அரியலூரில் கழகம் நடத்திய ஒரு நாள் பயிற்சி வகுப்பு
20.02.21 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டம் இணைந்து நடத்திய ஒருநாள் பயிலரங்கம், ஆண்டிமடத்தில் பெரியார் – அண்ணா அரங்கில் நடைபெற்றது. கடலூர் மாவட்ட அமைப்பாளர் அ. மதன்குமார், கடவுள் மறுப்பு கூறி நிகழ்வை தொடங்கி வைத்தார்.
முதல் நிகழ்வாக தலைமைக் குழு உறுப்பினர் மயிலாடு துறை ந. இளையராஜா, ‘பயிலரங்கத்தின் நோக்கம் மற்றும் நடப்பு அரசியல்’ குறித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ‘திராவிட இயக்க வரலாறு’ குறித்து தஞ்சை மாவட்டத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன் உரையாற்றினார். மதிய உணவுக்குப் பிறகு 2.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட தலைவர் துரை. தாமோதரன், அறிவியல் பூர்வமாக கடவுள் மறுப்பு நிகழ்ச்சிகளை கலை வடிவில் நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார், ‘அமைப்பாவோம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘பெரியாரிய பார்வையில் அம்பேத்கர்’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.
பயிலரங்கத்தில் கலந்து கொண்ட புதிய தோழர் களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிலரங்கம் நடை பெறுவதற்கு மதிய உணவும், அரங்கமும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சௌந்தரராஜன் ஏற்பாடு செய்தார். பயிலரங்கம் சிறப் பாக நடைபெறு வதற்கு கருவேப் பிலங்குறிச்சி அறிவழகன் மற்றும் ஆண்டிமடம் இராவண கோபால் உதவி செய்தனர்.
நிகழ்ச்சியை கடலூர் மாவட்ட அமைப்பாளர் அ.மதன்குமார் ஒருங்கிணைத்தார்.
பெரியார் முழக்கம் 25022021 இதழ்