எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்; கழகத் தலைவர் பங்கேற்று சிறப்புரை
ஈரோடு தெற்கு: திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு தெற்கு மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 14.08.2024 காலை 11 மணியளவில் சூரம்பட்டி நால்ரோடு அருகில் உள்ள மதிமுக அலுவல அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செல்வராசு, மாவட்டச் செயலாளர் எழிலன், அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, அறிவியல் மன்றப் பொறுப்பாளர் சிவக்குமார், மணிமேகலை, ஜோதி, திருமுருகன், கௌதம், கோபிநாத், விக்னேஸ், இரவி, அழகு, குமார், பிரபு, முருகேசன், ரங்கம்பாளையம் பிரபு, முகுந்தன், அய்யப்பன், நல்லதம்பி, சுரேஷ், விஜய்ரத்தினம், பழனிசாமி, சத்திய மூர்த்தி உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். இதில் மாணவர்களிடையே நிலவிவரும் போதைப் பழக்கத்திற்கு எதிரான பரப்புரையை மேற்கொள்வதெனவும், ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான நடவடிக்கைகள், மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்டவைகளை இயற்றக்கோரி அரசை வலியுறுத்துவதோடு...