விருத்தாசலம் ஒன்றியத்தில் 20 தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

விருத்தாசலம் ஒன்றியம் கருவேப்பிலங்குறிச்சி அருகில் உள்ள பேரளியூர் கிராமத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் மிக சிறப்புடன் நடைபெற்றது. காலை 11.00 மணிக்கு துவங்கிய கூட்டத்துக்கு கடலூர் மாவட்ட தலைவர் நட. பாரதிதாசன் தலைமை தாங்கினார். ஆசிரியர் அறிவழகன் மற்றும் கோபால் இராமகிருட்டிணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முருகன்குடி ஆசிரியர் பழனிவேல் சிறப்புரை ஆற்றினார். இருபதுக்கும் மேற்பட்ட தோழர்கள் கழகத்தில் புதிதாக இணைந்தனர். தோழர்கள் அறிமுகத்துக்குப் பின் ஆசிரியர் பழனிவேல் பெரியார் அம்பேத்கர் கொள்கைகளைப்பற்றியும் திராவிட இயக்கங்களின் போராட்டங்களைப்பற்றியும் இரண்டு மணி நேரம் சிறப்பாக உரையாற்றினார். முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

1. ஆசிரியர் அறிவழகன் வழிகாட்டுதலின் பேரில் செயல்படுவது; பயிற்சி முகாம் நடத்திய பின் தலைமையின் பொறுப்பாளர்கள் அறிவிக்கப் படுவார்கள்;  2. விரைவில் பயிற்சி முகாம், அதைத் தொடர்ந்து பொதுக் கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது 3. கிராமப்புறங்களில் சாதி ஒழிப்பு மற்றும் பிரச்சார கூட்டங்கள் நடத்துவது 4. பெரியார் சிந்தனைப்பலகை அமைத்து தினமும் சிந்தனைகளை எழுதுவது

5. பெரியார் படிப்பகம் அமைத்தல் 6. சமூக சிந்தனைகளை தூண்டும் குறும் படங்களை திரையிடுவது 7. பள்ளிகளில் பகுத்தறிவை வளர்க்கும் அறிவியல் நிகழ்ச்சிகள் நடத்துவது 8. வெள்ளாறு மணல் குவாரி எதிர்ப்புக்கு முழு ஆதரவு அளிப்பது 9. சமுதாயக்கூடம் அமைக்க வலியுறுத்துதல்

10. இளைஞர்களுக்கு விளையாட்டு மற்றும் உடல் திறன் வளர்க்க மைதானம் அமைக்க அரசைக் கோருதல் 11. பழுதடைந்த தொட்டியை அகற்றிவிட்டு  புதிய குடிநீர் தொட்டி  அமைக்க மனு அளிப்பது  12. நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா   வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்திப்பது – ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

கூட்டத்தில் அரியலூர் மாவட்டபொறுப்பாளர் கோபால் இராமகிருட்டிணன் மற்றும் கடலூர் மாவட்ட தோழர்கள் சிலம்பரசன், சுரேந்தர் மற்றும் மணிகண்டன் ஆகியோரும் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 20072017 இதழ்

You may also like...