Category: கள்ளக்குறிச்சி

புரட்சியாளர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழா! பல்வேறு மாவட்டங்களில் கழகம் மரியாதை

புரட்சியாளர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழா! பல்வேறு மாவட்டங்களில் கழகம் மரியாதை

புரட்சியாளர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மரியாதை செலுத்தப்பட்டு சமத்துவநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அது பின்வருமாறு:- சென்னை : புரட்சியாளர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு 14.04.2024 அன்று காலை 9 மணிக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன் மற்றும் பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். மடிப்பாக்கம் பகுதிக் கழக சார்பில் ஆதம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கழகத் தோழர்கள் – ஆதரவாளர்கள் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ஈரோடு : புரட்சியாளர் அம்பேத்கர் அவரது 134வது பிறந்த நாளை முன்னிட்டு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள அம்பேத்கர்...

கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், ஆத்தூர், மதுரையில் பரப்புரைகள் தீவிரம்

கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், ஆத்தூர், மதுரையில் பரப்புரைகள் தீவிரம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! என்ற முழக்கத்தோடு 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல்கட்ட பரப்புரைக் கூட்டமானது மார்ச் 15,16 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. மார்ச் 14ஆம் தேதி மூரார்பாளையம், கள்ளக்குறிச்சி மந்தைவெளி, சின்ன சேலம் பேருந்து நிலையம், நைனார்பாளையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் கா.மதியழகன் தலைமை தாங்கினார். இதில் மக்கள் அதிகாரம் கள்ளக்குறிச்சி மாவட்டப் பொறுப்பாளர் ராமலிங்கம், சின்ன சேலம் விசிக ஒன்றியச் பொருளாளர் மைக்கேல், அஜித், வழக்கறிஞர் ஆனந்த், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் க. ராமர், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.ஆ.இளையரசன், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் சாக்ரடீசு, விசிக தலித் சந்திரன் தபெதிக மாவட்டச் செயலாளர் செ.பிரபு ஆகியோர் பரப்புரைக் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்கள். இரண்டாவது நாளாக 16.3.2024 அன்று மு.நாகராஜ்...

கள்ளக்குறிச்சி மாவட்டக் கழக கலந்தாய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டக் கழக கலந்தாய்வுக் கூட்டம்

6.1.2023 மாலை 4 மணிக்கு சங்கராபுரம் வாசவி அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்களை மாவட்டத் தலைவர் மதியழகன் வரவேற்று பேசினார், மாவட்ட செயலாளர் க. இராமர்,  மாவட்ட அமைப்பாளர் கி. சாமிதுரை, சங்கை ஒன்றிய செயலாளர் அன்பு ரவி, ந. வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து கழகத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகள், கழகம் ஏற்படுத்திய நிகழ்வுகள் ஆகியவைகளைப் பற்றித் தோழர்கள் கருத்து பேசினார். தலைமை செயற்குழு உறுப்பினர் அய்யனார், க.ராமர் மு.நாகராஜ், கி.சாமிதுரை, மா.குமார், அன்பு ரவி, கார்மேகம், பெரியார் வெங்கட் ஆகியோர் உரையாற்றினர். தொடர்ந்து மாநிலப் பொறுப்பாளர்களான தலைமைச் செயற்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி பல்வேறு உதாரணங்களைக் கொண்டு அமைப்பின் செயல்பாடுகள் இப்போது...

டிசம்.24 பெரியார் நினைவு நாள் : தோழர்கள் ஊர்வலம்

டிசம்.24 பெரியார் நினைவு நாள் : தோழர்கள் ஊர்வலம்

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் சார்பாக பெரியாரின் 49 ஆவது நினைவு நாளை ஒட்டி, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு காலை 9 மணி யளவில் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தியாகராயர் நகர் பெரியார் சிலை, எம்.ஜி.ஆர். நகர், ஆலந்தூர், வன்னியம்பதி, மயிலாப்பூர் சென்மேரிஸ் பாலம், சுப்பராயன் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பெரியார் சிலை, உருவபடங்களுக்கு தோழர்கள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர். ஒவ்வொரு பகுதியிலும் பெரியார் நினைவு மற்றும் கொள்கை முழக் கங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்வுகள் மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் நடை பெற்றது. தலைமைக் கழக பொறுப் பாளர்கள், மாவட்டம், பகுதி கழக பொறுப்பாளர்கள் மற்றும் சென்னை கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். சேலம்: சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் 49ஆவது நினைவு நாள் 24-12-2022 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்டச்...

அம்பேத்கர் நினைவு நாள்: கழக சார்பில் சிலைகளுக்கு மாலை

அம்பேத்கர் நினைவு நாள்: கழக சார்பில் சிலைகளுக்கு மாலை

அம்பேத்கர் நினைவுநாளை யொட்டி கழக சார்பில் பல்வேறு இடங்களில் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சென்னை : புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி, மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் அடையாறு அம்பேத்கர் மணிமண்டபத்தில் காலை 9:30 மணியளவில், இரண்யா  கொள்கை முழக்கங்களை எழுப்பி  மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு, கிருத்திகா மாலை அணிவித்தார். இறுதியாக, இராயப்பேட்டை வி.எம். தெரு படிப்பகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர்  படத்திற்கு தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் மாலை அணிவித்தார். தலைமைக் கழகப் பொறுப் பாளர்கள், மாவட்டப் பொறுப் பாளர்கள், பகுதி கழகப் பொறுப் பாளர்கள் உட்பட கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர். விழுப்புரம் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் 66ஆவது நினைவு நாளை யொட்டி விழுப்புரம் அரசு மருத்து வமனை எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அனிவித்து கொள்கை முழக்கம் உறுதியேற்பு...

குமரேசன்-பனிமலர் வாழ்க்கைத் துணை ஏற்பு

குமரேசன்-பனிமலர் வாழ்க்கைத் துணை ஏற்பு

சங்கராபுரம் , கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்தன் – விஜியா இணையரின் மகன் குமரேசனுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முனுசாமி – வாசுகி இணையரின் மகள் பனிமலர் என்பவருக்கும் வாழ்க்கை இணையேற்பு நிகழ்வு செப்டம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் கடுவனூர் பெரியார் திடலில், கழகத் தலைவர்  கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் சாமிதுரை, மாவட்டத் தலைவர் க.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்விற்கு   குமார் – அம்சவள்ளி வரவேற்புரை கூறினர். சடங்கு, சம்பிரதாயங்கள், பார்ப்பன அர்ச்சகரைத் தவிர்த்த இந்த வாழ்க்கை இணை ஏற்பிற்கு உறவினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். புதுவை ‘விடுதலைக் குரல்’ குழுவின் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இணையர் ‘புரட்சிப் பெரியார் முழக்க’ வளர்ச்சி நிதியாக ரூ.1000/- வழங்கினர். நிறைவாக மணமக்கள் நன்றி கூறினர். பெரியார்...

மனுசாஸ்திரத்தைத் தடை செய்: சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

மனுசாஸ்திரத்தைத் தடை செய்: சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

பெரியார் பிறந்தநாளை ஒட்டி செப்டம்பர் 17 சனிக்கிழமை காலை 10 மணியளவில் கள்ளக்குறிச்சி சங்கராபுரம் மற்றும் புத்தூரில் உள்ள பெரியாரின் சிலைக்கு மா.குமார் மற்றும் தே.ச.அன்புரவி ஆகியோரின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அன்று மாலை 4 மணியளவில் ரிஷிவந்தியம் ஒன்றியம் வானாபுரம் – பகண்டை கூட்டுச் சாலையில் கழகத்தின் மாவட்ட துணை செயலாளர் மு.நாகராஜ் தலைமையில் ‘சனாதனத்தை வேரறுப்போம்’ தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் சாமிதுரை, மாவட்ட செயலாளர் க. இராமர், மற்றும் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஊட்டத்திற்கு ரிஷிவந்திய ஒன்றிய அமைப்பாளர் இரா.கார்மேகம், ஒன்றிய தலைவர் மா. குமார், சங்கராபுரம் ஒன்றிய செயலாளர் தே.க. அன்புரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் மன்ற அமைப்பாளர் வீ.முருகன் நன்றி கூறினார். கூட்டத்தில், இரா.வீரமணி, இரா. ஜீவா, மு.ச.பா, கௌதம், ச.சுபாஷ், கு. பாபா, நீதிபதி உள்ளிட்ட தோழர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம்...

சங்கராபுரத்தில் மாபெரும் எழுச்சி

சங்கராபுரத்தில் மாபெரும் எழுச்சி

  சங்கராபுரம் மாநாடு மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. புதுவை ‘விடுதலைக் குரல்’ இசைக் குழுவினர் லெனின் சுப்பையா பாடல்களைப் பாடி நிகழ்ச்சிக்கு எழுச்சியூட்டினர். சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு பங்கேற்றுப் பேசினார். ஏப்ரல் 3 ஈரோட்டில் நடைபெற்ற கழகத்தின் செயலவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, மாநில உரிமைகளைப் பறிக்காதே, கல்வி உரிமைகளைத் தடுக்காதே, மதவெறியைத் திணிக்காதே என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நமக்கான அடையாளம் திராவிட மாடல் என்று மண்டல மாநாடு நடத்துவது, அதனை விளக்கி மக்கள் மத்தியில் பரப்புரை செய்வது என்றும் தீர்மானிக்கப் பட்டது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்கள் இணைந்து மே 3 ஆம் நாள் சங்கராபுரத்தில் மாநாட்டினை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மாநாட்டின் நோக்கங்கள் அடங்கிய துண்டறிக்கைகள் 3000 எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டு மக்களிடையே பரப்பப்பட்டது. 27 இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டது. 500 சுவரொட்டிகள்...

ஜாதி ஆணவப் படுகொலைச் சட்டம் கோரி கள்ளக்குறிச்சியில் கழகப் பரப்புரைப் பயணம்

ஜாதி ஆணவப் படுகொலைச் சட்டம் கோரி கள்ளக்குறிச்சியில் கழகப் பரப்புரைப் பயணம்

திராவிடர் விடுதலைக்கழகம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பில் 12.4.2022 செவ்வாய் கிழமை அன்று நயினார்பாளையம் சின்னசேலம், சங்கராபுரம், வாணாபுரம் பகண்டை கூட்ரோடு,ஆகிய நான்கு இடங்களில் ஜாதிய ஆணவ படுகொலைக்கு எதிராக  சிறப்பு சட்டம் இயற்றக் கோரி ஒரு நாள் பரப்புரைப் பயணம் நடைபெற்றது. பரப்புரையில் ஆணவக் கொலைக்கு எதிராக முழக்கம் எழுப்பிய பின் கோரிக்கையை விளக்கி பேசப்பட்டது, மாவட்ட தலைவர் க. மதியழகன், மாவட்ட  செயலாளர் க.ராமர், மாவட்ட அமைப்பாளர். சி.சாமிதுரை, மாவட்ட துணை செயலாளர் மு.நாகராஜ், ரிசிவந்தியம் ஒன்றிய செயலாளர் இரா. கார்மேகம், பாக்கம் ராமச்சந்திரன், ரிசிவந்திய ஒன்றிய தலைவர் மா.குமார், மு.குமரேசன், இரா.ஜீவா, கு.பாபா மற்றும் கடலூர் மாவட்ட செயலாளர் மதன்குமார்,  கடலூர் மாவட்ட அமைப்பாளர் ஆசியஜோதி , விழுப்புர மாவட்ட தலைவர் பூ.ஆ. இளையரசன், திராவிடர் விடுதலைக் கழக மாநில செயற்குழு உறுப்பினர் ந. அய்யனார் ஆகியோர் பரப்புரையில் கலந்து கொண்டனர்.     பெரியார் முழக்கம் 21042022...

கழகப் பொறுப்பாளர்கள் மூன்றாம் கட்ட பயணம்: கழக ஏட்டுக்கு  சந்தா சேர்ப்பதில் தோழர்கள் ஆர்வம்

கழகப் பொறுப்பாளர்கள் மூன்றாம் கட்ட பயணம்: கழக ஏட்டுக்கு சந்தா சேர்ப்பதில் தோழர்கள் ஆர்வம்

மூன்றாம் கட்ட பயணமாக 1, 2, 3.12.2021 ஆகிய தேதிகளில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி பரப்புரைச் செயலாளர் பிரபாகரன் தலைமைக் குழு உறுப்பினர் விழுப்புரம் அய்யனார் ஆகியோர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களிடத்தில் கலந்துரையாடினர். தர்மபுரியில் 1.12.2021 அன்று காலை 11 மணி அளவில் பி அக்கரகாரம் நஞ்சப்பன் இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் வேணுகோபால், சந்தோஷ்,பரமசிவம் உள்பட பல பகுதிகளில் இருந்து தோழர்கள் பங்கேற்றனர் கழக செயல்பாடுகள் மற்றும் அரசு செயல்பாடுகள் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள புரட்சிப்பெரியார் முழக்கம் பெரும் உதவியாக இருந்தது என்றும், இந்த ஆண்டு கூடுதல் சந்தா சேர்ப்போம் என்றும் தோழர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் சிகர்ந்தப்பள்ளி மாவட்டச் செயலாளர் குமார் இல்லத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர்கள் ப.வாஞ்சிநாதன், குமார், கிருஷ்ணன் உள்பட 35 தோழர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர் மாவட்ட கழக...

கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தந்தை நடேசன் படத்திறப்பு

கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தந்தை நடேசன் படத்திறப்பு

கழகத் தலை மைக் குழு உறுப் பினர் ந. அய்யனார் தந்தை நடேசன்(75) கடந்த 25.01.2021 அன்று அதிகாலை உடல் நலக் குறைவால் முடிவெய்தினார். நடேசன் அவர்களின் இறுதி நிகழ்வு 25.01.2021 அன்று மாலை 4 மணியளவில் எந்த வித சடங்கு, சம்பிரதாயங்களும் இல்லாமல் நடைபெற்றது. நடேசனின் படத்திறப்பு நிகழ்வு 31.01.2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் கடுவனூரில் காலை 10 மணியளவில் நடைபெற்றது. நிகழ்விற்கு, ச.கு.பெரியார் வெங்கட் வரவேற்பு கூறினார். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி படத்தைத் திறந்து வைத்தார். தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் தொடக்கவுரையாற்றினார். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக்குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன், திவிக  கள்ளக்குறிச்சி  மாவட்ட அமைப்பாளர் சி.சாமிதுரை, விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.ஆ. இளையரசன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் கோ.சாக்ரடீசு, வேலூர் மாவட்ட செயலாளர் இரா.பா.சிவா, சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி, மக்கள் குடியரசுக் கட்சி தம்பி மண்டேலா, கள்ளக்குறிச்சி திராவிடர்...

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கை அறிக்கை, இஸ்ரோ முன்னாள் அதிகாரி கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் 2018 டிசம்பர் மாதம் தயாரிக்கப்பட்டு, 2019 ஜூன் 1ஆம் தேதி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலைதளத்தில் தேசிய கல்வி கொள்கை அறிக்கை ஆங்கிலம், இந்தியில் மட்டும் வெளியானது. வெளியானதிலிருந்து 30 நாட்களுக்குள் கருத்து சொல்ல வேண்டும் என்று அரசு கால நிர்ணயமும் அறிவித்திருந்தது. பல மொழிகள் பேசக்கூடிய மாநிலங்கள் இருந்தும் மாநில மொழிகளில் அறிக்கை வெளியாகவில்லை என்று எதிர்ப்பு வந்தவுடன் தேசிய கல்வி கொள்கை சுருக்கமான வரைவை தமிழில் வெளியிட்டார்கள். இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம்  ஓராண்டுக்கு முன்பே 2019 செப்டம்பர் 17 இல் பரப்புரை பயணத்தை நடத்தியது. ‘சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தை திணிக்காதே’ என்ற முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் கழகம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை பயணத்தை மேற் கொண்டது. பயணம் பள்ளிபாளையத்தில் நிறைவுற்றது. செப்டம்பர் 20ஆம்...

கல்லக்குறிச்சியில் கழகம் தடைமீறி ஆர்ப்பாட்டம்

கல்லக்குறிச்சியில் கழகம் தடைமீறி ஆர்ப்பாட்டம்

இசுலாமியர்களையும் ஈழத்தமிழர்களையும் பாதிக்கின்ற குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கல்லக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு ஊராட்சி மும்முனை சந்திப்பில்  08.01.2020 அன்று 4 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. காவல்துறையில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி நடந்தது. கார்மேகம்  ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். கல்லை மாவட்டச் செயலாளர் க. இராமர், மாவட்டத் தலைவர் க. மதியழகன், மாவட்ட அமைப்பாளர் சி. சாமிதுரை, பெரியார் வெங்கட் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  குமார், அன்பு, துளசிராசா, வீரமணி, சங்கர், கழகத்தில் புதிதாக இணைந்துள்ள நாராயண குப்பம் இராசா உள்ளிட்ட முப்பதிற்கும் மேலான கழகத்  தோழர்கள் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 16012020 இதழ்

வணிக நிறுவன விளம்பரப் பலகைகளில் ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரும் இயக்கம் கல்லக்குறிச்சி மாவட்டக் கழகம் முடிவு

வணிக நிறுவன விளம்பரப் பலகைகளில் ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரும் இயக்கம் கல்லக்குறிச்சி மாவட்டக் கழகம் முடிவு

திராவிடர் விடுதலைக் கழக  கல்லக்குறிச்சி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 02.11.2019 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சங்கராபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் ந. அய்யனார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் க. மதியழகன், மாவட்ட அமைப்பாளர் சி. சாமிதுரை, மாவட்டச் செயலாளர் க. இராமர், மாவட்ட துணை செயலாளர் மு.நாகராசு, மாவட்ட அறிவியல் மன்ற அமைப்பாளர் வீ. முருகன், ந. வெற்றிவேல், அன்பு ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். கலந்தாய்வு கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கல்லக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து சமுதாய (குமுகாய) மக்களும் நுகர்வோராக வணிகம் செய்கின்ற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் விளம்பர பலகையில் எழுதப்பட்டுள்ள சாதி பெயர்களை அகற்றக்கோரி மக்கள் மத்தியில் தொடர் பிரச்சாரங்களை மேற்கொள்வதோடு  சாதி பெயர் எழுதப் பட்டுள்ள வணிக நிறுவன உரிமையாளர்களிடம்  சாதி பெயரை அகற்றக்கோரி வேண்டுகோள் வைப்பது என்று மாவட்ட கழகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலையிலிருந்து...

கழகக் கட்டமைப்பு நிதி (நயினார் பாளையம், கள்ளக்குறிச்சி மாவட்டம்)

கழகக் கட்டமைப்பு நிதி (நயினார் பாளையம், கள்ளக்குறிச்சி மாவட்டம்)

பா. சின்னமணி (பகுத்தறிவாளர்) ரூ.   2,000.00 க. மதியழகன்     ரூ.   2,000.00 க. இராமசாமி, செம்பாக்குறிச்சி  ரூ.   2,000.00 நாகராசன்   ரூ.   1,000.00 இராமச்சந்திரன், கீழ்க்குப்பம்     ரூ.   1,000.00 புலவர் கு. அண்டிரன்     ரூ.   500.00 கா. அசன்   ரூ.   500.00 ரமேசு (மளிகை)    ரூ.   500.00 அங்கமுத்து ஆசிரியர்    ரூ.   500.00 இரா. சரவணன்    ரூ.   500.00 சு. குழந்தைவேல்  ரூ.   500.00 தேனப்பன் (இரவி)  ரூ.   500.00 சி. நெடுஞ்செழியன் ரூ.   500.00 மைக்கேல் அலம்பளம்    ரூ.   250.00 தண்டபாணி ரூ.   100.00 கருங்குழி தோழர் வெற்றிவேல் வழியாக ந. வெற்றிவேல்    ரூ.   2,600.00 ந. அய்யம்பெருமாள்     ரூ.   2,500.00 சி. ஆசைத்தம்பி, கல்லக்குறிச்சி  ரூ.   2,000.00 மு. அல்லிமுத்து   ரூ.   1,000.00 த. செந்தில்குமார், நகைக்கடை   ரூ.   1,000.00 தகடூர் சம்பத் ரூ.   1,000.00 வி. திருமால் ரூ.   500.00 புலவர் சிலம்பூர்கிழான்   ரூ.   500.00 சி....

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

  ‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில்  முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை  வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன்...

கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை

கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் ஏப்ரல் 14 அன்று காலை 10.00 மணிக்கு அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட அமைப்பாளர் சி. சாமிதுரை தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளர் மு. நாகராஜ், பெரியார் பிரபு, பெரியார் துளசிராஜா, பெரியார் பாரதிதாசன் (த.மா.கழகம்), நீதிபதி செ.வே. ராஜேஷ் (சங்கை, ஒன்றிய செயலாளர்), ஜெ.க. வேலாயுதம், கல்லை ஆசைத் தம்பி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 09052019 இதழ்  

பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்து சங்கராபுரத்தில் ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்து சங்கராபுரத்தில் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் 10.04.2019 புதன் கிழமை மாலை 4.00க்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மத வெறியர்கள் பெரியார் சிலையை உடைத்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பட்டத் திற்கு மாவட்ட துணைச் செயலாளர் மு. நாகராஜ் தலைமையேற்றார். அதில் பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்தும், பார்ப்பன மதவாதத்தைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தோழர்கள் சி. சாமிதுரை, பெரியார் வெங்கட், கல்லை சங்கர், செ.வே ராஜேஷ், பெரியார் பாரதி, கார்மேகம், ஜெ.க. வேலாயுதம், துளசி உள்ளிட்ட 30 மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 25042019 இதழ்

பழங்குடி மக்களைப் பாதுகாக்க களமிறங்கினர் கள்ளக்குறிச்சி கழகத் தோழர்கள்

பழங்குடி மக்களைப் பாதுகாக்க களமிறங்கினர் கள்ளக்குறிச்சி கழகத் தோழர்கள்

பழங்குடியினர் – மலைவாழ் மக்களை அந்த மக்கள் வாழக்கூடிய பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கடந்த மாதம் உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. வேறெங்கும் வீடு கட்டப்படுவதற்கான இடமோ அல்லது நிலமோ இல்லாத நிலையில் பன்னெடுங் காலமாக பழங்குடியினர் – மலைவாழ் மக்கள் வசித்துவந்த  பகுதியில் இருந்து வெளியேற்ற வற்புறுத்தல் செய்தால் அந்த மக்கள் சொந்த மண்ணிலே அகதிகளாக இருக்க வேண்டிய ஒரு அவல நிலை ஏற்படும்.எனவே பழங்குடி- மலைவாழ் மக்களை அவர்கள் வசிக்கின்ற பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையையும், பழங்குடியினர்- மலைவாழ் மக்களுக்கு சாதி இருப்பிட சான்றிதழ்களை அரசு  விரைவாக வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி  கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மாவட்டம் முழுவதும் 200-சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பழங்குடியினர்- மலைவாழ் மக்கள் வாசிக்கக் கூடிய சில பகுதிகளில் தோழர்கள் நேரில்...

கள்ளக்குறிச்சியில் உயர்ஜாதி இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் உயர்ஜாதி இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

20.02.2019 புதன்கிழமை அன்று மாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சி மந்தைவெளியில், திராவிடர் விடுதலைக் கழக சார்பில் உயர் ஜாதியினருக்கு 10ரூ இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து கள்ளக்குறிச்சி நகர அமைப்பாளர் மு.சங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிதாசன், கார்மேகம், ஆசைத்தம்பி, நாகராஜ் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ச.கு. பெரியார் வெங்கட், மாவட்ட செயலாளர க, இராமர், மாவட்ட அமைபாளர் சி,சாமிதுரை, மாவட்ட தலைவர் க. மதியழகன் சங்கை ஒன்றிய அமைப்பாளர் செ.வே. ராஜேஷ்,  பெரம்பலூர் மாவட்ட தலைவர் துரை. தாமோதரன் நிறைவுரையாற்றினார். காரனுர் மணி நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 28022019 இதழ்

கள்ளக்குறிச்சியில் உயர்ஜாதி இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் உயர்ஜாதி இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

20.02.2019 புதன்கிழமை அன்று மாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சி மந்தைவெளியில், திராவிடர் விடுதலைக் கழக சார்பில் உயர் ஜாதியினருக்கு 10ரூ இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து கள்ளக்குறிச்சி நகர அமைப்பாளர் மு.சங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிதாசன், கார்மேகம், ஆசைத்தம்பி, நாகராஜ் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ச.கு. பெரியார் வெங்கட், மாவட்ட செயலாளர க, இராமர், மாவட்ட அமைபாளர் சி,சாமிதுரை, மாவட்ட தலைவர் க. மதியழகன் சங்கை ஒன்றிய அமைப்பாளர் செ.வே. ராஜேஷ்,  பெரம்பலூர் மாவட்ட தலைவர் துரை. தாமோதரன் நிறைவுரையாற்றினார். காரனுர் மணி நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 28022019 இதழ்

விழுப்புரம் மாவட்டம் பிரிப்பு: வரவேற்று கழக சார்பில் சுவரொட்டிகள்

விழுப்புரம் மாவட்டம் பிரிப்பு: வரவேற்று கழக சார்பில் சுவரொட்டிகள்

தமிழகத்தில் பெரிய மாவட்டமாக இருந்து வந்தது விழுப்புரம் மாவட்டம். பொதுமக்கள் தங்களது பல்வேறு துறை சார்ந்த வேலைகளுக்காகவும்  மாவட்ட ஆட்சியர் சந்திப்பதற்கும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதியதாக கல்லக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கும்படி தமிழக அரசுக்கு பொதுமக்களும் கட்சிகளும் இயக்கங்களும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தன. இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கல்லக்குறிச்சி புதிய மாவட்டமாக அறிவித்த தமிழக அரசை  வாழ்த்தி நன்றி தெரிவிக்கும் விதமாக கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கல்லக்குறிச்சி மாவட்டத்தில் போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டன. பெரியார் முழக்கம் 07022019 இதழ்

சங்கராபுரம் ஆணவப் படுகொலை கண்டனக் கூட்டத்தில் ஜாதி மறுப்புத் திருமணம்

சங்கராபுரம் ஆணவப் படுகொலை கண்டனக் கூட்டத்தில் ஜாதி மறுப்புத் திருமணம்

பெரியார் அம்பேத்கர் நினைவு நாட்களை முன்னிட்டு  “தமிழக அரசே ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்று” என்கிற தலைப்பில் விழுப்புரம் மாவட்டம் பாக்கம் (சங்கராபுரம்)  கிராமத் தில் 19.12.2018 (தி.பி. 2049 புதன்) அன்று மாலை 5 மணி அளவில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. “அன்னை மணியம்மை”  இசைக் குழுவினரின் பறை இசை மற்றும் பகுத்தறிவு சாதி ஒழிப்பு பாடல்களுடன் கூட்டம் தொடங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட துணைச் செயலாளர் நாகராசன், மாவட்ட அமைப்பாளர் சாமிதுரை பகுத்தறிவுப் பாடல்களை பாடினர். கூட்டத்திற்கு இரா.துளசிராசா தலைமை வகித்தார். பெரியார் பிரபு வரவேற்புரை ஆற்றினார். தனிமொழி, சோபனா, முத்துலட்சுமி, செந்தாமரை, சத்யா  மற்றும் இராமச்சந்திரன், நீதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரத்தினசாமி, துரைசாமி, அய்யனார், இராமர்,பெரியார் பாரதிதாசன் ஆகியோர்  ஆணவக் கொலைகளின் பாதிப்புகள் குறித்து உரையாற்றினார்கள். கூட்டத்தில் சாதி மறுப்பு திருமணமும் நடைபெற்றது. பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் நூரோலையைச் சேர்ந்த ரஷ்யா ஆகிய...

பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் உயர்சாதியினருக்கான 10ரூ இடஒதுக்கீடு திட்டத்தை கண்டித்துக்  கல்லக்குறிச்சி  மாவட்டம் சங்கராபுரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மொழிப் போர் தியாகிகளின் தினமான 25-01-2019 (வெள்ளி) அன்று  அவர்களின் நினைவாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலியோடு ஆர்பாட்டம் தொடங்கியது. மாவட்ட துணைச் செயலாளர். மு.நாகராசு தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் செ.வே.இராசேசு, க.மதியழகன், க.இராமர்,பூ.ஆ.இளையரசன் ஆகியோர்  இட ஒதுக்கீடு வரலாறு குறித்தும் உயர்சாதியினருக்கான 10ரூ இட ஒதுக்கீட்டின் பாதிப்புகள் குறித்தும் உரையாற்றினார்கள்.தலைமை செயற்குழு உறுப்பினர் ந. அய்யனார் பல்வேறு கருத்துகளை தொகுத்து இறுதி உரையாற்றினார்.செ.க.வேலாயுதம் நன்றி உரையாற்றினார். பெரியார் முழக்கம் 07022019 இதழ்