Category: பெரியார் முழக்கம் 2022

சத்தியில் அறிவியல் மன்ற கருத்தரங்கம்

சத்தியில் அறிவியல் மன்ற கருத்தரங்கம்

24.12.2022 சனிக்கிழமை அன்று  சத்தியமங்கலம் எஸ்.பி.சி. மகாலில் நடைபெற்ற பெரியார்-அம்பேத்கர் உருவாக்கிய சமூகப் புரட்சி கருத்தரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பான முறையில் கருத்துரை வழங்கினார். இக்கருத்தரங்கத்திற்கு மு.தமிழரசன்  தலைமை தாங்கினார். கூட்டத்தில்  திராவிடர் விடுதலைக் கழக மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள், தோழமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி தொடக்கத்தில் சத்தி முத்துவின் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் மன்ற தோழர்கள் கே.எ.கிருஷ்ணசாமி,சதுமுகை பழனிசாமி, சித்தா பழனிசாமி மற்றும் சதுமுகை கனகராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக செந்தில்நாதன்  வழக்குரைஞர், தமிழ்நாடு அறிவியல் மன்ற தோழர்கள் சேகர், வேலுச்சாமி, வீரா. கார்த்தி, சுந்தரம், குப்புசாமி, சிவக்குமார் மற்றும் சரத் அருள்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், தலைமைக் கழகப் பேச்சாளர் கா.சு.வேலுச்சாமி, மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி, சிவகாமி  (தலைவர், தமிழ்நாடு...

டிசம்.24 பெரியார் நினைவு நாள் : தோழர்கள் ஊர்வலம்

டிசம்.24 பெரியார் நினைவு நாள் : தோழர்கள் ஊர்வலம்

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் சார்பாக பெரியாரின் 49 ஆவது நினைவு நாளை ஒட்டி, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு காலை 9 மணி யளவில் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தியாகராயர் நகர் பெரியார் சிலை, எம்.ஜி.ஆர். நகர், ஆலந்தூர், வன்னியம்பதி, மயிலாப்பூர் சென்மேரிஸ் பாலம், சுப்பராயன் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பெரியார் சிலை, உருவபடங்களுக்கு தோழர்கள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர். ஒவ்வொரு பகுதியிலும் பெரியார் நினைவு மற்றும் கொள்கை முழக் கங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்வுகள் மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் நடை பெற்றது. தலைமைக் கழக பொறுப் பாளர்கள், மாவட்டம், பகுதி கழக பொறுப்பாளர்கள் மற்றும் சென்னை கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். சேலம்: சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் 49ஆவது நினைவு நாள் 24-12-2022 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்டச்...

தமிழ்க் குடில் இல்லத் திறப்புவிழா

தமிழ்க் குடில் இல்லத் திறப்புவிழா

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். தோழர்கள் கிருஷ்ணவேணி – தேவராஜ் ஆகியோரது புதிய இல்லம் பல்லடம் அருகே வரபாளையம் கிராமத்தில் “தமிழ்க் குடில்” எனும் பெயரில் 04.12 2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் திறந்து வைக்கப் பட்டது. இல்லத்தை தோழர்களின் பெற்றோர்கள் கிட்டாள்- மாறன், இலட்சுமி – பழனிச்சாமி ஆகியோர் திறந்து வைத்தார்கள். இல்லத் திறப்பு விழாவிற்கு ப.மாறன் தலைமை தாங்கினார்கள் தே. சுப்பிரமணியன் – ராதாமணி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கற்பி சமூக கல்வி மையத்தின் இரா.விடுதலைச்செல்வன்  வரவேற்புரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெரம்பலூர் டாக்டர் அம்பேத்கர் சமூகக் கல்விப் பொருளாதார அறக்கட்டளையின் இரா.க.கிருஷ்ணசாமி, பாடகர் மா.பா. கண்ணையன், கழகப் பொருளாளர் துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர்சிவகாமி, தி.வி.க. திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தோழர் மா.தேவராஜ்  நன்றி கூறினார்.   பெரியார்...

தமிழ் வாழ்வியலை வீழ்த்திய பார்ப்பனிய ஊடுருவல்

தமிழ் வாழ்வியலை வீழ்த்திய பார்ப்பனிய ஊடுருவல்

பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவாக அவர் ‘விடுதலை’ பெரியார் பிறந்த நாள் மலரில் எழுதிய கட்டுரையை (செப்.17, 1986) வெளியிடுகிறோம். உலகத்தில் வளர்ச்சியும் வாழ்வும் பெற்றுள்ள மேல் நாட்டு மக்களும், சீனா, ஜப்பானியரும் நாகரிகத்தின் முகப்பில் அடி எடுத்து வைக்கும் முன்னரே, நாகரிக வாழ்வு கண்டு, நானில வகை கண்டு, நாடாளும் முறை கண்டு, ஒரு தனித் தன்மையுடன் வாழ்வாங்கு வாழ்ந்த தமிழர்கள் – தென்னாட்டுத் திராவிட மக்கள் – கடந்த சில நூற்றாண்டுகளாகவே வாழ்விழந்து, வளமிழந்து, உரிமை மறந்து, தலைதாழ்ந்து கிடக்கின்றனர். பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்னரே ஒரு மொழி கண்டு, எட்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கூடி வாழும் வாழ்க்கைக்கு முறை கண்டு, அய்யாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கோனாட்சிக்கு வழிகண்டு, இயற்கையில் முத்தமிழாய் முகிழ்த்த தமிழன் சிறப்பு கண்டு, சிந்தனையைச் செய்யுள் வடிவத்தில் கண்டு, மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இலக்கியங்கட்கு இலக்கணங்கண்டு, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் உலகம் வியக்கும் ‘திருக்குறள்’...

மணமகள் தேவை

மணமகள் தேவை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த தோழர் இனியவன், வயது 26. பொறியியல் பட்டம் முடித்து சொந்தமாக வணிகம் நடத்தி வருகிறார். தோழருக்கு பெரியாரிய சிந்தனைக் கொண்ட பெண் தோழர்  தேவை. தொடர்புக்கு : 8903461202 பெரியார் முழக்கம் 29122022 இதழ்

வினா விடை

வினா விடை

  ஏழுமலையானுக்கு உலகம் முழுதும் அசையா சொத்து 85,705 கோடி ரூபாய்; தங்க நகைகள் 9,259 கிலோ. –  செய்தி அசையா கடவுளுக்கு அசையா சொத்துக்கள்; அமலாக்கத் துறையால் அசைக்கவே முடியாது. திருப்பதியில் சொர்க்க வாசல் போக இலவச தரிசனம்; இலவச டோக்கன் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி. – செய்தி ‘புண்ணியம்’ எதுவும் செய்ய வேண்டாம்; டோக்கன் பெற்றாலே ‘சொர்க்கம்’ தான்! உ.பி. சிறைகளில் சைவ உணவுகள் மட்டுமே அளிக்கப்படுகிறது. – செய்தி தண்டிக்கப்பட்டு உள்ளே வந்த பிறகும் தண்டனையா? இராமேஸ்வரம் கடல் பகுதியில் இராமர் பாலம் இருந்ததாக உறுதியான சான்றுகள் இல்லை. ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி ஒப்புதல். – செய்தி அடுத்து ராமன் என்று ஒருவர் இருந்தான் என்பதற்கே உறுதியான சான்றுகள் இல்லை என்பதை எப்போது அறிவிக்கப் போகிறீர்கள்? கிருஷ்ண பகவானுக்கு உலகிலே உயரமான சிலை – குஜராத் பா.ஜ.க. ஆட்சி முடிவு. – செய்தி ‘பிரபஞ்ச’த்திலேயே உயரமான சிலையை...

ராமன் பாலம்: உறுதியான ஆதாரம் இல்லை; பா.ஜ.க. ஆட்சி ஒப்புதல்

ராமன் பாலம்: உறுதியான ஆதாரம் இல்லை; பா.ஜ.க. ஆட்சி ஒப்புதல்

இலங்கைக்கு இராமேஸ்வரத்தி லிருந்து இராமன் பாலம் கட்டினான் என்றும், அந்தப் பாலத்தை இடித்துவிட்டு சேது சமுத்திரத் திட்டத்தை அமுல் படுத்தக்கூடாது என்றும் இந்துத்துவவாதிகள் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தனர். சுப்ரமணிய சுவாமியும் உச்சநீதி மன்றத்திலே வழக்கு தொடர்ந்தார். இப்போது நிலைமை எல்லாம் தலைகீழாக மாறிப்போய் இருக்கிறது. ‘இராமேஸ்வரம் கடல் பகுதியில் இராமர்  பாலம் இருந்ததாகக் கூற முடியாது’ இப்படிக் கூறியிருப்பவர், ஒன்றிய விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங். கூறி யிருக்கிற இடம் நாடாளுமன்றம். அவர் மேலும் கூறுகிறார், ‘19 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்பதால், இராமர் பாலம் பற்றி துல்லியமாக கண்டறிய முடியவில்லை என்றும், செயற்கைக் கோள் படங்களில் கடலில் சில பாறைகள் இருப்பது போல் கண்டறியப்பட்ட போதிலும், அது இராமர் கட்டிய பாலம் என்று கூறுவது கடினம்’ என்று தெரிவித்து இருக்கிறார். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவார்கள், அதேபோல 19...

தலையங்கம் கோட்சே பரம்பரை

தலையங்கம் கோட்சே பரம்பரை

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சங் பரிவாரக் கும்பலை “கோட்சே பரம்பரை” என்ற வார்த்தைகளால் வர்ணிக்கிறார். கோட்சே பரம்பரை என்பது திராவிடர் இயக்கத்திற்கு பழகிப்போன ஒரு சொல் தான், காந்தியாரை சுட்டுக் கொல்லப்பட்ட அந்த காலத்தில் திராவிடர் இயக்க மேடைகளிலும் திராவிடர் இயக்க நூல்களிலும் அந்தக் கும்பலை சுட்டிக்காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட சொல் தான் கோட்சே பரம்பரை என்பதாகும். காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்டது மாலை 5:12 க்கு, ஆனால் அகில இந்திய வானொலி அவரது மறைவு செய்தியை ஒலிபரப்பியது 6 மணிக்குத்தான். அதற்கு முக்கிய காரணம், ‘காந்தியை ஒரு முஸ்லிம் சுட்டுக் கொன்றுவிட்டார்’ என்ற வதந்தியை இந்த கோட்சே பரம்பரை அப்போதே பரப்பியது. மவுண்ட் பேட்டன், காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை அறிந்து பிர்லா மாளிகை விரைந்த உடன் கூட்டத்திலிருந்த ஒரு சங்கி, ‘காந்தியை ஒரு முஸ்லிம் சுட்டுக்...

விடுதலை இராசேந்திரன் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன முதல்வர் நேரில் மரபுரிமைத் தொகை வழங்கினார்

விடுதலை இராசேந்திரன் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன முதல்வர் நேரில் மரபுரிமைத் தொகை வழங்கினார்

கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய 59 நூல்களை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியது. அதற்கான மரபு உரிமைத் தொகையாக ரூ.15 இலட்சத் துக்கான காசோலையை தமிழக முதல்வர் நேரில் வழங்கினார். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆசிரியர், பெரியாரியலை தன் வாழ் வியலாக்கி, கழகத்தை குடும்பமாக்கி, பெரியாரிய பத்திரிக்கையாளராக 50 ஆண்டுகளைக் கடந்தும் எழுதிக் கொண்டிருக்கும் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நூல்களை தமிழ்நாடு அரசு 59 நூல்களை நாட்டுடமையாக்கியது. 22.12.2022 பகல் 11 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டுடமையாக்கப் பட்டதற்கான மரபு உரிமை காசோலையை வழங்கினார். அப் போது கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன் இணையர் பேராசிரியர் சரசுவதி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன் உடனிருந்தனர். தொடர்ந்து, இலாயிட்ஸ் ரோட்டில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவிக்க தோழர்கள் முழக்கம் எழுப்பினர்....

நாட்காட்டி தயார்!

நாட்காட்டி தயார்!

2023ஆம் ஆண்டுக்கான திராவிடர் விடுதலைக் கழகத்தின் நாட்காட்டி தயாராக உள்ளது.  சனாதன எதிர்ப்பாளர்கள், சமூகப் புரட்சியாளர்கள், சீர்திருத்தவாதிகள் படங்களுடன் அழகிய வடிவமைப்பில் உள்ள நாட்காட்டி ஒன்றின் விலை ரூ.50/-  (ரூபாய் அய்ம்பது மட்டும்). முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே நாட்காட்டி அனுப்ப இயலும். நாட்காட்டி தேவைப்படுவோர் தொடர்புக்கு : தபசி குமரன் (99417 59641) தலைமை நிலையச் செயலாளர்,  திராவிடர் விடுதலைக் கழகம். பெரியார் முழக்கம் 22122022 இதழ்

கழகத் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களின் மூன்றாம் கட்ட சுற்றுப் பயணம்

கழகத் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களின் மூன்றாம் கட்ட சுற்றுப் பயணம்

கழகத் தலைவர் மற்றும் தலைமைக் குழுப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களின் மூன்றாம் கட்டப் பயணம் கீழ்கண்டவாறு திட்டமிடப்பட்டுள்ளது. 05.01.2023 காலை 10.00 மணி – சேலம் மேற்கு மாவட்டம் 05.01.2023 மாலை 4.00 மணி – தர்மபுரி மாவட்டம் (இரவு தங்கல் கிருட்டிணகிரி) 06.01.2023 காலை 10.00 மணி – கிருட்டிணகிரி  மாவட்டம் 06.01.2023 மாலை 4.00 மணி – கள்ளக்குறிச்சி மாவட்டம் (இரவு தங்கல் சேலம்) 07.01.2023 காலை 10.00 மணி – சேலம் கிழக்குமாவட்டம் 07 01.2023 மாலை 4.00 மணி – ஈரோடு தெற்கு மாவட்டம் (இரவு தங்கல் ஈரோடு) 08.01.2023 காலை 10.00 மணி –  ஈரோடு வடக்கு மாவட்டம் மேற்கண்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் ஊர் மற்றும் இடத்தை முடிவு செய்து தலைமைக் கழகத்திற்கு  தகவல் தரக் கேட்டு கொள்ள படுகிறார்கள்.   பெரியார் முழக்கம் 22122022 இதழ்

விழுப்புரத்தில் ஜாதிக் கொடுமைகள்: களமிறங்க கழகத் தோழர்கள் முடிவு

விழுப்புரத்தில் ஜாதிக் கொடுமைகள்: களமிறங்க கழகத் தோழர்கள் முடிவு

விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 16-12-22 அன்று மாலை 4.30  மணியளவில்  கழக மாவட்டத் தலைவர் பூஆ.இளையரசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி,  அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், கழகத் தலைமைக் குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர்செல்வம்,  காவை. ஈஸ்வரன், ந. அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டு கழகம் விழுப்புரம் மாவட்ட அளவில் முன்னெடுக்க வேண்டிய  வேலைத் திட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் ஜாதி பிரச்சனைகள், தலித் மக்கள் சுடுகாட்டில் பிணத்தை அடக்கம் செய்வதில்  பிரச்சனைகள் பற்றி பத்திரிக்கைகளில் செய்திகள் வருகின்றன. இதுகுறித்து மாவட்ட கழகத் தோழர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம்  துணை நிற்க வேண்டும் என்றும் இன்றைய அரசியல் சூழல், கழக வார ஏடு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’...

அடுக்கடுக்கான பட்டியல்: பாஜகவில் வாரிசு அரசியல் இல்லையா?

அடுக்கடுக்கான பட்டியல்: பாஜகவில் வாரிசு அரசியல் இல்லையா?

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதைத் தொடர்ந்து, பாஜகவினர் திமுக வில் வாரிசு அரசியல் நடைபெறுகிறது என்று தொடர்ந்து குற்றம் சாட்டியே வருகின்றனர். குற்றம் சாட்டுவதுடன், பாஜகவில் வாரிசு அரசியலே கிடையாது என்றும் கூறி வருகின்றனர். பாஜகவிலும் வாரிசு அரசியல் உள்ளது என்பதை பலரும் சுட்டிக்காட்டி வரும் நிலையில், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், “பாஜகவில் தலைமை பொறுப்புக்கு, ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் வருவது கிடையாது. தேசியத் தலைமை மட்டுமல்ல, எந்தவொரு மாநிலத் தலைமையிலும் வாரிசுகள் இல்லை” என்று குறிப்பிடப்பட் டுள்ளது. பாஜகவின் பொறுப்புகளில் வேண்டுமானால் வாரிசுகள் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இந்திய ஒன்றியத்தின் அமைச்சரவையிலும், பாஜக ஆளும் மாநிலங்களின் அமைச்சரவைகளிலும் பாஜக வின் வாரிசுகள் எந்தளவிற்கு இடம் பெற்றுள்ளனர் என்பதை சிறு புள்ளிவிவரத்தின் மூலம் காணலாம். பியூஸ் கோயல் – மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், தந்தை: வேத் பிரகாஷ்...

வீட்டு வேலைகள் ஆண்களுக்கு கட்டாயம்; பெண்கள் வீட்டு வேலைக்கு ஊதியம் கியூபா நாட்டின் புரட்சிகர பெண்ணுரிமைச் சட்டம்

வீட்டு வேலைகள் ஆண்களுக்கு கட்டாயம்; பெண்கள் வீட்டு வேலைக்கு ஊதியம் கியூபா நாட்டின் புரட்சிகர பெண்ணுரிமைச் சட்டம்

திருநங்கையாகவோ திருநம்பியாகவோ தன்னுடைய மகனோ மகளோ இருக்கிறார் என்பதையே தாங்கிக் கொள்ள முடியாத இந்திய பெற்றோர்களால்; திருநங்கைகளையும் திருநம்பிகளையும் வீட்டை விட்டு வெளியேற்றும் இந்திய பெற்றோர்களால்; ஓரினச் சேர்க்கை யாளர்களை எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? எனவே கியூபா அரசின் தொலைக்காட்சி & வானொலி பிரச்சாரங்களைப் போலவே, தமிழ்நாடு அரசும் இது குறித்த அறிவியல் பூர்வமான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் டுழுக்ஷகூ+ மக்கள் அனுபவிக்கும் சித்திரவதைகளில் இருந்தும், சொல்லொணாத் துயரங்களில் இருந்தும், அவர்களுக்கு விடுதலை கிடைக்கும். “தேர்தல் அரசியல் இல்லாத கியூபா நாட்டில் (ஒற்றைக் கட்சி ஆட்சிமுறை), மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி குடும்பச் சட்டங்களை வகுத்து முதல்முறையாக வெளியிட்டுள்ளது அரசு. டுழுக்ஷகூ+ (வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட சமூகத்தை உணர்த்தும் குறிப்புச் சொல்) நலன், பெண்கள் நலன், குழந்தைகள் நலன், முதியோர் நலன் உள்ளிட்ட அனைத்து நலன்களும் பேணிப் பாதுகாக்கும்படியாக இக்குடும்பச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வாக்குரிமை...

உதயநிதியின்  ஒற்றை வரி பதில்கள் இந்தியா – வி.பி.சிங்

உதயநிதியின் ஒற்றை வரி பதில்கள் இந்தியா – வி.பி.சிங்

விகடன் யூடியூபிற்கு, சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில், நெறியாளர் கூறும் பெயர்களுக்கு ஒரே வார்த்தையில் பதிலளிக்கும் வகையில், அவர் அளித்த ஒரு வார்த்தை பதில்கள். தமிழ்நாடு – கலைஞர் இந்தியா – வி.பி.சிங் பெரியார் – தன்மானம் கலைஞர் – தமிழ் மு.க.ஸ்டாலின் – உழைப்பு திமுக – கலைஞர் கடவுள் – இல்லை பெரியார் முழக்கம் 22122022 இதழ்

சைனி-அபிலாஷ் இணையேற்பு விழா

சைனி-அபிலாஷ் இணையேற்பு விழா

கழகத் தோழர் சைனி – அபிலாஷ் ஆகியோரின் இணையேற்பு விழா 14.12.2022 அன்று காலை 12 மணியளவில் கோவை ஆர்.எஸ்.புரம் புனித அருளானந்தர் தேவாலயத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி தொடக்கமாக நிமிர்வு குழுவினரின் பறை இசை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கழகச் செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தோழர்கள் புரட்சித் தமிழன், மாதவன் சங்கர், வெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சபரிகிரி வரவேற்புரையாற்றினார். கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கிருட்டிணன் நன்றியுரை யாற்றினார். நிகழ்ச்சியை சிவராசு தொகுத்து வழங்கினார்.. கழகத் தோழர்கள் சார்பாக மணமக்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டது. தோழர்கள் அய்யப்பன், துளசி, ஆனந்த், விவேக், ரேணுகா, மணிகண்டன், ராஜபாளையம் மு.ராம்குமார் ஆகியோர் இணையேற்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெரியார் முழக்கம் 22122022 இதழ்

உதயநிதி ஸ்டாலின் நியமனம் பெரியாரிஸ்டுகள் மகிழ்ச்சி!

உதயநிதி ஸ்டாலின் நியமனம் பெரியாரிஸ்டுகள் மகிழ்ச்சி!

தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் வாரிசுகள் அரசியலுக்கு வரக் கூடாதா ? உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவருடைய  நியமனத்திற்கு நமது  மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் முதலில் தெரிவித்துக் கொள்வோம். வாரிசு அரசியல் வந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் புலம்புவதில் எந்த நியாயமும் இல்லை. அப்படி ஒரு அளவுகோளில் பார்த்தால் இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் இதிலிருந்து  தப்பி விட முடியாது. (இது குறித்த விரிவான பட்டியலைத் தனியாக வெளியிட் டுள்ளோம்) ஆனால் வாரிசு அரசியல் இப்போது எந்தப் பார்வையில் பார்க்கப்படுகிறது என்று சொன்னால்,  மன்னர்கள் காலத்தில் நடந்த வாரிசு அரசியலோடு ஜனநாயக காலத்தில் நடக்கின்ற வாரிசு அரசியலை ஒப்பிட்டுப் பேசுகின்ற  ஒரு போக்கு தான் காணப்படுகிறது. இரண்டுக்கும் பண்பு ரீதியில், குணாதிசய வகையில்  வேறுபாடு உண்டு. ஜனநாயக முறையில்  வாரிசு அரசியலில் ஈடுபடுகின்றவர்கள்  நேரடி நியமனங்கள் வழியாக வராமல் தேர்தலில் நின்று  மக்கள்...

தலையங்கம் ‘ஜெய் ராம்’ முழக்கம் கேட்குது! ‘ஜெய் சீதா’ ஏன் கேட்பதில்லை?

தலையங்கம் ‘ஜெய் ராம்’ முழக்கம் கேட்குது! ‘ஜெய் சீதா’ ஏன் கேட்பதில்லை?

பாரத ஒற்றுமைப் பயணத்தில் இருக்கும் இராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ்-அய்ப் பார்த்து, “ஆர்.எஸ்.எஸ். என்றைக்குமே பெண்களை மதிக்காத இயக்கம்” என்று கூறியிருக்கிறார். இது 100ரூ உண்மை. ஆர்.எஸ்.எஸ்.இல் ஒரு ‘சுவயம் சேவக்’காக இதுவரை பெண்கள் சேர்க்கப்படுவதே இல்லை. தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநராகக் கூட வர முடியும், ஆனால் ஆர்.எஸ்.எஸ்.இல் சுவயம் சேவக்காக வர முடியாது. வானதி சீனிவாசனுக்கும் அதே நிலைதான். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இன் முன்னணி அமைப்புகளை உருவாக்கி அதில் பெண்களை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் சுவயம் சேவக்காக மட்டும் இன்று வரை அவர்கள் பெண்களை சேர்ப்பது கிடையாது. இராகுல் காந்தி எழுப்பியிருக்கிற முக்கிய கேள்வி, ‘ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்தை முன் வைக்கிற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஏன் ஜெய் சீதா என்ற முழக்கத்தை முன் வைக்கவில்லை?’ இது ஒரு நியாயமான கேள்வி. சீதையைப் பொறுத்தவரை இராமனுடைய கட்டளை களை பல இடங்களில் மீறி தன்னுடைய உரிமையை நிலை நாட்டியிருக்கிறார் என்று நம்மால் கூற...

வேள்விகளை வெடி வைத்துப் பொசுக்கியவர்

வேள்விகளை வெடி வைத்துப் பொசுக்கியவர்

வேரோடிப் போயிருந்த சனாதனத்தை வெட்டியதோர் நெடுவாளே ! இந்த நாட்டில் ஊரோடு கிளிப்பாட்டுப் பாடி டாமல் உயர்கருத்தைத் தந்தவரே ! தமிழன் ஆட்சித் தேரோட்டப் பாதைக்குத் தடைநிற் போரின் திமிர் அடக்கி வந்திட்ட புலியே ! மண்ணில் ஈரோடு வரலாறு பிறக்கா விட்டால் எம்வழியை மாற்றுதற்கே யார்பிறப்பார் ? காக்கையொன்று கரைந்தாலும் அதனைக் கேட்டு கால்பயணம் மாற்றிடுவார் ! வேலி யோரச் சீக்காளிக் கழுதையொன்று கதறு மானால் தெய்வம் வந்து சொன்னதென்று நின்று கேட்பார் ! தேக்குமர இடுக்கினிலே பல்லி ஒன்று தீனிகண்டு குரல்தந்தால் புத்தி போகும் போக்கு கெட்ட தமிழர்களை எழுப்பித் தட்டிப் ‘புதுமதி’யை ஊட்டியவர் நீங்கள் தானே ! பெண்ணொருத்தி குளிப்பதனை எட்டிப் பார்த்தால் பிழைஎன்று சட்டமுள்ள இந்த நாட்டில் கண்ணெடுத்துப் பார்த்திட்ட தன்றி, அன்னார் கட்டிவந்த சேலையெல்லாம் திருடிச் சென்ற வெண்ணெய் வெட்டிக் கண்ணன் அவன் படத்தைப் போட்டு வெறும் மேனிக் கன்னியரை எதிரில் காட்டி, சிண்ணாரம்...

மறைந்த 80வயது ஸ்டேன் பாதிரியார் மீது பொய் வழக்கு கணினிகளில் என்.அய்.ஏ. நடத்திய மோசடிகள்

மறைந்த 80வயது ஸ்டேன் பாதிரியார் மீது பொய் வழக்கு கணினிகளில் என்.அய்.ஏ. நடத்திய மோசடிகள்

போலி ஆதாரங்கள் மூலம் கைது நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டிருப்பது அம்பல மாகிவிட்ட பிறகும், பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்காமல் சிறையில் அடைத்து வைப்பது எவ்வித நியாயமும் அற்றது. பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் கணினியில் திட்டமிட்டு ஹேக்கர் களால் வழக்குத் தொடர்பான ஆவணங்கள் திணிக்கப்பட்டது அமெரிக்க நிறு வனம் வெளியிட்ட ஆய்வறிக்கை மூலம் அம்பலமாகி யுள்ளது. 1818 ஜனவரி 1ஆம் தேதி மராட் டியத்தில் உள்ள பீமா கோரே கானில் பிரிட்டிசாருக்கும் பேஷ்வா பார்ப்பனர்களுக்கும் இடையே போர் நடந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் ஆதரவோடு பேஷ்வா பார்ப்பனர்களைக் கிழக்கிந்திய கம்பெனி வீழ்த்தி போரில் வெற்றி பெற்றது. போரில் உயிர் நீத்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 49 பேரின் நினைவாக பீமா கோரே கானில் நினைவுத்தூண் அமைக்கப் பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அதன் 200 ஆவது...

அம்பேத்கர் நினைவு நாள்: கழக சார்பில் சிலைகளுக்கு மாலை

அம்பேத்கர் நினைவு நாள்: கழக சார்பில் சிலைகளுக்கு மாலை

அம்பேத்கர் நினைவுநாளை யொட்டி கழக சார்பில் பல்வேறு இடங்களில் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சென்னை : புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி, மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் அடையாறு அம்பேத்கர் மணிமண்டபத்தில் காலை 9:30 மணியளவில், இரண்யா  கொள்கை முழக்கங்களை எழுப்பி  மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு, கிருத்திகா மாலை அணிவித்தார். இறுதியாக, இராயப்பேட்டை வி.எம். தெரு படிப்பகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர்  படத்திற்கு தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் மாலை அணிவித்தார். தலைமைக் கழகப் பொறுப் பாளர்கள், மாவட்டப் பொறுப் பாளர்கள், பகுதி கழகப் பொறுப் பாளர்கள் உட்பட கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர். விழுப்புரம் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் 66ஆவது நினைவு நாளை யொட்டி விழுப்புரம் அரசு மருத்து வமனை எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அனிவித்து கொள்கை முழக்கம் உறுதியேற்பு...

செல்போன் எதற்கு?

செல்போன் எதற்கு?

¨        அம்பேத்கர் சிலைக்கு விபூதி அடிக்கும் இந்து முன்னணி கும்பல் தைரியம் இருந்தால் தங்கள் சொந்த மதமான இந்து மதத்தைச் சார்ந்த பெருமாள் சிலைகளுக்கு விபூதி அடிக்குமா? அய்யங்கார்கள் கூட்டம் வாலை ஒட்ட நறுக்கி விடும்! ¨        கோயில்களில் செல்போன் கொண்டுவர உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதுகூட ஒரு வகையில் நியாயம்தான் சமஸ்கிருத மந்திரங்களை கருவறையில் உள்ள கடவுள்கள் நெட்வொர்க் இல்லாமலே புரிந்து கொள்ளும் போது வீணாக எதற்கு செல்போன்? ¨        ஆகமக் கோயில்களைக் கணக்கெடுக்க அறநிலையத் துறைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது நீதிமன்றம். ஓய்வுபெற்ற நீதிபதி குழுதான் கணக்கெடுக்க வேண்டும் என்று  ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டதை மீறக்கூடாதாம். சரி, ஆகமக்கோயில் சிலை திருட்டையும். ஓய்வு பெற்ற நீதிபதிதான் கண்டு பிடிக்க வேண்டுமா ? – விடுதலை இராசேந்திரன் டுவிட்டரிலிருந்து பெரியார் முழக்கம் 15122022 இதழ்

‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ நூல் வெளியீட்டு விழாவில் அஜிதா கேள்வி ‘இந்து தேசிய இனம்’ என்று ஒன்று இருக்கிறதா?

‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ நூல் வெளியீட்டு விழாவில் அஜிதா கேள்வி ‘இந்து தேசிய இனம்’ என்று ஒன்று இருக்கிறதா?

தனது ஆரிய இனத்துக்கு தொடக்கமும் இல்லை; முடிவும் இல்லை என்கிறார் ஹெட்கேவர். காந்தி கொலை செய்வதற்கு 15 நாட் களுக்கு முன்பு ஒரு கொலை முயற்சியை நடத்தி தோல்வி கண்டது கோட்சே கும்பல். பிரிட்டிஷார் வெளியேறும் முன்பு ஆட்சி அதிகாரத்தைத் தங்களிடம் வழங்கு வார்கள் என்று நம்பியது ஆர்.எஸ்.எஸ். கருஞ்சட்டைப் பதிப்பகம் சார்பில், மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வு 19.11.2022 அன்று மாலை 6 மணியளவில், தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம்’ நூல் மறு பதிப்பு செய்து வெளியிடப்பட்டது. வழக்கறிஞர் அஜிதா, நூலை திறனாய்வு செய்து உரையாற்றினார். (சென்ற இதழ்த் தொடர்ச்சி) கோல்வாக்கர் என்று சொல்லக்கூடிய, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு 33 ஆண்டுகள் தலைவராக இருந்த அவர் எழுதிய புத்தகம், ‘க்ஷரnஉh டிக வாடிரபாவள’ இது ஆர்.எஸ்.எஸ்.இன் வேத நூலாக கருதப்படுகின்றது. இதை வேத நூல் என்று ஏன் சொல்கிறோம் என்றால்,  அதற்கு...

சேலம் சங்கரமடத்தைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கழகத் தோழர்கள் விடுதலை

சேலம் சங்கரமடத்தைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கழகத் தோழர்கள் விடுதலை

2018ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி எச்.ராஜா திரிபுராவில் லெனின் சிலையை உடைத்தது போல் தமிழ்நாட்டில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்படும் என அவர் டிவிட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார். அச்சமயம் சேலம் மரவனேரியில் உள்ள சங்கரமடம் கல்வீசி தாக்கப்பட்டது. முன் விளக்குகள் உடைக்கப்பட்டன அங்கு இருந்த ஜெயேந்திரன் பதாகை கிழித்து எறியப்பட்டது. எச்.ராஜாவின் பேச்சுக்கு எதிர்வினையாக கழகத் தோழர்கள் கோ. இராஜேந்திரன், த. மனோஜ்குமார் மற்றும் பொ. கிருஷ்ணன் ஆகியோர் இந்தத் தாக்குதலை நடத்தியாகக் கூறி 21.03.2018 அன்று அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தோழர்களைக் கைது செய்தனர். 2018இல் இருந்து 4 ஆண்டுகள் நடந்த அவ்வழக்கில் 02.12.22 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.கழகத் தோழர்கள் அவ்வழக்கில் இருந்து குற்றமற்றவர்கள் என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட தோழர்கள் சேலம் பெரியார் சிலைக்கு மாலை அணித்து மரியாதை செலுத்தினர். இந்த வழக்கில் திறம்பட வாதாடிய வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபனுக்கும்...

அயோத்தி ‘ராமன்’ மீது சூரிய ஒளி விழுவது எப்படி?

அயோத்தி ‘ராமன்’ மீது சூரிய ஒளி விழுவது எப்படி?

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் இராமன் கோவில் உண்மையிலேயே இராமன் பிறந்த இடம் தான். இராமன் பிறந்த இடத்தில் தான் கோவில் கட்டியிருக்கிறோம். இராமன் தான் அங்கு பட்டாவோடு குடியிருக்கிறான் என்பதை மக்களிடம்  நம்ப வைப்பதில் ஒன்றிய ஆட்சி தீவிரமாக இறங்கியிருக்கிறது. இராம நவமி அன்று இராமர் சிலை மீது ராமநவமி நாளன்று சூரியக் கதிர்கள் விழப் போகிறது என்ற ஒரு செய்தியைப் பரப்பி வருகிறார்கள். அப்படி சூரியக் கதிர்களை விழும்படி செய்வதற்காக செயற்கையான கருவி ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆடிகள் என்று சொல்லப்படுகின்ற லென்சுகளைக் கொண்டு உருவாக்கப்படுகின்ற அந்தக் கருவியை வடிவமைக்கும் முயற்சியில் மத்திய ஆராய்ச்சி நிறுவனமும், மத்திய கட்டிட ஆராய்ச்சி மய்யமும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஒன்றிய ஆட்சி கட்டாயப்படுத்தியுள்ளது. இதற்கான அறிவியல் தகவல்களை அளிப்பதற்காக இந்திய வானியல் நிறுவனமும், அயுக்கா என்ற வானியல் நிறுவனமும் ஈடுபட வேண்டும் என்றும் ஒன்றிய ஆட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது....

G-20 தலைமைப் பதவியால் இந்தியாவுக்கு தனிப் பெருமை ஏதும் இல்லை

G-20 தலைமைப் பதவியால் இந்தியாவுக்கு தனிப் பெருமை ஏதும் இல்லை

G-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பு இப்போது இந்தியாவிற்கு வந்துள்ளது. இதில் இந்தியா பெருமை கொள்ள எதுவும் இல்லை. இந்த அமைப்பின் உறுப்பு நாடு ஒவ்வொன்றுக்கும் சுழற்சி முறையில் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 19ஆவது சுற்றில் தலைமைப் பதவி மோடிக்கு கிடைத்திருக்கிறது. அந்த முறையில் தற்போது இந்தியாவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதையொட்டி, டெல்லியில் பிரதமர், அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை கூட்டி இந்தியா முழுவதும் 200 இடங்களில் இது தொடர்பான கூட்டங்களை நடத்துவது என்ற முடிவை எடுத்திருக்கிறார். தமிழ்நாடு முநலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதில் கலந்து கொண்டிருக்கிறார். மிகவும் பெருந்தன்மையோடு இந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு தரும் என்று அறிவித்திருக்கிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு ‘ளுவயவநளஅயn’ என்ற முறையில் தமிழ்நாடு அரசு எடுத்திருக்கிற ஒரு சிறப்பான முடிவு. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரி கூறியிருக்கிற கருத்தையும்...

ஜல்லிக்கட்டு வீரத்தின் அடையாளமா?

ஜல்லிக்கட்டு வீரத்தின் அடையாளமா?

கிராமியக் கலாச்சாரம், கிராமியப் பண்பாடு இவைகளி லெல்லாம் புனிதம் கற்பிப்பதோ, பெருமைபடுவதற்கோ ஒன்றும் இல்லை. இவைகளெல்லாம் சாதி கட்டமைப்பில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மூட நம்பிக்கைகள்,  சடங்கு கள், கிராமத் திருவிழாக்கள், செத்தப் பிணங்களைக் கூட பொது சுடுகாட்டிற்குள் புதைக்க அனுமதி மறுக்கப்படுகின்ற மனிதாபிமானமற்ற கொடு மைகள், சாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு அபராதம் என்றெல்லாம் கிராமியக் கலாச் சாரம் பழமைப் படுகுழிக்குள் மூழ்கிப் போய் கிடக்கின்றது. அதன் காரணமாகத்தான், கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கி நகர்ப்பெயர்வுகள் அதிகமாக இருக்கின்றன. இந்தியாவிலேயே கிராமத்தி லிருந்து நகரத்தை நோக்கி வரு கின்றவர்களின் எண்ணிக்கை யில் முதலிடம் பெற்ற மாநிலமாக (63 சதவீதம்) தமிழ்நாடு இருக்கின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கிருஷ்ணகிரி அருகே தொகரப் பள்ளி என்று ஒரு கிராமம், இந்த கிராமத்தில் காதல் செய்வது என்பதே குற்றம். அதிலும் ஒரே சமூகத்தில் காதலித்தால்கூட அது குற்றமாகக் கருதப்பட்டு அபராதம் விதித்து ஊரை...

ஒழுக்கமில்லாத ‘இந்து’வே வெளியேறு!

ஒழுக்கமில்லாத ‘இந்து’வே வெளியேறு!

“இந்துவாக இருப்பவர் ஒழுக்கவாதி; ‘இந்துத்துவா’வை ஏற்றுக் கொண் டவர், பலே பலே ஒழுக்கவாதி” என்று நாம் சொன்னால், அண்ணாமலைக்கு கோபம் வந்து விடும். “யாரடா  அப்படி சொன்னது? நீ எந்த ஊடகம்பா? மரியாதையாகப் பேசு; மான நஷ்ட வழக்கு போடுவேன்” என்று பொங் கிடுவார். ஏதோ, கிண்டலுக்காக நாம் எழுதவில்லை. அவரது பேச்சை ‘தினமலர்’ (டிசம்.12) வெளியிட்டிருப்ப திலிருந்துதான் கூறுகிறோம். அண்ணா மலைக்கு எல்லாவற்றுக்கும் ஆதாரம் வேண்டுமே! “திராவிட இயக்கங்களில் இருப்பவர்களே அஞ்சி வெட்கப்படும் அளவிற்கு பாலியல் குற்றச்சாட்டுகள் நம்மோடு இருப்பவர்கள் மீது பரபரப்பாக எழுகிறது. ஒழுக்கக் கேடானவர்களுக்கு பா.ஜ.க.வில் இடம் இல்லை. அவர்கள் கட்சியிலிருந்து விலகி விடலாம்” என்று கண்டிப்பாகக் கூறியிருக்கிறார். அதாவது பாலியல் குற்றச்சாட்டிலும் பா.ஜ.க.வை அடிச்சுக்கவே முடியாது; அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று மகிழ்ச்சியை அல்ல; வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார். என்ன சார் இது – இதெல்லாம் ஒரு பிரச்சினையா… நம்ம இந்து தர்மத்தில் பகவான்...

இந்தியாவில் பொருளாதாரக் குவிப்பை நிர்ணயிப்பதே ஜாதிக் கட்டமைப்பு தான் – முனைவர் கலையரசன்  தமிழில் ர. பிரகாசு

இந்தியாவில் பொருளாதாரக் குவிப்பை நிர்ணயிப்பதே ஜாதிக் கட்டமைப்பு தான் – முனைவர் கலையரசன் தமிழில் ர. பிரகாசு

ஜாதிய சமூகத்தில் சமூக மாற்றத்துக்கான அடிப்படையில் முதன்மையாகக் களையப்பட வேண்டியது ஜாதி அமைப்பு; பொருளாதாரம், அதற்கு துணை சேர்க்கும் காரணி தான் என்பதே பெரியாரியலின் அடிப்படை. ஜாதியைவிட பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சரி செய்து விட்டால் ஜாதியப் பாகுபாடுகள் பலவீனமாகி விடும் என்பது இடதுசாரிகளின் பார்வை. இப்போது சமூகக் கல்வி ரீதியான இடஒதுக்கீட்டில் முதன்மைக் காரணியாகக் கருதப்படும் ஜாதியைப் புறந்தள்ளி பொருளாதாரத்தை அளவுகோலாக மற்றும் முயற்சியே 10 சதவீத உயர்ஜாதி இடஒதுக்கீடு. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கே ஜாதி அடிப்படையாக இருக்கிறது என்பதை ஆய்வு ரீதியாக நிறுவுகிறார், முனைவர் கலையரசன் – இக்கட்டுரையில். நாட்டின் சொத்து ஏழை, பணக்காரர் என்ற வர்க்கப் பிரிவில் பகிர்ந்து கிடக்காமல், உயர்ஜாதி யினரிடம் அதிகமாகவும், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பிரிவினரிடம் குறைவாகவும் குவிந்திருப்பதைத் தரவுகளுடன் நிறுவுகிறார். ‘புரட்சிக் பெரியார் முழக்கம்’ வாசகர்களுக்கு ஆழமான இந்தக் கட்டுரையைத் தமிழில் தருகிறோம். இட ஒதுக்கீட்டால் தகுதி, திறமை பாழ்பட்டு விட்டது, நாட்டின்...

நடராசன் முதல்வர் கனவில் வருவாரா?

நடராசன் முதல்வர் கனவில் வருவாரா?

¨        தில்லை நடராசன் கோயிலில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்கிறார் சுப்பிரமணியசாமி. நந்தன் கனவில் நடராஜன் வந்து சொன்னது போல் தமிழக முதல்வரிடம் கனவில் வந்து சொன்னால் பரிசீலிக்கலாம். ¨        புதுச்சேரி கோயில் யானை மாரடைப்பால் மடிந்தது பக்தர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் சோகம் தான். காடுகளில் இயற்கையாக வாழும் விலங்குகளை கோயிலுக்குள் கொண்டு வந்து மதச்சாயம் பூசி மாரடைப்பால் மரணிக்க வைப்பது கொடுமை அல்லவா? எந்த ஆகமத்தில் யானையைக் கோவிலுக்குள் பயன்படுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறது. விலங்குகளை இயற்கையாக மதம் இன்றி வாழ விடுங்கள். ¨        கோயில்களில் செல்போன் கொண்டு வர உயர்நீதிமன்றம் தடை விதித் திருப்பது நியாயம்தான். சமஸ்கிருத மந்திரங்களை கருவறைக் கடவுள்கள் நெட் வொர்க் இல்லாமலே புரிந்து கொள்ளும் போது வீணாக எதற்கு செல்போன்? ¨        உறுப்புகளோடும் உயிரோடும் பிறக்கும் குழந்தைகள், மத அடையாளங்களை சுமந்து வரவில்லை. அவர்களை மதத்துக்குள் இழுப்பதே கட்டாய மதமாற்றம் தான்!...

கோவை மாவட்டக் கழக முடிவுகள்

கோவை மாவட்டக் கழக முடிவுகள்

கோவை மாநகர மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 4.12.2022 அன்று மாலை 4 மணி அளவில் மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் பா. இராமச்சந்திரன் தலைமையில் மாநில அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, கழகப் பொருளாளர் சு. துரைசாமி ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.  கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்: பெரியார் முழக்கம் சந்தா சேர்த்து டிசம்பர் இறுதிக்குள் தலைவரிடம் ஒப்படைப்பது. டிசம்பர் 6 / டிசம்பர் 24இல் அம்பேத்கர்/பெரியார் நினைவு நாட்களில் வீரவணக்கம் செலுத்துவது. கோவையில் கழகத் தோழர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்துவது கோவை மாநகரப் பொறுப்புகள் அனைத்தும் கலைக்கப்பட்டன. கோவை மாநகர. தற்காலிக அமைப்பாளராக நா.வே.நிர்மல் குமார் நியமிக்கப்படுகிறார். கோவை மாநகரில் தோழமை இயக்கங்கள், கட்சிகள் நடத்தும் எந்த நிகழ்ச்சியானாலும் மாநகரத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கலந்து கொள்வதாக இருந்தால் அமைப்பாளரிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றே கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது....

தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம்

தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம்

அனைத்து மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களுடன் கலந்துரை யாடி மாவட்ட அமைப்புகளைப் புதுப்பிக்க / மாற்றியமைக்க, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்,  மாநிலப் பொறுப்பாளர்கள் கீழ்க்கண்டவாறு பயணத்துக்குத் திட்டமிடப்பட் டுள்ளது. முதற்கட்டப் பயணம்: 16.12.2022 காலை 10.30 மணி மூ கள்ளக்குறிச்சி மாவட்டம் 16.12.2022 மாலை 4.00 மணி- விழுப்புரம் மாவட்டம். 17.12.2022- மாலை 06.00 மணி – வேலூர் மாவட்டம் (இரவு தங்கல் வேலூர் மாவட்டம்) 18.12.2022 காலை 10.00 மணி கிருட்டிணகிரி மாவட்டம் 18.12.2022 மாலை 04.00 மணி தர்மபுரி மாவட்டம் இரண்டாம் கட்டப் பயணப் பட்டியல்: 26.12.2022 காலை 10.00 மதுரை மாவட்டம் 26.12.2022 மாலை 4.00 சிவகங்கை மாவட்டம் 26.12.2022 இரவு 07.00 மணி தஞ்சை மாவட்டம் (இரவு தங்கல் தஞ்சை மாவட்டம் ) 27.12.2022 காலை 11.00 மணி மயிலாடுதுறை மாவட்டம் 27.12.2022 மாலை 04.00 மணி கடலூர் மாவட்டம் (இரவு தங்கல் பெரம்பலூர் மாவட்டம்...

‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ நூல் திறனாய்வு: அஜிதா பேச்சு

‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ நூல் திறனாய்வு: அஜிதா பேச்சு

பெரியார் தொடங்கிய பார்ப்பனரல்லாதார் இயக்கமே ஆர்.எஸ்.எஸ். உருவாகத் தூண்டியது ஹெட்கேவர் சுதந்திரப் போராட்ட வீரர் என்பதும் காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இல்லை என்பதும் அப்பட்டமான பொய். இந்து மகாசபையிலும் காங்கிரசிலும் இரட்டை உறுப்பினராக இருக்க காங்கிரஸ் தடை விதித்தது. கருஞ்சட்டைப் பதிப்பகம் சார்பில், மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வு 19.11.2022 அன்று மாலை 6 மணியளவில், தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம்’ நூல் மறு பதிப்பு செய்து வெளியிடப்பட்டது. வழக்கறிஞர் அஜிதா, நூலை திறனாய்வு செய்து உரையாற்றினார். ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம் என்ற புத்தகத்தை நாம் படித்தால், இந்துத்துவா பற்றிய பார்வை நமக்கு சரியானதாக மாறும். தமிழ்நாட்டில் ஒரு கதை கூறுவார்கள், கண் பார்வை இல்லாதவர்கள் ஒரு பெரிய யானையைத் தொட்டுப் பார்த்துவிட்டு இது ‘தூண் போல இருக்கிறது’, ‘இது முறம் போல் இருக்கிறது’ என்று கூறுவார்கள். அதே...

நாம் இருவர் ; நமக்கேன் இன்னொருவர் ?

நாம் இருவர் ; நமக்கேன் இன்னொருவர் ?

முன்பெல்லாம், நாம் இருவர், நமக்கு மூவர் என்று சொன்னோம்.  அது படிப்படியாக குறைந்து நாம் இருவர், நமக்கு இருவர். இப்பொழுது நாம் இருவர், நமக்கு ஒருவர், நாளைக்கு இதுவும் மாறலாம், நாம் இருவர், நமக்கேன் இன்னொருவர். நான் ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். நாமே குழந்தை, நமக்கேன் குழந்தை. இப்படி எல்லாம் பிரசாரம் இருக்கிறது. இதையெல்லாம், சீர்தூக்கிப் பார்த்து, நாட்டினுடைய நன்மை கருதி, குடும்ப சூழ்நிலையைக் கருதி, நீங்கள் உங்கள் செல்வங்களைப் பெற்று அதற்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில், இல்லற வாழ்வில் நீங்கள் சமத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்,  சமத்துவத்தை, சமூகநீதியை நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று ஏதோ முதலமைச்சராக அல்ல, உங்களுடைய தந்தை என்கின்ற அந்த இடத்தில் இருந்து உங்களை அன்போடு கேட்டு கொள்கிறேன். அறநிலையத்துறை சார்பில் 31 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் ஆற்றிய உரையிலிருந்து. பெரியார்...

வீட்டுப் பாடக் குறிப்பேடுகளில் (டைரி) ஜாதி கேட்கும் பள்ளிகளைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

வீட்டுப் பாடக் குறிப்பேடுகளில் (டைரி) ஜாதி கேட்கும் பள்ளிகளைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மாணவர்களின் சாதி, மதங்களை அடையாளப்படுத்தும் விதமாக மாணவர்கள் பயன்படுத்தும் தினசரி வீட்டுப்பாட டைரியில் “ஐடென்டி சர்டிபிகேட்” என்ற பெயரில் சாதி, மதம் ஆகியவற்றை விவரக்குறிப்பேட்டில் பதிவிட ஒரு பகுதியை உருவாக்கி கட்டாயமாக பதிவிட வலியுறுத்தி வருகிறது. அதேபோல பெரும்பாலான பள்ளிகளில் சாதி பெயர்களைப் பதிவிடுவதுடன் எஸ்சி, எஸ்டி, எம்பிசி, ஓசி (ளுஊ, ளுகூ, ஆக்ஷஏ, டீஊ) என பிரித்து பதிவிட வலியுறுத்துகிறது. இந்நிலையில் இந்த  சம்பவங்கள் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் சாதி, மத உணர்வைத் தூண்டுவதாக உள்ளது என திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்டித்தும், மாணவர்களின் அடையாள குறிப்புகளில் சாதி, மதம் அடை யாளம் கேட்பதைத் தடை செய்ய வலியுறுத்தியும்,  2021 ஆகஸ்ட் 12 ஆம் தேதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநகரத் தலைவர் நேருதாஸ் கோவை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்....

தலையங்கம் இடஒதுக்கீட்டை குழி பறிக்கும்  அய்.அய்.டி.யின் புதிய கொள்கை

தலையங்கம் இடஒதுக்கீட்டை குழி பறிக்கும் அய்.அய்.டி.யின் புதிய கொள்கை

சென்னை ‘அய்.அய்.டி.’ பார்ப்பனர் கோட்டை யாகவே இருந்து வருகிறது என்பதற்கு மேலும் சான்றுகள் குவிந்து வரு கின்றன. 577 பேராசிரியர் களில் பட்டியல் பிரிவு மற்றும் பழங்குடியைச் சார்ந்தவர்கள் 19 பேர் மட்டுமே (மூன்று சதவீதம்) என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் கூறுகிறது. 2021 மார்ச் 31 நிலவரப் படி திறந்த போட்டிக்கான இடங் களில் 515 பேராசிரியர், இணைப் பேராசிரியர்கள் இருந்தனர். இதில் பிற்படுத்தப் பட்டோர் 62 பேர் மட்டுமே. பட்டியல் மற்றும் பழங்குடிப் பிரிவினர் 16 பேர் தான். ஆய்வுப் பட்டப் படிப்பைப் பொறுத்த வரை 2018-2019, 2019-2020இல் 196பேர் மட்டுமே பெண்கள்; பிற்படுத் தப்பட்டோர் 74; பொருளா தாரப் பின்தங்கிய பிரிவினர் 74; எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர் முறையே 27 மற்றும் 5 பேர் மட்டுமே. பெண்களும் முற்றாக புறக்கணிக்கப்படு கின்றனர். 2021-2022ஆம் ஆண்டு துறைரீதியாக விவரங்களைத் தர, தகவல்...

‘இராமனு’க்கு 2000 கோடி சாலை

‘இராமனு’க்கு 2000 கோடி சாலை

அயோத்தி ‘இராமனு’க்கு அடிக்குது ‘லாட்டரி’; சர்வதேச சுற்றுலா கதாநாயகனாக மாறப் போகிறார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, உ.பி. காவிச் சட்டை ஆதித்யநாத் என்பவருக்கு முதலமைச்சர் என்ற பெயரும் உண்டு. இராமன் தரிசனத்துக்கு கோயிலைச் சுற்றி அமையப் போகும் சாலைக்கு அவரது இராமராஜ்ய உ.பி. ஆட்சி ஒதுக்கியுள்ள தொகை 2000  கோடி ரூபாய். மக்கள் வரிப் பணத்தில் மக்களுக்கான திட்டங்களுக்கு ‘டாட்டா’ காட்டிவிட்டு, 2000 கோடியை கோயிலுக்கு சாலை போட கொட்டி அழும் ஆட்சியை உலகில் எங்கேயாவது பார்த்திருக்க முடியுமா? இது அந்த இராமனுக்கே அடுக்காது” என்று எதிர்க் கேள்வி கேட்கக் கூடிய மக்கள் அங்கே இல்லை. ‘இந்துத்துவ மாடல்’ இப்படித் தான் சேறு வாரி பூசிக் கொண்டு ஆட்டம்  காட்டும்! உ.பி. மாநிலமே ‘இராமனுக்கு’ பட்டா போட்டாகி விட்டது. இனி அடுத்தடுத்து கீழ்க்கண்ட திட்டங்களும் வரலாம். சர்வதேசப் பயணிகளை கோயிலுக்கு வரவேற்க அனுமார் படை உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் தரப்படும். திறமையுள்ள...

எட்டு ஆண்டுகளாக உயர் கல்வியில் பா.ஜ.க.வின் படுபாதகச் செயல்கள் ம.கி. எட்வின் பிரபாகரன்

எட்டு ஆண்டுகளாக உயர் கல்வியில் பா.ஜ.க.வின் படுபாதகச் செயல்கள் ம.கி. எட்வின் பிரபாகரன்

“2014இல் ஆட்சிக்கு வந்த பாஜக இந்த எட்டு ஆண்டுகளாக உயர் கல்வியில் செய்த அட்டூழியங்கள் ஏராளம். டெல்லி பொருளாதாரக் கல்லூரி பேராசிரியர் நந்தினி சுந்தரும், டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் கவுஹர் ஃபஸ்லியும் இணைந்து, ஜூன் 2020 வரை நடந்த அதிகார அத்துமீறல்களை, ஆய்வறிக்கையாக வெளி யிட்டனர் . தற்போது அந்த ஆய்வறிக்கையோடு புது தகவல் களை சேர்த்து, செப்டம்பர் 2022 வரை நடந்த சீர்கேடு களையும் உள்ளடக்கியதாக விரிவாக்கப்பட்டுள்ளது. வேறு நால்வர் இப்பணியை செய்துள்ளனர். 6 பகுதிகளாக இந்த கொடுங்கோன்மைகள் பிரித்து விளக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக இங்கு பார்க்கலாம். பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் தலையீடு: சிந்தனை யாளர் காஞ்சா அய்லையா எழுதிய ‘நான் ஏன் இந்து அல்ல?’, அருந்ததி ராய் எழுதிய ‘தோழர்களுடன் ஒரு பயணம்’, நாவலாசிரியர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’, எழுத்தாளர் பாமா சூசைராஜ் எழுதிய ‘சங்கதி’, சுகிர்த ராணி எழுதிய ‘கைம்மாறு’, ‘என் உடல்’, ராமானுஜன்...

பயப்படாதீங்க; பா.ஜ.க.வுக்கு ஆபத்தில்ல…!

பயப்படாதீங்க; பா.ஜ.க.வுக்கு ஆபத்தில்ல…!

¨           ஆளுநர் அவர்களே தமிழ்நாடு அரசு ஒப்புதல் கேட்பது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தான், ஏதோ ஆபாச வீடியோ தடைச் சட்டம் என்று நினைத்து அதனால் தமிழக பாஜகவுக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயப்படாதீர்கள். ¨           ஆன்லைன் சூதாட்ட தடையை வைத்துக் கொண்டே சூதாட்டம் நடத்துகிறார் ஆளுநர் மசோதா காலாவதியாக கடைசி நாளில் விளக்கம் கேட்டு அனுப்புவது ‘சூப்பர்’ சூதாட்டம். ¨           ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்பா என்று கேட்கிறார் ரவி நியாயம் தான் ஒன்றிய ஆட்சியின் ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருக்கவே கூடாது இப்போதாவது அவருக்கு புரிந்தது நல்லது – விடுதலை இராசேந்திரன் டுவிட்டரிலிருந்து பெரியார் முழக்கம் 01122022 இதழ்

திவ்யா – மதன் வாழ்க்கை இணையேற்பு விழா

திவ்யா – மதன் வாழ்க்கை இணையேற்பு விழா

தோழர்கள் திவ்யா – மதன் வாழ்க்கை இணைப்பு விழா  20.11.2022, ஞாயிறு காலை 11.00 மணியளவில் திருப்பூர், திருமுருகன்பூண்டி,டே மூன் பார்டி ஹாலில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் ஆக நடைபெற்ற இத்த திருமண விழாவின் முதல் நிகழ்வாக பகுத்தறிவு பாடல்களை யாழினி யாழ் இசை கோவை இசைமதி ஆகியோர் பாடினார்கள். ஆத்துப்பாளையம் பகுதி கழகத் தோழர் பரந்தாமன்  வரவேற்புரை யாற்றினார்கள். அடுத்து கழகத் தலைவர் தலைமையில் இணையர்கள்  இல்வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியேற்றுக் கொண்டார்கள். தொடர்ந்து மணமக்களை வாழ்த்தி மணமகனின் நண்பர் மற்றும் கழகத்தின் மாநில பொறுப்பாளர்களும் நிர்வாகிகளும் தோழர்களும் பேசினார்கள். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆ.சந்தோஷ், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, கோவை மாவட்ட...

வெறுப்புணர்வை தூண்டும் காஷ்மீர் பைல்ஸ்- சர்வதேச விழாவில் கண்டனம்

வெறுப்புணர்வை தூண்டும் காஷ்மீர் பைல்ஸ்- சர்வதேச விழாவில் கண்டனம்

விவேக் அக்னிகோத்ரி இயக்கிய காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி வெளியானது. இசுலாமிய மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வை உமிழ்ந்த இத்திரைப்படத்தை இந்துத்துவா அமைப்புகள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடின. குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் கேளிக்கை வரியில் இருந்தும் இத்திரைப்படத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்ததாகவும் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி கூறியிருந்தார். ஆனால் இது வெறுப்புணர்வை பரப்பும் படம் என்று சர்வதேச திரைப்பட விழாவில் அதன் தேர்வுக்குழு தலைவர் நடாவ் லேபிட் அதிருப்தி தெரிவித்துள்ளார். 53வது சர்வதேச கோவா திரைப்பட விழா நவம்பர் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்றது. 79 நாடுகளை சேர்ந்த 280-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட்டன. இதில் இந்திய பனோரமாவில் 25 திரைப்படங்கள், 20 பிற படங்கள் திரையிடப்பட்டன. அதில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படமும் ஒன்று. விழாவில்...

வயலூர் முருகன் கோவிலில் பார்ப்பனர்கள் அடாவடி; கழகம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வயலூர் முருகன் கோவிலில் பார்ப்பனர்கள் அடாவடி; கழகம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வயலூர் முருகன் கோவிலில், அனைத்து ஜாதி அர்ச்சகர் பணி நியமன ஆணை பெற்ற அர்ச்சகர்களை கருவரைக்குள் நுழைய விடாமல் தடுக்கும் பார்ப்பன அர்ச்சகர்களைக் கண்டித்தும், மதுரை உயர்நீதிமன்றத்தில் அனைத்து ஜாதி அர்ச்சகருக்கு எதிராக பார்ப்பன அர்ச்சகரின் மகன் தொடர்ந்த வழக்கில் நியாயமான தீர்ப்பை கோரியும், சிம்சன் பெரியார் சிலை அருகில், 23.11.2022 மாலை 3:30 மணியளவில் மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களுக்குப் பேடியளித்த மாவட்ட செயலாளர் இரா.உமாபதி கூறுகையில், “பெரியாரின் நெஞ்சில் தந்தை முள்ளான, அனைத்து  ஜாதி அர்ச்சகர் சட்டத்திற்கு பணி நியமனத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியது 2000 ஆண்டு கருவரைத் தீண்டாமையை உடைத்தது. இருந்தாலும், சில இடங்களில் பார்ப்பன அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி அர்ச்சர்களை பணி செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். மேலும், பார்ப்பன அர்ச்சகரின் மகன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். வழக்கே நியாமானது இல்லை. நாளை...

கழகம் முன்னெடுத்த சட்ட எரிப்பு நாள் நிகழ்வுகள் சென்னையில் கழகத் தலைவர் தலைமையில் உறுதி ஏற்பு

கழகம் முன்னெடுத்த சட்ட எரிப்பு நாள் நிகழ்வுகள் சென்னையில் கழகத் தலைவர் தலைமையில் உறுதி ஏற்பு

  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் நவம்பர் 26 அன்று நடைபெற்ற சட்ட எரிப்பு நாள் பொதுக் கூட்டங்கள் வீர வணக்க நிகழ்வுகளின் தொகுப்பு. சென்னை : திராவிடர் இயக்கத்தின் மிக முக்கிய போராட்டமான ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை தோழர்கள் கொளுத்தி இந்திய ஒன்றியத்தை திரும்பி பார்க்க வைத்தப் போராட்டம் ‘சட்ட எரிப்புப் போராட்டம்’ ஆகும். இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில், பதாகைகள் சட்ட எரிப்பு போராளிகளை நினைவுகூரும் வகையிலும், வீரவணக்கம் செலுத்தும் வகையிலும் அமைக்கப்பட் டிருந்தது.  26.11.2022 அன்று காலை 8 மணியளவில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பின்பு சட்ட எரிப்பு நாள் குறித்து உரையாற்றினார். முன்னதாக, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி  ‘ஜாதி ஒழிப்பு உறுதிமொழி’ வாசிக்க கழகத் தோழர்கள் உறுதியெடுத்தனர். ஜலகண்டாபுரம் : 26.11.2022 மாலை 6.00 மணியளவில் ஜலகண்டாபுரம் பேருந்து...

அறிவியலைப் பரப்பும் ‘வானவில் மன்றம்’ – அரசின் வரவேற்கத் தக்க முடிவு

அறிவியலைப் பரப்பும் ‘வானவில் மன்றம்’ – அரசின் வரவேற்கத் தக்க முடிவு

இந்திய அரசியல் சட்டத்தில், அடிப்படைக் கடமையாக 51 ஹா பிரிவு இருக்கிறது. அந்தப் பிரிவு மக்களிடம் அறிவியல் மனப்பான்மை வளர்ப்பதை ஒரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறுகிறது. ஆனால் அந்தப் பிரிவு இதுவரை எவராலும், எந்த ஒரு அரசாலும் அமுல்படுத்தப்படவே இல்லை. முதன்முதலாக அந்த வரலாற்றுச் சிறப்பை தமிழ்நாடு அரசு பெற்றிருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு “வானவில் மன்றம்” என்ற அமைப்பு துவங்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இதை துவங்கி வைத்திருக்கிறார். மாணவர்களிடம் அறிவியல், கணித ஆர்வத்தை தூண்டுவது இந்த வானவில் மன்றத்தின் நோக்கமாகும். இளம் பருவத்திலேயே மாணவச் செல்வங்கள் அறிவியல் மனப்பான்மையுடன் வளர்க்க வேண்டும் என்ற மிகச் சிறந்த உன்னத நோக்கத்தோடு இந்தப் பிரிவு தொடங்கப்பட்டு இருக்கிறது. இது இந்திய ஒன்றியத்திற்கே வழி காட்டக்கூடிய ஒரு திட்டம் என்று தான் கூற வேண்டும். ஒன்றியத்தில்...

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தமிழர்களுக்கு 80ரூ வேலை உறுதி :  தங்கம் தென்னரசு விளக்கம்

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தமிழர்களுக்கு 80ரூ வேலை உறுதி : தங்கம் தென்னரசு விளக்கம்

கிருஷ்ணகிரி டாடா எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை அளித்த குற்றச்சாட்டு தொடர்பாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “டாடா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக தனது தொழிற் சாலையை கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள ழுஆசு தொழிற்பூங்காவில், சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்து வருகிறது. 4684 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுவரும் இத்தொழிற் சாலையின் மூலம் ஏறத்தாழ 18000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொழிற்சாலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருவதாக பத்திரிக்கை செய்திகளும் புகார்களும் அரசிற்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்நிறுவனம் தற்போது வரை...

சூதாட்டத் தடையை சூதாடி வீழ்த்திய பலே ஆளுநர்!

சூதாட்டத் தடையை சூதாடி வீழ்த்திய பலே ஆளுநர்!

ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை போடும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் தராததோடு, தமிழ்நாடு அரசுக்கு சில சட்ட விளக்கங்களைக் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். 24 மணி நேரத்தில் அதற்கு சட்ட ரீதியான பதிலை தமிழ்நாடு அரசு அனுப்பி உள்ளது. அந்த சட்டப் பிரச்சனைகள் எம்மைப் போன்ற பாமர மக்களுக்குப் புரியாது என்ற கவலையோடு ஆளுநர் கேட்ட கேள்விகளுக்கும், கேட்காத கேள்விகளுக்கும் ‘கோடங்குடி மாரிமுத்து’ இந்த பதில்களை பணிவோடு சமர்ப்பிக்கிறார். ஆளுநர் கேட்காத கேள்வி : சில ஆண்டு காலமாவது கிடப்பில் போடாமல் 24 மணி நேரத்தில் எனக்கு பதிலை அனுப்பி என்னை அவமானப்படுத்துகிறீர்களா ? கோடங்குடி மாரிமுத்து பதில் : அப்படியெல்லாம் இல்லை யுவர் எக்சலென்சி! எங்கே நீங்க மகாபாரதத்தில் சூதாட்டம் நடந்திருக்கிறது. அதுவே நமது பாரத கலாச்சாரம் என்று அடுத்தக் கூட்டத்தில் பேசி விடப் போவீர்களோ என்று பக் பக் என்று பதறியது; உடனே பதிலை அனுப்பி விட்டோம். ஆ....

சனாதன சக்திகளை முறியடிக்க இளைஞர்கள் எழுச்சி மாநாடு’

சனாதன சக்திகளை முறியடிக்க இளைஞர்கள் எழுச்சி மாநாடு’

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு கூட்டம்  27.11.22 ஞாயிறு காலை 10:30 மணி அளவில் மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழகத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகள், பரப்புரைத் திட்டங்கள்,  ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு சந்தா திரட்டல், இயக்கத்திற்கு முழு நேரப் பணியாளரை நியமித்தல், இயக்க வளர்ச்சி நிதி திரட்டல் குறித்தான ஆலோசனைகள் நடைபெற்றன. கழகத் தலைமைக் குழு உறுப்பினர்களின் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1) 2023 பிப்ரவரி மாதம் சனாதன எதிர்ப்பு “இளையோர் மாநாடு” சேலத்தில் ஒரு நாள் மாநாடாக மிகச் சிறப்பாக நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. கருத்தரங்கம், பாட்டரங்கம், கவியரங்கம் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சனாதன எதிர்ப்பு கொள்கை உடைய சிறப்பு அழைப்பாளர்களைக் கொண்ட பொது மாநாடு என மாநாட்டு நிகழ்வுகள் தீர்மானிக்கப்பட்டன. 2)           2023 ஜனவரி 30,  காந்தியார் நினைவு நாளை...

வரதம்மாள் படத்திறப்பு நிகழ்வு

வரதம்மாள் படத்திறப்பு நிகழ்வு

சென்னை மாவட்டக் கழகத்தின் வட சென்னை மாவட்ட அமைப் பாளர் தட்சிணாமூர்த்தி தாயார் வரதம்மாள் கடந்த 28.10.2022 அன்று முடிவெய்தினார். வரதம்மாள் படத் திறப்பு நிகழ்வு 20.11.2022 அன்று மாலை 6:30 மணியளவில் சேத்துப்பட்டு தட்சிணாமூர்த்தி இல்லத்தில் நடை பெற்றது. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார். தொடர்ந்து, தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், திமுக மாவட்ட பிரதிநிதி மாதவன், அம்பேத்வளவன் – விசிக மேற்கு மாவட்ட செயலாளர், சேத்துப்பட்டு இராசேந்திரன் உள்ளிட்டோர் நினைவேந்தல் உரையாற்றினர். பெரியார் முழக்கம் 24112022 இதழ்

10% இட ஒதுக்கீட்டைக் கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம்

10% இட ஒதுக்கீட்டைக் கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம்

கடலூர் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், 15.10.2022, அன்று காலை 10 மணியளவில், கடலூர் மஞ்ச குப்பம்  தலைமை தபால் நிலையம் அருகில்,  “உச்சநீதிமன்றத்தின் மற்றொரு அயோத்தி தீர்ப்பு” என்ற தலைப்பில்  உயர்சாதி பிரிவினருக்கு வழங்கிய 10% இடஒதுக்கீட்டை கண்டித்தும்,  ஒன்றிய அரசு ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சனாதனத்தின் குரலாக உச்சநீதிமன்ற தீர்ப்பு, பொருளாதர அளவுகோல் இடஒதுக்கீட்டுக்கு பொருந்தாது, 10% இடஒதுக்கீடு, இடஒதுக்கீட்டு முறையையே சீர்குலைக்கும், சமூகநீதியை சீர்குலைக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகிய முழக்கங்களை முன்னிறுத்தி கண்டன முழக்கமிடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின்  தொடக்க நிகழ்வாக விடுதலைக் குரல் கலைக்குழுவினர் கொள்கை பிரச்சார பாடல்களை பாடினர். ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட செயலாளர், ர.சிவகுமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர், அ.மதன்குமார் வரவேற்று நிகழ்வை ஒருங்கிணைத்தார். ஆ.சதிசு – மாவட்ட அமைப்பாளர், சிவா – இளைஞரணி மாவட்ட அமைப்பாளர், பிரேம் – தமிழ்நாடு மாணவர்க் கழக மாவட்ட அமைப்பாளர்,...

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் “இல்லம் தேடி சந்திப்பு”

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் “இல்லம் தேடி சந்திப்பு”

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி தோழர்களின் ‘இல்லம் தேடி சந்திப்பு’ நிகழ்வின் முதல் நிகழ்வாக 30.10.2022 ஞாயிறு அன்று, கவுந்தாபாடி இளமதி செல்வம் வீட்டிற்கு தோழர்கள் சென்றனர். தோழர்களின் இல்லத்தில்  அவர்களது குடுபத்தினரோடு கலந்துரையாடல் நடைபெற்றது . அந்த பகுதியில் அமைப்பை கட்டமைப்பது, தோழர்களுக்கு அவர்களது வாழ்வியலில் பகுதியில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அனைவருக்கும்  அசைவ விருந்தினை தோழர் செல்வம் குடுபத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். இரண்டாவது வார நிகழ்வாக 6.11.2022 அன்று அந்தியூர் தமிழ்நாடு அறிவியல் மன்றப் பொறுப்பாளர் வீரா கார்த்திக் இல்லம் சென்றனர். தோழரின் குடும்ப அறிமுகத்திற்குப்  பின் அவர்களின் பணியிடங்களில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து, வருகின்ற மார்ச் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் ஒருங்கிணைந்த குடும்ப விழா நடத்துவது குறித்தும் கலந்துரையாடல் நடைபெறறது. கலந்து கொண்ட அனைவருக்கும் வீரா...