“பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார் ?”
As “மாநாட்டுத் தீர்மானங்கள் !” திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார் ?” “வாருங்கள் வரலாறு பேசுவோம்!!” பரப்புரை பயணத்தின் நிறைவு மாநாடு மயிலாடுதுறை – 22.03.2025 . மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : தீர்மானம் எண் 1 : “தமிழர்களின் தன்மான மீட்பர் தலைவர் பெரியார் மீது அவதூறுகளை வீசி, தமிழ்நாட்டில் அவரைத் தனிமைப்படுத்தலாம் என்ற சதித்திட்டத்தை முறியடிக்கவும்.அந்தத் துரோகக் கும்பலின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, மக்களிடத்தில் பெரியாரைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழகம் இந்த பயணத்திற்குத் திட்டமிட்டது. தன்னல மறுப்போடு, பெரியார் லட்சியத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் கழகத் தோழர்கள் ஆர்வத்துடன் இந்த பயணத்தில் பங்கேற்றனர். கொளுத்தும் வெயிலில் தங்களை வருத்திக் கொண்டு நாள் ஒன்றுக்கு குறைந்தது நான்கு கூட்டங்கள் வழியாக பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்துப் பரப்புரை, நூல் விற்பனை, நிதி திரட்டல் என்ற பணிகளை ஏற்று பெரியார் பணி...