Author: News DVK

ஜாதிப்பெருமை நூல் அறிமுக விழா!

ஜாதிப்பெருமை நூல் அறிமுக விழா!

மதுரை: திராவிடர் விடுதலைக் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு மக்கள் கட்சி இணைந்து ஜாதிப் பெருமை நூல் அறிமுக கூட்டம், மதுரையில் உள்ள மணியம்மை பள்ளியில் 08.03.2026 நடைபெற்றது. ஊடகவியலாளர் சத்யராஜ் குப்புசாமி, கனியமுதன் (விசிக துணைப் பொதுச் செயலாளர்), பேரறிவாளன் (தமிழ்ப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர்) மற்றும் பிரபாகரன் (புஇமு) ஆகியோர் புத்தகத்திற்கான கருத்துரை நிகழ்த்தினார்கள். காமாட்சி பாண்டியன் (மதுரை மாவட்டத் தலைவர்) வரவேற்புரை ஆற்றினார். தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு மக்கள் கட்சி தலைவர் மணிபாபா தலைமையில் நடைபெற்றது. மதுரைச் சேர்ந்த அனைத்து ஜனநாயக இயக்கங்களும், பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய தோழர்களும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வினை தோழர் தவம் அறக்கலம் வலையொலி (YouTube) பதிவு செய்து வெளியிட்டு உள்ளார். குமரன் (புஇமு) நன்றி கூறினார். – பெரியார் முழக்கம் இதழ் 26032026

கோவை, திருப்பூரில் அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம்!

கோவை, திருப்பூரில் அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம்!

திருப்பூர்: மார்ச்04 (4வது நாள்): கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையிலும் முகில் இராசு மாவட்டத் தலைவர் முன்னிலையிலும் “தொடரட்டும் தமிழ்நாட்டின் சாதனைகள், திமுக அரசை உறுதி செய்வோம்” என்ற தலைப்பில் 4வது நாளாக 04.03.2026 அன்று காங்கேயம், பேருந்து நிலையம், வெள்ளக்கோவில் பகுதியில், முத்தூர் (மூன்று சந்திப்பு சாலையில்), நத்தகாடையூர் ஆகிய பகுதிகளில் தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றன. மார்ச்-05 (5வது நாள்): தாராபுரம், வட தாரை பகுதி, தாராபுரம் அய்ந்து முக்கு சாலை, தாராபுரம், அண்ணா சாலை, தாராபுரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. ஈரோடு இரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்), சூலூர் பன்னீர்செல்வம் (தலைமைக் குழு உறுப்பினர்), பரிமளராசன் (சமூக வலைதளப் பொறுப்பாளர்), முகில் இராசு (மாவட்டத் தலைவர்), சங்கீதா (மாவட்ட அமைப்பாளர்), முத்து (மாநகர அமைப்பளர்), கவி பு.இ.மு காங்கேயம் பகுதி பொறுப்பாளர், ஆறுமுகம் ஆசிரியர் (தி.க காங்கேயம் ஒன்றியத் தலைவர்) கதிர்வன் (தாராபுரம் பகுதியின்...

தாய்கிழவி பேசும் மகளிர்  “உரிமைத் தொகை”

தாய்கிழவி பேசும் மகளிர் “உரிமைத் தொகை”

பாட்டியை கதையின் நாயகியாக்கி வெளிவந்துள்ள “தாய் கிழவி” திரைப்படம் மக்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகை ராதிகா மிகச்சிறப்பான குணச்சித்திர கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். தனது தந்தை நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களுடைய நடிப்பை அப்படியே பிரதிபலித்து இருக்கிறார். பாட்டி தன்னுடைய சொந்த உழைப்பில் நகைகளையும் பணத்தையும் ஈட்டி வட்டிக்கு விடுகிறார். பாட்டி 160 பவுன் நகைகளை தனது கடையில் வாங்கினார் என்று ஒரு மனநோயாளி நகைக்கடைக்காரர் பொய்யாகக் கூறியதை நம்பி அவரது 3 மகன்களும் பாட்டியிடம் இருந்து நகையை தட்டிப் பறிக்கும் சூழ்ச்சிகளைச் செய்கிறார்கள். அந்த மூன்று மகன்களில் ஒருவர் கமல்ஹாசன் ரசிகர்; மற்றொருவர் கருப்பண்ண சாமியின் தீவிர பக்தர்; மற்றொருவர் ஆட்டோ தொழிலாளி. பாட்டியிடம் இருந்து நகைகளை பறிக்க இவர்கள் அரங்கேற்றும் திட்டங்கள் அத்தனையும் தற்குறித்தனமானவை. இடையில் நோய்வாய்ப்பட்டு பாட்டி படுத்த படுக்கையாகி விடுகிறார். அப்போது மூன்று விரல்களை அவர் காட்டிக் கொண்டிருக்கிறார். அந்த மூன்று விரல்களும்...

மாப்பிள்ளை பாஜகதான்; ஆனால் சட்டை என்னுடையது

மாப்பிள்ளை பாஜகதான்; ஆனால் சட்டை என்னுடையது

அதிமுக பாஜக கூட்டணியை அமித் ஷாதான் அறிவித்தார்; இப்போது கூட்டணிக்கான தொகுதி பங்கீடுகளை எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சி அலுவலகத்தில் அறிவித்திருக்கிறார். இதன் மூலம் கூட்டணிக்கான தலைமை தனது கட்சிதான் என்றும் பாஜக அல்ல என்றும் மக்களுக்கு சூசகமாக கூறுகிறார். பாஜக என்ற அடையாளத்தை முன்னிறுத்தினால் தமிழ்நாட்டு மக்கள் அதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்; இந்த உண்மை கட்டாயத்தின் பேரில் கூட்டணியில் இணைக்கப்பட்ட எடப்பாடிக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது. இதன் காரணமாகவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அணியில் சேர மறுத்தார்; இதன் காரணமாகவே இந்த தேர்தல் களம் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் போட்டி என்று சித்தரிக்க விரும்புகிறார் எடப்பாடி.விருப்பமில்லாமல் பாஜக என்ற லக்கேஜை சுமக்க வேண்டி இருக்கிறது என்ற குமுறல்களின் வெளிப்பாடு இது! இந்த தேர்தலில் வெற்றி பெறப்போவது திமுக அணிதான் என்று அமித் ஷாவே தன்னிடம் ஒப்புக்கொண்டதை ஓபிஎஸ் பொதுவெளியில் போட்டு உடைத்து விட்டார். இதற்கு அமித் ஷா -விடமிருந்து எந்த...

சட்டம் ஒழுங்கு மீறலா? சமூக ஒழுங்கு மீறலா? ” தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம்!

சட்டம் ஒழுங்கு மீறலா? சமூக ஒழுங்கு மீறலா? ” தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம்!

“என்.டி.ஏ. கூட்டணியை ஒரே மேடையில் ஏற்றி ஒற்றுமையை மக்களுக்குக் காட்ட வேண்டும் என்பதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த போராட்டம் தான் “சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கான ஆர்ப்பாட்டம்”. ஆனால் இந்தப் போராட்டம் கூட்டணியின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்துவிட்டது. திமுக எதிர்ப்பு இப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் எதிர்ப்பாக உருமாறி விட்டது. கூட்டணிக் கட்சியான பாஜகவினரே அதிமுக சண்முகத்தை வன்மையாகக் கண்டிக்கிறார்கள்.சொந்தக்காசில் சூடு வைத்த கதை தான். அஇஅதிமுக ஆட்சிக் காலத்தைவிட திமுக ஆட்சிக் காலத்தில் குற்றங்கள் குறைவு என்று புள்ளி விவரங்களுடன் உள்துறை செயலாளர் அறிக்கை விடுத்திருக்கிறார். நடப்பது எந்த ஆட்சியாக இருந்தாலும் நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, வன்முறை, பாலுறவு வன்கொடுமை குற்றங்களுக்கு ஆட்சியை குற்றம் சாட்டுவது நியாயமும் இல்லை.அர்த்தமும் இல்லை என்பதே நமது உறுதியான கருத்து. இவை அனைத்தும் சமூகம் சார்ந்த குற்றங்கள் வன்முறைகள். நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து தடுக்கக்கூடிய “மந்திரக் கோல்” எந்த...

பாலியல் கொலையாளிக்கு துணை போகிறதா  காவல்துறை?

பாலியல் கொலையாளிக்கு துணை போகிறதா காவல்துறை?

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் 11.12.2025 அன்று இரண்டரை வயது பெண் குழந்தை சாதிய மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை உடனடியாக கைது செய்யாமலும், சட்டப்படியான சரியான விசாரணையை மேற்கொள்ளாமலும் அஞ்செட்டி காவல் நிலைய ஆய்வாளர் சுமித்ரா மிகுந்த அலட்சியமாக செயல்பட்டு வந்தார். அதனால் காவல் ஆய்வாளர் சுமித்ராவையும், இவ்வழக்கில் வேறு யாரேனும் சம்மந்தப்பட்டிருந்தால் அவர்களையும் விசாரித்து கைது செய்ய வேண்டும் என 17.03.2026 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, சமூக செயல்பாட்டாளர் பியூஷ் மானுஷ், செய்தியாளர் சிவசுப்ரமணி, சமூக செயல்பாட்டாளர் சுரேஷ், செய்தியாளர் சிவகுரு மற்றும் பாதிக்கப்பட்டு இறந்த பெண் குழந்தையின் தந்தை வீட்டார் முறையிட்டனர். இதில் திராவிடர் விடுதலைக் கழக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச்...

சனாதனமும் கோயில் நுழைவும்!

சனாதனமும் கோயில் நுழைவும்!

பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில் நிர்வாகக் குழு தனது கட்டுப்பாட்டில் உள்ள 45 கோயில்களில் “இந்துக்கள் அல்லாத பிற மதத்தினரை அனுமதிப்பதில்லை” என்று முடிவு எடுத்துள்ளது. பாலிவுட் நடிகையான சாரா அலிகான் இந்தக் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி கேட்டார்; அதற்கு பதில் அளித்துள்ள கோயில் தலைமை நிர்வாகி ஹேமந்த் திரிவேதி “தனக்கு சனாதன தர்மத்தில் நம்பிக்கை உண்டு” என்று விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு தந்தால் அனுமதிக்கப்படுவார் என்று கூறியுள்ளார். இந்து அல்லாதோர் கோயில்களுக்குள் தரிசனம் செய்ய விரும்பினால் சனாதன தர்மத்தில் நம்பிக்கை இருக்கிறது என்று உறுதிமொழி விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு தர வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். இந்துக் கடவுள் மீது நம்பிக்கை உண்டு என்று கூறவேண்டிய தேவையில்லை. மாறாக சனாதான தர்மத்தின் மீது அதாவது வர்ணாசிரம தர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்று கூற வேண்டுமாம். சனாதனம் என்றால் என்ன? வடக்கில் இமயமலை முதல் தெற்கில் விந்திய மலைத்தொடர் வரையிலும்;...

தலையங்கம்: உடல் உழைப்பு இழிவானதா?

தலையங்கம்: உடல் உழைப்பு இழிவானதா?

40 சதவித மக்கள் இந்தியாவில் வேலை வாய்ப்பற்றவர்களாக இருக்கிறார்கள் என்று அசிம்பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 40 ஆண்டுகளாக வேலையில்லாத பிரச்சனை நீடித்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டத்துக்கான அடிப்படை காரணங்களாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ள கருத்து மிகவும் முக்கியமானது. மூளையை பயன்படுத்தி செய்யும் வேலை மரியாதைக்குரியதாகவும், உடல் உழைப்பு வேலை இழிவாகவும் கருதும் மனநிலைதான் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கான அடிப்படையான காரணம் என்று சுட்டிக் காட்டுகிறது இந்த ஆய்வு. ஜாதிக் கட்டமைப்பும் வர்க்க வேறுபாடுகளும் இதற்கு அடிப்படையான காரணம் என்றும் கூறுகிறது. நடுத்தர வர்கத்தினரும் அதை நோக்கி செல்லத் துடிப்பவரும் மூளை வேலைகளை உயர்வாகவும் உடல் உழைப்பு வேலைகளை இழிவாகவும் கருதுவதாக அந்த ஆய்வு மேலும் கூறுகிறது. இதற்கு ஜாதி வர்க்கப் பார்வையில் இருந்து சமூகத்தை விடுவிக்க வேண்டும். அப்போதுதான் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க முடியும் என்று ஆய்வு சுட்டி காட்டியிருப்பது மிகச் சரியான கருத்தாகும். பார்ப்பனியம் உருவாக்கிய ஜாதிக் கட்டமைப்பு...

ஜாதி தேவை என்கிறது ஆர்.எஸ்.எஸ்!

ஜாதி தேவை என்கிறது ஆர்.எஸ்.எஸ்!

ஜாதிக் கட்டமைப்பு நீடிக்க வேண்டும்; ஆனால் ஜாதிகளுக்குள்ளே நல்லிணக்கம் வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் கொள்கை என்று அமைப்பின் தேசிய பரப்புரைத் தலைவர் சுனில் அம்பேத்கர் “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆர்.எஸ்.எஸ் ஆதரிக்கிறது. ஆனால் அந்த கணக்கெடுப்பை அரசியலுக்கு பயன்படுத்தி சமூகத்தைப் பிளவுபடுத்தக் கூடாது என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு ஜாதியும் மற்ற பிற ஜாதிகளுடன் நட்புடன் பழகி பாகுபாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ் கொள்கை என்றார். கோயில், சுடுகாடு, நீர்நிலை, பொது இடங்களில் ஜாதிப் பாகுபாடுகளை ஆர்.எஸ்.எஸ் சேர்க்கவில்லை என்றும் சுயம் சேவக்குகள் உள்ளூர் வட்டங்களில் இந்த பாகுபாடுகளை நீக்குவதற்கு செயல்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பெண்கள் சேர்க்கப்படுவது இல்லை; சுயம் சேவக்குகளாக பெண்கள் வர முடியாது என்ற கொள்கையில் ஆர்.எஸ்.எஸ் உறுதியாக இருக்கிறது என்பதை அவரது பேட்டி உறுதிப்படுத்தியது. ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு இணையாக “ராஷ்டிய சேவிகா...

`பெண்கள் பாதுகாப்பு’ தமிழ்நாட்டுக்குப் புகழாரம் சூட்டுகிறார் ஆர்.என்.ரவி!

`பெண்கள் பாதுகாப்பு’ தமிழ்நாட்டுக்குப் புகழாரம் சூட்டுகிறார் ஆர்.என்.ரவி!

அருணாச்சல பிரதேசம், மிசோரம் போன்ற மாநிலங்கள் உருவான தினவிழாவில் தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ஆர்.என் ரவி பேசிய கருத்து சமூகவலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. வடகிழக்கு பெண்கள் தமிழ்நாட்டிற்கு படிக்க சென்றால் அவர்கள் பெற்றோர்கள் எந்தக் கவலையும் இல்லாமல் தமிழ்நாட்டிற்கு அனுப்பலாம். தமிழ்நாடுபோல் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் கிடையாது. தமிழ்நாட்டு மக்கள் மிகவும் அக்கறையுடன், நண்பர்களாக நம்மை கவனித்துக் கொள்வார்கள். தமிழ்நாட்டைப் போல் டெல்லி போன்ற மாநிலங்களுக்கு பெண்களை அனுப்ப இயலாது என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்ற ஆளுநர் ரவிக்கு இந்த “அறிவு ஒளி” கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று புலம்பும் சங்கிகளுக்கு ஆளுநர் ரவியே பதில் கூறிவிட்டார். – பெரியார் முழக்கம் இதழ் 26032026

பாஜகவுக்கு ஒரே நெருக்கடி திமுகதான்

பாஜகவுக்கு ஒரே நெருக்கடி திமுகதான்

ஒன்றிய ஆட்சிக்குக் கடும் நெருக்கடிகளைத் தந்து வரும் ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் என்று கோலாகல சீனிவாசன் என்ற பார்ப்பன பத்திரிகையாளர் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். தீவிர ஆர்.எஸ்.எஸ்-க்காரான இவரது பேட்டி: அகில இந்திய அளவில் பாஜகவை எதிர்க்கக் கூடிய எதிர்க்கட்சிகளின் ஆட்சிகள் பல மாநிலங்களில் இருந்தாலும் ஒன்றிய அரசுக்குத் தலைவலியை தரக் கூடிய ஆட்சி திமுக ஆட்சிதான். சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியது ஆளுநர்களுக்கு எதிரான மிகவும் கடுமையான தீர்ப்பு. இந்த தீர்ப்பு ஒன்றிய அரசுக்கு விழுந்த அடி. ஒரே நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மூலமாக தலைவலி மேற்கு வங்கத்தில் வர உள்ளது. கேரளாவில் பினராயி விஜயனுக்கு உள்ளது. ஆனால் இவர்கள் மூலம் ஒன்றிய அரசுக்குத் தொந்தரவு இருந்ததே கிடையாது. ஆனால் திமுக மிகப்பெரிய தலைவலியாக உள்ளது. ஒவ்வொரு நாளும் திட்டங்களைத் தீட்டி வருகிறார்கள். மம்தா, பினராயைக் காட்டிலும் மோடி எதிர்ப்பில் வலுவாக உள்ளார் மு.க ஸ்டாலின். பெரியார் முழக்கம்...

தீர்வுதேடி தமிழ்நாடு வந்துள்ள உத்தரப்பிரதேசம்

தீர்வுதேடி தமிழ்நாடு வந்துள்ள உத்தரப்பிரதேசம்

மகப்பேறு விகிதத்தை குறைக்க தீர்வுகாண தமிழ்நாடு வந்துள்ளது உத்தரப்பிரதேச திட்டக்குழு. இங்கு செயல்பாட்டில் உள்ள சுகாதார நலத் திட்டங்கள் பற்றி விரிவாக ஆலோசனை நடத்தினர். தமிழ்நாடு வந்துள்ள அம்மாநில திட்டக் குழுவினர் இங்கு மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் கள ஆய்வுகளில் ஈடுபட்டனர். பிரசவத்தின் போது அல்லது பிரசவம் முடிந்த 42 நாட்களுக்குள் இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை மகப்பேறு இறப்பு விகிதம் கணக்கிடப்படுகிறது. அதன்படி ஒரு இலட்சம் பிரசவத்தில் தமிழ்நாட்டில் 35 பேர் மட்டுமே உயிரிழக்கின்றனர். இது உ.பியில் 140-ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் இதழ் 26032026

திராவிட மாடலும் குஜராத் மாடலும்!

திராவிட மாடலும் குஜராத் மாடலும்!

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் கவனம் பள்ளிக் கல்வித்துறையில் தீவிரமாக இருந்தது. பல்வேறு திட்டங்கள் மூலமும் தொடர் சாதனைகளை செய்து வருகிறது. “இல்லம் தேடி கல்வி தொடங்கி, காலைச் சிற்றுண்டி, கலைத் திருவிழா, புதுமைப் பெண், தாயுமானவர் திட்டம், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், கல்விச் சுற்றுலா என ஏராளமான திட்டங்களை வகுத்து அதை சிறப்பாக நடைமுறைப்படுத்தி தமிழ்நாட்டு கல்விக் கட்டமைப்பை அய்ரோப்பிய நாடுகளுக்கு இணையாக உருவாக்கி வருகிறது. அரசின் தொடர் சாதனைகளால் தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களில் 44,439 மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர். மேலும் கல்வியில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் சேர்க்கை 76% விழுக்காடக உயர்ந்துள்ளது. மாணவர்கள் சேர்க்கை 71% விழுக்காடாக அதிகரித்துள்ளது என ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு நேர்மாறாக கல்விக் கட்டமைப்பை சீர்குலைத்து வருகிறது குஜராத் மாடல் பாஜக அரசு. தொடக்கப் பள்ளி,...

26,000 ஒபிசி மருத்துவ மாணவர்களின்கல்வி உரிமையை மீட்டுத்தந்த மு.க.ஸ்டாலின்

26,000 ஒபிசி மருத்துவ மாணவர்களின்கல்வி உரிமையை மீட்டுத்தந்த மு.க.ஸ்டாலின்

மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கோட்டாவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டுமென்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்போராட்டம் நடத்தி, ஒட்டுமொத்த இந்திய இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குமான உரிமையை 2021-இல் நிலைநாட்டினார். அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் என்ற விவரங்களை, அந்த வழக்கை நடத்திய திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் நாடாளுமன்றத்தில் கேட்டுப் பெற்றுள்ளார். அதன்படி, 2021 ஆம் ஆண்­டில் முதன்­மு­றை­யாக இந்த நடை­முறை அம­லுக்கு வந்­த­போது 4,422 ஓபிசி மாண­வர்­கள் மருத்­து­வப் படிப்­பு க­ளில் சேர்ந்­த­னர். இதில் 2,633 பேர் முது­நிலை (PG) படிப்­பு­க­ளி­லும், 1,662 பேர் MBBS படிப்­பி­லும், 127 பேர் BDS படிப்­பி­லும் இடங்­க­ளைப் பெற்­ற­னர். 2022 ஆம் ஆண்­டில் இந்த எண்­ணிக்கை 4,907 ஆக உயர்ந்­தது. அதில் 2,982 முது­நிலை, 1,804 MBBS மற்­றும் 121 BDS சேர்ந்­துள்­ள­னர். 2023 ஆம் ஆண்­டில் 5,484 ஓபிசி மாண­வர்­கள் மருத்­து­வக் கல்­வியில் சேர்ந்­த­னர்....

கழகப்பணிகளைப் பாராட்டி நன்கொடை!

கழகப்பணிகளைப் பாராட்டி நன்கொடை!

கோவை:- சிறுமுகை அருகே உள்ள வெள்ளிக்குப்பம்பாளையத்தைச் சார்ந்தவர் மாரண்ணன். இவர் அரசுப்பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். தனது இளம் வயதில் இருந்தே பொதுவுடைமைக் கொள்கைகள் மீதும், திராவிடர் இயக்கக் கொள்கைகள் மீதும் பெரும் ஈடுபாடு கொண்டவர். மேலும் தமிழ்ச் சமூகத்தின் விடுதலைக்காகப் பாடுபடும் இயக்கங்களை ஊக்குவிப்பதைத் தனது தலையாய கடமையாகக் கொண்டவர் ஆசிரியர் மாரண்ணன். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் இயங்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஜாதி ஒழிப்புப் பணிகளை பாராட்டியும் மேலும் தொடர்ந்து செயல்பட விருப் பத்தைத் தெரிவித்து ரூ.10,000/-யை கழக கோவை மாநகரத் தலைவர் நிர்மல்குமாரிடம் அவர் வழங்கினார். பின்னர் கழகத் தலைவர் கொளத்தூர் மணியுடன் சில நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினார். நிறைவாகக் கழகத்தின் வார இதழான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழுக்கு ஆண்டு சந்தா ரூ.300/- செலுத்தி மகிழ்ந்தார். மேட்டுப்பாளையம் நகரப் பொறுப்பாளர் அமுல்ராஜ், மற்றும் அன்னூர் விஷ்ணு ஆகியோர் உடனிருந்தனர். பெரியார் முழக்கம் இதழ்...

பொள்ளாச்சியில் நடைபெற்ற பெரியாரியல் பயிலரங்கம்!

பொள்ளாச்சியில் நடைபெற்ற பெரியாரியல் பயிலரங்கம்!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் “தேர்தல் அரசியலும் தந்தை பெரியாரும்” என்ற தலைப்பில் “பெரியாரியல் பயிலரங்கம்” 23.02.2026 திங்கள் அன்று காலை 11 முதல் 5 மணி வரை இரண்டு வகுப்புகளாக நடைபெற்றது. கோவை மாவட்ட பொறுப்பாளர் யாழ்.வெள்ளியங்கிரி தலைமை வகித்து தலைமையுரையாற்றினார். ஆனைமலை நகரச் செயலாளர் ஆனந்த், அரிதாசு ஆகிய தோழர்கள் முன்னிலை வகித்தனர். பொள்ளாச்சி நகரச் செயலாளர் சபரிகிரி வரவேற்புரையாற்றினார். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் காசு நாகராசன் “திராவிட மாடல் இன்றும் நாளையும்” என்ற தலைப்பில் திராவிட கட்சிகள் தோன்றிய ஆரம்ப காலத்திலிருந்து மாணவ, மாணவிகள் ஆரம்ப தொடக்கப்பள்ளி தொடங்கி கல்லூரி உயர் படிப்பு முடிக்கும் வரை அவர்களை பல்வேறு திட்டங்களால் ஊக்கப்படுத்தி வாழ்வில் முன்னேற்றி சென்றதையும் நிகழ்கால திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டை அறிவு ஒளி பெற செய்து கொண்டிருப்பதைப் பற்றியும், மீண்டும் இந்தத் திராவிட மாடல் அரசு ஆட்சி அமைத்திட நம்மை போன்ற...

கழகம் இறங்கியது சேலம் கிழக்கு! –  இளம்பிள்ளை  சிந்தாமணியூர்  கே.ஆர் தோப்பூர்  ஏற்காடு  சேலம் மாநகரம்   கொளத்தூர்  பகுதிகளில் கழகப் பிரச்சார அலை!

கழகம் இறங்கியது சேலம் கிழக்கு! –  இளம்பிள்ளை  சிந்தாமணியூர்  கே.ஆர் தோப்பூர்  ஏற்காடு  சேலம் மாநகரம்  கொளத்தூர் பகுதிகளில் கழகப் பிரச்சார அலை!

சேலம் கிழக்கு மாவட்டக் கழகம் “தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்.. திமுக ஆட்சியை உறுதிசெய்வோம்” என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை முனைப்புடன் நடத்தி வருகிறது. கிளைக் கழகத் தோழர்கள் ஏற்பாட்டில் சேலம் கிழக்கு மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் மக்களை சந்தித்து பரப்புரைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன் தொகுப்பு: 3வது நாள் மார்ச்-02 இளம்பிள்ளை: கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் 02.03.2026 நாள் முழுவதும் தாரமங்கலம் பேருந்து நிலையம், சின்னப்பம்பட்டி பேருந்து நிறுத்தம், கொல்லப்பட்டி பேருந்து நிறுத்தம் ஆகிய 3 இடங்களில் கூட்டம் நடைபெற்றது. தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), குடந்தை பாலன், ரமேஷ் (இளம்பிள்ளை நகரச் செயலாளர்) ஆகியோர் தலைமை வகித்தனர். சக்திவேல் (சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர்), டேவிட் (சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்), சந்திரசேகரன் (நங்கவள்ளி நகரச் செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) வரவேற்புரை ஆற்றினார். திமுக தலைமைக்...

வந்துட்டாங்கப்பா தேர்தல் ஆணையம்!

வந்துட்டாங்கப்பா தேர்தல் ஆணையம்!

டும் டும்..டும்…டும்..தேர்தல் அறிவிப்பு வந்தாச்சு; தேர்தல் ஆணையம் களத்தில் இறங்கி விட்டோம்.  இனி வாகனங்களில் லட்சக்கணக்கில் வணிகத்துக்கோ குடும்ப செலவுக்கோ திருமணத்துக்கோ பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்து விடுவோம். நாங்கள் தேர்தலில் பணப்பழக்கத்தையே முற்றாக ஒழித்து விட உறுதி எடுத்து வந்து விட்டோம் இதை நீங்கள் நம்ப வேண்டும்.  அடுத்த 30-நாட்களுக்கு கட்சி அடையாளங்களையே உங்கள் நினைவில் இருந்து அகற்றப் போகிறோம்; இதற்காக சுவர் எழுத்துக்களை அழிக்க கிளம்பிவிட்டோம்; எம்.எல்.ஏ-க்கள் அலுவலகங்களை பூட்டு போட புறப்பட்டு விட்டோம்; தலைவர்கள் படங்கள் அடுத்த ஒரு மாதத்திற்கு அரசு அலுவலகத்தில் இருக்கவே கூடாது அகற்றப் போகிறோம். எந்தத் தலைவரின் நினைவும் உங்கள் கனவில் கூட வரக்கூடாது அதற்கான மந்திரக்கோல் எங்களிடம் இருக்கிறது.  ஆனால் அலுவலகங்களில் பூஜை போடும் சரஸ்வதி,விநாயகர், ராமன் படங்களில் கை வைக்க மாட்டோம். இது பாஜகவின் சின்னம்தான் என்பது எங்களுக்கும் தெரியும். இதில் கை வைத்தால்...

காதில் பூ சுத்துகிறார் எடப்பாடி!‌

காதில் பூ சுத்துகிறார் எடப்பாடி!‌

மதச்சார்பின்மை கொள்கையில் அணுவளவும் மாற மாட்டோம்! – இசுலாமியர்கள் மத்தியில் எடப்பாடி பேச்சு.  முத்தலாக் தடை சட்டத்தை ஆதரிப்பார்.  குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிப்பார்.  திருப்பரங்குன்றத்தில்‌ எல்லைக் கல்லில் விளக்கேற்றி – மதக்கலவரத்தை உருவாக்கும் சங்கிகளை ஆதரிப்பார்.  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பை ஏன் திமுக ஆட்சி ஏற்கவில்லை? என்று கேள்வி கேட்பார். ”திராவிடத்தை அழிக்க முருகா வா!” என்று முருகன் மாநாட்டில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டபோதும், கலவர மாநாட்டுக்கு வாழ்த்து செய்தி அனுப்புவார்.  தங்கள் சகாக்களான செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா, ராஜ் சத்தியன் அவர்களையும் மாநாட்டுக்கு வழியனுப்பி வைப்பார்.  ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவுக்கு முன்னாள் அமைச்சர் வேலுமணியை அனுப்பி வைப்பார்.  அதே முருகன் மாநாட்டில் பெரியார் அண்ணாவை அவமதிக்கும் விடியோ ஒளிபரப்பிய போது பங்கேற்ற அதிமுகவினர் மவுனம் சாதித்தார்கள்.‌எடப்பாடி இதை கண்டிக்க மாட்டார்.  கோயில்...

தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம்

தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம்

தமிழ்நாட்டு அரசியல் களங்களின் தொகுப்பு:  பாஜக தூண்ட முயற்சித்த கலவரங்களும்; உறுதுணையாக இருந்த அதிமுகவும்.  தஞ்சாவூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம்; மதமாற்றம் காரணமல்ல சிபிஅய் அறிக்கை:  அதே 2022 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் அமைந்துள்ள ஒரு கிறுத்துவ பள்ளியில் பயின்ற மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது, “மத மாற்றம் தான் காரணம்” என்று பேசியது போல ஒரு காணொளி தஞ்சாவூர் மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவரால் பகிரப்பட்டது. அந்தக் காணொளியை பாஜக அண்ணாமலை பகிர்ந்து பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். காவல்துறை விசாரணையில் அந்த காணொளி வதந்தி என கண்டறியப்பட்டது. அண்ணாமலை பள்ளி நிர்வாகத்தை குறி வைத்ததற்கான காரணம் பள்ளி நிர்வாகம் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தது.  தமிழ்நாடு அரசு மிக...

கருநாடகத்தில் ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம்

கருநாடகத்தில் ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம்

கர்நாடக மாநில அரசு ஆணவப் படுகொலை தடுப்புச்சட்டம் ஒன்றை கொண்டுவர முடிவு செய்து இருக்கிறது; மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்க முடிவாகும். இந்த சட்டத்திற்கு “இவர் நம்மவர்” என்ற மிக அழகான பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ஒரு ஆண் பெண்ணிடம் திருமணம் செய்வதாக உறுதியளித்து உடலுறவு கொண்டு பிறகு ஜாதியைக் காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்தால் அது பாலியல் வன்கொடுமை என்று இந்தச் சட்டம் கூறுகிறது. குடும்ப அழுத்தம் அல்லது ஜாதி சார்ந்த காரணங்களைக் காட்டி திருமணம் செய்ய மறுக்கும் நபருக்கு 5 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனையோ ஆயுள் தண்டனையோ வழங்குவதற்கு இந்த சட்டம் வழி வகுக்கிறது. தமிழ்நாடு அரசும் இதேபோன்று சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்! சமூகத்தில் ஜாதி ஒரு புற்றுநோயாக பரவி நிற்கிறது. இதை அழிப்பதற்கு சட்டங்களும் தேவை; அத்துடன் சமூகத்தில் ஜாதி எதிர்ப்புக்கான இயக்கங்கள் நடத்துவது இதைவிட முக்கியமானது! எந்த ஒரு அரசியல் கட்சியும்...

மோடி ஆட்சியின் சமூகநீதி துரோகம்!

மோடி ஆட்சியின் சமூகநீதி துரோகம்!

சமூக மற்றும் கல்வி அடிப்படையில் தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் பின்தாங்கினார்களே தவிர பொருளாதார காரணங்களால் அல்ல என்று அரசியல் சட்டம் தெளிவாக கூறியது. பின்தங்கியதற்கான காரணம் அவர்கள் ஒடுக்கப்பட்ட ஜாதியில் பிறந்ததுதான்; பொருளாதார வசதிகள் இருந்தாலும் கூட பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் பொருளாதார வசதிகளே இல்லாத பார்ப்பனர்களிடமும் உயர் ஜாதியினரிடமும் கீழ்ப்படியும் நிலையே நீடித்தது. மனுதர்மத்தை காப்பாற்றத் துடிக்கும் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கம் பறிபோய்விடும் என்பதால் இந்த இட ஒதுக்கீடுகளை பொருளாதார அடிப்படையில் மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 1992-ல் இந்திரா-சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் “கிரிமிலேயர்” என்ற பொருளாதார வரம்பை புகுத்தியது. இந்தக் “கிரிமிலேயர்” குடும்பத்தில் பொருளாதார வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு பிற்படுத்தப்பட்டோரை நிர்ணயம் செய்தது. இதனால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள். இப்போது உச்ச நீதிமன்றம் இந்த “கிரிமிலேயர்” வடிகட்டுதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. வழக்கு இதுதான்: பிற்படுத்தப்பட்ட சமூதாயத்தைச் சார்ந்த 60 மாணவர்கள் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ், அய்.எப்.எஸ்...

திராவிட மாடல் ஆட்சியின் தனித்துவம்!

திராவிட மாடல் ஆட்சியின் தனித்துவம்!

திராவிட மாடல் ஆட்சி இந்திய அரசியலுக்கு ஒரு புதிய திசையை வழிகாட்டி இருக்கிறது.  1990க்கு பிறகு “உலகமயமாக்கல்” கொள்கை அறிமுகமான பிறகு தனியார் துறைகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் தலை தூக்கின; அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மறையத் தொடங்கி விட்டன.  விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியது. இதிலிருந்து மக்களைக் காப்பாற்ற மக்களுக்கு நேரடியாக பயனளிக்க கூடிய மக்கள் நலத்திட்டங்கள் மாற்று வழி என்ற நிலையை உருவாக்கி விட்டது.  1990க்கு முன்பு சோவியத் ஒன்றியம் சிதையாத நிலையில் சோசியலிசக் கொள்கைகள் செல்வாக்கு பெற்றிருந்தன. திராவிட அரசியல் சோசியலிசத்தின் பக்கம் உறுதியாக நின்றது. அதன் காரணமாகவே கலைஞர் பேருந்துகளை அரசுடைமையாக்கினார்.  நில உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டு வந்தார் .  தஞ்சை மாவட்டத்தில் நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் வீழ்த்தப்பட்டது‌.  தொடர்ந்து தனியார் துறை வேகமாக தலையெடுத்தபோது விழித்துக்கொண்ட கலைஞர் இந்தியாவில் முதன்முதலாக தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்கினார்....

என்.டி.ஏ தோல்வியை உறுதிசெய்வோம்! கள்ளக்குறிச்சியில் கழகத்தலைவர் கொளத்தூர் மணி உரை

என்.டி.ஏ தோல்வியை உறுதிசெய்வோம்! கள்ளக்குறிச்சியில் கழகத்தலைவர் கொளத்தூர் மணி உரை

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகில் உள்ள கடுவனூர் கிராமத்தில் 2005-ஆம் ஆண்டு நடந்த ஜாதிக் கலவர மோதலில் களமாடி சிறை சென்று 21 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்த தோழர்கள் அ.சக்தி, ஆ.தங்கராசு, ஆ.சங்கர், மா.சங்கர் குரு, ச.கு.செயபால், ஆ.முனுசாமி, அ.பாலு, க.சங்குபாலகன், மா.குமார் உள்ளிட்ட தோழர்கள் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை பாராட்டியும், “தொடரட்டும் தமிழ்நாட்டின் சாதனைகள், தி.மு.க ஆட்சியை உறுதி செய்வோம்! மதவெறி கூட்டணியை விரட்டி அடிப்போம்! என்ற தலைப்பிலும் 07.03.2026 அன்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட தோழர்களுக்கு கழகத்தின் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. கூட்டத்திற்கு மா.குமார் தலைமை வகித்தார், மு.நாகராஜ் வரவேற்புரையாற்றினர். க.இராமர் (மாவட்டச் செயலாளர்), ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்), செ.பிரபு (த.பெ.தி.க.கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்) ஆகியயோர் கலவரம் மற்றும் வழக்கு குறித்து விரிவாகப் பேசினார்கள். க.மதியழகன் (மாவட்டத் தலைவர்), ந.வெற்றிவேல் (மாவட்டத் துணைச் செயலாளர்), பூ.ஆ.இளையரசன் (விழுப்புரம் மாவட்டத் தலைவர்),...

திருப்பூர்,சேலம்,கோவையில் ஒவ்வொரு நாளும் 4 கூட்டங்கள்  கலைநிகழ்ச்சியுடன் சென்னை கூட்டங்கள் களம் இறங்கியது கழகத்தின் பரப்புரை படை!

திருப்பூர்,சேலம்,கோவையில் ஒவ்வொரு நாளும் 4 கூட்டங்கள் கலைநிகழ்ச்சியுடன் சென்னை கூட்டங்கள் களம் இறங்கியது கழகத்தின் பரப்புரை படை!

திருப்பூர், கோவை, சேலம், சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தினமும் 2 முதல் 4 இடங்களில் மாவட்டத்தின் பல முக்கிய சாலைகளில் நாள் முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். தலைமைக்குழு அறிவித்த சில நாட்களில் தோழர்கள் சுமார் 90-க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களில் திமுக ஆட்சியை ஆதரித்து பரப்புரை செய்து வருகிள்ளனர். தொய்வில்லாமல் தோழர்கள் கடும் வெயிலிலும் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் செய்தி தொகுப்பு. திருப்பூர்: மாவட்டக் கழகம் சார்பில் 5 நாட்கள் தினமும் 4 இடங்களில் தேர்தல் பரப்புரை கூட்டங்களை தோழர்கள் மாவட்டத்தின் மங்கலம் ரோடு, காங்கயம் ரோடு, பல்லடம் ரோடு என பல முக்கிய சாலைகளில் பரப்புரைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர். முதற்கட்டமாக 5 நாட்களில் 20 கூட்டங்களை நடத்தி முடித்துள்ளனர். தோழர்களின் இந்த பரப்புரையில் பேசிய கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றது. கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையிலும் முகில் இராசு (மாவட்ட தலைவர்)...

கருப்பை புற்றுநோய் தடுப்பில் மோடிக்கு வழிகாட்டிய மு.கஸ்டாலின்!

கருப்பை புற்றுநோய் தடுப்பில் மோடிக்கு வழிகாட்டிய மு.கஸ்டாலின்!

பெண்களுக்கான கருப்பை புற்றுநோய் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இந்த ஆபத்தைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியது திராவிட மாடல் ஆட்சி. கடந்த சனவரியில் அரசு இத்திட்டத்தை அறிவித்து மாவட்டங்களில் செயல்படுத்தி வருகிறது. ஒரு ஊசியின் மதிப்பு ரூ.14,000. தமிழ்நாட்டில் இலவசமாக போடப்படுகிறது. இதுவரை 4 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டமாக தொடரும்.தமிழ்நாடு அரசின் பெண்கள் உரிமைக் கான திட்டங்களை வாக்கு திரட்டும் திட்டமாக சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள். ஆனால் இந்த திட்டம் வாக்களிக்கும் வயதிற்கு வராத 14 வயது சிறுமிகளுக்கான திட்டம். தமிழ்நாட்டைப் பார்த்த பிறகு தான் மோடி கடந்த பிப்ரவரியில் இப்படி ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி மோடி வெளியிட்ட ஒரு அறிவிப்பில் இந்தியா முழுவதும் 14 வயதான 1.5 கோடி பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி போடப்படும் என்று கூறியிருக்கிறார். உலகளாவிய புற்றுநோய் ஆய்வகம் `Globocan’ 2022-ல் வந்துள்ள தகவலின் படி இந்தியாவில் 35...

விளையாட்டு போட்டிகளின் தலைநகரம்

விளையாட்டு போட்டிகளின் தலைநகரம்

துணை முதலமைச்சர் உதயநிதி விளையாட்டுத் துறை அமைச்சராக வந்தபிறகு தமிழ்நாடு விளையாட்டுத் துறையின் தலைநகரமாக மாற்றப்பட்டுள்ளது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு கண்டது. சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் வெற்றிகளை குவித்து வருகிறார்கள். அதற்கு அவர்கள் தயார் செய்யப்படுகிறார்கள். வெற்றி குவித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? 6,689 பேருக்கு அரசு பரிசாக வழங்கிய தொகை 215.78 கோடி. செம்மஞ்சேரியில் ரூ.261 கோடியில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரம் அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு ஒரு சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என ஆணையிடப்பட்டுள்ளது. அவற்றுள் இதுவரை 141 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய அரங்கங்களின் கட்டுமான பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் வாழும் அனைத்து இளைஞர்களுக்கும் மகளிர்க்கும் அவர்கள் விரும்பும் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு ஏற்ப அனைத்து வகை விளையாட்டுகளுக்கும் தேவைப்படும் விளையாட்டுக் கருவிகள், எல்லா ஊர்களிலும் கிடைக்கச் செய்திட வேண்டும் என்பதற்காக, தமிழ்நாட்டில் உள்ள...

கள்ள உறவும் கலாச்சார ஊழல்தான்!

கள்ள உறவும் கலாச்சார ஊழல்தான்!

உடையாத பாலத்தைக் கட்டித் தருவேன் என்று உறுதிகூறி அதற்கான பணத்தை வாங்கிக் கொண்டு விரைவில் உடைந்து நொறுங்கும் பாலத்தைக் கட்டி முடிப்பது ‘நிதி ஊழல்’. உடையாத வாழ்க்கையை உனக்கு தருவேன் என்று உறுதியளித்து இடையிலேயே வாழ்க்கையை உடைய வைத்து அந்த துயரத்தைக் கொண்டாடி கூத்தாடுவது ‘குடும்ப கலாச்சார ஊழல்’ சினிமாவில் வரி கட்டுகிற பணம் ; வரி கட்டாத பணம் என்று பிரித்து வாங்கி; வரி ஊழல் செய்தவர்களும், குடும்ப கலாச்சார ஊழல் செய்தவர்களும் ஊழலை எதிர்க்க அரசியல் களம் இறங்கி இருக்கிறார்கள். கருப்புப் பண ஊழலை விட கொடுமையானது கள்ள உறவு கலாச்சார ஊழல்! -விடுதலை இராசேந்திரன் முகநூல் பதிவு பெரியார் முழக்கம் இதழ் 12032026

பீகார் வாரிசு அரசியல் கதை தெரியுமா?

பீகார் வாரிசு அரசியல் கதை தெரியுமா?

பீகாரில் நிதிஷ்குமாரை முதலமைச்சர் ஆக்கிய பாஜக, இப்போது அவருடைய பதவியை பறித்துக் கொண்டு அவரது மகன் நித்திஷை துணை முதல்வர் ஆக்க முடிவு செய்துள்ளது. 50 வயது உள்ள நித்திஷ் பொது வாழ்க்கைக்கு தொடர்பே இல்லாதவர்.சொந்த தந்தையின் கட்சியிலே கூட அவர் உறுப்பினராக இல்லை; கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் அவர் உறுப்பினராக சேர்ந்திருக்கிறார். உடனே துணை முதலமைச்சர் பதவி `லாட்டரி’ கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் வாரிசு அரசியலுக்கு எதிராக கொந்தளித்து வருகிறார் எடப்பாடி. இதற்குப் பிறகு வாரிசு அரசியலுக்கு எதிராக வாய் திறப்பாரா? ஏற்கனவே எடப்பாடியாரின் கட்சியில் அடையாளமாக வைத்திருந்த பெரியார் படம்; மாநில உரிமைகள்; மென்மையான மதவாத எதிர்ப்பு என்று ஒவ்வொன்றாக பறித்து எடப்பாடி வாயை அடைத்து விட்டார் அமித் ஷா. இப்போது வாரிசு எதிர்ப்பு பேச்சுக்கும் கடிவாளம் வந்துவிட்டது. எடப்பாடி தக்க வைத்துக் கொண்டுள்ள ஒரே பேச்சுரிமை இதுதான். “எந்தக் கொம்பனாலும் எங்களை அசைக்க முடியாது” என்ற ஒற்றை டயலாக்கு...

தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம் தமிழ்நாட்டு அரசியல் களங்களின் தொகுப்பு:  எடப்பாடி ஆட்சியும் திமுக ஆட்சியும் ஓர் ஒப்பீடு ­

தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம் தமிழ்நாட்டு அரசியல் களங்களின் தொகுப்பு: எடப்பாடி ஆட்சியும் திமுக ஆட்சியும் ஓர் ஒப்பீடு ­

தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம் தமிழ்நாட்டு அரசியல் களங்களின் தொகுப்பு: எடப்பாடி ஆட்சியும் திமுக ஆட்சியும் ஓர் ஒப்பீடு கடந்த 2016–21, அ.தி.மு.க. ஆட்­சி­யில், தொழில் முதலீட்டிற்காகப் போடப்­பட்ட புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் எவ்­வ­ளவு தெரியுமா? 471. இதுவே நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யில், ஆயி­ரத்து 190 புரிந்துணர்வு ஒப்­பந்­தங்கள் போட்­டி­ருக்­கி­றோம்! கடந்த கால அ.திமு.க. ஆட்சியில் ஈர்த்த முத­லீடு – நான்கு இலட்­சத்து 13 ஆயி­ரத்து 414 கோடி ரூபாய்­தான். ஆனால், நம்­மு­டைய ஆட்சிக் காலத்தில், 12 இலட்­சத்து 54 ஆயி­ரத்து 133 கோடி ரூபாய்க்­கான முதலீடுகளை ஈர்த்­தி­ருக்­கி­றோம்! மூன்று மடங்கு அதி­கம்! 2016–21–இல் அ.தி.மு.க. ஆட்­சி­யில், புதி­தாக நான்கே நான்கு சிப்காட் தொழிற்­பூங்­காக்­க­ளை­தான் தொடங்­கி­னார்­கள். ஆனால், நாம் 33 புதிய சிப்­காட் தொழிற்­பூங்­காக்­க­ளைத் தொடங்கி இருக்­கி­றோம்! ஸ்டார்ட்–­­அப் நிறு­வ­னங்­களை எடுத்து­க் கொண்டால், 2021 வரைக்­கும் இருந்த எண்ணிக்கை: 2 ஆயி­ரத்தி 45. இப்­போது 13,500–க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்–­­அப் நிறு­வ­னங்­கள் நம்­மு­டைய...

என்ன செய்யப் போகின்றாய்?

என்ன செய்யப் போகின்றாய்?

பாராண்ட தமிழா – நீ மான வீரனா சொல்வாய்? கேட்டேன். உனக்குனை அடிமைசெய் ஆரியரின் கூட்டா? முடிப்பு தில்லிக்கு அடிமையாய் நீயிருக்கத் -தமிழரை அடகு வைக்கத் துடிகின்றாய்! தமிழினம் தலையெடுக்கா திருக்க – நீயே கருவியாயிருக்கப் போகின்றாய்! தமிழர் சூடிய மகுடத்தை – நீயே வேதியர் வேள்வியில் வீசுகின்றாய் ! இமயம் வென்ற கூர்வேலை- ஆரிய இழிந்தோர் காலடி வைக்கின்றாய்! தமிழை அழிக்கும் பகையோடு – நீயே துணையாய் இருக்கப் போகின்றாய்! தமிழின உறவைக் கொல்ல – நீயே ஆயுதம் வழங்கப் போகின்றாய்! வேதிய மனுநீதி கோலோச்ச – நீயே கைச்சாத் திடவே போகின்றாய்! தில்லிக்கு அடங்கி அரசாளத் – தமிழர் செல்வத்தைத் தாரைவார்க்கப் போகின்றாய்! கொடிய சனாதனக் கூட்டத்தால் – தமிழர் கெட்டழிந் திரக்கப் போகின்றார்! கடைசியில் உன்னைப் பூட்டும் – சிறையில் என்னச் செய்யப் போகின்றாய்? -குயில்தாசன் பெரியார் முழக்கம் இதழ் 12032026

பேரறிவாளன்-தீபா இணையேற்பு விழா

பேரறிவாளன்-தீபா இணையேற்பு விழா

திருவண்ணமலை மாவட்டம் தமிழ்தாசன்- வல்லினத்தமிழ் ஆகிய இணையரின் மகன் பேரறிவாளன், கள்ளக்குறிச்சி மாவட்டம் செல்வம்- கோவிந்தம்மாள் ஆகிய இணையரின்மகள் தீபா ஆகிய இருவருக்கும் 09-02-2026 அன்று கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார் முன்னிலையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் இணையேற்பு நடைபெற்றது. “விடுதலைக் குரல்” தோழர்களின் பகுத்தறிவு பாடல் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தோழர்கள் ஆ.ஆசைத்தம்பி, க.இராமர், ந.வெற்றிவேல், க.மதியழகன், மு.நாகராஜ், ஏ.ஜெயப்பிரகாஷ், இரா.கார்மேகம், மா.குமார் ,சி. சாமிதுரை, தே.இராமச்சந்திரன், பெரியார் பாரதிதாசன்,செ.வே.ராஜேஷ், ச.கு.பெரியார் வெங்கட், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.ஆ இளையரசன், த.பெ.தி.க மண்டலச் செயலாளர் செ.பிரபு (மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர்) ஆ.இராமலிங்கம், ஆ.நாகராசன் (சி.அய்.டி.யு.தொழிற்சங்கம்)உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 12032026

கழக ஏட்டுக்கு வளர்ச்சி நிதி

கழக ஏட்டுக்கு வளர்ச்சி நிதி

கழகத் தோழர் இரண்யா பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.2000 வழங்கியுள்ளார். நெல்லை மாவட்டக் கழகம் சார்பில் பால்.பிரபாகரன் (பரப்புரைச் செயலாளர்) 25-பெரியார் முழக்க சந்தாவுக்கான ரூ.7500 வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். தோழர் சூரியகுமார் சேலம் மாவட்டம் சார்பாக ரூ.20400 பெரியார் முழக்க சந்தா தொகையயை வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் இதழ் 12032026

1971-ல் பெரியார் சொன்னதை மனதில் வைப்போம் -மு.க.ஸ்டாலின்

1971-ல் பெரியார் சொன்னதை மனதில் வைப்போம் -மு.க.ஸ்டாலின்

இங்கு கூடி­யி­ருக்­கும் ஒவ்­வொரு உடன்­பி­றப்­பும், மக்­களிடம் போகும் போது சொல்ல வேண்­டி­யது என்ன? நடக்க இருக்­கும் தேர்­தல், தி.மு.க. vs NDA கிடை­யாது! தமிழ்­நாடு வெர்­சஸ் NDA! இன்­னும் எளி­மை­யாக சொல்ல வேண்­டும் என்­றால், வெல்­லப் போ­வது, தமிழ்­நாடு அணியா? டெல்லி அணியா? என்­ப­துதான் 2026 தேர்­தல்! இதில் நம்­மு­டைய தமிழ்­நாடு அணி வெற்றி பெற வேண்­டும் என்­றால், தி.மு.க. தலைமையி­லான மதச்­சார்பற்ற முற்போக்­குக் கூட்­ட­ணி தான் வெற்றி பெற வேண்­டும்! உங்கள் வாக்­கு­க­ளைத் தி.மு.க.வுக்­கும் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளுக்­கும் போடுங்கள் என்று கேளுங்­கள்! இது­தான் நீங்­கள் அடுத்த இரண்டு மாதத்திற்கு இடை­விடாமல் மக்­க­ளி­டம் பரப்ப வேண்­டிய மெசேஜ்! இந்த நேரத்­தில், தந்தை பெரி­யார் 1971 தேர்­த­லின்­போது சொன்னதை, நினைத்­துப் பார்க்­கி­றேன். “தி.மு.க. ஆட்சி தொடர்ந்­தால்­தான், தமிழ்ச்­ச­முதா­யம் எதிர்­பார்க்­கும் முன்னேற்­றம் ஏற்­ப­டும்” என்­றார். இப்­போ­தும் தந்தை பெரியார் சொன்­னதை மன­தில் வைத்து நம்­மு­டைய பயணத்­தைத் தொடர வேண்­டும்! இங்கே வந்­த­தும் என்­னு­டைய நினை­விற்கு...

‘அவதார’ ராமனுக்கு அவசர வேண்டுகோள்!

‘அவதார’ ராமனுக்கு அவசர வேண்டுகோள்!

ஓ..ஸ்ரீராம பகவானே! இந்து ராஷ்டிரத்தின் காட் பாதரே.. வழிகாட்டியே தத்துவமே.. உங்களை நம்பி வாழும் எங்கள் மோடி ராஜ்ஜியத்துக்கு சோதனைமேல் சோதனை வந்துகொண்டே இருக்கிறதே. உன் ஞானக் கண்களுக்கு தெரிகிறதா? நம்புகிறோம்! நாங்கள் நம்புகிறோம். எல்லாம் அறிந்த உனக்கு நிச்சயமாக இது தெரியாமல் இருக்காது. எங்கள் மோடிஜியும் எங்கள் அமைச்சர்களும், உனக்கு கோயில் கட்ட உத்தரவிட்ட எங்கள் மோகன் பகவத்தும், சேவக்குகளும் சனாதனிகளும் உனது மகா சக்தியைத் தானே நம்பி இருக்கிறோம்? நாங்கள் எல்லாம் இப்போது திக்குமுக்காடி அரசியல், பொருளாதார நெருக்கடிகளில் தவிக்கிறோம்! திணருகிறோம். இது உனக்கு தெரியவில்லையா சுவாமி?. அமெரிக்கா மிரட்டுகிறது; வரி போடுகிறது. ரஷ்யாவிடமிருந்து பெட்ரோல் வாங்காதே என்று ஆணையிடுகிறது. இந்துக்கள் வாழும் நமது புண்ணிய ஆன்மீக பூமியில் ஒரு ரூபாயின் மதிப்பு என்ன தெரியுமா? சொல்வதற்கே வாய் கூசுகிறது. அமெரிக்காகாரன் ஒரு டாலர் கொடுத்தால் அதற்கு நாம் 92 ரூபாயை எண்ணி வைக்க வேண்டும். அய்யகோ அமெரிக்காவின்...

1971-ஆம் ஆண்டு தேர்தல் வரலாற்றுப் பின்னணி

1971-ஆம் ஆண்டு தேர்தல் வரலாற்றுப் பின்னணி

முதல்வர் மு.க ஸ்டாலின் திருச்சி மாநாட்டு உரையில் இவ்வாறு குறிப்பிட்டார். “இந்த நேரத்தில் தந்தை பெரியார் 1971-ல் சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன் திமுக ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமுதாயம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் ஏற்படும் என்றார். “இப்போதும் தந்தை பெரியார் சொன்னதை மனதில் வைத்து நமது பயணத்தை தொடர வேண்டும்” என்று பேசி உள்ளார். முதலமைச்சர் இப்போது 1971 ஆம் ஆண்டை ஏன் நினைவு கூற வேண்டும்? அதற்கு வரலாற்றுப் பின்னணி உண்டு. 1971 ஆம் ஆண்டு சனவரி 23,24 சேலத்தில் பெரியார் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை நடத்தினார். கோவை ஜிடி நாயுடு மாநாட்டை திறந்து வைத்தார்.மூட நம்பிக்கைகளை தோலுரித்த பகுத்தறிவு மாநாட்டில் திராவிடர் கழக தோழர்கள் மட்டுமே பங்கேற்றனர். வேறு கட்சிகள் அழைக்கப்படவில்லை. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக மாபெரும் மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற்றது. மூடநம்பிக்கைகளை விளக்கும் அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், ராமன் சீதைகளை கடவுளாக கருதும் நம்பிக்கைகளை...

பாஜக எங்கள் பண்பாட்டு எதிரி!  காவியை கருப்பு, சிவப்பு விரட்டி அடிக்கும்!

பாஜக எங்கள் பண்பாட்டு எதிரி! காவியை கருப்பு, சிவப்பு விரட்டி அடிக்கும்!

தி.மு.க. என்­கிற மாபெ­ரும் இயக்கம், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்­க­ளி­டம் வரும் கட்சியல்ல. மக்­க­ளின் உரிமைகளுக்காக எப்போதும் களத்­தில் நிற்­கும் கட்சி. எங்­க­ளுக்­குத் தெரி­யும்! தமிழ்நாட்­டின், தமிழ் மொழியின், தமிழ்ப் பண்­பாட்டின், உண்மை­யான எதிரி யார்? என்று எங்க­ளுக்கு நன்­றா­கவே தெரியும். அந்த எதிரியை எதிர்க்­கும் தெம்­பும், திரா­ணியும் கொண்ட ஒரே இயக்­கம் தி.மு.க என்­பது மக்­க­ளுக்­கும் நன்றாகத் தெரி­யும்! அ.தி.மு.க. என்­கிற முக­மூ­டியை போட்­டுக் கொண்டு வந்தால், எங்­க­ளு­டைய தமிழ்நாட்டு மக்­க­ளுக்கு உங்களை அடையாளம் தெரி­யாமல் போய்­வி­டுமா? உங்­க­ளின் முகத்திரை­யைக் கிழித்து, தமிழ்­நாட்டு மக்க­ளி­டம் நாங்­கள் அம்­ப­லப்­ப­டுத்து­வோம். தமிழ்நாட்டை எப்ப­டி­யா­வது நம்மிடம் இருந்து, விழுங்கிட­லாம் என்று நினைக்­கி­றது காவிக் கூட்டம். எங்­கள் கருப்பு – சிவப்பு பட்டாளம் இருக்­கி­ற­வரை அது நடக்­கவே நடக்­காது. உங்­கள் அப்பனே வந்தா­லும் நடக்­காது. நடக்க விட­மாட்­டோம். இது அவர்­க­ளுக்­கும் நன்­றா­கத் தெரி­யும். அத­னால்­தான், அ.தி.மு.க. என்ற கட்­சி­யைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்­கு­கி­றார்­கள். அர­சி­ய­லில் நேர்...

காவலாண்டியூர் படிப்பகத்தில் ஜாதி மறுப்பு திருமணம்!

காவலாண்டியூர் படிப்பகத்தில் ஜாதி மறுப்பு திருமணம்!

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், காடையாம்பட்டி மாதையன்-செல்வி ஆகியோரது மகள் அபிநயா, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், ஆயிக்கவுண்டன் பாளையம் வேல்முருகன்-பானுமதி ஆகியோரது மகன் தமிழ்வாணன் ஆகியோருக்கு 20.02.2026 வெள்ளிக்கிழமை காவலாண்டியூர் பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈஸ்வரன் தலைமையில் தோழர்கள் கணேசன்,அவிநாசி ஆகியோரது முன்னிலையில் ஜாதி மறுப்பு, சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. குமரேசன் மற்றும் மணமக்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 05032026

கழகம் சார்பில் தோழர் நல்லகண்ணுக்கு வீரவணக்கம்

கழகம் சார்பில் தோழர் நல்லகண்ணுக்கு வீரவணக்கம்

சென்னை: தோழர் நல்லகண்ணு விடைபெற்றார். 25.02.2026 அன்று தியாகராயர் நகர் பாலன் இல்லத்தில் அவரது உடலுக்கு கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் தோழர்கள் பங்கேற்று வீரவணக்கத்தை செலுத்தினார்கள். போராசிரியர் சரஸ்வதி, தபசிகுமரன் (தலைமை நிலையச் செயலாளர்), அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர்), உமாபதி (மாவட்டச் செயலாளர்), இராவணன் (மாவட்டத்துணைச் செயலாளர்), சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்), தட்சணாமூர்த்தி (மாவட்ட அமைப்பாளர்), அருண் (இளைஞரணி அமைப்பாளர்), பேரன்பு (சென்னை மாவட்ட மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர்) மற்றும் கழகத் தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். சேலம்: இந்திய பொதுவுடைமை கட்சியின் நங்கவள்ளி ஒன்றியம் சார்பாக நல்லகண்ணு அவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தோழர் நல்லகண்ணு அவர்களின் படத்திற்கு மலர் தூவி, இரங்கல் உரையாற்றி வீரவணக்கம் செலுத்தினார். எம்.எம் ரத்தினவேல் (காங்கிரஸ்), நல்லபிரபு (தி.மு.க, நங்கவள்ளி மத்திய ஒன்றியச் செயலாளர்), (தி. மு.க ) ஜெயவேல், மாணிக்கவேல்...

தேர்தல் பரப்புரையில்  பம்பரமாய்  சுழலும்  கழகத்  தோழர்கள்

தேர்தல் பரப்புரையில் பம்பரமாய் சுழலும் கழகத் தோழர்கள்

தமிழ்நாட்டில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து கழகத் தலைமைக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்தும் விதமாக திருப்பூர்,சேலம்,சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் அனல் பறக்கும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே தயாராகி வருகின்றனர். தினமும் 3 முதல் 4 தெருமுனை கூட்டங்கள், பொதுகூட்டங்கள் என கழகத் தோழர்கள் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல் நாள் நடைபெற்ற பரப்புரை செய்திகளின் தொகுப்பு: திருப்பூர்: மாவட்டக் கழகம் சார்பில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையில் ‘தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்! திமுக ஆட்சியை உறுதி செய்வோம்!’ என்றத் தலைப்பில் 27.02.2026 அன்று புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம்- பெரியார் சிலை, சிடிசி வளைவு,வீரபாண்டி ஆகிய இடங்களில் நாள் முழுவதும் தொடர் பரப்புரைக் கூட்டங்கள் முகில்ராசு முன்னிலையில் நடைபெற்றது. புதிய பேருந்து நிலையத்தில் பரப்புரை தொடக்கமாக கழகம் சார்பாக நல்லகண்ணு அவர்களுக்கு கழகப் பொருளாளர் சு.துரைசாமி...

சக்லத்வாலா எழுதிக் கொடுத்ததைத் தான் பெரியார் படித்தாரா?            ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (14) -கொளத்தூர் மணி

சக்லத்வாலா எழுதிக் கொடுத்ததைத் தான் பெரியார் படித்தாரா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (14) -கொளத்தூர் மணி

1931 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி விருதுநகர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிந்து இரவு சாப்பாட்டிற்குப் பிறகு விஷய ஆலோசனைக் கூட்டம் மாநாட்டு பந்தலில் திருவாளர் பாண்டியன் அவர்கள் தலைமையில் இரவு 10:30 மணிக்குத் துவங்கப்பட்டு இரவு 3:30 வரை நடந்தது. விஷய ஆலோசனைக் கமிட்டி ஆரம்பம் ஆனதும், சோழவந்தான் திரு. வெங்கடசாமி அய்யர் அவர்கள் விஷய ஆலோசனைக் கமிட்டிக்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னார். இதற்குத் தலைவர் அவர்கள் அகாலம் ஆகிவிட்டதால் இனி தேர்தல் நடத்துவது சிரமம் என்றும், இருந்தபோதிலும் கூட்டத்தின் அபிப்ராயத்தைத் தெரிய ஆசைப்பட்டு சபையின் அபிப்பிராயம் கேட்டார். பெரும்பான்மையானவர்கள் பொதுக் கூட்ட முழுமையுமே விஷய ஆலோசனைக் கமிட்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். பிறகு அந்தப்படியே தீர்மானிக்கப்பட்டது. முதன்முதலாக மதங்கள் கண்டனத் தீர்மானம் விவாதிக்கப்பட்டது. அதில் சிறிது காரமான விவாதம் நடந்தது என்றாலும் முடிவில் ஒரே ஒரு ஓட்டு தான்...

சங்கிகளை தோலுரித்த   `திருப்பரங்குன்றம் பைல்ஸ்’

சங்கிகளை தோலுரித்த `திருப்பரங்குன்றம் பைல்ஸ்’

‘திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்!’ என்ற முழக்கத்தோடு மதவெறி சக்திகள் கலவர முயற்சியில் இறங்கி உள்ளனர். சிக்கந்தர் தர்காவை இடிக்கும் நோக்கத்தோடு முருகன் கோயிலில் தீபம் ஏற்றும் பிரச்சினையை கையில் எடுத்துள்ளார்கள். இந்த வரலாற்று பின்னணியையும் கலவரக்காரர்களின் சதி முயற்சியையும் அம்பலமாக்குகிறது `திருப்பரங்குன்றம் பைல்ஸ்’ என்ற ஆவணப் படம். `அறக்கலகம்’ என்ற வலையொளி (யூடியூப்) குழு இப்படத்தை மிகச்சிறப்பாக தயாரித்து உள்ளது. திருப்பரங்குன்றம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுதும் பண்பாட்டு ரீதியாக இசுலாமியர்களும் இந்துக்களும் சகோதரத்துவ உணர்வுடன் காலம் காலமாக வாழ்ந்து வருவதை இப்படம் கண்முன் நிறுத்துகிறது. கிராமங்களுக்கு நேரில் சென்று இசுலாமிய, இந்து மக்களின் பேட்டிகளை உணர்வுபூர்வமாக பதிவு செய்திருக்கிறார்கள். இந்த ஆவணப்படம் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமையத்தில் மார்ச்-1, பகல் 11 மணியளவில் திரையிடப்பட்டது. ஊடகவியலாளர் ரெளத்ரா நிகழ்வை தொகுத்து வழங்கினார். சத்யா வரவேற்புரையாற்றினார். மைனர் வீரமணி நோக்கவுரையாற்றினார். தோழர்கள் லதா, சத்யா, பொன்ராஜ், உமாபதி குழுவினர் பாடல் பாடினார்கள். பாட்டர் ஆவணப்...

தேர்தல் ஆய்வுகள் அம்பலப்படுத்துகின்றன பார்ப்பன உயர்ஜாதி கட்சியே பாஜக!

தேர்தல் ஆய்வுகள் அம்பலப்படுத்துகின்றன பார்ப்பன உயர்ஜாதி கட்சியே பாஜக!

பாஜகவின் வலிமையான ஆதரவு சக்தி பார்ப்பனர்களும் உயர்ஜாதியினரும் தான் என்று ஆய்வுகள் வெளிவந்துள்ளன. மார்ச்-1 தேதி வெளியான ‘இந்து’ ஆங்கில நாளேடு இது குறித்து ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: உயர்கல்வியில் ஜாதிப் பாகுபாடு காட்டுவது தண்டனைக்குரிய குற்றம் என்று அண்மையில் பல்கலைக்கழக மானியக் குழு ஒழுங்குமுறை விதியை உருவாக்கியது. இதற்கு இட ஒதுக்கீடு கோட்டாவில் வராத (உயர்ஜாதி ஏழை என்ற) பார்ப்பன உயர்ஜாதி மாணவர்களிடமிருந்து வடமாநிலங்களில் கடுமையான எதிர்ப்புகள் வந்தன. பல்கலைக்கழங்களில் போராட்டங்கள் வெடித்தன. ஜாதி என்ற சொல்லை அகற்ற வேண்டும் என்றும் தங்களுக்கும் பாகுபாடுகள் உள்ளதாகவும் தெரிவித்தனர். இவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பாஜக ஆட்சிதான் கொண்டு வந்தது. பாஜகவின் தீவிர ஆதரவாளர்களான இந்த ‘உயர்ஜாதி கோட்டா’ பிரிவினர் தங்களுக்கு எதிராக பாஜக செயல்படும்போது வீதிக்கு வெளியே வந்து போராடுகிறார்கள். பாஜகவின் வலிமையான வாக்கு வங்கி சக்தியாக காலம்காலமாக உயர்ஜாதியினரே இருந்து வருகிறார்கள் என்று ஆய்வு...

மோடியின் அற்ப அரசியல்

மோடியின் அற்ப அரசியல்

மோடி தனது பிரதமர் பதவிக்கு உரிய தகுதியை இழந்துகொண்டு வருவதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. மதுரை வந்த அவர் 7 ஆண்டுகளாக கட்டி முடிக்கபடாத எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் அரைகுறை வேலைகளைப் பார்வையிட கூடத் தயாராக இல்லை. மாறாக மதவாத சக்திகள் கலவரத்திற்கு திட்டமிடும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். ஏற்கெனவே திட்டமிடப்பட்ட கலவரம் தோல்வியில் முடிந்த நிலையில் அதைத் தூண்டி விடுவதுபோல் அமைந்திருக்கிறது இந்த தரிசனம். அங்கே தீபம் ஏற்றச் சென்ற இந்து தீவிரவாதிகள் ‘திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்’ என்று வெறிப்பிடித்து பேசியதை ஊடகங்கள் ஒளிப்பரப்பின. “சிக்கந்தர் தர்காவை திருப்பரங்குன்றத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் இதுவே எங்கள் நோக்கம்” என்று ஹெச்.ராசா வெளிப்படையாகப் பேசினார். திருப்பரங்குன்றம் தரிசனத்திற்கு பிறகு பேட்டியளித்த மோடி இந்து மக்களின் உணர்வுகளை தமிழ்நாடு அரசு மதிக்கவில்லை என்கிறார். உண்மையில் திருப்பரங்குன்றத்தில் இந்துமக்களின் உணர்வுகளை கோயில் நடைமுறைகளை பின்பற்றிக் காப்பாற்றியது தமிழ்நாடு அறநிலையத்துறைதான்....

சாதனைகளைத் தொடர வைப்போம்!

சாதனைகளைத் தொடர வைப்போம்!

இந்த ஆட்சியின் சாதனைகள் தொடர வேண்டும் என்று ஏன் கூறுகிறோம்? நேர்மையுடன் சிந்தித்துப் பார்ப்போம்! கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளைப் போல் தமிழ்நாட்டில் இதுவரை நடந்திருக்கிறதா? “பதவி ஏற்றவுடன் முதல்வர் ஸ்டாலின் முதல் கையெழுத்தோடு தொடங்கியது பெண்களின் கட்டணம் இல்லாப் பேருந்து பயணம்; மகளிர் உரிமைத்தொகை; புதுமைப்பெண்; பள்ளிக் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி; மக்களைத் தேடி மருத்துவம்; நான் முதல்வன்; என்று நூற்றுக்கணக்கான திட்டங்கள் அணிவகுத்து வந்து கொண்டே இருந்தன. அறிவிக்கப்பட்ட திட்டங்களில் இதுவரை நிறைவேற்றப்படாத திட்டம் என்று எந்த ஒரு திட்டத்தையாவது கூற முடியுமா ? எதிர்க்கட்சிகளால் கூடஇந்த திட்டங்களில் குற்றம் குறைகளை காணமுடியவில்லை? இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது இத்தகைய சாதனைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கிறதா? இங்கே தான் நடந்தது. அதுமட்டுமா! பெண்களுக்கான உரிமை திட்டங்களின் வெற்றிகளை உணர்ந்து இந்தியாவில் பாஜக உள்ளிட்ட 8 மாநிலங்கள் இதை செயல்படுத்த தொடங்கிவிட்டன. வழிகாட்டியது தமிழ்நாடுதான். பொருளாதார...

`தொடரட்டும் தமிழ்நாட்டில் திமுக சாதனைகள்’ தேர்தல் பரப்புரை: திருப்பூர், சென்னை,சேலம் கழகத் தோழர்கள் தீவிரம்

`தொடரட்டும் தமிழ்நாட்டில் திமுக சாதனைகள்’ தேர்தல் பரப்புரை: திருப்பூர், சென்னை,சேலம் கழகத் தோழர்கள் தீவிரம்

திருப்பூர்: 15-02-2026 அன்று கழக தலைவர், கொளத்தூர் மணி மற்றும் பொதுச் செயலாளர், தோழர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் தலைமையில் மேட்டூரில் நடந்த தலைமைக் குழு கூட்டத்தில், விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகளை நடை முறைப்படுத்துவது குறித்த மாவட்ட ஆலோசனைக் கூட்டம் 19-02-2026 வியாழன் மாலை 4 மணியளவில் வீரபாண்டி பிரிவு பெரியார் படிப்பகத்தில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர் அதன் அடிப்பைடையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி மாநகர , நகர, ஒன்றியப் பகுதிகளில் “தொடரட்டும் தமிழ்நாட்டின் சாதனைகள்! திமுக அரசை உறுதி செய்வோம்!” என்ற தலைப்பில் மாவட்டம் முழுவதும் முதல் கட்டமாக 50 இடங்களில் பரப்பரை செய்வது கழக வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்க சந்தாவை இந்த மாத இறுதிக்குள் தலைமைக்கு அனுப்பி வைப்பது என முடிவு...

சென்னையில் மகிழ்ச்சி விழா! ஜாதி மறுப்பு மணம் புரிந்த பெரியார் குடும்பங்கள் சந்திப்பு

சென்னையில் மகிழ்ச்சி விழா! ஜாதி மறுப்பு மணம் புரிந்த பெரியார் குடும்பங்கள் சந்திப்பு

சென்னை மாவட்டக் கழகம் மற்றும் இளைஞர் அணி இணைந்து நடத்திய காதலர் தினத்தை முன்னிட்டு ஜாதி மறுப்பு இணையர்களின் குடும்ப விழா பிப்ரவரி 17 அன்று மாலை 6 மணி அளவில் ராயப்பேட்டை நல்வாழ்வு மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வை சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி ஒருங்கிணைத்தார். கவுசல்யா (நிறுவனர் சங்கர் அறக்கட்டளை) உடுமலை சங்கர் ஜாதியப் படுகொலையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஜாதி ஆணவ கொலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பவர். தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் ஜாதி வெறி செயலுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வருபவர். காவை.ஈசுவரன் (தலைமைக் குழு உறுப்பினர்), ஜாதி மறுப்பு திருமணங்களை முன்னின்று கடும் எதிர்ப்புகளை மீறி நடத்தி அவர்களுக்கு அடைக்கலம் தருபவர். சேலத்தில் 1000 கணக்கான ஜாதி,மத மறுப்பு திருமணங்களை நடத்தியவர். தீனா (பெரியார் சிந்தனையாளர் இயக்கம்) புதுவை இயக்கத்தில் பெண்களை துணிச்சலோடு ஜாதி மறுப்பு திருமணங்களை புரிய ஊக்குவிப்பவர். தன்னுடைய இயக்கப் பெண்களில் சிலர்...

“நாம் தொப்புள் கொடி உறவுகள்’’            கழக மாநாட்டில் தோழர் நல்லகண்ணுவின் பேச்சு

“நாம் தொப்புள் கொடி உறவுகள்’’ கழக மாநாட்டில் தோழர் நல்லகண்ணுவின் பேச்சு

இந்த நல்ல வாய்ப்பைத் தந்த ‘தந்தை பெரியார் திராவிடர் கழக’த்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது பெரியார் ‘குடிஅரசு’ கட்டுரைகளின் இரண்டாவது தொகுதி. ஏற்கனவே 1925 ஆம் ஆண்டுக்கான முதல் தொகுதியை தந்தை பெரியார் திராவிடர் கழகம் 2003-ல் வெளியிட்டிருக்கிறது. தந்தை பெரியாருடைய சிந்தனைகள் மனித சமூகத்துக்கு மிகவும் அடிப்படையானவை. அந்த சிந்தனைகள், தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் மனித சமூகத்துக்கு வழிகாட்டும் சிந்தனைகள். அத்தகைய சிந்தனைகளினால் தந்தை பெரியார் வரலாறு படைத்தார். வரலாறு படைத்தது மட்டுமல்ல, வரலாறாகவே வாழ்ந்தார். எதிர்கால வரலாற்றுக்கும் அவர் வழிகாட்டியாக விளங்குகிறார். அதனால்தான் கட்சி வேறுபாடின்றி, நாம் அனைவரும் தந்தை பெரியாரை வணங்குகிறோம்; பாராட்டுகிறோம்; வழிகாட்டியாக ஏற்றுக் கொள்கிறோம். பெரியார் ‘குடிஅரசு’ பத்திரிகை நடத்திய காலங்களில் – அதில் தொடர்ந்து பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த சிங்காரவேலர், ஜீவா, சாத்தான்குளம் ராகவன் போன்றவர்கள் அதில் தொடர்ந்து எழுதி வந்தார்கள். பகத்சிங் ஆங்கிலத்தில் எழுதிய “நான் ஏன் நாத்திகன்...

கழக ஏட்டுக்கு வளர்ச்சி நிதி

கழக ஏட்டுக்கு வளர்ச்சி நிதி

தமிழ்நாடு அறிவியல் மன்ற நிர்வாகிகளான ஆசிரியர்கள் சிவகாமி, ஆசிரியர் ஈரோடு சிவகுமார் ஆகியோர் முன்னெடுப்பில் பெரியார் முழக்கம் வளர்ச்சிக் குழு உருவாக்கப்பட்டு, பல்வேறு தோழர்கள் மாதம்தோறும் தலா ரூ.500 வழங்கி வருகிறார்கள். ஓராண்டு செயல்திட்டமாக இதை செயல்படுத்தி வருகின்றனர். பிப்ரவரி மாத நன்கொடையாக ரூ.14,000 வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்). பிப்-18 கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தோழர் அருண் (இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்) பிறந்தநாளை முன்னிட்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களிடம் ரூ.2000 பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதி அளித்தார். பிறந்தநாள் மகிழ்வாக தோழர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர். பெரியார் முழக்கம் இதழ்27022026

திட்டங்களை மலினப்படுத்தும் எடப்பாடி!

திட்டங்களை மலினப்படுத்தும் எடப்பாடி!

எடப்பாடி பழனிச்சாமி உலக வங்கியை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து விட்டார் போலிருக்கிறது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களில் சலுகையை அள்ளிவிட்டு இருக்கிறார். தமிழ்நாடு முதல்வர் மகளிர் உரிமைத் தொகை தடைபடாமல் கிடைப்பதற்கு ரூ.5000 ரூபாயை வழங்கியதற்கு பிறகு இவர்கள் தூக்கமின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் எதிரொலி தான் இன்றைய அறிவிப்புகள். ரூ.10,000 அறிவித்து விட்டால் பிகார் மாடலில் வெற்றி பெறலாம் என்று கற்பனையில் மிதக்கிறார்கள்.கடந்த தேர்தலில் மாதம் பெண்களுக்கு திமுக-வைவிட கூடுதலாக ரூ.500 சேர்த்து 1,500 ரூபாய் வழங்குவதாக இவர் அறிவித்த பிறகும் மக்கள் எடப்பாடியை நம்பத் தயாராக இல்லை. தமிழ்நாடு அரசு கடனில் மூழ்கி கிடக்கிறது என்று நேற்று வரை பேசியவர். ஆட்சிக்கு வந்தவுடன் எப்படி இந்த அறிவிப்புகளை அமல்படுத்தப் போகிறார் என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. இதுவரை அவர் வெளியிட்ட சுமார் 16 அறிவிப்புகள் அனைத்தும் நிதி சார்ந்தது தான். அக்கட்சியின் தேர்தல் தயாரிப்புக் குழுவும் அவர்தான். இரண்டு...