Category: மயிலாடுதுறை

ஆதினங்களின்  பல்லக்கு சவாரியை  தடை  செய் மயிலாடுதுறையில் கழகம் – தோழமை அமைப்புகள் ஆர்ப்பாட்டம், கைது

ஆதினங்களின் பல்லக்கு சவாரியை தடை செய் மயிலாடுதுறையில் கழகம் – தோழமை அமைப்புகள் ஆர்ப்பாட்டம், கைது

சைவத்தையும் தமிழையும் பரப்புவதற்காக சைவ மதங்கள் உருவாக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. ஆனால் ஆதீனங்கள் இன்றைக்கு அந்த பணியை விட்டுவிட்டு இந்துத்துவாவின் தூதர்களாக மாறிப் போய் இருக்கிறார்கள். மோடிக்கு நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது நேரு சென்று செங்கோல் ஒன்றை ஆதீனங்கள் பரிசாக அளித்து இருக்கின்றன.   அந்த செங்கோல் மவுண்ட் பேட்டன்  பிரபுவிடம் இந்தியாவில் ஆட்சி  மாற்றத்திற்கு அடையாளமாக தரப்பட்டது என்று  ஒன்றிய ஆட்சியும், அமித்ஷாவும் கட்டிவிட்ட கற்பனைகளை திருவாடுதுறை ஆதீனம் இந்து நாளேட்டில் அளித்த பேட்டியில் மறுத்துவிட்டார். அப்படி எந்த ஆதாரமும் இல்லை என்றும், எதற்காக மவுண்ட் பேட்டனிடம் போய் செங்கோலை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கிறார். ஆக பாஜகவின் பொய்யான கதை வசனம் கிழிந்து தொங்கி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.   இந்த மடாதிபதிகள் மோடியின் ஆட்சி தான் இந்த காலம் முழுவதும் நீடித்திருக்க வேண்டும் என்று அரசியலும் பேசி இந்துத்துவாவின் பரப்புரையாளர்களாக மாறிப்போய் இருப்பதோடு  தருமபுரம்...

இரசாயன வினாயகன் சிலைகளைக் கரைப்பதைத் தடுக்க அமைச்சரிடம் மயிலாடுதுறை கழகம் மனு

இரசாயன வினாயகன் சிலைகளைக் கரைப்பதைத் தடுக்க அமைச்சரிடம் மயிலாடுதுறை கழகம் மனு

மயிலாடுதுறையில், தமிழ்நாடு அரசு மற்றும் உயர்நீதி மன்ற உத்தரவை மீறி விநாயகர் சிலைகள் பிளாஸ்ட ஆப் பாரீஸ் என்ற வேதிப் பொருளால் செய்யப்பட்டு வர்ணம் பூசி  விநாயகர் சதுர்த்திக்காக தயாராகி வருகின்றன. நீர் நிலைகளை மாசுபடுத்தும் இந்தச்  செயலை தடுத்து நிறுத்த கோரி 05.09.2022 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்  மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் வீ.மெய்யநாதனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அப்பொழுது பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன்  உடனிருந்தார். இந்நிகழ்வில் திவிக மாவட்ட தலைவர் மகாலிங்கம், செயலாளர் மகேஷ், அமைப்பாளர் செந்தில்குமார், பொருளாளர் விஜயராகவன், நகர தலைவர் நாஞ்சில் சங்கர், செயலாளர் நடராஜன், தோழர்கள் தில்லைநாதன், கார்த்திக், ராகவன், வழக்குரைஞர் சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப் பாளர், இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது....

பள்ளத்தூர் நாவலரசன் – தாமோதரன் – மந்திரமா தந்திரமா நிகழ்வுகளோடு மயிலாடுதுறையில் களை கட்டியது மாநாடு!

பள்ளத்தூர் நாவலரசன் – தாமோதரன் – மந்திரமா தந்திரமா நிகழ்வுகளோடு மயிலாடுதுறையில் களை கட்டியது மாநாடு!

மயிலாடுதுறை கடலூர் நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்கள் இணைந்து மே 4ஆம் தேதி மயிலாடுதுறையில் மாநாட்டினை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநாட்டின் நோக்கத்தினை வலியுறுத்தி 16 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. 10000 வண்ண துண்டறிக்கைகள் அச்சடிக்கப்பட்டு மக்களிடையே பரப்புரை செய்யப் பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 இடங்களில் சுவர் விளம்பரமும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து 500 சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் மாலை 5 மணி அளவில் பள்ளத்தூர் நாவலரசு குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சியுடன் மாநாட்டு நிகழ்வு தொடங்கியது. மாநாட்டிற்கு  மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை ஏற்றார். வரவேற்புரை கடலூர் மாவட்ட தலைவர் மதன்குமார் வழங்க, நமக்கான அடையாளம் திராவிட மாடல் என்ற மாநாட்டின் கோரிக்கையை வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வழக்கறிஞர் வேலு. குணவேந்தன், தமிழர் உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் சுப்பு மகேஷ் பேசினார்கள். மந்திரம் இல்லை தந்திரமே என்ற...

முற்றுகை; இரயில் மறியல்; ஆர்ப்பாட்டங்கள் ஆளுநருக்கு எதிராகக் கழகம் போர்க்கோலம்

முற்றுகை; இரயில் மறியல்; ஆர்ப்பாட்டங்கள் ஆளுநருக்கு எதிராகக் கழகம் போர்க்கோலம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட’ நீட் விலக்கு’ மசோதாவை, திருப்பி அனுப்பிய,  ஆளுநரைக் கண்டித்தும், ஆளுநரை பதவி விலகக் கோரியும், கழக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை : 04.02.2022 அன்று மாலை 4 மணியளவில் சென்னை சின்னமலை இராஜீவ் காந்தி சிலை அருகில், ஆளுநர் மாளிகை செல்லும் வழியில், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை இராசேந்திரன் : ஆர்ப்பாட்டத்தில், கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் செய்தியாளர் களிடத்தில், “நீதிபதி ஏ.கே இராஜன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஒரு குழுவை நியமித்து அந்தக் குழு நீட் தேர்வு குறித்து, பல மருத்துவர்களை, சமூகவியலாளர்களைக் கொண்டு ஆய்வு நடத்தி இந்த தேர்வு கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு எதிரானது என்று பரிந்துரை வழங்கியுள்ளது. ஆனால் ஆளுநர் கூறுகிறார், ‘இந்த நீட் தேர்வை இரத்து செய்தால், ஏழை எளிய மாணவர்களும், கிராமப்புற...