Category: வேலூர்

திருப்பத்தூரில் இல்ல திறப்பு விழா

திருப்பத்தூரில் இல்ல திறப்பு விழா

திருப்பத்தூர் : வாணியம்பாடியை அடுத்துள்ள புல்லூர் கிராமத்தில் கழக வாணியம்பாடி செயலாளர் சுரேஷ்-இன் இல்லத் திறப்பு விழா மற்றும் கழக கொடியேற்று விழா 17.3.2024 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. விழாவின் தொடக்க நிகழ்வாக ஜெய்கர் – மருது ஆகியோரின் இசை நிகழ்ச்சி அமைந்தது. விழாவை நிலா தொகுத்து வழங்கினார். விழாவிற்கு வேலூர் மாவட்டத் தலைவர் திலிபன், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.ப.சிவா, மாவட்டப் பொருளாளர் த.சதிஷ் சமத்துவன், பேர்ணாம்பட்டு நகரச் செயலாளர் பார்த்திபன், கஜேந்திரன், ஆசிரியர் பாஸ்கரன், செந்தில், வேலூர் சதிசு, ரேனு, பேர்ணாம்பட்டு ஒன்றிய செயலாளர் அரவிந்த் செயசூர்யா, அமல்ராஜ், முரளி தன்மானன், வழக்கறிஞர் பாலகுமாரன், வழக்கறிஞர் திராவிட பாண்டியன், ஆனஸ்ட், செ.ராஜி, செல்வக்குமார், புருசோத்தமன், செல்வக்குமார், செயக்குமார், சிலம்பரசன், பிரவினா, வைரமணி, சுகந்தி யாழினி, கனல்விழி, கயல்விழி, யாழ்வெண்பா, மோகேஷ் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். விசிக மண்டலச் செயலாளர் இரா.சுபாசு சந்திர...

தோழர் திலீபன் உள்ளிட்டோர் மீதான வழக்கு ரத்து

தோழர் திலீபன் உள்ளிட்டோர் மீதான வழக்கு ரத்து

வேலூர் : ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கழகத் தலைவர் திலீபன், பெரப்பேரி கிராமத்தில் பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை அகற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த எதிர்த்தரப்பு தோழர் திலீபனை கடுமையாகத் தாக்கியது. தோழர் திலீபனை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி 17.04.2023 அன்று ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கழக சார்பில் பானாவரம் காவல்நிலையம் முற்றுகையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கழகத் தோழர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 01.03.2024 அன்று தீர்ப்பானது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 40க்கும் மேற்பட்டோர் மீது போடப்பட்ட வழக்குப்பதிவை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி ஆனந்த வெங்கடேசன். இந்த வழக்கில் கழக சார்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் 07032024 இதழ்

‘தினமலம்’ பார்ப்பன ஏட்டுக்கு தீ!

‘தினமலம்’ பார்ப்பன ஏட்டுக்கு தீ!

காலை சிற்றுண்டி வழங்குவதன் காரணமாக பள்ளிக் கழிவறைகள் நிரம்பி வழிகின்றன என்ற வர்ணாசிரம திமிரோடு தலைப்பு செய்தி வெளியிட்ட தினமலம் நாளேட்டை கழகத் தோழர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். சென்னை : பள்ளி மாணவர்களுக்கு “காலை சிற்றுண்டி” திட்டத்தை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட சனாதன வெறி பிடித்த தினமலரை கண்டித்து தினமலம் நாளிதழ் எரிப்பு போராட்டம் இன்று 01.09.2023 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தினமலம் நாளேடு அலுவலகம் அருகே இராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தினமலம் நாளிதழை தீயிட்டு கொளுத்தி தினமலம் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க வளர்மதி, தமிழ்நாடு மாணவர் கழக இரண்யா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவுரையாற்றினார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கரு.அண்ணாமலை, சேத்துப்பட்டு இராசேந்திரன், மயிலை...

திலீபன் மீது கொலை வெறித் தாக்குதல் வேலூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

திலீபன் மீது கொலை வெறித் தாக்குதல் வேலூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

திலீபன் மீது காவலர்கள் முன்னிலையில் கொலை வெறித் தாக்குதல் நடத்திய ராமமூர்த்தி தலைமையிலான வன்முறை கும்பலை கைது செய்! திலீபன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறு! எனும் கோரிக்கைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் ராணிப்பேட்டை முத்து கடை பேருந்து நிலையம் முன்பு 08.05.2023 திங்கள் காலை 10.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர் பெரப்பேரி திலீபன், தன் கிராமத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு எதிராக ஊர் கட்டுப்பாடு போட்டதை எதிர்த்து போராடியதற்காகவும், தன் கிராமத்தில் பொது வழிப் பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான ஆணையைப் பெற்று வந்தார். இந்நிலையில்...

கழகம் எடுத்த புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

கழகம் எடுத்த புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

வேலூர்: புரட்சியாளர் அம்பேத்கர் 132ஆவது பிறந்தநாள் விழா வேலூர் மாவட்டக் கழக சார்பில் மாவட்டச் செயலாளர் சிவா தலைமையில் குடியேற்றம், கொண்டசமுத்திரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர்  விடுதலைக் கழகம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் இணைந்து மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்பு அனைவரும் ஜாதி ஒழிப்பு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். நண்பகல் 12 மணிக்கு வேலூர் மாநகரில் விசிக ஒருங்கிணைத்த “ஜனநாயகம் காப்போம்! சனாதனத்தை வேரறுப்போம்!”பேரணியில் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். நண்பகல் 2 மணிக்கு ராமாலையில் திராவிட் மற்றும் பகுதித் தோழர்கள் ஒருங்கிணைப்பில் அம்பேத்கருடைய புகைப்படத்திற்கு மாலை அணிவித்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் சிறப்பு உணவு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு  வேலூர் மாவட்டம் புட்டவாரபள்ளி கிராமத்தில் அமல்ராஜ், ஒருங்கிணைப்பில் பொதுமக்களோடு இணைந்து அம்பேத்கர்  பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.   இரவு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது....

கழகத் தோழர் திலீபன் மீது வன்முறைக் கும்பல் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கழகத் தோழர் திலீபன் மீது வன்முறைக் கும்பல் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர்திலீபன் (பழனி) மீது கொடும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வேலூர் மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் பாணாவரம் காவல்நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதிகாரம், மக்கள் தமிழகம் கட்சி, ஊர் பொது மக்கள் தோழைமை இயக்கத் தோழர்கள் 100 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடிவில் தோழர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் சிறைவைக்கப்பட்டனர். நிகழ்வில் தலைமை குழு உறுப்பினர் அய்யனார், சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, மக்கள் தமிழகம் கட்சி விஸ்வநாதன், மக்கள் குடியரசு இயக்கம் ஜான் மண்டேலா, திவிக பேரணாம்பட்டு நகர செயலாளர் தோழர்கள் ச.பார்த்திபன், மற்றும் மகிழவன், இரண்யா, அன்பழகன், ராஜேஷ், மணி, அருண், சூரியா, குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 20042023 இதழ்    

வேலூரில் பெரியார் வெங்கட் இல்லத் திறப்பு விழா

வேலூரில் பெரியார் வெங்கட் இல்லத் திறப்பு விழா

வேலூர் மாவட்ட திராவிட விடுதலைக் கழகத் தோழர் பெரியார் வெங்கட்  இல்லத் திறப்பு விழா 30.10.2022 அன்று வேலூர் கன்னிகா புரத்தில், மாவட்டத் தலைவர் திலீபன்  தலைமையில் நடைபெற்றது . திராவிடர் விடுதலை கழகத் தலைமைக் குழு உறுப்பினர்  விழுப்புரம் அய்யனார்  இல்லத்தினை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். பெரியார் வெங்கட் வரவேற்பு கூறினார். நிகழ்வில் விழுப்புரம் கள்ளக்குறிச்சி வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். திறப்பு விழாவிற்கு பின் நடைபெற்ற வேலூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் வேலூர் மாநகர  அமைப்பாளராக  பெரியார் வெங்கட்டை  நியமிக்க வேண்டும் என்று தோழர்கள் அனைவரும் ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர். தலைமை ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்டத் தலைவர்  திலீபன், மாவட்டச் செயலாளர் சிவா, மாவட்டப் பொருளாளர்  சதீஷ், தலைமைக் கழகச் செயற்குழு உறுப்பினர்  விழுப்புரம் அய்யனார் உள்ளிட்ட தோழர்கள் இருந்தனர். பெரியார் முழக்கம்...

குடந்தை – கீழப்பாவூர்-குடியாத்தத்தில் சிறப்புடன் நடந்த மண்டல மாநாடுகள்

குடந்தை – கீழப்பாவூர்-குடியாத்தத்தில் சிறப்புடன் நடந்த மண்டல மாநாடுகள்

குடந்தையில்: ‘நமக்கான அடையாளம் திராவிட மாடல்’ என்ற முழக்கத்தை முன் வைத்து கும்பகோணம் மீன் மார்க்கெட் திடலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மண்டல மாநாடு 16.5.2022 அன்று மாலை சிறப்புடன் நடைபெற்றது. மாவட்டக் கழகத் தலைவர் மு. இளங்கோவன் தலைமையில் சா.வெங்கடேசன் (ஒன்றிய அமைப்பாளர்) முன்னிலையில் நடைபெற்றது. கு. பாரி (தஞ்சை மாவட்ட செயலாளர், தி.வி.க.), தெ. மகேசு (மாவட்டச் செயலாளர்), திருச்சி நாகம்மையார் இல்லத்துப் பெண்ணைத் திருமணம் செய்தவரும், திராவிடர் கழகத் தோழருமான பவுண்டரீகபுரம் முருகேசன், பொறியாளர் திருநாவுக்கரசு (உழவர் இயக்கம்), சி.த. திருவேங்கடம் (மாவட்ட அமைப்பாளர்), சா. விவேகானந்தன் (மண்டல செயலாளர் வி.சி.க.) உள்ளிட்டோர் மாநாட்டில் பேசினர். முன்னதாக, பெரம்பலூர் தாமோதரன், ‘மந்திரமா-தந்திரமா’ நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்ட மகளிரணி செயலாளர் திரிபுரசுந்தரி மற்றும் தி.க. தோழர்கள் குணா, சங்கர், கழகத் தலைவர்-பொதுச் செயலாளருக்கு துண்டுகளை அணிவித்து மகிழ்ந்தனர். கரிகாலன் நன்றி கூறினார். தொடர்ந்து 20...

பார்ப்பன எதிர்ப்பு ஆன்மீகத்தையும் அரவணைத்ததே திராவிடக் கோட்பாடு

பார்ப்பன எதிர்ப்பு ஆன்மீகத்தையும் அரவணைத்ததே திராவிடக் கோட்பாடு

மே 21இல் குடியாத்தத்தில் நடந்த கழக மண்டல மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து: குடியாத்தம், வேலூர் மாவட்டங்கள் திராவிடத்தின் கொள்கை வேர்களைத் தாங்கி நிற்கிறது, ஆரிய எதிர்ப்பு என்ற சனாதன வர்ணாஸ்ரம பார்ப்பன எதிர்ப்புக்கு களமாடிய முன்னோடிகள் இந்த மாவட்டத்தில் உண்டு. பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி, சமூக சீர்த்திருத்தப் படை ஒன்றை இப்பகுதியில் உருவாக்கி, தேனீர்க் கடை இரட்டைக் குவளைத் தீண்டாமை – பார்ப்பன உயர்ஜாதியினர் வீதிகளில் தீண்டப்படாத மக்கள் நடக்கும் உரிமை மறுக்கப்பட்ட சமூகக் கொடுமைகளை எதிர்த்து நேரடி நடவடிக்கையில் இறங்கினார். சாவு சேதி சொல்லவும், பறை அடிக்கவும் தீண்டப்படாத மக்கள் மீது அவமானங்கள் சுமத்தப்பட்டதை எதிர்த்து பறை எரிப்புப் போராட்டம் நடத்தியபோது திராவிடர் கழகத் தோழர்கள் அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற வேண்டும் என்று பெரியார் ‘விடுதலை’யில் அறிக்கை விடுத்தார். 1954இல் ஈரோட்டில் பெரியார் நடத்திய புத்தர் கொள்கை பரப்பு மாநாடு – குலக் கல்வி திட்ட எதிர்ப்பு மாநாடுகளில்...

கழகப் பொறுப்பாளர்கள் மூன்றாம் கட்ட பயணம்: கழக ஏட்டுக்கு  சந்தா சேர்ப்பதில் தோழர்கள் ஆர்வம்

கழகப் பொறுப்பாளர்கள் மூன்றாம் கட்ட பயணம்: கழக ஏட்டுக்கு சந்தா சேர்ப்பதில் தோழர்கள் ஆர்வம்

மூன்றாம் கட்ட பயணமாக 1, 2, 3.12.2021 ஆகிய தேதிகளில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி பரப்புரைச் செயலாளர் பிரபாகரன் தலைமைக் குழு உறுப்பினர் விழுப்புரம் அய்யனார் ஆகியோர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களிடத்தில் கலந்துரையாடினர். தர்மபுரியில் 1.12.2021 அன்று காலை 11 மணி அளவில் பி அக்கரகாரம் நஞ்சப்பன் இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் வேணுகோபால், சந்தோஷ்,பரமசிவம் உள்பட பல பகுதிகளில் இருந்து தோழர்கள் பங்கேற்றனர் கழக செயல்பாடுகள் மற்றும் அரசு செயல்பாடுகள் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள புரட்சிப்பெரியார் முழக்கம் பெரும் உதவியாக இருந்தது என்றும், இந்த ஆண்டு கூடுதல் சந்தா சேர்ப்போம் என்றும் தோழர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் சிகர்ந்தப்பள்ளி மாவட்டச் செயலாளர் குமார் இல்லத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர்கள் ப.வாஞ்சிநாதன், குமார், கிருஷ்ணன் உள்பட 35 தோழர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர் மாவட்ட கழக...

குடியாத்தம் – இராமாலையில் சிறப்புடன் நடந்தது ‘நான் இந்துவாக இருக்கப் போவதில்லை’: பெரியாரின் நூல் திறனாய்வு கூட்டம்

குடியாத்தம் – இராமாலையில் சிறப்புடன் நடந்தது ‘நான் இந்துவாக இருக்கப் போவதில்லை’: பெரியாரின் நூல் திறனாய்வு கூட்டம்

வேலூர் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 7.11.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் தலித்முரசு மற்றும் காட்டாறு பதிப்பகம் வெளியிட்ட பெரியாரின் கட்டுரைத் தொகுப்புகள் “நான் இந்துவாக இருக்கப் போவதில்லை” இன்னும் நூல் குறித்த அறிமுக நிகழ்வும் சமூகநீதி தளத்தில் தொடர்ந்து களப்பணி ஆற்றி வருகின்ற தோழர்களுக்கு அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஊக்கப்படுத்தி பாராட்டி நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்வும் நடை பெற்றது. இந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தலித்முரசு ஆசிரியர் மற்றும் தமிழ்நாடு தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் புனித பாண்டியன், எழுத்தாளர் அழகிய பெரியவன், திராவிடர் கழக வேலூர் மண்டல தலைவர் சடகோபன், இந்திய குடியரசு கட்சி வேலூர் மாவட்டத் தலைவர் தலித் குமார் ஆகியோர் பங்கேற்று நூல் குறித்து மிக விரிவாகப் பேசினர். இந்நிகழ்விற்கு   ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவர் திலீபன் தலைமை தாங்கினார் கழகத்தினுடைய...

‘சமூக நீதி சாதனையாளர்’ விருது பெற்றார் வே. ஆனைமுத்து

‘சமூக நீதி சாதனையாளர்’ விருது பெற்றார் வே. ஆனைமுத்து

சர்வதேச சமூக நீதி நாளான பிப்ரவரி 20 – முன்னிட்டு 20.02.2021 அன்று 25க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட ஊழியர் சங்கங்களை உள்ளடக்கிய தேசிய பிற்படுத்தப்படட ஊழியர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் ஓய்வறியா இட ஒதுக்கீட்டு போராளி, மண்டல் குழு அமைக்கக் காரணமான முன்னோடிகளில் ஒருவருமான, சீரிய பெரியார் கொள்கை செயல்பாட்டாளர், 96 வயதாகும் அய்யா ஆனைமுத்து அவர்களுக்கு வாழ்நாள் சமூக நீதி சாதனையாளர் விருது வழங்கியும், அவருடைய சீரிய பணியினை பாராட்டும் விதமாக ஒரு லட்சம் ரூபாய் நிதியும் அளிக்கப்பட்டது. நிகழ்வில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் ஆச்சாரி தல்லொஜு, பெல் ராணிப் பேட்டை தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். பேரமைப்பின் நிர்வாகிகளான கு.தனசேகர், சி.சேதுபதி , ஆர்.அப்சல், ஆர்.செந்தாமரைக்கண்ணன் பங்கேற்றனர். பெல் இராணிப்பேட்டை கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திரளான பெல் தொழிலாளர்களும் சமூக நீதி ஆதரவாளர்களும் பங்கேற்றனர். முன்னதாக பெல் பிற்படுத்தப்பட்டோர் சங்கத்திற்கு வழங்கப்பட்ட...

ஹத்ராஸ் படுகொலை – சூரப்பா எதேச்சாதிகாரத்தைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டங்கள்

ஹத்ராஸ் படுகொலை – சூரப்பா எதேச்சாதிகாரத்தைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டங்கள்

உ.பி. ஹத்ராஸ் தலித் பெண் படுகொலை – அண்ணா பல்கலை துணை வேந்தர் எதேச்சாதிகார நடவடிக்கை – பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் இடமாற்றத்தைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட் டங்கள் நடந்தன. இந்திய ஒன்றியத்தில் தரவரிசைப் பட்டியலில் 12 வது இடத்தைப் பெற்ற புகழ்பெற்ற பல்கலைக் கழகமாக அண்ணா பல்கலைக் கழகம் ஒளிவீசிக் கொண்டு இருக்கும் நிலையில், இந்தப் பல்கலைக் கழகத்தை உயர்ப் புகழ் நிறுவனமாக ஆக்குவது என்ற பெயரில் மத்திய அரசிடம் தாரை வார்ப்பதைக் கண்டித்தும், இதனால் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69ரூ இட ஒதுக்கீடு முறைக்கு வரும் பெரும் ஆபத்தைத் தடுக்கவும் மேலும், ‘‘உயர் புகழ் நிறுவனமாக அண்ணா பல்கலைக் கழகத்தை தரம் உயர்த்த மாநில அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டிய தில்லை” என்று பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம்...

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கை அறிக்கை, இஸ்ரோ முன்னாள் அதிகாரி கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் 2018 டிசம்பர் மாதம் தயாரிக்கப்பட்டு, 2019 ஜூன் 1ஆம் தேதி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலைதளத்தில் தேசிய கல்வி கொள்கை அறிக்கை ஆங்கிலம், இந்தியில் மட்டும் வெளியானது. வெளியானதிலிருந்து 30 நாட்களுக்குள் கருத்து சொல்ல வேண்டும் என்று அரசு கால நிர்ணயமும் அறிவித்திருந்தது. பல மொழிகள் பேசக்கூடிய மாநிலங்கள் இருந்தும் மாநில மொழிகளில் அறிக்கை வெளியாகவில்லை என்று எதிர்ப்பு வந்தவுடன் தேசிய கல்வி கொள்கை சுருக்கமான வரைவை தமிழில் வெளியிட்டார்கள். இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம்  ஓராண்டுக்கு முன்பே 2019 செப்டம்பர் 17 இல் பரப்புரை பயணத்தை நடத்தியது. ‘சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தை திணிக்காதே’ என்ற முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் கழகம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை பயணத்தை மேற் கொண்டது. பயணம் பள்ளிபாளையத்தில் நிறைவுற்றது. செப்டம்பர் 20ஆம்...

குடியாத்தத்தில் ஆய்வரங்கம்

குடியாத்தத்தில் ஆய்வரங்கம்

NRC – CAA பற்றிய ஆய்வரங்க நிகழ்வு 31.12.2019 அன்று மாலை 6 மணிக்கு குடியாத்தத்தில்  நடைபெற்றது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி BJP, RSS மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் வன்முறையாட்டங்களையும், அவர்களின் சதித் திட்டங்களையும் CAA, NRC சட்டத்தின் அபாயத்தையும் ஆதாரபூர்வமாக விளக்கி நீண்ட உரையாற்றினார். இந்நிகழ்வில் விசிக வேலூர் பாராளுமன்ற செயலாளர் சிவ. செல்லபாண்டியன், த.ஒ.வி.இ. துணைச் செயலாளர் செவ்வேள், திக மண்டல செயலாளர் சடகோபன் ஆகியோர் உரையாற்றினர்.  பல்வேறு தோழமை அமைப்புகளின் தோழர்கள், பொது மக்கள், பெண்கள் என அரங்கம் நிறைந்த நிகழ்வாக இருந்தது. நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவித்தார். முழக்கம் எழுப்பபட்டது. பின்பு பெரும் திரளாக தோழர்கள் ஒன்றுதிரண்டு ஊர்வலமாக நிகழ்வு நடைபெறும் அரங்கம் வரை சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை வேலூர் மாவட்ட கழகத் தோழர்கள் செய்தனர். கழகத் தலைவர் உரை காண சொடுக்கவும் பெரியார்...

குடியாத்தம் இரா.ப.சிவா- ஜெ.பிரவினா மணவிழா

குடியாத்தம் இரா.ப.சிவா- ஜெ.பிரவினா மணவிழா

திராவிடர் விடுதலைக் கழகம் வேலூர் மாவட்ட செயலாளர் இரா.ப.சிவா-ஜெ.பிரவினா ஆகி யோரது வாழ்விணை ஏற்பு விழா 01.09.2019 அன்று காலை 10 மணி யளவில் குடியாத்தம், அம்மணாங் குப்பத்தில் உள்ள மதுரா மஹாலில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஜெ.செந்தமிழ் வரவேற்பு கூறினார். மருத்துவர் நா.எழிலன் (இளைஞர் சங்கம்), பால்.பிரபாகரன் (கழகப் பரப்புரைச் செயலாளர்), ப.திலிபன் (வேலூர் மாவட்ட செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமணத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்தி வைத்தார்.   நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி வாழ்த்துரை வழங்கினார். பெரியார் முழக்கம் 12092019 இதழ்

இரா ப சிவா – ஜெ பிரவீனா வாழ்விணையேற்பு விழா ! குடியேற்றம் 01092019

இரா ப சிவா – ஜெ பிரவீனா வாழ்விணையேற்பு விழா ! குடியேற்றம் 01092019

இரா ப சிவா – ஜெ பிரவீனா வாழ்விணையேற்பு விழா ! 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை,காலை 10.00 மணியளவில் வேலூர் மாவட்டம்.அம்மனா குப்பம், குடியேற்றம், மதுரா மஹாலில் தி.மு.க.மகளிர் அணி செயலாளர் கவிஞர் கனிமொழி MP, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, அவர்கள் வாழ்விணையேற்பு நிகழ்வை நடத்தி வைத்து உரையாற்றினார். கழகத்தின் பொறுப்பாளர்கள், தோழமை அமைப்பினர் கலந்து கொண்டனர்.

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

  ‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில்  முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை  வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன்...

கழகத் தோழர் வி.கஜேந்திரன் – மோகனப்ரியா இணையேற்பு விழா

கழகத் தோழர் வி.கஜேந்திரன் – மோகனப்ரியா இணையேற்பு விழா

12.5.2019 அன்று மாலை 6 மணியளவில் குடியாத்தத்தில் கழகத் தோழர் வி.கஜேந்திரன் – மோகனப்ரியா – இணையேற்பு விழா  சிறப்புடன் நடந்தது கழகத் தலைவர், கழகப் பொதுச் செயலாளர், மருத்துவர் எழிலன் மற்றும் கழக முன்னோடிகள், அம்பேத்கரிய அமைப்பைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். பறை இசை கலை நிகழ்ச்சிகளும் மண விழா மேடையில் அரங்கேறியது. பெரியார் முழக்கம் 06062019 இதழ்

கஜா புயல் : வேலூர் மாவட்டக் கழகத் தோழர்கள் நேரில் நிவாரண உதவி

கஜா புயல் : வேலூர் மாவட்டக் கழகத் தோழர்கள் நேரில் நிவாரண உதவி

கஜா புயல் நிவரணத்திற்காக வேலூர் மாவட்ட திவிக தோழர் களால் திரட்டப் பட்ட பொருட் கள் தஞ்சாவூர் மாவட்டம் பட்டு கோட்டை வட்டம் வாட்டா குடி மற்றும் இரண்யன் நகர் உள்ளிட்ட 3 குக்கிராமங்களைச் சேர்ந்த 156 குடும்பங்களுக்கு கழகத் தோழர்களின் உதவியுடன் வேலூர் மாவட்ட திவிக தோழர்கள் நேரில் சென்று வழங்கினர். 1 குடும்பத்திற்கு 2.5 கிலோ காய்கறி, 1.25 கிலோ அரிசி, 1 ப்ரெட் பாக்கெட், 1 வரக்கி பாக்கெட் , 100கிராம் கடலை எண்ணெய், 50கிராம் மிளகுதூள் பாக்கெட், 1 நாப்கின் பாக்கெட், 1 பாக்கெட் பன், 1 தைலம், 1 கொசுவத்தி, 1 வத்திப் பெட்டி என பல்வேறு பொருட்களை ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் கஜேந்திரன், பாஸ்கரன், சுதகார், பார்த்திபன், வழக்கறிஞர் மகேஷ் குமார், பாரத் தமிழ், மாதேஷ், பாண்டியன், மாதேஷ், திருமலை ஆகியோர் அடங்கிய குழு சென்றது. பெரியார் முழக்கம் 13122018 இதழ்

வேலூரில் திராவிட வேர்கள் கருத்தரங்கம்

வேலூரில் திராவிட வேர்கள் கருத்தரங்கம்

8.9.2018 சனிக்கிழமை காலை 10 மணியளவில் வேலூர் விரிஞ்சிபுரம் வி.எஸ்.பி மகாலில் திராவிட வேர்கள் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு எழுத்தாளர் டான் அசோக் தலைமை தாங்க திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, கல்வியாளர் பாலா கருத்துரையாற்றினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘கருஞ்சட்டை கலைஞர்’ என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். அந்த நிகழ்வில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவரணி தோழர்கள் திராவிட கருத்தியலில்  ஆர்வம் கொண்ட இளைஞர்கள், திராவிடர் விடுதலைக் கழகத்தின் வேலூர் மாவட்ட அமைப்பாளர்கள் நெமிலி திலீபன், குடியாத்தம் சிவா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றார்கள். பெரியார் முழக்கம் 13092018 இதழ்

குடியாத்தத்தில் தீண்டாமை வெறி: களமிறங்கினர் கழகத் தோழர்கள்

குடியாத்தத்தில் தீண்டாமை வெறி: களமிறங்கினர் கழகத் தோழர்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் அக்ராவரம் கிராமத்தில் உப்ரபள்ளி ஆற்றின் அருகில் ஊரின் தெருவில் சென்றதற்காக 22.07.2018 அன்று 40 பேர் கொண்ட ஜாதிவெறி கும்பல் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஜெயபிரகாஷ், ஜெயச்சந்திரன், மணிகண்டன் ஆகியோர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது.  களத்தில் இறங்கிய கழகத் தோழர்கள் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி செய்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெரியார் முழக்கம் 26072018 இதழ்

மறுமண வாழ்விணையேற்பு நிகழ்வு குடியாத்தம் 22072018

மறுமண வாழ்விணையேற்பு நிகழ்வு குடியாத்தம் 22072018

”மறுமண வாழ்விணையேற்பு நிகழ்வு” கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையேற்று நடத்திவைக்கிறார். வாழ்விணையர்கள் : தோழர் சுரேஷ் – தோழர் ஷாலினி நாள் : 22.07.2018 ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை. இடம் : அண்ணல் அம்பேத்கர் திருமண கூடம்,(S.B.I வங்கி அருகில்)குடியாத்தம்,வேலூர் மாவட்டம். இந்நிகழ்வில் ”நம்மை சூழும் பேராபத்துகளும்,அதனை வீழத்தும் அம்பேத்காரிய பெரியாரிய தத்துவங்களும்”எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. தோழர் எவிடன்ஸ் கதிர்,தோழர் உடுமலை கவுசல்யா,தோழர் கோவிந்தராஜ்,தோழர் பால்.பிரபாகரன் உள்ளிட்ட தோழர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு

4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி – உரிமை முழக்க ஊர்திப் பேரணி மே 9ஆம் தேதி ஈரோட்டில் பெரியார் இல்லத்திலிருந்து தொடங்கி மே 12ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நிறைவடைந்தது. ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு நாட்களில் 25 தெருமுனைக் கூட்டங்களில் பரப்புரைக் குழு பல ஆயிரம் மக்களை சந்தித்து தெருமுனைக் கூட்டங்களை நடத்தியது. சேலம், கிருட்டிணகிரி, வேலூர், கூடுவாஞ்சேரியில் ஒவ்வொரு நாள் மாலையும் பொதுக் கூட்டங்களும் நடந்தன. பா.ஜ.க. – சங் பரிவாரங்களின் பார்ப்பனிய மதவெறித் திணிப் புகள், நீட் திணிப்பு, தமிழக வேளாண் மண்டலத்தை நஞ்சாக்கும் நடுவண் அரசின் திட்டங்கள், காவிரி நீர் பிரச்சினையில் பா.ஜ.க. ஆட்சியின் துரோகம் ஆகியவற்றை விளக்கி மக்களிடம் பேசியபோது மக்கள் பெரிதும் வரவேற்றனர். உரிமை முழக்க ஊர்திப் பேரணி குறித்த செய்திகளின் தொகுப்பு: டி           பேரணியில் 65 தோழர்கள்...

‘பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி’  உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு

‘பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி’ உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய உரிமை முழக்க ஊர்திப் பேரணியின் பரப்புரை குறித்த ஓர் தொகுப்பு: 9.5.2018 காலை 12 மணியளவில் ஈரோடு பெரியார் நினைவு இல்லம் அருகில் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி – உரிமை முழக்க ஊர்திப் பேரணி ஆரம்பமானது. மதியம் 2 மணிக்கு பவானியில் பயண நோக்கம் குறித்து நாமக்கல் மாவட்ட தலைவர் மு.சாமிநாதன் பேசினார். அம்மாபேட்டையில் 3 மணியளவில் மாவட்டத் தலைவர் நாத்திக சோதி, பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, கழக ஒன்றிய செயலாளர் வேல் முருகன், வழக்கறிஞர் பிரகாஷ், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் பிரகலாதன், மணிகண்டன் (தி.க.), மகாலிங்கம் (தி.க.), வை. இராமன் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), செல்வராஜ் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) உரையாற்றினர். மேட்டூர் காவேரி கிராஸ் பகுதியில் 3 மணிக்கு பறை முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 3.30 மணிக்கு மேட்டூர் நகர தி.வி.க. சார்பில் உணவு ஏற்பாடு...

வேலூர் மாவட்டத்தில் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் மனு !

வேலூர் மாவட்டத்தில் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் மனு !

வேலூர் மாவட்டத்தில் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் மனு ! தமிழகத்தில் கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசிவரும் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை உடனடியாக கைதுசெய்யகோரி 7.3.2018 வேலூர் மாவட்ட SPயிடம் வேலூர் மாவட்ட #திவிக சார்பாக புகார் அளிக்கப்பட்டது.  

வேலூரில் “தலைநிமிர்ந்தோம் இவர்களால்” பொதுக்கூட்டம் ! 24122017

வேலூரில் “தலைநிமிர்ந்தோம் இவர்களால்” பொதுக்கூட்டம் ! 24.12.2017 மாலை வேலூரில் காஞ்சி மக்கள் மன்றம் சார்பாக “தலைநிமிர்ந்தோம் இவர்களால்” என்ற தலைப்பில் தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு வேலூர் மாவட்டத்தை சார்ந்த தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் மக்கள் மன்றம் ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தில் SDPI, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆவணப்பட இயக்குனர் போன்றவர்களுடன் கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் பொதுக் கூட்டத்தில் பெரியாரின் நினைவு நாளை நினைவு கூர்ந்து சிறப்புரையாற்றினார்.

வேலூரில் பெரியார் நினைவு நாள்: மக்கள் மன்றம் எழுச்சியுடன் நடத்தியது

வேலூரில் பெரியார் நினைவு நாள்: மக்கள் மன்றம் எழுச்சியுடன் நடத்தியது

காஞ்சி மக்கள் மன்றம் பெரியார் நினைவு நாளை டிசம்பர் 24 அன்று வேலூரில் எழுச்சியுடன் நடத்தியது. பெரியார் பூங்கா அருகில் மாலை 5 மணியளவில் மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலைநிகழ்ச்சிகளுடன் நிகழ்வுகள் தொடங்கின. மக்கள் மன்ற தோழர்கள் கோபி வரவேற்புரையாற்ற சதீஷ் தலைமை தாங்கினார். நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரை நிகழ்த்தினார். விடுதலை சிறுத்தைகள் மாநில அமைப்புச் செயலாளர் நீலசந்திரகுமார், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஷாஜஹான், திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் சிங்கராயர், எஸ்.டி.பி.அய். மாநில பொறுப்பாளர் ஜி.எஸ். இக்பால், கண் மருத்துவர் தி.ச. முகமது சயி, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் செல்வராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் சுதாகர், ஆவணப்பட இயக்குனர் பாலா, திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் சிவா, மக்கள் மன்றம் தோழர்கள் அபிநயா, திலகவதி ஆகியோர் கலை நிகழ்ச்சிகளுக்கு இடையிடையே...

குடியாத்தத்தில் அம்பேத்கர்-பெரியார்  கருத்தரங்கம்

குடியாத்தத்தில் அம்பேத்கர்-பெரியார் கருத்தரங்கம்

12-11-2017 ஞாயிறு அன்று மாலை 6.00 மணி யளவில், குடியாத்தம் அம்பேத்கர் மண்டபத்தில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், அம்பேத்கர்-பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் ஆசிரியர் அருணிடம் பயிற்சி பெற்ற மாணவர்களின் பறை முழக்கம் நடந்தது. அதனைத் தொடர்ந்து பெரியாரிய விழுது யாழினி உள்ளிட்ட பலரும், வேலூர் கற்பி பாசறை பாலா, வழக்குரைஞர் அருண், பரப்புரை செயலர் பால் பிரபாகரன் ஆகியோரும் உரையாற்றினர். கழகத் தோழர்களின் “இப்பெல்லாம் யாருங்க ஜாதி பாக்குறாங்க” என்ற வீதிநாடகம் நிகழ்த்தப்பட்டது. இந்து மதவெறி துறைத் தலைவரின் ஜாதியப் பாகுபாட்டு வன்முறை காரணமாக, தன் வாழ்வை முடித்துக் கொண்ட, வேலூரைச் சேர்ந்த சென்னை, கவின்கலைக் கல்லூரி மாணவர் ஜோயல் (எ) பிரகாசின் படத்தை, பள்ளிகொண்டா தளபதி கிருஷ்ணசாமியுடன் பணியாற்றிய பெரியவர் மோகன்  திறந்துவைத்தார். “பெரியாரின் ஜாதி ஒழிப்புப் பணிகள்” என்ற தலைப்பில் உரையாற்றிய நீலப் புலிகள் இயக்கத் தலைவர் பேராசிரியர் டி.எம்.புரட்சிமணி, பெரியார்...

கவின்கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷின் இல்லத்தில் கழகத் தலைவர் 09112017

சில நாட்களுக்கு முன்னர், தனது துறைத் தலைவரின் ஜாதி, மத வெறுப்புப் பாகுபாட்டு நடவடிக்கைகளால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட சென்னை கவின்கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷின் இல்லத்துக்கு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, எவிடென்ஸ் கதிர், வேலூர் ஆவணப்பட இயக்குநர் பாலா, குடியாத்தம் சிவா,கழகத்  தோழர்கள் ஆகியோருடன் சென்று, மாணவரின் குடும்பத்தினரை சந்தித்தார். கல்லூரியில் துறைத் தலைவராய் இருந்த இரவிக்குமார் என்பவர், சிறந்த களைஞனாயும், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாய் சிறந்த மாணவருக்கான விருதினைப் பெற்றுவந்த மாணவர் பிரகாஷை, அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்பதையும், பிறப்பால் இந்துவான மாணவர் கிருத்துவ மாதா கோவிலூக்கு சென்று வழிபடுகிறார் என்பதையும் அறிந்தவுடன் தொடர்ச்சியாக கேவலமாக வகுப்பறையில் மிகவும் இழிவுபடுத்திவந்துள்ளார். இதனைப் பலமுறை கல்லூரி முதலவரிம் தனியேயும், மாணவர்களுடனும், பெற்றோரை உடன் அழைத்துசென்றும் புகார் கூஊரியும் கல்லூரி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொடுமைப்படுத்துதல் தான் அதிகரித்துள்ளது. அதனால் மனமுடைந்த மாணவர் பிரகாஷ், வீடியோவிலுய்ம், கடிதத்திலும், வாட்ஸ் அப்...

மக்கள் தளபதி பள்ளீகொண்டா கிருஷ்ணசாமி இல்லத்திற்கு கழக தலைவர் சந்திப்பு 09112017

9-11-2017 அன்று காலை, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வேலூர் மாவட்ட கழகச் செயலர் குடியாத்தம் சிவா, கழகத் தோழர்களுடன், வீரியமிக்க தலித் விடுதலை போராளியாய் விளங்கியவரும் , மக்களால் தளபதி என அன்போடு அழைக்கப்பட்டவருமான பள்ளீகொண்டா  கிருஷ்ணசாமி அவர்கள் இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்தார். அடுத்து அவரால் நிறுவப்பட்டதும், அவர் நடத்திய 150 இரவுப் பாடசாலைகளில் ஒன்றானதும், தற்போது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசுத் தேர்வாணையத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிப் பள்ளீயாய் அவரது பெயரன் தோழர் மகேஷ் அவர்களால் தொடர்ந்து இயங்கிவரும்  பவுத்த ஆராய்ச்சி மையத்துக்கும் சென்று பார்த்ததோடு, சமூக அக்கறையோடு இயங்கிவரும் பாங்கினை வியந்து பாராட்டினார். மேலும் படங்களுக்கு 

அம்பேத்கர் பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் குடியாத்தம் 12112017

12-11-2017 ஞாயிறு அன்று மாலை 6-00 மணியளவில், குடியாத்தம் அம்பேத்கர் மண்டபத்தில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், அம்பேத்கர் பெரியார் நினவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் ஆசிரியத் தோழர் அருணிடம் பயிற்சிபெற்ற மாணவர்களின் பறை முழக்கம் நடந்தது. அதனைத் தொடர்ந்து பெரியாரிய விழுது யாழினி உள்ளிட்ட பலரும், வேலூர் கற்பி பாசறை பாலா, வழக்குறைஞர் அருண், பரப்புரை செயலர் பால் பிரபாகரன் ஆகியோரும் உரையாற்றினர். கழகத் தோழர்களின் ”இப்பெல்லாம் யாருங்க ஜாதி பாக்குறாங்க’” என்ற வீதிநாடகம் நிகழ்த்தப்பட்டது. இந்து மதவெறி துறைத்தலைவரின் ஜாதியப் பாகுபாட்டு வன்முறை காரணமாக, தன் வாழ்வை முடித்துக் கொண்ட, வேலூரைச் சேர்ந்த சென்னை, கவின்கலைக் கல்லூரி மாணவர் ஜோயல் (எ) பிரக்கசின் படத்தை, பள்ளீகொண்டா தளபதி கிருஷ்ணசாமியுடன் பணியாற்றிய பெரியவர் மோகன் ஜீ அவர்களல் திறந்துவைக்கப் பட்டது. ”பெரியாரின் ஜாதி ஒழிப்புப் பணிகள்” என்ற தலைப்பில் உரையாற்றிய நீலப் புலிகள் இயக்கத் தலைவர் பேராசிரியர்...

புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் குடியாத்தம் 12112017

கருத்தரங்கம் ! வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் ! ஜோயல் பிரகாஷ் நினைவரங்கில்……….. நாள் : 12.11.2017 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : மாலை 4.30 மணி. இடம் : அம்பேத்கர் திருமண மண்டபம், (S.B.I..வங்கி அருகில்), குடியாத்தம். ”அம்பேத்கரின் ஜாதி ஒழிப்புப்பணிகள்” எனும் தலைப்பில் ‘கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி’அவர்களும், ”பெரியாரின் ஜாதி ஒழிப்புப்பணிகள்” எனும் தலைப்பில் ‘பேராசியர் புரட்சிமணி’ (தலைவர்,நீலப்புலிகள் இயக்கம்) அவர்களும் கருத்துரையாற்றுகிறார்கள். கழக நிர்வாகிகளும்,தோழமை அமைப்பினரும் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.

நெமிலியில் பெரியார் பிறந்த நாள் பொதுக் கூட்டம்.

நெமிலியில் பெரியார் பிறந்த நாள் பொதுக் கூட்டம். நாள் : O8.10.2017 ஞாயிற்றுக்கிழமை நேரம். : மாலை 5.00 மணி. இடம்: மரக்கன்று நடுதல் – கோடம்பாக்கம். பொதுக் கூட்டம் : நேரம் : மாலை 6.00 மணி. இடம்: தோழர் க.முனியாண்டி நினைவு மேடை – நெமிலி பேருந்து நிலையம். சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக்கழகம். வே.மதிமாறன், எழுத்தாளர் கும்மிடிப்பூண்டி மனோகரனின் அம்பேக்கர் கலைக் குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெறும்.

“இனி கருஞ்சட்டை குடும்பம்தான் எனது உறவுகள்”

முடிவெய்திய கழகத் தோழர் முனியாண்டி படத்திறப்பில் அவரது துணைவியார் இந்துமதி உருக்கமான பேச்சு வேலூர் மாவட்டம் மகேந்திரவாடி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் க. முனியாண்டி (45) கடந்த பிப்.22 ஆம் தேதி உடல்நலக் குறைவில் முடிவெய்தினார். நெமிலி கழகத் தோழர் திலீபனோடு உற்ற தோழராக களப்பணியாற்றியவர் முனியாண்டி. அவரது படத்திறப்பு நிகழ்வு கடந்த மார்ச் 25ஆம் தேதி பகல்  11 மணியளவில் நெமிலி தனபாக்கியம் திருமண மண்டபத்தில் நிகழ்ந்தது. முனியாண்டியைப் போலவே அவரது துணைவியார் இந்துமதி, கிராமத்தில் வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் உறுதியாக பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டவர். படத்திறப்பு நிகழ்ச்சிக்கு அவரே தலைமை ஏற்றார். பெரியாரிய கொள்கை உணர்வோடு அவர் பேசியது உணர்வுபூர்வமாக இருந்தது. அவர் தனது உரையில் : – “எங்களுக்கு சுயமரியாதை திருமணம்தான் நடந்திச்சி. இதுநாள் வரைக்கும் எங்களுக்குள்யே சண்டை வந்ததே இல்ல. இங்க பேசின எல்லோ ரும் சொன்னா மாதிரி எங்க வீட்டுக் காரருக்கு...

தோழர் க.முனியாண்டி அவர்களின் படத் திறப்பு ! நெமிலி 25032017

தோழர் க.முனியாண்டி அவர்களின் படத் திறப்பு ! நெமிலியில் தோழர் ஃபாரூக் நினைவரங்கில். நாள் : 25.03.2017. சனிக்கிழமை . நேரம் : காலை 11.00 மணி. இடம்: தனபாக்கியம் வேணுகோபால் திருமண மண்டபம்,நெமிலி. படத்திறப்பாளர்: தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம் 23012017

வேலூர் மாவட்ட திவிக சார்பில் குடியாத்தம் பகுதியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி அவர்களை வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்த இந்து முன்னணியைச் சேர்ந்த ராஜசேகரை கைது செய்யக்கோரியும், அவனை தப்பவிட்ட காவல்துறையைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம். தோழர் கொளத்தூர் மணி கண்டன உரை காணொளி செய்தி பூரணாசுரன் சு

எழுச்சியுடன் நடைபெறும் பரப்புரை பயணம் ஆத்தூரில் சுவரெழுத்து

நம்புங்கள் அறிவியலை நம்பாதிங்க சாமியார்களை என்ற முழக்கக்தோடு திவிக முன்னெடுக்கும் நான்கு திசைகளிலிருந்தும் அறிவியல் பரப்புரை பயணத்தின் நோக்கத்தை வலியுறுத்தி 12082016 அன்று நடைபெற உள்ள நிறைவுரை பொதுக்கூட்டத்தின் சுவரெழுத்து  இராணிப்பேட்டை ஆத்தூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் சிறப்புரையோடு.    

வேலூர் மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ! மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதத்தை கட்டாய மொழி பாடமாக அறிவித்ததை கண்டித்து 08 07 2016 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வேலூர் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன உரை: தோழர்: ப.திலிபன். வேலூர் மாவட்டம் அமைப்பாளர் தி.வி.க. தோழர்: அய்யனார். தலைமை செயர்குழு உறுப்பினர் தி.வி.க தோழர்: இரா.ப.சிவா. வேலூர் மாவட்ட அமைப்பாளர் தி.வி.க. தோழர்: பாபுமாசிலாமணி. பாவேந்தர் மன்றம் தோழர்: செவ்வேல் தா.ஒ.வி தோழர்: கஜேந்திரன் நன்றியுரை: தோழர்:நரேன்

ஏழு தமிழர் விடுதலை கோரி வாகன பேரணி – ஜூன் 11 வேலூர்

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை : ”ஏழு தமிழர் விடுதலை கோரி ஜூன் 11 ஆம் தேதி காலை 8 மணிக்கு வேலூர் சிறைச்சாலை முன்பு துவங்கி சென்னை கோட்டை வரை நடைபெற உள்ள வாகன பேரணியில் திராவிடர் விடுதலைக் கழகமும் தன்னை இணைத்துக் கொள்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுவிக்க கோரி இப்பேரணி நடைபெறுகிறது. 25 ஆண்டுகளாக தன் மகனுக்காக மட்டுமல்லாமல் அனைத்து சிறைவாசிகளுக்காகவும் நீண்டதொரு மனித உரிமைப் போராட்டத்தை நடத்திவரும் அற்புதம் அம்மாள் அவர்கள் தலைமையில் 7 தமிழர் விடுதலை கூட்டியக்கம் ஒருங்கிணைக்கும் இந்த பேரணியை 7 பெண்கள் துவங்கி வைக்கின்றனர். சரியாக 25 ஆண்டுகளுக்கு முன் இதே ஜூன் 11 ஆம் தேதி ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்ததமாக காவல்துறை விசாரணைக்கு...

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா வேலூர்

14-4-2016 அன்று வேலூர் மாவட்டம் களத்தூரில் புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா களத்தூர் கிளை, மக்கள் மன்றத்தால் எழுச்சியோடு நடத்தப்பட்டது. நிகழ்வு ஜாதி ஒழிப்புப் போரில் உயிர் நீத்த தியாகிகளின் வீரவணக்கப் பாடலுடன் தொடங்கியது. தொடர்ந்து, மக்கள் மன்றத் தோழர்களின் பறைமுழக்கமும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. கலைநிகழ்ச்சிகளின் நடுவே காஞ்சி மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சி மாவட்ட செயலாளர் பரந்தாமன், காஞ்சி வழக்கறிஞர் அப்துல் ஹக்கீம், இயக்குநர் களஞ்சியம், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர். காஞ்சி மக்கள் மன்றத்தின் சார்பாக மகேஷ் அவர்களின் நன்றி உரையாற்றினார் களத்தூர் மக்கள் தொடர்ச்சியாக மணல் கொள்ளைக்கு எதிராக, பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே துணிச்சலோடு போராடிவருபவர்கள் ஆவார்கள்

உடுமலை சங்கர் படுகொலை கண்டித்து நெமிலியில் ஆர்ப்பாட்டம் 20032016

20.03.2016 காலை 10 மணியளவில் வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், உடுமலை சங்கர் அவர்களின் ஆணவப் படுகொலையை கண்டித்து நெமிலியில் கழக பிரச்சார செயலாளர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்.இரா.பா.சிவா (திவிக) தோழர்.திலீபன் (திவிக) தோழர்.விழுப்புரம் அய்யனார் (திவிக) தோழர்.சங்கர் (திராவிடர் கழகம்) மற்றும் தோழமை அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

பூரணாகரன் – ஆஷா ஜாதி மறுப்பு இணை ஏற்பு விழா!

பூரணாகரன் – ஆஷா ஜாதி மறுப்பு இணை ஏற்பு விழா! நெமிலியில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் சு.பூரணாகரன்-தி.ஆஷா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணை ஏற்புவிழா, 19.2.2016 அன்று காலை 7 மணிக்கு வேணுகோபால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, அருள் மொழி (திராவிடர் கழகம்), அனந்தி சசிதரன் (இலங்கை வடமாகாண சபை உறுப்பினர்), திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), டேவிட் பெரியார், திரைப்பட இயக்குனர் ஹீரா, சென்னை மாவட்ட கழக செயலாளர் தோழர் இரா. உமாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

JNU மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற கோரி குடியாத்தத்தில் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் ! வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ! 29.02.2016 அன்று மாலை மாலை 4 மணியளவில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் JNU மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற கோரிஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழக பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இந்நிகழ்வில் கழக இரா.ப.சிவா. மா.பெ.பொ.கட்சியின் தோழர் சீனி.பழனி, மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் தோழர் சுந்தர், அம்பேத்கர் தொழிலாளர் இயக்கத்தின் தோழர் மேயர் சுந்தர், கழக தோழர்கள் பார்த்தீபன் நவீன் ஆகியோர் கலந்து கொண்டனர். கழக தோழர் கோடீஸ்வரன் நன்றியுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழமை அமைப்பு தோழர்கள் உள்பட 40 தோழர்கள் கலந்துகொண்டனர் பெரியார் முழக்கம் 10032016 இதழ்

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – வேலூர் புகைப்படங்கள்

வேலூரில் ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவன் ரோகித் வெமுலா மரணத்திற்கு நீதி கேட்டு,அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் 01.02.2016 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் வேலூரில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தி வி க மாவட்ட அமைப்பாளர் இரா.ப.சிவா, திலிபன்.வி சி க, துரை.ஜெய்சங்கர்,தா ஒ வி இ, செவ்வேள். தி வி க நரேன். சந்தோஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

மக்கள் பேராதரவுடன் சித்தூரில் கழகக் கூட்டம்

10-1-2016 ஞாயிறு அன்று மாலை சேலம் மாவட்டம் சித்தூர் சந்தைத் திடலில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் சேலம் (மேற்கு ) மாவட்டத் தலைவர் கு.சூரியக் குமார் தலைமையில் நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுத் தோழர்களின் பறைமுழக்கம், தொடர்ந்து பகுத்தறிவு இசை நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கியது. இசைநிகழ்ச்சியைத் தொடர்ந்து காவை இளவரசனின் மந்திரமல்ல, தந்திரமே நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சித்தூர் தோழர் இரா.ரகு வரவேற்புரையாற்ற பொதுக்கூட்டம் தொடங்கியது. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செய்லாளர் ஆதிமுரசு, ஆதித் தமிழர்ப் பேரவை மாவட்டச் செயலாளர் க.இராதாகிருட்டிணன், நாமக்கல் மாவட்ட கழகத் தலைவர் மு.சாமிநாதன் ஆகியோர் உரையைத் தொடர்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். அவ்வூரில் கழகக் கூட்டம் நடப்பது இதுவே முதல்முறையாகும். பெரும் திரளாகக் கூடிய பொதுமக்கள் கூட்டத்தின் இறுதிவரை இருந்து கூட்டத்தை, உற்சாகமாகக் கைதட்டியும், ஆதரவு குரல் எழுப்பியும் கவனித்தனர்....