இயக்கத்தில் இணைய

கழகத்தின் குறிக்கோள்களை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டு அதன் இலட்சிய வெற்றிக்காகப் பாடுபடுவோர் கழகத்தின் உறுப்பினர்களாவார்கள். உறுப்பினர்கள் கழகத் தோழர் ஒருவரால் முன்மொழியப்பட்டு வேறு ஒருவரால் வழிமொழியப்பட்ட பிறகே கழகத்தில் உறுப்பினராக முடியும்.
கழகத்தில் உறுப்பினராக உள்ளோர், வேறு எந்தக் கட்சியிலோ, எந்தவித ஜாதி மத நிறுவனங்களிலோ, கழக கொள்கைக்கும் இலட்சியத்திற்கும் மாறான எந்த அமைப்புகளிலோ உறுப்பினராக இருக்கக் கூடாது.
உறுப்பினர்கள் அவர்கள் வாழ்கின்ற பகுதிக்கு உட்பட்ட கிளைக் கழகத்தில் உறுப்பினராக வேண்டும். ஒருவர் ஏதாவது ஒரு கிளையில் மட்டும்தான் உறுப்பினராக இருக்க வேண்டும்.
தலைமைக் கழகத்திலிருந்து உறுப்பினர் அட்டையினைப் பெற்றவர்களே, உறுப்பினருக்குள்ள உரிமையைப் பெறுவர்.
கழக உறுப்பினர், ஒரு கிளையிலிருந்து வேறு ஒரு கிளைக்குக் குடியிருப்பு மாறுங்காலத்தில் தாம் ஏற்கனவே சேர்ந்துள்ள இடத்திலிருந்து தாம் சேர விரும்பும் புதிய கிளையுள்ள இடத்திற்கு இரு கிளைக் கழகச் செயலாளர்களின் அனுமதியுடன் பதிவு பெற வேண்டும்.
உறுப்பினர் கட்டணம் ரூ.50 ( ரூபாய் அய்ம்பது)
உறுப்பினர்கள் காலம் குறைந்தது 2 ஆண்டுகள். இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்பு புதுப்பிப்பு நடைபெறல் வேண்டும். உறுப்பினர்கள் சேர்க்கைக்கான நாள் அறிவிக்கப்பட்டால் அதிலிருந்து தலைமைக் கழகம் அறிவிக்கும் நாள் வரையில் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும். இடைப்பட்ட காலத்தில் உறுப்பினர்கள் சேர்ந்திருந்தால் அவர்களின் உரிமையும் அப்பொழுது முடிவடைந்ததாகக் கருதப்படும்.

திராவிடர் விடுதலைக் கழக உறுப்பினர் படிவம்

நான், திராவிடர் விடுதலைக் கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் பொழுது, கருப்பு உடை அணிந்திருப்பேன், நான் பதிவு பெற்றிருக்கும் இந்த அமைப்பில், பொறுப்பேற்றிருக்கும் பொறுப்புகளில் நல்லுணர்வோடு செயல்படுவேன், கழகத்தின் கொள்கைகள், முடிவுகள், தலைமைக் கழகத்தின் அறிவிப்புகள் ஆகியவற்றை நிறைவேற்றுவேன், முழுமனதோடும், தொண்டுள்ளத்தோடும் மக்களுக்குத் தொண்டு செய்து, அவர்களது நியாயமான கோரிக்கைகளை, கழகத்தின் கொள்கைகள், விதிமுறைகள் இவைகளுக்கு இணங்க செயல்படுத்துவதன் மூலம், பொதுமக்களின் நல்லுறவைக் கழகத்தின் பால் கொண்டு வருவேன் என்றும்
பெரியாரது கொள்கைகளைக் கற்றுத் தெளிந்து அதனை வாழ்க்கையில் பல்வேறு வழிகளிலும் செயல்படுத்துவேன், கழகத்தின் புத்தகங்கள், இதழ்கள், வெளியீடுகள் ஆகியவைகளைப் படித்து ஆதரித்து, அவைகளைப் பரப்பி, கழகத்தின் அமைப்பு விதிமுறைகள், தீர்மானங்கள் இவைகளுக்கு கட்டுப்படுவேன், சொந்த நலன்களுக்கு மேலாகக் கழகத்தின் நலன்களை மதித்து நடப்பேன், கழக உறுப்பினர்களிடையே எல்லா மட்டத்திலும் தோழமை உணர்வை வலுப்படுத்துவேன், கழகத்தின் கட்டுப்பாட்டைப் பேணிக் காப்பாற்றுவேன் என்றும்
தலைவர், பொதுச்செயலாளர் அனுமதி பெற்றாலன்றி வேறு எந்த இணைக்கழகம் மற்றும் மாவட்டக் கழகங்களின் செயல்பாட்டில் தலையிட்டு குந்தகம் ஏற்படுத்த மாட்டேன் என்றும் உறுதியளித்து திராவிடர் விடுதலைக் கழகத்தில் என்னை இணைத்துக் கொள்கிறேன்

[contact-form-7 id=”1742″ title=”Untitled”]