மாநாட்டிலிருந்து சில துளிகள்

பயணக் குழுவினர் மயிலாடுதுறை கேணிக்கறையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியாக முழக்கங்களுடன் மாநாட்டு மேடைக்கு அணிவகுத்து வந்தனர்.
கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனின் திராவிட மாடலா? ஆரிய மாடலா? நூலை (தலையங்கத் தொகுப்பு) கள்ளக்குறிச்சி பயணக்குழு பொறுப்பாளர் இராமர் வெளியிட பயணக்குழுவில் தொடர்ந்து வந்த சென்னை இரண்யா, சேலம் ஆனந்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
ரூபாய் 500 மதிப்புள்ள நூல் 400-க்கு விற்கப்பட்டது. அனைத்து பிரதிகளும் மாநாட்டில் விற்றுத் தீர்ந்தன.
மயிலாடுதுறை மாவட்டக் கழகம் சார்பில் கழக வளர்ச்சிக்கு ரூ.25,000 கழகப் பொருளார் சு.துரைசாமி அவர்களிடம் வழங்கப்பட்டது.
மேடை அருகே அமைக்கப்பட்ட தனித்‌திரையில் பெரியார் பற்றிய குறும்படம் ஒளிப்பரப்பட்டது. குறும்படம் தோழர்கள் இடையே உணர்வலைகளை உருவாக்கியது. .பிரகாஷ் எழுத்தில் கொளத்தூர் கபிலன் ஸ்டுடியோ இந்த குறும்படத்தை உருவாக்கியது.
பயணக் குழுவை வழிநடத்திய இரா.உமாபதி, காவை ஈசுவரன்,‌ கள்ளக்குறிச்சி இராமர்,‌‌ கோவை நிர்மல் பயண அனுபவங்களையும்‌, மக்கள் தந்த ஆதரவுகளையும் விளக்கிப் பேசினர்.
பெரியார் எந்த நோக்கத்திற்காக தனித்தமிழ்நாடு கேட்டாரோ அந்த நோக்கமும் காரணங்களுமே இப்போது அரசியல் போராட்டமாக நடக்கிறது என்று குறிப்பிட்ட பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பயணத்தில் பங்கேற்ற தோழர்களை பாராட்டும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
நிறைவுரை ஆற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி தீர்மானங்களை முன்மொழிந்தார் பெரியார் மீது கை வைத்தால் பார்ப்பனக் கருத்தியலின் வடிவமான சங்கராச்சாரிகளின்‌ முகத்திரை கிழிக்கப்படும்‌ என்று பலத்த கரவொலிகளுக்கிடையே அறிவித்தார்.
கோவன் குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் சனாதன எதிர்ப்புக் கருத்துக்களை கூர்மையாகப் பார்வையாளர்களிடம் கொண்டு சென்று உணர்வலைகளை உருவாக்கியது.
பயணக் குழுவினருக்கு மயிலாடுதுறை மாவட்ட கழகத் தோழர்கள் கழகத்தின் புதிய வெளியீடுகளை பரிசுகளாக வழங்கினர்.
மாநாட்டில் போராசிரியர் செயராமன், கோபி இளங்கோவன், ஆசிரியர் சிவகாமி, புதுவை தீனா, ராஜ்குமார் (காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்), கல்யாணம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), நிவேதா முருகன்(பூம்பூகார் சட்டமன்ற‌ உறுப்பினர்), மோகன் குமார் (விசிக மாவட்டச் செயலாளர்), உரையாற்ற நடராசன்(மயிலாடுதுறை நகரச் செயலாளர்) நன்றியுரையாற்றினார்.
பெரும் எண்ணிக்கையில் தோழர்கள் திரண்டனர் கருஞ்சட்டை கடலாக காட்சி அளித்தது மயிலாடுதுறை.
மாநாட்டு ஏற்பாடுகளை மயிலாடுதுறை மாவட்ட கழகத் தோழர்கள் மகாலிங்கம் (மாவட்ட தலைவர்), தில்லை நாதன், நடராசன்(நகர செயலாளர்), கு.செந்தில் குமார் (மாவட்ட அமைப்பாளர்), சூ ஆரோக்கியதாஸ், பீமராவ், இரா.விக்னேஷ், கே.ரமேஷ், நாஞ்சில் சங்கர்(நகர தலைவர்), மகேஷ் மாவட்டச் செயலாளர், இளையராஜா (தலைமைக் குழு உறுப்பினர்), விஜயராகவன் (மாவட்ட பொருளாளர்), காவியன், கார்த்தி மதன் குமார் (கடலூர் மாவட்ட அமைப்பாளர்)
பிரகாஷ் சிதம்பரம், மகிழ்நன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்தனர். தோழர்கள் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
பெரியார் முழக்கம் 27032025 இதழ்

You may also like...