Category: கட்டுரைகள்

பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? (2) – விடுதலை இராசேந்திரன்

பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? (2) – விடுதலை இராசேந்திரன்

வேலை இல்லாத் திண்டாட்டம் மிக மோசம் வேலைவாய்ப்பு ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவேன் என்று உறுதி கூறி பதவிக்கு வந்தார் மோடி. ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை? ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்டுவோம். இஸ்ரேல் நாடு இப்பொழுது காசா மக்கள் மீது மிகப்பெரிய போரை தொடுத்துக் கொண்டிருக்கிறது. ஏராளமானவர்கள் அங்கே உயிர் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேல் ஜியோனிசம் என்ற கொள்கையை பின்பற்றுகிறது. இது இஸ்லாமிய வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது. மோடி ஆட்சி பேசுகிற இந்து ராஷ்டிரமும் இஸ்லாமிய வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது. எனவே சித்தாந்த ரீதியில் இருவரும் ஒரே தளத்தில் பயணிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அங்கே கடுமையான போர் நடந்து கொண்டிருக்கும்போது இஸ்ரேலுக்கு இந்தியாவில் இருந்து வேலைக்கு ஆட்களை அனுப்புகிற முயற்சியில் ஒன்றிய ஆட்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக இஸ்ரேல் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சரும் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டு 45 ஆயிரம்...

காங்கிரஸ் கட்சியின்  ‘திராவிட’ வாக்குறுதிகள்! பாஜகவை வீழ்த்த வழிகாட்டும் ‘தமிழ்நாடு’

காங்கிரஸ் கட்சியின் ‘திராவிட’ வாக்குறுதிகள்! பாஜகவை வீழ்த்த வழிகாட்டும் ‘தமிழ்நாடு’

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி ஒரு நூற்றாண்டு ஆகிறது. அதன்பிறகு பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டது முதல் இப்போது வரை தமிழ்நாடு அடைந்திருக்கிற சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, கட்டமைப்பு வளர்ச்சி என அனைத்துக்குமே மையப்புள்ளி இடஒதுக்கீடுதான். அதனால்தான் இந்தியாவின் மற்றெந்த மாநிலங்களையும் விட இடஒதுக்கீடு, சமூக நீதி சிந்தனைகளில் இன்றளவிலும் தமிழ்நாடுதான் முன்னோடியாக இருக்கிறது. நீட், புதிய கல்விக்கொள்கை போன்ற பாஜகவின் சூழ்ச்சிகரமான திட்டங்களை உடனுக்குடன் எதிர்த்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். மதவாத வெறுப்புணர்வை உள்வாங்காத மாநிலம் தமிழ்நாடு. ஒட்டுமொத்தத்தில் சமூகநீதி களத்துக்கான சிந்தனைப் போக்கைக் கட்டமைக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டின் இந்த ‘திராவிட மாடல்’ சிந்தனைப்போக்குதான் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியாகவும், சவாலாகவும் இருந்து கொண்டிருக்கிறது. எனவே பாஜகவை வீழ்த்த இந்த சிந்தனைப்போக்கு கையிலெடுக்க தேவை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இருக்கிறது. இதை காங்கிரஸ் கட்சி நன்கு உணர்ந்திருக்கிறது என்பதை வெளிக்காட்டும் ஆவணமாக, அக்கட்சியின்...

பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது?

பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது?

கடந்த 10 ஆண்டுகால மோடியின் தலைமையிலான பாஜக ஒன்றிய ஆட்சி நாட்டை சர்வாதிகார பாதையில் கொண்டு சென்றிருக்கிறது. இதனுடைய தாய்ச் சபையான ஆர்.எஸ்.எஸ் இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தை முதன்மையாகக் கொண்டது. அந்த லட்சியத்தை செயல் வடிவமாக்கும் முயற்சியில் தான் பாஜக ஆட்சி தீவிரம் காட்டி செயல்பட்டு வருகிறது. மக்கள் பிரச்சனைகள் அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனைகளே அல்ல. மதச்சார்பற்ற கொள்கையோடு நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவும் ஒரு நாட்டை மதச் சார்புள்ள ஒரு நாடாக மாற்ற வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கு இங்கே ஜனநாயகமும் ஜனநாயகக் கட்டமைப்புகளும் மிகப்பெரிய தடையாக இருக்கின்றன. எனவே ஜனநாயகத்தையும் ஜனநாயகத்தின் நிறுவனங்களையும் சீர்குலைத்து அவைகளை பலவீனம் ஆக்க வேண்டும். முதலில் நாடாளுமன்றத்தை பார்ப்போம். நாடாளுமன்ற நடவடிக்கைகள் முற்றிலுமாக சீர் குலைக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளின் கருத்துக்கள் ஒட்டுமொத்தமாக நசுக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் 116 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வராமல் வெளியேற்றப்பட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு மோசமான...

பார்ப்பனர்களை புறக்கணிக்கிறதா பாஜக?

பார்ப்பனர்களை புறக்கணிக்கிறதா பாஜக?

திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் ஒரு இசுலாமியரைக் கூட தேர்வு செய்யவில்லை என்று அதிமுகவினரும், பாஜகவினரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்கள். அதிமுக வேட்பாளர் பட்டியலிலும் ஒரு இசுலாமியர் கூட இல்லாததை அடுத்து, இந்த விவாதம் தானாக ஓய்ந்துவிட்டது. இசுலாமியர்களுக்கு திமுக இடம் ஒதுக்கியிருக்க வேண்டுமென்பது நியாயமான கேள்விதான். இராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இசுலாமியர்களுக்கு ஏன் சீட் ஒதுக்கவில்லை என பாஜக ஆதரவாளர்கள் கேட்கும் கேள்விதான் நகைப்பை ஏற்படுத்துகிறது. நாமும் அவர்களை நோக்கி ஒரு கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு பார்ப்பனர் கூட வேட்பாளர்களாக இல்லை. ஆனால் பார்ப்பனக் கட்சியான பாஜகவும் ஒரு தொகுதியில்கூட பார்ப்பனர்களை நிறுத்த முன்வரவில்லையே ஏன்? எந்த பார்ப்பனராவது பாஜகவை நோக்கி இக்கேள்வியை எழுப்பினார்களா என்றால் நிச்சயம் இல்லை. வேட்பாளராக தங்களை நிறுத்தாவிட்டாலும், பாஜக...

அமலாக்கத்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறதா? மோடியின் அண்டப் புளுகு! ஆகாசப் புளுகு!

அமலாக்கத்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறதா? மோடியின் அண்டப் புளுகு! ஆகாசப் புளுகு!

எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்கான ஆயுதமாக அமலாக்கத்துறையை மோடி அரசு பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு புதிதல்ல. சமீபத்தில் தந்தி தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் நெறியாளர் இதை கேள்வியாக வைத்திருந்தார். அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, அமலாக்கத்துறையை நாங்களா உருவாக்கினோம்? பணமோசடி தடுப்புச் சட்டத்தை (PMLA) நாங்களா கொண்டு வந்தோம்? அமலாக்கத்துறை ஒரு சுதந்திரமான அமைப்பு. சுதந்திரமாக அவர்களுடைய பணிகளை மேற்கொள்கிறார்கள். நாங்கள் அமலாக்கத்துறையை நிறுத்தவும் இல்லை, அனுப்பவும் இல்லை. அமலாக்கத்துறை சுமார் 7,000 வழக்குகள் பதிவு செய்திருக்கிறது. அதில் அரசியல் சார்பான வழக்குகள் 3 விழுக்காட்டுக்கும் குறைவுதான். காங்கிரஸ் ஆட்சியில் 35 லட்சம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் 2,200 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். அமலாக்கத்துறையின் தரவுகள் அடிப்படையில் மோடியின் பேச்சு குறித்து சில கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது. இந்த PMLA சட்டமானது 2002ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில்தான் இயற்றப்பட்டது. சர்வதேச போதைப்பொருள்...

ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?

ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?

தேர்தல் பத்திரங்கள் என்ற மோசடித் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, ஒட்டுமொத்த விவரங்களையும் வெளியிட வேண்டுமென்று எஸ்.பி.ஐ.-க்கு இட்ட உத்தரவால், மெகா ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்து ஆட்டம் கண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. பணம் கொடுக்காத நிறுவனங்களை அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற நிறுவனங்களை வைத்து மிரட்டுவதும், தாராளமாக நன்கொடைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் அள்ளிக் கொடுக்கப்பட்டிருப்பதும் அம்பலமாகியிருக்கிறது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறையின் விசாரணை வளையத்தில் இருக்கிற 41 நிறுவனங்கள் 2,471 கோடி ரூபாயை பாஜகவுக்கு வழங்கியிருக்கின்றன. இதில் சோதனைக்கு பிறகு மட்டுமே 1,698 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக வாரி வழங்கியிருக்கின்றன. 121 கோடி ரூபாய் சோதனை நடந்த 3 மாதங்களுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 33 நிறுவனக் குழுமங்கள் 172 முக்கியமான திட்டங்கள் மற்றும் திட்ட அனுமதிகளை அரசிடம் இருந்து பெற்றிருக்கின்றன. இந்த திட்டங்கள் மட்டும் ஒப்பந்தங்களின் மதிப்பு 3.7 லட்சம் கோடி...

விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா – கொளத்தூர் மணி

விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா – கொளத்தூர் மணி

கோவை மாவட்டக் கழக சார்பில் 02.03.2024 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை :- 14.03.2024 இதழின் தொடர்ச்சி… கலை வடிவத்தை விரிவுபடுத்தினார் அண்ணா சுயமரியாதை இயக்கத்தில் பணியாற்றியபோது பெரியாருக்கும், அவருக்கும் உண்டான மொழி நடை, உரை ஆகியவை வேறுபட்டிருந்தது. அண்ணாவின் வருகைக்கு பிறகு திராவிடர் கழகத்தில் கலை வடிவம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. திராவிட நடிகர் சங்கம், திராவிட நாடக சபை மூலமாக நாடகங்களை அரங்கேற்றினார்கள். அண்ணா எழுதிய சில முக்கியமான நூல்களைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். குறிப்பாக சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம். இந்து ராஜ்ஜியம் அமைந்தால் என்ன பலன் ஏற்படும் என்பதுதான் அந்த நாடகத்தின் கரு. சிவாஜி பெரிய வீரன், மராட்டியத்தையே வெற்றிகொண்டான். ஜோதிபாபூலே போன்றோர் மராட்டியத்தின் அடையாளமாக சிவாஜியைப் போற்றினார்கள். சங் பரிவார கும்பல் இந்துக்களின் எழுச்சி சின்னமாக சிவாஜியை மாற்றிவிட்டனர். ஆனால்...

டி.எம்.கிருஷ்ணாவின் கலகக்குரல் ஓங்கி ஒலிக்கட்டும்

டி.எம்.கிருஷ்ணாவின் கலகக்குரல் ஓங்கி ஒலிக்கட்டும்

கர்நாடக இசைக் கலைஞரான டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்குவதாக மியூசிக் அகாடெமி அறிவித்தவுடன்இரண்டு பெண் பார்ப்பன கர்நாடக இசைக் கலைஞர்கள் பொங்கி எழுந்துவிட்டார்கள். மியூசிக் அகாடெமி சங்கராச்சாரிகளை எதிர்க்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எப்படி விருது வழங்கலாம் என்று மியூசிக் அகாடெமியின் தலைவர் முரளி அவர்களுக்கு கடிதம் எழுதியிருப்பதோடு டி.எம்.கிருஷ்ணா தலைமை தாங்கும் இசை மாநாட்டை தாங்கள் புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்து ள்ளனர். அகாடெமியின் தலைவருக்கு அவர்கள் எழுதிய கடிதத்தை முகநூலிலும் வெளியிட்டுள்ளனர். இதற்கு அகாடெமியின் தலைவர் முரளி, நாங்கள் விருது வழங்குவதற்கு ஒருவரது இசைத் திறமையைத் தான் மதிப்பிடுகிறோமே தவிர அவர் எந்த கருத்தைக் கொண்டிருக்கிறார் என்பதின் அடிப்படையில் அல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார். எனக்கு எழுதியுள்ள கடிதத்தை எப்படி முகநூலில் வெளியிட்டீர்கள். உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொண்டு மியூசிக் அகாடெமி தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார் அகாடெமியின் தலைவர் முரளி. இதற்காக நாம் அவரைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்....

தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி பாஜகவின் ஊழல்கள் அம்பலமாகின

தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி பாஜகவின் ஊழல்கள் அம்பலமாகின

தேர்தல் பத்திரங்கள் என்ற மோசடித் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, ஒட்டுமொத்த விவரங்களையும் வெளியிட எஸ்.பி.ஐ.-க்கு சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு பத்திரங்களை வாங்கின, எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றன என்ற விவரங்களை எஸ்.பி.ஐ. மார்ச் 13ஆம் தேதி வெளியிட்டது. 2018ஆம் ஆண்டிலேயே தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு வந்திருந்தாலும் 2019 ஏப்ரல் 12 முதல் நடப்பாண்டு ஜனவரி 11ஆம் தேதி வரையிலான விவரங்கள் மட்டுமே முதலில் வெளியிடப்பட்டன. எஸ்.பி.ஐ. தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்டு, அதற்கு அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தலையில் கொட்டிய பின்பே, இந்த அரைகுறை விவரங்களும் வெளியிடப்பட்டன. தொடக்கம் முதலே இந்த விவகாரத்தில் பாஜகவை காக்கும் நோக்கிலேயே எஸ்.பி.ஐ. செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதற்கேற்ப, எந்த கட்சிக்கு எந்த நிறுவனம் நிதி கொடுத்தது என்பதை கண்டுபிடிப்பதை தடுக்க தேர்தல் பத்திரத்தின் எண் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,...

நான் கேரண்டி

நான் கேரண்டி

என் மீது பாசத்தைப் பொழியும் தமிழ் மக்களே! உங்களுக்கு நான் கேரண்டி தருகிறேன். ஒன்றல்ல; இரண்டல்ல; வண்டி வண்டியாக…. • ‘நீட்’டை திரும்பப் பெற மாட்டேன் என்பதற்கு நான் கேரண்டி • வெள்ளம் வந்தால் உங்களை திரும்பி கூட பார்க்க மாட்டேன் என்பதற்கு நான் கேரண்டி • வெள்ள நிவாரண நிதி ஒரு பைசா கூட தர மாட்டேன் என்பதற்கு நான் கேரண்டி • மெட்ரோ ரயில் திட்டமா? எங்கள் நிதிநிலை அறிக்கையில் ஒப்புதல் தந்தார்களா? கவலைப்படாதீர்கள். அதற்கு நிதி ஒதுக்காமல் பார்த்துக் கொள்வதற்கு நான் கேரண்டி • மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் வராது. இப்போது அடிக்கல் நாட்டு விழா நடத்தியிருப்பது ஒரு நாடகம். கவலைப்படாதீங்க, அடுத்தக்கல்லு வராமல் பார்த்துக் கொள்வதற்கு நான் கேரண்டி • கிராமப்புற வேலைத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை முழுமையாக வழங்காமல் முடக்கிப் போடுவதற்கு நான் கேரண்டி • அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை, வருமான வரித்துறைகளை எங்களை எதிர்ப்பவர்களுக்கு...

எதையுமே அழுத்தமாகப் பேசுபவர் அறிஞர் அண்ணா! – கொளத்தூர் மணி

எதையுமே அழுத்தமாகப் பேசுபவர் அறிஞர் அண்ணா! – கொளத்தூர் மணி

கோவை மாவட்டக் கழக சார்பில் 02.03.2024 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை:- அண்ணாவின் பொதுவுடைமை சிந்தனை அண்ணாவின் நினைவுநாளில் அவரைப் பற்றி பேசுவதும், அவரின் சிந்தனைப் போக்கும் செயல்பாடுகளும் என்னவாக இருந்தன என்பதைப் பற்றி சிலவற்றை பகிர்ந்து கொள்வது நமக்கு நன்மை பயக்கும் என்ற கருத்தில்தான் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கை ஏற்படுத்தியிருப்பார்கள் என்று கருதுகிறேன். 1930-களில் எம்.ஏ என்பது உயர்ந்த படிப்பாக பார்க்கப்பட்டது. ஆனால் அந்த உயர்ந்த படிப்பை முடித்துவிட்டு அரசுப் பணிக்கோ, மற்ற வேலைக்கோ செல்லாமல் சமூகப் பணிக்கு வந்தார் என்பதே அண்ணாவை பற்றிய ஒரு பெரிய மதிப்பை நம் மனதில் ஏற்படுத்தும். அறிஞர் அண்ணா எளிய குடும்பத்தில் பிறந்து முதுநிலை கல்வியை முடித்தவர். அரசியலில் சமூகப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் அவர் பெரியாரிடம் வந்த பிறகு ஏற்பட்டது என்று கூட நான்...

தமிழ்நாட்டின் மீதான பாஜகவின் வன்மம்!

தமிழ்நாட்டின் மீதான பாஜகவின் வன்மம்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டதை ஒட்டி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் மிக மோசமாக சித்திரிப்பு செய்கிறது வேலையில் இறங்கியிருக்கிறது பாஜக. பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், உத்தரப் பிரதேசத்தில் என்ன நிலைமை என்பது கூட தெரியாமல், தமிழ்நாட்டின் மீது சேற்றை வாரி இறைக்கும் பாஜகவினருக்கு பத்திரிகையாளர் அரவிந்தாக்‌ஷன் தரவுகளால் பதிலடி கொடுத்திருக்கிறார். 15.02.2024 அன்று West Delhi-ல் இருக்கும் Aventa Company-ன் basement -ல் போதை மருந்து தயாரிப்பதற்கான pseudoephedrine எனும் மூலப்பொருள் 50.070 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒன்றிய அரசின் போதைத் தடுப்புப் பிரிவின் (NCB) டெல்லி மண்டல அலுவலகம் வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கு எண்-VIII /03/DZU/2024 – இந்த வழக்குக்கு விகாஷ் ஷர்மா என்ற ஆய்வாளர்தான் விசாரணை அதிகாரி. இது சம்பந்தமாக 23-02-2024 அன்று ஜாபர் சாதிக் என்ற தமிழ்நாட்டைச் சார்ந்தவருக்கு சம்மன் வழங்கப்பட்டு,தொடர் சோதனைகள்...

மோடி ஆட்சியின் மோசமான சர்வாதிகாரம்

மோடி ஆட்சியின் மோசமான சர்வாதிகாரம்

இந்தியாவில் மோடி ஆட்சி படு மோசமான சர்வாதிகாரத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளது என்று சர்வதேச ஆய்வு நிறுவனம் தனது 2024ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஸ்வீடன் நாட்டின் கோதன்பர்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் V-Dem Institute ஆகும். உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு வகையான ஜனநாயகங்கள் எப்படி செயல்பட்டு வருகின்றன என்பது குறித்து மிக நுட்பமாக ஆய்வு செய்யும் உலகின் முதன்மையானது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தில் மட்டும் 180 நாடுகளை சேர்ந்த 4080 பேர் பணியாற்றுகின்றனர். 201 நாடுகளை பற்றிய 31 மில்லியன் தரவுகள் இந்த நிறுவனத்திடம் உள்ளது. 1789 முதல் 2023 வரை உள்ள தரவுகள் இதில் அடங்கியுள்ளது. மிக துல்லியமாக ஒவ்வொரு நாட்டில் உள்ள வெவ்வேறு வகையான ஜனநாயகப் பண்பு குறித்து அறிக்கை தருவது இந்த நிறுவனம். அத்தகைய நிறுவனம் 2024ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் மோடி ஆட்சி மிக மோசமான சர்வாதிகாரத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளது....

பத்திரிகையாளர்களை பந்தாடிய பாஜக

பத்திரிகையாளர்களை பந்தாடிய பாஜக

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறத் தொடங்கியிருக்கிறது. அதற்கேற்ப மக்கள் மனநிலையைக் கட்டமைக்கும் விதமாக, பல ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை திணிக்கத் தொடங்கியிருக்கின்றன. தமிழ்நாட்டில் டெபாசிட் வாங்கும் அளவுக்குக்கூட வளர்ந்திடாத பாஜக 18% வாக்குகளுக்கு மேல் பெறும் என்றும், 4 முதல் 6 தொகுதிகள் வரை வெல்லக்கூடும் என்றும் புதிய தலைமுறை ஊடகம் கூட கருத்துத் திணிப்பு செய்தது. இப்படி பாஜகவிற்கு ஆதரவாக கருத்துருவாக்கம் செய்ய முயலும் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு எப்படி நடத்தியிருக்கிறது என்பது பெரும் விவாதத்துக்கு உரியது. இதுகுறித்து “தி ஸ்கிரால்” ஊடகத்தில் அயூஷ் திவாரி என்பவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்: 2014ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 180 நாடுகளில் 140-வது நாடாக இருந்தது. அதுவே மோசமான நிலைதான் என்றால், இப்போது 163வது இடத்துக்கு மேலும்...

சனாதனம் குறித்த உதயநிதி பேச்சு; உச்சநீதிமன்றத்தின் கருத்து சரியா?

சனாதனம் குறித்த உதயநிதி பேச்சு; உச்சநீதிமன்றத்தின் கருத்து சரியா?

தமிழ்நாட்டு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சிற்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியளிக்கிறது. ஒரு அமைச்சரே இப்படி சனாதனத்தை எதிர்க்கலாமா? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், கருத்து சுதந்திரத்தை முறைகேடாக பயன்படுத்துவதாக கருத்து தெரிவித்துள்ளது. சனாதனம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. சனாதன தர்மம் என்றால் என்ன? என்பதை விவாதித்து விளக்கமளிக்காத உச்சநீதிமன்றம், ஒட்டுமொத்தமாக சனாதன தர்மத்தை எதிர்க்க கூடாது, அது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துவது என்று கூறுவது சற்றும் நியாயமற்ற ஒரு வாதமாகும். சனாதன தர்மத்தை வாழ்க்கை முறை என்கிறார்கள். ஆனால் வேத பண்டிதர்கள் முதல் சங்கராச்சாரியார் வரை சனாதனம் என்பது வர்ணாசிரம தர்மம் தான் என்று கூறியுள்ளனர். பிராமணன் – சத்திரியன் – வைசியன் – சூத்திரன் என்ற நான்கு பிரிவுகளை உள்ளடக்கியது தான் சனாதன தர்மம் என்று கூறுகிறார்கள். கீதையிலே கிருஷ்ணனும் இந்த நான்கு வர்ணத்தை காப்பாற்றுவதற்கு...

வேலையில்லா கொடுமை; உயிரை இழக்கவும் துணியும் இந்தியர்கள்!

வேலையில்லா கொடுமை; உயிரை இழக்கவும் துணியும் இந்தியர்கள்!

உத்தரப் பிரதேச இளைஞர்களை சில விதிகளைத் தளர்த்தி இஸ்ரேலுக்கு வேலைக்கு அனுப்பியிருப்பதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின. பாலஸ்தீன படைகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சண்டை நடக்கும் சூழலில் இது தேவைதானா என அப்போதே விமர்சனங்கள் எழுந்தன. இப்போது, நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கடந்த ஓராண்டில் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இருதரப்பிலும் இழப்புகளும் தாக்குதல்களும் தொடரும் வேளையில் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாட்டவரையும் தங்கள் நாட்டு ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொண்டிருக்கிறது ரஷ்யா. உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்ய படையில் சேர அந்நாட்டு இளைஞர்கள் தயக்கம் காட்டுவதாக கடந்த ஆண்டில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதங்களாகவே இதுபோல வெளிநாட்டு இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து தங்கள் நாட்டு ராணுவத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறது ரஷ்யா. விடுமுறை இல்லை,...

பாஜக செய்த ஆட்சி கலைப்புகள்

பாஜக செய்த ஆட்சி கலைப்புகள்

சண்டிகர் மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதை ஏற்றுக்கொள்ளாத பாஜக, தேர்தல் அதிகாரியாக பாஜகவைச் சேர்ந்தவரை நியமித்து தேர்தலை நடத்த வைத்தது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால், பாஜக தோல்வி தேர்தலுக்கு முன்பே உறுதியானது. ஆனாலும், தேர்தல் அதிகாரி பாஜகவின் கவுன்சிலர் என்பதால் 8 வாக்குகள் செல்லாது என்று அறிவித்து பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்தார். கண்காணிப்பு கேமிராவில் தேர்தல் அதிகாரி அனில் மாஷி  வாக்குச்சீட்டுக்களை திருத்துவது அப்பட்டமாக பதிவானது. உச்சநீதிமன்றம் இதைக் கடுமையாக கண்டித்ததுடன், அரிதினும் அரிதான வழக்குகளில் பயன்படுத்தக்கூடிய விதி 142-யைப் பயன்படுத்தி ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தது. சண்டிகர் மேயர் தேர்தலில் உச்சநீதிமன்றம் வழங்கிய நீதியை 2016 ஆம் ஆண்டிலிருந்து பல மாநிலங்களில் பாஜக செய்த ஆட்சி கவிழ்ப்புகளுக்கும் வழங்கியிருந்தால், பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும். தற்போது 12 மாநிலங்களில் நேரடியாகவும், 5 மாநிலங்களில் கூட்டணியுடனும் பாஜக...

ஊழல் கறையைப் போக்கும் அதிநவீன வாஷிங்மெசின் பாஜக

ஊழல் கறையைப் போக்கும் அதிநவீன வாஷிங்மெசின் பாஜக

எதிர்க்கட்சியில் இருக்கும்போது பாஜகவால் தீவிரமான ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், அமலாக்கத்துறை- வருமான வரித்துறை போன்ற ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளால் சோதனைகளுக்கும், விசாரிப்புகளுக்கு உள்ளானவர்கள் பாஜகவில் இணைந்துவிட்டாலோ அல்லது பாஜக ஆதரவாளர்கள் ஆகிவிட்டாலோ அவர்கள் மீதான மோசடி குற்றச்சாட்டுக்களும் ஒரு நொடியில் பறந்துவிடும், பிறவிப் புனிதர்கள் ஆகிவிடுகிறார்கள். அப்படி பாஜகவின் வாஷிங் மெஷினில் சிக்கி தூய்மையானவர்களின் பட்டியல். பாவனா கவாலி : சிவசேனாவை சேர்ந்த இவர், பொது அறக்கட்டளைக்கு சொந்தமான 7 கோடி ரூபாய் பணத்தை முறைகேடு செய்ததாக 2020ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை வளையத்தில் சிக்கினார். இந்த வழக்கில் சில மாதங்கள் கழித்து இவருக்கு நெருக்கமான சயீத் கான் என்பவர் கைது செய்யப்பட்டார். 2021, 2022-இல் பாவனாவை விசாரிக்க அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. குற்றப்பத்திரிகையில் இவருடைய பெயரும் இருந்தது. ஆனால் 2022 ஜூலையில் ஏக்நாத் ஷிண்டே முகாமில் இணைந்தார் பாவனா. மக்களவையில் ஏக்நாத் ஷிண்டே அணியின் தலைமைக் கொறடாவாகவும் அறிவிக்கப்பட்டார்....

தமிழ்நாட்டை முந்துகிறதா உத்தரப் பிரதேசம்? சங்கிகளின் பொய்யுரைகளை அம்பலப்படுத்துவோம்

தமிழ்நாட்டை முந்துகிறதா உத்தரப் பிரதேசம்? சங்கிகளின் பொய்யுரைகளை அம்பலப்படுத்துவோம்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டை பின்னுக்குத்தள்ளி உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்தை பிடித்துவிட்டதாக, பாஜகவினர் சமூக ஊடகங்களில் பொய்ச்செய்தி ஒன்றை பரப்பினர். இதுபோன்ற கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டுதான் “குஜராத் மாடல்” என்ற போலி பிம்பத்தை உருவாக்கினார்கள். அந்த பிம்பம் இப்போது சுக்குநூறாக உடைந்துவிட்டதால் “உ.பி. மாடல்” என்ற ஒன்றுக்கும் உதவாத மாடலை போலிச் செய்திகளால் கட்டமைக்க பாஜகவினர் முயற்சிக்கிறார்கள். உண்மையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்ன? உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சி என்பதற்கான சிறு ஒப்பீட்டை இங்கு காணலாம். 2024-25 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் மதிப்பீட்டின்படி, ஒன்றிய நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கப் போகிற தொகை 49,754.95 கோடி ரூபாய். ஆனால் உத்தரப் பிரதேசத்துக்கு கிடைக்கப் போகிற தொகையோ 2,18,816.84 கோடி ரூபாய். ஒன்றியத்துக்கு வரியாகச் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 பைசா மட்டுமே திரும்பப் பெறுகிறது தமிழ்நாடு. ஆனால் உத்தரப் பிரதேசமோ 2.73 ரூபாயாக...

வந்திடுச்சு; ராமராஜ்ஜியம் வந்துடுச்சு – கோடங்குடி மாரிமுத்து

வந்திடுச்சு; ராமராஜ்ஜியம் வந்துடுச்சு – கோடங்குடி மாரிமுத்து

”பங்கஜம் இனி நம்மளவா ஆட்சி தான்டீ. ராமன் கோயில் திறந்த அந்த நிமிஷத்திலேயே ராமராஜ்ஜியம் வந்திருச்சு. அமித்ஷா இதை அறிவிச்சுட்டாரு, இனி ஆயிரம் ஆண்டு ராமராஜ்ஜியம் தான் என்று அவரே கூறிட்டாரு. பாஜக தேசியக் குழு தீர்மானமே போட்டுடுச்சுடீ. போய் பால் பாயாசம் கொண்டு வா” இப்படி ஆனந்தக் கூத்தாடி இருக்கும் ஒரு கூட்டம். அவர்களுக்கு பல பெயர்கள் உண்டு. சமூக ஆர்வலர்கள், வலதுசாரி, அரசியல் ஆய்வாளர், பாஜக, இந்து முண்ணனி என்று பல பல முகமூடிகளில் வருவார்கள். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பார்கள். எதிர்த்து பேசுபவர்களின் நெத்தியடி கேள்விகளால் திக்குமுக்காடினாலும் கூச்சல் போட்டு மடைமாற்றம் செய்துவிடுவார்கள்.இவர்களெல்லாம் யார்? ஒற்றை இந்தியாவைப் போல ஒற்றை வரியில் சொல்லப்போனால் சங்கிகள் பாமர வாக்காளர்களுக்கு தலை சுற்றுகிறது. அவர்களுக்கு பல சந்தேகங்கள் வந்துவிட்டன. சங்கிகள் என்ன கூறுகிறார்கள், பாமர மக்கள் என்ன நினைக்கிறார்கள். இருவரும் நேருக்கு நேராக சந்தித்தால்… ஒரு உரையாடல் பாமர வாக்காளன் :...

மிருகத்துக்கும் மதச்சாயம்

மிருகத்துக்கும் மதச்சாயம்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் விஷ்வ இந்து பரிசத் அமைப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கிறது. அம்மாநிலத்தில் சிலிகுரி என்ற பகுதியில் பெங்கால் சவேரி என்ற உயிரியல் பூங்கா உள்ளது. அந்த பூங்காவில் ஆண் சிங்கத்துக்கு அக்பர் என்றும், பெண் சிங்கத்துக்கு சீதா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிங்கங்களும் திரிபுராவில் இருந்து வந்தவை. இதற்கு திரிபுராவிலேயே பெயர் சூட்டப்பட்டுவிட்டது. ஆண் சிங்கத்துக்கு அக்பர் என்ற இஸ்லாமியப் பெயரையும், பெண் சிங்கத்துக்கு சீதா என்ற ராமாயண பாத்திரப் பெயரையும் சூட்டியிருப்பது இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக இருக்கிறது. எனவே பெண் சிங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்பதுதான் விஷ்வ இந்து பரிசத் அமைப்பின் கருத்து. அக்பர் ராமாயணத்துக்கு எதிரானவரா? இந்துமதத்துக்கு எதிரானவரா? என்பதையும் வரலாற்றுரீதியாக நாம் சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. ராமாயணத்தை சமஸ்கிருத மொழியில் இருந்து பாரசீக மொழிக்கு மொழிப்பெயர்க்க வேண்டும் என்று உத்தரவிட்ட மன்னர் தான் அக்பர். ...

‘திராவிட மாடல் ஆட்சி’யின் ஈராண்டு சாதனைகள் – பட்டியலிட்ட முதலமைச்சர்

‘திராவிட மாடல் ஆட்சி’யின் ஈராண்டு சாதனைகள் – பட்டியலிட்ட முதலமைச்சர்

சட்டப்பேரவையில் பிப்ரவரி 15-ஆம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு கடந்த இரண்டரை ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், அவற்றால் ஏற்பட்ட பலன்கள் குறித்து முதலமைச்சர் ஆற்றிய உரையில் இருந்து சில பகுதிகளைக் காணலாம். இந்தியாவின் பொருளாதாரத்துக்கு 9 விழுக்காடு பங்கைத் தருகிறது தமிழ்நாட்டின் பொருளாதார வளம்! இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது; ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி 7.24 விழுக்காடாக இருக்கும்போது தமிழ்நாட்டின் வளர்ச்சியானது 8.19 விழுக்காடாக உயர்ந்துள்ளது! இந்திய அளவில் பணவீக்கமானது 6.65 விழுக்காடாக இருக்கும்போது, தமிழ்நாட்டில் அது 5.97 விழுக்காடாக குறைந்து உள்ளது! ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது! மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது! தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை 3-ஆவது இடத்துக்கு உயர்த்தி உள்ளோம்! கல்வியில்...

இன அழிப்புக்கு துணைபோகும் அதானி?

இன அழிப்புக்கு துணைபோகும் அதானி?

காஸா நகரில் பாலஸ்தீனிய மக்களையும், படைகளையும் குறிவைத்து இஸ்ரேலிய படைகள் கடந்த 4 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக ஹெர்ம்ஸ் 900 வகை டிரோன்களை வைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 28,000 பேர் உயிரிழந்தனர். அதில் 10,000க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். இனப்படுகொலைக்கு ஒப்பான இக்கொடூரச் செயலுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வழக்கை எதிர்கொள்ளும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. இந்த ஹெர்ம்ஸ் 900 வகை டிரோன்களை அதானி குழுமம் தற்போது தயாரித்து அனுப்பியிருக்கிறது என்ற தகவல்  வெளியாகியிருக்கிறது. 20-க்கும் மேற்பட்ட டிரோன்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு உபகரணங்கள் சார்ந்த பிரபல ஊடகமான ஷெப்பர்டு மீடியா கூறியுள்ளது. இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, 2018ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் 15 மில்லியன் டாலர் முதலீட்டில் அதானி குழுமம் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு ஆலையை நிறுவியது. அந்த ஆலையில் இருந்துதான் இந்த டிரோன்கள் தயாரித்து அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதானி குழுமத்திற்கு எதிராக...

இழிவு நீங்கவே திராவிட அடையாளம் (5) – பேராசிரியர் ஜெயராமன்

இழிவு நீங்கவே திராவிட அடையாளம் (5) – பேராசிரியர் ஜெயராமன்

(08.02.2024  இதழில்   வெளியான உரையின் தொடர்ச்சி) 1892-இல் ஆங்கிலக் கல்வி வந்தபோது சென்னை மாகாணத்தில் சர்வீஸ் கமிசன் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இந்த 1892-க்கும் 1904-க்கும் இடையில் அய்.சி.எஸ். அதிகாரிகளாக 16 இந்தியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில் 15 பேர் பிராமணர்கள். அந்த காலகட்டத்தில் ஆளுநர் நிர்வாக கவுன்சிலில் 3 இந்தியர்கள், அதில் இருவர் பிராமணர்கள். 1900-ஆம் ஆண்டு ஐந்து பேர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர். அதில் நால்வர் பிராமணர்கள். 1907-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினர்களாக 12 நியமிக்கப்பட்டனர். அதில் 11 பேர் பிராமணர்கள். அவர்கள் பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி இருக்கக்கூடாது என்று கூறி அதை எடுத்துவிட்டனர். அதற்குப் பின்னர் ஆட்சியமைத்த பனகல் அரசர் தலைமையிலான நீதிக்கட்சி காலத்தில்தான் தமிழ் மீண்டும் கொண்டுவரப்பட்டது. திராவிடம் என்ற சொல் 7ஆம் நூற்றாண்டில் குமரில பட்டர் எழுதிய தாந்திர வார்த்திகா என்பதில் ஆந்திரா திராவிட பாஷை என்று வருகிறது. இந்த மண்ணில்...

ஆளுநரின் ‘மனசாட்சி’ உரை இப்படி…

ஆளுநரின் ‘மனசாட்சி’ உரை இப்படி…

ஆளுநர் உரை : மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களே, உறுப்பினர்களே, அவைத் தலைவரே உங்கள் அனைவருக்கும் குடியரசு தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநரின் நமஷ்காரம். ஜெய் சிரி ராம் என்று நான் இப்போது கூறுவேன். அதை நீங்கள் திருப்பி முழங்க வேண்டும் (அவையில் நான்கு பேர் மட்டுமே திருப்பி முழங்குகிறார்கள்) சரி அனைவரும் இதை முழங்காவிட்டாலும், நான் அனைவரும் முழங்கியதாக பேரவைக் குறிப்பில் பதிவு செய்ய உத்தரவிடுகிறேன். தமிழ்நாட்டில் இப்போது மாநில உரிமை என்ற கூச்சல் காதை துளைக்கிறது. இப்போதைய தேவை மாநில உரிமை அல்ல, ஆளுநர்களின் உரிமை. அதுவும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களுக்கான உரிமை. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் சனாதன தர்மம். இந்த சனாதன தர்மம் இல்லாவிட்டால் ஜனநாயகமே இல்லை என்று நமது முன்னோர்களும், ரிஷிகளும், தேவர்களும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அடித்து கூறிவிட்டார்கள். சூத்திரர்கள், பஞ்சமர்கள் அன்னிய மதத்தினர் ஓட்டு போட்டதாலேயே மக்கள் பிரதிநிதியாகிவிட...

பாஜகவின் மோசடிகளை தோலுரிக்க பெரியார் தேவைப்படுகிறார் –  ஆளூர் ஷா நவாஸ்

பாஜகவின் மோசடிகளை தோலுரிக்க பெரியார் தேவைப்படுகிறார் – ஆளூர் ஷா நவாஸ்

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு வட சென்னை மாவட்டக் கழகம் சார்பில் 20.12.2023 புதன்கிழமை புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விசிக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். உரை பின்வருமாறு :- நினைவுநாள் என்பது வருடத்தில் ஒருநாள், ஆனால் நினைவுநாளில் மட்டும் நினைவுகூறப்பட வேண்டிய தலைவரல்ல பெரியார். எந்நாளும் நமக்கு அவருடைய நினைவுநாள்தான். பெரியாரை நீக்கிவிட்டு அல்லது பெரியாரை மறந்துவிட்டு அல்லது பெரியாரை நினைக்காமல் இருந்துவிட்டு நம்மால் இந்த சமூகத்தில் நடமாடவே முடியாது. அந்தளவுக்கு இங்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு மகத்தான தலைவர் பெரியார். அவரைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள், அவதூறுகள், போலியான சித்தரிப்புகள் என இவற்றின் ஊடாக நாளுக்கு நாள் பெரியார் அதிகம் வாசிக்கப்படுகிறார். நினைவுகூறப்படுகிறார், இந்த தலைமுறையின் மத்தியில் அவர் உயர்ந்து கொண்டே செல்கிறார். அப்படிப்பட்ட ஈர்ப்பு சக்தி கொண்ட ஒரு தலைவர் பெரியார். காந்தியை எதிர்த்தார்,...

ட்ரெண்டிங்கில் பெரியார்

ட்ரெண்டிங்கில் பெரியார்

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பன்றி உருவம் போல பெரியாரை சித்தரித்து சமூக வலைத்தளங்களில் ஒரு படம் பரப்பப்பட்டது. அந்த படத்தைப் பார்த்தால் பெரியாரியவாதிகளின் மனம் புண்படும், அதில் ஆனந்தமடையலாம் என்று கருதி எவரோ பரப்பியிருக்கிறார். ஆனால் நடந்ததோ வேறு. “இந்த படம் அழகாக இருக்கிறது, படத்தை வரைந்தவருக்கு பாராட்டுக்கள், பெரியார் இருந்திருந்தால் அவரும் நிச்சயம் பாராட்டியிருப்பார். ஆடு, மாடு, கோழி, சிங்கம், புலி போன்ற மற்ற விலங்குகளைப் போல பன்றியும் ஒரு விலங்கு. அந்த விலங்கைப் போல பெரியாரை சித்தரித்தால் அதில் என்ன அவமானம் இருக்கிறது? அப்படியானால் விஷ்ணுவின் வராக அவதாரமும் இழிவானது தானா?” என பெரியாரியவாதிகள் எழுப்பிய கேள்விகள் சமூக வலைத்தளங்களை 2 நாட்கள் ஆக்கிரமித்துவிட்டன. வாய்ப்பை ஏற்படுத்தியாவது பெரியாரை அவ்வப்போது டிரெண்டிங்கில் வைத்துவிடுகிறார்கள் கொள்கை எதிரிகள். “எனக்கு விளம்பரமே எனது எதிரிகள்தான்” என பெரியார் சொன்னது அவர் மறைந்து அரைநூற்றாண்டுகள் ஆகியும் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது....

பகுத்தறிவை போதித்த கலைஞரின் கலைப் படைப்புகள்

பகுத்தறிவை போதித்த கலைஞரின் கலைப் படைப்புகள்

(கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு  நீர்வளத்துறை வெளியிட்டுள்ள மலரில் “பகுத்தறிவு சீர்த்திருத்தச் செம்மல்” என்ற தலைப்பில் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை) கடந்த இதழின் தொடர்ச்சி… மக்கள் மத்தியில் புரையோடிக் கிடக்கிற மூட நம்பிக்கைகள், புராணங்களில் எழுதி வைக்கப்பட்டிருக்கிற ஆபாசங்களை எழுதியெல்லாம் ஆதாரப்பூர்வமாக விளக்கி, ‘சோ’ அதற்கு மறுப்பே எழுத இயலாத அளவுக்கு பகுத்தறிவுச் சுடராக மிளிர்ந்தவர் கலைஞர். இந்தியாவில் வேறெந்த தலைவர்களுக்கும் தோன்றாத, சமத்துவபுரம் என்ற மாபெரும் திட்டம் கலைஞரின் எண்ணத்தில் உதித்து செயல்வடிவம் பெற்றதுதான் அவரது பகுத்தறிவின் ஆற்றலுக்கான உச்சபட்ச சான்று. ஊர், சேரி, அக்ரகாரம் என மூன்றாய் பிரிந்து கிடக்கும் சமூகக் கட்டமைப்பை தகர்த்து, சமன்படுத்தும் முன்முயற்சியை செய்ய வேண்டுமென்று தேர்தல் அரசியலில் எவருக்குமே தோன்றவில்லை, கலைஞருக்கு மட்டும்தான் தோன்றியது. அதற்கான முன்மாதிரியாக பட்டியல் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், உயர்ஜாதியினர் என அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக வாழும் வகையில் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை கட்டியெழுப்பினார். அதிலும் ஆழமாக...

ஜாதி பேதமும் வர்க்க பேதமும் வேறு வேறல்ல! – கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

ஜாதி பேதமும் வர்க்க பேதமும் வேறு வேறல்ல! – கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

டிசம்பர் 16-ஆம் தேதி கோவை அண்ணாமலை அரங்கத்தில் நடந்த அனைத்திந்திய சாதி ஒழிப்பு இயக்கத்தின் 5-வது அகில இந்திய மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு கழகத் தலைவர் ஆற்றிய உரை. பொதுவுடமை இயக்கங்கள் ஜாதியின்பால் தன் கருத்தைத் திருப்புமா என்ற எண்ணம் பல வேளைகளில் இருந்திருக்கிறது. அதுகுறித்த விவாதங்களும் கூட இருந்திருக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால்கூட எம்.சி.பி.அய் கட்சியினர் (யுனைடெட்) என்னிடம் வந்து பெரியார் நினைவுநாளை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் “மார்க்சியத்தின் மீதான எங்கள் விமர்சனங்கள்” என்ற தலைப்பில் நீங்கள் உரையாற்ற வேண்டும் என்று கேட்டனர். மார்க்சியர்கள் எப்போதுமே உலக நடப்புகளை துல்லியமாகக் கணித்து அதற்கேற்ப தங்கள் வரையறைகளை, செயல்திட்டங்களை வகுத்துக் கொள்ளும் பண்பு கொண்டவர்கள். ஜாதிய சிக்கல்களை கையிலெடுக்கிற மார்க்சிய இயக்கங்கள் அண்மைக்காலங்களில் பல இயக்கங்கள் வந்துவிட்டன. ஆனால் இதற்குமுன்புவரை ஏன் இவ்வளவு காலம் ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒரு வலுவான இயக்கத்தை முன்னெடுக்கவில்லை என்ற ஏக்கம்...

வள்ளுவருக்குப் பூணூல் போடுவதைத் தடுத்த கலைஞர்

வள்ளுவருக்குப் பூணூல் போடுவதைத் தடுத்த கலைஞர்

(கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு  நீர்வளத்துறை வெளியிட்டுள்ள மலரில் “பகுத்தறிவு சீர்த்திருத்தச் செம்மல்” என்ற தலைப்பில் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை) பகுத்தறிவு என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று கலைஞர் கொடுத்த விளக்கத்தில் இருந்தே இந்த கட்டுரையை தொடங்கலாம் என்று கருதுகிறேன். “எல்லாவற்றையும் பகுத்தறியத்தான் பகுத்தறிவு. கடவுள் உண்டா இல்லையா என்று ஆராயக் கூட பகுத்தறிவு தேவைப்படுகிறது. சிந்திக்கிற, பகுத்தறிகிற ஆற்றலைப் பெற்றதால்தான் மனிதன் மற்ற உயிரினங்களை விட மேலானவனாக மனிதன் கருதப்படுகிறான். அப்படிப்பட்ட அந்த ஆற்றலை எதிர்கால சமுதாயம் வாழ்வதற்குப் பயன்படுத்த வேண்டும்.”  1.1.81 அன்று சென்னையில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநாட்டை தொடங்கிவைத்து கலைஞர் குறிப்பிட்டவை இவை. எழுத்தாளர், பத்திரிகையாளர், வசனகர்த்தா, அரசியலாளர், கவிஞர், பாடலாசிரியர் என கலைஞருக்கு பன்முக அடையாளங்கள் இருந்தாலும், தன்னை அவர் எவ்வாறு அடையாளப்படுத்திக் கொண்டார் என்பதில் இருந்துதான் கலைஞரின் வரலாற்றை அணுக வேண்டும். “5 முறை முதல்வராக இருந்தேன், 50 ஆண்டுகாலம் திராவிட...

ஆட்சி அதிகாரம் : அம்பேத்கர் பார்வை என்ன? – கொளத்தூர் மணி

ஆட்சி அதிகாரம் : அம்பேத்கர் பார்வை என்ன? – கொளத்தூர் மணி

நாம் புரட்சியாளர் அம்பேத்கரை, அவரின் கொள்கைகளை புரிந்து கொள்ள வேண்டுமானால், ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது அவரது ‘ஜாதி ஒழிப்பு’ நூல். லாகூர் மாநாட்டில் அவர் ஆற்ற இருந்த உரையை நூலாக வெளியிட்டார். நூல் வெளி வந்த இரண்டாம் மாதத்தில், அம்பேத்கரின் அனுமதியோடு தமிழில் பெரியார் வெளியிட்டார். அந்த நூல் தாங்கியிருந்த சிந்தனையைதான் பெரியாரும் கொண்டிருந்தார். அரசியல் நிலைபாடுகளில் இருவருக்கும் சிறு சிறு மாற்றங்கள் இருந்திருக்கலாம். அம்பேத்கர் ஒன்றுபட்ட இந்தியாவை விரும்பினார். பெரியார் தனித் தமிழ்நாடு பேசினார். இந்தி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். பெரியார் இந்தி கூடாது என்று சொன்னார். அரசியல் நிலைகளில் அவரவர்களுக்கு இருந்த கருத்தின் அடிப்படையில் சொன்னார்கள். தாழ்த்தப்பட்டோரின் குடியிருப்பை பிற சாதியினர் வாழும் பகுதிகளில் நிறுவ வேண்டும் என்பது பெரியாரின் கருத்தாக இருந்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிக் கிணறு வெட்ட காங்கிரஸ் நிதி அனுப்பியது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியார் வந்த நாற்பத்தி...

மோடி ஆட்சி இஸ்ரேலை ஆதரிப்பது ஏன் (5) இந்தியாவில் பார்ப்பனர்கள், அமெரிக்காவில் யூதர்கள் – விடுதலை இராசேந்திரன்

மோடி ஆட்சி இஸ்ரேலை ஆதரிப்பது ஏன் (5) இந்தியாவில் பார்ப்பனர்கள், அமெரிக்காவில் யூதர்கள் – விடுதலை இராசேந்திரன்

1968-ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட நிக்சன், ஹம்ப்ரி இருவருமே யூதர்களின் ஆதரவுக்கு வலைவீசினார்கள். தேர்தல் செலவுக்குப் பெருந்தொகையை யூதர்களிடமிருந்து பெறுவதே இதன் நோக்கம். ஹம்ப்ரிக்குத்தான் யூதர்கள் ஆதரவு கிடைத்தது. 85 சதவீத யூதர்களின் வாக்கு ஹம்ப்ரிக்குக் கிடைத்தும், அவரால் வெற்றி பெற முடியவில்லை! நிக்சன் வெற்றி பெற்றுவிட்டார். அரபு – இஸ்ரேல் பிரச்சனைக்கு நியாயமான முறையில் அமைதித் தீர்வு ஒன்றை உருவாக்க விரும்பி, 1967-க்குப் பிறகு இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளை, அரபு நாடுகளிடம் திரும்ப ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கினார். யூதர்கள் நிக்சனை மிரட்டத் துவங்கினர். யூத அமைப்புகள், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திரட்டி, வலிமையான போராட்டங்களில் இறங்கின. எதிர்ப்புகளைச் சமாளிக்க முடியாமல் நிக்சன் திணறினார். 1970 மார்ச்சில் – பிரான்ஸ்அதிபர் அமெரிக்கா வந்தபோது, அவரது அரபு ஆதரவுக் கொள்கைகளை எதிர்த்து யூத அமைப்புகள் போராட்டம் நடத்தின. அமெரிக்க – பிரான்ஸ்உறவு சீர்குலைந்து விடக்கூடாது என்பதற்காக, பிரான்ஸ்அதிபரிடம் நிக்சன் மன்னிப்புக் கோரினார். இதற்காக...

“தமிழ் மீது எனக்கு வெறுப்பில்லை” – பெரியார் அறிக்கை

“தமிழ் மீது எனக்கு வெறுப்பில்லை” – பெரியார் அறிக்கை

1970ஆம் ஆண்டில் “தமிழ்ப் பாடமொழித் திட்டத்தை” கலைஞர் அமல்படுத்தியபோது அதனை வரவேற்று பெரியார் அளித்த அறிக்கை. தமிழ்நாட்டில் வீழ்ச்சி அடைந்த காங்கிரஸ் இயக்கம் தலை எடுக்க, வளர நான் காரணமாக இருந்தேன். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டு  நீதிக்கட்சித் தலைவரானதன் காரணமே பார்ப்பனரல்லாத தமிழர்களின் எதிர்கால வாழ்வை ஒளிமயமாக ஆக்குவதற்காகவேயாகும். அதற்காக அன்றிலிருந்து இன்றுவரை நான் ஓய்வெடுக்க டாக்டர்கள் கூறியும் ஒரு நிமிடமும் ஓய்வு கொள்ளாமல் பணியாற்றிக்கொண்டுள்ளேன். லட்சியங்களில் வெற்றி பலருக்குக் கிடைத்தது போல், எனக்கு இளமைக் காலத்தில் கிடைக்காவிட்டாலும் எனது முதுமைக் காலத்திலாவது கிடைத்தது என்பதற்கு அடையாளமாகத்தான் என்னோடு  இருந்து  வளர்ந்தவர்களால்  ஆட்சி இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழ்ப் பாட மொழி என்ற யுத்த தளவாடம்: இந்த ஆட்சியுனுடைய சாதனைகளில் எந்தவித ஓட்டை உடைசல்களையும் குறிப்பிட்டுக்காட்டி எதிர்க்கமுடியாமல்  தமிழ்ப் பாட மொழிப் பயற்சியைத் தங்கள் யுத்த தளவாடமாக எடுத்துக்கொண்டு, ஆச்சாரியாருடைய சுதந்திராக்கட்சியும், ஆரிய ஏடுகளும் இந்த ஆட்சியைக்...

நிர்மலாவின் பொய்யுரைகளுக்கு அமைச்சர் பதில்

நிர்மலாவின் பொய்யுரைகளுக்கு அமைச்சர் பதில்

சென்னை மேற்கு மாம்பலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2014-2023 வரை ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு வழங்கிய வரி ரூ.6.23 இலட்சம் கோடி. ஆனால் ஒன்றிய அரசு தமிழகத்துக்கு வழங்கிய நிதி ரூ.6.96 கோடி. தமிழ்நாட்டில் இருந்து பெற்ற வரியை விட கூடுதலான நிதியினை நாங்கள் வழங்கிவருகிறோம் என்று உண்மைக்கு மாறான தகவலைத் தெரிவித்துள்ளார். அதற்கு தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். கடுமையான நிதி நெருக்கடியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற திமுக அரசு, கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைகளுக்கு ரூ.4000, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித்தொகை, நிறைவேற்றவே முடியாது என்று எதிரிகளால் விமர்சிக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசாக ரூ.1000 என ஒன்றிய அரசின் எந்தவித ஒத்துழைப்புமின்றி தமிழ்நாடு அரசு தொடர்ந்து தனது திட்டங்களை செயல்படுத்திவருகிறது....

பேராபத்து சட்டங்களுக்காக ஜனநாயகப் படுகொலை –   எட்வின் பிரபாகரன்

பேராபத்து சட்டங்களுக்காக ஜனநாயகப் படுகொலை – எட்வின் பிரபாகரன்

வரலாற்றில் இல்லாத வகையில் இந்திய நாடாளுமன்றத்தில் 11 கட்சிகளின் 140 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.மோடிக்கு எதிராக, நாட்டின் பாதுகாப்பு நலனைக் கருதி, பதாகைகளை ஏந்தி வந்ததற்காக இந்த அக்கிரம நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. INDIA கூட்டணியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல்,  சங்கிகள் செய்த வெறிச்செயல் இதுவாகும். இனி நம்முடைய நாடாளுமன்றம் வடகொரிய நாடாளுமன்றத்தைப் போல இருக்கப் போகிறது என கார்த்தி சிதம்பரம் (காங்) விமர்சித்துள்ளார். எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு பல்வேறு சர்ச்சைக்குரிய மசோதாக்களை ஒன்றிய சனாதன அரசு, எந்த எதிர்ப்புக்கும் இடமின்றி நிறைவேற்றி உள்ளது. இதை மணிஷ் திவாரியும் (காங்) குறிப்பிட்டுப் பேசியுள்ளார். நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு இரங்கல் உரை எழுத வேண்டிய நிலையில் இருக்கிறோம் என சசி தரூர் (காங்) கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது. உண்மையை பேசுபவர்களையும் கேள்வி கேட்பவர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளதாக சுஷில் குமார் ரிங்கு (ஆம்ஆத்மி) கண்டித்துள்ளார். தன்னுடைய கூர்மையான கேள்விகளால் பாஜகவினரை துளைத்து வந்த,...

பெரியாரை மீண்டும் மீண்டும் வாசிப்போம் – ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ

பெரியாரை மீண்டும் மீண்டும் வாசிப்போம் – ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ

(28.12.2023 இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி) ஒன்றிய அரசின் எந்தவொரு உயர் பொறுப்புகளிலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்புச் சார்ந்தவர்கள் கிடையாது என்று ஒன்றிய அரசே நாடாளுமன்றத்தில் கூறுகிறது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், இராணுவம் என ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளிலும் முற்பட்ட வகுப்பினர்தான் நிறைந்துள்ளனர். இந்த நாட்டின் அதிகாரம் முழுமைக்கும் இன்றைக்கு பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு செல்லும்போது பெரியார் ஏன் இது உண்மையான விடுதலை கிடையாது, அதிகாரம் கைமாறி இருக்கிறது என்று கூறினார்? ஆங்கிலேயரிடமாவது நம் உரிமைகளைப் போராடி பெற்றுவிடலாம் என்று பெரியார் கூறினார். சுதந்தர நாளை துக்கநாளாக அறிவித்தவர் பெரியார். விடுதலை அடைந்து 75 ஆண்டுகளாகிறது. ஆனால் இன்னும் கல்விக்காக, வேலைவாய்ப்புகளுக்காக முட்டிமோதிக்கொண்டுதானே இருக்கிறோம். பிற்படுத்தப்பட்டவராக இருக்கும் மோடி பிரதமராக இருக்கும்போது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடி வென்றது திமுக, விசிக உள்ளிட்ட...

இந்தியாவை இரண்டாகப் பிரித்தது பாஜகதான்

இந்தியாவை இரண்டாகப் பிரித்தது பாஜகதான்

தென் மாநிலங்கள் பிரிவினையைப் பேசுகின்றன என்ற அபத்தமான வாதங்களை அமித் ஷா சமீபத்தில் வைத்திருந்தார். ஒன்றிய அரசே தனது பாரபட்சமான செயல்பாடுகளால் தென் மாநிலங்கள் வேறு, வடமாநிலங்கள் வேறு என்ற நிலையை ஏற்படுத்திவிட்டு,  பிரிவினைவாதம் பேசுகிறார்கள் என இப்போது வெற்றுக் கூச்சலிடலாமா என்று தென் மாநிலங்களில் இருந்து பதிலடிகள் கொடுக்கப்பட்டன. கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.-யும், அக்கட்சியின் செயற்குழு உறுப்பினருமான சசிதரூர் பார்ப்பனர்கள் மேடையிலேயே இந்த விவாதத்தை துணிச்சலோடு எழுப்பியிருக்கிறார். துக்ளக் இதழின் 54-வது ஆண்டு விழா சென்னையில் (15.01.2023) நடைபெற்றது. வழக்கமாக பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அவர்களது ஆதரவாளர்களே சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பார்கள். ஆனால் இம்முறை  சசிதரூர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இவர் ஏன் துக்ளக் விழாவில் கலந்துகொள்கிறார் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் பார்ப்பனர்கள் குழுமியிருந்த அந்த அரங்கில் சசிதரூர் முன்வைத்த கருத்துக்கள் முக்கியமானவை. “தற்போது நிதிப் பகிர்வு கொள்கையால் தென்...

நாத்திகப் புரட்சியை நோக்கி சமூகத்தை நகர்த்துவோம் – எட்வின் பிரபாகரன்

நாத்திகப் புரட்சியை நோக்கி சமூகத்தை நகர்த்துவோம் – எட்வின் பிரபாகரன்

“உலகம் முழுவதும் பல நாடுகளில் நாத்திகக் கொள்கைகள் நசுக்கப்படுவதும், நாத்திகர்கள் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்படுவதும், முன்னொரு காலத்தில் வழமையாக இருந்து வந்த நிலையில், தற்போதும் சில நாடுகளில் அத்தகையதொரு நிலையே தொடர்வது வேதனைக்குரிய ஒன்றாகும். நாத்திகர்களுக்கு எதிரான எதிர்மறை எண்ணங்களும், அச்சுறுத்தல்களும், பாரபட்சங்களும், விரோதங்களும் சகிப்புத்தன்மையற்ற மனநிலையும் பல்வேறு வலதுசாரி நாடுகளில் இன்றளவும் பரவலாக இருக்கின்றன. நாத்திகர்கள் என்றாலே “ஒழுக்கம் இல்லாதவர்கள்” என்கிற அடிப்படை முகாந்திரமற்ற வெறுப்புப் பிரச்சாரமும் செய்யப்படுகின்றது. சொந்த குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு, உறவுகளால் கைவிடப்பட்டு, சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு, அரசுகளால் தண்டிக்கப்பட்டு, ஒரு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்படியான வாழ்க்கையை நாத்திகர்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது. இதெல்லாம் தாண்டி நாத்திகர்கள் தங்களை மனிதநேயர்களாக (humanist) அடையாளப்படுத்திக் கொண்டு, சர்வதேச அளவில் மனித உரிமைக்காகவும், சமத்துவத்துக்காகவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தும், புவி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கோடும், பாலின உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டும், LGBTQ+ உரிமைகளை வென்றெடுக்கவும் தொடர்ச்சியாக...

தமிழ்க் குடிகளும் ஆரிய ஜாதிகளும் ஒன்றல்ல! – பேராசிரியர் ஜெயராமன்

தமிழ்க் குடிகளும் ஆரிய ஜாதிகளும் ஒன்றல்ல! – பேராசிரியர் ஜெயராமன்

(ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூரில் 24.12.2023 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் தமிழ்மண் தன்னுரிமைக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் பேசிய உரை) இந்த கூட்டத்தை சுற்றும் முற்றிலும் பாருங்கள்.. நாகரீகமான உடை உடுத்தியுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், அறிவார்ந்த பெருமக்கள், பெயருக்கு பின்னால் எம்.பி.பி.எஸ், எம்.காம், எம்.ஏ.பி.எல் போன்ற பட்டங்கள், பையில் பணம், ஒரு மகிழ்ச்சியான  உளநிலை….  நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து இந்த உரையை கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்.  மகிழ்ச்சியான ஒரு நல்ல சூழ்நிலை நிலவுவதாக நாம் கருதுகிறோம். ஆனால் இது ஒரு நூறாண்டுகளுக்குள் உருவானதுதான். நான் பேசுவதை உரையாக யாரும் கருத வேண்டாம், ஆனால் உருப்படியான தகவல்களாக கவனித்து சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். இந்த உலகம் 100 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி கிடையாது. பல தெருக்களில் நம்மை போன்ற பெரும்பான்மையானோர் நடக்கவே உரிமை கிடையாது. சில ஜாதிகளுக்கு திருமணம் செய்துகொள்ள உரிமை கிடையாது. சொத்து வைத்துக்கொள்ள...

பார்ப்பனர்களுக்கு பதவிகளை வாரி இறைக்கும் பாஜக!

பார்ப்பனர்களுக்கு பதவிகளை வாரி இறைக்கும் பாஜக!

1980-களில் பாஜக தொடங்கப்பட்ட சமயத்தில் அது முழுக்க பார்ப்பன – பனியாக்கள் கூடராமாகத்தான் இருந்தது. இப்போதும் அதிகாரம் மிக்க உயர் பதவிகளில் அவர்கள்தான் இருக்கின்றனர் என்றாலும், ராமர் கோயில் இயக்கத்தில்தான் பிற்படுத்தப்பட்டவர்களை பொறுப்புகளில் அமர்த்தியது பாஜக. இப்போது கோயில் கட்டி முடிக்கப்படும் தருவாயில் மீண்டும் பார்ப்பனர்களுக்கே பதவி என்ற வழியில் வேகமாக பயணிக்கத் தொடங்கியிருக்கிறது பாஜக. ஏற்கெனவே பார்ப்பனரான ஹிமந்த பிஸ்வா சர்மாவை அசாம் முதல்வராக நியமித்திருந்த பாஜக, சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த ராஜஸ்தானிலும் பார்ப்பனரான பஜன் லால் சர்மாவை முதல்வராக்கியிருக்கிறது. 2023-ஆம் ஆண்டின் இறுதியில் மத்தியப் பிரதேச துணை முதல்வராக ராஜேந்திர சுக்லா என்ற பார்ப்பனரையும்,  சத்தீஸ்கர் துணை முதல்வராக விஜய் சர்மா என்ற பார்ப்பனரையும் நியமித்தது பாஜக. ஏற்கெனவே உத்தரப் பிரதேச துணை முதல்வராக பிரஜேஷ் பதக் என்ற பார்ப்பனரும், மகாராஷ்டிர துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் என்ற பார்ப்பனரும் இருக்கிறார்கள். மக்கள் மிகச்சொற்பமாக இருக்கிற பார்ப்பனர்கள்...

அரசுப் பள்ளிகளில் AI பயிற்சி; பாராட்டத்தக்க முயற்சி

அரசுப் பள்ளிகளில் AI பயிற்சி; பாராட்டத்தக்க முயற்சி

தமிழ்நாடு நவீனமடைவதற்கும் அறிவியல் மனப்பான்மையோடு வளருவதற்கும் மிக முக்கியக் காரணம் பெரியார். அறிவியலை உள்வாங்கிக் கொண்டு, நவீனங்களுக்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டுமென்ற சிந்தனை பெரியாரிடம் இருந்தது. திராவிட இயக்கம் ஆட்சியில் அமர்ந்தபோது அந்த சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கிடைத்தது. அதனால்தான் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னே நிற்கிறது தமிழ்நாடு. வடக்கே உள்ள கான்பூர் ஐஐடி-யிலும் தெற்கே இருக்கிற கிண்டி பொறியியல் கல்லூரியிலும்தான் இந்தியாவில் முதன்முதலாக கணினிப் பயன்பாடு தொடங்கியது. ஐபிஎம் 1620 வகை கணினி அது. 1965ஆம் ஆண்டில் கிண்டி பொறியியல் கல்லூரிக்குச் சென்ற பெரியாரிடம் இப்படியொரு கருவி வந்திருக்கிறது எனச் சொல்கிறார்கள். உடனே அதைப் பார்க்க வேண்டுமென்றார் பெரியார். வயதோ 86. படியேற முடியாமல் இருந்த நிலையில், நாற்காலியில் அமரவைத்து பெரியாரை மாடிக்கு தூக்கிச் சென்று கணினியைக் காட்டினர். அது எப்படிச் செயல்படுகிறது என ஒவ்வொன்றாக விளக்கம் கேட்டுக்கொண்டதுடன், அதன் செயல்பாடுகளை சோதித்தும் பார்த்து வியந்தார் பெரியார். கம்ப்யூட்டருக்கு...

சுங்கச் சாவடிகளை வைத்து பகல் கொள்ளை

சுங்கச் சாவடிகளை வைத்து பகல் கொள்ளை

“மராட்டிய மாநிலத்தில் மும்பையுடன் நவி மும்பையை இணைக்கும் அடல் சேது பாலத்தை இம்மாதத் தொடக்கத்தில் (ஜன.12) பிரதமர் மோடி திறந்துவைத்தார். 22 கிமீ நீளம் கொண்ட இப்பாலம் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடல் மேல் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்றைய தேதியில் இந்தியாவில் மிக நீண்ட கடல் பாலம் இதுதான்” என்றெல்லாம் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் இன்னொரு செய்தியைக் குறிப்பிட மறந்துவிட்டன. இந்த 22 கிமீ நீள பாதையில் பயணிக்க சுங்கக் கட்டணம் 250 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இனி நாடு முழுக்க எல்லா சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் இப்படித்தான் தாறு மாறாக இருக்கப் போகிறது என்பதுதான் கடந்த 9 ஆண்டுகால ஆட்சி உணர்த்துகிறது. 2014-15 நிதியாண்டில் மோடி ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவில் இருந்த சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 145. ஆனால் அதை படிப்படியாக உயர்த்தி தற்போது 959-ஆக அதிகரித்திருக்கிறது ஒன்றிய அரசு. அதிலும் குறிப்பாக கொரோனா பேரிடருக்குப் பிறகு மட்டும் 650-க்கும் அதிகமான...

இராமனுக்கு கோயில் கட்டியது எதற்காக? (2) – பேராசிரியர் ஜெயராமன்

இராமனுக்கு கோயில் கட்டியது எதற்காக? (2) – பேராசிரியர் ஜெயராமன்

(18.01.2024 இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி) தென்னிந்தியாவில்  கிபி மூன்றாம் நூற்றாண்டு வரைக்கும் சங்ககாலம் என்று பெயர். அந்த காலத்தில் ஜாதி என்பதே அறவே கிடையாது. ஒருவன் ஒரு பெண்ணைப் பார்த்து அவள் மீது ஆசை கொண்டால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை போன்ற வாழ்க்கைமுறைகளில் இவர்கள் வாழ்ந்தார்கள். அந்த காலகட்டத்தில் பல்லவர்கள் வருகிறார்கள். பின்னர் தமிழ்நாட்டை கைப்பற்றுகிறார்கள். அவர்கள் பரத்வாஜ கோத்திரம் எனும் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர்கள். இது அவர்களுடைய கல்வெட்டு செப்பேடுகளில் உள்ளது. அவர்கள் தமிழ்நாட்டில் நுழையும் போதே வர்ண தர்மத்தை கொண்டுவருகிறார்கள். பின்னர் சிறுகச்சிறுக பார்ப்பனர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தனர். இந்த பல்லவர்கள் காலத்தில் தான் குகை கோயிகள், கற்கோயில்கள் வடிவமைக்கப்பட்டன. பல்லவர் காலத்திற்கு பிறகு கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் இங்கு சோழர்கள் ஆட்சி தொடங்கியது. அப்பொழுது தான் இங்கு மிகப்பெரிய அளவில் கோயில்கள் கட்டப்பட்டன. வெறும் கற் கோயில்கள் உருவாக்கப்பட்ட போதே...

“ஜல்லிக்கட்டின் காட்டுமிராண்டித்தனங்களும் மூடநம்பிக்கைகளும்” – ம.கி.எட்வின் பிரபாகரன்

“ஜல்லிக்கட்டின் காட்டுமிராண்டித்தனங்களும் மூடநம்பிக்கைகளும்” – ம.கி.எட்வின் பிரபாகரன்

ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதற்கு எத்தனையோ போலியான பண்பாட்டு பெருமிதக் காரணங்கள் சொல்லப்பட்டாலும் கூட, உண்மை வேறாக இருக்கின்றது. ஜல்லிக்கட்டினுடைய மூலாதாரமான நோக்கம் ஒரு வீரனின் ரத்தம் விவசாய நிலத்தில் சிந்தப்பட வேண்டும் என்பதுதான்.  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு நீங்கள் சென்றால் தெரியும். முதல் காளையான ஊரின் கோவில் காளையை அவிழ்த்து விடுவதற்கு முன்பு, அந்த மக்கள் சாமியிடம் வேண்டிக் கொள்வதெல்லாம், “இந்த வருசம் அதிகமா குத்து விழணும் சாமி” என்பதுதான். நிறைய காளைகள் பிடிபட வேண்டும் என்று சாமி கும்பிட மாட்டார்கள். ஜல்லிக்கட்டின் பிரதான நோக்கம் காளையை அணைவதல்ல; வீரனை அடையாளப்படுத்துவதுதான். தனது நிலத்தில் வீரனின் ரத்தம் சிந்தப்படுவதன் மூலம் விவசாயம் செழிக்கும் என்ற விவசாய சமூகத்தின் ஆதி நம்பிக்கையே இதன் அடிப்படை. கோவில்களில் நடக்கும் வேள்வியின் எச்சங்களை கொண்டு வந்து நிலத்தில் தூவுவதோ அல்லது கோவில் தீர்த்தங்களை கொண்டு வந்து நிலத்தில் தெளிப்பதோதான் விவசாயம் செழிப்பதற்கான வழி என்ற வைதீக...

பிரதமர் ஆனவுடன் மோடி செய்த சதி அம்பலப்படுத்திய முன்னாள் அதிகாரி

பிரதமர் ஆனவுடன் மோடி செய்த சதி அம்பலப்படுத்திய முன்னாள் அதிகாரி

குஜராத் மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்த பிரதமர் மோடி, அப்போதெல்லாம்     ஜி.எஸ்.டி கூடாது, அது மாநில உரிமையைப் பறிக்கும் செயல் என்றார். ஒன்றிய அரசு மாநிலங்களுக்கான உரிமைகளை நசுக்கக்கூடாது, மாநில அரசுகளுக்கு உரிய நிதியை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பலமுறைப் பேசியிருக்கிறார். 2014 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கூட, ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களுக்கு அதிக உரிமை வழங்குவோம் என்று மேடைக்கு மேடை முழங்கினார். அப்பேர்ப்பட்ட மாநில உரிமைப் போராளியாக தன்னைக் காட்டிக்கொண்ட நரேந்திர மோடி, ஆட்சிக்கு வந்தவுடன் சத்தமில்லாமல், பின்வாசல் வழியாக செய்ய முயன்ற காரியங்கள் அம்பலமாகியிருக்கின்றன. மாநிலங்களுக்கு   நிதியை  பகிர்ந்தளிக்க   அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு நிதிக்குழு. தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்த அமைப்பை, ஒன்றிய அரசு கடந்த 9 ஆண்டுகளாக கையாளும் விதம் பலமுறை சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கிறது. வளர்ந்த தென் மாநிலங்களுக்கான வருவாய் பங்கீட்டைக் குறைக்கும் விதமாக பரிந்துரைகளை நிதிக்குழு வழங்க, ஒன்றிய அரசின்...

அரசியல் பேசும் நீதிபதியை கண்டித்து மூத்த வழக்கறிஞர் துரைசாமி தலைமை நீதிபதிக்கு கடிதம்

அரசியல் பேசும் நீதிபதியை கண்டித்து மூத்த வழக்கறிஞர் துரைசாமி தலைமை நீதிபதிக்கு கடிதம்

கோயில் விடுதலை அரசியலா? அவசியமா? என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஜி.ஆர்.சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசியிருக்கிறார். இந்த நிகழ்வில் ரமேஷ், அமெரிக்கை நாராயணன், ரங்கராஜன் நரசிம்மன், சுமந்த் ராமன் ஆகியோர் கலந்துகொண்டு பேசியிருந்தனர். இவர்களின் பின்னணி என்னவென்று நாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. முதலில் மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது. ஆனால் அவர் இந்த விவாதத்தில் பங்கேற்கவில்லை. நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கோயில்களை அரசுப் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கருத்து குறித்து விவாதங்கள் தொடங்கப்பட வேண்டும் என்று பேசியிருக்கிறார். ஒரு நீதிபதி இப்படி அரசியலை பேசலாமா? என்பதை சுட்டிக்காட்டி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான சு.துரைசாமி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஆகியோருக்கு...

இந்துராஷ்டிரத்திற்குள் அடங்க மறுக்கும் தமிழ்நாடு (4) – பேராசிரியர் ஜெயராமன்

இந்துராஷ்டிரத்திற்குள் அடங்க மறுக்கும் தமிழ்நாடு (4) – பேராசிரியர் ஜெயராமன்

(01.02.2024  இதழில்   வெளியான உரையின் தொடர்ச்சி)   1953இல் ஆந்திரா தனி மாநிலமாகப் பிரிந்தது. 1956-இல் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகியவை மொழிவழி மாநிலங்களாக அமைகிறது. இந்த ஐந்து மாநிலங்களையும் ஒன்றிணைத்து தட்சிணப் பிரதேசமாக அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு கூறியபோது, பெரியார் இதை கடுமையாக எதிர்த்து,  தற்கொலைக்கு சமம் என்றார். திருவனந்தபுரத்தில் நேரு இதைப்பற்றி கேட்கும்போது “பெரியார் இதை எதிர்க்கிறார், ஏற்க முடியாது” என்று கூறினார் காமராசர். நேருவுக்கு பெரியார் என்றால் யாரென்று தெரியும். அதனால் சத்தமில்லாமல் அந்தத் திட்டத்தை கைவிட்டார். இப்படி பெரியார் சொன்னவைகள்தான் நீதிக்கட்சி ஆட்சி முதல் சட்டங்களாக ஆனது, பெரியார் சொன்னதுதான் காமராசர் ஆட்சியில் திட்டங்களாக மாறின. மக்களுக்கு கல்வியை கொடுங்கள் என்று காமராசரிடம் பெரியார் சொன்னபோது அதை அப்படியே மறுக்காமல் நிறைவேற்றினார் காமராசர். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பள்ளிக்கூடம், ஐந்து மைல் தொலைவுக்கு ஒரு மேல்நிலைப்பள்ளிகள் வந்தன. அப்பொழுதுதான் எல்லாரும் படிக்க வந்தார்கள். மயிலாடுதுறை...

தலைமறைவு தியாகம்

தலைமறைவு தியாகம்

“தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்ந்துவருகிறது. திமுகவுக்கு அடுத்த பெரிய கட்சி நாங்கள்தான் என்று மார்தட்டுகிறார்”அண்ணாமலை. இப்படி தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க நாங்கள் எவ்வளவு மகத்தான தியாகங்களை செய்ய வேண்டி இருக்கிறது என்பதே எதிர்க்கட்சிகளுக்கு புரியவில்லை என்றும் அண்ணாமலை வேதனைப்படுகிறார். அண்ணாமலையின் இந்த கட்சி வளர்ப்புப் பணிகளுக்காக அவருக்கு பாரத ரத்னா விருது கூட வழங்கலாம். ஆருத்ரா நிதி நிறுவனத்தை நடத்தி ரூ.2000 கோடி மக்களின் பணத்தை அண்ணாமலையின் சீடர்கள் ஹரிஷ், ஆர்.கே.சுரேஷ், அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் வாரி சுருட்டிக்கொண்டார்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள். இவையெல்லாம் மகத்தான தியாகங்கள் என்பது எதிர்க்கட்சிகளுக்கு தெரியாது. கைது செய்யப்பட்ட ஹரிஷ் பாஜகவின் மாநிலப் பொறுப்பாளர். இந்த மாநிலப் பதவிகூட ஏதோ லாட்டரி சீட்டு போல அவருக்கு கிடைத்துவிடவில்லை. அதற்காக முதலீட்டாளர்கள் பணத்தை எடுத்து பாஜக தலைமைக்கு உண்டியல் காணிக்கை செலுத்திவிட்டுத்தான் இந்த பதவியை அவர் பெற்றார். அப்படித்தான் கைது செய்யப்பட்ட பாஜகவைச் சேர்ந்த ஹரிஷ் வாக்குமூலம்...

தலையங்கம் – யார் பிரிவினைவாதிகள்?

தலையங்கம் – யார் பிரிவினைவாதிகள்?

“வடக்கு, தெற்கு இடையே ஓர் பரந்த வேறுபாடு உள்ளது. வடக்கு பழமைவாதத்தை கொண்டிருக்கிறது, தெற்கு முற்போக்கானது. வடக்கில் மூடநம்பிக்கை உள்ளது, தெற்கில் பகுத்தறிவு உள்ளது. தெற்கு கல்வி ரீதியாக முன்னோக்கி உள்ளது, வடக்கு கல்வி ரீதியாக பின்தங்கியுள்ளது. தெற்கின் கலாச்சாரம் நவீனமானது. வடக்கின் கலாச்சாரம் பழமையானது” என்றும், “தென் மாநிலங்களுக்கென தனி தலைநகர் ஒன்றை அமைக்க வேண்டும்” ன்றும் பரிந்துரைத்தவர் புரட்சியாளர் அம்பேத்கர். இன்றும் வடக்கு- தெற்குக்கு இடையிலான இந்த பாகுபாடு அப்படியேதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வடமாநில மக்களின் தாய்மொழியை அழித்து இந்தியை பொதுமொழி ஆக்கியதுபோல, தென்னிந்தியாவில் மாற்றிவிட இயலவில்லை. மத ரீதியாக வடக்கில் வேரூன்றிய பாஜகவால், தென்னிந்தியாவில் வேரூன்ற முடியவில்லை. கல்வி – வேலைவாய்ப்பு – சுகாதாரக் கட்டமைப்புகளில் தென்னிந்தியாவுக்கு நிகராக வட இந்தியாவால் முன்னேற முடியவில்லை. ஆனால் “வடக்கு வேறு, தெற்கு வேறு… என்று தென்னகத்தில் இருந்து குரல் எழும்போதெல்லாம் அதைப் பிரிவினைவாதம் என்கிறது பாரதிய ஜனதா கட்சி....

அண்ணாமலையின் பொய் – புரட்டுக்கு ஆணித்தரமான பதிலடி – க.கனகராஜ் – சிபிஎம்

அண்ணாமலையின் பொய் – புரட்டுக்கு ஆணித்தரமான பதிலடி – க.கனகராஜ் – சிபிஎம்

வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவதை அண்ணாமலை வழக்கமாக வைத்திருக்கிறார். அது தவறு என்று மற்றவர்கள் சுட்டிக்காட்டினாலும் அதற்காக வருத்தம் தெரிவிப்பதும் கிடையாது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு  அரசின் கடன் ரூ.8.23 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது என்றும், இது வரலாறு காணாத உயர்வு என்றும் ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் ரூ.3.8 லட்சம் கடன் இருக்கிறது என்றும் தமிழ்நாடு அரசை கடுமையாக சாடியுள்ளார்.  தமிழ்நாடு அரசின் கடன் நிலை குறித்து  அண்ணாமலையின் விமர்சனம் ஒருபுறமிருக்க, எல்லா வளங்களையும், வரிகளையும் வாங்கி வைத்துக் கொண்டு மாநிலங்க ளை அல்லல்பட வைக்கும் ஒன்றிய அரசு எப்படி கடன் வாங்கியிருக்கிறது என்பதை அவர் வசதியாக மறந்து விட்டு மார்தட்டி அலைகிறார். சமீபத்தில் புயல், மழை, வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ஒரு பைசாகூட கொடுப்ப தற்கு இன்றளவும் மோடி அரசாங்கம் முன் வரவில்லை. இதுதவிர, ஒவ்வொரு ஒன்றிய அரசின் திட்டத்திலும் மாநில அரசுகளை சிக்க வைத்து திண்டாட வைப்பதை...