திராவிட இயக்க வரலாறு

1912லிருந்து 1973வரை

திராவிடர் இயக்க வரலாற்றுச் சுவடுகள்

தொகுப்பு: தஞ்சை மருதவாணன்

1912ஆம் ஆண்டிலிருந்து பெரியார் மறைந்த 1973ஆம் ஆண்டு வரையிலான வரலாற்று நிகழ்வுகளை மிகத் துல்லியமாக தொகுக்கப்பட்டுள்ள வரலாற்றுக் கையேடு. அன்றைய சென்னை மாகாணத்தின் – தமிழ்நாட்டின் சமூக வரலாறும் இதுதான். பிரிட்டிஷ் இந்தியாவில் பார்ப்பனரல்லாத மக்களின் உரிமைகளுக்காக நடேசனார், டி.எம். நாயர், தியாகராயர், பனகல் அரசர், பெரியார் போன்ற மகத்தான தலைவர்களின் தன்னலம் கருதாத போராட்ட வரலாறுகளை விவரிக்கிறது இந்த நூல். இன்றைய தலைமுறையினருக்கு இது மிகச் சிறந்த கைவிளக்கு.

 

உலகில் மனித இனம் முதன்முதலில் உருவாகிய தொல்பழங் குமரிக் கண்டத்தில் தோன்றிச் சிறப்புற்ற பழந் திராவிட இனத்தவர், அங்கு ஏற்பட்ட இயற்கை இடையூறு களால் வடக்கு நோக்கி தள்ளப்பட்டு, பனிமலையாம் இமயத் தொடர் வரை பரவி, நகர நாகரிகத்துக்கு உரியவராய் – அதுவும் உலகின் மிகப் பழைய கிரேக்க உரோமானிய, பாபிலோனிய (சுமேரிய) மற்றும் உள்ள நாகரிகங்களைவிட உன்னத நிலைக்குச் சொந்தக்காரர்களாய் ஏற்றம் பெற்று வாழ்ந்தனர். இந்நிலையில் மைய ஆசியப் பகுதியினின்றும் கணவாய்கள் வழி மேய்ச்சல் நிலந்தேடி, ஆடு, மாடு முதலிய கால்நடைகளை ஓட்டிக் கொண்டு உள்ளே நுழைந்த ஆரியப் பார்ப்பன இனம் அங்கு வாழ்ந்த திராவிட இனத்தவரைப் பல்வேறு வழிகளால் சிதைக்கத் தொடங்கியதும், திராவிடர்கள் மீண்டும் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து நாகரிகம், பண்பாடு மிக்க நயத்தக்க நல்லாட்சி மேற்கொண்டு சிறப்புற்று வாழ்ந்து வந்தனர்.

மெல்ல மெல்ல, இந்திய நிலப்பரப்பு முழுவதும் பரவிய ஆரியப் பார்ப்பனர்கள், தமது நால்வருண சாதி முறைகளால் திராவிட இனத்தவரைப் பிரித்து, பஞ்சமர் என்று ஒரு பிரிவினரை இழிவுபடுத்தி, தாமே உயர்ந்தவர்; தமக்கே கல்வி முதலான அனைத்து உரிமைகளும் உண்டு; பிறர்க்கு இவை இல்லை என்று மனு (அ) நீதி வகுத்து, அதன் வழி கல்வியிலும்  சமூக நிலையிலும் ஏகபோகம் செலுத்தி வந்தபோது இங்கே தொடர்ச்சியாக வந்த கிரேக்க, பாரசீக, அராபிய, மொகலாய மற்றும் மேற்கத்திய வெள்ளையர்களின் ஆட்சியில் அனைத்துக் கல்வி நிலைகளிலும்,  வேலை வாய்ப்புகளிலும் ஆதிக்கம் பெற்றனர்.

பொதுவாக, இங்கு ஆதிக்கம் செலுத்திய ஆரியப் பார்ப்பன வர்ணாசிரம ஆதிக்கக் கொள்கைகளை நீண்ட நெடுங்காலத்திலிருந்தே புத்தர் – சித்தர்கள், சீர்திருத்தக்காரர்கள் ஆங்காங்கே எதிர்த்துப் பேசியும், உரையாற்றியும், கவிதை பாடியும் வந்த நிலையில், 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலே தமக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உரிமை வேண்டும் என்றும், பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து தமக்கு விடுதலை வேண்டும் என்றும் தென்னகத்துப் பார்ப்பனரல்லாத பெருமக்கள் (முகமதியர், கிருத்துவர் உள்பட) அவ்வப் பொழுது குரல் கொடுத்துக்கொண்டே வந்தனர்.

இத்தகைய எழுச்சிக் குரல் முதன்முதலில் தனி நிலையிலும் பின்னர் சிறு சிறு குழுக்கள், சங்கங்கள் போன்ற அமைப்புகள் வாயிலாகவும் எழும்பலாயின.

மேற்கோளாக,

1892இல் பார்ப்பன ஆதிக்கம் அகல வேண்டும், தமக்கும் பல்வேறு துறைகளில் இடம் வேண்டும் என, சென்னை கவர்னர் வென்லாக்குக்குப் பகிரங்கக் கடிதம் என்ற தலைப்பில் கோரிக்கைக் குரல் எழும்பியது.

“1902-லேயே தமக்குப் பார்ப்பனரல்லாதார் நலனில் அக்கறையுணர்வும், வகுப்புரிமை உணர்வும் இருந்தது” என்று தந்தை பெரியார் பின்னாளில் குறிப்பிட்டதிலிருந்து அவர்தம் எண்ணத்தின் எதிரொலி அன்றைய நிலையில் தனிமனித எழுச்சியாக இருந்து வந்திருக்கிறது என்பதும் புலனாகிறது.

1909இல் சென்னையில் புருஷோத்தம நாயுடு, சுப்பிரமணியம் ஆகிய இரு வழக்கறிஞர்கள், “பார்ப்பனரல்லாத மாணவர்களின் கல்வி நலனுக்கும், அவர்தம் வாழ்வு நிலை உயர்வுக்கும் பார்ப்பனரல்லாதார் சங்கம் அமைய வேண்டும்” என்று கருத்து தெரிவித்து, பார்ப்பனரல்லாதார் சங்கம் என்று அறிவித்து, அதற்கென சட்ட திட்டங்கள் – விதிமுறைகள் வகுத்து வெளியிட்டதையொட்டி பத்திரிகைகள் வாயிலாக வாதப் பிரதிவாதங்கள் எழுந்து, “ஏன் திராவிடர் சங்கம் என்று இருக்கக் கூடாது?” என்று வினா எழுப்பியதோடு, வெறும் வழக்கறிஞர்கள் அளவில் இருவர் மட்டுமே இம்முயற்சியில் வெற்றி பெற முடியாது. நகரப் பெருமக்களாகிய டாக்டர் டி.எம்.நாயர், சர்.பி.தியாகராய செட்டியார் போன்றோரின் வலிவான ஆற்றல் மிக்க தலைமையின் கீழ்தான் இம்முயற்சி சிறப்படையும் என்று ‘மெயில்’ (ஆயடை) ஏட்டில் வாசகர் ஒருவர் எழுதக்கூடிய அளவுக்கு சர்ச்சை கிளம்பியது.

இக்கருத்து எவ்வளவு தொலைநோக்குடையது என்பது அடுத்து வந்த ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நடேசனார் உள்ளிட்ட, அதே பெருமக்களான நாயரும், தியாகராயரும் இவ்வியக்கத்தைத் தோற்றுவித்து வளர்க்க நேர்ந்தது ஒன்றே ஏற்ற சான்றாகும்.

தனி மனிதர்களின் எழுச்சியாக எழுந்த நிலை மாறி, வளர்ந்து, அவர்கள் ஒன்றுசேர்ந்து, தங்களுக்கென குறிக்கோள்களை முன் வைத்து கொள்கைகளை உருவாக்கி, தொடர்ச்சியான வேலைத் திட்டங்களை வகுத்து, இடைவிடாது இயங்குவதே இயக்கம் என்ற வகையில் திராவிடர்களின் நலன் காக்க ஆற்றல் மிக்க அமைப்பு உருவாகியது.

இந்நிலையில் சமுதாய, கல்வி, வேலை வாய்ப்பு மேம்பாடு என்ற கொள்கைகளின் அடிப்படையில் ‘திராவிடர் சங்கம்’ என்று அரும்பி, ‘நீதிக்கட்சி’ என வழங்கப்பட்ட ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என மலர்ந்து மணம் பரப்பி, பின்னர் ‘திராவிடர் கழகம்’ என ஓர் ஒப்பற்ற இன விடுதலை இயக்கமாகக் கனிந்து பயன் தரலாயிற்று.

இது மேற்குறிப்பிட்டவாறு ஓர் ‘இயக்கம்’ அமைய வேண்டிய இலக்கணத்துக்குப் பொருந்திய வகையில் இயங்கலாயிற்று.

இவ்வாறு வாய்ப்பான வரலாற்றுப் பின்னணியுடன் திராவிடப் பேரினத்தின் பாதுகாப்புப் பேரரணாக விளங்கிய திராவிடர் இயக்க வரலாற்றின், சுருக்கமான வரலாற்றுத் தொகுப்பு இது:

1912      

பார்ப்பன ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்த காலம் இது! நூற்றுக்கு மூவராக மட்டுமேயிருந்த பார்ப்பனர்கள், அரசு உயர் பதவிகள் அனைத்திலும் மிகப் பெரிய அளவில் இடம் பெற்று ஆதிக்கம் செலுத்தினர். உதாரணமாக, ஒரு கணக்கெடுப்பின்படி டிப்டி கலெக்டர்களில் 55ரூ, சப்ஜட்களில் 83ரூ, மாவட்ட முன்சீப்களில் 72ரூ பார்ப்பனர்களாகவே இருந்தனர். உயர்பதவியிலுள்ள பார்ப்பனர்கள் தமக்குக் கீழ் உள்ள பார்ப்பனரல்லாதாரைப் பாரபட்சமாக நடத்துதல், பதவி உயர்வு பெறவிடாமல் அழுத்தி வைத்தல், சுயஜாதி அபிமானத்துடன் அவர்களை இழிவுபடுத்துதல் ஆகிய கொடுமைகளைப் புரிந்து வந்தனர். இக்கொடுமைகளையும், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும், வெளியில் எடுத்துச் சொல்லக்கூட திராணியற்றவர்களாகப் பார்ப்பனரல்லாத அரசு அலுவலர்கள் இருந்தனர். இந்த நிலையில் சென்னை ரெவின்யூபோர்டு அலுவலகத்திலும் மற்றும் சில அரசு அலுவலகங்களிலும் பணிபுரிந்த சில பார்ப்பனரல்லாத எழுத்தர்களும் அலுவலர்களும் தங்கள் குறைகளை வெளியிடவும் பார்ப்பன ஆதிக்கத்தால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விடுபடவும், “சென்னை அய்க்கிய சங்கம்” (ஆயனசயள ருnவைநன டுநயபரந) என்ற பெயரில் ஒரு சங்கத்தைத் தொடங்கினர். இவர்களில், பின்னாளில் தஞ்சை டிப்டி கலெக்டராகப் பணியாற்றிய திரு. சரவணப் பிள்ளை, பொறியியல் துறையில் பணியாற்றிய திருவாளர்கள் ஜி.வீராசாமி நாயுடு, துரைசாமி முதலியார், ரெவின்யூ போர்டு அலுவலகத்தில் பணிபுரிந்த திரு.எஸ்.நாராயணசாமி நாயுடு ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். இவர்கள் உள்ளிட்ட ஏனைய அரசு அலுவலர்கள், அந்நாளில் சென்னையில் சிறந்து விளங்கிய மருத்துவரும், பொதுநலப் பண்பும், தயாள சிந்தையும் உடையவருமான டாக்டர் சி.நடேச முதலியாரை அணுகி, தக்க உதவியும் ஆலோசனையும் வழங்கி ஆதரிக்குமாறு வேண்டியதற்கு இணங்க, அவரும் இம்முயற்சியைப் பாராட்டி, அனைத்து உதவிகளையும் அளித்ததோடு தாமே செயலாளராகவும் இருந்து அச்சங்கத்தை நடத்திச் சென்றார்.

சென்னை அய்க்கிய சங்கத்தின் கூட்டங்கள், சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் டாக்டர் சி.நடேசனாரின் மருத்துவமனை முன்பகுதியில் இருந்த தோட்டத்தில் நிகழ்ந்து வந்தன. இச் சங்கத்தின் முதல் சமூகப் பணி, முதியோர் கல்விக்கான வகுப்புகளை நடத்தியதே ஆகும். இரவு நேரங்களில் நடந்த இவ்வகுப்புகளில் அரசு அலுவலர்களே ஆசிரியர்களாக அமைந்து பாடம் நடத்தினர். நாளடைவில் இச்சங்கத்தில், அரசு அலுவலரோடுகூட, பொதுநல உளப் பாங்குடையோரும் உறுப்பினராகச் சேர்ந்து சமூகப் பணி ஆற்றினர். இச்சங்கம் தொடங்கி ஓராண்டுக்குள் 300 பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்து பணி ஆற்றினர். நடேசனாரின் மருத்துவமனைக்கு அருகில் சில வீடுகள் தள்ளி, குடியிருந்தவரும் ‘தி ஸ்டாண்டர்டு’ (கூhந ளுவயனேயசன) என்ற ஆங்கில நாளிதழின் ஆசிரியருமான திவான் பகதூர் கருணாகர மேனன், இராமஇராயநிங்கர் என்னும் பெயரை உடைய பனகல் அரசர் ஆகியோர் இச்சங்கக் கூட்டங்களில் அவ்வப்போது கலந்து கொண்டதோடு தக்க ஆலோசனைகளையும் வழங்கி வந்தனர்.

அரசுப் பொதுப் பணி குறித்து ஆராய நியமிக்கப்பட்ட இராயல் கமிஷன் (சுடிலயட ஊடிஅஅளைளiடிn டிn ஞரடெiஉ ளுநசஎiஉநள) முன் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சர். பி. தியாகராயர் உள்பட பல்வேறு பிரமுகர்களும், மாநில அரசு நிர்வாகத்தில் பார்ப்பன ஆதிக்கம் நிலவுவதை விளக்கியும், எல்லா வகுப்பினருக்கும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டியதன் தேவை குறித்தும் தெரிவித்தனர். சென்னை நகராட்சி மூலம் டி.மாதவன் (நாயர்) சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.

1913      

சென்னை அய்க்கிய சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா நடேசனார் மருத்துவமனைத் தோட்டத்திலேயே சிறப்பாக நடைபெற்றது. ஓரிருவரைத் தவிர அனைத்து உறுப்பினர்களும் ஆண்டு விழாக் கூட்டத்தில் கலந்து கெண்டதானது பார்ப்பனர் தம் ஆதிக்கம் ஏனையோரை எந்த அளவுக்கு பாதிப்புக்குள்ளாக்கியிருந்தது என்பதைக் காட்டியதுடன், பார்ப்பனரல்லாதார் எனும் உணர்வின் ஒருமித்த வலிவையும் உணர்த்தியது. “சென்னை அய்க்கிய சங்கம்” என்ற பெயர் இச்சங்கத்தின் நோக்கத்தையும், ஆற்றும் பணியையும் குறிக்கும் வகையில் இல்லாமல், பொருத்தமற்றதாகக் காணப்படுவதால், ‘பார்ப்பனரல்லாதார் சங்கம்’ என்ற பெயர் முன்மொழியப்பட்டு விவாதிக்கப்பட்டது. பார்ப்பனரல்லாதார் என்று ஏன் எதிர்மறைப் பெயரால் குறிக்க வேண்டும்? திராவிடர் சங்கம் என்றே பெயரிடலாம் என்ற கருத்து பெரும்பான்மையோரால் முன்மொழியப்படவே சென்னை அய்க்கிய சங்கம் என்ற பெயரானது, ‘திராவிடர் சங்கம்’ (னுசயஎனையைn யளளடிஉயைவiடிn) என்று பெயர் மாற்றம் பெற்றது. சென்னைக்கு வருகை தந்த இராயல் கமிஷனின் முன் அன்றைய அரசுத் தலைமைச் செயலாளராயிருந்த அலெக்ஸாண்டர் கார்டியூ சென்னை மாகாணத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பார்ப்பனர் ஆதிக்கம் பற்றி புள்ளி விவரத்துடன் எடுத்துக் கூறினார்.

1914      

திராவிடர் சங்கத்தின் புகழ் நாடெங்கும் பரவியது. இச்சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்தது. இச் சங்கத்தைத் ‘திராவிடத் தந்தை’ என்று புகழப்பட்ட நடேசனார் சிறப்புற நடத்திச் சென்றார். திராவிடர் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளி மாடியிலுள்ள கூடத்தில் நிகழ்ந்தது. பார்ப்பனரல்லாத பட்டதாரிகளுக்கு ஒரு வரவேற்பு நிகழ்ச்சியும், இவ்விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க இருந்த வெங்கடகிரி மகாராஜா உடல்நிலை சரியில்லாமல் வரஇயலாமற் போகவே, நீதிபதி சி.கிருஷ்ணன் (ஊhநைக துரனபந டிக ளஅயடட உயரளந உடிரசவள) தலைமையேற்று சிந்தனையைத் தூண்டும் அறிவுரை ஆற்றினார். இவ்விழாவில் டாக்டர் டி.எம்.நாயர் (தரவாத் மாதவன் நாயர்) ஆற்றிய உரை பார்ப்பனரல்லாதாரை வீறுகொள்ளச் செய்யும் வகையில் எழுச்சி மிக்கதாக அமைந்தது. தனது உரையின் முடிவில் பார்ப்பனரல்லாத இளைஞர்களை நோக்கி, ‘விழி! எழு! இன்றேல் என்றென்றும் வீழ்ந்து படுவாய்!’ (யசளைந யறயமந டிச நெ கடிச நஎநச கயடடநn) என எழுச்சிக் குரல் எழுப்பினார்.

‘திராவிடர் சங்கம்’ இன எழுச்சியைத் தூண்டும் வண்ணம் அடிக்கடி கூட்டங்களை நடத்தி வந்ததோடு இலக்கியக் கூட்டங்களையும் நடத்தி வந்தது. இக்கூட்டங்கள் அனைத்தும் நடேசனார் மருத்துவமனைத் தோட்டத்திலேயே நடைபெற்றன. உதாரணமாக, மே 15இல் ‘நமது சமுதாயத்திற்கு இன்றைய தேவை’ என்ற பொருளில் மா.சிங்காரவேலு அவர்களும், ஜூலை 25இல், ‘இந்திய இதிகாசங்களின் சரித்திரப் பின்னணி’ என்ற தலைப்பில் ஜி. ரங்கநாத (முதலியாரும்), ஆகஸ்ட் 22இல் ‘பரோபகாரம்’ என்ற பொருளில் ஸ்ரீமத் பாம்பன் குமர குருதாசசாமிகளும், செப்டம்பர் 5இல், ‘திராவிடரின் தற்கால நிலை’ என்ற பொருள் குறித்து அலமேலு மங்கம்மாள் அவர்களும், அக்டோபர் 3இல், ‘அப்பர் திருமுறை’ என்ற பொருளில் இ.என்.தணிகாசல (முதலியாரும்) சொற்பொழிவு ஆற்றினர். மேலும், இதுபோன்ற கூட்டங்களில் திரு.வி.க., நாயர், தியாகராயர், எல்.டி.சாமிக்கண்ணுப் பிள்ளை போன்ற பார்ப்பனரல்லாத தலைவர்கள் சொற்பொழிவு ஆற்றினர்.

இக்கூட்டங்களில் எல்லாம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுவது, ஆண்டுதோறும், கல்லூரிப் பட்டம் பெற்ற திராவிட மாணவப் பட்டதாரிகளுக்கு வரவேற்பும், விருந்தும் அளித்து புகழுரையும், நல்லுரையும் புகன்று ஊக்கமும் உற்சாகமும் அளித்து பாராட்டு வழங்கும் விழாக்களேயாகும். இந்த ஆண்டு விழாக் கூட்டங்களில் கூடும் பட்டதாரி மாணவர்களுக்கு, திராவிட உணர்ச்சியையும் வீரத்தையும் ஊட்டி பார்ப்பனர்களோடு போட்டியிட்டு முன்னுக்கு வரும்படி ஊக்குவித்து,  அவர்களிடையே சுயமரியாதை உணர்வு பொங்கி எழும்படி தலைவர்கள் எழுச்சியுரை ஆற்றினர். எஸ்.ஜி. ரங்கராமானுஜ (முதலியார்), எஸ்.ஜி. மணவாள இராமானுஜம் (பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்), எஸ்.சடகோப (முதலியார்), ஆர்.கே.சண்முகம் (செட்டியார்) பின்னாளில் இந்திய அரசு நிதி அமைச்சர் போன்ற பெருமக்கள் எல்லாம் இச்சங்கத்தில் உறுப்பினராக இருந்து பிறகு உலகுக்கு அறிமுகமானவர்களே ஆவர். திராவிடர் சங்கமானது பொதுவாக, பார்ப்பனரல்லாதாருக்குத் தலைமைப் பாதுகாவல் இடம் போன்று இயங்கியது என்றால் மிகையாகாது. இத்திராவிடர் சங்கத்தின் வியக்கத்தக்கப் பணியால் ஈர்க்கப்பட்ட முதுபெருந் தலைவர்களான தியாகராயரும், நாயரும், இதைவிட வன்மையும் ஆற்றலும் வாய்ந்த நாடு தழுவிய ஓர் இயக்கத்தின் தேவையை உணரத் தலைப்பட்டனர்.

1915      

பார்ப்பனரல்லாத இளைஞர்களின் இன எழுச்சியின் வெளிப்பாடாக திராவிடர் சங்கத்தின் சார்பில் ‘திராவிடப் பெருமக்கள்’ (னுசயஎனையைn றுடிசவாநைள) மற்றும் பார்ப்பனரல்லாதார் கடிதங்கள் (சூடிn செயாஅin டநவவநசள) ஆகிய இரு வெளியீடுகள் வந்தன. பார்ப்பனரல்லாதாரின் கல்வியை ஊக்குவித்தும், பார்ப்பனருடன் போட்டியிட்டு முன்னேறும் வகையில் ஒன்று சேர்ந்து உழைக்கும்படி தூண்டும் வகையில் அமைந்த 21 கடிதங்களைக் கொண்டது, ‘பார்ப்பனரல்லாதார் கடிதங்கள்’ என்ற நூலாகும். இவ்விரு நூல்களும், எஸ்.கே.என். என்னும் சுருக்கப் பெயர் (முழு பெயர் தெரியவில்லை) உள்ளவரால் எழுதப்பட்டு, ‘இந்தியன் பாட்ரியாட்’ எனும் இதழாசிரியர் சி.கருணாகரமேனனால் வெளியிடப்பட்டவை ஆகும்.

செப்டம்பர் 25இல் ‘ஹோம் ரூல்’ இயக்கத்தைத் தொடங்கிய அன்னிபெசன்ட் அம்மையார், அதனை முற்றிலும் பார்ப்பனர் நலனுக்கே அர்ப்பணித்தமையினை உணர்ந்த பார்ப்பனரல்லாத தலைவர்கள் மேலும் விழிப்புற்றுக் கிளர்ந்தெழுந்தனர். ஏற்கெனவே காங்கிரசில் ஈடுபட்டு உழைத்து வந்த தியாகராயர், நாயர் ஆகியோர், தென்னாட்டுப் பார்ப்பனர்களும் வடநாட்டு ஆதிக்கமும் ஒன்று சேர்ந்து தென்னிந்திய திராவிடர்களுக்கு அநீதி இழைத்து வரும் ஓர் அமைப்பே காங்கிரஸ் என்று உணர்ந்து அதனின்றும் விலகியிருந்தனர். இந்நிலையில் ‘ஹோம் ரூல்’ என்ற புதிய போர்வையில் ‘சுய ஆட்சி’ வேண்டி பார்ப்பனியம் அன்னிபெசன்ட் உருவில் அவதாரம் எடுத்திருப்பதைக் கண்டு வெகுண்டு ‘சுயஆட்சி என்பது பார்ப்பன ஆட்சியே’ (ழடிஅந சுரடநள ளை செயாஅin சுரடந) என்று கூறி நாடெங்கும் இதனை அம்பலப்படுத்தினர். காங்கிரசில் உறுப்பினராய்ச் சேர்ந்து அதன் உள்ளே இருந்து கொண்டே ‘ஹோம் ரூல்’ இயக்கத்தை அன்னிபெசன்ட் நடத்தினார். ஸ்மார்த்தப் பார்ப்பனர்களின் ஆதரவினைப் பெற்ற அன்னிபெசன்ட் நால்வருணக் கொள்கையை ஆதரித்து, சமஸ்கிருத வளர்ச்சி, இந்து மதப் பிரச்சாரம் ஆகியவற்றை முன்னின்று நடத்தினார். ஆரிய கலாச்சாரத்தைக் காக்க வந்த அவதாரமாக தன்னை நினைத்துக் கொண்டு செயல்பட்டார்.

1916      

திராவிடர் சங்கத்தின் சாதனைகளில் ஒன்று, டாக்டர் நடேசனார் அவர்களின் பெருமுயற்சியால், பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு என அமைக்கப்பட்ட ‘திராவிடர் இல்லம்’ (னுசயஎனையைn ழடிரளந) எனும் விடுதியாகும். வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து பட்டப் படிப்புப் படிக்க வரும் பார்ப்பனரல்லாத மாணவர்கள், உணவுக்கும் தங்குவதற்கும் விடுதி வசதியின்றி இடையூறுகளுக்கு ஆளாயினர். பார்ப்பன விடுதிகளில் இவர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. எனவே, இவர்களின் நலன் காக்கும் பொருட்டு ‘திராவிடர் இல்லம்’ எனும் விடுதியானது, ஜூலை மாதத்தில், திருவல்லிக்கேணி அக்பர் சாயபு தெருவிலுள்ள விசாலமான கட்டிடத்தில் நடேசனாரின் திறமையான நிர்வாகத்தின் கீழ் அமைக்கப்பட்டது. இந்த விடுதியானது வெளியூரிலிருந்து படிக்க வரும் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு நல்லதொரு புகலிடமாக அமைந்தது.

பார்ப்பனரல்லாத தலைவர்களான நாயரும், தியாகராயரும் ஒருவருக்கொருவர் மன வேற்றுமைக்கு உட்பட்டிருந்தது வலிமையுடன் கூடிய பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றுவதற்குத் தடையாக இருந்தது என்றே சொல்லலாம். இவர்கள் இருவரும் மனக்கசப்புக்கு ஆளானதற்குக் காரணமான (சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த), பழைய சம்பவம் ஒன்று உண்டு. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் எதிரில் உள்ள தெப்பக்குளம் அசுத்தமாகி, நோய் பரப்பும் இடமாக இருந்து வந்ததால் அதனை மண்கொட்டி மூடி அங்கோர் பூங்காவை நிறுவலாம் என்று நாயர்,  சென்னை நகராட்சியில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். வைதீக நெறியில் ஆழ்ந்த பற்றுள்ள தியாகராயர் அதிர்ச்சியுடன் வெகுண்டு, நாயரை எதிர்த்துச் சாடியதோடு தீர்மானத்தைத் தோல்வியுறச் செய்தார். பகுத்தறிவுவாதியான நாயரும், தியாகராயரும் அன்று முதல் கீரியும் பாம்புமாக மாறினார்கள்.

பார்ப்பனரல்லாதார் இயக்க நலன் கருதி இவர்கள் இருவரையும் ஒன்று சேர்க்க நடேசனார் பெரிதும் முயன்று வந்தார். இதற்கிடையில் பார்ப்பனியத்தின் நயவஞ்சகம், ஆணவம் ஆகியவற்றின் நேரடித் தாக்குதலுக்கு இவ்விரு தலைவர்களும் ஆளாக நேர்ந்த நிகழ்ச்சிகள் அவ்விருவரையும் எதிர்பாரா வகையில் ஒன்று சேர்த்தது! இவ்வாண்டு சென்னை சட்டசபையிலிருந்து ஒருவரை டில்லி சட்டசபைக்கு அனுப்ப வேண்டிய தேர்தல் வந்தது. நாயர் வேட்பாளராக நின்றார். பெரும்பான்மையாக இருந்த பார்ப்பன உறுப்பினர்கள், கடைசி நேரம் வரை நாயரையே ஆதரிப்பதாக நடித்து, தேர்தலின்போது இவரை எதிர்த்து நின்ற வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி என்ற பார்ப்பனரின் பெயரை முன்மொழிந்து தேர்ந்தெடுத்து, நாயரைத் தோற்கடித்தனர். பார்ப்பன சுய ஜாதிப் பற்றின் ஆழத்தையும் அகலத்தையும் எடைபோட அது ஓர் அரிய வாய்ப்பாக அவருக்கு அமைந்தது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு மற்றெல்லாரையும்விட அதிகத் தொகையாகிய ரூ.10 ஆயிரம் நன்கொடையாக அளித்த தியாகராயரை, கும்பாபிஷேக விழாவுக்குச் சென்றபோது மேடையில் உட்கார வைக்காமல், கீழே உட்கார வைத்தார்கள். இவரின் அலுவலகத்தில் பணிபுரியும் சிப்பந்திப் பார்ப்பனர் உள்பட பார்ப்பன நீதிபதிகள், அதிகாரிகள் மேடையில் இருக்க, தன்னை அலட்சியப்படுத்திய பார்ப்பன ஜாதித் திமிரை சகிக்க முடியாத தியாகராயர் அந்த இடத்தைவிட்டு அகன்று நேரே நாயரின் பங்களாவுக்குக் காரை விடச் சொன்னார். டிரைவருக்கோ, ஆச்சரியம்! கீரியும் பாம்புமாக இருந்த இரு பெரும் மேதைகளும் கட்டித் தழுவினர்! கண்ணீர் வடித்தனர்! பார்ப்பன எத்தர்களின் போக்குக்குச் சாவுமணி அடிப்பதைத் தவிர இனி வேறு பணியில்லை என்று முடிவு செய்தனர். திட்டம் தீட்டினர். நடேசனார் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கலானார்.

அன்னிபெசன்டின் ஹோம்ரூல் இயக்கப் பணிகள் செப்டம்பரில் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் பார்ப்பனரல்லாத இனத்திற்கு பெரும் பாதிப்பு நிகழக்கூடும் என்கிற நியாயமான அச்சம், பார்ப்பனரல்லாதார் பெரிய அளவில் ஒன்றுபட்டு ஓர் இயக்கமாக இணைந்து இயங்க வேண்டியதன் இன்றியமை யாமையினை உணர்த்திற்று.

இந்த முயற்சியின் விளைவாக, நவம்பர் 20இல் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டி.எத்திராஜ (முதலியார்) வீட்டில் நடேசனார், தியாகராயர், நாயர் உள்பட ஏறத்தாழ 30 பார்ப்பனரல்லாத பிரமுகர்கள், நாடெங்கிலும் இருந்து வந்து கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். (“விக்டோரியா பப்ளிக் ஹாலில்” கூடியதாக ஒரு கருத்து இருக்கிறது) அவர்களுள் பனகல் அரசர், நாகை பக்கிரிசாமி, சர். ஏ. இராமசாமி (முதலியார்), சேலம் எல்லப்பன், தஞ்சை அப்பாசாமி (வாண்டையார்), கரந்தை உமாமகேஸ்வரன் (பிள்ளை), மதுரை எம்.டி.சுப்பிரமணியம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். இக் கூட்டத்தில் “தென்னிந்திய மக்கள் சங்கம்” (ளுடிரவா ஐனேயைn ஞநடியீடநள யளளடிஉயைவiடிn) என்ற பெயரில் ஒரு ஜாயிண்ட் ஸ்டாக் கம்பெனி துவக்குவது என்றும், அதன் சார்பில், பார்ப்பனரல்லாதார் நலனுக்காக வாதாடும் நோக்குடன் நாளிதழ் வெளியிடுவது என்றும், அதன் சார்பில், பார்ப்பனரல்லாதார் நலன்களைப் பேணிக் காப்பதற்கென்று ஓர் அரசியல் கட்சியைத் துவக்குவது என்றும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி முதல் கட்டமாக “தென்னிந்திய மக்கள் சங்கம்” (ளுடிரவா ஐனேயைn ஞநடியீடநள யளளடிஉயைவiடிn) என்ற பெயரில் ஒரு ஜாயிண்ட் ஸ்டாக் கம்பெனி  ஒன்று சென்னையில், ஒரு பங்கு ரூ.100 வீதம் 1000 பங்குகளைக் கொண்ட மூலதனத்துடன் ஆரம்பமானது. இதற்கெனச் சொந்தக் கட்டடம் ஒன்றும் வாங்கப்பட்டது. (பிளாசா தியேட்டர் இருந்த இடம்) உபரிச் செலவுகளுக்கு இராஜா ரங்கராவ் பகதூர் என்ற டேலாப்பூர் ஜமீன்தார் கடன் கொடுத்து உதவினார். இக்காலகட்டத்தில் தியாகராயர் “நான் பிராமின்” (சூடிn-க்ஷசயாஅin) என்ற ஆங்கில இதழுக்கு ஆசிரியராகவும், நாயர் ‘ஆண்டி செப்டிக் (ஹவேi-ளுநயீவiஉ) என்ற மருத்துவ இதழுக்கு ஆசிரியராகவும் விளங்கி வந்தனர்.

தென்னிந்திய மக்கள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் சர். பி.தியாகராயர் கையொப்பமுடன் டிசம்பர் 20இல் ‘பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை’ (கூhந சூடிn-செயாஅin ஆயnகைநளவடி) வெளியிடப்பட்டது. வரலாற்று புகழ்மிக்க அவ்வறிக்கையில் பார்ப்பனரல்லாதாரின் நிலைமை, பார்ப்பனர் எவ்வாறு பல்வேறு துறைகளிலும் விகிதாச்சாரத்துக்கும் கூடுதலாக ஆக்ரமித்துக் கொண்டுள்ளார்கள் என்ற விளக்கம், பார்ப்பனரல்லாதார் இனி என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரை ஆகியவை இடம் பெற்றிருந்தன. இவ்வறிக்கை, அலெக்சாண்டர் கார்டியூ (1913) இராயல் கமிஷனின் முன் அளித்த பார்ப்பனரல்லாதார் நிலை குறித்த தகவல்களையும் விரிவாக எடுத்துக் காட்டி விளக்கியது. ‘சுய ஆட்சி’ (ழடிஅந சுரடந) என்பதைப் பார்ப்பனரல்லாதார் ஆதரிக்கவில்லை என்பதையும் அவ்வறிக்கை தெளிவாக்கியது.

1917      

“தென்னிந்திய மக்கள் சங்கம்” சார்பில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் நாளிதழ்கள் வெளி வந்தன. ஆங்கில நாளிதழ் ‘ஜஸ்டிஸ்’ (துரளவiஉந) பிப்ரவரி 27இல்  வெளியிடப்பட்டது. இவ்விதழுக்கு ஆசிரியராகப் பணியாற்ற சி.கருணாகர மேனன் ஒப்புக் கொண்டிருந்தார். அன்னிபெசன்ட் சர். சி.பி. இராமசாமி (அய்யர்), கேசவ (பிள்ளை) ஆகியோர் குறுக்கிட்டு அவரைத் தடுத்தனர். எனவே ‘ஜஸ்டிஸ்’ நாளிதழ் வெளிவர 6 நாட்களே இருக்கும் நிலையில் கருணாகரமேனன் ‘பல்டி’ அடித்து ஆசிரியராக இருக்க மறுத்து விட்டார். பின்னர், நாயரே கவுரவ ஆசிரியர் ஆனார். ‘மதராஸ் ஸ்டாண்டர்ட்’ பத்திரிகையின் ஆசிரியராய் இருந்த பி.ராமன் (பிள்ளை) துணை ஆசிரியர் ஆனார். தமிழ் நாளிதழ் ‘திராவிடன்’ ஜூன் மாதத்திலிருந்து வெளிவரத் துவங்கியது. இவ்விதழின் ஆசிரியராக என். பகவத்சலம் (பிள்ளை), துணை ஆசிரியர்களாக சாமி ருத்ர கோடீஸ்வரர், பண்டித வில்வபதி (செட்டியார்) ஆகியோர் பணியாற்றினர். ஏற்கெனவே நடைபெற்று வந்த (நிறுவியது 1885இல்) ‘ஆந்திரப் பிரகாசிகா’ என்ற தெலுங்கு வார இதழின் உரிமையைப் பெற்று, நாளிதழாக மாற்றி அதுவும் நடத்தப்பட்டது. இந்த தெலுங்கு நாளிதழின் ஆசிரியராக ஏ.சி. பார்த்தசாரதி (நாயுடு), துணை ஆசிரியர்களாக, பண்டித கானாலா ராகவையா (நாயுடு), நரசிம்மராவ் (நாயுடு) ஆகியோர் இருந்தனர்.

தென்னிந்திய மக்கள் சங்கத்தின் சார்பில் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ (ளுடிரவா ஐனேயைn டுiநெசயட குநனநசயவiடிn) என்ற அரசியல் கட்சி அக்டோபரில் அமைக்கப்பட்டு, அதன் சட்ட திட்டங்கள் வெளியிடப் பட்டன. (1916இல் தெ.இ.ந.உ. சங்கம் துவக்கப்பட்டாலும் அமைப்பு ரீதியாக சட்ட திட்டங்களுடன் இவ்வாண்டு செயல்படத் துவங்கியது) தென்னிந்தியாவில் உள்ள பார்ப்பனரல்லாத எவரும் இதில் உறுப்பினராக ஆகலாம் என்பது இச்சட்ட திட்டத்திலுள்ள ஒரு முக்கிய விதி ஆகும். இந்த காலகட்டத்தில், பார்ப்பனரல்லாதாரின் இன எழுச்சியைத் தூண்டும் வகையில் நாடெங்கிலும் பார்ப்பனரல்லாதார் மாநாடுகள் நடைபெற்றன. ஆகஸ்டு 19இல் பனகல் அரசர் தலைமையில் கோவையிலும், அக்டோபர் 27-28இல் எம். வெங்கடரத்னம் தலைமையில் கோதாவரி மாவட்டம் பிக்காவோவிலும்; நவம்பர் 3-4இல் பாரிஸ்டர் கே.சுப்பாரெட்டி தலைமையில் ராயல்சீமா-புலிவெந்தலா-விலும், நவம்பர் 11,12இல் தியாகராயர் தலைமையில் பெஜவாடாவிலும், டிசம்பர் 9இல் புதுக்கோட்டை இளவரசர் கே.எஸ்.துரைராஜ் தலைமையில்  சேலத்திலும் பார்ப்பனரல்லாதார் மாநாடுகள் எழுச்சியுடன் நடைபெற்றன.

மேலும், நவம்பர் 3இல் திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை மாவட்ட தமிழ்த் தலைவர்கள் மாநாடு திருநெல்வேலியில் தெலப்ரோல் ஜமீன்தார் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாடுகள் அனைத்திற்கும் சிகரமாக, டிசம்பர் 28-29இல் சென்னை மவுண்ட்ரோடு (அன்றைய பெயர்) வெலிங்டன் தியேட்டரில் சென்னை மாகாண முதலாவது தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாடு நடைபெற்றது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பது அது நடத்தி வந்த ‘ஜஸ்டிஸ்’ என்ற ஆங்கில நாளிதழின் பெயரால் ‘ஜஸ்டிஸ் கட்சி’ (துரளவiஉந ஞயசவல) என்று ஆங்கிலத்திலும் அதன் மொழி பெயர்ப்பென ‘நீதிக்கட்சி’ என்றும் அழைக்கப் பெற்றது.

நீதிக்கட்சியின் வளர்ச்சியைக் கண்ட காங்கிரஸ் கட்சியினர், தமது கட்சியிலுள்ள பார்ப்பனரல்லாதாரை திருப்தி செய்யவும், பார்ப்பனர் அல்லாதார் நலனில் காங்கிரசுக்கும் அக்கறையுள்ளது என்பதாகக் காட்டிக் கொள்ளவும், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு பார்ப்பனர் அல்லாதார் அமைப்பினை ‘சென்னை மாகாண சங்கம்’ (ஆயனசயள ஞசநளனைநnஉல ஹளளடிஉயைவiடிn) என்ற பெயரில் தோற்றுவிக்கலாயினர். இதன் அமைப்புக் கூட்டம் செப்டம்பர் 15இல் கூட்டப்பட்டு, அடிதடி ரகளையில் முடிந்தது. அதன்பின் மீண்டும் செப்டம்பர் 20இல் கூட்டப்பட்டு, இதன் அமைப்பாளர் கேசவ பிள்ளையால் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ‘பார்ப்பனரல்லாதாருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் சீர்திருத்தம் அமைய வேண்டும் என்று மாண்டேகுவிடம் கூறுதல்’ இச்சங்கத்தின் நோக்கம் என்பதாக அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ‘சென்னை மாகாண சங்கம்’ என்பது மதுரைப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் உண்டான ஒரு சங்கம் என்று நீதிக்கட்சியினர் எடுத்துக் கூறினர். ‘இந்து’ நாளிதழ் இச்சங்கம் மிகவும் அவசியமானது என்று எழுதியது. சென்னை மாகாணச் சங்கத்தின் தலைவராக திவான் பகதூர் குத்தியப்பட்டு கேசவ (பிள்ளை) என்பவரும், துணைத் தலைவர்களாக, லார்ட் கோவிந்ததாஸ், சல்லா குருசாமி (செட்டி), தந்தை பெரியார் என்று பின்னாளில் அழைக்கப்பெற்ற ஈ.வெ.இராமசாமி (நாயக்கர்), நாகை பக்கிரிசாமி, சீர்காழி சிதம்பர (முதலியார்). தஞ்சை சீனிவாசம் (பிள்ளை), ஜார்ஜ் ஜோசப் ஆகியோரும், செயலாளராக டாக்டர் பி.வரதராஜுலு (நாயுடு)வும், பொறுப்பாளர்களாக டி.வி.கோபாலசாமி (முதலியார்), திரு.வி.க., சர்க்கரை (செட்டியார்), குருசாமி (நாயுடு) ஆகியோரும் இருந்தனர்.

சென்னை மாகாண சங்கத்துக்காக ஆங்கிலத்திலும் தமிழிலும் நாளிதழ்கள் தோற்றுவிக்கப்பட்டன. சி.கருணாகர மேனன், தான் நடத்தி வந்த ‘இந்தியன் பாட்ரியட்’ (ஐனேயைn ஞயவசடிவை) எனும் நாளிதழை இச்சங்கத்திற்கு வழங்கியதோடு, தாமே ஆசிரியராகவும் இருந்து வந்தார். ‘தேச பக்தன்’ என்ற பெயரில் தமிழ் நாளிதழ் ஒன்று டிசம்பர் 7இல் துவக்கப்பட்டு, திரு.வி.க.வை ஆசிரியராகக் கொண்டு நடைபெற்றது. இச்சங்கத்தின் தலைமையிடம் சென்னையில் அமைந்தது. தமிழகம் முழுவதும் 20 இடங்களில் கிளைகளும், 2 ஆயிரம் உறுப்பினர்களும் இருந்தனர். இச்சங்கம் நூற்றுக்கு அய்ம்பது விழுக்காடு பதவிகள் பார்ப்பனர் அல்லாதாருக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் செய்தது. இந்த தீர்மானம் கொண்டுவர மூலகாரணர் பெரியார் அவர்களே என்பது குறிக்கத்தக்க செய்தியாகும். சத்தியமூர்த்தி போன்ற காங்கிரஸ் பார்ப்பனத் தலைவர்களுக்கோ இச்செயல் வேதனையை அளித்தது.

திராவிடர் சங்கத்தின் பணியும் தொடர்ந்தது. நவம்பரில் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பட்டம் பெற்ற திராவிட மாணவர்கட்கு வழக்கம்போல் விருந்தும் பாராட்டும் நடைபெற்றது. நாயரின் வேண்டுகோளுக்கிணங்க அலெக்ஸாண்டர் கார்டியூ தலைமை வகித்து, திராவிட மாணவர்கள் கல்வியில் நாட்டம் செலுத்த வேண்டுமென்றும், நாட்டிற்கு நற்றொண்டு செய்ய வேண்டுமென்றும், அறிவுரைகளும், பாராட்டும் வழங்கினார். பனகல் அரசர், பித்தாபுரம் ராஜா, பவானந்தம் பிள்ளை, கே.வி.ரெட்டி, தியாகராயர், ஜஸ்டிஸ் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்க, நடேசனார் வாழ்த்துச் செய்திகளை வாசித்தார். ‘அரசு தலைமைச் செயலாளரான கார்டியூ விழாவுக்கு தலைமை வகித்தது கண்டிக்கத்தக்கதென்றும், ஒரு சார்புடைய இச்சங்கத்தின் நலனில் கார்டியூ போன்ற அரசு அலுவலர்கள் அக்கறை கொண்டிருப்பது தேசிய உணர்ச்சிக்கு வெடி வைப்பதென்றும், அன்னிபெசன்டின் பார்ப்பன பத்திரிகையான ‘நியூ இண்டியா’ நவம்பர் 26இல் எழுதி ஓலமிட்டது.

முதல் உலகப் போரில் பிரிட்டிஷாருக்கு இந்திய மக்கள் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கியதைக் கருத்திற்கொண்டு நல்லொழுக்கத்தைக் காட்டும் அறிகுறியாக இந்திய மக்கள் தம்மைத் தாமே ஆண்டு கொள்ள பயிற்சி அளிக்கும் நோக்குடன் இந்தியத் துணைக் கண்டத்திற்கு  அதிக அதிகாரங்களைத் தர பிரிட்டிஷ் அரசாங்கம் முன் வந்தது. இதனை உணர்ந்து கொண்ட இம்பீரியல் கவுன்சில் உறுப்பினர்கள் 19  பேர் (ஜின்னா உள்பட பலர் இதில் கையெழுத்து இட்டுள்ளனர்) இந்தியர்களின் கோரிக்கையை விளக்கி ஓர் அறிக்கையை (கூhந ஆநஅடிசயனேரஅ டிக சூiநேவநநn) அன்றைய இந்திய வைஸ்ராய்-செம்ஸ்போர்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த அறிக்கையின் பயனோ என்று எண்ணுமளவிற்கு, இந்திய மந்திரி (ளுநஉசநவயசல டிக ளவயவந டிக ஐனேயை) மாண்டேகு ‘இந்திய அரசியலில் இந்தியர்களுக்கு அதிகப்படியான பங்களித்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு பொறுப்பாட்சி அளிப்பதே பிரிட்டிஷ் சர்க்கார் நோக்கம்’ என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு ஆகஸ்டு 20 நாளிட்ட இந்திய அரசின் விசேஷ கெஜட்டில் வெளி வந்தது. இந்த அறிக்கையைக் குறித்து மக்களின் கருத்தை அறிய இந்தியத் துணைக் கண்டம் முழுதும் சுற்றுப் பயணம் செய்த மாண்டேகுவும், செம்ஸ்போர்டும், டிசம்பர் 24இல் சென்னை வந்தனர். இவர்கள் முன் பார்ப்பனரல்லாதார் சார்பில் 4 வகையான தூதுக் குழுவினர் சாட்சிய மளித்தனர். கேசவ பிள்ளை தலைமையில் சென்னை மாகாண சங்கத்தின் சார்பில், ரெவரண்ட் டாக்டர் ஜே.லாசரஸ், எம்.சி.டி. முத்தையா (செட்டியார்), இலட்சுமி நாராயண (செட்டி), ஏ.என். பரசுராம (நாயக்கர்), மூக்கணாச்சாரி, வி. சக்கரை (செட்டியார்), கே.ஆஷர், பி. தாசர், எஸ்.ஏ. சிங்கு மற்றும் சிலர் அடங்கிய தூதுக் குழுவினர் சாட்சியம் அளித்தனர். ‘ஹோம் ரூல் கட்சியினரால் ஆதரிக்கப் பெற்ற 19 பிரதிநிதிகளின் அறிக்கையை ஆதரிப்பதாகவும், எல்லா சமூகத்திற்கும் பாதுகாப்பளிக்க வேண்டும்’ என்றும் அவர்கள் தமது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தனர்.

நீதிக்கட்சியின் சார்பாக, திவான்பகதூர் பி.இராஜரத்தின (முதலியார்) தலைமையில் தியாகராயர், நாயர் ஆகியோர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் சாட்சியமளித்தனர். இக்குழுவின் சார்பில் தியாகராயர் ஓர் அறிக்கையை மாண்டேகு-செம்ஸ்போர்டு முன் அளித்தார். பார்ப்பனரல்லாதார் எத்துறையிலும் முன்னேற்றமடையாமல் பின் தங்கியுள்ளனர். அரசியல் உணர்வு பெறாதவர்களாக உள்ளனர். இம்பீரியல் கவுன்சில் உறுப்பினர் அறிக்கையை (12 பேர் அறிக்கை) பிரிட்டிஷ் அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது, அதனை ஒப்புக் கொண்டால் பார்ப்பனரல்லாதார் பார்ப்பன சமூகத்திற்கு அடிமையாக நேரும். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டால் ஒழிய, பார்ப்பனரல்லாத மக்களுக்கு முன்னேற்றமும் நல்வாழ்வும் கிடைக்க முடியாது. தற்கால நிலையில் எல்லா சமூகங்களுக்கும் சமநீதி வழங்க வேண்டிய பிரிட்டிஷார் இன்னும் கொஞ்ச காலம் இந்தியாவில் இருந்தே தீரவேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘திராவிடர் சங்கம்’ சார்பில் பனகல் அரசர் தலைமையிலான குழுவினரும், பார்ப்பனரல்லாதார் சங்கத்தின் சார்பில் இராவ்பகதூர் வெங்கடரத்தினம் தலைமையிலான குழுவினரும், அதே கருத்துள்ள அறிக்கைகளை அளித்தனர். சென்னை மாகாண சங்கத்தின் தூதுக் குழுவைத் தவிர, ஏனைய மேற்கண்ட 3 தூதுக் குழுவில் இருந்த 50 பேர்களும் ஒன்றாக வைஸ்ராய்க்கும் இந்திய மந்திரிக்கும் அறிமுகம் செய்து வைக்கப் பட்டனர். இந்திய மக்களின் கருத்துகளைத் திரட்டிக் கொண்டு, மாண்டேகு இலண்டன் பயணமானார். அங்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய சீர்திருத்த அறிக்கையைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கினார்.

1918      

‘தேசிய’ பார்ப்பனக் காங்கிரஸ்வாதிகள், அவர்களின் கைவாளாகப் பயன்பட்ட அன்னிபெசன்டின் ஹோம்ரூல் இயக்கத்தின் யோக்கியதை, ஆகியவற்றை நீதிக்கட்சித் தலைவர்கள் அவ்வப்போது தோலுரித்துக் காட்டி வந்ததோடு பார்ப்பனரல்லாதார் இன எழுச்சியை தூண்டியும் வந்தனர்.

நாயரின் எழுத்துக்கள் அன்னிபெசன்ட் அம்மையாருக்கு குலை நடுக்கத்தை ஏற்படுத்தின. அன்னிபெசன்டின் வாழ்க்கை வளர்ச்சிகள் (நுஎடிடரவiடிn டிக யnnநை நௌயவே) என்று, நாயரால் எழுதப்பட்ட ஆங்கில நூல், அன்னிபெசன்டின் அரசியல் வீழ்ச்சிக்குப் பெருங்காரணமாய் அமைந்தது. இந்நூல் “டுநயன நெயவநச ளஉயனேயட டிக 1913” என்ற தலைப்பில் நாயரால் ‘மெயில்’ ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். அன்னிபெசன்ட்டுக்கும் லெட் பீட்டருக்கும் நடந்த கடிதப் போக்குவரத்தை அம்பலப்படுத்திட அவரின் ஊழல்களை வெட்ட வெளிச்சமாக்கியது. இதற்கென அன்னிபெசன்ட் நாயர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்து பெரிய (பாரிஸ்டர்) வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடினார். நாயர் வழக்கறிஞர் எவருமின்றி, தமது தரப்பு நீதியை மன்றத்தில் வாதாடி வென்றார். அம்மையார் தொடுத்த வழக்கு தள்ளுபடி ஆயிற்று.

பார்ப்பனர் தூண்டுதலால், காங்கிரசுக்குள் ஏற்படுத்தப்பட்ட ‘சென்னை மாகாண சங்கத்தை’ ஒழித்துக் கட்டும் உள்நோக்கத்தோடு, பார்ப்பன ஆதிக்கக் காங்கிரஸ்வாதிகள், ‘நேஷனலிஸ்ட் அசோஷியேசன்’ என்பதாக ஒரு சங்கத்தை ஏற்படுத்தினர். இதன் தலைவராக கஸ்தூரிரங்க அய்யங்கார், வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோரும், விஜயராகவாச்சாரியும், உபதலைவராக சி.இராஜகோபாலாச்சாரியும், தமிழ்நாட்டுக்குச் செயலாளராக பெரியார், மலையாளத்திற்கு கே.பி. கேசவமேனனும், ஆந்திராவுக்கு பிரகாசமும் இருந்தனர். இந்த நேஷனலிஸ்ட் அசோசியேஷனிலும் பெரியார் முயற்சியால் பார்ப்பனரல்லாதாருக்கு 50ரூ பிரதிநிதித்துவம் அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

மாண்டேகு-செம்ஸ் போர்டு சீர்திருத்த அறிக்கை சட்டமாக்கப்படு வதற்கு முன்னர், இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒரு கமிட்டியை அமைத்து, இந்தியாவிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களையும் தங்களது நோக்கங்களைச் சொல்லுவதற்காக இங்கிலாந்து வருமாறு அழைத்தது. நாயர் இக்கமிட்டியின் முன் பார்ப்பனரல்லாதார் சார்பில் கருத்துகளைச் சொல்ல இலண்டன் சென்றடைந்தார். ‘மாண்டேகு செம்ஸ்போர்டு’ அறிக்கையானது (சுநயீடிசவ டிn ஐனேயைn ஊடிளேவவைரவiடியேட சுநகடிசஅ) ஜூலை 2இல் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை, சீக்கியருக்கும் முஸ்லிம்களுக்கும் மட்டுமே பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் அமைந்திருந்தது. பார்ப்பனரல்லாதாருக்கும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சட்டமன்றத்தில் எந்த ஒதுக்கீடும் பிரதிநிதித்துவமும் இடம் பெறவில்லை. நாயர் இலண்டனில் இருக்கும்போதே வெளியான இவ்வறிக்கையை எதிர்த்து அவர் பேச இயலாவண்ணம் எந்தக் கூட்டத்திலும் பேசக் கூடாது என்று தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை ஆணையை ஒரு இராணுவ அதிகாரி நாயரிடம் நேரில் சென்று அளித்து ‘சர்வ்’ செய்தார். நாயர் சோர்வடையாமல் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தமது நண்பர்களை தனியே சந்தித்து, பார்ப்பனரல்லாதாருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டியதின் நியாயத்தை வலியுறுத்தியதோடு அவர்கள் உதவியோடு தடை ஆணையை நீக்கவும் முயற்சி செய்தார். ஏற்கெனவே இந்திய மாநிலங்களில் கவர்னர்களாக இருந்து பணியாற்றிய லாமிங்க்டன், சிடன்ஹாம், கார்மிசெல் (டுயஅஅiபேவடிn, ளுலனநnhயஅ & ஊயசஅiஉhநயட) ஆகியோர், ஜூலை 31இல் நடந்த பிரபுக்கள் சபையில் (ழடிரளந டிக டுடிசனள) நாயரின் அறிவாற்றலைப் புகழ்ந்தும், தடை ஆணையை நீக்கி நாயரைப் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் வாதிட்டனர். அதன் விளைவாக தடை ஆணை நீக்கப்பட்டு, ஆகஸ்டு 2இல் பிரபுக்கள் சபை, காமன் சபை உறுப்பினர்கள் அடங்கிய கூட்டத்தில் உரையாற்றினார். அந்த உரையில், மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்த அறிக்கையில் உள்ள ஊழலை எடுத்துக் காட்டி, வகுப்புவாரி உரிமையை வற்புறுத்தினார். பார்ப்பனரல்லாதாருக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் சட்டமன்றத்தில் தனித் தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தினார்.

மதுரையில் ‘பார்ப்பனரல்லாதார் மாநாடு’ அக்டோபர் 13இல் நிகழ்ந்தது. உத்தமபாளையம் ஜமீன்தார் எம்.டி.சுப்பிரமணிய (முதலியார்) வரவேற்புரை நிகழ்த்தினார். தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் பல மாநாடுகளிலும், பார்ப்பனரல்லாதாருக்கு பிரதிநிதித்துவம் அளிக்காத மாண்டேகு-செம்ஸ் போர்டு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவாக ஆங்கிலேய அரசு, ‘சவுத்பரோ கமிட்டி’ (ளுடிரவா bடிசடிரபா குசயnஉhளைந ஊடிஅஅவைவநந) என்ற பெயரில் ஒரு குழுவை ஏற்படுத்தி, வகுப்பு அடிப்படையில் தொகுதிகள் (நுடநஉவடிசயவந) அமைக்கலாமா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை தருமாறு பணித்தது.ந ண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்ததுபோல் இந்தக் குழுவில், வி.எஸ்.சீனுவாச சாஸ்திரி, எஸ்.என்.பானர்ஜி என்ற இரு பார்ப்பனர் இடம் பெற்றிருந்தனர்.

1919      

ஜனவரியில் நாயர் சென்னை திரும்பியதும், ‘சவுத் பரோ’ கமிட்டியைப் புறக்கணிக்கும்படி பார்ப்பனரல்லாதாரைக் கேட்டுக் கொண்டார். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கும் தனித் தொகுதிக்கும் விரோதமான கருத்துக் கொண்ட இரு பார்ப்பனர்கள் அடங்கிய இக்குழுவினரால் எந்த நியாயமும் கிடைக்காது என்று எடுத்துக் கூறினார். எதிர்பார்த்ததுபோலவே ‘சவுத்பரோ’ குழு வகுப்பு அடிப்படையில் சட்டமன்றத்தில் தொகுதி ஒதுக்கக் கூடாது என்று தீர்ப்புக் கூறிவிட்டது. ஆனால், இக்கமிட்டியின் முடிவை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. ‘மாண்டேகு-செம்ஸ்போர்டு’ மசோதா ஜூன் மாதம், இரண்டாவது முறையாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதற்கென நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற பொறுக்குக் குழு (துடிiவே ளுநடநஉவ ஊடிஅஅவைவநந)வின் முன் தங்கள் வாக்குமூலங்களை அளிக்க இந்தியாவிலிருந்து பல்வேறு அரசியல் கட்சிகளும், சங்கங்களும் இங்கிலாந்து சென்றிருந்தன. ஹோம்ரூல் இயக்கம், முஸ்லிம் லீக், காங்கிரஸ், சென்னை மாகாண சங்கம், நீதிக்கட்சி ஆகியவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை ஆகும். உடல்நலம் பெரிதும் குன்றியிருந்த போதிலும், கடமை உணர்ச்சி காரணமாக, நாயர் நீதிக்கட்சி சார்பில் பார்ப்பனர் அல்லாதார் நலனுக்காக வாதாடுவதற்காக இலண்டன் புறப்பட்டார். நடேசனாரிடம், “நான் மீண்டும் வரும் வரையில் போர்க்கொடி தாழாமல் பார்த்துக் கொள்க! நம் நீதிக் கட்சியை உங்களிடம் ஒப்படைத்துச் செல்கிறேன்!” என்று கூறினார். சென்னை சென்ட்ரல் புகைவண்டி நிலையத்தில் புறப்படுமுன், வழி அனுப்ப வந்த தனது நண்பர் புதுக்கோட்டை ராஜாவிடம் சொன்னார்: “நல்லது! நான் அதுவரை உயிருடன் இருப்பேன்!” இவரது குழுவினரான கே.வி.ரெட்டி, (கே. வெங்கடாரெட்டி நாயுடு), ஏ.ஆர்.முதலியார், கே.ஏ. அப்பாராவ் (நாயுடு), எல்.கே. துளசிராம் ஆகியோர் டாக்டர் நாயருடன் செல்லாது தனியே, பின்னர் இலண்டன் சென்று அடைந்தனர். பனகல் அரசர் அகில இந்திய நிலச்சுவான்தார் குழுவின் பிரதிநிதி என்ற பெயரில் இலண்டன் சென்றார். இலண்டன் அடைந்ததும், உடல்நலமற்ற நிலையிலேயே பாராளுமன்ற குழுவுக்கு முன் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கையை தயாரிக்க முயற்சி செய்தார். இதற்கிடையில் நாயர் உடல்நிலை மேலும் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கே.வி.ரெட்டியும், சர்.ஏ.இராமசாமி முதலியாரும் ஜூன் 21இல் இலண்டன் சென்று மருத்துவமனையில் நாயரைக் கண்டனர். அவர்களைக் கண்டதும் நாயர், “தங்களைக் கண்டது எனக்கு நிம்மதி” (ஐ குநநட சநடநைஎநன) என்று கூறினார். பிறகு கே.வி.ரெட்டியும், நாயரும் மருத்துவமனையிலேயே அறிக்கையைத் தயாரிக்க முனைந்தனர்.

இந்திய  சீர்திருத்த விஷயமாக நாயர் கொடுக்கப்போகும் சாட்சியமானது மிக முக்கியமானது என்று கருத்தறிவித்த சர்.தாமஸ் பார்கோ என்ற நாடாளுமன்ற உறுப்பினரின் தூண்டுதலின்படி படுக்கையிலிருந்த நாயரிடம் சாட்சியம் வாங்க ஜாயிண்ட் பார்லிமெண்ட் கமிட்டியார் ஒரு சிறப்புக் கமிஷனை நியமித்தனர். அந்த கமிஷன் ஜூலை 18இல் மருத்துவமனைக்கே சென்று சாட்சியம் பெற முடிவு செய்திருந்தது. எனினும் நாயரின் உடல்நிலை காரணமாக அன்று சாட்சியம் பெற முடியவில்லை. நீரிழிவு மற்றும் நிமோனியா நோய் கடுமையாகி, ஜூலை 19 அன்று காலை 5 மணியளவில் நாயர் முடிவு எய்தினார். அவரது உடல் இலண்டனில் ‘கோல்டெர்ஸ் கிரீன்’(ழுடிடனநசள ழுசநநn) என்ற இடத்தில் எரிக்கப்பட்டு ‘அஸ்தி’ சென்னைக்கு டாக்டர் ஏ.ஆர்.மேனன் என்பவரால் கொண்டு வரப்பட்டது. ‘அஸ்தி’யைக் கண்டு, பார்ப்பனர் அல்லாதார் குறிப்பாக ஆதி திராவிடர்கள் தங்கள் தளநாயகன் முடிவெய்தியதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அழுது புரண்டார்கள்! கண்ணீர் உகுத்தார்கள்! நாயர் மறைந்த செய்தி கேட்டு பார்ப்பனர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள்! திருவல்லிக்கேணி பெரிய தெரு பிள்ளையார் கோயிலில் பார்ப்பனர்கள் ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்தனர்! காஸ்மாபாலிடன் கிளப்பில் பார்ப்பன உயர்நீதிமன்ற நீதிபதிகளும், மற்றும் பெரும் பார்ப்பனப் புள்ளிகளும் மகிழ்ச்சி கூத்தாடினார்கள்! இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்கள்! அது மட்டுமா? நாயர் இலண்டனில் முடிவு எய்தியபோது, காங்கிரஸ் சார்பில் சுயராஜ்யம் கேட்டு வாதாடவும் நாடாளுமன்ற குழுவின் முன்பு சாட்சியம் சொல்லவும் சென்றிருந்த, சி.பி.இராமசாமி அய்யர், சுரேந்திரநாத் பானர்ஜி, திலகர், கோகலே, சத்தியமூர்த்தி, சரோஜினி (நாயுடு), லார்டு சின்ஹா இன்னும் பலர் இங்கிலாந்திலேயே இருந்தும், துக்கம் விசாரிக்கக்கூட செல்லவில்லை. இச்செயலானது, “காங்கிரஸ், தேசியத் திலகங்களின்” மனிதாபிமானமற்ற தன்மையையும், யோக்கியதையையும் வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டியது. காலஞ்சென்ற தலைவர் டாக்டர் நாயர் அவர்கள் ஒரு புரட்சி வீரர், சுயமரியாதை வீரர், அவரை ஒரு ‘திராவிட’ லெனின்’ என்று சொல்ல வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் பின்னாளில் கூறினார் என்றால் அவரின் புகழுக்கு வேறு என்ன சான்று வேண்டும்?

பாலக்காட்டில் பிறந்த தாரவாத் மாதவன் நாயர், மலையாளம் தந்த மாமேதை! சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பின், இங்கிலாந்து சென்று மருத்துத் துறையில் பட்டம் பெற்று, அங்கு ‘கிங்ஸ்’ மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக இருந்து, பேரும் புகழும் பெற்று, தாய்நாடு திரும்பி காது, மூக்கு, தொண்டை (ந.n.வ.) மருத்துவத்தில் தனக்கு நிகர் தானே என்றம், மருத்துவ மன்னன் என்றும் வெற்றிக்கொடி நாட்டியவர். இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்தபோது, காங்கிரசில் பற்று கொண்டு, தாதாபாய் நவ்ரோஜியை ஒரு பிரிட்டிஷ் பாராளுமன்றத் தொகுதியில் நிறுத்தி வெற்றி பெறச் செய்ததில் இவரது செல்வாக்கும் திறமையும் சேவையும் முக்கியப் பங்கு வகித்ததை நவ்ரோஜி உள்பட பல காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டியுள்ளார்கள் என்பதே இவரது ஆற்றலை விளக்குவதாக அமையும். காங்கிரஸ் என்பது தேசியப் போர்வையில் உள்ள ஒரு பார்ப்பனியக் கூடாரம் என்பதை உணர்ந்து, அதைவிட்டு வெளியே வந்தவர் டாக்டர் நாயர்!

அவர் ஒரு பகுத்தறிவுவாதி! சுயமரியாதை வீரர்! சிறந்த பேச்சாளர், நகைச்சுவை உணர்வுள்ளவர், சிறந்த எழுத்தாளர்! இவரின் வாதத் திறமையையும், பேச்சாற்றலையும் கண்டு, சி.இராஜகோபாலாச்சாரியார், விஜயராகவாச்சாரியார், திலகர், கோகலே, மாளவியா, மோதிலால் நேரு போன்ற  பார்ப்பன காங்கிரஸ் தலைவர்கள் குலைநடுக்கம் கொள்வார்களாம்!

இலண்டனில் நாயர் முடிவு எய்தியதும், கே.வி.ரெட்டி நாயுடுவும், ஏ.இராமாமி முதலியாரும் களத்தில் போராடும்போது, திடீர் என்று தளநாயகன் முடிவு எய்திவிட்ட நிலையில், கை பிசைந்து நின்றனர். நாடாளுமன்றக் குழுவின் முன் நீதிக்கட்சியின் சார்பாக, பார்ப்பனரல்லாதாருக்குப் பிரதிநிதித்துவம் கோரி வாதாட வேண்டிய பெரும் பொறுப்பு தன்மீது விழுந்ததை கே.வி.ரெட்டி உணர்ந்தார். நாயர் அவ்வப்போது சொன்ன கருத்துகளைத் தனது நாட்குறிப்பில் குறித்து வைத்திருந்தார். அதன் துணை கொண்டு, மாறும் சில புள்ளி விவரங்களின் துணை கொண்டும், இரவு பகலாக 10 நாள்கள் உழைத்து 18 பக்கங்கள் கெண்ட அறிக்கையைத் (ஆநஅடிசயனேரஅ) தயார் செய்தார். அங்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த நாயரின் நண்பர்களான வாட்னிஸ், லார்ட் சிடன்ஹாம் (றுயவநேலள, டுடிசன ளுலனநnhயஅ) ஆகியோர் உதவியினால், நாடாளுமன்றக் குழுவின் முன் சாட்சியம் சொல்ல வேண்டியதற்கான நடைமுறைகள் மற்றும் நெளிவு சுழிவுகளை அறிந்து கொண்டு, ஆகஸ்டு 12இல் நாடாளுமன்ற பொதுக்குழு முன்னர், சுமார் 5 மணி நேரம் வாதாடி, கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தக்கவாறு விடையளித்து, வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையை வலியுறுத்தியதோடு, வரலாற்றுப் புகழ்மிக்க தனது அறிக்கையையும் குழுவின் முன் வழங்கினார். தனது அறிக்கையின் தொடக்கத்திலேயே அவர் தெரிவித்திருந்ததாவது:

இந்தியா என்பதை ஒரு நாடாகக் கருத இயலாது. குறிப்பாக தென்னிந்தியாவில் பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் அடிப்படை யிலேயே இன வேறுபாடு உண்டு. முன்னவர், ஆரிய இனத்தைச் சார்ந்தவர். பின்னவர், திராவிட இனத்தைச் சார்ந்தவர். (“ஐனேயை உடிரடன nடிவ நெ உடிளேனைநசநன யள ய சூயவiடிn நளயீநஉயைடடல in ளுடிரவா ஐனேயை, வாநசந றயள, hந வநளவகைநைன ய யௌiஉ னகைகநசநnஉந வாயவ ளநயீநசயவநன க்ஷசயாஅiளே கசடிஅ சூடிn-க்ஷசயாஅiளே வாந கடிசஅநச றயள ஹசலயளே யனே வாந டயவநச னுசயஎனையைளே”)

கே.வி.ரெட்டி, பார்ப்பனரல்லாதவர் நிலை பற்றி நாடாளுமன்றக் குழுவின் முன் சாட்சியளிக்கும்போது கூறிய கருத்துகளில் ஒன்று வருமாறு: மதத்தின் பேராலும், வர்ணாஸ்ரம தர்மத்தின் பேராலும் சிதறுண்டு திணறும் பார்ப்பனரல்லாத மாபெரும் சமுதாயமானது, யானைப் பாகனிடம் அடங்கிப் போகப் பழக்கப்பட்ட யானைக்குச் சமமானது. சின்னஞ்சிறு குட்டிச் சமுதாயமான பார்ப்பனர், யானைப் பாகனைப்போல், பார்ப்பனரல்லாத பெரிய சமுதாயத்தைப் பன்னெடுங்காலமாக அடக்கி வைத்திருப்பதில் வல்லவர்கள், வஞ்சகர்கள். ஆனால், என்றேனும் ஒரு நாள் எதிர்த்து பாகனை விரட்டும் யானைப்போல, பார்ப்பனரல்லாதாரின் எழுச்சிக்கு பார்ப்பனர் கூடிப் பேசி முடிவு எடுக்க வேண்டும் என்றும், முடிவு ஏற்படாவிட்டால் நடுவர் குழுவின் தீர்ப்புக்கு (யசbவைசயசல உடிஅஅவைவநந) விட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட் டிருந்தது. இதனை வெற்றியாகக் கருதி நீதிக்கட்சித் தூதுக் குழு இலண்டனிலிருந்து இந்தியா திரும்பியது.

இந்த ஆண்டு சென்னை நகராட்சிக்கு முதன்முறையாக நடைபெற்ற தேர்தலில் தியாகராயர் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு நகராட்சியின் முதல் தலைவராகவும் ஆனார். வெல்லிங்கடன் சென்னை மாகாண கவர்னராக ஏப்ரல் 10இல் பதவியேற்றார். உறுப்பினராகச் சேராமலேயே காங்கிரஸ் தலைவர்களால் இழுக்கப்பட்டு, சென்ற சில ஆண்டுகளாக காங்கிரஸ் மாநாடுகளில் பங்கு கொண்டும், சென்னை மாகாணச் சங்கத்தில் சேர்ந்து பார்ப்பனரல்லாதாருக்குப் பதவிகளில் விகிதாச்சாரம் அளிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தும், பணியாற்றி வந்த பெரியார், இந்த ஆண்டுதான் காங்கிரசில் உறுப்பினராகச் சேர்ந்தார். காங்கிரஸ் சமூக சீர்திருத்தத்துக்குப் பாடுபடும் என்றும், வகுப்புரிமைக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாகவும், பதவி, உத்தியோகங்களில் 100க்கு 50 சதவீதம், பார்ப்பனரல்லாதாருக்கு ஒதுக்கி அளிக்கப்படும் எனவும், தேர்தலில் போட்டியிட்டு அரசியலைக் கைப்பற்றும் எண்ணம் காங்கிரசுக்கு இல்லை எனவும், காங்கிரசார் உறுதி கூறியதை நம்பி சமுதாய சேவைக்கு ஒரு வாய்ப்பு என்று கருதிக் காங்கிரசில் பெரியார் உறுப்பினர் ஆனார். தாம் வகித்து வந்த ஈரோடு நகர்மன்றத் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். திருச்சியில் நடைபெற்ற இராஜ்ய, மாகாண காங்கிரஸ் கான்பரன்சில் பெரியார் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

1920      

மாண்டேகு-செம்ஸ்போர்டு அறிக்கை தொடர்பாக, சட்டமன்றத்தில் பார்ப்பனரல்லாதாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்த சமரசப் பேச்சு, கவர்னர் வெல்லிங்டன் ஏற்பாடு செய்தபடி, ஜனவரி 13இல் நிகழ்ந்தது. இக்கூட்டத்தில் பார்ப்பனப் பிரதிநிதிகளும், நீதிக்கட்சி உறுப்பினர்களும், சென்னை மாகாண சங்கத்தினரும் கலந்துகொண்டு நடத்திய பேச்சு வார்த்தையில் எந்த உடன்பாட்டுக்கும் வர இயலாததால் நடுவர் தீர்ப்புக்குவிட முடிவு செய்யப்பட்டு, லார்ட் மெஸ்டன் (டுடிசன ஆநளவடிn) நடுவராக நியமிக்கப்பட்டார். அந்த நடுவர் பிப்ரவரி 18இல் பார்ப்பனரல்லாதார் பிரதிநிதிகளையும், பிப்ரவரி 19இல் பார்ப்பன பிரதிநிதிகளையும் மார்ச் 1இல் இரு தரப்பினரையும் சந்தித்துப் பேசினார். முடிவு ஏற்படவில்லை. பின் லார்ட்மெஸ்டன், மார்ச் மூன்றாவது வாரத்தில் தனது தீர்ப்பை (ஆநளவடிn’ள யறயசன) வழங்கினார். அவரது தீர்ப்பின்படி, பார்ப்பனர் அல்லாதாருக்கு 28 தொகுதிகள் (நகரப் பகுதி-3, கிராமப்பகுதி 25) ஒதுக்கப் பட்டன. 1919ஆம் ஆண்டு மாண்டேகு-செம்ஸ்போர்ட் சட்டப்படி, சென்னை மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் 132 ஆகவும், அதில் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய தொகுதிகள் 98 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்படக் கூடிய தொகுதிகள் 98இல் 65 தொகுதிகள் பொதுத் தொகுதிகள் எனவும் 33 தொகுதிகள் சிறப்புத் தொகுதிகள் எனவும் பிரிக்கப் பட்டன. இந்தப் பொதுத் தொகுதி 65இல் லார்ட் மெஸ்டன் தீர்ப்புப்படி, 28 தொகுதிகள் பார்ப்பனரல்லாதாருக்கு ஒதுக்கப்பட்டதோடு மீதி தொகுதிகளிலும் பார்ப்பனரல்லாதார் போட்டியிடலாம் என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்த அடிப்படையில் முதல் பொதுத் தேர்தல் நவம்பர் 20இல் நடைபெற்றது. இதில் நீதிக்கட்சியினருக்கும், ஹோம்ரூல் இயக்கத்தினருக்கும் கடும் போட்டி நிலவியது. இரட்டை ஆட்சி முறையை எதிர்த்து, காங்கிரஸ் தேர்தலில் கலந்து கொள்ளவில்லையாயினும் வாக்காளர்களைத் தடுத்தல், கழுதைகளின் கழுத்தில் எனக்கு ஓட்டுப் போடு என்று எழுதிய அட்டைகளைக் கட்டி, அதன் வாலில் காலி டின்களைக் கட்டி விரட்டிவிட்டு, காலித்தனம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.

சென்னை மாகாணத்தின் 98 தொகுதிகளில் பெரும்பான்மை பெற்று நீதிக்கட்சியினர் வெற்றி வாகை சூடினர். சட்டமன்றப் பெரும்பான்மைக் கட்சித் தலைவர் என்ற முறையில், கவர்னர் லார்ட் வெல்லிங்டன் முதன் மந்திரி பதவியேற்று, அமைச்சரவை அமைக்குமாறு தேர்தலில் நின்று பெருவெற்றி பெற்றவரும், நீதிக்கட்சித் தலைவருமான தியாகராயரைக் கேட்டுக் கொண்டார். ஆனால், தியாகராயர் பதவியேற்க மறுத்துவிட்டு, தனது கட்சிப் பிரமுகர்கள் மூவரின் பெயரைப் பரிந்துரை செய்து அமைச்சரவை அமைக்கச் செய்தார். தாம் பதவி ஏற்காமைக்கு (தனிப்பட்ட முறையில் தமக்கு பதவி ஆசை இல்லை என்பதை நிரூபிக்க) அவர் கவர்னருக்கு எழுதிய கடிதத்திலும், நேரிலும் சந்தித்துக் கூறிய கருத்துக்களின் சாரம் வருமாறு: “இந்திய வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லை எனும்படி, அரசியல் ஞானமற்ற பாமர மக்களைத் தட்டி எழுப்பிய பாவத்துக்காக என்னையும், அகால மரணமடைந்த என் அருமை சக தலைவர் டாக்டர் டி.எம்.நாயரையும், வெள்ளையனின் வால் பிடிப்பவர்கள் என்றும் வெள்ளையன் பூட்ஸ் காலை நக்குபவர்கள் என்றும் ‘செண்ட் பர்சண்ட்’ தேச பக்தர்களாக காந்தியார், இராஜகோபாலாச்சாரியார் போன்ற காங்கிரஸ் தலைவர்களாலும், அவர்களுடைய பத்திரிகைகளாலும், தூற்றப்படும் நான் இப்பதவியை ஏற்பேனேயானால், என் புனிதமான கட்சிக்குக் களங்கம் விளைவித்தவன் ஆவேன். அதனால் நான் பதவி ஏற்க மாட்டேன், மன்னிக்க வேண்டும்.

ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் அளவுக்குத் தன் குடும்பச் சொத்தை நீதிக்கட்சிக்காக செலவழித்த வள்ளலும், நாற்பது ஆண்டுகளாகச் சென்னை நகராட்சியில் உறுப்பினராக இருந்ததோடு, அதன் முதலாவது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராகவும் ஆன பெருமைக்குரியவரும், இந்திய ஜனநாயக வரலாற்றில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில், தனது உயிரினும் மேலாக நேசித்த நீதிக்கட்சி வெற்றி வாகை சூடியது கண்டு பூரித்துப் போனவரும், தனக்கென வாழா பிறர்க்குரியாளருமான சர்.பி.தியாகராயரின் இந்த அறிவிப்பு எதிரிகளையும் வியக்கச் செய்தது!

தியாகராயரால் பரிந்துரைக்கப்பட்ட மூவரும் அடங்கிய முதலாவது நீதிக்கட்சி அமைச்சரவை டிசம்பர் 17இல் பதவி ஏற்றது!

‘இந்திய ஜனநாயக வரலாற்றின் துவக்க ஆட்சி’ என்று வர்ணிக்கப்படும், நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவையில், கடலூர் ஏ.சுப்பராலு (ரெட்டியார்) முதல் அமைச்சராக இருந்து, கல்வி, மக்கள் நல்வாழ்வு ஆகிய துறைகளைக் கவனித்துக் கொண்டார். பனகல் அரசர் இரண்டாவது அமைச்சராக இருந்து, உள்ளாட்சித் துறை முதலிய சில துறைகளைக் கவனித்துக் கொண்டார். கே.வி.ரெட்டி நாயுடு, மூன்றாவது அமைச்சராக இருந்து, வளர்ச்சி முதலிய சில துறைகளைக் கவனித்துக் கொண்டார்.

சென்னை மாநகராட்சியில் நடேசனார் ‘பஞ்சமர்’ என்ற பெயரை நீக்கி, ‘ஆதி திராவிடர்’ என்ற பெயர் மாற்றி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். அதே நேரத்தில், காங்கிரசில் இருந்து வந்த பெரியார் தாம் பொது நிறுவனங்களில் வகித்து வந்த ஏறத்தாழ 29 பதவிகளையும் இராஜினாமாச் செய்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு உழைத்தார். திருநெல்வேலியில் நடைபெற்ற மாகாண காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானம் கொண்டு வந்தார். மாநாட்டுத் தலைவர் எஸ். சீனுவாச அய்யங்கார், வகுப்புரிமைத் தீர்மானத்துக்கு அனுமதி மறுத்தார்.

1921      

நீதிக்கட்சி அமைச்சரவை பொறுப்பேற்றபின், ஜனவரி 12இல் நடைபெற்ற முதல் சட்டமன்றக் கூட்டத்தை கன்னாட் பிரபு துவக்கி வைத்துப் பேசினார். இரண்டாவது சட்டமன்றக் கூட்டம் பிப்ரவரி 14இல் கவர்னரால் நியமிக்கப்பட்ட அவைத் தலைவர் பி.இராஜகோபாலாச் சாரியார் தலைமையில் கூடியது. சட்டமன்றத் துணைத் தலைவராக திவான் பகதூர் கேசவப் (பிள்ளை) நியமிக்கப்பட்டார். சென்னை மாகாண கவர்னர் லார்ட் வெல்லிங்டன் சட்டமன்றக் கூட்டத்தில், உறுப்பினர்களின் கடமைகள் குறித்து உரை நிகழ்த்தினார். அமைச்சர்களின் பார்லிமெண்டரி செயலாளர்களாக, ஆர்.கே. சண்முகம் (செட்டியார்), சர்.ஏ.இராமசாமி (முதலியார்), பாரிஸ்டர் தங்கவேலு (பிள்ளை) ஆகியோர் இருந்தனர். முதலமைச்சர் சுப்பராயலு (ரெட்டியார்) உடல்நலம் குன்றியதால் ஜூலை 11இல் பதவிப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். அதே நாளில் பனகல் அரசர் முதலமைச்சராகவும், கே.வி.ரெட்டி நாயுடு இரண்டாவது அமைச்சராகவும், ஏ.பி.பாத்ரோ மூன்றாவது அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.

இவ்வாண்டு ஜூன் மாதம் சென்னை பக்கிம்காம், கர்னாடிக் மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் மில் மூடப்பட்டது. ஆயிரக்கணக்கான தொழிலாளர் வேலை இழந்து பரிதவித்தனர். தொழிலாளரிடையே ஏற்பட்ட சச்சரவு, குழப்பத்தால், கலவரம் மூண்டு, தொழிலாளர் கூட்டத்தில் போலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக, ஆதி திராவிட தொழிலாளர்களுக்கும் ஏனைய சாதி திராவிடர்களுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, பெரும்பகையாக உருவெடுத்து, வீடுகளுக்குத் தீ வைத்தல், கொலை, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுதல், நாட்டு வெடிகுண்டுகளை வீசிப் படுகாயப்படுத்துதல் ஆகிய வன்முறைச் செயல்கள் நிகழ்ந்தன. இதுவே ‘புளியந்தோப்புக் கலவரம்’ என்று குறிப்பிடப்படுகிறது. நீதிக்கட்சி ஆட்சியில் தொழிலாளருக்கு எவ்வித இடையூறும் நிகழக் கூடாது என்று கருதி, தியாகராயர், நடேசனார், பனகல் அரசர் ஆகியோர், தொழிலாளர் பக்கம் நின்று போராடினார்கள். இந்த கலவரத்தில் எம்.சி.ராஜா என்னும் ஆதி திராவிடர் தலைவர், ஆதி திராவிடர் பக்கம் நின்று போராடினார். இந்த வேலை நிறுத்தத்தால் எழுந்த கலவரத்தைக் கண்டு கவர்னர் லார்டு வெல்லிங்டன் சினமடைந்து ஜூலை 7இல் திரு.வி.க. உள்பட தொழிலாளர் தலைவர்களை அழைத்து எச்சரித்ததோடு அவர்களை நாடு கடத்தவும் முடிவு செய்தார். நீதிக்கட்சி ஆட்சி இதை எதிர்த்ததோடு தொழிலாளர் பக்கமும் தொழிற்சங்கத் தலைவர்கள் பக்கமும் நின்றது. தியாகராயர், நீதிக்கட்சியின் சார்பில் கவர்னர் லார்ட் வெல்லிங்டனைச் சந்தித்து, திரு.வி.க. உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்களை நாடு கடத்தினால், நீதிக்கட்சி அமைச்சரவை இராஜினாமா செய்யும் என்று தெரிவிக்கவே, கவர்னரும் தமது நிலையிலிருந்து இறங்கி வந்து, நாடு கடத்தும் முடிவைக் கைவிட்டார். பின்னர், தொழிலாளர் கூட்டத்திடையே சென்று தியாகராயர் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புடையது; அந்த உரையைக் கேட்டபின், தொழிலாளர் மீண்டும் வேலைக்குத் திரும்பினர். இந்த வேலை நிறுத்தச் சமயங்களில் நீதிக்கட்சித் தலைவர்கள் நடேசனார், தியாகராயர் முதலானோர், ஆங்கிலேய அரசையும் எதிர்த்துக் கொண்டு தொழிலாளரிடையே சமரசப் பேச்சு நடத்தியதும், தொழிலாளர் நலனுக்காகப் பணியாற்றியதும், வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளாகும்.

இவ்வளவு உறுதிப்பாடுடைய நீதிக்கட்சியைத்தான் (ஹ்யூம்) காங்கிரஸ்  தேசிய திலகங்கள், வெள்ளையனுக்கு வால் பிடிப்பவர்கள் என்று பிதற்றித் திரிந்தனர்.

இவ்வாட்சியில் ‘பெண்களுக்கும் வாக்குரிமையளிக்க வேண்டும்’ என்று நீதிக்கட்சி உறுப்பினர் ஓ.தணிகாசலம் (செட்டியார்) சட்டமன்றத்தில் ஏப்ரல் 1இல் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன்படி ஆணையும் பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

“பார்ப்பனரல்லாதாருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய விகிதாசார அளவுக்கு உத்தியோகம் கிடைக்கும் வரையில் இனிமேல் அரசாங்க உத்தியோகங்கள் யாவும் பார்ப்பனரல்லாதாருக்கே கொடுக்கப்பட வேண்டும்” என்ற புரட்சிகரமான தீர்மானம் ஒன்றை ஆகஸ்டு 5இல் சட்டமன்றத்தில் டாக்டர் சி.நடேசனார் கொண்டு வந்தார். பின்னர் நீதிக்கட்சியினர் வேண்டுகோளின்படி தீர்மானத்தைத் திரும்பப் பெற்றார். எல்லா வகுப்பினருக்கும் உத்தியோகத்தில் சமநீதி வழங்கும் வகையில் ஏற்கெனவே ரெவின்யூ துறையில் இருக்கும் நடைமுறையை விரிவுபடுத்தி, எல்லா துறைகளிலும் அதைக் கடைபிடிக்குமாறு செப்டம்பர் 16இல் ஓர் ஆணையை நீதிக்கட்சி அரசாங்கம் (ஆ.சு.டீ. ஞரடெiஉ டீசனiயேசல ளுநசஎiஉந ழு.டீ. சூடி.613 னயவநன 16.9.21) பிறப்பித்தது. நீதிக்கட்சி ஆட்சியின் முதல் வகுப்புரிமை வழங்கும் ஆணை இதுவே ஆகும். பார்ப்பனரல்லாதாருக்கு அரசுப் பணியில் நுழைய ஓர் உத்திரவாதம் அளிக்கும் வகையில் அமைந்த முதல் அரசாணையான இது பார்ப்பன அதிகார வர்க்கத்தால் சரிவர அமுல்படுத்தப்படவில்லை. நீதிக்கட்சி அமைச்சரவையில் முதலமைச்சராக சில காலம் பணியாற்றிய ஏ.சுப்பராயலு (ரெட்டியார்) டிசம்பர் 21இல் முடிவெய்தினார்.

1922       இங்கிலாந்து இளவரசர் எட்வர்டு ஜனவரி 17 முதல் 22

வரை சென்னையில் சுற்றுப்பயணம் செய்தார். இவரது வருகையை காங்கிரஸ் புறக்கணித்தது; நீதிக்கட்சி வரவேற்றதுடன் சென்னை மாநகராட்சியில் வரவேற்பு இதழ் வாசித்தளிக்கவும் முடிவு செய்தது. சென்னைத் துறைமுகத்தில் இளவரசரை வரவேற்றுவிட்டு சீனா பஜார் வழியே காரில் வந்து கொண்டிருந்த தியாகராயரை காங்கிரஸ் காலிகள் வழிமறித்து காரிலிருந்து கீழே இழுத்துப் போட்டு, அம்முதிய தலைவரின் மேல் வெற்றிலைப் பாக்கு எச்சிலை காரித் துப்பியதோடு, தாக்கவும் முயன்றனர். தியாகராயர், அடுத்திருந்த பச்சையப்பன் பள்ளிக்குள் புகுந்து உயிர் தப்பினார். இதோடு நிற்காமல் காங்கிரஸ் ‘அகிம்சாவாதிகள்’ தண்டையார்பேட்டையில் இருந்த தியாகராயரின் பங்களாவுக்குள் புகுந்து கண்ணாடி ஜன்னல்களில் கல்லெறிந்து உடைத்தனர். பார்ப்பனியக் காங்கிரஸ் ‘தேசிய திலகங்களின்’ காலித்தனம் தலைவிரித்தாடியது, அப்போது!

சென்னை மாநகராட்சியில் எட்வர்ட் இளவரசருக்கு மாநகராட்சித் தலைவர், தியாகராயர் தலைமையில் வரவேற்பு அளிக்கும் விழா நடைபெற இருந்தது. அரச குடும்பத்தினருக்கு வரவேற்பு அளிக்கும்போது கறுப்பு ஆடை அணிதல் வேண்டும் என்ற ஆங்கிலேய சம்பிரதாயப்படி கறுப்பு ஆடை அணிந்து வரவேற்பு இதழ் வாசித்து அளிக்கும்படி, கவர்னர் லார்ட் வெல்லிங்டன் ‘வெள்ளுடை வேந்தர்’ தியாகராயரைக் கேட்டுக் கொண்டார். தனது இலட்சியங்களிலும் பழக்க வழக்கங்களிலும் பிடிவாதமான உறுதி கொண்டவரான தியாகராயர் கறுப்பாடை அணிய மறுத்ததோடு, மாநகராட்சி துணைத் தலைவரைக் கொண்டு வரவேற்பை வாசிக்க ஏற்பாடு செய்யும்படி ஆலோசனை கூறினார். கடைசியில், வெள்ளுடை அணிந்தே தியாகராயர் வரவேற்புரை வாசித்தளிக்க கவர்னர் இசைந்தார்.

நீதிக்கட்சியின், பனகல் அரசர் அமைச்சரவை, மார்ச் 25இல் ‘பஞ்சமர்’, ‘பறையர்’ என்ற சொற்களை நீக்கி, ஆதி திராவிடர் என்றே இனி அழைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதனை அமுல்படுத்தியது. வேலை வாய்ப்போடு அன்றி பதவி உயர்விலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற ஓர் ஆணையை நீதிக்கட்சி ஆட்சி ஆகஸ்டு 15இல் வெளியிட்டது. (ஆ.சு.டீ. ஞரடெiஉ டீசனiயேசல ளுநசஎiஉந ழு.டீ. சூடி.658 னயவநன 15.8.22) இதுவே ‘நீதிக்கட்சி ஆட்சியின் இரண்டாவது வகுப்புரிமை ஆணையாகும். அரசாங்க உத்தியோகங்களுக்கு ஆட்கள் தேவைப்படும்போது அந்தந்த இலாகாக்களே, நேர்முகமாக நியமித்துக் கொள்ளும் நடைமுறையால், வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை சரியாக கண்காணித்து அமுல்படுத்திட இயலாததோடு, பார்ப்பனர்களே அம்முறையினால் பயன்பட்டு வந்தமையால் ஸ்டாஃப் செலக்ஷன் போர்டு (ளுவயகக ளுநடநஉவiடிn bடியசன) ஒன்றை அரசு நியமித்தது. இதிலும் பார்ப்பனர் புகுந்துகொண்டு செயலிழக்கச் செய்து வந்தனர். இதனைச் சுட்டிக் காட்டியும், வகுப்புரிமையை வற்புறுத்தியும் அவ்வப்போது நடேசனார் உரையாற்றி சட்டமன்றத்தில் பேசி வந்தார்.

சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலுள்ள அரசு தலைமைச் செயலகத்தில் பார்ப்பனர்களே நிரம்பி வழிவதால், ஒரு சமநிலை ஏற்படுத்துவதற்காக இன்னும் 3 ஆண்டு காலத்துக்கு பார்ப்பனரல்லாதார் சமூகத்திலிருந்தே தலைமைச் செயலகத்தில் அரசு அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற தீவிரமான ஒரு தீர்மானத்தை சென்னை சட்டமன்றத்தில் நீதிக்கட்சி உறுப்பினர் ஓ. தணிகாசலம் (செட்டியார்), முன்மொழிய நடேசனார் வழிமொழிந்தார். இத் தீர்மானம் சட்டமன்றத்தில் பார்ப்பனர் மனம் பதைபதைக்க நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாகாணத்தில் இருந்த அரசு கல்லூரிகளின் தலைமை ஆசிரியர்கள் பெரும்பாலோர், பார்ப்பனர்களாகவே இருந்தமையால், பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு, கல்லூரியில் இடம் கிடைப்பது அரிதாக இருந்தது. இந்த நிலையை அகற்ற ஒவ்வோர் அரசுக் கல்லூரியிலும், ‘செலக்ஷன் போர்டு’ ஏற்படுத்தி எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ள வகை செய்யும் ஆணையை நீதிக்கட்சி அரசு பிறப்பித்தது. இந்துக் கோயில்களிலும் மடங்களிலும் பார்ப்பனர் ஏகபோகமாக நிரம்பிக் கொள்ளையடித்து வருவதைக் கட்டுப்படுத்தவும், இந்நிறுவனங்களில் உள்ள உபரி நிதியை, மக்கள் நல்வாழ்வு கருதி பொதுநலக் காரியங்களுக்குச் செலவிட வகை செய்யும் நோக்கத்துடனும், நீதிக்கட்சி அரசால் தயாரிக்கப்பட்ட, இந்து அறநிலையப் பாதுகாப்பு மசோதா, டிசம்பர் 6இல் வெளியிடப்பட்டது.

திருப்பூரில் நடைபெற்ற 28ஆவது தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொண்டு வந்த பெரியார், அங்கு நடைபெற்ற விவாதத்தின்போது, “மனுதர்ம சாஸ்திரத்தையும் இராமாயணத்தையும் கொளுத்த வேண்டும்!” என்று முழங்கினார்.

1923       சென்னை பல்கலைக்கழக செனட்டின் உறுப்பினர்

எண்ணிக்கையை அதிகப்படுத்தியும் எல்லா வகுப்பினருக்கும் பொது நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்கும்படி வகை செய்யும் சென்னை பல்கலைக்கழகச் சட்டம் (ஆயனசயள ருniஎநசளவைல யஉவ டிக 1923) நீதிக்கட்சி அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது. நடேசனார் மார்ச் மாதம் சட்டமன்றத்தில் பேசும்போது, ‘ஆதி திராவிடர் நலனைக் காக்க வேண்டும்’ என்று ஓங்கிய குரலில் வலியுறுத்தினார். ‘ஆதி திராவிடர்கள் வரி கொடுக்கும் சக்தியில்லாதவர்களாக இருக்கலாம். ஆனால், நாட்டின் செல்வ உற்பத்தியை பெருக்கித் தரும் மக்கள் அவர்களே’ என்று நடேசனார் கருத்து தெரிவித்தார்.

இந்து அறநிலையத் துறை பாதுகாப்பு மசோதாவானது ஏப்ரல் மாதத்தில் பனகல் அரசரால் சென்னை சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு இருப்பதை உணர்ந்த வைசிராய் ரீடிங் என்பவர், இந்து அறநிலைய மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கத் தயங்கி தாமதப்படுத்தி வந்தார். சென்னை மாகாண கவர்னர் லார்டு வெல்லிங்டன் வைசிராயிடம் இந்த மசோதாவின் நியாயங்களை விளக்கி இதற்கு அனுமதி அளிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார்.

சேலத்தில் நடைபெற்ற 29ஆவது தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாட்டில், பெரியார் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இத்தீர்மானத்தினால், மாநாட்டில் கலகம் ஆகும்போல் தெரியவே, ஜார்ஜ் ஜோசப்பும், வரதராஜுலு (நாயுடுவும்) தீர்மானத்தை நிறைவேற்றாமல் நிறுத்தி விட்டனர். இதேபோல வகுப்புரிமைத் தீர்மானங்களை பெரியார், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளிலும் கொண்டு வந்தார். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இரண்டாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. நீதிக் கட்சியினரும், ஹோம்ரூல் இயக்கத்தின் போர்வையில் காங்கிரஸ்காரர்களும் போட்டியிட்டனர்.

நீதிக்கட்சியின் கொள்கைக்கு முரணாக பனகல் அமைச்சரவை நடந்ததாகக் கூறிய நடேசனார், நீதிக்கட்சியை எதிர்த்து சுயேச்சையாக இத் தேர்தலில் நின்றார். தியாகராயர், பனகல் அரசர் போன்ற கட்சித் தலைவர்களுடன் நடேசனார் முரண்பாடு கொண்டார்; தம்மை நீதிக்கட்சி புறக்கணித்ததாகக் கருதினார். தேர்தலில் நீதிக்கட்சி பெரும்பான்மை பெற்று வென்றது. நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவை நவம்பர் 19இல் பதவி ஏற்றது. பனகல் அரசர் முதலமைச்சர் பொறுப்பேற்று உள்ளாட்சித் துறையைக் கவனித்துக் கொண்டார். ஏ.பி.பாத்ரோ, இரண்டாம் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கல்வி மற்றும் பொதுப் பணித் துறையைக் கவனித்துக் கொண்டார். சென்ற அமைச்சரவையில், தமிழர் ஒருவர்கூட இடம் பெறவில்லை என்று எதிர்ப்பும் அதிருப்தியும் தோன்றியதால் இந்த இரண்டாவது அமைச்சரவையில் கே.வி.ரெட்டி (நாயுடு)க்குப் பதிலாக டி.என். சிவஞானம் (பிள்ளை) மூன்றாவது அமைச்சராகப் பொறுப்பேற்று வளர்ச்சித் துறையைக் கவனித்துக் கொண்டார். இத்தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்ற நடேசனார், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினருடன் உட்கார்ந்துகொண்டு, நீதிக்கட்சியின் கொள்கையை தீவிரப்படுத்தும்படி அவ்வப்போது அரசாங்கத்தை வற்புறுத்தியும், சூடாகப் பேசியும் வந்தார். நீதிக்கட்சியை விட்டு வந்தாலும், அதன் கொள்கையைவிட்டு வரவில்லை என்று அவர் கூறி வந்தார்.

பனகல் அமைச்சரவை மீது வெறுப்புற்றிருந்த சி.ஆர்.ரெட்டி, நவம்பர் 23இல் சட்டமன்றத்தில் அமைச்சரவை மீது ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அத்தீர்மானத்தை நடேசனார் ஆதரித்தார். ஆனால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியுற்றது. கவர்னரால் நியமிக்கப் பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டமன்ற அவைத் தலைவராக இருந்து வந்த பி.இராஜகோபாலாச்சாரியார், டிசம்பர் 15இல் பதவியினின்று ஓய்வு பெற்றார்.

1924       நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவை பதவியேற்ற

பின், முதல் சட்டமன்றக் கூட்டம் மார்ச் 23இல் கூடியது. இதுவரை கவர்னரால் நியமனம் செய்யப்பட்டு வந்த சட்டமன்ற அவைத் தலைவரின் பதவிக்கு முதன்முறையாக தேர்தல் நடைபெற்று எல்.டி.சாமிக் கண்ணு (பிள்ளை) அவைத் தலைவராகவும், கேசவ (பிள்ளை) துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இடையில் அமைச்சர் டி.என்.சிவஞானம் (பிள்ளை) முடிவு எய்தியமையால் எஸ்.குமாரசாமி (ரெட்டியார்) அமைச்சரானார். சென்னை மாநில கவர்னர் வெல்லிங்டன் பதவிப் பொறுப்பை விட்டு ஏப்ரல் 11இல் விலகியதும், ஏப்ரல் 12, 13 ஆகிய இரு நாள்கள் சார்லஸ் டோடண்டர் (ஊhயசடநள கூடினரவேநச) தற்காலிகக் கவர்னராக இருந்த, பின் ஏப்ரல் 14இல் கோஷன் (ஏளைஉடிரவே ழுடிளாநn) பொறுப்பேற்றார். இந்து அறநிலையப் பாதுகாப்பு மசோதா ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை ஆதரித்து பெரியார் தமிழ்நாடெங்கும் பிரச்சாரம் செய்தார்.

பம்பாய் மாகாணம் பெல்காமில், அகில இந்திய பார்ப்பனரல்லாதார் முதல் காங்கிரஸ் மாநாடு, சர்.ஏ.இராமசாமி (முதலியார்) தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பார்ப்பனக் காங்கிரசின் ‘சுயராஜ்ய’த் தில்லுமுல்லுகள் அம்பலப்படுத்தப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் கேரளத்தில் உள்ள ஈழவர் முதலான தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து வைக்கம் சென்று பெரியார் போராடி வெற்றி பெற்று ‘வைக்கம் வீரர்’ என்றும் புகழப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் நிதி உதவியின் கீழ் வ.வெ.சு, அய்யர், சேரன் மாதேவி குருகுலத்தில் ‘பார்ப்பனர்-பார்ப்பன ரல்லாதார்’ என பிள்ளைகளிடையே பேதம் காட்டி கீழ்மைப் படுத்தியமைக் கண்டு உளம் கொதித்து, குருகுலத்துக்கான நிதி உதவியை பெரியார் நிறுத்தியதுடன், பார்ப்பனரின் கொடுமைகளையும் தோலுரித்துக் காட்டினார்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற 30ஆவது தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாட்டில் தானே தலைவராக இருந்து பெரியார் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். எஸ். சீனிவாச அய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார் ஆகியோர் சென்னையிலிருந்து ஏராளமான ஆட்களைக் கூட்டி வந்து, கலாட்டா செய்து, தீர்மானத்தைத் தோல்வியுறச் செய்தனர். அத்தோடு, இந்த மாநாட்டில் அந்த இரண்டு பார்ப்பனர்களும், நீதிக்கட்சியையும், தியாகராயரையும், அளவுக்கு மீறித் தாக்கிப் பேசினார்கள். இதைக் கண்டு சினமுற்ற பெரியார், (தானே தலைவராக இருந்ததால், தான் பேசாது) மாநாட்டுக்கு வந்த பார்ப்பனரல்லாத தலைவர்களான, வெங்கிட கிருஷ்ண (பிள்ளை), அண்ணாமலை (பிள்ளை) ஆகியோரை விட்டு தியாகராயரைத் தாக்கிய மேற்கண்ட இரண்டு பார்ப்பனர்களுக்கும் வட்டியும் முதலுமாக சரியான பதிலடி கொடுக்கச் செய்தார்.

1925       பார்ப்பனர், மதவாதிகள் ஆகியோரின் கடும் எதிர்ப்புக்

கிடையே, முதலமைச்சர் பனகல் அரசரின் பெருமுயற்சி யால் இந்து அறநிலையப் பாதுகாப்பு மசோதாவுக்கு வைஸ்ராயின் அனுமதி கிடைத்தது, ஜனவரி 27இல் சட்டமாக அமுலுக்கு வந்தது. திராவிட இனத்தைத் தட்டியெழுப்பிய மேதையும், திராவிட இயக்கத் தோற்றுநர்களில் ஒருவருமான தியாகராயர் ஏப்ரல் 28இல் முடிவு எய்தினார். திராவிட இனம், கண்ணீர் வடித்துக் கதறியது. தியாகராயர் மறைந்து நான்காம் நாளில் மே 2இல் சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவத்தை நமது நாட்டு மக்களுக்கு உண்டாக்கும் நோக்கத் தோடு ‘குடிஅரசு’ எனும் வார இதழை வெளியிட்டு, திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகள் உரையாற்றினார். நீதிக்கட்சி அமைச்சரவையில் அவைத் தலைவராக இருந்த எல்.டி.சாமிக்கண்ணு (பிள்ளை) முடிவு எய்தவே, அக்டோபர் 28இல் பேராசிரியர் எம்.இரத்தினசாமி, சட்டமன்ற அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அமைச்சரவையின் சாதனைகளில் ஆந்திரப் பல்கலைக்கழகத்தை நிறுவியதையும், மருத்துவக் கல்வியை ஆங்கிலேயரை எதிர்த்துக் கொண்டு இந்திய மயமாக்கியதையும் குறிப்பிட்டுக் கூறலாம்.

முன்னைய மத்திய மாகாணத்தைச் சேர்ந்த அமராவதி என்ற ஊரில் இவ்வாண்டு பனகல் அரசர் தலைமையில் ‘அகில இந்திய பார்ப்பனரல்லாதார் இரண்டாவது மாநாடு’ கூடி, அம்மாகாண மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஊட்டியது. இப்படியே விட்டுவிட்டால் வடநாடெங்கும் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி பரவிவிடும் என்று அஞ்சிய இராஜகோபாலாச்சாரியார், மோதிலால் நேரு, மாளவியா ஆகிய காங்கிரஸ் பார்ப்பனத் தலைவர்கள் காந்தியாரிடம் முறையிடவே, அவரும் வல்லபாய் படேலை பம்பாய்க்கும் மத்திய மாகாணத்துக்கும் அனுப்பி, அங்குள்ள பார்ப்பனரல்லாத பிரமுகர்களைக் கண்டு சமாதானப்படுத்தச் செய்தார். வல்லபாய் படேல், பார்ப்பனரல்லாதார் பிரமுகர்களைக் கண்டு, “இப்படியெல்லாம் தென்னாட்டவர் தலைமையில் நடக்கும் இயக்கத்துக்குள் ஈடுபடுவது தென்னாட்டுத் தலைமையை ஏற்பது வடநாட்டுக்கு அவமானமல்லவா? உங்கள் (பார்ப்பனரல்லாதார்) இனப்பங்கை சுயராஜ்யம் வந்தபின் தராமற் போவோமா?” என்று இங்கிதம் பேசி, “அகில இந்திய பாhர்ப்பனரல்லாதார் இயக்கம்” மேலும் வடநாட்டில் வளர விடாமல் அணை போட்டுத் தடுத்து விட்டார்.

காஞ்சிபுரத்தில் நவம்பர் 21, 22இல் திரு.வி.க. தலைமையில் நடைபெற்ற 31ஆவது ராஜீய காங்கிரஸ் மாநாட்டின் இரண்டாவது நாளில் பெரியார் வகுப்புரிமைக் கோரும் இரண்டு தீர்மானங்களைக் கொண்டு வந்தார். திரு.வி.க. பார்ப்பனர் சூழ்ச்சிக்குப் பயந்து “பொது நன்மைக்காக இத்தீர்மானங்களை அங்கீகரிக்க முடியாது” என்று கூறி அனுமதி மறுத்தார். “காங்கிரசால் பார்ப்பனரல்லாதார் நன்மை பெற முடியாது! காங்கிரசை ஒழிப்பதே இனி எனது வேலை” என்று மாநாட்டிலேயே எழுந்து கூறிவிட்டு, பெரியார் வெளியேறினார். உடனே, ஒரு பெருங்கூட்டம் அவருடன் மாநாட்டை விட்டு வெளியேறிவிட்டது. இவ்வாறு வெளியேறிய இந்த நாளைத்தான் சுயமரியாதை இயக்கம் முகிழ்த்த நாளென்று கருதப்படுகின்றது. இம்மாநாட்டிற்கு நீதிக்கட்சிப் பிரமுகர்களான ஏ.இராமசாமி (முதலியார்), ‘திராவிடன்’ ஆசிரியர் ஜே.எஸ்.கண்ணப்பர், சி.இராமலிங்க (ரெட்டி), ஆர்.கே.சண்முகம் (செட்டியார்) மற்றும் டி.ஏ.இராமலிங்கம் (செட்டியார்) ஆகியோரும் பார்வையாளர்களாக வருகை புரிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு நாள்களிலும் பெரியாரின் முயற்சியால் காங்கிரஸ் மற்றும் நீதிக்கட்சியிலுள்ள பார்ப்பனரல்லாத தலைவர்களின் கூட்டம் தனியே நடைபெற்றது. இதற்கு டி.ஏ.இராமலிங்கம் (செட்டியார்) தலைமை வகித்தார். இக்கூட்டங்களின் முடிவில் பார்ப்பனரல்லாதாருக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிக்க வற்புறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1926       பெரியார் நடத்திய ‘வைக்கம்’ போராட்ட எதிரொலியாக

பிப்ரவரி 4இல் தீண்டப்படாதார் கோயில் நுழைவுக் கிளர்ச்சி சுசீந்திரத்தில் நடைபெற்றது. பெரியார் ஆதரவுக் குரல் கொடுத்தார். ‘தமிழிற்கு துரோகமும் இந்தியின் இரகசியமும்’ என்ற கட்டுரையை ‘குடிஅரசு’ இதழில் எழுதி, இந்தியத் துணைக் கண்டத்தில் முதன்முதலாக இந்தி புகுத்தப்படுவதால் ஏற்படும் கேட்டினை முன்கூட்டியே பெரியார் எச்சரித்தார்.

இவ்வாண்டு நவம்பரில் 3ஆவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. ‘சுயராஜ்ஜியக்’ கட்சியின் போர்வையில் காங்கிரசும், நீதிக்கட்சியும் போட்டி யிட்டன. சி.இராஜகோபாலாச்சாரி உள்பட பார்ப்பனர்கள் சுயராஜ்ஜியக் கட்சிக்கு மறைமுகமாக வேலை செய்தனர். பெரியார் இத்தேர்தலில் ஒதுங்கியிருந்து பார்ப்பனரல்லாதார் நன்மைக்குப் பாடுபடுவோர் வெற்றி பெற்று வரட்டும் என்று விரும்பியிருந்தார். இத்தேர்தலில் நீதிக்கடசியைத் தொலைத்துவிட்டு, சுயராஜ்யக் கட்சியின் பேரால், பார்ப்பனர்கள் மந்திரி பதவிகளில் அமர வேண்டும் என்பதற்காகவே முயற்சிக்கிறார்கள் என்பதை பெரியார் உணர்ந்தார். “அரசியலில் பார்ப்பனரை ஒரு போதும் நம்பாதீர்கள்!” எனும் தியாகராயர் மொழியின் உண்மையை உணர்ந்தார். இனி பார்ப்பனரல்லாதார் நன்மைக்கே தீவிரமாக உழைப்பது என்று உறுதி கொண்டார்.

இத்தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியுற்றது. பெரும்பான்மை பெற்ற சுயராஜ்ஜியக் கட்சியினருள் ‘யார் முதன் மந்திரி?’ என்ற குழப்பம் மேலீட்டால் அமைச்சரவை அமைக்கப்படவில்லை. பெரும்பான்மையற்ற நிலையில், பிறர் உதவியுடன் பனகல் அரசரும் அமைச்சரவை அமைக்க விரும்பவில்லை. இந்நிலையில் நீதிக்கட்சி அமைச்சரவை அமைக்கும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்று அஞ்சிய சுயராஜ்ஜியக் கட்சியினர், நீதிக்கட்சியிலிருந்து டாக்டர் சுப்பராயனைப் பிரித்து, ‘சுயேச்சைக் கட்சி’ (ஐனேநயீநனேநவே ஞயசவல) என்பதாக ஒன்றை உற்பத்தி செய்து, அமைச்சரவை அமைக்கச் செய்து அதைப் பின்னிருந்து தாங்கினர்; ஆங்கிலேயரும் இதற்கு ஆதரவு நல்கினர். காரணம், மருத்துவத் துறையை, ஆங்கிலேயரது எதிர்ப்புக்கிடையே, பிடிவாதமாக பனகல் அரசர், இந்திய மயமாக்கியதேயாகும். இதனால் ஆங்கிலேயர் வெறுப்புற்றிருந்தனர். சுப்பராயனை தன் பக்கம் இழுத்துவிட்டதாகக் கருதிய சுயராஜ்ஜியக் கட்சியினர், அவர் அவ்வளவு எளிதில் ஏமாறக் கூடியவர் அல்ல என்பதைப் பின்னால் உணர்ந்து கொண்டனர்.

சுயேச்சை அமைச்சரவை டிசம்பர் 4இல் பதவியேற்றது. பி.சுப்பராயன் முதலமைச்சராக இருந்து கல்வி மற்றும் உள்ளாட்சித் துறைகளைக் கவனித்துக் கொண்டார். சுயராஜ்ஜியக் கட்சிக்காரர்களாக ஏ.ரங்கனாத (முதலியார்), இரண்டாவது அமைச்சராகவும் (வளர்ச்சித் துறை), மூன்றாவது அமைச்சராக ஆர்.என்.ஆரோக்கியசாமி (முதலியார்) மக்கள் நல்வாழ்வுத் துறையையும் கவனித்துக் கொண்டனர்.

நீதிக்கட்சித் தலைவர் பனகல் அரசர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து அரும்பணியாற்றினார். சுயராஜ்ஜியக் கட்சியின் ஆசீர்வாதம் பெற்ற அமைச்சரவையாக இருந்தாலும், பனகல் அரசரின் அறிவுமிக்க ஆலோசனைகளையே டாக்டர் சுப்பராயன் நாடுவார்.

தேர்தலில் தோல்வியடைந்ததும் நீதிக்கட்சியினர் படுத்துவிட்டனர்; அரசியல் வாழ்வு அவ்வளவுதான் என்று சிலர் ஒதுங்கினர். பெரியார், நீதிக்கட்சியினருக்கு ஊக்கமூட்டி, ‘தோல்வியும் நன்மைக்கே!’ என்று அறிவுரை புகன்று பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு உண்மையாகப் பாடுபட வேண்டிய தருணம் இதுவே என்றும் கூறி பாடுபட வேண்டினார். நாடெங்கும், சுற்றுப் பயணம் செய்த பார்ப்பனரல்லாதார் இன எழுச்சியைத் தூண்டி பிரச்சாரம் செய்தார்.

இதன் விளைவாக, மதுரையில் டிசம்பர் 25, 26இல் பார்ப்பனரல்லாதார் மாநாடு பெரிய அளவில் மிகவும் எழுச்சியுடன் ஏ.பி.பாத்ரோ தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டை உத்தமபாளையம் பெருநிலக்கிழார் எம்.டி.சுப்பிரமணிய (முதலியார்) கூட்டினார். பல காங்கிரஸ்காரர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். வ.உ.சிதம்பரம் (பிள்ளை), சாத்தூர் சுப்பிரமணிய (நயினார்), ஜார்ஜ ஜோசப் ஆகியார் கலந்து கொண்டனர். நீதிக் கட்சித் தலைவர் பனகல் அரசர் பெரியார் படத்தைத் திறந்து வைத்து அவரது சமுதாயத் தொண்டைப் புகழ்ந்தார்.

1927       மூன்றாவது பொதுத் தேர்தலுக்குப் பின் அமைந்த சுப்பராயன்

அமைச்சரவை பதவியேற்ற பிறகு, சட்டமன்ற உறுப்பினர் களின் முதல் கூட்டம் ஜனவரி 24இல் கூடியது. சட்டமன்ற அவைத் தலைவராக சி.வி.எஸ். நரசிம்மராஜூலுவும், துணைத் தலைவராக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உலகிலேயே முதன்முதலாக ஒரு பெண் உறுப்பினர் சட்டமன்ற துணைத் தலைவராக ஆனது. இந்த அமைச்சரவையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக சாமி. வெங்கடாசலம் (செட்டி)யும் துணைத் தலைவராக சத்தியமூர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த முதல் சட்டமன்றக் கூட்டத்தில் கவர்னர் கோஷன் உரை நிகழ்த்தினார்.

சென்னைப் பல்கலைக்கழக செனட்டு உறுப்பினர் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்றும், பல்வேறு பொது நிறுவனங்களிலிருந்தும் இதற்குப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கக்கூடாது என்றும், இப்படியாக பல காரணங்களைச் சொல்லி சென்னைப் பல்கலைக்கழகச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் சத்தியமூர்த்தி மார்ச் 30இல் ஒரு திருத்த மசோதாவைக் கொண்டு வந்தார். பார்ப்பனரல்லாதாருக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் இருந்த சென்னைப் பல்கலைக்கழகச் சட்டத்தை எப்படியும் திருத்தி பார்ப்பனர் உள்நுழைய வகை செய்யவே சத்தியமூர்த்தி இந்த திருத்த மசோதாவைக் கொண்டு வந்திருக்கிறார் என்று சட்டமன்றத்தில் நீதிக்கட்சி உறுப்பினர் குமரசாமி (செட்டியார்) சுட்டிக்காட்டி அம்பலப்படுத்தினார்.

“பல்கலைக்கழக அங்கத்தினர் தன் வெள்ளைத் துப்பட்டியிலிருந்து பூனைக் குட்டியை வெளியே எடுத்துப் போட்டுவிட்டார்! கல்வியாளர்கள் என்று தங்களைக் கருதிக் கொள்ளும் ஒரு வகுப்பாரை பல்கலைக் கழகத்துக்குள் புகுத்திக் கொள்ளும் ஒரு முயற்சி இந்த மசோதா” என்றார்.

கோவையில் ஜூலை 2, 3 நாள்களில், எஸ்.குமரசாமி (ரெட்டியார்) தலைமையில் பார்ப்பனரல்லாதார் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு திரு.வி.க., டாக்டர் வரதராஜுலு, சர். ஆ.கே. சண்முகம், சுரேந்திரநாத் ஆர்யா போன்றோர் வந்திருந்தனர். இம்மாநாட்டுக்கு வந்த நீதிக்கட்சியினர் காங்கிரசில் சேர்ந்து அதனைக் கைப்பற்ற வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்தனர். பெரியார் இதனை எதிர்த்தார். இறுதியில், காங்கிரசில் விருப்பமுள்ளவாகள் சேரலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் பிடிக்காமல் நடேசனார், கே.வி.ரெட்டி நாயுடு ஆகியோர் நீதிக்கட்சியை விட்டுப் பிரிந்து அக்கட்சிக்குள்ளேயே சட்டவரம்புக்குட்பட்ட கட்சியொன்றை ஏற்படுத்திக் கொண்டனர். பெரியார், ‘திருக்குறள்’, புத்தர் கொள்கையை பரப்பலானார். தமது பெயருக்குப் பின்னிருந்த ‘நாயக்கர்’ எனும் சாதிப் பட்டத்தைப் பெரியார் துறந்தார். ‘திராவிடன்’ நாளிதழின் ஆசிரியராக செப்டம்பர் முதல் சில காலம் இருந்தார்.

1928       சுயராஜ்யக் கட்சியினர் சட்டமன்றத்தில் ஜனவரி 28இல்

சைமன் கமிஷனைப் புறக்கணிக்க வேண்டுமென்று கொண்டுவந்த தீர்மானத்தை முதலமைச்சர் சுப்பராயன் ஏற்காததால் அமைச்சரவையில் பிளவு ஏற்பட்டது. இதனால் சுயராஜ்யக் கட்சி மந்திரிகளான ஏ. ரங்கனாத (முதலியார்), ஆர்.என். ஆரோக்கியசாமி (முதலியார்) ஆகியோர் மார்ச் 8இல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவே சுப்பராயன் நீதிக்கட்சியின் உதவியை நாடிப் பெற்றார். அதன்படி எஸ்.முத்தையா (முதலியார்) மக்கள் நலத்துறை, எம்.ஆர். சேதுரத்தினம் (அய்யர்) வளர்ச்சித் துறை ஆகிய இரு அமைச்சர்கள் மார்ச் 16இல் பதவியேற்றனர். புதிய அமைச்சர்கள் பதவியேற்ற நான்காம் நாளே சுயராஜ்யக் கட்சியினர் அமைச்சரவை மீது ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்; ஆனால், தீர்மானம் தோல்வியடைந்தது. சுயராஜ்யக் கட்சியிலிருந்து விடுபட்டதும் சுப்பராயன் அமைச்சரவை பார்ப்பனரல்லாதாருக்கு அடுக்கடுக்கான பல நன்மைகளை செய்தது. இவ்வரசு வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை (ழு.டீ.ஆள.சூடி.1880 நுனரஉயவiடிn னுயவநன 15.9.1928 யனே ழு.டீ.’ள னுயவநன 27.2.1929 யனே 29.8.1929) ஏற்றுக் கொண்டது குறித்து பெரியார் மகிழ்ந்தார். இதற்கு மூலக்காரணமான அமைச்சர் எஸ்.முத்தையா முதலியாரை பெரியார் புகழ்ந்தார். ‘திராவிடன்’ இதழ் போதிய விற்பனையின்றியும் பொருளாதாரத் தட்டுப்பாட்டிலும் இருந்ததால் ஏப்ரல் 1 முதல் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பெரியாரிடம் ஒப்படைக்கப் பட்டது. ‘ரிவோர்ட்’ (சுநஎடிடவ) எனும் ஆங்கில இதழை நவம்பர் 7இல் (இரஷ்யப் புரட்சி நாள்) பெரியார் தொடங்கி நடத்தினார்.

கர்ப்பத்தடை பற்றி முதன்முதலாக பெரியார் பேசியும் எழுதியும் வந்தார். நீதிக்கட்சித் தலைவர், பனகல் அரசர் டிசம்பர் 15இல் முடிவு எய்தினார். சித்தூர் மாவட்டம், காளாஸ்திரியில் 9.7.1866இல் பிறந்த இவரின் முன்னோர்கள், குண்டூர் மாவட்டத்தில் உள்ள “பனகல்லு” என்ற கிராமத்திலிருந்து வந்தவர்கள் ஆவார்கள். பின்னர் இவர்கள் காளாஸ்திரியில் குடியேறினர். நெடிய உருவமும் நீலப்பட்டுத் தலைப்பாகையும், கூர்த்தமதியும், ஆளுமைத் திறமையும் கொண்ட பனகல் அரசர் தனது ஆட்சியில் பார்ப்பனரல்லாத மக்களுக்குச் செய்த நன்மைகள் ஏராளம். “அபார சாணக்கியன்” என்று சர். சி.பி.இராமசாமி அய்யராலேயே புகழப்பட்டவர் பனகல் அரசர். வழக்கம் போலவே பார்ப்பனர், பனகல் அரசர் மறைவு செய்தி கேட்டு மகிழ்ச்சிக் கூத்தாடினர். பனகல் அரசர் மறைவால் மனமுடைந்த பார்ப்பனரல்லாதாரைப் பெரியார் தேற்றினார். சுப்பராயன் அமைச்சரவையின் மற்றொரு சாதனை டிசம்பர் 21இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம், சிதம்பரத்தில் தமிழருக்கென ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவ வழி செய்ததாகும். (ஆதி திராவிடர்) தாழ்த்தப்பட்டவரை குறிப்பிட்ட அளவில் பள்ளிக்கூடங் களில் சேர்த்துக் கொண்டால்தான் கல்வி மான்யம் வழங்கப்படுமென ஆணை பிறப்பிக்கப்பட்டது, சுப்பராயன் அமைச்சரவை காலத்திய சாதனையாகும்.

1929       இந்தியர்களுக்கு அரசியல் உரிமை அளிப்பது குறித்து

வருகை தந்த ‘சைமன் கமிஷன்’ உறுப்பினர்கள் பிப்ரவரி 18இல் சென்னை வந்தனர். நீதிக்கட்சியும், பெரியாரும் ‘சைமன் கமிஷன்’ வருகையை வரவேற்றனர். சுயராஜ்ஜியக் கட்சியினர் எதிர்த்தனர். நகரெங்கும் காலித்தனம், கடை அடைப்பு முதலிய செயல்களில் ஈடுபட்டனர்.

சுப்பராயன் அமைச்சரவை, ‘சைமன் கமிஷனை’ வரவேற்றது. சென்னை மாநகராட்சித் தலைவர் ஏ.இராமசாமி (முதலியார்) ‘சைமன் கமிஷனுக்கு’ விருந்தளித்துக் கவுரவித்தார். அந்த விருந்துக்கு காங்கிரஸ் கவுன்சிலர்களை அழைக்கவில்லை என்று குற்றம் சாட்டி, சத்தியமூர்த்தி, புர்ராகி, சத்தியநாராயணா ஆகிய இரு பார்ப்பன ‘தேசிய’ திலகங்களும், கார்ப்பரேஷன் கூட்டத்தில் ஏ.இராமசாமி (முதலியார்) மீது செருப்பை வீசினர்!

சைமன் கமிஷன் முன் மார்ச் 1இல் தோன்றி நீதிக்கட்சி சார்பில், சர்.ஏ.டி.பன்னீர்செல்வமும், சர்.ஏ.இராமசாமி (முதலியாரும்) சாட்சியமளித்தனர். திராவிட இயக்க வரலாற்றில் ஒரு மைல் கல் எனும் முக்கியத்துவம் வாய்ந்த செங்கல்பட்டு முதல் தமிழ் மாகாண சுயமரியாதை மாநாடு பிப்ரவரி 17, 18இல் பெரியார் பெருமுயற்சியால் சிறப்புற நடைபெற்றது. இம்மாநாட்டின் தலைவர் டபிள்யூ.பி.ஏ. சவுந்திரபாண்டியன் ஆவார். முதலமைச்சர் சுப்பராயன் உள்பட அமைச்சர்கள், நீதிக்கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறை அறிஞர்களும், இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். வரலாற்றுச் சிறப்பு மிக்கதும் புரட்சிகர மானதுமான 34 தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேறின. இம்மாநாட்டுக் கெனவே, தனியே ஒரு புகைவண்டி நிலையம் ‘தியாகராயர்’ பெயரால் ஏற்படுத்தப்பட்டதும் இம்மாநாட்டின் சிறப்பை உணர்த்தும். இம்மாநாட்டு முடிவுகள் பல நீதிக்கட்சி வைதீகர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் சமுதாய சீர்திருத்தத்தில் மேம்போக்காகவே இருந்தனர்.

சென்னை மாகாண கவர்னர் கோஷன் பதவியினின்றும் நீங்கியபின் கவர்னராக நார்மன் எட்வர்ட் ஜூன் 30இல் பதவிப் பொறுப்பேற்று நவம்பர் 11 வரை நீடித்தார். அடுத்த கவர்னராக ஸ்டான்லி, நவம்பர் 12இல் பதவிப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அக்டோபர் 5-6இல் நெல்லூரில் நீதிக்கட்சியின் மாநாடு நடைபெற்றது. பி.முனுசாமி (நாயுடு) நீதிக்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்மாநாட்டில், வகுப்புரிமையை ஏற்கும் பார்ப்பனரையும் நீதிக்கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டு, எதிர்ப்புக்கிடையே நிறைவேறாது நின்றுவிட்டது. நடேசனார் நீதிக்கட்சியில் பார்ப்பனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அம்மாநாட்டில் கூறியது, பலருக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. பெரியார் நீதிக்கட்சியில் பார்ப்பனரைச் சேர்ப்பதைக் கடுமையாக எதிர்த்ததோடு, “சாதிமுறை சமூகத்தில் நீடித்து இருக்கும்வரை நீதிக்கட்சியில் பார்ப்பனரை சேர்ப்பது என்பதைப் பற்றி நினைப்பதே பயனற்ற வேலையாகும்” என்று ‘குடிஅரசு’ இதழில் எழுதினார்.

சமுதாயத் துறையில் பார்ப்பனியத்தை எதிர்க்காது, அதற்கு அடிமையாக இருந்துகொண்டு, அரசியலில் மட்டுமே பார்ப்பனியத்தை நீதிக்கட்சியினர் எதிர்ப்பது அதை அழிக்க உதவாது என்றும், பார்ப்பனியத்தின் மூலபலம் அது ஏற்படுத்திய கடவுள், மதம், சாதி, வேதம், சாஸ்திரம், புராணம், மூடநம்பிக்கை ஆகியவையாக இருப்பதால் அவற்றை ஒழித்தால் அல்லாது பார்ப்பனியம் அழியாது என்ற உண்மையை விளக்கி, சுயமரியாதைக் கொள்கையை நாடெங்கும் பரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு அதன் மூலம் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியை தட்டி எழுப்பும் பணியை பெரியார் ஓய்வின்றிச் செய்யலானார்.

1930       ஈரோட்டில், மே 10, 11 நாள்களில் இரண்டாவது மாகாண

சுயமரியாதை மாநாடு, பெரியார் முயற்சியால் சிறப்பாக நடைபெற்றது. எம்.ஆர்.ஜெயகர் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டுக்கு ஆர்.கே.சண்முகம் (செட்டியார்) வரவேற்புக் குழுத் தலைவர். சுப்பராயன் ஆட்சியில் சட்டமன்றத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கொண்டு வந்த தேவதாசி ஒழிப்பு மசோதாவைப் பெரியார் தீவிரமாக ஆதரித்து, அம்மசோதா சட்டமாக நிறைவேறக் காரணமானார். இவ்வாண்டு செப்டம்பர் இறுதியில் நடைபெற்ற 4ஆவது பொதுத் தேர்தலில், பெரியாரின் பெரும்பணியால் புத்துயிர் ஊட்டப்பட்ட நீதிக்கட்சி வென்றது. இவ்வெற்றிக்கு மூலகாரணர் பெரியார் அவர்களே. நீதிக்கட்சியின் 4ஆவது அமைச்சரவை அக்டோபர் 27இல் பதவியேற்றது. முதலமைச்சராக சித்தூர் திவான் பகதூர் சி.முனிசாமி (நாயுடு) பொறுப்பேற்று உள்ளாட்சி முதலிய துறைகளை கவனித்துக் கொண்டார். பொன்னம்பலம் தியாகராஜன் (பி.டி.ராஜன்) இரண்டாவது அமைச்சராகப் பொறுப்பேற்று பொதுப்பணித் துறை முதலிய துறைகளைக் கவனித்துக் கொண்டார். என்.குமரசாமி ரெட்டியார், மூன்றாவது அமைச்சராக பொறுப்பேற்று கல்வி மற்றும் எக்சைஸ் துறைகளைக் கவனித்துக் கொண்டார். சட்டமன்றத் தலைவராக பி.இராமச்சந்திர (ரெட்டி) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நீதிக்கட்சியில் பார்ப்பனரைச் சேர்ப்பது குறித்து தொடர்ந்து சர்ச்சை நடந்து வந்தது. ஏப்ரலில் சென்னையில் நடைபெற்ற பார்ப்பனரல்லாத இளைஞர் கூட்டம் ஒன்றில் நீதிக்கட்சியில் பார்ப்பனரைச் சேர்க்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், ஜூன் மாதத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி செயற்குழுக் கூட்டத்தில் பார்ப்பனரையும் சேர்க்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. பெரியார், ‘குடிஅரசி’ல் தொடர்ந்து இந்த முடிவைக் கண்டித்து எழுதி வந்தார். நீதிக்கட்சித் தலைவர்களுக்கு ஓட்டுப் பிடிக்கும் எண்ணமும், மந்திரி பதவி ஆசையும், சுயநலமும் தலைவிரித்தாடுகிறது என்று பெரியார் வருந்தி எழுதினார். பார்ப்பனரையும் கட்சியில் சேர்க்கலாம் என்று செயற்குழுவில் முடிவு எடுத்தவுடன் நீதிக்கட்சி வகுப்புவாரி உரிமைக் கொள்கையை கொஞ்சம் கொஞ்சமாக புறக்கணிக்க ஆரம்பித்தது.

ஆனால், பெரியார், சுயமரியாதை இயக்கத்தைக் கைக்கொண்டதால் பார்ப்பனிய எதிர்ப்பை நாட்டில் தொய்வு அடைய விடாமல் தூக்கிப் பிடித்து நாடெங்கும் சுயமரியாதை இயக்க வீரர்களோடு சுற்றுப்பயணம் செய்து இன எழுச்சிக் கனலை மக்களிடையே பரப்பலானார். தனது பொறுப்பில் இருந்த நீதிக்கட்சியின் ‘திராவிடன்’ இதழில் நீதிக்கட்சியின் பார்ப்பனர் நுழைவை எதிர்த்தும், நீதிக்கட்சித் தலைவர்களின் போக்கைக் கண்டித்தும் கடுமையாக எழுத ஆரம்பிக்கவே, ‘திராவிடன்’ இதழை பெரியார் பொறுப்பிலிருந்து திரும்பப் பெற நீதிக்கட்சித் தலைவர்கள் திட்டம் தீட்டலாயினர்.

1931       ஜனவரி மாதத்தில் ‘திராவிடன்’ இதழைப் பெரியாரிட

மிருந்து திரும்பப் பெறும் உள்நோக்கத்துடன் நீதிக்கட்சித் தலைவர்கள் இவ்விதழுக்கு ஜாமீன் தரவேண்டுமென்று அரசாங்கத்தின் மூலம் கட்டளையிட வைத்தனர். பெரியார், பொருளாதார நெருக்கடியால் ‘திராவிடன்’ இதழ் நிறுத்தப்படுகிறது என்று அறிவித்தார். சில மாதம் சென்ற பிறகு நீதிக் கட்சியினரால் ‘திராவிடன்’ இதழ் அலர்மேலுமங்கைத் தாயார் அம்மையாரை  ஆசிரியராகக் கொண்டு, ‘மத வேறுபாடு, வகுப்பு வேறுபாடு காட்டாமல் இனி வெளியிடப்படும்’ என்கிற அறிவிப்போடு வெளிவரத் தொடங்கியது.

பெரியார் முயற்சியால் விருதுநகரில் ‘தமிழ் மாகாண சுயமரியாதை மாநாடு’ ஆர்.கே.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

1932       நீதிக்கட்சித் தலைவராகவும் முதலமைச்சராகவும் இருந்த

பி.முனிசாமி நாயுடு, காங்கிரஸ் அனுதாபமுடையவராகவும், சுயமரியாதை இயக்கத்தை வெறுத்ததாலும், அவருக்குக் கட்சியில் எதிர்ப்பு இருந்தது. நீதிக்கட்சிக்கு வேறு தலைவரைத் தேர்ந்தெடுக்க, அக்டோபர் 8இல் தஞ்சையில் கூட்டப்பட்ட கூட்டத்தில் குழப்பம், ரகளைகளுக்கிடையே முனுசாமி (நாயுடு) கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு,  பொப்பிலி அரசர் நீதிக்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் சுயமரியாதைக் காரர்கள் பங்கு அதிகம். தஞ்சை மாநாட்டில் சுயமரியாதைக்காரர்கள் அனைவரும் பொப்பிலியை ஆதரித்தனர்.

நீதிக்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி புதிய அமைச்சரவை நவம்பர் 5இல் அமைக்கப்பட்டது. பொப்பிலி அரசர் (ராவ் ஸ்வேதாசலபதி இராமகிருஷ்ண ரங்கராவ்) முதலமைச்சராகப் பொறுப்பேற்று, உள்ளாட்சி முதலிய துறைகளையும், பி.டி.ராஜன் இரண்டாம் அமைச்சராகி, பொதுப்பணி முதலிய துறைகளையும், எஸ்.குமாரசாமி (ரெட்டியார்) மூன்றாம் அமைச்சராகி, கல்வி மற்றும் எக்சைஸ் துறைகளையும் கவனித்துக் கொண்டனர். இவ்வாண்டில் ‘திராவிடன்’ இதழ் நிறுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் பெரியார் சோவியத் யூனியன் முதலிய வெளிநாடுகளுக்கு 11 மாத காலம் சுற்றுப்பயணம் செய்து திரும்பினார். ஈரோட்டில் டிசம்பர் 28, 29இல் சென்னை மாகாண தொண்டர்கள் பலரையும் கூட்டி சமதர்மத் திட்டத்தை வெளியிட்டார். இது ஈரோடு சமதர்மத் திட்டம் எனப்படும்.

1933       சுயமரியாதை இயக்க சுடரொளி அன்னை நாகம்மையார்

மே 11இல் முடிவெய்தினார். ‘நாகம்மாள் மறைவு’ என்ற தலைப்பில், பெரியார் ஓர் இரங்கலுரை இலக்கியத்தைக் குடிஅரசுத் தலையங்கமாகப் படைத்தார். நாகம்மையார் முடிவெய்திய அடுத்த சில நாள்களில் (மே 14இல்) ஒரு கிறிஸ்துவ கலப்புத் திருமணத்தை தடையை மீறி நடத்தியதால் கைதாகி பின் விடுதலையானார். ‘குடிஅரசு’ அடக்குமுறைக்கு ஆளானதால், ‘புரட்சி’ வார ஏட்டை நவம்பர் 20இல் பெரியார் துவக்கினார். ‘திராவிடன்’ இதழ் கடன் தொடர்பாக நீதிக்கட்சியினர் தொடுத்த வழக்குக் காரணமாக ஜூன் 2இல் ஈரோட்டில் கைது செய்யப்பட்டு உடல்நலம் குன்றியதால் விடுதலை செய்யப்பட்டார். பெரியாரின் முயற்சியால் நவம்பர் 26இல் கோவை ஜில்லா மாநாடு எனும் பெயரில் ஈரோட்டில் கே.அய்யப்பன் தலைமையில் ‘சுயமரியாதை சமதர்ம மாநாடு’ நடைபெற்றது. இம்மாநாட்டில்  டாக்டர் வரதராஜுலு (நாயுடு) கலந்து கொண்டார். நாகம்மையார், லெனின் ஆகியோர் படங்களை திரு.வி.க. திறந்து வைத்து சொற்பொழிவு நிகழ்த்தினார். ‘குடிஅரசு’ அக்டோபர் 20 இதழில் “இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?” என்ற தலையங்கம் எழுதியதற்காக டிசம்பர் 30இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன் வழக்கும் தொடரப்பட்டது. இவ்வாண்டோடு முடிய வேண்டிய ‘நீதிக்கட்சி’ அமைச்சரவை, சைமன் கமிஷன் அறிக்கை வரத் தாமதமானதாலும், வட்டமேசை மாநாடு நீண்டபடியாலும், மாகாண சுய ஆட்சி மசோதா நிறைவேற காலதாமதமானபடியாலும் 1937 வரை நீட்டிக்கப்பட்டு நடைபெற்றது. ‘ஜஸ்டிஸ்’ ஆங்கில நாளிதழ் நிறுத்தப்பட்டு, சில காலஞ்சென்று ‘நியூ டைம்ஸ்’ என்ற பெயரில் புதுப்பிக்கப்பட்டு, பொப்பிலி அரசின் சொந்தச் செலவில் நீதிக்கட்சி இதழாக வெளி வந்தது.

1934       தன்மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக ஜனவரி 12இல்

கோவை மாவட்ட கலெக்டர் ஜி.டபிள்யூ.வெல்ஸின் முன்னிலையில் வரலாற்றுப் புகழ்மிக்க ஸ்டேட்மெண்ட் ஒன்றைப் பெரியார் தாக்கல் செய்தார். வழக்கு முடிவில் பெரியாருக்கு 9 மாத சிறைத் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் செலுத்தத் தவறினால் மேலும் ஒரு மாத தண்டனையும் விதிக்கப்பட்டது. பெரியாரின் தங்கை கண்ணம்மாளும் ‘குடிஅரசு’ இதழின் பொறுப்பாளர் என்ற முறையில் சிறைத் தண்டனைக்கு உள்ளானார். கோவை, இராஜமகேந்திரபுரம் ஆகிய சிறைகளில் பெரியார் சிறைத் தண்டனையை அனுபவித்தார்.

பெரியார் கோவைச் சிறையிலிருந்தபோது ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டதன் காரணமாக, தண்டனைப் பெற்று, இராஜகோபாலாச்சாரியாரும் அதே சிறையில் இருந்தார். இராஜகோபாலாச்சாரியாரின் வேண்டுகோளின்படி இருவரும் மீண்டும் ஒன்றுபட்டுப் பணியாற்ற ஒரு பொதுத் திட்டம் தீட்டி அது காந்தியாருக்கு அனுப்பப்பட்டது. இத்திட்டத்தில் ‘எண்ணிக்கைக்குத் தக்கபடி அரசியல் பிரதிநிதித்துவம் உத்தியோகம் கொடுக்கப்பட வேண்டும்’ என்று இருப்பதால் காந்தியார் மறுத்துவிட்டதாக பின்னர் இராஜகோபாலாச்சாரியார்  பெரியாரிடம் கூறிவிட்டார்.

அரசின் அடக்குமுறைக்கு ஆளாகி, ‘புரட்சி’ இதழும் நிறுத்தப்பட்டு மார்ச் 15இல் ‘பகுத்தறிவு’ தினசரி துவக்கப்பட்டு அவ்விதழும் மே மாதம் முடிவுற்றது. பெரியார் சிறையினின்றும் மே 20இல் விடுதலையானார். ‘பகுத்தறிவு’ வார ஏடு ஆகஸ்டு 26இல் துவக்கப்பட்டது. இவ்வார ஏட்டில் முதன்முதலாக தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைப் பெரியார் புகுத்தினார்.

தனது மாற்றியமைக்கப்பட்ட சமதர்மத் திட்டத்தைப் பெரியார் நீதிக்கட்சிக்கும் காங்கிரசுக்கும் அனுப்பினார். சென்னை மாகாணத்திற்கு இதுவரை கவர்னராக இருந்த ஸ்டான்லி நீங்கிய பின் மே 16இல் முகமது உஸ்மான் கவர்னராக (பொறுப்பு) நவம்பர் 14 வரை நீடித்தார். அதன்பின், நவம்பர் 15 முதல் எர்ஸ்கின் கவர்னராகப் பொறுப்பேற்றார்.

இவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இந்திய சட்டசபைத் தேர்தலில் (ஊநவேசயட டுநபளைடயவiஎந யளளநஅடெல) நீதிக்கட்சி தோற்றது. இத் தேர்தலில் சர்.ஏ.இராமசாமி முதலியாரும் சத்தியமூர்த்தியும் போட்டியிட்டனர். “தாலி அறுத்த இராமசாமி முதலியாருக்கா உங்கள் ஓட்டு?” என்ற அண்டப் புளுகு கோஷத்தை எழுப்பியே சத்தியமூர்த்தி, இத்தேர்தலில் இராமசாமி முதலியாரைத் தோற்கடித்தார். நீதிக்கட்சி ஆட்சியில் ஆங்கிலேய நீதிபதி, ஒரு பெண் கைதி செலுத்த வேண்டிய அபராதத் தொகைக்காக கழுத்துச் சங்கிலியை (தாலியென்று அறியாமல்) கேட்டாராம். இதையே இவ்வாறு திரித்துக் கூறி காங்கிரஸ்காரர்கள் பிரச்சாரம் செய்தனர். இத்தேர்தலில் தோல்வியடைந்ததால், பல நீதிக்கட்சித் தலைவர்கள் பெரியார் மீதும், சுயமரியாதைக்காரர்கள் மீதும் வெறுப்புக் கொண்டனர். பெரியார் இதைப் பொருட்படுத்தாமல், நீதிக்கட்சி யினரைத் தேற்றியதோடு, இத்தோல்வியை பாடமாகக் கொண்டு முனைந்து பணியாற்றும்படி அறிவுரை கூறினார்.

1935       ‘ஈ.வெ.ரா. வேலைத் திட்டத்தை’ நீதிக்கட்சி ஏற்றுக் கொள்ள,

பெரியார் தொடர்ந்து நீதிக்கட்சியைத் தீவிரமாக ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். ‘பகுத்தறிவு’ வார ஏடு ஜனவரி 6இல் நிறுத்தப்பட்டு, பின்னர் மாத ஏடாக வெளி வந்தது. ‘விடுதலை’ இதழ் வாரம் இரு முறையாக ஜூன் 1 முதல் அரையணா விலையில் வெளிவரத் துவங்கியது. பெரியாரை திருப்பூரில் சந்தித்த அண்ணா, அவர்பால் ஈர்க்கப்பட்டு பொது வாழ்க்கையை தொடரலானார்.

1936       முதலமைச்சர் பொப்பிலி அரசர் உடல்நலமின்றி இருந்ததால்

ஏப்ரல் 4 முதல் ஆகஸ்டு 23 வரை பி.டி.ராஜன் முதல் அமைச்சராகப் (பொறுப்பு) பணியாற்றினார். உடல்நலம் மீண்டதும் ஆகஸ்டு 24இல் பொப்பிலி அரசர் மீண்டும் முதலமைச்சர் பொறுப்பு ஏற்றார். கவர்னர் எர்ஸ்கின்னுக்குப் பதிலாக ஜூன் 19 முதல் அக்டோபர் 1 முடிய இடைக்கால கவர்னராக கே.வி.ரெட்டி (நாயுடு) பணியாற்றினார். அதன்பின்  அக்டோபர் 2 முதல் மீண்டும் எர்ஸ்கின் கவர்னராகப் பொறுப்பேற்றுப் பணி தொடர்ந்தார்.

பெரியாரின் அன்னையார் சின்னத்தாய் அம்மையார் ஜூலை 28இல் முடிவு எய்தினார். பெரியார் நாடெங்கும் நீதிக்கட்சியை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் செய்தார். ‘சர்வ கட்சிப் பார்ப்பனரல்லாதார் ஒன்றாக இணைய, ஈ.வெ.ரா.  சொல்லும் வழியே சிறந்தது’ என்று வ.உ.சி. பெரியாரின் திட்டத்தைப் பாராட்டினார். இவ்வாண்டு இறுதியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பறக்க நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியினர், அண்டப்புளுகுகளை அவிழ்த்துவிட்டுத் தேர்தல் பிரச்சாரம் செய்தனர். சத்தியமூர்த்திப் பார்ப்பனர், “நீதிக்கட்சியை 200 அடி ஆழத்தில் புதைப்பேன்” என்று அலறினார். ‘மஞ்சள் பெட்டி மாங்கல்யப் பெட்டி, அதற்கே ஓட்டைப் போடு!’, ‘சிவப்புப் பெட்டி அபாயப் பெட்டி, அதற்கு மண்ணைப் போடு’ என்று காங்கிரஸ் ‘தேசிய’ பக்தர்கள் பிரச்சாரம் செய்தனர். முதலமைச்சர் பொப்பிலி அரசருக்கும், வி.வி.கிரி எனும் காங்கிரஸ் பார்ப்பனருக்கும் பொப்பிலி தொகுதியில் போட்டி ஏற்பட்டது. காங்கிரசார், நேருவும், சரோஜினி நாயுடுவும் கலந்து கொள்ளும் தேர்தல் கூட்டம் ஒன்றை பகலில் பொப்பிலி கோயில் உற்சவ ஊர்வல நேரம் பார்த்து கோயில் அதிகாரிகள் வேண்டுகோளையும் மீதி ஏற்பாடு செய்து கொண்டனர்; கோயில் ஊர்வலம் கூட்டத்தை நெருங்கியதும், ஊர்வல யானையைக் கண்டு ‘குபீர்’ என்று காங்கிரசார் ஓடுவதாக பாவனை செய்தனர். இதைச் சாக்காக வைத்து, தேர்தல் வரையில் ‘மனிதருள் மாணிக்கம்’ நேருவும், கவிக்குயில் சரோஜினியும் பேசிய தேர்தல் கூட்டத்தை, ‘யானைகளை ஏவிக் கலைத்த கொடும்பாவி பொப்பிலி ராஜாவுக்கா ஓட்டு?’ என்று பத்திரிகைகளிலும், பொதுக் கூட்டங்களிலும் மாய்மாலக் கூப்பாடு போட்டனர். இதுபோன்ற தேர்தல் பொய்ப் பிரச்சாரத்தின் பயனால் பொப்பிலி அரசர் உள்பட நீதிக்கட்சிப் பெருந்தலைவர்கள் தோற்றனர். காங்கிரஸ் தலைவராயிருந்த நேரு, இவ்வாண்டு சென்னை வந்தபோது ஒரு செய்தி நிருபர், ‘நீதிக்கட்சி பற்றி உங்கள் கருத்தென்ன?’ என்று வினவியபோது, ‘அதைப்பற்றிக் கொஞ்சம் கேள்விப்பட் டிருக்கிறேன், அதிகம் தெரியாது’ என்றார். பதினாறு ஆண்டுகாலம் பார்ப்பனரல்லாதார் நலன் காக்க ஆண்ட, ஒரு கட்சியைப் பற்றி இவ்வாறு பார்ப்பனப் பண்டிதர் அலட்சியமாகவும் திமிராகவும் கூறியது, ‘எதிரியை முதலில் அலட்சியப்படுத்த வேண்டும்’ எனும் பார்ப்பனத் தந்திர முறையின் வெளிப்பாடே என்பதை உறுதிப்படுத்தியது.

1937       நீதிக்கட்சியின் தோற்றுநர்களில் ஒருவரான நடேசனார்

பிப்ரவரி 18இல் முடிவெய்தினார். இவரின் முடிவு குறித்து பிப்ரவரி 21 ‘குடிஅரசில்’ ‘டாக்டர் நடேசன் நலிந்தார்’ எனும் தலைப்பில், “தோழர் நடேச முதலியாரிடம் உள்ள அருங்குணங்களில் சூது, வஞ்சகம் அற்ற தன்மையே முதலாவதும், இரண்டாவதும், மூன்றாவதுமாகும். சூதற்றவனும் வஞ்சகமற்றவனும் உலகப் போட்டியில் ஒருநாளும் வெற்றி பெற மாட்டான் என்கிற தீர்க்கதரிசன ஆப்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்த நடேசன் அவர்கள் தனது தொண்டிற்கும் ஆர்வத்திற்கும் உண்மையான கவலை கொண்ட ஊக்கத்திற்கும் உள்ள பலனை தன் சொந்தத்துக்கு அடையாமல் போனதில் நமக்கு சிறிதும் ஆச்சர்யமில்லை… ஒரு தனிப்பட்ட மனிதனை நம்பி வாழும் நாடோ, சமூகமோ, சுதந்திரமும் வீரமும் உள்ள சமூகமாக ஆகாது… ஆதலால் ஒரு நடேசன் நலிந்ததால் நாம் நலிவு கொண்டுவிடாமல் 1000 நடேசனை காணுவோமாக. நாம் ஒவ்வொருவரும் நடேசனே ஆக நாடுவோமாக” என்று பெரியார் குறிப்பிட்டார்.

1935ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டப்படி இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இறுதியாக நீதிக்கட்சி தோல்வி யடைந்தது. பெரியார் சோர்வடையாது, நீதிக்கட்சியினரைத்  தேற்றினார். பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஒன்றுபட்டு முனைப்புடன் செயல்பட இத்தோல்வி நல்வாய்ப்பு என்றே கருதி மகிழ்வதாகப் பெரியார் கருத்தறிவித்தார். காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் கவர்னர் அதிகார விஷயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஆட்சியமைக்க முன் வரவில்லை. இதனால் கவர்னர் எர்ஸ்கின், நீதிக்கட்சியினரை ஆட்சியமைக்கக் கோரினார். அதற்கிணங்க, ஏப்ரல் 1இல் 6 பேரைக் கொண்ட இடைக்கால அமைச்சரவைப் பதவியேற்றது. இதில் கே.வி. ரெட்டி நாயுடு முதலமைச்சராகப் பதவியேற்று, சட்டம் வருவாய்த் துறைகளைக் கவனித்துக் கொண்டார். ஏ.டி.பன்னீர்செல்வம், நிதி மற்றும் உள்துறையையும், எம்.ஏ. முத்தையா செட்டியார், உள்ளாட்சித் துறையையும், பி.கலிபுல்லா சாகிப் பகதூர் பொதுப் பணித் துறையையும், மயிலை சின்னத்தம்பி ராஜா (எம்.சி.ராஜா தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்) வளர்ச்சித் துறையையும், ஆர்.எம்.பாலட் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையையும் கவனித்துக் கொண்டனர். வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பு ஏற்கும்வரை இந்த இடைக்கால அமைச்சரவை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

சில மாதங்கள் சென்றபின், ஜூலை 14இல் காங்கிரஸ், இராஜகோபாலாச் சாரியார் தலைமையில் சென்னை மாகாணத்தில் அமைச்சரவை அமைத்தது. இதில் 10 அமைச்சர்களும் 10 பார்லிமெண்டரி செயலாளர்களும் இருந்தனர். இந்த அமைச்சரவையை பெரியார், “நாலரை பார்ப்பனர்களும், அய்ந்தரை பார்ப்பனரல்லாதார்களும் சேர்ந்த மந்திரி சபை” என்று குறிப்பிட்டார். பதவியேற்றவுடன் கிராமப்புறங்களில் இருந்த 2500 பள்ளிகளை மூடல், மதுவிலக்கு பேரால் கல்விச் செலவைக் குறைத்தல், நீதிக்கட்சிக் காலத்தில் ஏற்படுத்திய கல்லூரி செலக்ஷன் கமிட்டிகளை ஒழித்தல், நிர்வாகத்தில் பார்ப்பனர்களைத் திணித்தல், இந்தியைத் திணித்தல் ஆகிய பார்ப்பன நலத் திட்டங்களை இந்த ஆட்சி நிறைவேற்ற ஆரம்பித்தது. சென்னை இராம கிருஷ்ணா மடத்தில் பேசிய ஆச்சாரியார், கட்டாய இந்தியைத் திணிக்க விருக்கும் திட்டத்தை வெளியிடலானார். தமிழினம் கிளர்ந்து எழுந்தது. இதன் எதிரொலியாக திருச்சியில் கி.ஆ.பெ. விசுவநாதம், தி.பொ.வேதாசலம் ஆகியோர் முயற்சியால் ‘தமிழர் மாநாடு’ ஒன்று நடைபெற்றது. கட்சி, மத, வேறுபாடின்றி தமிழினப் பெரியோர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். கா.சு.பிள்ளை அவர்களைத் தலைவராகவும், தா.வே. உமாமகேஸ்வரன் பிள்ளையை திறப்பாளராகவும் கொண்ட இந்த மாநாட்டில் இந்தித் திணிப்பை எதிர்த்தும், தமிழ்நாடு தனி மாநிலமாகப் பிரிய வேண்டும் என்றும் பல தீர்மானங்கள், தமிழின மக்களால் நிறைவேற்றப்ப்டடன. பெரியார் இம்மாநாட்டில் எழுச்சியுரை ஆற்றினார்.

1938       முதலமைச்சர் ஆச்சாரியாரின் அரசால் ஏப்ரல் 21 இந்தித்

திணிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டது. தமிழகத் தலைவர்கள் இதனை எதிர்த்தனர். இந்தி எதிர்ப்புப் போருக்குப் பெரியார் தலைமை ஏற்றார். நாடெங்கும் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன. முதலமைச்சர் இல்லத்தின் முன் அணி அணியாகக் கூடி மறியல் போராட்டம் செய்து போராட்ட வீரர்கள் சிறை ஏகினர்.

அரசு, ‘விடுதலை’ நாளிதழின் மீது நடவடிக்கை எடுத்தது. ஆகஸ்டு 1இல் பெரியாரால் துவக்கி வைக்கப்பட்ட இந்தி எதிர்ப்புப் படை திருச்சியி லிருந்து புறப்பட்டது. இதன் தலைவர் அய்.குமரசாமிப் பிள்ளை, தளபதி பட்டுக் கோட்டை அழகிரிசாமி, அமைப்பாளர் ‘நகர தூதன்’ ஆசிரியர் திருமலைசாமி.

இப்படை 234 ஊர்கள் வழியாக 82 பொதுக் கூட்டங்கள் நடத்தி 42 நாள்கள் நடந்து சென்னையை செப்டம்பர் 11இல் அடைந்தது. அன்றைய கடற்கரைக் கூட்டத்தில் பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என முழக்கமிட்டார்.

நவம்பர் 13இல் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு கூடி, இந்தியை எதிர்த்தது. இந்த மாநாட்டில்தான் தந்தைக்குப் ‘பெரியார்’ என்ற பட்டத்தை பெண்கள் அளித்துப் பாராட்டினர்.

இந்தி எதிர்ப்புப் போரில் 72 பெண்கள், 32 குழந்தைகள் உள்பட 1269 பேர் சிறைப்பட்டனர். சி.டி.நாயகம், ஈழத்துச் சிவானந்த அடிகள், அறிஞர் அண்ணா, பாவலர் பாலசுந்தரம் முதலியவர்கள் சிறை புகுந்தவர்களுள் முக்கியமானவர்கள்.

பெரியார், நவம்பர் 26இல் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் டிசம்பர் 6இல் நிறுத்தப்பட்டு இரண்டு குற்றங்களுக்காகவும் சேர்த்து, இரண்டாண்டுக் கடுங்காவலும் ரூ.2000 அபராதமும், கட்டத் தவறினால் 1 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டார். அபராதம் கட்ட மறுத்து பெரியார் சிறையேகினார்.

சென்னையில் டிசம்பர் 29, 30இல் கூடிய நீதிக்கட்சியின் 14ஆவது மாநாட்டில் பெரியார் சிறையிலிருக்கும்போதே நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெரியார் எழுதிய உரையை சர். ஏ.டி.பன்னீர்செல்வம் மாநாட்டில் படித்தார்.

1939       இந்தி எதிர்ப்பு வீரர் நடராசன் ஜனவரி 15இல் மறைவு குறித்து

சட்டமன்றத்தில் கேள்வி கேட்டபோது காங்கிரஸ்காரர்கள் நையாண்டி பேசினர். இராஜகோபாலாச்சாரியார், “நடராஜன் ஒரு படிப்பு வாசனையற்ற அரிஜன்” என்று மாண்ட வீரனை நாகரிகமின்றி சாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசினார். அடுத்து, இந்தி எதிர்ப்பு வீரர் தாளமுத்து மார்ச் 13இல் சிறையில் முடிவு எய்தினார். தாளமுத்துவின் சடலத்தை, ராஜா சர் முத்தையா செட்டியாரும், முன்னாள் மேயர் பாசுதேவும் தோளில் சுமந்து சென்றனர்! பெரியார் 167 நாள்கள் கடும் சிறைவாசத்துக்குப் பின் மே 22இல் விடுதலையானார். சிறையிலிருந்து மீண்டதும் ‘திராவிட நாடு திராவிடருக்கே!’ என்று குரலெழுப்பினார். இவ்வாண்டு இந்தி எதிர்ப்பு வீரர்கள் அனைவரும் விடுதலை ஆயினர்.

பெரியார், ஆந்திரர்களுக்கு தனி மாகாணம் கொடுக்கப்பட வேண்டியது அவசியம் என வற்புறுத்தினார். இரண்டாவது உலகப் போரில் காங்கிரசைக் கலக்காமல், இந்தியர்களை இணைத்ததாகக் காரணம் காட்டி இராஜ கோபாலாச்சாரியார் அமைச்சரவை அக்டோபர் 29இல் பதவி விலகிற்று. ஜின்னா இதை ‘விடிவு பிறந்த நாள்’ (னுயல டிக னுநடiஎநசயnஉந) என்று வருணித்தார்.

1940       வடநாட்டு சுற்றுப் பயணத்தை ஜனவரி 5இல் துவக்கிய

பெரியார், ஜனவரி 8இல் ஜின்னாவை அவர் இல்லத்தில் சந்தித்து தனிநாடு தத்துவத்தை வலியுறுத்தினார். அப்போது அம்பேத்கரும் உடனிருந்தார். பெரியாருடன், ‘சண்டே அப்சர்வர்’ ஆசிரியர் பி.பாலசுப்பிர மணியன், டி.ஏ.வி. நாதன், கே.எம். பாலசுப்பிரமணியம், அறிஞர் அண்ணா ஆகியோர் பயணம் மேற்கொண்டனர். கட்டாய இந்தியை ஒழித்து அரசு பிப்ரவரி 21இல் ஆணையிட்டது. கட்டாய இந்தியை ஒழிக்கக் காரணமான பெரியாரைப் பாராட்டி ஜின்னா தந்தி ஒன்றை அனுப்பினார். இலண்டனில் இந்திய மந்திரியின் ஆலோசகராகப் பதவி ஏற்கச் சென்ற ஏ.டி. பன்னீர்செல்வத்தைக் கராச்சியிலிருந்து ஏற்றிச் சென்ற ‘ஹனிபா’ என்ற விமானம் மார்ச் 1இல் விபத்துக்குள்ளாகி அவரின் உயிரைக் குடித்தது. இதுவரை சென்னை மாகாண கவர்னராக இருந்த எர்ஸ்கின் நீங்கி மார்ச் 11இல் ஆர்தர் ஹோப் கவர்னராகப்  பொறுப்பேற்றார். திருவாரூரில் நீதிக்கட்சியின் 15ஆவது மாநாடு ஆகஸ்டு 24, 25இல் நடைபெற்றது. இம்மாநாட்டில்தான் பெரியார் முறைப்படி நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கி.ஆ.பெ. விசுவநாதம், நீதிக்கட்சியின் செயலாளராகவும், அறிஞர் அண்ணா கூட்டுக் காரியதரிசியாகவும் நியமிக்கப்பட்டனர். இம்மாநாட்டில் திராவிட நாடு பிரிவினையை வலியுறுத்திப் பெரியார் பேசினார். ஏப்ரலில் கவர்னர் ஜெனரலும், நவம்பர் 11இல் இராஜகோபாலாச்சாரியாரும் பெரியாரை சந்தித்து சென்னை மாகாண ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வற்புறுத்தியும் சமுதாயத் தொண்டில் நாட்டங்கொண்ட பெரியார் மறுத்துவிட்டார்.

1941       இவ்வாண்டு பிப்ரவரியில் லெனினுடன் இருந்து பணியாற்றிய

வங்க வீரர் எம்.என். ராய், சென்னை வந்து பெரியாரின் விருந்தினராகத் தங்கினார். காங்கிரஸ் எதிர்ப்பு முன்னணி உருவாக்கி, காங்கிரஸ் அல்லாத அமைச்சரவை ஒன்றை முதன்முதலில் சென்னை மாகாணத்தில் அமைத்து வழிகாட்ட வேண்டும் என்று பெரியாரைக் கேட்டுக் கொண்டார்.

இரயில்வே நிலையத்தில் உள்ள உணவு விடுதிகளில் ‘பிராமணாள்’, ‘இதராள்’ என்றிருந்ததானது, பெரியாரின் முயற்சியால், இரயில்வே நிர்வாகத்தின் நல்லெண்ணத்துடன் மார்ச் 21இல் ஒழிந்தது.

1942       அறிஞர் அண்ணாவை ஆசிரியராகக் கொண்டு, ‘திராவிட

நாடு’ வார இதழ் மார்ச் 8இல் வெளி வந்தது. இரண்டாம் முறை வைசிராயும் கவர்னரும் வேண்டியும் பெரியார் ஆட்சி அமைக்க மறுத்தார். சி. இராஜகோபாலாச்சாரியார் காங்கிரசிலிருந்து விலகி, பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவளித்தார். ஈரோட்டுக்கு, பெரியார் வீட்டுக்கு வந்து திராவிட நாடு பிரிவினைக்கு ஆதரவு தருவதாக அவர் சொன்னார். மேலும், இராஜகோபாலாச்சாரியார் ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, “இராமசாமி நாயக்கர் கேட்கும் திராவிடஸ்தானை திராவிட மக்கள் கேட்டால் பிரித்துக் கொடுத்துவிட வேண்டியதுதான்” என்றார். டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி, ‘லிபரேட்டர்’ எனும் ஆங்கில நாளேட்டினை டிசம்பர் 7இல் துவக்கினார். இது நீதிக்கட்சியின் படைக்கலனாக விளங்கியது.

1943       இராஜா அண்ணாமலைச் செட்டியாரால் தொடங்கப்பட்டு

முறுக்கோடு பவனிவந்த தமிழிசை இயக்கத்தைப் பெரியார் ஆதரித்தார். திருவையாறு அரசர் கல்லூரியில் பார்ப்பன மாணவர்க்குத் தனி உணவு ஏற்பாடு நடைபெறுவது குறித்துக் கேள்விப்பட்டு, ‘மீண்டும் சேரன் மாதேவியா?’ எனப் பெரியார் குமுறிக் கண்டித்தார். குடந்தை அரசினர் கல்லூரியில் பார்ப்பன மாணவர்க்குத் தனி தண்ணீர்ப் பானை இருந்ததால், ஆனந்தம், தவமணிராஜன் முதலிய திராவிட மாணவர்களுக்கு இன உணர்ச்சியை எழுப்பி, கும்பகோணத்தில் மாணவர் கழகம் தோற்றுவிக்கத் தூண்டுகோலாயிருந்தது. இதே ஆண்டில் ஆகஸ்டு மாதத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் திராவிட இன உணர்வுடைய மாணவர்கள் பகுத்தறிவு இளைஞர் கழகத்தைத் துவக்கினர். நெடுஞ்செழியன், அன்பழகன், செழியன், மதியழகன், இளம்வழுதி, நன்னன், சரவணன் போன்ற இளைஞர்கள் இதில் ஈடுபட்டனர். இந்த ஆண்டில்தான் க. அரசியல்மணி (அன்னை மணியம்மையார்), பெரியார் அவர்களிடம் தொண்டு செய்ய வந்தார். நடிகவேள் எம்.ஆர்.இராதா, புரட்சிகரமான சுயமரியாதைக் கருத்துகளை விளக்கி, நாடகங்களை நடத்தி பெரியாரின் பாராட்டினைப் பெறலானார்.

1944       கும்பகோணத்தில் பிப்ரவரி 19, 20இல் ‘திராவிட மாணவர்

மாநாடு’ நடைபெற்றது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தில் இருந்து வந்த திராவிட மாணவர்கள் பெருமளவில் கலந்து கொள்ள, அறிஞர் அண்ணா சொற்பொழிவு ஆற்றினார். திருவாரூரில் கலைஞர் மு.கருணாநிதி முயற்சியில் மாணவர் மாநாடும், அடுத்து ஈரோட்டிலும் மற்றும் தமிழ்நாடெங்கும் பல மாவட்டங்களில் ‘திராவிட’ மாணவரிடையே எழுச்சியும் ஏற்பட்டு மாநாடுகளும், பயிற்சி வகுப்புகளும் நடைபெற்றன. சேலத்தில் ஆகஸ்டு 27இல் கூடிய நீதிக்கட்சி மாநாட்டில், ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்ற பெயர், ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்றம் பெற்றது. பதவி, பட்டங்களைத் துறக்க வேண்டும். பெயருக்குப் பின் உள்ள சாதிப் பட்டத்தை விடவேண்டும், தேர்தலுக்கு நிற்கக் கூடாது என்பன போன்ற பல புரட்சிகரமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால் நீதிக்கட்சியிலிருந்த பதவி நாடுவோர் பலர் கட்சியிலிருந்து வெளியேறினர். இம்மாநாடு திராவிடர் இயக்க வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு காலகட்டத்தைத் தொடங்கி வைத்த பெருமைக்குரியது எனலாம். சி.டி. நாயகம், டிசம்பர் 13இல் முடிவு எய்தியமைக்குப் பெரியார் பெரிதும் வருந்தினார். வடநாட்டுப் பயணத்தை டிசம்பர் 24இல் துவக்கிய பெரியார், டிசம்பர் 27இல் கல்கத்தாவில் நடைபெற்ற, எம்.என். ராய் அவர்களின் ‘ராடிகல் டிமாக்ரடிக் கட்சி’ மாநாட்டில் உரை ஆற்றியதோடு, ‘எனது நாத்திக ஆசான்’ என்று எம்.என். ராய் அவர்களால் பாராட்டவும் பெற்றார்.

1945       வடநாட்டுப் பயணம் முடித்து பெரியார் தமிழகம்

திரும்பினார். சென்னை கோகலே ஹாலில் மே 28இல் பேசிய  இராஜகோபாலாச்சாரியார், பெரியாரின் ‘தமிழ்நாடு’ விடுதலைக் கொள்கையை ஆதரித்துக் கருத்தறிவித்தார். சேலம் மாநாட்டில் ‘நீதிக்கட்சி’ – ‘திராவிடர் கழக’மாக மாற்றப்பட்டதை விரும்பாத சிலர், தேனாம்பேட்டை சன் தியேட்டரில், தங்களை நீதிக்கட்சியின் வாரிசுகள் என்று கூறிக் கொண்டு, நீதிக்கட்சியின் பெயரால், பி.டி.ராஜன் தலைமையில் கூடினர். இப்போலி நீதிக்கட்சியின் கூட்டம் குழப்பத்தில் முடிந்தது. ‘சண்டே அப்சர்வர்’, ‘நகர தூதன்’ ஆகிய இரு இதழ்களும், இவர்களது போர்க் கருவிகளாகச் சில காலம் இயங்கி மறைந்தன. ஈரோட்டிலிருந்து ‘ஜஸ்டிசைட்’ எனும் ஆங்கில வார இதழைப் பெரியார் செப்டம்பர் 1இல் துவக்கினார். செப்டம்பர் 29இல் திராவிடர் கழக மாகாண மாநாடு திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது. ‘கருஞ்சட்டைத் தொண்டர் படை’ எனும் அமைப்பை பெரியார் ஏற்படுத்தினார். சென்னையில் டிசம்பர் 16இல் நடைபெற்ற திராவிடர் கழக மத்தியக் கமிட்டிக் கூட்டத்தில் அறிஞர் அண்ணா பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946       இதுவரை சென்னை மாகாண கவர்னராக இருந்த ஆர்தர்

ஹோப் நீங்கி, பிப்ரவரி 27 முதல் ஹென்றிபோலே நைட் கவர்னராக மே 5 வரை நீடித்தார். அதன்பின் மே 6 முதல் எட்வர்ட் நை கவர்னராகப் பொறுப்பேற்றுப் பணிபுரிந்தார்.

திருச்சி டவுன் ஹால் மண்டபத்தில் ஏப்ரல் 22இல் பெரியார் தலைமையில் திராவிடர் கழகத்துக்கான கொடி உருவாக்கவென்றே கூட்டப்பட்ட மத்திய கமிட்டிக் கூட்டத்தில், கொடி உருவாக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. கருப்பில் சிவப்பு வட்டம் அமையும் வகையில் கொடி இருக்க வேண்டும் என்று (பெரியார் உள்பட) 17 உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டனர். இரண்டு உறுப்பினர்கள் சிவப்பு வட்டத்தில் பெரியார் உருவம் இருக்க வேண்டும் என்று கருத்துக் கூறினர். இக்கருத்தை 17 உறுப்பினர்கள் ஏற்காததால், கருப்பில் சிவப்பு வட்டம் என்ற அளவில் திராவிடர் கழகக் கொடி உருவாக்கப்பட்டது.

சென்னை மாகாண தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, மே 1இல் 14 அமைச்சர்களைக் கொண்ட பிரகாசம் அமைச்சரவை பதவி ஏற்றது. மேலவைத் தலைவராக ஆர்.பி.இராமகிருஷ்ண ராஜுவும், சட்டமன்ற அவைத் தலைவராக ஜே.சிவசண்முகம் பிள்ளையும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரகாசம், வகுப்புரிமைக்கு எதிராகவே தன்னைக் காட்டிக் கொண்டதோடு, மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் 20ரூ மாணவர்கள் தகுதி அடிப்படையிலேயே சேர்க்க வேண்டும் என்று ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். மதுரையில் மே 11இல் நடைபெற்ற கருஞ்சட்டைப் படை மாநாட்டுப் பந்தல் பார்ப்பனர் தூண்டுதலால் எரிக்கப்பட்டது! இந்திய அரசியல் நிர்ணயசபை டிசம்பர் 9இல் உருவாக்கப்பட்ட முறையைக் கண்டித்து பெரியார் குரல் கொடுத்தார்.

1947       பிரகாசத்திற்கு காங்கிரசிலேயே எதிர்ப்பு ஏற்பட்டு நம்பிக்கை

யில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விலக நேரிட்டது. மார்ச் 24இல் 13 அமைச்சர்களைக் கொண்ட ஓமந்தூரார் அமைச்சரவை பதவியேற்றது. மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் 20ரூ தகுதி அடிப்படையிலேயே சேர்க்கப்பட வேண்டும் எனும் பிரகாசம் ஆணையை இரத்து செய்ததோடு, வகுப்புரிமைக் கொள்கைக்கும் ஆதரவாளராகவே இவர் நடந்து கொண்டமையால் ‘தாடியில்லாத இராமசாமி’ என்று பார்ப்பனரால் அழைக்கப்பட்டார். ‘திராவிட நாடு பிரிவினை நாள்’ ஜூலை 1இல் நாடெங்கும் கொண்டாடும்படி பெரியார் அறிவுரை புகன்றார்.

ஆகஸ்டு 15 ஆம் நாளை ‘சுதந்திர நாள்’ என்று உலகமே கூறியபோது, அதைத் ‘திராவிடருக்குத் துக்க நாள்’ என்று பெரியார் அறிவித்தார். “பரங்கியரிடமிருந்த ஆட்சி பார்ப்பன, பனியா, பைராகிக் கூட்டங்களின் கைகளுக்கு மாற்றப்பட்ட நாள்; இது சுதந்திர நாள் அல்ல” என்று பெரியார் கூறினார். அறிஞர் அண்ணா, ‘இந்நாள் துக்க நாளல்ல’ என்று ‘திராவிட நாடு’ இதழில் அறிக்கை விடுத்தார். இதனால் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் மனக்கசப்பு வளரலாயிற்று. இந்தக் காலகட்டத்தில் ‘நகர தூதன்’ ஆசிரியர் திருமலைச்சாமி எழுதிய ‘ஆகஸ்டு 47 – சுதந்திர நாளா?’ என்ற நூல் நல்லதொரு விளக்கமாக அமைந்தது. கடலூரில் செப்டம்பர் 14இல் நடைபெற்ற திராவிடநாடு பிரிவினை மாநாட்டில் திரு.வி.க. கலந்து கொண்டு, ‘திராவிடநாடு திராவிடருக்கே!’ என்று முழங்கினார். உடையார்பாளையம் வேலாயுதம், கழகப் பிரச்சாரம் செய்தார் என்பதற்காக நவம்பரில் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டார்.

1948       காந்தியார், ஜனவரி 30இல் கோட்சே எனும் பார்ப்பனரால்

சுடப்பட்டதற்கு மிகவும் வருந்திய பெரியார், இரங்கலுரை புகன்றார். ஓமந்தூரார் ஆட்சி மார்ச் 2இல் கருஞ்சட்டைப் படையைத் தடை செய்து, அடக்குமுறையை ஏவி விட்டது. தூத்துக்குடியில் மே 8, 9இல் 18ஆவது திராவிடர் கழக மாகாண மாநாடு சிறப்புற நடந்தேறியது. கல்வி அமைச்சர் அவினாசிலிங்கனாரால் ஜூன் 20இல் மீண்டும் இந்தி திணிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, ஜூலை 17இல் சென்னை செயின்ட் மேரீஸ் மண்டபத்தில் மறைமலை அடிகள் தலைமையில் மாபெரும் கூட்டம் நடைபெற்றது. பெரியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா முதலிய தலைவர்கள் பல்துறைப் பெரியோர்கள் கலந்து கொண்டு இந்தி எதிர்ப்பு முழக்கமிட்டனர். முதல் இந்தி எதிர்ப்புப் போரில் ஒதுங்கியிருந்த திரு.வி.க., ம.பொ.சி. போன்றோரும் இம்முறை இந்தி எதிர்ப்பில் பங்கு கொண்டனர். அறிஞர் அண்ணாவை முதல் ‘சர்வாதிகாரி’யாகக் கொண்டு, இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போர் ஆகஸ்டு 10இல் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளி முன் துவங்கியது. தினமும் அணிஅணியாக தொண்டர்கள் சென்று மறியல் செய்து கைதாயினர். இராஜகோபாலாச்சாரியாருக்குக் கறுப்புக் கொடி காட்ட முடிவு செய்ததையொட்டி, பெரியார் ஆகஸ்டு 22இல் கைது செய்யப்பட்டு ஆகஸ்டு 27இல் விடுதலை செய்யப்பட்டார்.

சென்னை மாகாண கவர்னராக இருந்த எட்வர்டு ‘நை’ விலகி செப்டம்பர் 7 முதல் பவநகர் மகாராஜா கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்ற பின், ஆகஸ்டு 23இல் சென்னை வந்தபோது கறுப்புக்கொடி காட்டப்பட்டது. கறுப்புக் கொடியுடன் இருந்த தொண்டர்கள் கூட்டத்தில் அடக்குமுறை ஏவிவிடப்பட்டு பலர் தடியடிக்கு உள்ளாயினர்.

கவர்னர், பவநகர் மாகராஜா, முதலமைச்சர்ஓமந்தூரார், கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் ஆகியோருக்கும் கறுப்புக்கொடி காட்டப்பட்டது. ‘அய்தராபாத் சமஸ்தான இணைப்பு’ தொடர்பான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுச் சிக்கலான நிலைமையில் இருப்பதால் ‘ஓமந்தூரார் அமைச்சரவைக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது’ என்று கருதி, ஓமந்தூரார் வேண்டுகோளை மதித்து பெரியார் இந்தி எதிர்ப்புப் போரை தற்காலிகமாக ஒத்தி வைத்தார். ஜின்னா செப்டம்பர் 11இல் மறைந்தது குறித்து பெரியார் பெரிதும் வருந்தி அறிக்கை விடுத்தார். ஈரோட்டில் அக்டோபர் 23, 24இல் திராவிடர் கழக 19ஆவது மாகாண ஸ்பெஷல் மாநாடு நடைபெற்றது. ‘திராவிட நாடு’ படத்தை இம்மாநாட்டில் திரு.வி.க. திறந்து வைத்து விடுதலை முழக்கமிட்டார்.

இம்மாநாட்டில் அழகிரி தனது பொது வாழ்வின் இறுதி உரையை ஆற்றும்போது, ‘என் உடல்நிலையை கவனித்தால், எனக்கு இதுவே கடைசி மாநாடாக இருக்குமோ என்று அஞ்சுகிறேன். என் தலைவனுக்கு இறுதி வணக்கத்தைச் செலுத்தவே இன்று வந்தேன்’ என்று உருக்கமாகக் குறிப்பிட்டார்.

பெரியார் இந்தி எதிர்ப்புப் போரை ஒத்தி வைத்து அரசுக்குத் தன் நல்லெண்ணத்தைக் காட்டியபோதும், கட்டாய இந்தித் திணிப்பை இரத்து செய்ய மாநில அரசு மறுத்துவிட்டது. எனவே, நவம்பர் 2இல் மீண்டும் இந்திப் போர் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தொடங்கியது. இது தொடர்பாக, நாடெங்கும் நடைபெறவிருந்த பிரச்சாரக் கூட்டங்களைத் தடுக்க அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இத்தடையை மீறி கும்பகோணத்தில் டிசம்பர் 19இல் போராட்டம் துவங்கியது. நாள்தோறும் தடையை மீறிச் சென்ற கழகத்தினர் கடும் அடக்குமுறைக்கும் தடிஅடி மண்டைப் பிளப்புக்கும் ஆளாயினர். நூற்றுக்கணக்கான கழக முன்னோடிகள் கைது செய்யப்பட்டனர். குடந்தையில் இரத்த ஆறு ஓடியது. பெரியார் தடையை மீறியதால் டிசம்பர் 18இல் கும்பகோணத்தில் கைது செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து விடுவிக்கப்பட்டார். அன்னை மணியம்மையார், என்.வி.நடராசன் ஆகியோர் குடந்தைப் போரில் ஈடுபட்டு 2 மாதச் சிறைத் தண்டனை பெற்றனர். சென்னையில் மறியலில் ஈடுபட்ட கழக வீரர்கள், வீராங்கனைகள் கைது செய்யப்பட்டனர். இரண்டாம் இந்திப் போர் 59 நாள்கள் நடைபெற்று டிசம்பர் 28இல் முடிவுற்றது.

1949       ஓமந்தூராருக்கு காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்புத் தோன்றி

இராஜகோபாலாச்சாரியார் கோஷ்டியும், பிரகாசம் கோஷ்டியும் சேர்ந்து கொண்டு இவரை ஒழிக்க முனைந்தமையால் பதவி விலக வேண்டியதாகி ஏப்ரல் 7இல் 13 பேர்களைக் கொண்ட குமாரசாமி இராஜா அமைச்சரவை பதவியேற்றது. உடுமலைப்பேட்டையில் தடையை மீறியதால் பெரியார் ஏப்ரல் 16இல் கைதாகி வழக்கு தொடரப்பட்டு, ஆகஸ்டு 2இல் தள்ளுபடியாயிற்று. திருவண்ணாமலைக்கு வருகை தந்த இராஜகோபாலாச் சாரியாரை மே 14இல் பெரியார் சந்தித்து உரையாடினார். இயக்கத்துக்குப் பாதுகாப்புக் கருதி பெரியார் ஜூலை 9இல் மணியம்மையாரைத் திருமணம் செய்து  கொண்டார். திருமணத்தைக் காரணமாகக் காட்டி அண்ணா தலைமை யில் பலர் கழகத்தினின்றும் வெளியேறினர். இந்த காலகட்டத்தில், ‘நகர தூதன்’ எனும் இதழின் ஆசிரியர் திருமலைச்சாமி எழுதிய ‘துவேஷப் புயல்’ எனும் நூல் நல்ல விளக்கமாக அமைந்தது. செப்டம்பர் 17இல் அண்ணாவை நிறுவனராகக் கொண்டு ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ உருவானது.

இந்திய அரசியலமைப்பு நவம்பர் 26இல் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்துப் பெரியார் குரல் எழுப்பினார்.

1950       பெரியார் ஜனவரி 26 ‘குடியரசு’ நாளை ‘துக்க நாள்’ என்று

அறிவித்தார். ‘இது வெள்ளையனுக்கு இலஞ்சம் கொடுத்து, அவன் சுரண்டலுக்கு நிரந்தர வசதி செய்து கொடுத்து, தங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளப்பட்ட மேடோவர் ஆட்சிதான்’ என்று குறிப்பிட்டார். ஈ.வெ.கிருஷ்ணசாமி, பிப்ரவரி 4இல் முடிவெய்தினார். திருச்சியில் ஜூலை 14இல் பெரியார் மாளிகையை வேலூர் இ.திருநாவுக்கரசு திறந்து வைத்தார். மாஸ்டர் தாராசிங் சீக்கிஸ்தான் பெயரில் தனிநாடு கேட்கத் துவங்கியதை பெரியார் ஆதரித்தார். பிற்படுத்தப்பட்டவருக்கு வகுப்புரிமை செல்லாது என்று ஜூலை 28இல் சென்னை உயர்நீதிமன்றமும், செப்டம்பரில் உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தமை கண்டு, கொதித்தெழுந்து நாடெங்கும் வகுப்புரிமை நாள் கொண்டாடும்படி அறிவுறுத்தினார். கவர்னர் ஜெனரல் பதவியிலிருந்து நீங்கி பென்ஷன் பெற்று வந்த இராஜகோபாலாச்சாரியார் டெல்லி சென்று இலாகா இல்லாத மந்திரியானார். பெரியார் வகுப்புரிமைக் கிளர்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகமும் ஒத்துழைத்தது. மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு செல்லாமல் வகுப்புரிமைக் கோரி குரல் எழுப்பினர். ‘பொன் மொழிகள்’ நூலுக்காகப் பெரியாரும், ‘ஆரிய மாயை’ நூலுக்காக அண்ணாவும் 6 மாத சிறைத் தண்டனைப் பெற்று செப்டம்பர் 18இல் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் செப்டம்பர் 28இல் ஒன்றாக விடுதலை செய்யப்பட்டனர். திருச்சியில் வகுப்புரிமை மாநாடொன்றை டிசம்பர் 3இல் பெரியார் நடத்தி, பார்ப்பனரல்லாதார் ஒன்று திரண்டு போராடுமாறு செய்தார். சென்னை பாரிமுனையில் ‘செல்லாராம்ஸ்’ முன் 72 நாள்கள் நடைபெற்ற வடநாட்டு துணைக்கடை மறியலில் நூற்றுக்கணக்கான திராவிடர் கழகத் தோழர்கள் சிறையேகினர்.

1951       சென்னையில் வடநாட்டுச் சுரண்டலை எதிர்த்து மறியல்

செய்யவிருந்ததையொட்டி பெரியார் ஜனவரி 26இல் கைது செய்யப்பட்டு அன்றே விடுதலை செய்யப்பட்டார். இராஜகோபாலாச்சாரியார்  ஜனவரி 26இல் மத்திய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செப்டம்பரில் அதைவிட்டு விலகினார். பெரியாரின் வகுப்புரிமைப் போரும் வடநாட்டுத் துணிக்கடை மறியல் போரும் தொடர்ந்து நடைபெற்றன. அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சங்கத் தலைவரும் செயலாளரும் வடநாட்டிலிருந்து சென்னை வந்து பிப்ரவரி 3இல் பெரியாரைச் சந்தித்து ஆலோசனை நடத்திச் சென்றனர்.

பெரியாரின் வகுப்புரிமைப் போர் வெற்றி பெற்றது. இந்திய அரசியலமைப்பின் விதி 15இல் 4ஆவது உட்பிரிவைப் புதியதாகச் சேர்த்து வகுப்புரிமை வழங்கும் வகையில் முதன்முறையாக திருத்தப்பட்டது. இந்தத் திருத்தம் ஏற்பட மூல காரணமானவர் பெரியார் அவர்களே ஆவார். பெரியார் ஏப்ரல் 22இல் ‘காங்கிரஸ் ஒழிப்பு நாளை’யும் டிசம்பர் 16இல் ‘காங்கிரஸ் தோல்வி நாளையும்’ கொண்டாடும்படி கேட்டுக் கொண்டார்.

1952       முதலாவது (மார்ச்) பொதுத் தேர்தலில் பெரியாரின் பெரு

முயற்சியால் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. எனினும், அய்க்கிய முன்னணியினரின் ஒற்றுமை அற்ற தன்மையால், காமன்வீல் கட்சி, உழைப்பாளர் கட்சி மற்றும் சுயேச்சைகளைத் தன்பக்கம் இழுத்துக் கொண்டு, ‘கொல்லைப்புற வழி’யில் ஆச்சாரியார் ஏப்ரல் 10இல் 13 பேர் கொண்ட காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தார். அய்க்கிய முன்னணி உடைந்தது. திராவிட பார்லிமெண்டரி கட்சி என்ற பெயரில் தஞ்சை சுயம்பிரகாசம் 20க்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு சட்டமன்றத்தில் தனியே இயங்கி வந்தார். இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் செலக்ஷன் எனும் வடிகட்டும் முறையை புகுத்தியபோது அதனை திராவிடர் கழகம், தி.மு.க. ஆகிய இரண்டும் கடுமையாக எதிர்த்தன. இதுவரை கவர்னராகவிருந்த பவநகர் மகாராஜா பதவி விலக, ஜூன் 12இல் ஸ்ரீபிரகாசா கவர்னராகப் பொறுப்பேற்றார். ஆச்சாரியார் 6000 கிராமப் பள்ளிகளை மூடினார். மீதியுள்ள பள்ளிகளில் அரை நேரப் படிப்பும் அரை நேரம் ஜாதி தொழிலை செய்வதும் போதுமானது என்ற குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். திருவான்மியூர் சலவைத் தொழிலாளர் மாநாட்டில் ஜூன் 29இல் பேசும்போது, “எல்லோரும் படித்து விட்டால் வேலை எங்கிருந்து கிடைக்கும்? அவரவர் குலத் தொழிலை அவரவர் செய்ய வேண்டும்” என்று கூறினார். ஆகஸ்டு 1ஆம் நாள் இரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்க வேண்டும் என்று பெரியார் இட்ட கட்டளைக்கிணங்க நாடெங்கும் 600 இரயில் நிலையங்களில் உள்ள பெயர்ப் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகளை திராவிடர் கழகத்தினர் தார் கொண்டு அழித்தனர். அதே நாளில் திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் நாடெங்கும் இரயில் நிலையங்களில் இந்தியை தார்பூசி அழித்தனர்.  திருச்சி இரயில் நிலைய சந்திப்பில், பெரியார் இந்தி எழுத்துகளை தார்பூசி அழித்தார். சுயமரியாதைப் பிரச்சார ஸ்தாபனத்தை செப்டம்பர் 22இல் பெரியார் பதிவு செய்தார். திராவிட விவசாய தொழிலாளர் சங்கங்கள், தென்பகுதி இரயில்வே தொழிலாளர் யூனியன் போன்றவற்றை பெரியார் துவக்கினார்.

1953       பிப்ரவரியில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில்

பெரியார், ‘சென்னை தமிழ்நாட்டுக்கே சொந்தமானது’ என்று முழங்கினார். பிப்ரவரி 22இல் று.ஞ.ய. சவுந்திர பாண்டியனாரும், ஏப்ரல் 22இல் கைவல்யமும், மே 6இல் ஆர்.கே. சண்முகம் (செட்டியாரும்), செப்டம்பர் 17ல் திரு.வி.க.வும் மற்றும் ஜூன் 30 சாக்கோட்டை எஸ்.ஆர். சாமியும், முத்தையா (முதலியார்) ஆகியோரும் முடிவெய்தியமை திராவிடர் இயக்கத்துக்கு பேரிழப்புகளாகும். நாடெங்கும் கணபதி உருவப் பொம்மையை மே 27இல் புத்தர் விழாக் கொண்டாடி பொதுக் கூட்டத்தில் உடைக்கும்படி பெரியார் அறிவுறுத்திட தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கான பிள்ளையார் பொம்மைகள் உடைந்து நொறுங்கின. பெரியார் இரண்டாம் முறையாக ஆகஸ்டு 1இல் இரயில் நிலைய பெயர்ப் பலகையிலுள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் கிளர்ச்சியை நடத்தினார்.

சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்டு 31இல் தீர்ப்பளித்தது கண்டு பெரியார் வெகுண்டார்.

ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டம் ஒழிந்தபாடில்லை. பெரியார், ‘பார்ப்பானே வெளியேறு! திராவிடனே தயாராயிரு!’ என்று குரல் கொடுத்தார்.  ஆச்சாரியார், ‘திராவிட இயக்கத்தை எறும்பு, மூட்டைபூச்சியைப்போல் நசுக்குவேன்!’ என்றார். ஆச்சாரியாரியார் கல்வித் துறையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வடிகட்டும் முறையை மீண்டும் புதுப்பித்தார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் அக்டோபர் 10, 11 நாள்களில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் ‘கழக ஆண் பெண் அனைவரும் சட்டத்துக்குட்பட்ட கத்தியை வைத்துக் கொள்ளுங்கள்’ என பெரியார் ஆணையிட்டார். ஈரோடு சண்முக வேலாயுதம் துவக்கிய ‘ஈரோட்டுப் பாதை’ வார இதழை பெரியார் நவம்பர் 8இல் துவக்கி வைத்தார்.

1954       பெரியார் முயற்சியால் ஈரோட்டில் ஜனவரி 24இல் ‘குலக்கல்வித்

திட்ட எதிர்ப்பு மாநாடு’ டாக்டர் எஸ்.ஜி. மணவாள இராமானுஜம் தலைமையில் நடைபெற்றது. இது போன்று தமிழகமெங்கும் குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு மாநாடுகள் நடைபெற்றன.

நாகையில் மார்ச் 27, 28இல் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தீர்மானித்தபடி குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் படை நீடாமங்கலம் அ.ஆறுமுகம் தலைமையில் சென்னை நோக்கிப் புறப்பட்டது. படை சென்னையை அடையுமுன்னே ‘உடல்நலமில்லை’ என்று காரணம் காட்டி, ஆச்சாரியார் மார்ச் 30இல் முதலமைச்சர் பதவியிலிருந்து வெளியேறினார். பெரியார் ஆதரவுடன் காமராசர் முதலமைச்சராக ஏப்ரல் 14இல் பதவியேற்று, அய்ந்தாவது நாளில் (ஏப்ரல் 18இல்) குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார்.

நாடெங்கும் இராமாயணத்தை தோலுரித்துக் காட்டும் பிரச்சாரத்தை பெரியார் நடத்த, நடிகவேள் எம்.ஆர். இராதா, ‘இராமாயணம்’ நாடகம் நடத்தி அதன் யோக்கியதையை அம்பலப்படுத்தினார்.

1955       பெரியார் பர்மா, மலேயா சுற்றுப்பயணம் முடித்து ஜனவரி

9இல் சென்னை திரும்பினார். தஞ்சையில் அழகிரி நினைவு நாளான மார்ச் 28இல் அழகிரி கல்லறைக்கு மலர் வளையம் வைக்கச் சென்ற பெரியார், இராஜாகோரி சுடுகாட்டில், ‘சூத்திரர்கள் இடம்’ என்ற அறிவிக்கும் கல் ஒன்று இருப்பதைக் கண்டு மனம் பதறி, தஞ்சை நகராட்சிக்கு விண்ணப்பித்து அதை அகற்றக் கோரினார். திருச்சியில் ஜூலை 17இல் கூடிய மத்திய நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்தும், இந்திய கூட்டாட்சிக்குள் தமிழர்கள் இருக்க விருப்பமில்லை என்பதை உணர்த்தவும் ஆகஸ்டு 1இல் நாடெங்கும் ‘இந்திய தேசிய கொடியை எரிக்க வேண்டும்’ என்ற போராட்ட அறிவிப்பை பெரியார் வெளியிட்டார். இதன் எதிரொலியாக காமராசர் மத்திய-மாநில அரசுகள் சார்பாக இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று ஜூலை 30ல் பெரியாரிடம் ஒரு உறுதிமொழியைக் கொடுக்கவே, கிளர்ச்சியை ஒத்தி வைப்பதாகப் பெரியார் அறிவித்தார்.

தட்சிணப் பிரதேச அமைப்பு முயற்சியை திராவிடர் கழகம் வன்மையாக எதிர்த்தது.

1956       பி.ஜி.கெர் தலைமையிலான ‘இந்திக் கமிஷ’னை திராவிடர்

கழகம் புறக்கணிக்கிறது என்பதற்கு அறிகுறியாக ஜனவரி 9ல் அக்குழு சென்னை வந்தபோது ஏ.பி.ஜனார்த்தனம் தலைமையில் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. தட்சிணப் பிரதேச முயற்சியைக் கைவிடுமாறு பெரியார் நேருவையும், காமராசரையும் தந்தி மூலம் கேட்டுக் கொண்டார். காமராசர், பிப்ரவரி 23இல் தட்சிணப் பிரதேச யோசனையை நிராகரித்தார்.

திராவிடர் கழகத் தொண்டர்கள் பெரியாரின் அறிவிப்புக்கிணங்க ஆகஸ்டு 1இல் ‘இராமன் பட’ எரிப்புக் கிளர்ச்சி நடத்தினர். இக்கிளர்ச்சி தொடர்பாக பெரியார், அன்றே கைது செய்யப்பட்டு மாலையிலேயே விடுதலையானார். மொழி வழி மாநிலங்கள் நவம்பர் 1இல் அமைந்ததை பெரியார் வரவேற்றதோடு, இதன்பின் திராவிட நாடு கோரிக்கையைப் புறக்கணித்து, ‘தனித் தமிழ்நாடு கொள்கை’யை வலியுறுத்தினார். திருச்சி கலெக்டர் மலையப்பன் பற்றி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளைக் கண்டித்து நவம்பர் 4இல் திருச்சியில் பேசினார். தாழ்த்தப்பட்ட மக்களின் தலைசிறந்த தலைவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், டிசம்பர் 6இல் முடிவெய்தினார். இது வரை கவர்னராக இருந்த பிரகாசா நீங்கி டிசம்பர் 10இல் ஏ.ஜே.ஜான் தமிழகக் கவர்னராகப் பொறுப்பேற்றார். தமிழ்நாட்டில் தமிழை ஆட்சி மொழியாக்கும் மசோதா டிசம்பர் 27இல் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

1957       மார்ச் 1, 4, 6, 8 மற்றும் 11 தேதிகளில் 2ஆவது பொதுத்

தேர்தல் நடைபெற்றது. பெரியார், காமராஜரின் காங்கிரசை முழுமூச்சுடன் ஆதரித்தார். தேர்தலில் காமராஜர் வெற்றியடைந்து ஏப்ரல் 13இல் எட்டு அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை அமைத்தார். திருச்சி கலெக்டர் மலையப்பன் வழக்கு தொடர்பாக பார்ப்பன நீதிபதிகளின் தீர்ப்பைக் கண்டித்தமைக்காக பெரியார் மீது கோர்ட் அவமதிப்புக் குற்றம் சுமத்தப்பட்டது. அதையொட்டி தொடரப்பட்ட வழக்கில் ஏப்ரல் 23இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க ஒரு ‘ஸ்டேட்மெண்ட்’டை பெரியார் தாக்கல் செய்தார். சென்னை ‘முரளி பிராமணாள் கபே’ முன் ‘பிராமணாள்’ பெயர்ப் பலகை அழிப்புக் கிளர்ச்சி மே 5இல் துவங்கி நாள்தோறும் திராவிடர் கழகத் தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டு சிறையேகினர்.

தஞ்சை மாவட்டத்திலிருந்து ஜூன் 20இல், 22 தோழர்கள் அடங்கிய ‘சாதி ஒழிப்புப் படை’ ஒன்று நீடாமங்கலம் அ.ஆறுமுகம் தலைமையில் புறப்பட்டு, ஜூலை 30இல் சென்னையை அடைந்தது. இப்படையினர் மீது ஆகஸ்டு 2இல் அரசு வழக்குத் தொடர்ந்து 5 வாரம் சிறையிலடைத்தது. ஜூலை 23இல் டாக்டர் வரதராஜுலுவும், ஆகஸ்டு 30இல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் முடிவு எய்தினர். ஆகஸ்டில் நடைபெற்ற மத்திய கமிட்டியில் காந்தி கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுவரை கவர்னராக இருந்த ஏ.ஜே.ஜான் நீங்கி, நீதிபதி பி.வி. ராஜமன்னார் அக்டோபர் 1இல் கவர்னராக (பொறுப்பு) பதவி ஏற்றார். நவம்பர் 3இல் தஞ்சையில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியாரின் எடைக்கு எடை வெள்ளி அளிக்கப்பட்டதோடு, நவம்பர் 26இல் நாடெங்கும் சாதிக்குப் பாதுகாப்பாக இருக்கும் அரசியல் சட்டத்தைக் கொளுத்த வேண்டும் என்ற போராட்டம் பெரியாரால் அறிவிக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள சாதியைப் பாதுகாக்கும் பிரிவை நவம்பர் 26இல் 10 ஆயிரம் தி.க. தொண்டர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். சில ஆயிரம் பேர் சிறை பிடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர். பெரியார் சட்ட எரிப்புப் போராட்டத்திற்கு முதல் நாளே கைது செய்யப்பட்டு, சில நாள்களில் விடுதலையானார். மீண்டும் டிசம்பர் 14இல் சிறை ஏகினார்.

1958       பெரியார் உள்பட தமிழகத் தலைவர்களை ஆணவத்துடன்

இழிவாகப் பேசிய நேருவுக்கு எதிர்ப்புக் காட்டுமுகத்தான் தி.மு.க. கறுப்புக்கொடி காட்டியது. தற்காலிக கவர்னர் இராஜமன்னார் பதவி நீங்கி ஜனவரி 25இல் விஷ்ணூராம் மேதி கவர்னராகப் பொறுப்பேற்றார். எட்டுமாத காலம் 1010 தோழர்களை சிறைக்கு அனுப்பி சென்னை ‘முரளி பிராமணாள் கபே’ முன் நடத்திய ‘பிராமணாள்’ அழிப்பு கிளர்ச்சி வெற்றியடைந்தது. சங்கராச்சாரியார் ஆலோசனையுடன் ‘முரளி அய்டியல் ஓட்டல்’ என்று மார்ச் 22இல் பெயர் மாற்றம் பெற்றது. ‘நாம் தமிழர்’ இயக்கம் சார்பாக பிப்ரவரி 9இல் ‘தமிழ்நாடு விடுதலை இயக்க’த்தை சி.பா. ஆதித்தனார் தொடங்கினார். சென்னை மத்திய சிறையிலிருந்து மே 13இல் பெரியார் விடுதலையானார். தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ‘சுதந்திரத் தமிழ்நாடு மாநாடு’களில் பெரியாரும் சி.பா. ஆதித்தனாரும் கலந்து கொண்டு விடுதலை உணர்வைத் தட்டியெழுப்பினர். ‘இளந்தமிழா, புறப்படு போருக்கு’ என்ற கட்டுரையை ‘விடுதலை’யில் வெளியிட்டமைக்காக மணியம்மையார் மீது மே 7இல் வழக்கு தொடரப்பட்டு, மே 18இல் நூறு ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் ஒரு மாதம் சிறைவாசமும் விதிக்கப்பட, மணியம்மையார் சிறை புகுந்து செப்டம்பர் 1இல் விடுதலை ஆனார்.

அரசியல் சட்ட எரிப்புப் போரில் கலந்துகொண்டு சிறை சென்ற திராவிடர் கழகத் தோழர்களில், இருவர் சிறையிலும், விடுதலையான பின்னர் உடல் நலிவுற்று இருபது பேரும் முடிவெய்தினர்.

சிறையில் முடிவெய்திய பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகிய இருவர் சடலங்களையும் அரசிடமிருந்து மணியம்மையார் போராடிப் பெற்று மார்ச் 11இல் தமது தலைமையில் பல்லாயிரம் மக்களடங்கிய உணர்ச்சிமிக்க இறுதி ஊர்வலமொன்றை நடத்தி இறுதி மரியாதை செலுத்திய நிகழ்ச்சி என்றென்றும் நினைவில் நிற்கக் கூடியதாகும்.

1959       பெங்களூரில் ஜனவரி 10, 11இல் ஜெனரல் கரியப்பா, நீதிபதி

மேடப்பா போன்றோர் கலந்து  கொண்ட அகில இந்திய ஆட்சி மொழி மாநாட்டில் பெரியார் கலந்து  கொண்டு, ‘இந்தி எப்போதும் வேண்டாம், ஆங்கிலமே நீடிக்க வேண்டும்!’ என்று முழக்கமிட்டார். பெரியார் பிப்ரவரி 1இல் வடநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் சுயமரியாதை இயக்க பகுத்தறிவுக் கொள்கைகளை எடுத்துரைத்தார். பிப்ரவரி 28இல் பெரியார் குழுவினர் சென்னை திரும்பினர். திருச்சி கி.ஆ.பெ. விசுவ நாதத்தால் நடத்தப்பட்ட ‘ஆகாஷ்வாணி’ ஒழிப்புப் போராட்டத்திற்கு பெரியார் ஆதரவுக் குரல் கொடுத்தார். மே 21இல் டாக்டர் தர்மாம்பாள் அம்மையாரும் நவம்பர் 7இல் எம்.கே. தியாகராஜ பாகவதரும், நவம்பர் 23இல் திருவாரூரில் தண்டவாளம் என்கிற ரங்கராசுவும், டிசம்பர் 16இல் நாவலர் ச.சோமசுந்தர பாரதியாரும் முடிவு எய்தினர்.

1960 ‘சாதி ஒழிப்புக்கு ஒரே வழி நாட்டுப் பிரிவினைதான்’ என்று

பெரியார் அறிவித்ததோடு, ஜூன் 6இல் நாடெங்கும் தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப் படத்தைக் கொளுத்தக் கோரினார். தேசப் படத்தைக் கொளுத்தி 4000 பேர் கைதாயினர். ‘நாம் தமிழர்’ இயக்கமும் பட எரிப்புப் போரில் கலந்து கொண்டது. பட எரிப்பு நாள் அன்று காலை, தடுப்புப் காவல் சட்டப்படி பெரியார், சி.பா. ஆதித்தனார், தோழர்கள் கி.வீரமணி, குருசாமி, புலவர் கோ. இமயவரம்பன், ஆகியோரும் கைது ஆயினர்.

அக்டோபர் 23இல் ‘ஹைக்கோர்ட் நீதிப் போக்குக் கண்டன நாள்’ என்ற பெயரில் திருச்சியில் நடைபெற்ற பல்லாயிரவர் கூடிய கூட்டத்தில் உயர்நீதி மன்றத்தில் பார்ப்பன வழக்கறிஞர்களின் போக்கைக் கண்டித்து பெரியார் முழக்கமிட்டார்.

1961       ஜனவரி 17இல் சாமி. சிதம்பரனார், செப்டம்பர் 22இல்

‘குடிஅரசு’ பொறுப்பாளராக இருந்த கரிவரதசாமி, செப்டம்பர் 23இல் திருவாரூர் சிங்கராயர், அக்டோபர் 12இல் திருச்சி பிரான்சிஸ் ஆகியோர் முடிவெய்தியமை இயக்கத்துக்கு பேரிழப்பாய் அமைந்தன. சென்சஸ் கணக்கெடுப்பின்போது ‘எல்லோரும் நாத்திகர் என்றே சொல்லுங்கள்’ என்று தி.க. தோழர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். காமராசரை பொதுத் தேர்தலில் ஆதரிக்க வேண்டுமென்று மக்களைக் கேட்டுக் கொண்டு பெரியார் தீவிரப் பிரச்சாரம் செய்தார். தி.மு.க.வை விட்டு விலகி ஈ.வெ.கி. சம்பத் ஏப்ரல் 19இல் ‘தமிழ் தேசியக் கட்சி’யைத் துவக்கினார்.

1962       ஜனவரி 1இல் ‘விடுதலை’யில் ‘பார்ப்பனத்  தோழர்களுக்கு’

என்று பெரியார் எழுதிய கட்டுரை பார்ப்பனருக்கு அறிவுரை யாகவும் எச்சரிக்கையாகவும் அமைந்தது. காமராசரின் வெற்றிக்காக திராவிடர் கழகம் கடுமையாக உழைத்தது. தேர்தலில் காங்கிரஸ் வெற்றியடைந்தது. காமராசர் 9 பேர் கொண்ட அமைச்சரவையை மார்ச் 15இல் அமைத்தார். ஜனவரி 20இல் டி.ஏ.வி. நாதன், ஜூலை 27இல் மூவலூர் இராமாமிர்தத்தம்மையார் முடிவெய்தினர்.

1963       பழம்பெரும் சுயமரியாதை பொதுவுடைமை வீரர்

ப.ஜீவானந்தம் சனவரி 18இல் முடிவு எய்தினார். எதிர்வரும் 1965ஆம் ஆண்டு சனவரி 26ஆம் நாளிலிருந்து இந்தியை ஆட்சி மொழி யாகும் மசோதாவை உள்துறை அமைச்சர் ஏப்ரல் 13ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததும் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு அலை வீசத் தொடங்கியது.

காமராசர் கட்சிப் பணி ஆற்றும் பொருட்டு முதலமைச்சர் பதவியி னின்றும் பதவி விலகத் தீர்மானித்திருப்பது அறிந்த பெரியார், தனது எதிர்ப்பைத் தெரிவித்ததோடு அவர் விலகுவது தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் காமராசருக்கும் தற்கொலையாக முடியும் என்று தந்தி மூலம் அவருக்கு தெரிவித்தார். எனினும், காமராசர் பதவி விலகி, அக்டோபர் 3இல் திரு.பக்தவத் சலம் முதலமைச்சராகி 8 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையை அமைத்தார்.

சி.பி. இராமசாமி (அய்யர்) தலைமையிலான இந்திய ஒருமைப்பாட்டுக் குழுவின் பரிந்துரைப்படி நாடாளுமன்றத்தில் பிரிவினைத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்திய ஒருமைப்பாட்டுக் கூப்பாட்டையும், பிரிவினைத் தடைச் சட்டத்தையும் பெரியார் கண்டித்துக் குரல் எழுப்பினார்.

1964       நில உச்சவரம்புச் சட்டம் செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்

தீர்ப்பு அளித்ததை ஒட்டி பெரியார் அறிவுரைக்கிணங்க நாடெங்கும் ஏப்ரல் 19இல் ‘சுப்ரீம் கோர்ட் கண்டன நாள்’ திராவிடர் கழகத்தினரால் கடைப்பிடிக்கப்பட்டது. ஏப்ரல் 21இல் புரட்சிக் கவிஞர் முடிவு எய்தியது திராவிடர் இயக்கத்துக்கு பேரிழப்பாய் அமைந்தது. இதுவரை கவர்னராக இருந்து வந்த விஷ்ணுராம் மேதி நீங்கி, ஜெயசாமராஜ உடையார் சென்னை மாநில கவர்னராகப் பொறுப்பேற்றார். கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்து, நேரு மே 27இல் முடிவு எய்தியமைக்கு பெரியார் ஆழ்ந்த இரங்கலுரை கூறினார். திருச்சியில் கல்லூரி தொடங்கப் பெரியார் ரூபாய் ஐந்தரை இலட்சம் நன்கொடை அளித்தார். தமிழ் தேசியக் கட்சி செப்டம்பர் 6இல் கலைக்கப்பட்டு காங்கிரசுடன் சேர்ந்தது.

1965       இந்தி எதிர்ப்புத் தீ நாடெங்கும் பரவி ஜனவரி 25 முதல்

பிப்ரவரி 15 வரையிலான காலத்தில் உச்சகட்டத்தை அடைந்து மாணவர்களின் தீவிரப் போராட்டமாக வளர்ந்து தமிழகமே ஸ்தம்பித்தது. இக் காலகட்டத்தில் திகிலூட்டுட்ம வன்முறைச் சம்பவங்கள், போலீஸ் அடக்கு முறை, துப்பாக்கிச் சூடு, உயிரிழப்பு ஆகிய அனைத்தும் நிகழ்ந்தன. பெரியார் தலைமையில் நடந்த முதல் இரண்டு இந்தி எதிர்ப்புப் போர்களிலும் தலைகாட்டாத வன்முறை இப்போது நிகழ்ந்திருப்பதைக் கருத்தில் கொண்டு பெரியார், “இந்தி எதிர்ப்பின் பெயரால் இப்போது நடக்கும் வன்முறைக்குக் காரணம் பார்ப்பனரும், பத்திரிகைக்காரனுமே” என்று சுட்டிக்காட்டினார். பெரியார் வேண்டுகோளின்படி ஏப்ரல் 8, 9 நாள்களில் நாடெங்கும் திராவிடர் கழகத் தோழர்கள் கம்ப இராமாயணத்தைக் கொளுத்தி சாம்பலை ‘விடுதலை’ அலுவலகத்துக்கு அனுப்பினர். அக்டோபர் 11இல் குத்தூசி குருசாமி முடிவெய்தினார். அக்டோபர் 31இல் குன்றக்குடி அடிகளார் ‘விடுதலை’ப் பணிமனையின் புதிய கட்டிடத்தை சென்னையில் பெரியார் தலைமையில் திறந்து வைத்தார்.

1966       காங்கிரஸ் தலைவர் காமராசர் முயற்சியால் இந்திராகாந்தி

ஜனவரி 19இல் இந்தியப் பிரதமரானார். கவர்னர் ஜெயசாமராஜ உடையார் நீங்கி, ஜனவரி 4 முதல் ஜூன் 27 வரை நீதிபதி என்.சந்திராரெட்டி கவர்னர் (பொறுப்பு) ஆனார். பின்னர், ஜூன் 98 முதல் உஜ்ஜல் சிங் கவர்னரானார். பக்தவத்சலம் ஆட்சியின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டு சலிப்படைந்த பெரியார், ‘பக்தவத்சலம் ஆட்சி ஒழிக!’ என்று குரல் கொடுத்தார். பெரியார் கட்டளைப்படி சங்கராச்சாரியாரைப் பகிஷ்கரிக்க அவர் சென்ற விடமெல்லாம் திராவிடர் கழகத் தொண்டர்கள் கறுப்புக் கொடி காட்டினர். டில்லியில் ‘பசுவதைத் தடுப்பு’ என்ற பெயரால் நவம்பர் 7இல் காமராசர் வீட்டுக்கு தீ வைக்க முயன்ற பார்ப்பனக் கூட்டத்தின் செயலைக் கண்டித்து குரலெழுப்பிய பெரியார், ‘சீக்கியர் போலக் கத்தி வைத்துக் கொள்ளுங்கள்! காமராசரைப் பாதுகாருங்கள் !’ என்று நவம்பர் 14இல் அறிவித்தார். அதோடு, நவம்பர் 26இல் ‘காமராசர் கொலை முயற்சி கண்டன நாள்’ கடைபிடிக்கக் கோரினார்.

1967       பெரியார், பக்தவத்சலம் ஆட்சி மீது வெறுப்படைந்திருந்

தாலும் காமராசரின் தலைமையின் கீழ் இயங்கும் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். பிப்ரவரியில் நடைபெற்ற 4ஆவது பொதுத் தேர்தலில் தி.மு.க. 173 இடங்களில் போட்டியிட்டு 137 இடங்களை வென்றது. அண்ணா மார்ச் 6இல் 9 பேர் கொண்ட பார்ப்பனரல்லாத அமைச்சரவையை அமைத்தார். அண்ணா தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பதவியேற்பதற்கு முன்பு பார்ப்பனர் சூழ்ச்சிக்கு ஆட்படாமல் பெரியாரைச் சந்தித்தார், பெரியார் ஆதரவை நல்கினார்.

தி.மு.க. ஆட்சியில் முதன்முதலாக ஏப்ரல் 26இல் வடமொழிப் பெயர்களான ‘ஸ்ரீ, ஸ்ரீமதி, குமாரி’ என்பனவற்றை ஒழித்து, ‘திரு, திருமதி, செல்வி’ என வழங்கப் பெறும் என ஆணையிடப்பட்டது.

“கடவுள் இலலை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி” என்ற கடவுள் மறுப்பு வாசகம், மே 24, 25 நாள்களில் விடயபுரத்தில் நடைபெற்ற சுயமரியாதை வகுப்புகளில் உரையாற்றிய பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்டு உலகுக்கு அளிக்கப்பட்டது.

“இந்த ஆட்சியே, பெரியாருக்குக் காணிக்கையாக்கப்பட்டதுதான்” என்று அண்ணா ஜூன் 20இல் சட்டமன்றத்தில் அறிவித்தார். தமிழக சட்ட மன்றத்தில் சென்னை மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்யக் கோரும் தீர்மானம் ஜூலை 18இல் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 2இல் ஆனைமலை நரசிம்மன் முடிவெய்தினார். மருத்துவமனையிலிருந்த பெரியார் மருத்துவரின் அனுமதி பெற்று ஆகஸ்டு 26இல் சென்னையில் நடிகவேள் எம்.ஆர். இராதாவின் இரு மகள்களின் திருமணத்துக்கும் சென்று தலைமையேற்று நடத்தி வைத்துவிட்டுத் திரும்பினார். திருச்சியில் செப்டம்பர் 17இல் பெரியார் சிலையை காமராசர் திறந்து வைத்தார். சிவசேனைக் கொடுமையை எதிர்த்து அக்டோபர் 1இல் சென்னையில் நடைபெற்ற மாபெரும் ஊர்வலத்தில் பெரியார் கலந்து கொண்டார். நவம்பர் 28இல் தமிழக சட்டமன்றத்தில் சுயமரியாதைத் திருமண மசோதா ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது.

1968       ஜனவரி 17இல் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட

சுயமரியாதைத் திருமணச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்தது. பெரியார் அறிவிப்பிற்கிணங்க ஏப்ரல் 14இல் நாடெங்கும் ‘டில்லி ஆதிக்கக் கண்டன நாள்’ என்ற பெயரால் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, ‘தமிழ்நாடு-விடுதலை’ முழக்கமிடப்பட்டது. அக்டோபர் 7இல் வடநாட்டு சுற்றுப்பயணத்தைத் துவக்கிய பெரியார் 12, 13 தேதிகளில் லக்னோவில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் மாநாட்டிலும் மற்றும் பல இடங்களிலும் ‘சாதி ஒழிப்பு’ மற்றும் ‘விடுதலை’ முழக்கமிட்டார். அக்டோபர் 20இல் சென்னை திரும்பினார். அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்களை அகற்றும்படி தி.மு.க. அரசு ஆணையிட்டதைப் பெரியார் பாராட்டி மகிழ்ந்தார். உடல்நலம் குன்றி அமெரிக்காவுக்கு சிகிச்சை பெறச் சென்ற அண்ணா, நவம்பர் 6இல் சென்னை திரும்பினார்.

1969       ஜனவரி 14இல் அண்ணாவின் தி.மு.க. அரசு முயற்சியால்

‘சென்னை இராஜ்யம்’ என்பது ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் பெற்றது. பிப்ரவரி 3இல் அண்ணா முடிவு எய்தியமைக்கு பெரிதும் வருந்தி, ‘நடக்கக் கூடாதது நடந்து விட்டது. இது 4 கோடி மக்களையும் பொறுத்து பரிகாரம் காண முடியாத துக்கச் சம்பவமாகும்’ என்று பெரியார் அறிக்கை விடுத்தார். பிப்ரவரி 10இல் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான  தி.மு.க. அமைச்சரவை பதவியேற்றது. கலைஞர் முயற்சியால் செப்டம்பர் 1 முதல் வானொலியில் ‘பிராந்தியச் செய்திகள்’ என்பது மாறி ‘மாநிலச் செய்திகள்’ என்று அறிவிக்கப்பட்டது. நவம்பர் 16இல் திருச்சியில் கூடிய திராவிடர் கழக மத்திய கமிட்டியில் ‘கர்ப்பக் கிருக நுழைவுக் கிளர்ச்சி’ நடத்த முடிவு செய்யப்பட்டது. பெரியாரால் எழுதப்பட்ட ‘இராமாயண பாத்திரங்கள்’ என்னும் நூலின் ஆங்கிலம், இந்திப் பதிப்பு, உ.பி. அரசால் தடைவிதிக்கப் பட்டது. தஞ்சை, தர்மபுரி ஆகிய இடங்களில் பெரியார் சிலைகள் முதல்வர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்டன.

1970       பெரியார் சிலையின் கீழ் அவர் சொல்லிய வாசகமான

‘கடவுள் மறுப்பு’க் கருத்துகள் இருப்பது நியாயமானது என்று ஜனவரி 6இல் தமிழக அரசு தலைமைச் செயலாளர் அறிவித்தார். திருச்சி பெரியார் மாளிகையில் ‘உண்மை’ மாத இதழை பெரியார் துவக்கினார். முதல்வர் கலைஞர் வேண்டுகோளுக்கு இணங்கி ஜனவரி 18இல் கர்ப்பக் கிருக நுழைவுக் கிளர்ச்சியைப் பெரியார் ஒத்தி வைத்தார். சட்டநாதன் தலைமையிலான பிற்பட்டோர் நலக் குழுவினர் ஜனவரி 22இல் பெரியாரை சந்தித்து அரிய ஆலோசனை பெற்றனர். உ.பி. அரசு, பெரியாரின் இந்தி-இராமாயணப் பாத்திரங்கள் நூலைத் தடை செய்ததை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ‘ரிட்’ தாக்கல் செய்யப்பட்டது. அலகாபாத்தைப் போலவே டில்லியிலும் பெரியாரின் இராமாயணப் பாத்திரங்கள் இந்திப் பதிப்பு (கச்சிராமாயண் எனும் பெயரில் அசோக் புத்தகாலயா வெளியீடு  – மொழி பெயர்ப்பாளர் – லையி சிங் யாதவ்) டில்லி லெப்டினண்ட் கவர்னரால், பிப்ரவரி 28இல் தடை செய்யப்பட்டது. உலக நாடுகள் அவையைச் சேர்ந்த கல்வி, அறிவியல், பண்பாட்டுக் கழகத்தாரால் (ரநேளஉடி) சென்னை இராஜாஜி மண்டபத்தில் நடந்த விழாவில் பெரியாருக்கு ‘விருது’ வழங்கப்பட்டது. மத்தியக் கல்வி அமைச்சர் திரிகுணசென் தலைமையில் முதல்வர் கலைஞர் இவ்விருதை வழங்கினார், விருது வாசகமாவது:

“ஞநசலைநச வாந ஞசடியீhநவ டிக வாந சூநற ஹபந; வாந ளுடிஉசயவநள டிக ளுடிரவா நுயளவ ஹளயை, குயவாநச டிக வாந ளுடிஉயைட சுநகடிசஅ ஆடிஎநஅநவே யனே ஹசஉh நநேஅல டிக பைnடிசயnஉந, ளரயீநசவைவைiடிளே, அநயniபேடநளள உரளவடிஅள யனே யௌநடநளள அயnநேசள.”

-(ரநேளஉடி)

“பெரியார் புத்துலகத் தொலைநோக்காளர்; தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமுதாயச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள், ஆதாரமற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி.”                             – யுனெஸ்கோ

சேலம், திண்டுக்கல்லில் பெரியார் சிலைகள் திறக்கப்பட்டன.

1971       ஜனவரி 12இல் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்

எனும் சட்டம் தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றத்தில் நிறைவேறி யது. ஜனவரி 23இல், சேலத்தில் திராவிடர் கழகச் சார்பில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் இராமன் பொம்மை செருப்பாலும், விளக்குமாற்றாலும் அடிக்கப்பட்டது. மார்ச் மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. வென்று, கலைஞர் தலைமையிலான அமைச்சரவை மார்ச் 15இல் மீண்டும் பதவியேற்றது. ஏப்ரல் 1இல் பாவலர் பாலசுந்தரம் முடிவெய்தினார். உ.பி.யில் பெரியாரின் இராமாயணப் பாத்திரங்கள் நூலின் இந்திப் பதிப்பை தடை செய்தது செல்லாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. புலவர் குழந்தை எழுதிய ‘இராவண காவியம்’ என்னும் நூலுக்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்டிருந்த தடையானது, மே 18இல் நீக்கப்பட்டது. ‘மாடர்ன் ரேஷனலிஸ்டு’ எனும் ஆங்கில மாத இதழ் செப்டம்பர் 1இல் துவக்கப்பட்டது. ஈரோட்டில் பெரியார் சிலை திறக்கப்பட்டது.

1972       பிப்ரவரி 22இல் ஈழத் தந்தை செல்வநாயகம் பெரியார்

திடலுக்கு வந்து பெரியாரைக் கண்டு உரையாடினார். ‘தமிழ்நாடு அர்ச்சகர் சட்டம் செல்லாது’ என மார்ச் 14இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆகஸ்டு 13இல் கடலூரில் பெரியார் சிலையை முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார். ‘கோயில் அறங்காவலர் குழுவில் தாழ்த்தப்பட்டோர் ஒருவர் கட்டாயம் இடம் பெறவேண்டும்’ என்ற மசோதா செப்டம்பர் 18இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பெரியார் பிறந்த நாள் விழாவையொட்டி பெரியாரின் கருத்துகளடங்கிய ‘உயர் எண்ணங்கள்’ எனும் சிறு நூல் ஒன்றரை இலட்சம் படிகள் அச்சிடப்பட்டு மிகக் குறைந்த விலையில் கழகத் தோழர்களால் நாடெங்கும் வழங்கப் பெற்றமை ஒரு புதுமையான ஏற்பாடாக அமைந்தது. செப்டம்பர் 24இல் புலவர் குழந்தை முடிவு எய்தினார். தி.மு.க.வினின்றும் நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்.  அக்டோபர் 8இல் அண்ணா தி.மு.க. என்ற பெயரால் ஒரு கட்சியைத் தொடங்கினார். டிசம்பர் 25ல் சி. இராஜகோபாலாச்சாரியார் முடிவு எய்தியமைக்குப் பெரியார் வருந்தி அறிக்கை விடுத்தார்.

1973       பிப்ரவரி 14இல் சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே

முதன் முறையாக தாழ்த்தப்பட்ட வகுப்பினரான வரதராசன்  நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பெரியார் பிறந்த நாளையொட்டி இவ்வாண்டும் ‘உயர் எண்ணங்கள்’ எனும் கருத்துத் தொகுப்பு நூல் நாடெங்கும் பரப்பப்பட்டது. செப்டம்பர் 30இல் மதுரையில் கருஞ்சட்டைப் படை மாநாடு எழுச்சி மிக்கதாக அமைந்தது. தஞ்சை, தர்மபுரியில் உள்ள பெரியார் சிலையின் கீழ் உள்ள கடவுள் மறுப்பு வாசகத்தை எதிர்த்து நடைபெற்ற வழக்கு அக்டோபர் 11இல் தள்ளுபடி ஆயிற்று. அக்டோபர் 14இல் சேலம் கூட்டத்தில், வடநாட்டில் கொண்டாடப்படும் ‘இராம் லீலா’வைக் கண்டித்துப் பெரியார் முழங்கினார். நாட்டுப் பிரிவினைக் கொள்கைத் தீவிரமாகப் பரப்பும் பொருட்டு நவம்பர் 28 முதல் தமிழகமெங்கும் – கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் பெரியார் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டிசம்பர் 8, 9 இல் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டை சென்னை பெரியார் திடலில் பெரியார் கூட்டி, 26.01.1974 அன்று கோயில் கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி நடக்கும் என்று அறிவித்தார். டிசம்பர் 19இல் தியாகராய நகர் சிந்தனையாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் தமது ‘இறுதி பேருரை’யில் இன எழுச்சி மற்றும் விடுதலைக் குரல் எழுப்பினார்.

டிசம்பர் 24இல் தமிழினம் அதிர்ச்சியுற்றுக் கண்ணீர் சிந்த, நலம் குன்றிய நிலையில் திராவிடர் இயக்கத் தந்தை பெரியார் முடிவு எய்தினார். ஒரு சகாப்தம் – நிறைவடைந்தது. கலைஞர் ஆட்சியில் பெரியார் மறைவுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.