ஆதிதிராவிடர் நல ஆணையத்திடம் நேரில் வழங்கப்பட்டது! தமிழ்நாட்டுக் கிராமங்களில் நிலவும் தீண்டாமைகள் பட்டியல் தயாரித்தது கழகம்
சேலத்தில் 2023, ஏப்ரல் 29,30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற “இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாட்டில், வைக்கம் நூற்றாண்டை முன்னிட்டு ஜாதி – தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்கட்டமாகத் தேநீர்க் கடைகளில் நிலவும் இரட்டைக்குவளை முறை, வைக்கத்தைப் போலவே தாழ்த்தப்பட்ட மக்கள் பொது வீதிகளில் நடமாடும் உரிமைகளைத் தடுத்தல், கோயில் நுழைவு அனுமதி மறுப்பு என்று ஜாதி தீண்டாமைகள் நிகழும் கிராமங்களைக் கண்டறிந்து, அதன் பட்டியலைக் கழகத் தலைமைக்குச் செயல்வீரர்கள் அனுப்ப வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் திண்டுக்கல், கோவை, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, திருப்பூர், ஈரோடு தெற்கு, ஈரோடு வடக்கு உள்ளிட்ட மாவட்டங்களில் ஜாதித் தீண்டாமைக் கணக்கெடுப்புப் பணிகளைக் கழகச் செயல்வீரர்கள் மேற்கொண்டனர். கணக்கெடுப்புப் பணிகளுக்கு என்று பிரத்யேகமாக படிவங்களைத் தயாரித்து களத்தில் இறங்கினர் கழகச் செயல்வீரர்கள். தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகக் கிராமம், கிராமமாகச் சென்றும், பல்வேறு ஊர்களில் தங்கியும் இந்தக்...