ட அமைப்பாளர் திவிக, டார்வின் தாசன் திருச்சி திவிக, கோவிந்தராஜ் வனத்துறை ஓய்வு, திருப்பூர் தோழர்கள் ஐயப்பன், ஸ்ரீஜா, மாரிமுத்து பாண்டியநாதன், முருகேசன் (மதுரை), பாலசுப்பிரமணியம் வையம்பட்டி ஒன்றியம் திவிக உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். வீ திருப்பூர் மாநகரத் தலைவர் தனபால் நன்றியுரையாற்றினார்.
பெரியார் முழக்கம் 13032025இதழ்
