பள்ளத்தூர் நாவலரசன் – தாமோதரன் – மந்திரமா தந்திரமா நிகழ்வுகளோடு மயிலாடுதுறையில் களை கட்டியது மாநாடு!

மயிலாடுதுறை கடலூர் நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்கள் இணைந்து மே 4ஆம் தேதி மயிலாடுதுறையில் மாநாட்டினை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநாட்டின் நோக்கத்தினை வலியுறுத்தி 16 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. 10000 வண்ண துண்டறிக்கைகள் அச்சடிக்கப்பட்டு மக்களிடையே பரப்புரை செய்யப் பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 இடங்களில் சுவர் விளம்பரமும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து 500 சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் மாலை 5 மணி அளவில் பள்ளத்தூர் நாவலரசு குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சியுடன் மாநாட்டு நிகழ்வு தொடங்கியது.

மாநாட்டிற்கு  மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை ஏற்றார். வரவேற்புரை கடலூர் மாவட்ட தலைவர் மதன்குமார் வழங்க, நமக்கான அடையாளம் திராவிட மாடல் என்ற மாநாட்டின் கோரிக்கையை வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வழக்கறிஞர் வேலு. குணவேந்தன், தமிழர் உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் சுப்பு மகேஷ் பேசினார்கள்.

மந்திரம் இல்லை தந்திரமே என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சியை மிக சிறப்பாக பெரம்பலூர் துரை. தாமோதரன் நடத்திக் காட்டினார்.

அடுத்து பேசிய கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மாநாட்டின் நோக்கங்களை யும், தேவையையும் மிக தெளி வாகவும் ஆழமான கருத்துக் களுடன் எடுத்துரைத்தார்.

இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாநாட்டின் நோக்கங்களை விளக்கிப் பேசினார். மாநாட்டு நிகழ்வில் புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தீனா கலந்து கொண்டார். கடலூர் மாவட்டத்தில் தலைவர்  மதன்குமார், அமைப்பாளர் ஆசிய ஜோதி, பிரகாஷ் உள்ளிட்ட தோழர்கள் தனி வாகனத்தில் வந்து கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டத்திலிருந்து மாவட்ட தலைவர் இளங்கோவன், சோலை. மாரியப்பன், வெங்கடேசன், கரிகாலன் உள்ளிட்ட தோழர்களும் மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாட்டில் மயிலாடுதுறை நகர செயலாளர் நடராஜ் நன்றியுரை கூறினார்.  வந்திருந்த தோழர்களுக்கு மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக மாவட்ட பொருளாளர் பாசித் அனைவருக்கும் குடிதண்ணீர் வசதி ஏற்பாடு செய்திருந்தார்.

தெருமுனை கூட்டங்களில் தலைமைக் குழு உறுப்பினர் இளையராஜா, மாவட்ட தலைவர் ம.மகாலிங்கம் ஒருங்கிணைத்தனர். விஜயராகவன்,  செந்தில்குமார்,  நாஞ்சில் சங்கர்,  கார்த்திக்,  தில்லை நாதன்,  ஜாகிர் உசேன்,  ராகவன்,  ஜவகர்,  பீமாராவ்,  பாண்டியன்,  சுரேஷ், மே 17 இயக்கம் கோகுல், த.உ.இ விடுதலையாளன் முரளி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் தாமோதரன் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்வுகளின் வழியாக மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்துகளோடு திராவிட மாடல் கருத்துகளையும் சிறப்பாக அனைத்து தெருமுனைக் கூட்டங்களில் பேசினார்.

 

 

பெரியார் முழக்கம் 12052022 இதழ்

You may also like...