Category: தூத்துக்குடி

கழகம் எடுத்த புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

கழகம் எடுத்த புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

வேலூர்: புரட்சியாளர் அம்பேத்கர் 132ஆவது பிறந்தநாள் விழா வேலூர் மாவட்டக் கழக சார்பில் மாவட்டச் செயலாளர் சிவா தலைமையில் குடியேற்றம், கொண்டசமுத்திரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர்  விடுதலைக் கழகம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் இணைந்து மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்பு அனைவரும் ஜாதி ஒழிப்பு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். நண்பகல் 12 மணிக்கு வேலூர் மாநகரில் விசிக ஒருங்கிணைத்த “ஜனநாயகம் காப்போம்! சனாதனத்தை வேரறுப்போம்!”பேரணியில் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். நண்பகல் 2 மணிக்கு ராமாலையில் திராவிட் மற்றும் பகுதித் தோழர்கள் ஒருங்கிணைப்பில் அம்பேத்கருடைய புகைப்படத்திற்கு மாலை அணிவித்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் சிறப்பு உணவு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு  வேலூர் மாவட்டம் புட்டவாரபள்ளி கிராமத்தில் அமல்ராஜ், ஒருங்கிணைப்பில் பொதுமக்களோடு இணைந்து அம்பேத்கர்  பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.   இரவு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது....

பெரியார் குடும்பத் தோழர்கள்  இலக்கியா-கவுதமன் ஜாதி மறுப்பு மணவிழா

பெரியார் குடும்பத் தோழர்கள் இலக்கியா-கவுதமன் ஜாதி மறுப்பு மணவிழா

திராவிடர்  இயக்கத் தமிழர் பேரவை யின் கொள்கை பரப்புச் செயலாளர் உமா, மகள் இலக்கியாவுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் சிவராசு – மணிமேகலை இணையரின் மகன் கவுதமனுக்கும்  சனாதன எதிர்ப்பு,  ஜாதி மறுப்பு, சுயமரியாதை திருமணம்  02.10.2022 அன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சௌபாக்கியா மகாலில் நடைபெற்றது. புத்தர் கலைக்குழு மற்றும் நிமிர்வு கலையகம் பறை இசை முழக்கத்துடன் விழா துவங்கியது. இவ்விழா அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், பார்ப்பன சனாதன  சடங்குகள் எதுவுமின்றி தாலி கட்டாமல் மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ள ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணத்தை புலவர் செந்தலை ந.கவுதமன் அவர்கள் நடத்தி வைத்தார். புதிய குரல் ஓவியா நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இணையேற்பின் வரவேற்பு நிகழ்வு, 09.10.2022 அன்று காலை கோவை விக்னேசு மகாலில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர்...

பெரியார் பிறந்த நாள் எழுச்சி; பரப்புரைக் கூட்டங்கள்

பெரியார் பிறந்த நாள் எழுச்சி; பரப்புரைக் கூட்டங்கள்

  பெரியார் பிறந்த நாளான செப்.17 அன்று கொடி ஏற்றம்; தெருமுனைப் பரப்புரை; பொதுக் கூட்டங்களை கழகம் நடத்தியது. தூத்துக்குடியில் பால் பிரபாகரன் உரை : ஆரிய விசம் முறிக்கும் அருமருந்து தந்தை  பெரியாரின் 144வது பிறந்த நாளில் சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்பீர் என்று தி.வி.க பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் அறைகூவல் விடுத்தார். தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் 17.09.2022 தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சனாதன எதிர்ப்பு விளக்கப் பொதுக் கூட்டமாக தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பு தருவைகுளம் முதன்மை சாலையில் நடைபெற்றது. நிகழ்விற்கு தி.வி.க.மாவட்ட துணைத் தலைவர் ச.கா.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வே.பால்ராசு, ச.ரவிசங்கர், ம.அசோக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சா.த.பிரபாகரன் வரவேற்புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழக பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அவர் தனது உரையில் “தந்தை பெரியாரின் உழைப்பால் சமத்துவ சமூக மாற்றம் ஏற்பட்டு...

குடந்தை – கீழப்பாவூர்-குடியாத்தத்தில் சிறப்புடன் நடந்த மண்டல மாநாடுகள்

குடந்தை – கீழப்பாவூர்-குடியாத்தத்தில் சிறப்புடன் நடந்த மண்டல மாநாடுகள்

குடந்தையில்: ‘நமக்கான அடையாளம் திராவிட மாடல்’ என்ற முழக்கத்தை முன் வைத்து கும்பகோணம் மீன் மார்க்கெட் திடலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மண்டல மாநாடு 16.5.2022 அன்று மாலை சிறப்புடன் நடைபெற்றது. மாவட்டக் கழகத் தலைவர் மு. இளங்கோவன் தலைமையில் சா.வெங்கடேசன் (ஒன்றிய அமைப்பாளர்) முன்னிலையில் நடைபெற்றது. கு. பாரி (தஞ்சை மாவட்ட செயலாளர், தி.வி.க.), தெ. மகேசு (மாவட்டச் செயலாளர்), திருச்சி நாகம்மையார் இல்லத்துப் பெண்ணைத் திருமணம் செய்தவரும், திராவிடர் கழகத் தோழருமான பவுண்டரீகபுரம் முருகேசன், பொறியாளர் திருநாவுக்கரசு (உழவர் இயக்கம்), சி.த. திருவேங்கடம் (மாவட்ட அமைப்பாளர்), சா. விவேகானந்தன் (மண்டல செயலாளர் வி.சி.க.) உள்ளிட்டோர் மாநாட்டில் பேசினர். முன்னதாக, பெரம்பலூர் தாமோதரன், ‘மந்திரமா-தந்திரமா’ நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்ட மகளிரணி செயலாளர் திரிபுரசுந்தரி மற்றும் தி.க. தோழர்கள் குணா, சங்கர், கழகத் தலைவர்-பொதுச் செயலாளருக்கு துண்டுகளை அணிவித்து மகிழ்ந்தனர். கரிகாலன் நன்றி கூறினார். தொடர்ந்து 20...

சூரங்குடியில் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

சூரங்குடியில் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் 01.01.2022 சனிக்கிழமை மாலை 06.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கழக இதழான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார இதழுக்கு சந்தா சேர்க்கவும் இம்மாதம் முழுவதும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பிரச்சார இயக்கமாக நடத்திட வேண்டும் என்றும் கொரானா தொற்று தற்போது பெருகி வருவதால் தொற்று குறைந்ததும் சூரங்குடியில் கொள்கை விளக்க பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடத்திடவும், தீர்மானிக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி, கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் தோழர்களுக்கு இதழ் சந்தா சேர்ப்பு அவசியம் மற்றும் நடைமுறை சிக்கல்களை எப்படி கையாள்வது பற்றியும் பெரியார் இயக்க கொள்கைகளை விளக்கியும் உரையாற்றினர். நிகழ்வை தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் சூரங்குடி...

கழகப் பரப்புரைச் செயலாளர் பிரபாகரன் தாயார் உடல் நிலை: கழகப் பொறுப்பாளர்கள் நலம் விசாரித்தனர்

கழகப் பரப்புரைச் செயலாளர் பிரபாகரன் தாயார் உடல் நிலை: கழகப் பொறுப்பாளர்கள் நலம் விசாரித்தனர்

கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் தாயார் உடல்நலமின்றி இருக்கிறார். கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் 7.2.2021 அன்று பிரபாகரன் இல்லம் சென்று தாயாரின் உடல்நலம் விசாரித் தனர். முன்னதாக மதுரை மாவட்ட கழகத் தோழர் காமாட்சி பாண்டியையும் (பிப்.6),  பிப்.7 அன்று நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் கழகத் தோழர் மாசிலாமணி இல்லத்தில் கழகத் தோழர் களையும் சந்தித்து கழக செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினர். மார்ச் 7ஆம் தேதி மகளிர் தினவிழாவை குடும்பத் துடன் குற்றாலத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 04032021 இதழ்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மகளிர் தின விழா!

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மகளிர் தின விழா!

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மகளிர் தின விழா! நாள் :07.03.2021, ஞாயிறுகாலை நேரம் : 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இடம்: ஆயிரப்பேரி விலக்கு அருகேயுள்ள தோப்பு பழைய குற்றாலம் செல்லும் வழி, குற்றாலம். தலைமை :தோழர். கலாவதி , பொறுப்பாளர், தமிழ்நாடு அறிவியல் மன்றம், தென்காசி மாவட்டம். முன்னிலை : தோழர். கோமதி, நெல்லை தோழர். வெற்றிச் செல்வி , சூரங்குடி தோழர். சுமதி , செட்டியூர், தென்காசி தோழர். மாரீஸ்வரி, தூத்துக்குடி தோழர். அனிதா, கபாலிபாறை வரவேற்புரை : தோழர். இரமணி, கீழப்பாவூர். சிறப்புரை : “திராவிடர் இயக்கமும் பெண்ணுரிமையும்” எனும் தலைப்பில் பால். பிரபாகரன் (பரப்புரைச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்) மகளிர் தின விழா உரை தோழர். சங்கீதா, (அமைப்பாளர், திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்) தோழர். அ. மாசிலாமணி தென்காசி மாவட்டத்தலைவர் தி.வி.க. தோழர். பா.பால்வண்ணன் நெல்லை...

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

  ‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில்  முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை  வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன்...

பால். பிரபாகரனிடம் வழங்கிய கட்டமைப்பு நிதி

பால். பிரபாகரனிடம் வழங்கிய கட்டமைப்பு நிதி

தலைமை கழக கட்டமைப்பு நிதிக்காக தூத்துக்குடி எம்.எஸ்.எம். அரிசி கடை அதிபர் எம்.எஸ். மாலவராசு ரூ. 25,000/- (ரூபாய் இருபத்தி அய்ந்தாயிரம் மட்டும்) கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரனிடம் வழங்கினார். பாளையங்கோட்டை கே.ஆர். குளிர்பானம் நிறுவனர் பொ. பொன்ராசு – ரூ. 2000/- மேலகரம் பேரா.பழனிவேல் ரூ. 1000/-   பெரியார் முழக்கம் 13062019 இதழ்

13 உயிரைப் பலி வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சவப் பரிசோதனை அறிக்கை தரும் அதிர்ச்சி தகவல்கள்

13 உயிரைப் பலி வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சவப் பரிசோதனை அறிக்கை தரும் அதிர்ச்சி தகவல்கள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றிய சவப் பரிசோதனை அறிக்கையை தமிழக அரசு வெளியிடாத நிலையில் ‘பிரண்ட் லைன்’ இதழ் அதை வெளிக் கொண்டு வந்துள்ளது. அந்த அறிக்கையை அலசி மருத்துவர் புகழேந்தி ‘ஜூனியர் விகடன்’இதழில் எழுதிய கட்டுரை இது. தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய மக்கள்மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு மறக்கமுடியா பெருந் துயரம்! துள்ளத் துடிக்க சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேர்களின் உடற் கூராய்வு சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கைகளை ஆராய்ந்து, பல்வேறு சந்தேகங்களை எழுப்பி யுள்ளார் தடயவியல்துறை மருத்து வரான புகழேந்தி. அவரிடம் பேசுகையில், “சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்னோலின், கந்தையா, தமிழரசன், செல்வசேகர் ஆகியோரின் உடல்களுக்கு 2018ஆம் ஆண்டு மே மாதம் 24, 25ஆம் தேதிகளில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனை ஆய்வு மற்றும் அறிக்கைகள் அவசரக் கோலத்தில் நடந்துள்ளன என்பதை உடற்கூராய்வு அறிக்கைகளை வைத்தே சொல்ல முடியும். போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டர் 151-ன்படி இறந்தவர்கள் அணிந் திருந்த...

தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு கழகம் மாலை அணிவிப்பு

தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு கழகம் மாலை அணிவிப்பு

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் எதிரிலுள்ள அண்ணலின் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்க முழக்கம் எழுப்பப்பட்டது. பெரியார் முழக்கம் 25042019 இதழ்

தூத்துக்குடியில்  ‘திராவிடம் அறிவோம்’ விவாத நிகழ்வு

தூத்துக்குடியில் ‘திராவிடம் அறிவோம்’ விவாத நிகழ்வு

17.02.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “திராவிடம் அறிவோம்” என்ற பெயரில் புதிய தோழர்களுக்கான கேள்வி- பதில் நிகழ்வு நடைபெற்றது. இயக்கத்தில் இணைய விரும்பும் தோழர்கள், தோழமை இயக்க தோழர்கள் பெரியார், அம்பேத்கர், திராவிடம், சமூக நீதி, இட ஒதுக்கீடு குறித்த அய்ய வினாக்களுக்கு விடைதேடும் நிகழ்வாக நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் தோழர்களின் அய்ய வினாக்களுக்கு விடையளித்தார். புதிய தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மிகச்சிறப்பான, ஆக்கப்பூர்வமான நிகழ்வாக இது அமைந்தது. பெரியார் முழக்கம் 28022019 இதழ்

ஆழ்வார் திருநகரில் 10 சதவீத ஒதுக்கீட்டைக் கண்டித்து கழகப் பொதுக் கூட்டம்

ஆழ்வார் திருநகரில் 10 சதவீத ஒதுக்கீட்டைக் கண்டித்து கழகப் பொதுக் கூட்டம்

16.02.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆழ்வை ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் உயர்சாதி ஏழைகளுக்கு 10ரூ இட ஒதுக்கீடு என்ற பெயரில் சமூகநீதியை சீர்குலைக்கும் உயர்ஜாதி இடஒதுக்கீட்டைக் கண்டித்து ஆழ்வார் திருநகரியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆழ்வை ஒன்றிய திவிக தலைவர் நாத்திகம் முருகேசனார் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட திவிக தலைவர் கோ.அ.குமார் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக் கழகப் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ச.இரவி சங்கர், மாவட்ட அமைப்பாளர் பால். அறிவழகன், மாவட்ட பொருளாளர் சந்திரசேகர், பால்ராசு,  பிரபாகரன், ஆதித் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரா.வே.மனோகர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 28022019 இதழ்

தூத்துக்குடியில்  ‘திராவிடம் அறிவோம்’ விவாத நிகழ்வு

தூத்துக்குடியில் ‘திராவிடம் அறிவோம்’ விவாத நிகழ்வு

17.02.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “திராவிடம் அறிவோம்” என்ற பெயரில் புதிய தோழர்களுக்கான கேள்வி- பதில் நிகழ்வு நடைபெற்றது. இயக்கத்தில் இணைய விரும்பும் தோழர்கள், தோழமை இயக்க தோழர்கள் பெரியார், அம்பேத்கர், திராவிடம், சமூக நீதி, இட ஒதுக்கீடு குறித்த அய்ய வினாக்களுக்கு விடைதேடும் நிகழ்வாக நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் தோழர்களின் அய்ய வினாக்களுக்கு விடையளித்தார். புதிய தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மிகச்சிறப்பான, ஆக்கப்பூர்வமான நிகழ்வாக இது அமைந்தது. பெரியார் முழக்கம் 28022019 இதழ்

ஆழ்வார் திருநகரில் 10 சதவீத ஒதுக்கீட்டைக் கண்டித்து கழகப் பொதுக் கூட்டம்

ஆழ்வார் திருநகரில் 10 சதவீத ஒதுக்கீட்டைக் கண்டித்து கழகப் பொதுக் கூட்டம்

16.02.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆழ்வை ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் உயர்சாதி ஏழைகளுக்கு 10ரூ இட ஒதுக்கீடு என்ற பெயரில் சமூகநீதியை சீர்குலைக்கும் உயர்ஜாதி இடஒதுக்கீட்டைக் கண்டித்து ஆழ்வார் திருநகரியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆழ்வை ஒன்றிய திவிக தலைவர் நாத்திகம் முருகேசனார் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட திவிக தலைவர் கோ.அ.குமார் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக் கழகப் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ச.இரவி சங்கர், மாவட்ட அமைப்பாளர் பால். அறிவழகன், மாவட்ட பொருளாளர் சந்திரசேகர், பால்ராசு,  பிரபாகரன், ஆதித் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரா.வே.மனோகர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 28022019 இதழ்

விதிகளைப் பின்பற்றாத வேதாந்த குழுமம்

விதிகளைப் பின்பற்றாத வேதாந்த குழுமம்

தூத்துக்குடியில் போராட்டம் தொடங்கிய முதல் 4 நாட்கள் கழிந்த உடன் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், தூத்துக்குடி கோட்ட வளர்ச்சி அதிகாரியும் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள் 7 இடங்களிலும், அதைச் சுற்றி உள்ள 8 கிராமங்களிலும் நிலத்தடி நீரை எடுத்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு நிலத்தடி நீர் மாசுபட்டு இருந்தது தெரிய வந்தது. அதாவது அதிக அளவு ஈயத் தாது தண்ணீரில் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மடத்தூர், காயலூரணி, தெற்கு வீர பாண்டியபுரம், குமரெட்டியபுரம், சில்வர்புரம், பண்டாரம் பட்டி, மீளவிட்டான் ஆகிய கிராமங்களில் இவ்வாறு நிலத்தடி நீர் மக்களின் உடல்நலத்தை கெடுக்கும் வகையில் மாசுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு, கிராம மக்களிடம் இந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை செய்து இருக்க வேண்டும். ஆனால், அது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியே வரும் வரை இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்...

“கல்வி- வேலை வாய்ப்பில் எங்கள் உரிமையை பறிக்காதே” – பரப்புரைப் பயணம்.

“கல்வி- வேலை வாய்ப்பில் எங்கள் உரிமையை பறிக்காதே” – பரப்புரைப் பயணம்.

“கல்வி- வேலை வாய்ப்பில் எங்கள் உரிமையை பறிக்காதே” – பரப்புரைப் பயணம். ‘தூத்துக்குடியிலிருந்து கீழப்பாவூர் வரை’ தூத்துக்குடி- திருநெல்வேலி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “கல்வி- வேலை வாய்ப்பில் எங்கள் உரிமையை பறிக்காதே” எனும் தலைப்பில் தமிழக மாணவர்களின் உரிமை மீட்பு பரப்புரை பயணம் மாநில பரப்புரை செயலாளர் தோழர்.பால்.பிரபாகரன் அவர்களின் தலைமையில் தூத்துக்குடியிலிருந்து கீழப்பாவூர் வரை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல்14,15 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறது.… See more

“கல்வி- வேலை வாய்ப்பில் எங்கள் உரிமையை பறிக்காதே” – பரப்புரைப் பயணம். தூத்துக்குடி 14042018

“கல்வி- வேலை வாய்ப்பில் எங்கள் உரிமையை பறிக்காதே” – பரப்புரைப் பயணம். தூத்துக்குடி 14042018

  ‘தூத்துக்குடியிலிருந்து கீழப்பாவூர் வரை’ தூத்துக்குடி- திருநெல்வேலி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “கல்வி- வேலை வாய்ப்பில் எங்கள் உரிமையை பறிக்காதே” எனும் தலைப்பில் தமிழக மாணவர்களின் உரிமை மீட்பு பரப்புரை பயணம் மாநில பரப்புரை செயலாளர் தோழர்.பால்.பிரபாகரன் அவர்களின் தலைமையில் தூத்துக்குடியிலிருந்து கீழப்பாவூர் வரை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல்14,15 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற இருக்கிறது.. மீத்தேன், ஹைட்ரோ கார்பன், சாகர்மாலா, நியுட்ரினோ, ஸ்டெர்லைட், கூடங்களம் போன்ற தமிழ்நாட்டை சுடுகாடாக்கும் எண்ணற்ற நாசகர திட்டங்களை போட்டு தமிழக மக்களை வஞ்சிக்கும் மத்திய அரசு, இப்போது நம் தமிழ் மாணவர்களின் கல்வி உரிமையில் “புதிய கல்விக் கொள்கை” எனும் பெயரில் கை வைத்திருக்கிறது. இந்த புதிய கல்வி கொள்கையை மக்களிடையே அம்பலப்படுத்தும் நோக்கத்துடன் இப்பரப்புரை பயணத்தை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தவிருக்கிறது.

தூத்துக்குடியில் பெரியாரியல் பயிலரங்கம்

தூத்துக்குடியில் பெரியாரியல் பயிலரங்கம்

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 11-03-2018 அன்று தூத்துக்குடி முத்து மஹாலில் ஒரு நாள் “பெரியாரியல் பயிலரங்கம்” நடைபெற்றது. இதில் திராவிடர் இயக்க வரலாறு பற்றியும், வகுப்புரிமை வரலாறு பற்றியும், தந்தை பெரியாரின் போராட்ட வரலாறு பற்றியும், தமிழர்- திராவிடர் பற்றிய விளக்கங்களையும், திராவிடர் இயக்கத்தின் மீதான அவதூறுகளுக்கு விளக்கங்களையும்,  திராவிடர் விடுதலைக் கழகத்தின் போராட்ட வரலாறு பற்றியும் மாநில பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் விரிவாக பயிற்சியளித்தார். பயிற்சி வகுப்புக்கு பின்னர் கலந்து கொண்ட பயிற்சி யாளர்கள் தங்களுக்கு தோன்றிய சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு விளக்கம் பெற்றனர். இப்பயிற்சி வகுப்பில் 25க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். காலை மாலை தேநீருடன் மதிய உணவாக பிரியாணி வழங்கப் பட்டது. இப்பயிற்ச்சி வகுப்புக்கான ஏற்பாட்டை தூத்துக்குடி திவிக மாவட்டச் செயலாளர் இரவி சங்கர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். பெரியார் முழக்கம் 15032018 இதழ்  

ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கும் ஜாதி எதிர்ப்பு போராளிகளுக்கும் பாராட்டு விழா !

ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கும் ஜாதி எதிர்ப்பு போராளிகளுக்கும் பாராட்டு விழா !

மதுரையில், ஜாதி மறுப்பு இணையோர்களுக்கும், ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கும் ஜாதி எதிர்ப்பு போராளிகளுக்கும் பாராட்டு விழா ! மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 13.02.2018 அன்று மாலை 5 மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள ராமசுப்பு அரங்கத்தில் நடைபெற்றது. சிறப்புரை : கழக பரப்புரை செயலாளர்.பால்.பிரபாகரன் ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் தமிழ் புலிகள் கட்சி பொது செயலாளர் பேரறிவாளன் சிபிஎம்எல் மக்கள் விடுதலை பாரதி கண்ணம்மா -பாரதி கண்ணம்மா அறக்கட்டளை பேராசிரியர் முரளி -Pucl ரபீக்ராஜா-இளந்தமிழகம் வெண்மணி -தபெதிக ஆனந்தி – குறிஞ்சியர் விடுதலை இயக்கம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திராவிடர் விடுதலைக் கழகம்,மதுரை மாவட்டம்.

“பெரியாரியல் பயிலரங்கம்” தூத்துக்குடி 11032018

“பெரியாரியல் பயிலரங்கம்” தூத்துக்குடி 11032018

“பெரியாரியல் பயிலரங்கம்”.. தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “பெரியாரியல் பயிலரங்கம்”.. நாள்: 11-03-2018, ஞாயிறு.. இடம்: முத்து மஹால், தூத்துக்குடி. பல்வேறு தலைப்புகளில் வகுப்புகள் நடைபெற உள்ளன விருப்பமுள்ளோர் கலந்து கொள்ள முன்பதிவு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.  · Provide translation into English

தூத்துக்குடியில் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் மனு !

தூத்துக்குடியில் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் மனு !

தூத்துக்குடியில் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் மனு ! எச்.ராஜாவை கைது செய்யக்கோரி…. திரிபுராவில் உலகப் புரட்சியாளர் லெனின் சிலையை இடித்து தள்ளிய இந்துத்துவ பாஜக குண்டர்களின் செயலை ஆதரித்து, பாஜகவின் ஹரிஹர சர்மா “இன்று லெனின் சிலை நாளை பெரியார் சிலை” என்று தனது முகநூலில் பதிந்ததன் மூலம் கலவரத்தை தூண்டப்பார்த்த H.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்பாணிப்பாளரிடம் 07.03.2018 அன்று தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.. இதில் தோழமை அமைப்புகளான விசிகவிலிருந்து தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் தோழர் கா.மை.அகமது இக்பால் தலைமையிலும், ஆதித் தமிழர் கட்சியின் கி.கில்லுவின் தலைமையிலும் எண்ணற்ற தோழர்கள் கலந்து கொண்டனர்..

களப்பணியில் கழகத் தோழர்கள் தூத்துக்குடி மாணவர்களிடம் வரவேற்பைப் பெற்ற கழக துண்டறிக்கை

களப்பணியில் கழகத் தோழர்கள் தூத்துக்குடி மாணவர்களிடம் வரவேற்பைப் பெற்ற கழக துண்டறிக்கை

தூத்துக்குடி மாவட்ட மாணவர் கழகம் சார்பாக 21.02.2018 அன்று  “மாணவர்களே! இருள் சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்” எனும் தலைப்பில் தமிழக மாணவர்கள் எவ்வாறு இந்துத்துவ மோடி அரசால் பாதிக்கப்படுகிறார்கள், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாமான அரசுப் பணிகள் எவ்வாறு பிறருக்கு தாரைவார்க்கப்படு கின்றன, நமக்கான வேலை வாய்ப்பு தேர்வுகளில் வெளி மாநில மாணவர்கள் பெரும்பான்மையாக பங்கெடுக்கும் அளவிற்கு கதவைத் திறந்து விட்டுருக்கிற பா.ஜ.க. எடுபிடி அரசான தமிழக அரசின் நய வஞ்சகத்தை துண்டறிக்கையாக தயார் செய்து அதை தூத்துக்குடியில் அமைந்துள்ள கல்லூரி மாணவர் களிடம் பரப்பி விழிப்புணர்வை உண்டாக்கும் முயற்சியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. பல மாணவர்கள் இந்த துண்டறிக்கையை படித்துவிட்டு தங்களுக்குத் தோன்றிய சந்தேகங்களை தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி மாவட்ட தலைவர் கண்ணதாசன், மாவட்ட செயலாளர் பிரபாகரன் போன்றவர்களிடம் கேட்டு அறிந்த...

‘சுயமரியாதை சுடரொளி’ பொறிஞர்  அம்புரோசு நினைவேந்தல் கூட்டம்

‘சுயமரியாதை சுடரொளி’ பொறிஞர் அம்புரோசு நினைவேந்தல் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கழகத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு, 2017 அக்டோபர் 26ஆம் நாள் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில் தூத்துக்குடி மாவட்ட கழகம் சார்பில் கடந்த 2017 டிசம்பர் 17ஆம் நாள் தூத்துக்குடி மூவிபுரம் முத்து மகாலில் நினை வேந்தல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கோ.அ.குமார் தலைமை வகித்தார். ஆழ்வை ஒன்றியத் தலைவர் நாத்திகம் பா.முருகேசன், தூத்துக்குடி வே.பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறைந்த சுயமரியாதை சுடரொளி பொறிஞர் சி. அம்புரோசு நினைவலைகளை, கழகத் தோழர்கள் செ. செல்லத்துரை, ச.கா. பாலசுப்பிரமணியன், குமரி மாவட்ட அமைப்பாளர் சேவியர் (எ) தமிழரசன், நெல்லை மாவட்ட அமைப்பாளர் சு. அன்பரசு, கீழப்பாவூர் ஒன்றியத் தலைவர் குறும்பை மாசிலாமணி, தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் கண்ணதாசன், தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் ச. தமிழன், சட்டக் கல்லூரி மாணவர் அர்ஜூன், எஸ்.டி.பி.அய். கட்சி மாவட்டப் பொருளாளர்...

தூத்துக்குடி மாவட்ட கழகத் தலைவர் பொறியாளர் அம்புரோஸ் முடிவெய்தினார்

திராவிடர் விடுதலைக் கழக தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பொறியாளர்.அம்புரோஸ், சாலை விபத்தில் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி மரணம் அடைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரின் உடல் அடக்கம் அக்டோபர் 27ஆம் தேதி காலை புதுக்கோட்டையிலுள்ள அவர் இல்லம் அருகில் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் தலைமைக் கழக சார்பில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், சூலூர் பன்னீர் செல்வம், குமரி மாவட்ட செயலாளர் தமிழ்மதி, மாவட்ட அமைப்பாளர் நீதியரசர், முன்னாள் மாவட்ட தலைவர் சூசையப்பா, திருநெல்வேலி மாவட்ட தலைவர் பால்வண்ணன், மாவட்ட அமைப்பாளர் அன்பரசு, தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப் பாளர் தமிழ்செல்வம், கீழப்பாவூர் ஒன்றியத் தலைவர் மாசிலாமணி, செயலாளர் சுப்பையா, பொருளாளர் சங்கர், ஆதி தமிழர் பேரவை மாநில இளைஞர் அணி செயலாளர் அருந்ததியராசு, நெல்லை கலைக் கண்ணன், விடுதலை சிறுத்தைகள் தென்மண்டல செயலாளர் சே.சு.தமிழ் இனியன்,...

தூத்துக்குடி மாவட்ட கலந்துரையாடல்

தூத்துக்குடி மாவட்ட கலந்துரையாடல்

18.6.2017 அன்று தூத்துக்குடி, டூவிபுரம் 2ஆம் தெருவில் உள்ள முத்து மகாலில் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்தரையாடல் கூட்டம், மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமையில் நடைபெற்றது. கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு: மறைந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் க. மதன், குழந்தைகள் படிப்பிற்கான தொகையினை வருடா வருடம் கொடுத்து வருவது போன்றுஇவ்வாண்டும் கொடுப்பது என்றும், அதற்கான தோழர்களின் பங்களிப்பை விருப்பம் உள்ளவர்கள் மாவட்டத் தலைவரிடம் ஒப்படைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்கள் சந்தாவை சேர்ப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு, மாவட்டச் செயலாளர் கோ. அ. குமார். மாவட்ட துணைப் பொறுப்பாளர்கள், பொருளாளர் பொறுப்புகளுக்கு பொறுப்பாளர் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 24082017 இதழ்

கண்டனப் பொதுக்கூட்டம் ! தூத்துக்குடி 22042017

தொட்டியபட்டி அருந்ததியின மக்கள் மீது ஜாதிய வன்கொடுமை தாக்குதல் நடத்திய நாயக்கர் ஜாதி ஆதிக்க வெறியர்களைக் கண்டித்து நாள் : 22.04.2017 சனி. நேரம்: மாலை 5 மணி இடம்: வடக்கு சோட்டையன் தோப்பு, தருவைக்குளம் மெயின் ரோடு, தூத்துக்குடி. சிறப்புரை : தோழர் பால்.பிரபாகரன், பரப்புரைச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். சொ.சு.தமிழினியன், தென்மண்டலச் செயலாளர்ர், வி.சி.க. தொடர்புக்கு: 90036 95465 – 96268 61581

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா தூத்துக்குடி 14042017

அண்ணல் அம்பேத்கர் 126வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கழக பரப்புரை செயலாளர் தோழர் பால்.பிரபாகரன் தலைமையில் எழுச்சியோடு கொண்டாடப்பட்டது.

பெரியாரியல் பயிற்சி வகுப்பு தூத்துக்குடி 12022017

பெரியாரியல் பயிற்சி வகுப்பு தூத்துக்குடி 12022017

வருகிற 12-02-2017 அன்று (ஞாயிறு) தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. இடம்: முத்து மஹால் நேரம்: காலை 9 மணி. அனைவரும் வருக

பொங்கல் விழா கபாடி போட்டி தூத்துக்குடி 16012017

தூத்துக்குடி மாவட்டமான சூரங்குடி கிராமத்தில் நடந்த தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான “கபாடி” போட்டியில், சூரங்குடி ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பங்கேற்ற அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. பரிசுத் தொகையான 8001ஐ அணியின் கேப்டனான தோழர் சதிஷ் பெற்றுக்கொண்டார். வீர விளையாட்டில் பங்கேற்ற தோழர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நன்றிகளும், வாழ்த்துக்களும்.

தூத்துக்குடியில் புதிய கல்விக்கு எதிர்ப்பு

தூத்துக்குடியில் புதிய கல்விக்கு எதிர்ப்பு

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தூத்துக்குடியில்  வடக்கு சோட்டையன் தோப்பில் 24.9.2016 சனிக்கிழமை மாலை 6 மணியளவில்  பெரியார் 138ஆவது பிறந்த நாள் விழா கல்வியை காவி மயக்கும்  புதிய கல்வி கொள்கை 2016யை கண்டித்து பொதுக் கூட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமை வகித்தார். வடக்கு சோட்டைன், தோப்பு தோழர்கள் கே. சந்திரசேகர், செ. செல்லத் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் ச.கா. பால சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். இந்திய பொதுவுடைமை கட்சி மாநகரச் செயலாளர் எஸ்.பி. ஞானசேகரன், இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட்) ஒன்றிய செயலாளர் சங்கரன், கழக மாவட்ட துணைத் தலைவர் வே. பால்ராசு, ஆதித் தமிழர் கட்சி துணைப் பொதுச் செயலாளர் க. கண்ணன், விடுதலை சிறுத்தைக் கட்சி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர்காமை. இக்பால், கழகத் தோழர் கோ. அ. குமார், வி.சி.க....

தூத்துக்குடியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலையணிவிப்பு

தந்தை பெரியாரின் 138வது பிறந்தநாளான 17092016 அன்று தூத்துக்குடி மாவட்ட திவிக சார்பில் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் முன்புள்ள பெரியார் சிலைக்கு கழக பரப்புரைச் செயலாளர் தோழர் பால் பிரபாகரன் தலைமையில் விளாத்திக்குளம் ஒன்றியச் செயலாளர் மாரிச்சாமி மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு, மாவட்ட அமைப்பாளர் பால் அறிவழகன், மாவட்ட துணைத்தலைவர் வே. பால்ராசு, தமிழ்நாடு மாணவர் கழகம் பிரபாகரன், திலீபன், அறிவழகன், செ.செல்லதுரை, செ.பால்துரை, கோஆ குமார், இ.குமாரசிங் மற்றும் கழகத்தோழர்கள் கலந்து கொண்டனர். தந்தை பெரியாரை வாழ்த்தியும், ஜாதி ஒழிப்புக் குறித்தும் முழக்கம் எழுப்பப்பட்டது. தந்தை பெரியாரின் பிறந்தநாளுக்காக தூத்துக்குடி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன

பாலத்தின் நடைபாதையில் உணவருந்திய தூத்துக்குடி கொள்கைத் தோழர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் பேராதரவோடு எழுச்சியுடன் நடைபெற்ற நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரை பயணம் 27082016 அன்று மாவட்டமெங்கும் நடைபெற்றது. பயணத்தில் ஓரிடத்தில் தோழர்கள் உணவருந்த இடமில்லாத காரணத்தால் அங்கே இருந்த பாலத்தில் வரிசையாக தரையில் அமர்ந்து உணவருந்திய காட்சிகள் இயக்கத்தின் மீது மாளாத பற்றும் கொள்கையின் பால் கொண்ட உறுதியும் நெகிழ்ச்சியுற செய்கிறது

நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரை பயணம் மற்றும் பொதுக்கூட்டம் தூத்துக்குடி 27082016

27082016 அன்று தூத்துக்குடி மாவட்ட திவிக சார்பில் நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரை பயணம் தொடங்கியது. ஒருநாள் பயணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திவிக பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன் அவர்களின் தலைமையில் அணிவகுத்த தோழர்கள் பயணத்தின் கருத்துகளை அடங்கிய துண்டறிக்கை வினியோகித்து மக்களின் எழுச்சியை உருவாக்கினர் மேலும் மாலை 6 மணிக்கு காவை இளவரசன் அவர்களின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியோடு பொதுக்கூட்டம் துவங்கியது. மேலும் செய்திகள் விரைவில்

நவீன சம்பூகர்களின்- வகுப்புரிமை மீட்பு பரப்புரை பயணம்

27082016 “கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் இனத்தினர் மீது இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக, ‘நவீன சம்பூகர்களின்- வகுப்புரிமை மீட்பு பரப்புரை பயணம்” தூத்துக்குடி மாவட்ட “திராவிடர் விடுதலைக் கழகத்தின்” சார்பாக நடைபெற இருக்கிறது. இது நம் சந்ததியினருக்கான பயணம்.. சமூக நீதியை விரும்பும் அனைத்து தோழர்களையும் இந்த பரப்புரை பயணத்தில் பங்குகொள்ள அழைக்கிறோம்.. வாருங்கள்.. சமூகநீதியை வென்றெடுப்போம்..

நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்பு பரப்புரை பயணம் தூத்துக்குடி 27082016

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வருகின்ற ஆகஸ்ட் 27ம் தேதி, “கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தினர் மீது இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக “நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்பு பரப்புரை பயணம்” பார்ப்பன- இந்துத்துவ போக்கை கண்டித்து நம் உரிமையை வென்றெடுப்போம், வாருங்கள்..

தூத்துக்குடி மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் கட்டாய சமஸ்கிருத திணிப்பை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் 8-7-2016 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர்.பொறிஞர்.சி.அம்புரோசு அவர்கள் தலைமைதாங்கினார். ஆழ்வை ஒன்றியத் தலைவர் தோழர்.நாத்திகம் முருகேசனார், விளாத்திகுளம் ஒன்றிய தலைவர் தோழர் சா.மாரிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் தோழர்.அம்புரோசு அவர்கள் தலைமையுரையாற்றினார். அவ்வுரையில் மோடி அரசின் பார்ப்பன இந்துத்துவ போக்கை கண்டித்து பேசினார். தோழர்.அம்புரோசு அவர்களின் உரையை தொடர்ந்து ஆதித் தமிழர் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர்.கண்ணன் அவர்கள் தொடக்க உரையாற்றினார். தோழர்.கண்ணன் அவர்களின் உரையை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட திவிக துணைத் தலைவர் தோழர்.பால்ராசு அவர்கள் உரையாற்றினார். இதனை தொடர்ந்து தமுமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர்.யூசுப் அவர்கள் தமது கண்டன உரையை பதிவு செய்தார். தோழரின் உரையைத் தொடர்ந்து தூத்துக்குடி...

தூத்துக்குடியில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

தூத்துக்குடியில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! அண்ணல் அம்பேத்கரின் 125 பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள அண்ணலின் சிலைக்கு தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி அமைப்பாளர் சூரங்குடி பிரபாகரன் மாலை அனிவித்தார். அதற்பிறகு தோழர்கள் சாதி ஒழிப்பு முழக்கங்களை விண்ணதிர முழங்கி அண்ணலுக்கு மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் அவர்களும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொறிஞர்.சி. அம்புரோசு, மாவட்ட செயலாளர் ச.ரவி சங்கர், மாவட்ட அமைப்பாளர் பால்.அறிவழகன், மாவட்ட பொருளாளர் வீரப் பெருமாள், மாவட்ட து.தலைவர் பால்ராசு, மாவட்ட து.செயலாளர் ச.கா.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி அமைப்பாளர் சூரங்குடி பிரபாகரன், தோழர்கள் கோ.அ.குமார், செல்லத்துரை மற்றும் பல தோழர்கள் கலந்துகொண்டனர்.

சாதி ஒழிப்பில் பெரியார் இயக்கத்தின் பங்கு – பயிலரங்கம் தூத்துக்குடி 13032016

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடந்த 13.03.2016 அன்று தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி ஒன்றியத்தில் வைத்து, “சாதி ஒழிப்பில் பெரியார் இயக்கத்தின் பங்கு” என்ற தலைப்பில் ஒருநாள் பயிரங்கம் நடைபெற்றது. பயிற்சியளித்தவர் மாநில பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் அவர்கள். காலை 9 மணிக்கு தொடங்கிய பயிலரங்கம் மதியம் 1:30 மணிவரை நடந்தது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் 2:30க்கு தொடங்கிய பயிலரங்கம் மாலை 6 மணிவரை நடைபெற்றது. இந்த இருவேளைகளிலும், சாதி ஒழிப்பில் பெரியார் இயக்கத்தின் பங்கு என்ன என்பதைப்பற்றி பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் அவர்கள் மிக அழகாக, தெளிவாக விளக்கி கூறினார். பயிலரங்கம் முடிந்த பிறகு தோழர்கள் தங்களது கருத்துகளையும், சந்தேகங்களையும் பரப்புரை செயலாளரிடம் கேட்டு விளக்கம் பெற்றனர். இப் பயிலரங்கத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு காலை, மாலை இருவேளைகளிலும் தேநீரும், சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. தோழர்களுக்கு மதிய உணவாக சுவையான மாட்டுக்கறி பிரியாணி பரிமாறப்பட்டது. இப்பயிலரங்க...

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – தூத்துக்குடி புகைப்படங்கள்

தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் ! பார்ப்பன சூழ்ச்சியால் மரணமடைந்த ‘ரோஹித் வெமுலா’வின் மரணத்திற்கு நீதி கேட்டும்,மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் விளிம்புநிலை மக்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பில் 01.02.2016 அன்று மாலை 5 மணியளவில் சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பொறிஞர்.சி. அம்புரோசு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வே.பால்ராசு, மாவட்ட துணைச் செயலாளர் ச.கா.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அம்புரோசு அவர்களின் தலைமை உரையைத் தொடர்ந்து, மதிமுகவின் மாநில மீணவரனி செயலாளர் தோழர்.நக்கீரன் கண்டன உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து SDPIயின் தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் மைதீன்கனி, ஆதித் தமிழர் கட்சியின் சு.க.சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் கா.மை.அகமது இக்பால், மனித நேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஆசாத் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இவர்களைத்...

தூத்துக்குடியில் பெரியார் நினைவு நாள்

தூத்துக்குடியில் பெரியார் நினைவு நாள்

தந்தை பெரியாரின் 42வது நினைவு நாளில் தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தென்பாகம் காவல் நிலையம் எதிரே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் வீர பெருமாள், தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி பொறுப்பாளர் சூரங்குடி பிரபாகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு, மாவட்ட செயலாளர் ச.ரவிசங்கர், மாவட்ட பொருளாளர் வீர பெருமாள், மாவட்ட துணைச் செயலாளர் பால சுப்பிரமணியன், தோழர்கள் குமார், செல்லத்துரை, பிரபாகரன், சந்திரசேகர் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 14012016 இதழ்

தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல்

தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல்

29-11-2015 அன்று தூத்துக்குடி மாவட்ட கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் சோமா விடுதியில் மாவட்ட தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமையில் நடைபெற்றது. இயக்க வளர்ச்சியைப் பற்றியும், அடுத்த கட்ட செயல் திட்டங்கள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. தோழர்கள் தங்களது கருத்துகளை கூறினர். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 1. திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தமிழ் நாடெங்கும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் “பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை” 2016 ஜனவரி மாதத்தில் தூத்துக்குடியில் சிறப்பாக நடத்து வது. 2. தூத்துக்குடி மாவட்ட கழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக மாவட்ட தோழர்கள் அனைவரும் மாதம் ரூ.50ஐ சந்தாவாக கொடுப்பது. 3. புரட்சிப் பெரியார் முழக்க சந்தா வினை இந்த ஆண்டு (2016) அதிக அளவு உறுப்பினர்களை சேர்ப்பது.. 4. 2016ம் ஆண்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் உறுப்பினர் சந்தாவினை விரைவாக கொடுப்பது. என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இந்த கலந்துரை யாடலில் மாவட்ட செயலாளர் ச.ரவிசங்கர், மாவட்ட அமைப்பாளர்...

தூத்துக்குடியில் நாத்திகம் பி.இராமசாமி 6ஆம் ஆண்டு நினைவேந்தல்: சாதி எதிர்ப்புப் பரப்புரை

தூத்துக்குடியில் நாத்திகம் பி.இராமசாமி 6ஆம் ஆண்டு நினைவேந்தல்: சாதி எதிர்ப்புப் பரப்புரை

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் ‘நாத்திகம்’ இதழ் நிறுவனர் மறைந்த நாத்திகம் பி. இராமசாமி 6ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், ‘எங்கள் தலைமுறைக்கு சாதி வேண்டாம்; எங்கள் இளைய சந்ததிக்கு வேலை வேண்டும்’ என்ற கொள்கை விளக்கப் பொதுக் கூட்டமாக 24.9.2015 அன்று ஆழ்வை சீரணி அரங்கில் ஆழ்வை ஒன்றிய கழகம் சார்பில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு ஆழ்வை ஒன்றிய கழகத் தலைவர் நாத்திகம் பா.முருகேசன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் ச.கா. பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் வே.பால்ராசு, செ. செல்லத்துரை, கோ.அ. குமார், மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு மற்றும் ஆதித் தமிழர் பேரவை மாநில இளைஞரணி செயலாளர் அருந்ததி அரசு ஆகியோர் உரைக்குப் பின், கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் சிறப்புரை யாற்றினார். அவர் தமது உரையில் நாத்திகம் பி.இராமசாமியின் பணிகளை நினைவு கூர்ந்ததோடு, நாட்டில் நிலவும் கனிமவளக் கொள்ளை, சாதி ஆணவக்...

0

தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல்

20-8-2015 அன்று மாலை 4-00 மணிக்கு, தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. முன்னதாக தோழர் க.மதன் படத்திறப்பு விழா நடைபெற்றது. கழக கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் மற்றும் இயக்க தோழர்கள் கழக பணிகளை மேற்கொண்டு செல்ல ஆலோசனை வழங்கினர்.