சமூக நீதி நாள் உறுதிமொழி

கழகத் தோழர்களுக்கு ஒரு அறிவிப்பு :

பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்து அமையப் போகும் எதிர்கால தமிழ்நாட்டின் இலக்கினை அடையாளம் காட்டிய தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி செலுத்துகிறோம்.
—–
பெரியார் பிறந்த நாளில், திராவிடர் விடுதலைக் கழத் தோழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழியைக் கீழே கொடுத்துள்ளோம்.
—–
“ஜாதி, மத அடையாளங்களைக் காட்டி பாகுபாடு காட்டுவது,
பெண்களின் உரிமைகளை மறுத்து அடக்கி ஒடுக்குவது,
அறிவியலுக்கு எதிரான சடங்குகளை, நம்பிக்கைகளை – பண்பாட்டுப் பெருமைகளாக பேசி வளர்ச்சிக்கான சிந்தனைகளை முடக்குவது, ஒன்றியத்தை ஒற்றை ஆட்சியாக மாற்றி அமைப்பதற்கு தமிழ்நாட்டின் கல்வி, பொருளாதாரம்,
விவசாயம், சுற்றுச்சூழல், அரசியல் உரிமைகளை பறிப்பது, சமஸ்கிருத பண்பாட்டைத் தேசிய பண்பாடாக மாற்றுவது” உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைளும் சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைப்பதே ஆகும்.

இம்முயற்சிகளை முறியடிக்க பெண்கள் ஆண்கள் அடங்கிய இளைய சமூகத்தை அணிதிரட்டி சமூக நீதியை நோக்கி முன்னேறிச் செல்ல உறுதியேற்கிறோம்.

இந்த பணிகளுக்காக நான் சார்ந்துள்ள இயக்கத்திற்கு மேலும் கூடுதலாக எனது ஆற்றலையும், பங்களிப்பையும் வழங்குவதோடு எதிர்காலத் தமிழ்நாடு ‘சமூக நீதி நாடு’ என்று உலகுக்குக் காட்ட உறுதியேற்கிறோம்.

வாழ்க பெரியார்!
வெல்லட்டும் சமூக நீதி!

– தலைமை நிலையம்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
16.09.2021