திராவிடம் பெரியார் யாருக்கு எதிரி ? தூத்துக்குடியில் பொதுக்கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட திவிக சார்பில் திராவிடம் – பெரியார் யாருக்கு எதிரி? என்ற தலைப்பில் தூத்துக்குடி தாளமுத்து நகர் முதன்மை சாலையில் 22.02.2025 அன்று மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்திறகு தூத்துக்குடி மாவட்ட தி.வி.க. பொருளாளர் கே.சந்திரசேகர் தலைமை வகித்தார் மாவட்ட அமைப்பாளர் பால். அறிவழகன் ஆழ்வை ஒன்றிய செயலாளர் இரா. உதயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் விடுதலைக்கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், தமிழர் உரிமைக்காக பாடுபட்ட தலைவர் பெரியாரையும் அவதூறு பேசி வருகிறார்கள். பெரியார் மீது குறை சொல்ல முடியாத தற்குறி அரசியல்வாதிகள் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். தமிழ்நாட்டு மாணவர்களை பாதிக்கும் ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கை 2020 பற்றி மக்கள் சிந்திக்காமல் இருக்க பெரியார் மீது அவதூறு பரப்புகிறார்கள். பெரியார் மீதான விமர்சனத்திற்கு பதிலளித்தும் உரையாற்றினார்.
நிகழ்வில் திராவிட தமிழர் கட்சி சு.க.சங்கர், கிருத்துவ வாழ்வுரிமை இயக்கம் பணி சுந்தரிமைந்தன், மனித நேய மக்கள் கட்சி அகமது இக்பால் கீழப்பாவூர் சு.அன்பரசு குறும்பலாபேரி மாசிலாமணி, தங்கத்துரை, சுப்பையா பாலசுப்பிரமணியன் தமிழர் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் இ.அர்ச்சுனன் வி.சி.க. வழக்குரைஞர் செந்அர்ஜுன். சமம் குடி மக்கள் இயக்கம் ஜான்.பி.இராயர், பு.இ.மு சுஜித், தமிழர் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் ச. இராஜா, மனித நேய ஜனநாயக கட்சி M.M.அசன், ஆதித்தமிழர் கட்சி ஊர்காவலன், தி.மு.க. மாணவரணி இள.கார்த்திக், மனித நேயமக்கள் முன்னேற்ற கழகம் முகமது ஜான் ஆகியோர் உரையாற்றினர் திராவிடர் விடுதலைக் கழக தோழர்களும், தோழமை அமைப்பு தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர். சா.த. பிரபாகரன் நன்றியுரையாற்றினார்.
பெரியார் முழக்கம் 06032025இதழ்
