Category: கரூர்

கடலூர், கரூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்கள்

கடலூர், கரூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்கள்

6.11.2022 அன்று காலை 11 மணிக்கு புவனகிரி நகரத்தை அடுத்த கீரபாளயத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் கடலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் பிரகாஷ் வரவேற்பு கூறினார். மாவட்டச் செயலாளர் சிவக்குமார், அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் அ.மதன்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராகக் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் அய்யனார் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் கடந்த 15.10.2022 அன்று புவனகிரி நகரத்தில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 144வது  பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 1)           15.10.2022 அன்று சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம் என்ற கொள்கை முழக்கத்தோடு நடைபெற்ற  நடைபெற்ற தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாள் விழா பொதுகூட்டத்திற்கு பெரும் உழைப்பை செலுத்திய, நிதி அளித்து பங்களிப்பை செலுத்திய அனைத்து தோழர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்படு கிறது. 2)...

கரூர்-க.பரமத்தியில் எழுச்சி நடைபோட்ட கழகக் கொடியேற்று விழா – கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்

கரூர்-க.பரமத்தியில் எழுச்சி நடைபோட்ட கழகக் கொடியேற்று விழா – கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்

22.03.2022 செவ்வாய்கிழமை கரூர் மாவட்டத்தில் கழகக் கொடியேற்று விழா தி.க.சண்முகம் தலைமையில் காலை 11.00 மணிக்கு துவங்கி மாலை வரை நடை பெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தென்னிலை சமத்துவபுரம், மலைச்சியூர் பிரிவு, சின்னதாராபுரம் பேருந்து நிலையம், அமராவதி ஆற்றுப் பாலம், டி.வெங்கிடாபுரம், இராஜபுரம் பிரிவு, அரவக்குறிச்சி பேருந்து நிலையம், தேர்வீதி, வட்டாட்சியர் அலுவலகம் அருகில், பள்ளபட்டி, அண்ணாநகர், தடா கோவில் ஆகிய 11 இடங்களில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். கொடியேற்று நிகழ்வில், தமிழன் சு.கவின்குமார், ராம்ஜி (எ) தொல் காப்பியன், இரா.காமராஜ், மலைக் கொழுந்தன், ந.முத்து மருதநாயகம், சிலம்பம் கொ.சரவணன், பெ.ரமேஷ், பெ.குமரேசன், ர.ராகவன், பிரசன்னா, தா.பெரியசாமி, நாகராஜ் அரவக் குறிச்சி ஆகிய தோழர்கள் உடனிருந்தனர். மாலை 06.00 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம், கழகத் தோழர் வடிவேல் இராமசாமி தலைமையில் நடை பெற்றது. பொதுக் கூட்டம் துவங்கும் முன்...

கரூர் மாவட்டத் தோழர்களின் சந்திப்பு

கரூர் மாவட்டத் தோழர்களின் சந்திப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் கழக பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியான தோழர்கள் சந்திப்பின் நான்காம் கட்டமாக கரூர் மாவட்ட தோழர்கள் உடனான சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் 12.12.2021 மாலை 7.00 மணி அளவில் தெ.வெங்கிட்டாபுரம் முத்தமிழ் அரங்கில் நடைபெற்றது. தலைமைக் கழக பொறுப்பாளர்களின் பயணத்தின் நோக்கம் குறித்து அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி தொடக்கவுரையாற்றினார். தோழர்களை அறிமுகபடுத்தியும் கரூர் மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக செயல்பாட்டையும் தொடர்ந்து நடைபெற உள்ள செயல்பாடுகள் குறித்தும் சின்னதாராபுரம் தோழர் சண்முகம் உரையாற்றினார். தொடர்ந்து தோழர்கள் உற்சாகமாக தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி பெரியார் முழக்கம் இதழின் அவசியம் குறித்தும் அதற்கு சந்தா சேகரிப்பது குறித்து விளக்கமளித்துப் பேசினார். நிறைவாக கழக பரப்புரைச்செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பணிகள் குறித்தும் இந்த இயக்கத்தில் தோழர்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் குறித்தும் தோழர்கள் ஒவ்வொருவரும்...

கரூரில் ஜாதி வெறிப் படுகொலை: கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

கரூரில் ஜாதி வெறிப் படுகொலை: கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

கரூரில் பொறியாளர் ஹரிஹரன் ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து 27.01.2021 அன்று  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மூத்த வழக்கறிஞர்  ப.பா. மோகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கரூரில் கடந்த 6ஆம்தேதி நடைபெற்ற ஜாதி ஆணவக் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், குரலற்ற விளிம்பு நிலையில் வாழக்கூடிய சமூக மக்களுக்கு பாதுகாப்பு, பாதிக்கப்பட்டவர் களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்; சாதி மறுப்புத் திருமணம் புரிந்து கொண் டோருக்கும், திருமணம் புரிய இருப்போர் களுக்கும் பாதுகாப்பு வழங்க தனி ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்; சாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்கு அரசு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில்  வலியுறுத்தப்பட்டன....

கரூரில் ஜாதி ஆணவப் படுகொலை: மதுரை கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் ஜாதி ஆணவப் படுகொலை: மதுரை கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் ஜாதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட மருத்துவர் சமூக இளைஞர் ஹரிஹரனுக்கு நீதி கேட்டு மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், மாவட்ட செயலாளர் மா.பா.மணிஅமுதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் 12.1.2021 அன்று மதுரையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மருத்துவர் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன், அதிமமுக பொதுச் செயலாளர். பசும்பொன் பாண்டியன், தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் ஆரோக்கிய மேரி, தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு மக்கள் கட்சி தலைவர் மணி பாபா, ஆதித்தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் கார்த்தி, அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் மாநில  கொள்கைப் பரப்புச் செயலாளர் அவுதா காதர் பாட்சா, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகப் பேச்சாளர் அப்பாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் ராஜீவ், குறிஞ்சியர் மக்கள் ஜனநாயக இயக்க நிறுவனர் விடுதலை...

தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் விழா மற்றும் டாக்டர் கலைஞர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் ! 29092018 மணவாசி கரூர்

தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் விழா மற்றும் டாக்டர் கலைஞர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் ! 29092018 மணவாசி கரூர்

”திராவிடமும் தமிழ்தேசியமும்” எனும் தலைப்பில் கழகத்தலைவர் ‘தோழர் கொளத்தூர் மணி’ அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் விழா மற்றும் டாக்டர் கலைஞர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் ! நாள் : 29.09.2018 சனிக்கிழமை நேரம் : மாலை 5.00 மணி. இடம் : பெரியார் நினைவு சமத்துவபுரம்,மணவாசி. கலைஞர் படம் திறந்துவைத்து உரை : ‘திருமிகு சுப்புலட்சுமி ஜெகதீசன்’, துணைப்பொதுச்செயலாளர்,தி.மு.க. ”திராவிடர் மாணவர் எழுச்சி” எனும் தலைப்பில் ‘மானமிகு பொத்தனூர் கா.சண்முகம்’ ( தலைவர்,பெரியார் அறக்கட்டளை) அவர்களும், ”பெரியாரின் இன்றைய தேவை” எனும் தலைப்பில் ‘திரு.ஆ.வந்தியத்தேவன்’,(அமைப்புச்செயலாளர் ம.தி.மு.க.)அவர்களும், ”பெரியாரும் பெண்ணியமும்” எனும் தலைப்பில் ‘தோழர் கிறிஸ்டினா சாமி’,(அகில இந்திய துணைத்தலைவர்,சுய ஆட்சி இந்தியா) அவர்களும் சிறப்புரையாற்றுகிறார்கள். நிகழ்ச்சி ஏற்பாடு : திராவிடர் விடுதலைக் கழகம், கரூர் மாவட்டம்.

பெரியார் 44ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டம் கிருஷ்ணராயபுரம் 06012018

6-1-2018 சனிக்கிழமை மாலை 6-00 மணியளவில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், கோவக்குளத்தில் பெரியாரின் 44ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டம், பேரூர்க் கழக ம.தி.மு.க. மாணவரணியின் ஏற்பாட்டில்  நடைபெற்றது. கூட்டத்துக்கு கரூர் மாவட்ட ம.தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் பொறியாளர் காமராஜ் தலைமையேற்றார். தமது தலைமை உரையில் பெரியாரைப் பின்பற்றவேண்டிய தேவைகளை விளக்கியதோடு.கோவக்குளத்தில் பெரியாரின் நினைவு நாளன்று நிறுவப்பட்ட பெரியாரின் மார்பளவு சிலை வருவாய், காவல்துறையால் அகற்றச் செய்யப்பட்டதை எடுத்துரைத்ததோடு, அடுத்த பெரியார் நினைவு நாளுக்குள் அச்சிலை உரிய அனுமதியோடு நிறுவப்படும் என்பதை உறுதிபட எடுத்துரைத்தார். மாவட்ட ம.தி.மு.க.விவசாய அணித் துணைச்செயலாளர் மரு.முத்து வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் ம.தி.மு.க. மாநில மாணவரணி செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், கரூர் பகுத்தறிவு மன்றத் தலைவர் வழக்குரைஞர் குடியரசு, த.பெ.தி.க. மாவட்டத் தலைவர் கு.கி.தனபால், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் முல்லையரசு, தி.மு.க. பேரூர்க் கழக செயலாளர் எம்.மகாலிங்கம் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி...

மய்ய பா.ஜ.க. அரசின் மதவெறி அரசியல் எதிர்ப்புக் கருத்தரங்கம் கரூர் 07062017

07062017 புதன்கிழமையன்று மாலை 5-00 மணியளவில் கரூர் திருநீலகண்டர் திருமண மண்டபத்தில், கரூர் மதவெறி அரசியல் எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பாக ‘ மய்ய பா.ஜ.க. அரசின் மதவெறி அரசியல் எதிர்ப்புக் கருத்தரங்கம், ஆசிரியர் மா.இராமசாமி அவ்ர்களின் தலைமையில் நடைபெற்றது. ம.தி.மு.க. மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் காமராஜ் வரவேற்புரையாற்றினார். த.பெ.தி.க. மாவட்டத் தலைவர் தனபால், கரூர் வழக்குரைஞர் தமிழ் இராசேந்திரன், காவேரி உரிமைப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் விசுவநாதன் போன்றோரின் உரைகளைத் தொடர்ந்து சுற்றுச் சூழல் போராளி முகிலன், தோழர் கிறிஸ்டினா , கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மத்தியரசின் புதிய கல்விகொள்கையை எதிர்த்து கருத்தரங்கம் ப.வேலூர் 14082016

கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மத்திய பேரரசுவின் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து கருத்தரங்கம். நடுவண் அரசே, மாநில உரிமையை பறிக்காதே என்ற முழக்கத்தோடு கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி 14082016 அன்று மாலை 5 மணிக்கு நகர வர்த்தகர் சங்கம், ப.வேலூரில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் திரு நாகநாதன், மேலான் திட்டக்குழு துணைத்தலைவர் மற்றும் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் தோழர் முகிலன் கலந்து கொண்டனர்.  

காவிரி ஆறு எங்கள் ஆறு!! மணல் கொள்ளையனே வெளியேறு!! – மாபெரும் கையெழுத்து இயக்கம்

கரூர் மாவட்டம் புகழூரில் 14082016 அன்று காவிரிப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் சார்பாக மணல் குவாரி அமைத்து மணல் கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்தக் கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது,இந்த நிகழ்வில் கலந்துகொண்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மணல் கொள்ளைக்கெதிராக கண்டன உரையாற்றி முதல் கையெழுத்திட்டு ,கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்..  

தோழர் மலைக்கொழுந்தன் – கோமதி வாழ்க்கைக் துணைநல ஒப்பந்தம்

16062016 அன்று கரூர், தாந்தோன்றிமலை, திருமணமண்டபத்தில், பட்டதாரி ஆசிரியர்களான தோழர் ஆ.மலைக்கொழுந்தன், பா.கோமதி ஆகியோரின் விருப்ப வாழ்க்கைத்துணைநல ஒப்பந்தம் கழகத் தலைவர் கொளத்துர் மணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கழக மாவட்டத் தலைவர் பாபு (எ) முகமது அலி, த.பெ.தி.க மாவட்டத் தலிவர் தனபால், குளித்தலை கழகத் தலைவர் சத்தியசீலன், கொடுமுடி பாண்டியன் உட்பட Pஅலர் கல்ந்துகொண்டனர். தோழர் மலைக்கொழுந்தன் தமிழ்நாடு மாணவர் கழகத்தின் தொடக்ககால அமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். மணவிழா மகிழ்வாக கழக ஏடான பெரியார் முழக்கத்துக்கு ரூ 2,000 நன்கொடை வழங்கினார்.