Category: நாகை

முதல் கட்ட சந்திப்பில் கழகத் தோழர்கள் உற்சாகம் கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

முதல் கட்ட சந்திப்பில் கழகத் தோழர்கள் உற்சாகம் கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

கழகத் தோழர்களை பொறுப்பாளர்கள் சந்தித்து நிகழ்த்திய கலந்துரையாடல் நிகழ்வுகள் தோழர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்துள்ளன. கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை நடத்தவும், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு உறுப்பினர்கள் சேர்க்கவும் தோழர்கள் முனைப்புடன் செயல்பட முன் வந்துள்ளனர். முதல்கட்டப் பயணத்தில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் பங்கேற்றனர். விரைவில் இரண்டாம் கட்டப் பயணம் தொடங்கவிருக்கிறது. பயணம் குறித்து விழுப்புரம் அய்யனார் தொகுத்து அனுப்பியுள்ள செய்தி. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்றால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததோடு, இயக்க செயல்பாடுகளும் ஒரு சில நிகழ்வுகள் தவிர்த்து இணைய வழியில் மட்டுமே நடைபெற்று வந்தன. இயக்கப் பணிகள் சுணக்கம் ஆகிவிட்டன. இதனைப் போக்கும் வகையில் கழகப் பணிகளை தீவிரப்படுத்தும் கழக ஏடான, புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் ஏட்டிற்கு சந்தா சேர்த்திடவும், முதல் கட்டமாக 18.11. 2021 முதல் 20.11.2021 வரை...

பேராசிரியர் செயராமனை மிரட்டியிருக்கிற நாம் தமிழர் கட்சி -மயிலாடுதுறை அரம்பர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – கூட்டறிக்கை

பேராசிரியர் செயராமனை மிரட்டியிருக்கிற நாம் தமிழர் கட்சி -மயிலாடுதுறை அரம்பர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – கூட்டறிக்கை

० பேராசிரியர் செயராமனை மிரட்டியிருக்கிற நாம் தமிழர் கட்சி -மயிலாடுதுறை அரம்பர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ० தமிழ்நாட்டு அரசின் கவனத்திற்கும், தமிழ்நாடு காவல்துறை தலைமைக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அறவியலுக்குரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம் ०००० இரண்டு நாட்களாக மயிலாடுதுறையில் நிகழ்ந்திடும் சம்பவங்கள்தாம் அவை.. தமிழ்த்தேசத்தின் எதிரி யார்? என்ற தலைப்பில் 19 9 2021 ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் உரையாற்றியவர் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமன் அவர்கள் ஆவார்கள் அந்த உரையில் தமிழ்த்தேசியம் என்ற பெயரால் திராவிட எதிர்ப்பு என்பதையும், பெரியார் எதிர்ப்பு என்பதையும் ஓங்கிப் பேசியவர்களில் முதன்மையானவர்களான தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ மணியரசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் ஆகியோரது உரைகளுக்கு விடையளித்தும் மேலும் தேவையான விளக்கங்களளித்தும் உரையாற்றியிருந்தார்.. வட இந்தியாவில் சங்கிகள் நடத்தையை அப்படியே மறு வார்ப்பாக இங்கு செய்து...

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கை அறிக்கை, இஸ்ரோ முன்னாள் அதிகாரி கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் 2018 டிசம்பர் மாதம் தயாரிக்கப்பட்டு, 2019 ஜூன் 1ஆம் தேதி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலைதளத்தில் தேசிய கல்வி கொள்கை அறிக்கை ஆங்கிலம், இந்தியில் மட்டும் வெளியானது. வெளியானதிலிருந்து 30 நாட்களுக்குள் கருத்து சொல்ல வேண்டும் என்று அரசு கால நிர்ணயமும் அறிவித்திருந்தது. பல மொழிகள் பேசக்கூடிய மாநிலங்கள் இருந்தும் மாநில மொழிகளில் அறிக்கை வெளியாகவில்லை என்று எதிர்ப்பு வந்தவுடன் தேசிய கல்வி கொள்கை சுருக்கமான வரைவை தமிழில் வெளியிட்டார்கள். இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம்  ஓராண்டுக்கு முன்பே 2019 செப்டம்பர் 17 இல் பரப்புரை பயணத்தை நடத்தியது. ‘சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தை திணிக்காதே’ என்ற முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் கழகம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை பயணத்தை மேற் கொண்டது. பயணம் பள்ளிபாளையத்தில் நிறைவுற்றது. செப்டம்பர் 20ஆம்...

மயிலாடுதுறையில் ஒரு நாள் பயிற்சி முகாம்

மயிலாடுதுறையில் ஒரு நாள் பயிற்சி முகாம்

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 8.10.2019 அன்று பெரியாரியல் பயிற்சி முகாம் கீழ் நாஞ்சில் நாடு பகுதியிலுள்ள பாலாஜி திருமண மண்டபத்தில் நடந்தது. குடந்தைப் பகுதியில் கழகத்தில் இணைந்த தோழர்கள் தரங்கம்பாடி நன்னிலம் பகுதி மற்றும் மயிலாடுதுறைத்  தோழர்கள் ஆதரவாளர்கள் 68 பேர் கலந்து கொண்டனர். பெரியார் யுவராஜ் கடவுள் ஆத்மா மறுப்பு கூறினார். தலைமைக் குழு உறுப்பினர் இளைய ராஜா பயிற்சி முகாம் நோக்கத்தை விளக்கிப் பேசினார்.  தஞ்சை தோழர் பசு. கவுதமன், சாக்கோட்டை இளங்கோவன் உரையைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெரியார் இயக்கத்தின் அடிப்படை இலட்சியம் அணுகுமுறை பெரியார் இயக்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து  வகுப்புகள் எடுத்தனர். பயிற்சியாளர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பினர். அதற்கு கழகத் தலைவர், பொதுச் செயலாளர் விளக்கமாக பதில் அளித்தனர். மாலை 7 மணி வரை பயிற்சி வகுப்பு நடந்தது. மயிலாடுதுறை...

பெரியார் யுவராஜ்-லீலாவதி  ஜாதி-தாலி சடங்கு மறுப்பு மணவிழா

பெரியார் யுவராஜ்-லீலாவதி ஜாதி-தாலி சடங்கு மறுப்பு மணவிழா

சென்னை மாவட்ட ‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட அமைப்பாளரும் கழக செயற்பாட்டாளருமான பெரியார் யுவராஜ்-லீலாவதி ஜாதி-சடங்கு-தாலி மறுப்பு மணவிழா, செப். 22, 2019 அன்று மயிலாடுதுறை சோழம்பேட்டை கே.ஜி.ஆர். திருமண மண்டபத்தில் மாலை 7 மணியளவில் நிகழ்ந்தது. நாகை மாவட்ட கழகச் செயலாளர் மகேஷ் வரவேற்புரையாற்றினார். தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வாழ்த்துரை வழங்கினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று மணவிழாவை நடத்தி வைத்தார். முன்னதாக கோவை கழகத் தோழர் இசைமதி – பெண்ணுரிமைப் பாடல் பாடினார். கோவை கழக செயல்பாட்டாளர் நிர்மல்குமார், கழகத் தோழர் இசைமதி ஆகியோர் ஜாதி மறுப்பு மணவிழாவை பொதுக் கூட்ட மேடையில் நடத்திக் கொண்டனர். தோழர் இசைமதியின் சகோதரியே லீலாவதி என்பது குறிப்பிடத்தக்கது. கொள்கையை உறவாக்கிக் கொள்ளும் பண்பாட்டுப் புரட்சியை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நிகழ்த்தி கழகத்துக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். கோவையிலிருந்து தனி...

லீலாவதி-பெரியார் யுவராஜ் ஜாதி – தாலி – சடங்கு மறுப்பு சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா !

லீலாவதி-பெரியார் யுவராஜ் ஜாதி – தாலி – சடங்கு மறுப்பு சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா !

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாடுதுறை, சோழம்பேட்டை, கே.ஜி.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விணையேற்பு விழாவில் இருவீட்டார், கழகத்தின் முன்னணி நிர்வாக்கிகள், தோழர்கள் உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் வழங்கப்பட்டது.

அண்ணா பிறந்தநாள்: கழகம் மாலை அணிவிப்பு

அண்ணா பிறந்தநாள்: கழகம் மாலை அணிவிப்பு

மயிலாடுதுறை : 15.09.2019 அன்று காலை 10 மணிக்கு அண்ணா 111ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நாகை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு, மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமையில் மாலை அணிவிக்கப் பட்டது. உடன் மயிலாடு துறை கழகத் தோழர்கள் சென்றிருந்தனர். முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கோவை : 15.09.2019 அன்று காலை 9 மணிக்கு, கழகத்தின் சார்பில் காந்திபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கம் எழுப்பப்பட்டது. வெங்கட், கிருஷ்ணன், அறிவரசு, மாதவன் சங்கர், நிர்மல், கிருஷ்ணமூர்த்தி, செந்தில் வடிவேல், மன்சூர் அலி, ராஜ்.  மேலும் திராவிட விழுதுகள் அமைப்பைச் சார்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 19092019 இதழ்

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

  ‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில்  முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை  வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன்...

கழக சார்பில் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை

கழக சார்பில் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை

சென்னையில் : டாக்டர் அம்பேத்கர் 128ஆவது பிறந்தநாளான 14.04.2019 காலை 9 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக அடையாறில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர்  சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கழகத் தோழர்கள் ஜாதி, மத எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின் இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் கழகத்  தோழர்கள் ராஜீ, சங்கீதா, அம்பிகா, பூர்ணிமா ஆகியோர் அம்பேத்கர் படத்திற்கும், பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர். திருப்பூரில் :  திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்வாக 14.04.2019 ஞாயிறு காலை 11.00 மணியளவில் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது. கழகப் பொரு ளாளர்...

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் மயிலாடுதுறையில் 09.01.2019 அன்று காலை 11.00 மணியளவில் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் ஈரோடு ரத்தினசாமி, திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் குழு உறுப்பினர் நா. இளையராஜா வரவேற்றார். கழக வார பத்திரிகை புரட்சிப் பெரியார் முழக்கம் மற்றும் மாத இதழ் நிமிர்வோம் சந்தா தலைவரிடம் கொடுக்கப்பட்டது. கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகளை கழகத் தலைவர் அறிவித்தார். மாவட்டத் தலைவர்  ம.மகாலிங்கம்; மாவட்ட செயலாளர் தெ.மகேசு; மாவட்ட பொருளாளர் ந.விஜயராகவன்; மாவட்ட அமைப்பாளர் கு.செந்தில் குமார்; மாவட்ட துணைத் தலைவர் தெ. ரமேஷ்; மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் நன்மாறன் மயிலாடுதுறை நகரம்: நகரத் தலைவர் நாஞ்சில் சங்கர்; நகர செயலாளர் நி.நடராசன்; நகர அமைப்பாளர் தில்லை நாதன்; நகர துணை தலைவர் ராஜராஜன்; நகர துணை செயலாளர் ஜாகிர் உசேன்....

நாகை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மயிலாடுதுறை 09012019

நாகை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மயிலாடுதுறை 09012019

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் மயிலாடுதுறையில் 09.01.2019 அன்று காலை 11.00 மணியளவில் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில்  நடைப்பெற்றது. கூட்டத்திற்கு தலைமை கழக பொறுப்பாளர்கள் ஈரோடு ரத்தினசாமி, திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் நா. இளையராஜா வரவேற்றார். கழக வார பத்திரிகை புரட்சி பெரியார் முழக்கம் மற்றும் மாத இதழ் நிமிர்வோம் சந்தா தலைவரிடம் கொடுக்கப்பட்டது. கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகளை கழக தலைவர் அறிவித்தார். மாவட்டத் தலைவர்  ம.மகாலிங்கம் மாவட்ட செயலாளர் தெ.மகேசு மாவட்ட பொருளாளர் ந.விஜயராகவன் மாவட்ட அமைப்பாளர் கு.செந்தில்குமார் மாவட்ட துணை தலைவர் தெ. ரமேஷ் மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் நன்மாறன் மயிலாடுதுறை நகரம். நகரத் தலைவர் நாஞ்சில்.சங்கர் நகர செயலாளர் நி.நடராசன் நகர அமைப்பாளர் தில்லை நாதன் நகர துணை தலைவர் ராஜராஜன் நகர துணை செயலாளர் ஜாகிர் உசேன் மயிலாடுதுறை...

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நாகை 09012019

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நாகை 09012019

நாகை மாவட்டத்தில் 09.01,2019 புதன்காலை 11 மணியளவில் மயிலாடுதுரை கூறை நாடு பகுதியில் உள்ள மினி ஹாலில் கலந்துரையாடல் கூட்டம் தலைவர் தலைமையில் நடைபெற்றது தோழர் இளையராசா அவர்கள் கடவுள் மறுப்பு கூறி தொடங்கியது

போலி சுவரொட்டிகளுக்குக் கழகம் மறுப்பு

போலி சுவரொட்டிகளுக்குக் கழகம் மறுப்பு

திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்டதாக சில சமூக விரோத சக்திகள் போலியாக ஒரு சுவ ரொட்டியை முகநூலில் வடிவமைப்பு செய்து வெளியிட்டு, அதைக் காரணமாக வைத்து கழகத் தோழர்களை அலைப்பேசி வழியாக ஆபாசமாக பேசி வருகின்றனர். இதற்கு கழக சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுப்பு விவரம்: இங்கு பதிவிடப்பட்டுள்ள சுவரொட்டி படங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சுவரொட்டிகள் அல்ல. திவிக-விற்கு களங்கம் கற்பிக்கும் நோக்கோடு சமூக வலைத் தளங்களில் சமூக விரோதி களால் போலியாக தயாரிக்கப்பட்டு இது பரப்பப்பட்டுள்ளது. மயிலாடு துறை,சென்னை ஆகிய ஊர்களின் பெயரில் இந்த போலி சுவரொட்டிகள் இணையதளங்களில்  பரப்பப்படுவதாக அறிகிறோம். எமது இயக்கத்தை கருத்தியலாய் சந்திக்க இயலாத காவிகளும், இந்துத்துவவாதிகளும்  வழக்கமாக காவிகளின் கீழ்த்தரமான பிரச்சார பாணியில் பரப்பி தங்கள் சுய அரிப்பை சொறிந்து கொள்கிறார்கள். திவிக விற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் உள்நோக்கோடு இவ்வாறு அவதூறு பரப்பும் சமூக விரோதிகள் மீது சட்டப்படி கழகத்தின் சார்பில் காவல்துறையிடம்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்ச்சிகள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்ச்சிகள்

திராவிட அரசியலின் பெருமைக்குரிய அடையாளம் கருஞ்சட்டைக் கலைஞர் என்ற தலைப்பில் செப்டம்பர் 30ஆம் தேதி திருச்செங்கோட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது. திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் து.சதிசுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கின் தொடக்கத்தில் பெரியார் பிஞ்சு இரா.தர்சினி வரவேற்புரையாற்றினார். கழகத்தின் மாவட்ட தலைவர்  மு.சாமிநாதன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்செங்கோடு நகர பொறுப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும், பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ். மூர்த்தி மற்றும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலைஞரின் செயல்பாடுகளை விளக்கி சிறப்புரையாற்றினர். முன்னதாக தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் சிவகாமி, நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் ஆகியோரும் உரையாற்றினர். சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி பேசுகையில், “காவிகளை தமிழகத்துக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், தலைவராக பொறுப்பேற்றபோது உறுதியளித்திருக்கிறார். அவருடைய பாதையில் நாங்களும் காவிகளை எதிர்க்க உறுதியாய்...

அன்பு ஏகலைவன் – இளமதி வாழ்க்கை இணை ஏற்பு விழா ! மயிலாடுதுறை 02092018

அன்பு ஏகலைவன் – இளமதி வாழ்க்கை இணை ஏற்பு விழா ! மயிலாடுதுறை 02092018

அன்பு ஏகலைவன் – இளமதி வாழ்க்கை இணை ஏற்பு விழா ! நாள் – 02.09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி இடம்- கோவிந்தம்மாள் திருமண மண்டபம், மயிலாடுதுறை. இணையர்கள்- மு.அன்பு, மாவட்ட அமைப்பாளர், திவிக அ.இளமதி தலைமை – ம.மகாலிங்கம் மாவட்டத்தலைவர், வரவேற்புரை- நா.இளையராஜா, தலைமைக்குழு உறுப்பினர், நடத்தி வைத்து வாழ்த்துரை – தோழர் கொளத்தூர் மணி முன்னிலை – விடுதலை இராசேந்திரன், வாழ்த்துரை- பேரா.த.ஜெயராமன், தலைமை ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சாக்கோட்டை மு.இளங்கோவன், நன்றியுரை- ப.தமிழ்வேலன் நகர செயலாளர்.

கழகத்தின் பரப்புரைகள் – ஆர்ப்பாட்டங்கள் பள்ளிப்பாளையத்தில் ஆசிபாவுக்கு  நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

கழகத்தின் பரப்புரைகள் – ஆர்ப்பாட்டங்கள் பள்ளிப்பாளையத்தில் ஆசிபாவுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் சார்பில் இந்துத்துவ வெறியர்களால் வன்புணர்ந்து கொல்லப்பட்ட ஆசிஃபாவிற்கு நீதி கேட்டும், இந்துத்துவ பாஜக அரசைக் கண்டித்தும் திராவிடர் விடுதலைக் கழகம், தோழமைக் கட்சிகள் ஒன்றிணைந்து பள்ளிப்பாளை யத்தில் 17.4.2018 அன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மாவட்டப் பொருளாளர் முத்துப்பாண்டி தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலையில்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகம், தமுமுக, பு.இ.மு. தோழர்கள் கண்டன  உரைக்குப் பிறகு கழக அமைப்பாளர் ஈரோடு ரத்தினசாமி கண்டன உரையாற்றினார். ஆசிபாவும் தேசத் துரோகியா? சென்னை-மயிலாடுதுறையில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள் சிறுமி ஆசிபாவை இந்துத்துவா கும்பல், வன்புணர்ச்சி செய்து படுகொலை செய்ததைக் கண்டித்து சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 20.4.2018 மாலை 4 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகே பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிகார வெறியில் மனிதத்தைக் கொல்லாதே; ஆசிபாவும் தேசத்...

மயிலாடுதுறையில் ஆசிஃபாவிற்கு நீதி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் !

மயிலாடுதுறையில் ஆசிஃபாவிற்கு நீதி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் !

மயிலாடுதுறையில் ஆசிஃபாவிற்கு நீதி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் மயிலாடுதுறை சார்பில் பச்சிளம் குழந்தைகளை படுகொலை செய்யத் தூண்டுகிற காவி மத வெறி அமைப்புகளையும்,அதற்கு துணை போகிற பாஜகவையும் கண்டித்து 16.04.2018 அன்று மாலை 5.00 மணியளவில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு கழகத்தின் மாவட்டச்செயலாளர் மகேசு தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.  

என் எல் சி முற்றுகைப் போராட்டம் 10042018 நெய்வேலி

என் எல் சி முற்றுகைப் போராட்டம் 10042018 நெய்வேலி

அண்ணன் பண்ருட்டி வேல்முருகன் அவர்கள் தமிழக வாழ்வுரிமை  கூட்டமைப்பின் சார்பாக எண்ணற்ற பல அமைப்பு சார்ந்த தலைவர்களும், தமிழர் நலம் சார்ந்த பல தலைவர்களும் சிறப்பு மிக்க பல ஆளுமைகளும், காவிரி மேலாண்மை வாரியம் வேண்டி மிகச்சிறப்பான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!!! திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்கள் தலைமையில் கடலூர் மாவட்டம் நட.பாரதிதாசன் தலைமையிலும் விழுப்புரம் மாவட்டம் தோழர் ராமர் தலைமையிலும் நாகப்பட்டினம் மாவட்டம் தோழர் விஜி மற்றும்  தோழர் மகேஷ் இவர்கள் தலைமையிலும், மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இளையராஜா அவர்களும் புதுச்சேரி மாநிலம் தோழர் லோகு அய்யப்பன் அவர்கள் தலைமையிலும், புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் தோழர் தீனா மற்றும் தோழர் பரத் அவர்கள் தலைமையிலும், அரியலூர் மாவட்ட செயலாளர் தோழர் கோபால் இராமகிருட்டினன் அவர்களும் தோழர் அறிவழகன் ஆசிரியர் அவர்கள் தலைமையில் சில தோழர்களும் மற்றும் சில பொது நல தோழர்களுடன் நெய்வேலி முற்றுகையில் பெருந்திரளாக தலைவர் தலைமையில் திவிக சார்பாக கலந்து கொண்டனர் புகைப்படங்களுக்கு

எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!

எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!

எச். ராஜாவைக் கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் உருவ பொம்மை எரிப்புகள் நடந்தன. குமரி மாவட்டத்தில் 07-03-2017 புதன் கிழமை, காலை 11.00 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறீநாத்திடம் புகார் மனு வழக்குரைஞர் வே.சதா (மாவட்டத் தலைவர்) தலைமையில் தமிழ்மதி (மாவட்டச் செயலாளர்), நீதி அரசர் (தலைவர், பெரியார் தொழிலாளர் கழகம்), சூசையப்பா (முன்னாள் மாவட்டத் தலைவர்), அப்பாஜி (வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர், தி.மு.க), வைகுண்ட ராமன், வின்சென்ட் ஆகியோரால் வழங்கப் பட்டது. ஆனைமலை : கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின்  ஒருங் கிணைப்பில் அனைத்து கட்சிகளின் சார்பில் 07-03-2018 மாலை 5 மணிக்கு ஆனைமலை முக்கோணத்தில் நடைபெற்றது. ஆனைமலை நகரச் செயலர் வே.அரிதாசு தலைமையில், நகர தலைவர் சோ.மணிமொழி முன்னிலையில் நடைபெற்றது. கண்டன உரையாக நாகராசு (திராவிடர் கழகம்), பரமசிவம் (சிபிஎம் ), மணிமாறன்  (வெல்ஃபேர் பார்ட்டி), அப்பன்குமார் (விசிக), சாந்துசாகுல்அமீது (இந்திய...

களப்போராளி அ கோ கஸ்தூரிரங்கன் மறைவு 11082016 இரங்கல் கூட்ட புகைப்படங்கள்

போராளியின் இறுதி நிகழ்வு ! ஏ.ஜி.கே. என அழைக்கப்பட்ட ஏ.ஜி.கஸ்தூரிரங்கன்(75) அவர்கள் 10082016 மதியம் உடல் நலக் குறைவின் காரணமாக நாகப்பட்டினத்தில் தனியார் மருத்துவமனையில் காலமானார். தோழரின் இறுதி நிகழ்வு 11082016 மதியம் 2 மணிக்கு நாகப்பட்டிணம், அந்தணப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. மேலும் செய்திகளுக்கு

மன்னார்குடி பரப்புரை பயண காட்சிகள் !

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் தலைப்பில் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணம் தமிழகத்தின் நான்கு முனைகளில் ஆரம்பித்து கிராமங்கள்,ஊர்கள், நகரங்கள் வழியாக பயணித்து மக்களை சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது

மயிலாடுதுறை பரப்புரை வாகனம் !

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் தலைப்பில் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணம் தமிழகத்தின் நான்கு முனைகளில் ஆரம்பித்து கிராமங்கள்,ஊர்கள், நகரங்கள் வழியாக பயணித்து மக்களை சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயண தொடக்க விழா மயிலாடுதுறை 07082016

மயிலாடுதுறையில் தொடக்க விழா 07082016 அன்று! கழக தலைவர் தலைமையில். திராவிடர் விடுதலைக்கழகத்தின் ‘அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணம்’ ‘நம்புங்க-அறிவியல; நம்பாதீங்க-சாமியார்கள’ எனும் முழக்கத்தோடு தமிழகத்தின் 4 முனைகளிலிருந்து ஆகஸ்டு 7இல் புறப்படுகிறது. நிறைவு விழா ஆகஸ்ட்12 . மக்களிடம் அறிவியல் சிந்தனைகளையும் பகுத்தறிவு கருத்துகளையும் விளக்கும் பிரச்சார பயணம்  

கழக பொதுக்கூட்டத்திற்கு உயர் நீதி மன்றம் அனுமதி ! ”ஜாதிக்கொரு சுடுகாடு,இது சமத்துவ நாடா?”

கழக பொதுக்கூட்டத்திற்கு உயர் நீதி மன்றம் அனுமதி ! ”ஜாதிக்கொரு சுடுகாடு,இது சமத்துவ நாடா?” வழுவூர் திருநாள் கொண்டசேரி தலித் மக்கள் மீதான ஜாதிய அடக்குமுறைகளை கண்டித்து பொதுக்கூட்டம். நாள் : 06.02.2016 சனிக்கிழமை மாலை 5.00 மணி. இடம் : விஜயா தியேட்டர் எதிரில்,மயிலாடுதுறை. ✪ தமிழகம் முழுதும் அனைத்து கிராமங்களிலும் நகரங்களிலும் மின் மயானம் அமைத்திடு ! ✪ மயிலாடுதுறை அருகே உள்ள வழுவூர் கிராமத்தில் நிலவும் சாதிய பாகுபாடுகளைக் களைந்திடு ! ✪ இரட்டை சுடுகாட்டு முறையை ஒழித்திடு ! எனும் கோரிக்கைகளை முன் வைத்து பொதுக்கூட்டம். சிறப்புரை : ‘தோழர் கொளத்தூர் மணி,’ தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். ‘தோழர் விடுதலை ராஜேந்திரன்’, பொதுச்செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். ‘தோழர் வே.மதிமாறன்’,எழுத்தாளர். – திராவிடர் விடுதலைக் கழகம் மயிலாடுதுறை – நாகை மாவட்டம். முன்னதாக இந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கி 04.02.2016 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா...

பெரியார் ஏன் எதிர்க்கப்படுகிறார்? மயிலாடுதுறையில் கழகம் நடத்திய விளக்கக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத் தின் சார்பாக மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் 26.09.2015 சனிக் கிழமை அன்று பெரியார்: யாரால், எதற்க்காக, எதிர்க்கப் படுகிறார்? என்ற தலைப்பில் பெரியார் பிறந்தநாள் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு நகர அமைப் பாளர் கு.செந்தில்குமார் தலைமை வகித்தார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் வே.மதிமாறன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மத அடிப்படை வாதிகளும், ஜாதிய ஆதிக்கவாதிகளும்தான் பெரியாரை எதிர்க்கின்றனர் என்றும், கல்வி, வேலை வாய்ப்புகளில் போராடிப் பெற்ற இடஓதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடங்களில் இன்றும் அவர்கள் முழுமையாக அதில் பலன் பெற முடியாமல் பல்வேறு இடையூறுகளை ஏற்ப்படுத்தி இட ஒதுக் கீட்டை ஒழிக்கும் சதி திட்டமிட்டு நடைபெறுவதாக விடுதலை இராசேந்திரன் கூறினார். எழுத்தாளர் மதிமாறன் பேசும்போது திருக்குறளை இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆண்ட மன்னர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் புராணங்களை கதாகாலேட்சபம் செய்து கொண்டிருந்த வேளையில் பெரியார் தான் திருக்குறள் மாநாடு...

ஜாதி வெறிக்கு எதிராக மயிலாடுதுறையில் முற்றுகைப் போராட்டம்: தோழர்கள் கைது 0

ஜாதி வெறிக்கு எதிராக மயிலாடுதுறையில் முற்றுகைப் போராட்டம்: தோழர்கள் கைது

நாகை மாவட்டம் குத்தாலம், வழுவூர் ஊராட்சி இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான வீரட்டேஸ்வரர் கோயில் குளத்தில் நீர் எடுத்து கோயில் விழா நடத்த முயன்ற திருநாள்கொண்டச்சேரி தலித் மக்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக செயல்படும் சில ஆதிக்கசாதியினர் மீது சட்ட நடவடிக்கையும், தலித் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கவும், அனைத்து மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும் 14.9.2015 அன்று மயிலாடுதுறை சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் சாதி மறுப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்றது. முற்றுகைப் போராட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மகாலிங்கம், மாவட்ட அமைப் பாளர் அன்பரசன், தலைமை செயற்குழு உறுப்பினர் இளையராஜா, நாஞ்சில் சங்கர், தமிழ் வேலன், இராஜராஜன், நடராஜ், ரமேஷ், இயற்கை, ஜாகிர், விஜய ராகவன், உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு கைதாயினர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, விடுதலை தமிழ் புலிகள், தமிழர் உரிமை இயக்கம், சி.பி.ஐ.எம்.எல். விடுதலை,...

0

நாகை மாவட்டத்தில் தந்தைபெரியாரின் 137 வது பிறந்தநாள் விழா

நாகை மாவட்டம். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தந்தைபெரியாரின் 137 வது பிறந்தநாள் விழா படங்கள்

0

நாகை மாவட்டக் கலந்துரையாடல்

கழகத்தின் நாகை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், 13-8-2015 அன்று காலை 11-00 மணிக்கு,  மயிலாடுதுறை, ROA அரங்கத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது.