Category: கருவூல கட்டுரைகள்

தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு

தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு

  1879  செப்.17, ஈரோட்டில் பெரியார் பிறந்தார். 1898  13 வயது நாகம்மையாரை மணம் முடித்தார். 1902  சாதி ஒழிப்பு கலப்பு திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சாதியினர், மதத்தினருடன் சமபந்தி போஜனம் நடத்தினார். 1907  காங்கிரசில் ஆர்வம். ஈரோட்டில் பிளேக் நோய் பரவிய போது யாரும் முன்வராத நிலையில் துணிந்து மீட்பு பணி ஆற்றினார். 1909  தனது தங்கையின் மகளுக்கு விதவை மறுமணம் செய்வித்தார். 1917  பொதுநலத் தொண்டர் ஈரோடு நகர் மன்றத் தலைவர் ஆனார். 1920  காங்கிரசில் சேரும்போது 29 புதுப் பொறுப்புகளை தூக்கி எறிந்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். 1921  கள்ளுக்கடை மறியலில் பங்கேற்றுச் சிறை சென்றார். 1924  வைக்கம் போராட்டம். வ.வே.சு. அய்யரின் சேரன்மாதேவி குருகுலத்தின் வருணாசிரம நடவடிக்கையை எதிர்த்தார். 1925  குடி அரசு ஏடு துவக்கம். காஞ்சிபுரம் காங்கிரசு மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானம் கொண்டுவர முயன்று தோல்வி. காங்கிரசை விட்டு வெளியேறினார். 1927 ...

எது நாத்திகம்?

எது நாத்திகம்?

நமது நாட்டிலோ, சாமி தாசி வீட்டிற்குப் போகும் உற்சம் வேண்டாம் என்றால், அது நாஸ்திகம்! சமணரைக் கழுவேற்றும் உற்சவம் வேண்டாம் என்றால், அது நாஸ்திகம்! குடம்,குடமாய் நெய்யையும், வெண்ணெயையும் கொண்டு போய் நெருப்பில் போட்டு வீணாக்கும் கார்த்திகை தீப உற்சவம் வேண்டாம் என்றால், அது நாஸ்திகம்! இளங் குழந்தைகளைப் பாலில்லாமல் கஷ்டப்பட வைத்துவிட்டு, குடம் குடமாய்ப் பாலைக் கொண்டு போய்க் கல்லின் மீது கொட்டும் பாலாபிஷேக உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! பெரியார், குடிஅரசு – 13.1.1929 பெரியார் முழக்கம் 29062023 இதழ்

விஷ்ணுவும் சிவனும் எங்கிருந்து வந்தவர்கள்

விஷ்ணுவும் சிவனும் எங்கிருந்து வந்தவர்கள்

இராட்சதர்கள் தபசு செய்தார்கள்; வரம் பெற்றார்கள்; அந்த வரத்தைக் கொண்டு அக்கிரமம் செய்தார்கள் – என்பதெல்லாம் இந்நாட்டுப் பழங்குடி மக்களையும், அவர்கள் தலைவர்களையும் இராட்சதர்கள் என்று சொல்லிக் கொல்லுவதற்குக் கடவுள்களும், தேவர்களும் என்ற பெயர்க்கொண்ட ஆரியர்கள் வழிதேடிக் கொண்ட ஒரு சாக்கே அல்லாமல் அவர்களது வரம் எதுவும் பயன்பட்டதாகத் தெரியவில்லை.   விஷ்ணு, சிவன் ஆகியவர்கள் யாவர்? எப்போது உண்டானார்கள்? எப்படி உண்டானார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? – என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடையாது.   பெரியார், குடிஅரசு – 20.10.1947 பெரியார் முழக்கம் 22062023 இதழ்

மதம் எனும் சமுதாயக் கொள்கை

மதம் எனும் சமுதாயக் கொள்கை

மதம் இல்லாமல் மக்கள் வாழ முடியாது. அதாவது நான் சொல்லும் மதம், கடவுளுக்கும் மக்களுக்கும், சம்பந்தமும் மோட்சமும் விதியும் மன்னிப்பும் சமாதானமும் மேல் லோகத்தில் அளிப்பது என்கிற மதம் அல்ல. மற்றெதுவென்றால், மனிதனுக்கு மனிதன் மரியாதையாய், (பணிவாய்) அன்பாய், ஒற்றுமையாய், ஒழுக்கமாய், உதவியாய், வாழும் கொள்கை என்று சொல்ல எனக்கு இஷ்டம். இதை நீங்கள் மதம் என்று சொல்ல வேண்டும் என்றாலும் ஆட்சேபிக்கவில்லை. இப்படிப்பட்ட மதம் இல்லாமல் மனிதன் சமுதாயத்தில் வாழ்வது சங்கடமாகும். பெரியார் பெரியார் முழக்கம் 15062023 இதழ்

பழந்தமிழர் பெருமை தேவையில்லை

பழந்தமிழர் பெருமை தேவையில்லை

வீணாகப் பழந்தமிழர் கொள்கை என்பதும், பழந்தமிழர் வாழ்க்கை நிலை என்பது அந்நியனை ஏய்க்கவோ, அறியாமையில் மூழ்கவோ தான் பயன்படக்கூடியதாக ஆகிவிட்டன. இனி நம்முடைய எந்த சீர்திருத்தத்திற்கும் அந்தப் பேச்சு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பகுத்தறிவுவாதியின் கடமையாகி விட்டது.   பழந்தமிழன் வந்து போதிக்கத் தகுந்த நிலையில் இன்று நமது சமூகம் இல்லை. பழந்தமிழன் கொள்கை எதுவும் இன்று எந்த மனித சமூகத்திற்கும் அவசியமும் இல்லை. மனிதன் காலத்தோடு, மாறுதலோடு செல்ல வேண்டியவனே ஒழிய வேறில்லை. வேண்டுமானால் மடையர்களைத் தட்டி எழுப்ப ஒரு ஆயுதமாக அதைக் கொள்ளலாம். ஆனால் சாது மக்களை ஏமாற்ற அதை பயன்படுத்திவிடக் கூடாது என்பதோடு அவ்வளவு மடையர்களாகவும் நாம் இல்லை. இன்று நம் பண்டிதர் பலருக்குப் பகுத்தறிவு இல்லாமல் போனதற்கு காரணமே பழந்தமிழர் வாழ்க்கை, பழங்கொள்கை  பேச்சைப் பேசி இனி ஆக வேண்டிய காரியம் எதுவும் இல்லை   ஆதலால், பொதுமக்கள் பழந்தமிழர் கொள்கைப் பேச்சுப் பித்தலாட்டத்திற்கு...

காந்தி கொலை: முன் கூட்டியே எச்சரித்தார் பெரியார் காந்தியை இந்துத்துவ தீவிரவாதிகள் படுகொலை செய்த நாள்  (30.01.1948).

காந்தி கொலை: முன் கூட்டியே எச்சரித்தார் பெரியார் காந்தியை இந்துத்துவ தீவிரவாதிகள் படுகொலை செய்த நாள் (30.01.1948).

காந்தியடிகளை (ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதி கோட்சே) படுகொலை செய்யப்படக்கூடிய ஆபத்து இருப்பது குறித்து காந்தியிடமே முன்பே எச்சரித்தார் பெரியார். பெரியார் எச்சரித்தவாறே காந்தியை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கொலை செய்தார்கள். பெரியார் காந்தியை நேரில் பார்த்து கூறினார் : “நான் சொல்லுகிறேன், தாங்கள் மன்னிக்க வேண்டும். இந்து மதத்தை வைத்துக் கொண்டு இன்று தங்களாலேயே நிரந்தரமாக ஒன்றும் செய்துவிட முடியாது. பிராமணர்கள் அவ்வளவு தூரம் விட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். தங்கள் கருத்து அவர்களுக்கு விரோதமாகச் சற்றுப் பலிதமாகிறது என்று கண்டால் உடனே எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவரை ஒரு பெரியாராலும் இந்தத் துறையில் எந்தவிதமான மாறுதலும் ஏற்பட்டதில்லை என்பதோடு, அப்படிப்பட்ட ஒருவரையும் பிராமணர்கள் விட்டு வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.” பெரியார் முழக்கம் 02022023 இதழ்

நவம்பர் 26 சட்ட எரிப்பு நாள் சிந்தனை

நவம்பர் 26 சட்ட எரிப்பு நாள் சிந்தனை

நவம்பர் 26 சட்ட எரிப்பு நாள்! சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை பெரியார் 1957 இல் இதே நாளில் எரிக்கச் சொன்னார். இந்த சட்டப் பிரிவுகள் சாதியை மட்டும் பாதுகாக்கவில்லை. பார்ப்பன மேலாண்மையையும் இன்று வரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை; எப்படி? அரசமைப்புச் சட்ட விதிகள் 13, 19, 25, 26, 372(1) ஆகியவற்றில் ‘பழக்கச் சட்டம்’, ‘வழக்கச் சட்டம்’ (ஊரளவடிஅள யனே ருளயபநள) என்பதற்கு சட்டப் பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மதச் சுதந்திரம் மற்றும் பழக்க வழக்கங்களில் எந்த சட்டமும் தலையிட முடியாது என்ற பார்ப்பனர்களுக்கான பாதுகாப்பை அரசியல் சட்டத்தில் இணைப்பதற்கு திரைமறைவில் தனது செல்வாக்கை செலுத்தி செயல்பட்டவர், பார்ப்பனர்களின் தலைவரான, இறந்துபோன காஞ்சி சீனியர் சங்கராச்சாரியான சந்திரசேகரேந்திர சரசுவதி என்பவர்தான்! அரசியலமைப்புச் சட்டத்தின் 26வது பிரிவு மதங்களைப் பற்றிப் பேசுகிறது. மதப் பிரச்சினைகள் எதுவானாலும் அது சட்டங்களுக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்றுதான் அரசியல் சட்டத்தை உருவாக்கிய அமைப்பு...

தமிழர்களுக்கு செல்வாக்கும் சக்தியுமுள்ள பத்திரிகையில்லை

தமிழர்களுக்கு செல்வாக்கும் சக்தியுமுள்ள பத்திரிகையில்லை

“நம் நாட்டில் தமிழர்களில் எத்தனையோ யோக்கியர்கள், விவேகிகள், கெட்டிக்காரர்கள் இருந்தா லும் அவர்கள் பொது ஜனங்களுக்குத் தெரியக் கூடாத வராய் இருக்கிறார்கள். இதன் காரணம் தமிழர்களுக்கு செல்வாக்கும் சக்தியுமுள்ள பத்திரிகையில்லை. மகாத்மா காந்திக்கே தமிழ்நாட்டில் தமிழர் யோக்கியதை தெரிய வேண்டுமானால், ஒரு பிராமணனைக் கொண்டோ, ஒரு பிராமணப் பத்திரிகையைக் கொண்டோ தான் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் யோக்கியதை தமிழ்நாட் டினருக்குத் தெரிய வேண்டுமானால் பிராமணப் பத்திரிக்கையின் மூலமாகத்தான் அறிய வேண்டியிருக் கிறது. இதைவிடத் தமிழர்களுக்கு வேறு இழிவு வேண்டியதே இல்லை. 100-க்கு 90-க்கு மேற்பட்ட ஜனத் தொகையுள்ள கூட்டத்தாருக்கு தங்கள் நாட்டில் தங்களைப் பற்றி தங்கள் சமூகத்தாரே அறிந்து கொள்ள ஒரு சாதனம் இல்லை என்றால் இதைப் பற்றி என்ன நினைப்பது?” – ‘குடிஅரசு’ 02.08.1925 பெரியார் முழக்கம் 10112022 இதழ்

வேத எதிர்ப்பு

வேத எதிர்ப்பு

சுருக்கமாகச் சொல்லப் போனால் வேத எதிர்ப்பு சங்கதி தோன்றியது  இன்று நேற்றல்ல, “ஈரோட்டு இராமசாமி”யும், திராவிடர் கழகமும் தோன்றிய காலத்திலல்ல; புராண காலத் திலேயே வேதம் வெறுக்கப்பட்டு வந்திருக்கிறது என்று தெரிகிறது. மற்றபடி வேதத்தை ஏன் படித்தாய்? என்ன படித்தாய்? என்பது அக் காலத்தே தெரியாது. காரணம் அது ஒரு குறிப்பிட்ட வகுப்பாரிடையே வாய்மொழியாக உள்ளத்தில் ஒரு கருத்தளவிலேயே இருந்து வந்திருக் கிறது என்றாலும், இராவணன், இரணியன் ஆகியோர் வேதத் தினை முழுவதும் படித்ததினா லேயே அவர்கள் வேதத்திற்கும், யாகத்திற்கும், தேவர்களுக்கும், பிராமணர் களுக்கும் விரோதி களானார்கள் என்பதாகத் தெரிகிறது. எந்த மொழியில் வேதம் ஓதப்பட்டு வந்தது என்றே சொல்ல முடியாது. சமஸ்கிருத மொழியே வேதகாலத்தில் கிடையாது. சமஸ்கிருதம் என்று தனி மொழியே இருந்ததில்லை. அந்தக் காலத்திலே ஆரியர்கள் பேசிய மொழி பல மொழி, மலைவாசி மொழிகள். அப்படிப்பட்ட சகல மொழி களையும் கிரமப்படுத்தி சமஸ்கிருதம் சகலத்தையும் ஒன்றாக்கிய மொழி என்றாக்கினார்கள்....

தீபாவளி; கஷ்டம் – நஷ்டம்

தீபாவளி; கஷ்டம் – நஷ்டம்

தீபாவளிப் பண்டிகையென்று கஷ்டமும் – நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகை யொன்று வந்து போகின்றது. அதிலும் ஏதாவது அறிவுடமை உண்டா என்று கேட்கின்றேன். தீபாவளிப் பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும். அதாவது, விஷ்ணு என்னும்  கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியை புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான் நரகாசுரன் என்பவன், வருணனுடைய குடையைப் பிடுங்கிக் கொண்டதால் விஷ்ணுக் கடவுள் நரகாசுரனைக் கொன்றாராம். இதைக் கொண்டாடப் படுவதற்காக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம். – ‘குடிஅரசு’ 20.10.1929   பெரியார் முழக்கம் 27102022 இதழ்

காதல் உண்மையல்ல

காதல் உண்மையல்ல

உலகத்தில் காதலென்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி, அதனுள் ஏதோ பிரமாதமான தன்மையொன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அனாவசியமாய் ஆண் – பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து காதலுக்காக என்று இன்ப மில்லாமல், திருப்தியில்லாமல் தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படு கிறதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும். ஆனால், காதலென்றாலென்ன ? அதற்குள்ள சக்தி என்ன ? அது எப்படி உண்டாகிறது ? அது எதுவரையில் இருக்கின்றது ? அது எந்தெந்த சமயத்தில் உண்டாவது ? அது எவ்வப்போது மறைகின்றது ? அப்படி மறைந்து போய் விடுவதற்குக் காரணமென்ன ? என்பதைப் போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதலென்பது சத்தற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும், நிச்சயமற்ற தன்மையும் அதை (காதலை)ப் பிரமாதப்படுத்துவதன் அசட்டுத்தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.               –     குடி அரசு – 18.01.1931 பெரியார் முழக்கம் 06102022 இதழ்

திருக்குறள்

திருக்குறள்

இராமாயணம்-பாரதம்-கீதை இன்னோரன்ன ஆரிய நூல்கள் யாவும் திராவிடப் பண்புகளை மறுக்க இயற்றப்பட்ட நூல்கள் தான் என்பதை ஆராய்ச்சி அறிவுள்ள எவரும் ஒப்புக் கொள்வார்கள். இவ் ஆரிய நூல்களில் வலியுறுத்தப்பட்ட ஆரிய பண்புகளுக்கு திராவிட நாடு ஆட்பட்டிருந்த சமயத்தில் திராவிடர்களை அதனின்று விடுவிக்க திராவிடப் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட நூல் திருக்குறள். ‘குடிஅரசு’ 13.11.1948 பெரியார் முழக்கம் 01092022 இதழ்  

ஜாதியை எதிர்த்த போராளி அய்யன்காளி

ஜாதியை எதிர்த்த போராளி அய்யன்காளி

இன்று போற்றி புகழப்படும் “சனாதனம்” சமூகத்தின் சாதிக் கொடுமையின் ஊற்றுக்கண்ணாக இருந்திருக்கிறது என்பதுதான் வரலாறு. ஒவ்வொரு மாநிலத்திலும் சனாதானத்தை எதிர்த்து உருவாக்கிய சீர்திருத்தவாதிகள் தான் சமூக மாற்றத்திற்கு பெரும் பங்காற்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் கேரளாவில் பிறந்த அய்யன்காளி. 1892 இல் திருவனந்தபுரம் வந்த விவேகானந்தர், கேரளத்தை “மனநோய் பிடித்தவர்களின் புகலிடம் பைத்தியங்களின் குடியிருப்பு என்று சாடினார்” அந்த அளவிற்கு அங்கே மூடநம்பிக்கையும் சாதிக் கொடுமையும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும், இதர பகுதிகளிலும் தலை விரித்து ஆடியது. மக்கள் அதற்காகத்தான் வேத மதத்தைத்துறந்து விட்டு, வேறு மதத்திற்கு போனார்கள். மதமாற்றத்தை எதிர்த்து கூப்பாடு போடுகிறவர்கள் வரலாற்றை பின்னோக்கிப் பார்க்க வேண்டும். இத்தகைய கொடுமைகளுக்கிடையே 1863 ஆகஸ்ட் 28 அன்று கேரள மாநிலத்தில் வெங்கனூர் என்னும் ஊரில் புலையர் சமூகத்தில் பிறந்தவர்தான் அய்யங்காளி. ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் அவர் போர்குரல் கொடுக்கும் சமூக போராளியாக இருந்தார். ஜாதியை எதிர்த்து அவர் சமராடினார். ஜாதி உயர்வினை...

ஆகமம் மாற்றத்துக்கு உரியதே!

ஆகமம் மாற்றத்துக்கு உரியதே!

‘ஆகமம்’ என்பதன் பொருள் ‘ஒரு ஏற்பாடு’ என்பதுதானே ஒழிய அதற்கு வேறு பொருளொன்றும் இல்லை. ஏற்பாடு என்பவை யெல்லாம் காலத்திற்கு, நிலைமைக்கு ஏற்றவைகளே ஒழிய முக்காலத்திற்கும் எல்லா சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றவையல்ல. மற்றும் எந்த ஏற்பாடும் மனிதனால் செய்யப்படுபவை. ஆகமம் என்னும் சொல்லைப் போலவே ‘அய்தீகம்’ என்னும் தன்மையும் உண்டு. அய்தீகம் என்பதற்குப் பொருள் ஆதாரமில்லாமல் தொன்று தொட்டு நடந்துவரும், சொல்லி வரும் விஷயங்களுக்குச் சொல்லும் சொல்லாகும். ‘விடுதலை’ 29.11.1969   பெரியார் முழக்கம் 25082022 இதழ்

சுயமரியாதை

சுயமரியாதை

‘சுதந்திரம்’ , ‘சுயராஜ்யம்’, ‘உரிமை’ என்கின்ற வார்த்தைகள் தேச ஜனங்களுக்குப் பெரிய இழிவுக்கும், கொடுமைக்கும் ஆதாரமானவை தான். ஆதலால், நமது தேசம் உண்மையான உரிமை அடையப் பாடுபட வேண்டுமானால், மக்களின் சுயமரியாதைக்காகத்தான் முதலில் பாடுபட வேண்டும். குடி அரசு – 24.01.1926 இந்த உலகத்திலுள்ள எல்லா அகராதிகளையும் கொண்டு வந்து போட்டு, ஏடு ஏடாய்ப் புரட்டிப் பார்த்தாலும் அழகும் பொருளும் சக்தியும் நிறைந்த வார்த்தையாகிய ‘சுய மரியாதை’ என்கிற வார்த்தைக்கு மேலானதாகவோ, ஈடானதாகவோ உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இந்த வார்த்தையானது, நமது நண்பர்களிலேயே சிலர், ‘கொள்கைகளிலெல்லாம் நமக்குப் பிடிக்கின்றன. ஆனால், சுயமரியாதை என்ற சொல் மாத்திரம் பிடிக்கவில்லை’ என்று சொல்லும் மேதாவிகளுக்குத் தக்க பதிலாகும். குடி அரசு – 01.06.1930   பெரியார் முழக்கம் 18082022 இதழ்

அகில இந்திய சாதி ஒழிப்பும் நாமும்

அகில இந்திய சாதி ஒழிப்பும் நாமும்

சாதி ஒழிப்புக்காக நமது கழகம் ஏன் அகில இந்திய ரீதியில் பாடுபடக்கூடாது என்று கேட்கப்படுகிறது. அகில இந்திய ரீதியில் சாதி ஒழிப்பு என்பது சுலபத்தில் சாத்தியமாயிராது. ஏனெனில் நம்மவர்களைப்போல் பெரும்பாலோருக்குள்ள மான உணர்ச்சி வடநாட்டாருக்கு இல்லை. அவர்கள் யாரும் சூத்திரன் என்பதற்காகவோ, பஞ்சமன் என்பதற்காகவோ, தாசிமகன் என்பதற்காகவோ வெட்கப்படுவதும் இல்லை. இந்து மதத்தை அவர்கள் நம்மைப்போல் வெறுத்து ஒதுக்குவதும் இல்லை. மாறாக, அதைப் பெருமையாகவே கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்நாட்டு மக்களோ ஆதிகாலந்தொட்டே சாதிபேதங்களை வருணாசிரம தர்மத்தை எதிர்க்கிறார்கள். எனவே, சாதி ஒழிப்பு நம்நாட்டில் சாத்தியமாயிருப்பது போல் வடநாட்டில் சாத்தியமாயிராது. எந்தச் சீர்திருத்தக் கருத்தும் வடநாட்டாருக்குச் சுலபத்தில் புரியவும் புரியாது. எனவேதான், தோழர் அம்பேத்கர் அவர்களால் கொண்டு வரப்படும் இந்துச் சட்ட மசோதா அங்கு பலமான எதிர்ப்புக்குள்ளாக வேண்டி இருக்கிறது. இதை எல்லாம் உணர்ந்துதான் நாம் நம் கழக முயற்சியை நம் திராவிட நாட்டோடு நிறுத்திக் கொண்டிருக் கிறோம். – ‘விடுதலை’ 22.02.1950...

சமுதாயத்துக்குப் பயன் தரும் வாழ்வே சிறந்த இலட்சியம்

சமுதாயத்துக்குப் பயன் தரும் வாழ்வே சிறந்த இலட்சியம்

என்னைப் பொறுத்தவரை நான் கூறுவேனாகில், மனிதப் பிறவியானது ஒரு இலட்சியமற்றப் பிறவி என்றே கூறுவேன். மனிதன் பிறக்கிறான் ; பற்பல எண்ணங்களை எண்ணுகிறான்; பல வகைகளை இச்சிக்கிறான்; எவ்வளவோ காரியங்களில் விருப்பம் கொண்டு அவைகளை நிறைவேற்ற முற்படுகிறான்; ஒரு சிலவற்றில் ஆசை நிறைவேறுகிறது; மற்றவைகளில் ஏமாற்றம் அடைகிறான் ; இறுதியில் செத்துப் போகிறான். மனிதன் பிறந்தது முதல் செத்துப்போகும்வரை இடையில் நடைபெறுகிறவைகள் எல்லாம் அவனின் சுற்றுச்சார்பு, பழக்கவழக்கம் இவைகளைப் பொறுத்து நடக்கின்றன. எனவே, மனித வாழ்வு இலட்சியமற்ற வாழ்வு என்பது என் கருத்து. சமுதாயத்துக்குப் பயன்தரும் வாழ்க்கையே சிறந்த இலட்சியம். மனிதன் பிறந்து இறக்கும் வரை இடையில் உள்ள காலத்தில் ஏதாவது பயனுள்ள காரியம் செய்ய வேண்டும். அவன் வாழ்க்கை மற்றவர் நலனுக்கும், சமுதாயத்தின் சுகத்திற்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஒருவன் வாழ்வதென்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகம் கண்டார்கள் என்று அமைய வேண்டும். இது முக்கியமானதாகும், இதுவே...

நீதிமன்றங்களில் தமிழ் வர வேண்டும்!

நீதிமன்றங்களில் தமிழ் வர வேண்டும்!

நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் தமிழில் நடப்பதை விரைவு படுத்த வேண்டியது ஆட்சியாளர் கடமையாகும். அதற்கு முன்னணி வேலையாக , ஒவ்வொரு சட்டப் புத்தகத்தையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் பொறுப்பையும் செலவையும் ஆட்சியாளர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்ப் புலவர்களாய் உள்ள சட்ட நிபுணர்கள் தமிழ்நாட்டில் பலரிருக்கின்றனர். இவர்களைக் கொண்டு ஆட்சியாளர் இக்காரியத்தைச் சிறப்பாகவும் விரைவாகவும் செய்து முடிக்கலாம். இதேபோல் ஆட்சி நிர்வாகத் துறையிலும், இங்கிலீஷ் இன்றுள்ளது, போலவே தமிழும் இயங்க வேண்டுமானால், இங்கிலீஷ் படித்த தமிழ்ப் புலமைப் பட்டதாரிகளையெல்லாம் சர்க்கார் பணிமனைகளிலெல்லாம் ஏராளமாக நியமிக்க வேண்டும். இவர்களுக்குக் கொடுத்தவை போக மீதி இடங்களைத்தான் மற்ற பட்டதாரிகளுக்குக் கொடுக்க வேண்டும். நல்ல இங்கிலீஷ் படிப்புள்ள தமிழாசிரியர்களையும் சர்க்கார் பணிமனைகளில் பொறுப்புள்ள பதவிகளில் அமர்த்த வேண்டும். ‘விடுதலை’ 01.09.1956 பெரியார் முழக்கம் 07072022 இதழ்

கடவுளைக் காப்பாற்றிக் கொண்டு ஏழ்மையை ஒழிக்க முடியுமா?

கடவுளைக் காப்பாற்றிக் கொண்டு ஏழ்மையை ஒழிக்க முடியுமா?

பொருளாதார ஏழைமை, செல்வ பேதம் ஒழிய வேண்டுமானால் அவைகளின் உற்பத்தி ஸ்தானம், அதாவது தோன்றுமிடமும், காப்பு இடமும் ஒழிக்கப்பட வேண்டும். ஏழைமைக்கும் செல்வத்திற்கும் கர்த்தாவும், காவலும் கடவுளாய் இருக்கிறது. அப்படிப்பட்ட கடவுளைக் காப்பாற்றிக் கொண்டு, அல்லது அக் கடவுள் ஆணைக்கு அடங்கினவனாய் இருந்து கொண்டு, கடவுள் தன்மையை – செயலை – கட்டளையை நீ எப்படி மீற, சமாளிக்க, தாண்ட முடியும் என்று சிந்தித்துப் பார். அதனால்தான் மனித சமுதாய சமத்துவத்திற்கும் மதம் ஒழிக்கப்பட வேண்டியது எப்படி அவசியமோ, அதுபோல் பொருளாதார சமத்துவத்திற்கும், அதாவது பொருளாதாரச் சமத்துவம் வேண்டுமானால் பொருளாதாரப் பேதத்துக்கும் பேதத் தன்மைக் காப்புக்கும் ஆதாரமாய் இருக்கின்ற கடவுள் தன்மை ஒழிக்கப்பட வேண்டியது அவசியமாகும். ‘குடி அரசு’ – 10.03.1945 பெரியார் முழக்கம் 30062022 இதழ்

இயந்திரமுறைத் தொழில் தேவையே !

இயந்திரமுறைத் தொழில் தேவையே !

கால்கள் இருக்க, கட்டை வண்டிகள் இருக்க இயந்திரத்தின் மூலமாய்த்தான் – அதாவது இரயில் மூலம் பிரயாணம் செய்தோம்; மோட்டாரில் பிரயாணம் செய்தோம்; ஆகாயக் கப்பலிலும் பிரயாணம் செய்தோம்; அவைகளையே எல்லா மக்களும் போக வரப் போக்குவரத்துச் சாதனமாக்கவும் ஆசைப்படுகிறோம்; மற்றவர்களும் ஆசைப்படுகிறார்கள். ஆகவே, இதை மனிதத் தன்மையுடன் கூடிய குற்றமற்ற இயற்கை உணர்ச்சி என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, இது எவ்விதக் குற்றமுள்ளதும், அநியாயமானதும் என்று சொல்லி, இதற்காக யாரையும் கண்டிக்கவும் முடியாது. ஜீவ சுபாவமே ஆசையின் உருவமாகும். ஆகவே, இயந்திரம் வேண்டாம் என்பது இயற்கையோடும் முற்போக்கோடும் போராடும் ஒரு அறிவீனமான பிற்போக்கான வேலையாகுமே தவிர, மற்றபடி பயனுள்ள வேலையாகாது. குடி அரசு – 14.12.1930 பெரியார் முழக்கம் 23062022 இதழ்

போராடாமல் இருக்க முடியாது

போராடாமல் இருக்க முடியாது

கடவுள், மத உணர்ச்சியானது மக்களின் சுதந்திரத்திற்கும், சமத்துவ வாழ்விற்கும், இவ்வளவு இடையூறுகளுக்கும், தாரதம்மியங்களுக்கும் இடந்தராதிருக்குமானால் – நான் அவைகளைப் பற்றி இவ்வளவு கவலை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. கடவுள், மதப் பிரச்சாரத்தின் பேரால் வயிற்றுப் பிழைப்பு நடத்துபவர்களின் பரிதாபத்திற்காகவாவது நான் சும்மா விட்டுவிடுவேன் என்பதை நம்புங்கள். ஏனெனில், ஒரு மனிதன் அனாவசியமாய் – அர்த்தமும் குறிப்பும் அற்ற வார்த்தைக்காக, பைத்தியம் பிடித்திருந்தாலொழிய போராடிக் கொண்டிருக்க முடியாது. ஆனால் அதனால் பாமர மக்கள் சமூகத்திற்கு விளையும் கெடுதியைப் பார்க்கும்போது, உண்மையான உணர்ச்சியுள்ளவன் அதை ஒழிக்கப் போராடாமல் இருக்க முடியாது. குடி அரசு – 20.11.1932 பெரியார் முழக்கம் 16062022 இதழ்

பல்லக்குத் தூக்குவதை எதிர்த்து குத்தூசி குருசாமி பேசியதற்காக சிறைத் தண்டனை பெற்றார்

பல்லக்குத் தூக்குவதை எதிர்த்து குத்தூசி குருசாமி பேசியதற்காக சிறைத் தண்டனை பெற்றார்

பட்டினப் பிரவேசம் என்ற பெயரில் சைவ மடாதிபதிகளை பல்லக்கில் வைத்து தூக்கும் மனித உரிமைக்கு எதிரான செயல் குறித்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளராக இருந்த குத்தூசி குருசாமி பேசி அந்தப் பேச்சுக்காக மூன்று வாரம் சிறைத் தண்டனைப் பெற்ற வரலாற்றை இளைஞர் களுக்கு நினைவுபடுத்துகிறோம். 1960 ஜூலை 25இல் தஞ்சை மாவட்டம் திருவையாறு என்ற ஊரில் குத்தூசி குருசாமி இவ்வாறு பேசினார். “மனிதன் மனிதனைச் சுமப்பது அநீதி. மோட்டார் வாகனம் வந்திருக் கின்ற இந்த நாளில் வாகனத்தையும், ‘சாமியையும்’ ஒரு லாரியில் வைத்து ஓட்டிச் செல்லலாம், பக்தர்களுக்குச் சுண்டைக்காய் அளவாவது புத்தியிருந் தால். பாட்டாளித் தோழர்கள், அர்ச்ச கரையும் வாகனத்தையும் என்றாவது ஒரு நாள் காவிரியாற்றுப் பாலத்தின் மேலே போகும்போது, தோள்பட்டை வலி பொறுக்கவில்லையே என்று காரணம் காட்டி, தவறுதலாக நடந்ததுபோல், காவிரியாற்றுக்குள் போட்டாலொழிய இதற்கொரு முடிவு காண முடியாது.” இந்தப் பேச்சுக்கும் நாகப்பட்டினத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்தி...

வழி மறுக்கும் மதம்

வழி மறுக்கும் மதம்

மதத்திற்கும் – உலக இயற்கைக்கும் எப்போதும் சம்பந்தம் இருப்பதில்லை. ஏனெனில், அனேகமாய் எல்லா மதங்களுமே உலக இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை வழி மறைத்து திருப்புவதையே ஜீவநாடியாய்க் கொண்டிருக்கின்றன. அதனால் மதம் கலந்தபடியால் இயற்கை அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் இடமில்லாமலே போய்விடுகின்றது. எப்படி எனில், மதங்கள் என்பவை எல்லாம் ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்பு இருந்தே காணப்படுபவை ஆகும். குடி அரசு 27.09.1931 பெரியார் முழக்கம் 17032022 இதழ்

அண்ணாவின் அற்புத குணம்

அண்ணாவின் அற்புத குணம்

நான் திமுகவுக்கு – அது தேர்தலில் வெற்றி பெரும் வரை அக் கழகத்திற்கு படு எதிரியாக இருந்தவன். தேர்தலுக்குப் பிறகு அண்ணா என் எதிர்ப்பை மறந்து, அடியோடு மறந்து மிக்கப் பெருந்தன்மையோடு நட்பு கொள்ள ஆசைப்பட்டு – என்னை அவர் பிரிவதற்கு முன் இருந்த மரியாதையுடன் நண்பராகவே நடத்தினார். அதன் பயனாக எனக்கும் மக்களிடையே அதிக மதிப்பு ஏற்பட்டதுடன், என் அந்தஸ்தும் அதிகமாயிற்று என்றுகூட சொல்லலாம். அதற்கு நான் கடமைப்பட்டவனாக இருக்க வேண்டியதும் என் கடமையாகிவிட்டது. இதன் பயன் திமுகவை பகுத்தறிவுக் கழகமாகவே இருக்க உதவும் என்று நினைப்பதோடு, அண்ணா என்னிடம் காட்டிய அன்பும், ஆதரவும், அளித்த பெருமையும் திமுகவுக்குள் எந்தவிதக் கருத்து வேற்றுமையோ, கட்சி மனப்பான்மையையோ கழகத்திற்குள் புகுத்தி விடாமல் கழகம் பெருமையோடு விளங்கவும், மக்களுக்கு தொண்டாற்றவும் பயன்படும் என்று உறுதி கொண்டிருக்கிறேன். அதற்கேற்ற தன்மை களை அண்ணா தம்பிமார்களுக்கு ஊட்டியும் இருக்கிறார் என்பதில் அய்யமில்லை. இப்படிப்பட்ட ஒரு அற்புத...

பொது நன்மைக்குப் பாடுபடுபவர்கள் யார்?

பொது நன்மைக்குப் பாடுபடுபவர்கள் யார்?

நான் மிகப் பெருமையோடு சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன். பொதுவாழ்வில் எந்தவிதமான இலாபத்தையும் கருதாமல், எந்தப் பெருமையும், சட்டசபை, ஜில்லாபோர்டு என்பதாக எதையும் கருதாமல் கை நட்டப்பட்டுக் கொண்டு, தங்களுக்கு உள்ளதையும் விட்டுவிட்டு, உள்ளபடி, பொதுநன்மை என்கிறதையே இலட்சியமாக கொண்ட யாராவது பாடுபடுகிறார்கள் என்றால் அது திராவிடர் கழகத்தார் என்கிற இந்த ஒரு கழகத்தாரைத் தவிர வேறு யாருமேயில்லை. மற்றவர்களெல்லாம் பாடுபடுகிறார்களென்றால் அந்தப் பாட்டை எலெக்ஷனுக்கும் மற்ற வாழ்வுக்கும் கொண்டுபோய் விற்று விடுகிறார்கள்; பலர் அதனாலேயே வயிறு வளர்க்கிறார்கள். மற்றும் எடுத்துப்பாருங்கள், ஒவ்வொருவரும் பொதுவாழ்வுக்கு வந்த போது அவர்களுக்கிருந்த யோக்கியதை, அந்தஸ்து, செல்வம் முதலியவைகளை அவர்கள் இன்றைக்கு இந்த பொதுவாழ்வின் பெயரால் எல்லாத் துறைகளிலும் எத்தகைய பெருமையான வாழ்வு நடத்துகிறார்கள் என்பவைகளை ! – பெரியார் – புரட்சிக்கு அழைப்பு 1954   பெரியார் முழக்கம் 03.03.2022 இதழ்

தமிழில் பெயர்கள்

தமிழில் பெயர்கள்

2000, 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்ப்பட்ட நூல்களில் மதம் அதிகம் இருக்காது. அதுபோலவே தமிழர்களின் சரித்திரப் பெயர்களை எடுத்துப் பார்த்தால் அதிலே மதக் கடவுள் சார்புப் பெயர்கள் அதிகம் இல்லை. சேர சோழ பாண்டியர்கள் என்பவர்களான முற்ப்பட்ட மூவேந்தர் களிலும் மதப் பெயர்கள் அதிகம் இல்லை. நாளாக ஆக மத ஆதிக்கம் குறைந்துவிட்டது. மேல்சாதியினர் இராமன், கிருஷ்ணன், இலட்சுமி, பார்வதி என்று வைத்துக் கொண்டனர். கீழ்சாதியினர் கருப்பன், மூக்கன், வீரன், கருப்பாயி, காட்டேரி, பாவாயி, என வைத்துக் கொண்டனர். கீழ் சாதியினர் சாமி, அப்பன் என்ற பெயரை வைக்கக் கூடாது என்று அந்தக் காலத்தில் சொல்லப்பட்டது. சாமி, அப்பன் என்று கீழ் சாதியினர் பெயர் சூட்டினால், அவரை உயர்சாதியினர் சாமி என்று அழைக்க வேண்டி வரும், அதனால் அப்படிச் சென்னார்கள். அதை மீறி இராமசாமி, கந்தசாமி என்று யாராவது பெயர் வைத்திருந்தால் அவரை ராமா, கந்தா என்று அழைத்தார்கள். விடுதலை 24.03.1953...

அறிவை அலட்சியப்படுத்தும் காதல் போதாது..

அறிவை அலட்சியப்படுத்தும் காதல் போதாது..

வாழ்க்கைத் துணை விஷயத்தில் காதல் போதாது. அறிவு, அன்பு, பொருத்தம், அனுபவம் ஆகிய பல காரியங்களே முக்கியமானவையாகும். பழங்காலத்தில் காதலே போதுமானதாக இருக்கலாம். அப்போதைய அறிவுக்கு அவ்வளவுதான் தேவையாக இருந்திருக்கும். அது மனித வாழ்வையும் பிறவிக் குணங்களையும் மேன்மைப் படுத்துவதாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இச்சையின் பெருக்கம் தான் பெரிதும் காதலின் முழு இடத்தையும் பெற்றுவிடுகிறது. மற்ற பல வாழ்க்கை வேறுபாடுகளுக்கு அந்த இச்சைப் பெருக்கம் இருவருக்கும் போதவே போதாது. ஆகையால் அறிவையும் நிகழ்ச்சிப் பயனையும் அலட்சியப்படுத்தும் காதலை மனிதன் அடக்கி, வாழ்க்கைத் தன்மையைக் கொண்டு வாழ்க்கைத் துணையைப் பொருத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்தாகும். – குடி அரசு – 10.01.1948 பெரியார் முழக்கம் 17022022 இதழ்

இஸ்லாம் மதத்திலும் மூட நம்பிக்கை உண்டு…

இஸ்லாம் மதத்திலும் மூட நம்பிக்கை உண்டு…

நான் இஸ்லாம் மதக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ அவையெல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்பதாகவோ யாரும் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோதமான கொள்கைகளைப் பார்க்கிறேன். இந்து மதத்தில் எதை எதைக் குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்கம், பாமரத்தன்மை என்கின்றோமோ அவை போன்ற சில நடவடிக்கைகள் இஸ்லாம் மதத்திலும் சிலர் செய்கிறார்கள். சமாதி வணக்கம், பூசை, நைவேத்தியம் முதலியவை எல்லாம் இஸ்லாம் சமூகத்திலும் இருக்கின்றன. மாரியம்மன் கொண்டாட்டம் போல், ‘இஸ்லாம்’ சமூகத்திலும் ‘அல்லாசாமி பண்டிகை ‘ நடக்கிறது. மற்றும் நாகூர் முதலிய ‘ஸ்தல’ விஷேசங்களும், சந்தனக்கூடு, தீ மிதி முதலிய உற்சவங்களும் நடை பெறுகின்றன. இவை குர்ஆனில் இருக்கின்றதா, இல்லையா என்பது கேள்வியல்ல. ஆனால், இவை ஒழிக்கப்பட்ட பின்புதான் எந்தச் சமூகமும் தங்களிடம் மூடநம்பிக்கை இல்லை என்று சொல்லிக் கொள்ள முடியும். உலகமெல்லாம் ஒரு கொள்கையின் கீழ் வர வேண்டுமானால் இஸ்லாம் கொள்கையும் இணங்க வேண்டும். உலகம் சீர்திருத்தத்துக்கு அடிமைப்பட்டது என்பதை மறவாதீர்கள்....

காந்தியாருக்கு நினைவுச் சின்னம்

காந்தியாருக்கு நினைவுச் சின்னம்

காந்தியாருக்கு ஞாபகச் சின்னம் ஏற்படுத்துவது அவசியம், அது நிரந்தரமான தாகவும், அதிசயமான பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். அதற்கு என் தாழ்மையான யோசனை : *           இந்தியாவுக்கு, ‘ஹிந்துஸ்தான்’ என்கிற, பெயருக்குப் பதிலாக – ‘காந்தி தேசம்’ அல்லது ‘காந்திஸ்தான்’ என்று பெயரிடப்படலாம். *           இந்து மதம் என்பதற்குப் பதிலாக – ‘காந்தி மதம்’ அல்லது ‘காந்தினிசம்’ என்பதாக மாற்றப் படலாம். *           இந்துக்கள் என்பதற்குப் பதிலாக – ‘மெய்ஞ்ஞானிகள்’ அல்லது ‘சத்ஞானஜன்’ என்று பெயர் மாற்றப்படலாம். *           காந்தி மதக் கொள்கையாக இந்தியாவில் ஒரே பிரிவு மக்கள்தான் உண்டு ; வருணாசிரம தர்மமுறை அனுசரிக்கப்பட மாட்டாது. ஞானமும் (அறிவும்) பக்ஷமும் (அன்பும்) அடிப்படையாகக் கொண்டது; சத்து அதாவது சத்தியமே நித்தியானது என்பதான சன்மார்க்கங்களைக் கொண்டதாகும் என்பதாக ஏற்படுத்தி, கிறிஸ்து ஆண்டு என்பதற்குப் பதிலாக ‘காந்தி ஆண்டு’ என்று துவங்கலாம். இப்படிப்பட்ட காரியங்கள் செய்வதனால்தான், புத்தர், கிறிஸ்து,...

தகுதி, திறமை என்ற சொல்லே அரசாங்க அகராதியில் இருந்து எடுக்க வேண்டும்

தகுதி, திறமை என்ற சொல்லே அரசாங்க அகராதியில் இருந்து எடுக்க வேண்டும்

பாஸ் செய்த பின்பு ‘தகுதி, திறமை, தரம்’ எதற்காகப் பார்க்கப்படு கின்றது ? அது எதற்காக வேண்டும் ? அதன் அர்த்தம் என்ன ? அதன் பலன் என்ன? மந்திரிசபையில் பெரிய பதவியில் அதிகாரத்தில் தரமுள்ளவர் களால், திறமை உள்ளவர்களால்’ ஏற்பட்ட நன்மை, பெருமை என்ன ? தகுதி, திறமை, தரம் அற்றவர்களால் ஏற்பட்ட கெடுதி என்ன ? அதிகாரம், உத்தியோகங்களிலும் வகுப்பு, உள்வகுப்பு, உட்பிரிவு, சாதி வகுப்புரிமை வேண்டும். சர்க்காருக்கு 50 கோடி ரூபாய், மது இலாகா மூலம் வருவாய் கிடைத்திருக்கிறது. இது யார், எந்த வகுப்பார் தந்த பணம், இந்த வருவாய் கொடுத்தவர்களை வடிகட்டுவதுதான் பலனா ? இதைக் கவனிக்க வேண்டும். கண்டிப்பாய் அரசாங்க அகராதியில் தகுதி, திறமை, தரம் என்ற சொற்களை எடுத்துவிட வேண்டும். இது என் சொந்த கருத்து. விடுதலை 18.07.1972 பெரியார் முழக்கம் 27012022 இதழ்

உனக்கு ஞாபகமிருக்கட்டும்!

உனக்கு ஞாபகமிருக்கட்டும்!

நான் சொல்கிறேன், இந்த அரசியல் சட்டத்தை நாங்கள் ஏற்க மாட்டோம். இந்த அரசியல் சட்டம் எங்களுக்குத் தீங்கிழைப்பதாகும்; இது எங்கள் பிரதிநிதிகளால் செய்யப்பட்டதல்ல; நெருப்பில் போட்டுப் பொசுக்குவோம் என்று. இந்த அரசியல் சட்டத்தை, யார் சம்மதத்தின் பேரில் யாரைக் கொண்டு செய்தாய்? வெள்ளைக்காரன் காலத்திலே அவன் நலனுக்காக, அவன் வகுத்த தேர்தல் விதிகளின்படி, படித்தவனுக்கும், பணக்காரனுக்கும் ஓட்டு என்கிற அடிப்படையில் நடத்திய தேர்தலில் வந்தவர்களை வைத்துக் கொண்டு, அரசியல் சட்டத்தை நிறைவேற்றி விட்டாய். வெள்ளையன் இந்தப் பிரதிநிதிகளைக் கொண்டு செய்த சட்டத்தை எதிர்த்து, நீயே சட்ட மறுப்புச் செய்திருக்கிறாய் என்பது, வடவனே உனக்கு ஞாபகமிருக்கட்டும் !                                        ‘விடுதலை’ 07.08.1952   பெரியார் முழக்கம் 20012022 இதழ்

தமிழர் விழா

தமிழர் விழா

தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே! அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம். இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா (Harwest Festival) என்ற கருத்தில்தானேயொழிய சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திரவிழா என்ற சொல்லப்படும் கருத்தில் அல்ல. இந்தப் பொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்”. ‘விடுதலை’ 30.01.1959 பெரியார் முழக்கம் 13012022 இதழ்

வளர்ச்சி நோக்கி மனிதப் பற்று

வளர்ச்சி நோக்கி மனிதப் பற்று

எனக்கு வளர்ச்சியே முக்கியம். எனக்கு வேறு எந்த அபிமானமும் கிடையாது. இந்த விசியத்தில் மானாபிமானமும் கிடையாது. மானாபிமானனான குடும்ப வாழ்க்கைக்காரனுக்கு அதாவது தனது சுயநலனுக்குத்தான் அது தேவை. மானம் போனால் எப்படி பிழைக்கிறது என்பவனுக்குத்தான் அது தேவை. எனக்கு, நான் பிழைக்க வேண்டுமே, என் வாழ்வு வளம்பெற வேண்டுமே, மக்களிடையில் எனக்கு மதிப்பு வேண்டுமே, என் அந்தஸ்து, எனது நிலை, எனது போக்கு வளம்பெற வேண்டுமே, என்னைப் பலர் மதிக்க வேண்டுமே, எனக்குப் பலரின் ஆதரவு வேண்டுமே என்பன போன்ற – என், எனக்கு என்கின்ற கவலையுள்ளவனுக்குத்தான் மானாபிமானம், அது போலவே தேசாபிமானம், மொழி அபிமானம், இலக்கிய அபிமானம், சமய அபிமானம், முதலிய அபிமானங்கள் வேண்டும். எனக்கு வெறும் மனிதாபிமானந்தான் ; அதிலும் வளர்ச்சி அபிமானந்தான் முக்கியம். ‘விடுதலை’ 15.10.1962 பெரியார் முழக்கம் 06012022 இதழ்

மிகவும் சிரமமான கேள்வி !

மிகவும் சிரமமான கேள்வி !

பகுத்தறிவுவாதி : கடவுள் எத்தனை உண்டு ? ஆத்திகன் : ஒரே கடவுள் தான் உண்டு. பகுத்தறிவுவாதி : இவ்வளவு மதங்களும் யாருக்காக உருவாக்கப்பட்டது ? ஆத்திகன் : மனித வர்க்கத்திற்காகத்தான். பகுத்தறிவுவாதி : மதத்தால் ஏற்படும் பயன் என்ன ? ஆத்திகன் : மனிதன் கடவுளை அறியவும், கடவுளுக்கும் தனக்கும் சம்மந்தம் ஏற்படுத்திக் கொள்ளவும், ஆத்ம ஞானம் பெறவும், கடவுள் கருணைக்குப் பாத்திரனாகவும் பயன்படுவதாகும். பகுத்தறிவுவாதி : அப்படியானால் ஒரே கடவுள் ஒரே மனித வர்க்கத்துக்கு இத்தனை மதங்களை ஏற்படுத்துவானேன் ? ஆத்திகன் : இது மிகவும் சிரமமான கேள்வியாக இருக்கிறது. பெரியவர்களைக் கண்டு பேசிய பிறகு பதில் சொல்லுகிறேன். – பகுத்தறிவு -1938 (‘சித்திரபுத்திரன்’ என்ற புனைப்பெயரில் பெரியாரால் எழுதப்பட்ட நீண்ட உரையாடலின் சிறு பகுதி)   பெரியார் முழக்கம் 23122021 இதழ்

தமிழ்நாட்டில் தமிழ் தெரிந்தவர்களுக்கே வேலை!

தமிழ்நாட்டில் தமிழ் தெரிந்தவர்களுக்கே வேலை!

தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத மலையாளிகளையும், கன்னடியர் (மங்களூர்காரர்)களையும் தமிழ் நாட்டிலே மாகாணத் தலைமை உத்தியோகம், ஜில்லாத் தலைமை உத்தியோகம், மற்றும் கெஜட் பதிவு அதிகாரிகள் கமிஷ்னர்கள் முதலிய உத்தியோகங்களில் நியமிப்பது என்பது சர்வசாதாரணமான காரியமாக இருந்து வருகிறது. ஜனநாயக நாடு, சுதந்திர நாடு, மக்களாட்சி நடைபெறுகிற நாடு என்ற அலங்காரப் பெயர்களைச் சொல்லிக் கொண்டு நடைபெறுகிற ஆட்சியில் 100 க்கு 80 பேர்களுக்கு மேற்பட்டுக் கல்வியறிவில்லாத பாமர மக்கள் நிறைந்திருக்கும் நாடு என்பதை உணராமல், மேற்கண்ட மாதிரியான நாட்டு மொழித் தெரியாத அன்னிய மொழியாளர்களை அதிகாரிகளாக நியமிப்பதென்றால் குடிமக்கள் அதிகாரிகளிடம் எப்படி பேச முடியும் ? அதிகாரிகளுக்குக் குடிமக்கள் எந்த மொழியில் விண்ணப்பங்களையும் வேண்டு கோள்களையும் எழுத முடியும் ? ‘விடுதலை’ 22.4.1955 பெரியார் முழக்கம் 16122021 இதழ்

தமிழ்ப் பண்டிதர்களுக்கு சில வார்த்தைகள்

தமிழ்ப் பண்டிதர்களுக்கு சில வார்த்தைகள்

தமிழ்ப் பண்டிதர்களுக்கும் தமிழபிமானிகளுக்கும் சில வார்த்தைகளை கூற விரும்புகிறோம். சுயமரியாதைத் தோழர்கள், தமிழ் மொழி வளர்ச்சி விஷயத்தில் எந்த வகையிலும் மற்ற பண்டிதர்களுக்கும் தமிழ் அபிமானிகளுக்கும் பிற்பட்டவர் அல்லர் என்று தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு சுயமரியாதைத் தோழர்கள் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டதும், தமிழ் வளர்ச்சிக்கான தீர்மானங்களிலும் முக்கியப் பங்கு எடுத்துக் கொண்டதுமே உதாரணமாகும். உண்மையில் ஹிந்தி மொழியைக் கண்டிப்பதாக மாநாட்டில் மெஜாரிட்டியினரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சுயமரியாதைத் தோழர்கள் இல்லாவிட்டால் தோற்றே போயிருக்கும். ஹிந்தி கண்டன தீர்மானத்தைச் சிலர் எதிர்த்த பொழுது, அவ்வெதிர்ப்புக்குச் சரியான பதில் கூறினர். ஹிந்தி கூடாது என்பதைப் பெரிய மெஜாரிட்டியாரை ஒப்புக்கொள்ளச் செய்தவர்கள் சுயமரியாதைத் தோழர்களே யாவார்கள் என்பதை நாம் கூற வேண்டியதில்லை. ஆனால் மற்ற பண்டிதர்களில் மற்றவர்கள் விரும்புவது போல் புராணங்களை எழுதுவதும், அவைகளைப் பற்றி பேசுவதும், தேவார திருவாசங்களைப் பாடுவதும் தான் தமிழ் வளர்ச்சி என்று சுயமரியாதைத் தோழர்கள் கருதுவதில்லை. மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியதும்,...

தொழிற்சங்கம் பற்றி ஒரு சிறுகதை !

தொழிற்சங்கம் பற்றி ஒரு சிறுகதை !

நான் ஒரு சிறுகதை கேள்விப்பட்டிருக்கின்றேன். ஒரு குளத்திலுள்ள தவளைகள் ஒன்று சேர்ந்து தங்களுக்கு ஒரு தலைவர் வேண்டும் என்று கடவுளைக் கேட்டதாகவும், கடவுளும், ஒரு மரக்கட்டையைத் தலைவராகக் கொடுத்ததாகவும், அம் மரக்கட்டை ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்ததாகவும், பிறகு தவளைகள் கடவுளிடம் எங்களுக்குக் கொடுத்தத் தலைவர் உபயோகமில்லையென்றும் வேறு தலைவர் வேண்டுமென்று கேட்டதாகவும், கடவுள் ஒரு பாம்பைக் கொடுத்ததாகவும், அப்பாம்பு தினம் 10 தவளைகளைத் தின்று வந்ததாகவும், பிறகு தவளைகள் கடவுளை நோக்கி தங்களுக்குக் கொடுத்த தலைவரை எடுத்துக் கொள்ளும்படி வேண்டி, தங்களது காரியத்தை வேறொரு தலைவரில்லாமல் பார்த்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதுபோல, உங்களிலேயே உங்களுக்குத் தலைவர்களும், காரிய தரிசியும், நிர்வாகிகளும், கிடைக்கவில்லையானால் கண்டிப்பாய் உங்களுக்கு சங்கம் வேண்டாம். ‘குடிஅரசு’  30.05.1926 பெரியார் முழக்கம் 25112021 இதழ்

உண்மையான பெண் விடுதலைக்கு

உண்மையான பெண் விடுதலைக்கு

சட்டத்தாலும், மதத்தாலும், மாத்திரம் ஏற்பட்டதென்று சொல்வதற் கில்லாமல் பெண் சமூகம் ஒப்புக்கொண்டு, இந்நிலைக்கு உதவிபுரிந்து வருவதனாலும் இது உரம் பெற்று வருகிறதென்றே சொல்ல வேண்டும். அநேக வருட பழக்கங்களால் தாழ்ந்த ஜாதியார் எனப்படுவோர் எப்படித் தாங்கள் தாழ்ந்த வகுப்பார் என்பதையும் ஒப்புக் கொண்டு, தாமாகவே கீழ்ப்படியவும், ஒடுங்கவும் விளங்கவும் முந்துகிறார்களோ, அதுபோலவே பெண்மக்களும் தாங்கள் ஆண் மக்களின் சொத்துக்களென்றும், ஆண்களுக்கு கட்டுப்பட்டவர்களென்றும், அவர்களது கோபத்திற்கு ஆளாகக்கூடாதவர்கள் என்றும் நினைத்துக் கொண்டு சுதந்திரத்தில் கவலையற்று இருக்கிறார்கள். உண்மையாக பெண்கள் விடுதலை வேண்டுமானால், ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்பந்தக் கற்பு முறை ஒழிந்து, இரு பிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்பட வேண்டும். கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும். குடி அரசு 08.01.1928 பெரியார் முழக்கம் 18112021 இதழ்

ஆர்.எஸ்.எஸ்.  பற்றி காமராஜர் , காந்தி

ஆர்.எஸ்.எஸ்.  பற்றி காமராஜர் , காந்தி

ஆர்.எஸ்.எஸ்.  பற்றி காமராஜர் “குறிப்பாக அவர்களுக்கு (ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களுக்கு) பயம் என்னைப் பற்றித்தான். இந்த காமராஜ் தான் சோசியலிச சமுதாயத்தினை அமைத்து தீருவேன் என்றே சொல்கின்றான். அவன்தான் அதிலே தீவிரமாக இருக்கின்றான் என்று நினைக்கிறார்கள். என் வீட்டுக்குத் தீ வைக்கின்றான். ஆனால் நான் இதற்கெல்லாம் கவலைப்பட மாட்டேன். என் வேலையை நான் செய்தே தீருவேன்.” – 11.12.1966 சேலம் பேருரை. நவசக்தி 15.12.1966 ஆர்.எஸ்.எஸ். பற்றி காந்தி “‘வார்தா’ ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமுக்கு ஆர்.எஸ்.எஸ்.சின் அழைப்பின் பெயரில் காந்தி பார்வையிட சென்ற போது காந்தியின் சீடர் காந்தியிடம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நல்ல சேவைகளை செய் கிறார்கள் என்று சொன்ன போது. காந்தியார் அளித்த பதில் என்ன தெரியுமா? “ஹிட்லரின் நாசிப்படையும், முசோலியின் பாசிசப் படையும் இதே போல்தான் சேவை செய்தது என்பதை மறந்துவிட வேண்டாம்.” பெரியார் முழக்கம் 18112021 இதழ்

பந்தயம் கட்டி கேட்கிறேன்…!

பந்தயம் கட்டி கேட்கிறேன்…!

பந்தயம் கட்டிக் கேட்கிறேன். உலகில் நான் அறிந்த வரையில் நம்நாட்டு மக்களிடம் (இந்துக்கள் என்பவரிடம்) ஒழுக்கம், நாணயம் என்பது சற்றேறக்குறைய 100 க்கு 99 பேர்களிடம் இருப்பதில்லை. காரணம் என்ன ? நமக்கு ‘கடவுள்’ இல்லையா ? நாம்  ‘கடவுள் பக்தி’ இல்லாதவர்களா ! நாம் ‘மதம்’ அற்றவர்களா ? நமக்கு ‘கடவுள் பயம்’ இல்லையா ? ‘கடவுள் நெறி’ இல்லையா ? நன்மை செய்தால் ‘நற்பயன்’ கிடைக்கும், தீமை செய்தால் ‘தீய பயன்’ கிடைக்கும் என்கின்ற தான எச்சரிக்கைச் சாதனங்கள் இல்லையா ? நம்மில் பெரியவர்கள் ‘தெய்வீகத் தன்மை’ கொண்ட மக்கள் என்பவர்கள் ஏற்பட்டு நமக்கு அறிவுரை கூறியவர்கள் – கூறுபவர்கள், கூறும்படியான நீதிநூல்கள் இல்லையா ? அரசாங்க கட்டுத் திட்டம், தண்டனை முதலியவைகள் இல்லையா ? நமக்கு குருமார்கள் – மடாதிபதிகள் இல்லையா ? இவைகளும் மற்றும் இவை போன்ற பலவும் ஏராளமாக இருக்கும் போது நமக்கு நம்...

அவர்களுக்கு சுயமரியாதையே இல்லை

அவர்களுக்கு சுயமரியாதையே இல்லை

ஆந்திரா பிரிந்ததில் இருந்தே எனக்கு பொதுவாக நாட்டுப் பிரிவினையில் நாட்டமில்லாமல் போய்விட்டது. கன்னடன், மலையாளி ஒரு சில காரணங்களுக்காக பிரிந்தால் தேவலாம், ஏனென்றால் அவர்களுக்கு, சுயமரியாதையோ, பகுத்தறிவோ, இனப்பற்றோ கிடையாது. மேலும், மத மூட நம்பிக்கைகளில் (பார்ப்பனிய சடங்குகள்) மூழ்கிக் கிடக் கிறார்கள். இதனால் பிரிந்தால் தேவலாம்.          – விடுதலை 11.10.1955 பெரியார் முழக்கம் 04112021 இதழ்

தங்க ஊசி என்பதால் கண்களை குத்திக்கொள்ள முடியுமா?

தங்க ஊசி என்பதால் கண்களை குத்திக்கொள்ள முடியுமா?

23/4/2010 தங்க ஊசி என்பதால் கண்களை குத்திக்கொள்ள முடியுமா? ‘நாம் தமிழர்’ என்ற பெயரில் ஓர் அரசியல் கட்சி 18.5.2010 அன்று மதுரையில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான பரப்புரைகளும், விளம்பரங்களும், அறிக்கைகளும் அவ்வியக்கத் தோழர்களால் முனைப்புடன் பரப்பப்படுகின்றன. அவர்களோடு சேர்ந்து விளம்பரப்படுத்த அல்ல நாம் இதை எழுதுவது! பின் எதற்கு? விளம்பர அறிக்கை தாங்கி நிற்கும் சில செய்திகளைப் பற்றிய நமது கருத்துகளைத் தெரியப்படுத்த, தெளிவுபடுத்தத்தான் இதை எழுத நேர்ந்தது. தோழர் சீமான் நமது பெரியார் திராவிடர் கழக மேடைகளில் பெரியாரின் கருத்துகளை சிறப்பாக, அழுத்தமாக பேசி வந்தவர்தான். ஈழ விடுதலையில் அவர் கொண்டுள்ள அக்கறையும், ஆர்வமும் போற்றத்தக்கதுதான். நமது இயக்கத்தோழர்களிடம் நல்லுறவும், இயக்க முன்னணியினரிடம் பெரு மதிப்பும் கொண்டவர்தான். ஆனாலும், தங்க ஊசி என்பதற்காக கண்ணைக் குத்தும்போதும் நாம் அமைதியாக இருந்துவிட முடியாது; இருந்துவிடக் கூடாது. அதுவும் குறிப்பாக “அறிஞர்” குணாவின் பாதையில் ‘தமிழர் – தமிழரல்லாதவர்’; ‘திராவிடர் –...

யார் மைனாரிட்டி?

யார் மைனாரிட்டி?

நாம் மைனாரிட்டி என்று சொன்னவுடன் பார்ப்பன காங்கிரஸ்காரர்கள், “நாங்கள் 100க்கு மூன்று பேர்கள் தாமே; நீங்கள் 97 பேர்கள் இருக்கிறீர்களே; நாங்கள் தாம் மைனாரிட்டிகள்” என்பார்கள். இந்த இரகசியம் உங்களுக்குத் தெரியாது. நாம், பேருக்கு வேண்டுமானால் 97 ஆவோம். ஆனால் நம்மை பல வகுப்புகளாக பிரித்திருக்கின்றனர். உடையார், செட்டியார், ரெட்டியார், பிள்ளை, நாயுடு, முதலியார், கள்ளர், கவுண்டர், மறவர், அகமுடையார், அம்பட்டர், வாணியர், ஆர்சுத்தியார், புற்றிலே கழிந்தார், பொரபொரத்தார் என்று முழுவதும் சொல்லலாம்; அவ்வளவு எண்ணற்ற பிரிவுகள்! இங்கே ஒருவனுடைய கவலையை மற்றவன் எடுத்துக் கொள்வதில்லை. அப்படி எடுத்துக் கொண்டாலும், அதுவும் பார்ப்பனர்களுக்குத் தான் அனுகூலம். ஒரு ‘பிள்ளையை’ அடித்தால், மற்றொரு ‘முதலி’ பார்த்துக் கொண்டு சந்தோஷப்படுவதல்லாமல், “வெள்ளாளப் பயலுக்கு நல்லா வேணும்” என்று காலாட்டிக் கொண்டிருக்கிறான். ஒரு பாப்பான் உதைபடட்டும்- இமாலய மலையிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரை சத்தம் கேட்குதே!யார் மைனாரிட்டி என்று யோசித்துப் பாருங்கள்! ‘குடி அரசு’ 31.12.1939...

உயர்ந்தவர் யார்?

உயர்ந்தவர் யார்?

ஓட்டல்காரன் – அன்னதானப் பிரபு ஆவானா ? சம்பள உபாத்தியாயர் – குருநாதனாவானா ? தாசி – காதலியாவாளா? என்பது போலத்தான் தன்தன் நலனுக்கு, தன்தன் பொறுப்புக்கு ஆகக் காரியம் செய்யும் எவனுடைய காரியம் – எப்படிப் பட்டதாயினும் அது சாதாரண ஜீவ சுபாவமே ஒழிய போற்றக்கூடியதாகாது. அப்படியில்லாத தன்மை, செய்கை, வாழ்க்கை கொண்ட மனிதர்கள் – அதாவது தன்னைப் பற்றிய கவலையில்லாமல், பிறருக்கு என்று தன்னை ஒப்படைத்துக் கொண்டு தொண்டாற்றுகிறவன் மதிக்கப்பட்டே தீருவான். அத்தொண்டால் பாதகமடையும் தனிப்பட்டவர்கள் – தனிப்பட்ட வகுப்புகள், கும்பல்கள் அவனை மதிக்காமல் இருக்கலாம்; அவமதிக்கலாம்; அது, பொதுவாக மதிக்காததாகாது.                                                         விடுதலை 08.04.1930 பெரியார் முழக்கம் 25022021 இதழ்

தேசாபிமானமும் தேசியமும்

தேசாபிமானமும் தேசியமும்

தேசாபிமானம் என்பது ஒவ்வொரு தேச முதலாளியும் மற்ற தேச முதலாளிகளுடன் சண்டைப் போட்டுத் தங்கள் தங்கள் முதலைப் பெருக்கிக் கொள்ள, ஏழை மக்களை – பாமர மக்களைப் பலி கொடுப் பதற்காகக் கற்பித்துக் கொண்ட தந்திர வார்த்தையாகும். குடிஅரசு – 20.11.1932 பார்ப்பனர்கள் என்ன நோக்கத் துடன் தேசியம், தேசியம் என்று கூப்பாடு போடு கிறார்கள் என்பது பற்றிப் பல தடவைகளில் நாம் வெளியிட்டிருக் கிறோம்.  ‘தேசியம்’ என்ற சூழ்ச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதற்குக் காரணமே பார்ப்பனீயமான சனாதன தர்மங்களைப் பலப்படுத்தவே ஒழிய வேறில்லை. குடிஅரசு – 19.03.1933 பெரியார் முழக்கம் 18022021 இதழ்

அரசியல் நிலை

அரசியல் நிலை

யோக்கியர்களே அரசி யல் பொது வாழ்வுக்கு வரும் படியான நிலையை இன்னமும் நம்முடைய நாடு எய்தவில்லை.  பணக்காரனுக்குப் போனது போக மீதிதான் பணக்காரன் அல்லாதவர் களுக்குக் கிடைக்கிறது. அப்படி மற்றவர் களுக்கு கிடைக்கும் ஸ்தானங்களும் பணக்காரத் தன்மைக்கு எவ்வளவு அயோக்கியத்தனம், நாணயக்குறைவு, துரோக புத்தி வேண்டி இருக்கிறதோ அவ்வளவும், அதற்கு மேலும் உள்ளவர் களுக்குத்தான் பெரிதும் கிடைக்கிற மாதிரியில் இருக்கிறது. ஏதோ சிலர் யோக்கியர்களும் இருக்க நேரலாம்; என்றாலும் அவர்கள், யோக்கியமாய் நடந்து கொள்ள முடியாத சூழ்நிலையும், யோக்கியமாய் நடந்தாலும் பயன் ஏற்படாத சூழ்நிலையும், இருந்துவருவதால் யோக்கியமாய் நடந்து கொள்வது முட்டாள்தனம் என்று கருதும்படியாக நேரிட்டுவிடுகிறது. ‘விடுதலை’ 23.07.1952 பெரியார் முழக்கம் 11022021 இதழ்

காந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3) ‘ஆனந்த விகடன்’ வார ஏடு, 2019, டிசம்பர் 18 இதழில் சாவர்க்கர் பற்றிய கட்டுரை இது.

காந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3) ‘ஆனந்த விகடன்’ வார ஏடு, 2019, டிசம்பர் 18 இதழில் சாவர்க்கர் பற்றிய கட்டுரை இது.

  காந்தி கொலையை மறு விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட கபூர் ஆணையம் அமைத்த ஒரு மாதத்திலேயே சாவர்க்கர் பட்டினி கிடந்து மரணத்தை ஏற்றார். விசாரணையில் சிக்கி விடுவோம் என்ற அச்சமே காரணம். பசுவை வணங்கினால் நாமும் சாந்தமாகி விடுவோம்; கோழையாவோம் என்ற காரணத்தால் பசு வணக்கத்தை எதிர்த்தார். நேதாஜியுடன் இணைந்து போரிடாததற்குக் காரணம் நேதாஜியிடம் இஸ்லாமிய எதிர்ப்பு இல்லை என்பதுதான். எந்த நடவடிக்கையிலும் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக் கொள்ளாமல் திறைமறைவில் இயங்குவதே சாவர்க்கர் பண்பு.   பாட்ஜேவின் வாக்குமூலம் இது… `1948 ஜனவரியில் நாங்கள் இருமுறை சாவர்க்கரை சந்தித்தோம். முதல் சந்திப்பு ஜனவரி 14ஆம் தேதி நடந்தது. நான், நாதுராம், ஆப்தே மூவரும் பாம்பே யில் இருக்கும் சாவர்க்கர் சதனுக்குச் சென்றோம். இரண்டாவது மாடியில் அவரது அறை இருந்தது. நான் கட்டடத்துக்கு வெளியே நின்றேன். நாதுராமும் ஆப்தேவும் உள்ளே சென்றனர். சிறிது நேரம் கழித்து இருவரும் வெளியே வந்தனர். `காந்தியையும் நேருவையும்...

திருவிடைமருதூர் கோவிலில்…

திருவிடைமருதூர் கோவிலில்…

தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர் கோயிலில் போய்ப் பார்த்தால் தெரியும். வரகுண மகாராஜன் என்ற பாண்டியன் தான் மோட்சம் அடைவதற்காக தன் மனைவியைப் பார்ப்பானுக்கு விட்டுக் கொடுத்தது சித்திரமாகச் சுவரிலேயே தீட்டப்பட்டு இருக்கின்றது ! இவனது சிவபக்தியின் மேலீட்டைப் பற்றிப் பட்டினத்தார் பாடியுள்ள பாடலிலேயே வரகுண மகாராஜன் தன் மனைவியைப் பார்ப்பானுக்குக் கொடுத்ததை புகழ்ந்து பாடியுள்ளார். அந்தப் பாண்டியன் சேர-சோழர்களையெல்லாம் பராக்கிரமசாலி என்று சரித்திரம் கூறுகின்றது. அப்படிப்பட்டவன் தான் இப்படிக் கேவலமாக, மானமற்று நடந்து கொண்டான். அடுத்தாற்போல, திருவண்ணாமலையில் ஒரு அரசன் ஆண்டுள்ளான். அவன் பெயர் வல்லாள மகாராஜன் என்பது. அந்த மடையனும், தான் மோட்சமடைய வேண்டித் தன் மனைவியைப் பார்ப்பானுக்கு விட்டுக் கொடுத்து இருக்கிறான்.    ‘விடுதலை’  30.04.1961 பெரியார் முழக்கம் 04022021 இதழ்

பழையதை மாற்றக்கூடாதா ?

பழையதை மாற்றக்கூடாதா ?

பழையதை மாற்றக் கூடாது என்பதும், பழையவைகள் எல்லாம் தெய்வாம்சத்தால் ஏற்பட்டவை என்பதும் – பழைய செய்கைகளோ, பழைய தத்துவங்களோ, பழைய மாதிரிகளோ, பழைய உபதேசங்களோ முக் காலத்துக்கும், முடிவு காலம் வரைக்கும் இருப்பதற்கும், பின்பற்றுவதற்கும் தகுதியான தீர்க்கதரிசனத்துடன் தெய்வீகத் தன்மையில் ஏற்பட்டவை என்று சொல்லப்படுமானால் – அவைகளை மத வெறியர்களுக்கும், பழைமையில் பிழைக்கக் காத்து கொண் டிருக்கும் சோம்பேறிச் சுயநலக் கூட்டங்களுக்கும் விட்டு விட வேண்டுமே ஒழிய, அவற்றைப் பொதுஜன-சாதாரண நித்திய வாழ்க்கையில் கடைபிடிக்கிறவர்கள் யாராய் இருந்தாலும் அவர்கள் மிக மிகக் கஷ்டமும் தொல்லையும் அனுபவிக்க வேண்டிவரும் என்பதில் மறுப்புக்கு இடம் இருக்காது.     ‘விடுதலை’ 03.03.1948 பெரியார் முழக்கம் 28012021 இதழ்

தேவர்கள் அய்ந்து கண்டங்களில் இல்லாதது ஏன்?

தேவர்கள் அய்ந்து கண்டங்களில் இல்லாதது ஏன்?

இராட்சதர்கள் தபசு செய்தார்கள்; வரம் பெற்றார்கள்; அந்த வரத்தைக் கொண்டு அக்கிரமம் செய்தார்கள் – என்பதெல்லாம் இந்நாட்டுப் பழங்குடி மக்களையும், அவர்கள் தலைவர்களையும் இராட்சதர்கள் என்று சொல்லிக் கொல்லுவதற்கு கடவுள்களும், தேவர்களும் என்ற பெயர் கொண்ட ஆரியர்கள் வழிதேடிக் கொண்ட ஒரு சாக்கே அல்லாமல், அவர்கள் வரம் ஏதும் பயன்பட்டதாகத் தெரியவில்லை. விஷ்ணு, சிவன் ஆகியவர்கள் யாவர்? எப்போது உண்டா னார்கள் ? எப்படி உண்டானார்கள் ? எங்கிருந்து வந்தார்கள்? ஏன் வந்தார்கள் ? என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடையாது. அதுபோலவே, தேவர்கள் யார் ? எப்படி உண்டானார்கள்? எங்கிருந்து வந்தார்கள் ? ஏன் வந்தார்கள் ? உலகிற்கு அவர்களால் என்ன பயன் என்பதற்கு ஆதாரமும் கிடையாது. இவர்கள் எல்லாம் இமயமலைக்கு இப்புறம்தான் அதாவது, ‘இந்தியக் கண்டம்’ என்னும் பிரதேசத்தில் இருந்தார்களே ஒழிய, மற்றபடி இந்தியாவிற்கு அப்பாற்பட்ட மற்ற அய்ந்து கண்டங் களிலும் இருந்ததாகவோ, அந்தக் கண்டங்களைப் பற்றி ஏதாவது தெரிந்திருந்ததாகவோ...