இந்துசமய அறநிலையத்துறைக்கு கண்டனம்
“இந்துக் கோயில்களை நிர்வகிப்பதற்கு மட்டுமே உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அண்மைக்காலமாக மக்களிடம் இந்து மதப் பரப்புரை செய்யும் துறையாகவே மாறிவருகிறது. பழனியில் உலக முருகன் மாநாட்டைநடத்தியது. இப்போது மகா சிவராத்திரியை அறநிலையத்துறையின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு முதன்முறையாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடியதாக இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு பெருமைப் படுகிறார். சிவராத்திரி போல் தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி விழாக்களையும் அடுத்தடுத்து கொண்டாட அறநிலையத்துறை திட்டமிட்டு உள்ளதா? என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறோம். மத உணர்வுகளை மக்களிடம் வளர்த்து விடும் அறநிலையத்துறையின் இந்தச் செயல்பாடுகள் மதவாத சக்திகள் வேர்ப் பிடிப்பதற்கு மட்டுமே பயன்படும் என்று சுட்டிக் காட்டுகிறோம். அறநிலையத் துறையின் எல்லை மீறும் செயல்களுக்கு, இந்த மாநாடு கண்டனத்தைப் பதிவு செய்கிறது.
பெரியார் முழக்கம் 27032025இதழ்
