கொள்கை

download
தமிழ்நாட்டில் வாழும் திராவிடர்கள் (பார்ப்பனரல்லாதோர்) சமுதாயம், அரசியல், பொருளாதரம் ஆகியவற்றில் முழுவிடுதலை பெறச் செய்வது.
திராவிடர்கள் ( பார்ப்பனரல்லாதோர் ) யாவரும் பெரியார் வகுத்த கொள்கைப்படி – கடவுள், மதம், சாஸ்திர சம்பிரதாயங்கள் அடிப்படையிலான ஜாதி, தீண்டாமை, பாலினப் பாகுபாடு போன்ற பிறவி உயர்வு தாழ்வுகள் ஒழிந்து – சமுதாயத்திலும், சட்டத்திலும், அரசியலிலும், பொருளாதாரத்திலும் சமஉரிமையும், சமவாய்ப்பையும் பெற்று – பகுத்தறிவுடன் கூடிய சுயமரியாதை – சமதர்ம வாழ்வு வாழச் செய்யப் பாடுபடுவது.
பார்ப்பன – இந்திய தேசிய- பன்னாட்டுக் கூட்டுக்கொள்ளையை முறியடித்து – பொதுவுரிமை கொண்ட பொதுவுடைமைச் சமுதாயம் அமையப் பாடுபடுவது.
திராவிட மக்களிடையே சமயம், பழக்க வழக்கம் என்பவைகளின் பெயரால் இருந்து வரும் ஜாதி, தீண்டாமை, பாகுபாடு மற்றும் மூடநம்பிக்கை ஆகியவைகளை ஒழித்து, அவர்களை மானமும் அறிவும் பெற்ற மக்களாக வாழச்செய்வது.
மேலே குறிப்பிட்டுள்ள இலட்சியங்களில் வெற்றியடையவும் அதற்கு ஆதரவாக – ஜாதி ஒழிந்த சமுதாயம் உருவாகும்வரை, இடைக்கால ஏற்பாடாக, ஒவ்வொரு ஜாதிக்கும் அவரவர்களுக்கு உரிய எண்ணிக்கை, அவசியம் ஆகியவைகளுக்கு ஏற்ப எல்லா துறைகளிலும் வகுப்புவாரிப் பிரதிநித்துவம் கிடைக்கும்படி செய்யப்பாடுபடுவது.
இவைகளுக்கும், இவைகளைப் போன்ற இதர இலட்சியங்களுக்கும் வேண்டியதுமான செயல்களை நிறைவேற்ற வேண்டியதற்கு அவசியமான நடைமுறைத் திட்டங்களை அவ்வப்போது வகுத்துக் கொள்வது