Category: நேர்காணல்கள்

நடுகாட்டில் பிரபாகரனுடன் சில நாட்கள் தங்கியிருந்தேன் – தோழர் கொளத்தூர் மணி நேர்காணல் ஜுனியர் விகடன் 31.01.90

நடுகாட்டில் பிரபாகரனுடன் சில நாட்கள் தங்கியிருந்தேன் – தோழர் கொளத்தூர் மணி நேர்காணல் ஜுனியர் விகடன் 31.01.90

திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர்களில் ஒருவர் டி.எஸ். மணி. இவர் சேலம் குளத்தூரைச் சேர்ந்தவர்.  இவரது நிலத்தில்தான் 1984-ல் எல்.டி.டி.ஈ யினருக்குப் போர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மலைப்பகுதியும் – பச்சைப்பாளி காட்டுப்பகுதியும் கலந்த அந்த இடத்தில் விடுதலைப் புலிகள் ரகசியமாகப் பயிற்சி பெற்ற நாட்களை பிரபாகரன் மறந்ததில்லை . பிற்பாடு மரணமடைந்த லெப். கர்னல் பொன்னம்மான், புலேந்திரன் மற்றும்  அருணா இந்த முகாமில் பயிற்சியாளர்களாக இருந்தனர். டி.எஸ். மணிக்குச் சொந்தமான இந்த இடத்தை அன்று தேர்ந்தெடுத்து, பயிற்சியை முறைப்படி செயல்படுத்திக் கண்காணித்தவர் மாத்தையா! இந்த முறையில் டி.எஸ். மணி எப்போதும் பிரபாகரனுக்கு நெருங்கியவர். பிரபாகரனின் அழைப்பின் பேரில், டி.எஸ். மணி சமீபத்தில் ஈழம் சென்றார். பிரபாகரனுடன் நடுக்காட்டில் சில நாட்கள் தங்கிவிட்டு மகிழ்ச்சி பொங்கத் திரும்பியிருக்கிறார். டி.எஸ். மணி தன் அனுபவத்தைக் கூறுகிறார்; “1989 டிசம்பர் பத்தாம் தேதி நான் புறப்பட்டு, பதினோராம் தேதி ஈழம் அடைந்தேன். பன்னிரண்டாம் தேதி...

கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் நேர்காணல் – ஆனந்த விகடன் 

கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் நேர்காணல் – ஆனந்த விகடன் 

துக்ளக் விழாவில், ரஜினிகாந்த் பேசியது பொய் என்று சொல்லி மறுக்கும் நீங்கள், 1971-ல், ‘நடந்த விஷயங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன்’ என்று அன்றைய முதல்வர் கருணாநிதி பேட்டியளித்திருப்பதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?’’ “புராணங்களில் உள்ள ஆபாசக் கதைகள் பற்றி மக்களிடையே எடுத்துச்சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் ‘மூட நம்பிக்கை ஒழிப்புப்பேரணி’யே அன்றைக்கு நடத்தப்பட்டது. இரண்டு ஆண்களுக்குப் பிறந்ததாகச் சொல்லப்படும் ஐயப்பன் பிறப்பு மற்றும் முனிவரின் மனைவியான அனுசுயாவை கடவுளர்களே நிர்வாணமாக வரச்சொல்லிய வக்கிரங்கள் ஆகியவற்றைத்தான் சித்திரங்களாக வரைந்து ‘இந்த ஆபாசக் கடவுளர்களை நீங்கள் வணங்கலாமா…’ என்று தலைப்பிட்டுப் பேரணியில் எடுத்துச் சென்றோம். வடஇந்தியாவில், ‘ராம லீலா’ என்ற பெயரில் ராவணனைத் தீயிலிட்டுக் கொளுத்துவதை எதிர்த்து, இங்கே ராமர் பொம்மையை எரிக்கத் திட்டமிட்டுத்தான் பேரணி சென்றோம். இதுதான் நடந்த உண்மை! ஆனால், துக்ளக் விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி – சீதை உருவங்கள் உடையில்லாத நிலையில் செருப்பு மாலை அணிந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது’...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி சீமான் கைதட்டலுக்காகப் பேசுகிறார்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி சீமான் கைதட்டலுக்காகப் பேசுகிறார்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இராஜீவ் காந்தி கொலை குறித்து பேசியது, பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது குறித்து, ஜூனியர் விகடனுக்கு 19.10.2019 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி. “ஆமாம், நாங்கதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். இந்திய இராணுவத்தை அமைதிப் படை என்ற பெயரில் அனுப்பி, தமிழின மக்களை அழித்தொழித்த தமிழின துரோகி ராஜீவ் காந்தியை, தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்” – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இந்தக் கடும் சர்ச்சைப் பேச்சுதான் தமிழக… ஏன் இந்திய அரசியலில் ஹாட் டாபிக். தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வரும், சீமானின் அரசியல் முகம் அறியாத கால கட்டத்திலேயே தனது இயக்கத்தின் கூட்டங் களில் மேடையேற்றிப் பேச வைத்தவருமான திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் இது தொடர்பாக சில கேள்விகளை முன் வைத்தோம்....

போர்க்கலை வல்லுநர்களின் கணிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் – கழகத் தலைவர் பேட்டி

போர்க்கலை வல்லுநர்களின் கணிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் – கழகத் தலைவர் பேட்டி

05.05.2019 தேதியிட்ட ஈழத்தமிழர்களால் அமெரிக்காவிலிருந்து நடத்தப்படும் ”இலக்கு” வாராந்திர மின்னிதழுக்கு ‘தாயகக் களம்’ பகுதியில் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் குறித்தும், தற்போதைய ஈழச்சூழல், தமிழீழம் குறித்தும் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் அளித்துள்ள பேட்டி : ”போர்க்கலை வல்லுநர்களின் கணிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்” ‘வன்னிக்காட்டில் அவருடன் இருந்த நாட்கள் மறக்க முடியாதவை’ – ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் தா.செ.மணி. முள்ளிவாய்க்காலுக்கு முன் எமது மண்ணின் விடுதலைப் போராட்டத்திற்கு ஈக வரலாறு இருப்பது போல் அதற்கு தோள் கொடுத்து நின்ற தாய்த்தமிழகத்திற்கும் ஓர் ஈக வரலாறு உண்டு. கடலினும் பெரிதான ஈக நெஞ்சங்களின் ஒரு துளி சாட்சி தான் திராவிடர் விடுதலைக்கழகத்தின் தலைவரும் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கொளத்தூர் தா.செ.மணி. 1984 சனவரி 05 முதல் 1986 நவம்பர் இறுதிவரையான மூன்று ஆண்டுகளுக்கு புலிகள் பயிற்சி எடுப்பதற்காக தன்னுடைய...

தேசியக் கொடியை எரித்தால் கூட அது தேச விரோதச் செயல் அல்ல.. கொளத்தூர் மணி

தேசியக் கொடியை எரித்தால் கூட அது தேச விரோதச் செயல் அல்ல என்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானப் போராட்டத்தில் தேசியக் கொடியை அவமதித்து விட்டார்கள் தேச துரோகிகள் என்று பாஜக அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். தேசியக் கொடி எதிர்ப்பு போராட்டம், அரசியல் சட்டம் எரிப்புப் போராட்டம் என்று பெரியாரால் அறிவிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. தேசியக் கொடி எரிப்பு போராட்டத்திற்கான அடிப்படை இங்கே இருக்கிறது. தேசியக் கொடியை எரிப்பது அவ்வளவு பெரிய குற்றமா.. மோடியை பற்றி விமர்சித்தாலே தேச விரோதமா என்பது குறித்து ஒன்இந்தியா கேட்ட கேள்விகளுக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பதில்கள் இதோ… ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது தேசியக் கொடி அவமதித்த தேசத் துரோகிகள் என்று நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். தேசியக் கொடி எதிர்ப்பு போராட்டம் நடந்த மண்...

புதிய தலைமுறை அக்னிப் பரீட்சை நிகழ்ச்சி 22122012 – கழகத் தலைவர் கொளத்தூர் மணி நேர்காணல் 0

புதிய தலைமுறை அக்னிப் பரீட்சை நிகழ்ச்சி 22122012 – கழகத் தலைவர் கொளத்தூர் மணி நேர்காணல்

“புதிய தலைமுறை” தொலைக்காட்சியில் டிசம்பர் 22 அன்று ‘அக்னிப் பரீட்சை’ நிகழ்ச்சியில்பேட்டியாளர் ஜென். ராம் எழுப்பிய பல்வேறு வினாக்களுக்கு விடையளித்து கழகத் தலைவர்கொளத்தூர் மணி வழங்கிய பேட்டியின் முழு வடிவம். ஜென்ராம் – திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் என்றபெயர்களில் இருந்தாலும் – கொள்கை ஒன்றுதான். ஆனால், மூன்று அமைப்புகளில் நீங்கசெயல்பட வேண்டிய நிலை வந்திருக்கிறது. என்ன காரணம்? கொளத்துர் மணி – மூன்று அமைப்புகளுக்கும் கொள்கை ஒன்றுதான். ஆனால்அணுகுமுறைகளிலும், எதற்கு முன்னுரிமைக் கொடுப்பது என்பதிலும் எங்களுக்குள் எழுந்தகருத்து வேறுபாடுகள்தான் புதிய புதிய அமைப்புகளை காண்பதற்கும் தோன்றுவதற்கும்காரணமாக இருக்கிறது. ஜென்ராம் – அணுகுமுறைதான் என்று நீங்க ஒரே சொல்லில் சொல்லி முடிச்சுடறீங்க. ஆனால்அதற்கு பின்னால் தலைமைகள் குறித்து நீங்க வைத்திருக்கக் கூடிய விமர்சனம், கடுமையாகஇருக்கு. கொள்கைகளை விட இயக்கமும் கட்டுப்பாடும் முக்கியம் என்ற நிலை தோழர் வீரமணிகாலத்தில் உருவானது என்று நீங்க அங்கிருந்து வெளியே வரும்போது...

0

‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி

‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் 28-09-2014 அன்று ஒளிபரப்பான ‘அக்னிப் பரீட்சை’ நிகழ்ச்சியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  பதில்கள். பேட்டி கண்டவர் தலைமை செய்தியாளர் மு. குணசேகரன். கேள்வி :  செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் என்ற ஒரு விண்கலத்தை அனுப்பியிருக்கிறார்கள்; மங்கள்யான் செவ்வாய் கிரகத்திற்கு செல்வது என்பது, விஞ்ஞான வளர்ச்சியில் மேலை நாடுகளோடு போட்டிப் போட்டு கொண்டு இந்தியா வளர்கிறது என்று விஞ்ஞானிகளைப் பாராட்டி பேசி வருகிறார்கள்; செவ்வாய் தோஷம் என்பதை நம்புபவர்களும் இந்தியாவில் தான் அதிகம் பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்; விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிற அளவிற்கு, விஞ்ஞான பூர்வமாக சிந்திக்கும் தன்மை மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா? பதில் : இல்லை என்பதைத்தான் இவைகளெல்லாம் வெளிப்படுத்துகின்றன; எடுத்துக்காட்டாக, நம் நாட்டில் அறிவியல் அறிவுக்கு ஒன்றும் குறை வில்லை. ஆனால் அறிவியல் மனப்பான்மை இல்லை என்பது தான் நமக்குள்ள குறை. அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடாமல், சோதிடம் என்ற...

திராவிடர் இயக்க இலட்சியங்கள் இளைஞர்களிடையே பரவ வேண்டும் ‘இமயம்’ தொலைக்காட்சிக்கு கொளத்தூர் மணி பேட்டி 0

திராவிடர் இயக்க இலட்சியங்கள் இளைஞர்களிடையே பரவ வேண்டும் ‘இமயம்’ தொலைக்காட்சிக்கு கொளத்தூர் மணி பேட்டி

“தனித் தமிழ்நாடு, ஜாதி ஒழிப்பு, சமூகநீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை ஆகிய திராவிட இயக்க இலட்சியங்களை பாடங்களில் பதிவு செய்வதில்லை; ஊடகங்களும் இருட்டடிக் கின்றன; அதுவே இளைஞர்களிடையே கொள்கைகள் முழுமையாக சென்றடைய வில்லை” என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி குறிப்பிட்டார். பிப். 7 அன்று, ‘இமயம்’ தொலைக்காட்சிக்கு ஊடகவியலாளர் ஜீவ சகாப்தனுக்கு அளித்த நேர்முகம்: ஊடகவியலாளர்: இன்றைய நேர்முகம் நிகழ்ச்சியில் உங்களுடைய இயக்க செயல்பாடுகள், அரசின் செயல்பாடுகளை நீங்கள் பார்க்கும் விதம், தமிழகத்தில் – தமிழ்ச் சமூகத்தில் இன்றைக்கு இருக்கும் நிர்பந்தங்கள் போன்ற பரவலான தளத்தில்தான் இன்றைய விவாதம் செல்லவிருக் கிறது. முதல் கேள்வியாக… ஈழம், தமிழ்த் தேசியம், ஜாதி ஒழிப்பு போன்ற தளங்களில் நீங்கள் இயங்கி வருகிறீர்கள்; சமீபத்தில் இலங்கை அதிபர் மாற்றம் குறித்து, அது ஒரு மாற்றமே இல்லை என்று சிலர் சொல்கிறார்கள்; அதை ஒரு நிகழ்வாகவே பார்க்கவில்லை என்று சிலர் சொல்கிறார்கள்; இராஜபக்சே என்கிற ஆளுமை மாறியதே...