Author: admin

ஜாதி வன்கொடுமை காரணமாக மாணவர் அஜித் குமார் மரணம் !”  “உரிய விசாரணை நடத்தி மாணவர் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் !”  *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் அறிக்கை !*

ஜாதி வன்கொடுமை காரணமாக மாணவர் அஜித் குமார் மரணம் !” “உரிய விசாரணை நடத்தி மாணவர் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் !” *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் அறிக்கை !*

“ஜாதி வன்கொடுமை காரணமாக மாணவர் அஜித் குமார் மரணம் !” “உரிய விசாரணை நடத்தி மாணவர் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் !” *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் அறிக்கை !* ஜாதிய வன்கொடுமை காரணமாக தஞ்சை மருத்துவக் கல்லூரியில் நிகழ்ந்துள்ள கல்வி நிறுவனக் கொலை என்று சந்தேகிக்கப்படும் ஒரு மாணவரின் மரணம் குறித்து அனைவரின் கவனத்தை ஈர்க்கவும், உரிய தீர்வு கிடைக்கவும் இவ்வறிக்கையை முன்வைக்கிறேன். கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பாபு குளம் என்ற ஊரைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் ஏ.அஜித்குமார். இவர் பத்தாம் வகுப்பில் மாவட்டத்தின் முதல் மாணவராக தேறியவர். அதுபோலவே பன்னிரண்டாம் வகுப்பிலும் பள்ளியின் முதல் மாணவர். மருத்துவக் கல்வி அனுமதிக்கான கட் ஆப் மதிப்பெண் 97.75 பெற்றவர். 2014 ஆம் ஆண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்து வந்த அவர் நான்காம் ஆண்டு படிக்கும் போது அப்போது நடந்த...

சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!

சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!

“சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்!" "சமூக ஒற்றுமையைக் காப்போம்!" 1. பத்தாண்டு மோடி ஆட்சியில் என்ன நடந்தது? சட்டங்கள் சீர்குலைக்கப்பட்டன. மதவெறி தூண்டப்பட்டது. மாநில அடையாளங்கள் அழிக்கப்பட்டன. 2. நீட் தேர்வால் நமது அனிதாக்களை இழந்தோம். ஜி.எஸ்.டி-யால் தமிழ்நாட்டின் வருவாயை இழந்தோம். வரலாறு காணாத மழை வெள்ளத்தை நமது மாநிலம் சந்தித்த போதும் ஈவுஇரக்கமின்றி நிவாரண நிதியே இல்லை போ என்று இறுமாப்புடன் பேசியது ஒன்றிய மோடி ஆட்சி. 3. ஆளுநர் ரவி சனாதனப் பெருமை பேசுகிறார். தமிழ்மறை தந்த வள்ளுவருக்கு காவி சாயம் பூசுகிறார். தலித்மக்களுக்கு பூணூல் அணிவிக்கிறார். தீட்சிதர்கள் நடத்தும் குழந்தைத் திருமணங்களை ஆதரிக்கிறார். தேசத்தந்தை காந்தியை அவமதிக்கிறார். சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தரமறுக்கிறார். அண்ணா சூட்டிய தமிழ்நாடு என்ற பெயரை ஏற்க முடியாது என்கிறார். ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் தலைமையிடமாக மாற்றிவிட்டார். உச்சநீதிமன்றமே தலையில் குட்டிய பிறகும் பாஜக ஆட்சிதரும் இறுமாப்பில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை காலில் போட்டு...

தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு

தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு

  1879  செப்.17, ஈரோட்டில் பெரியார் பிறந்தார். 1898  13 வயது நாகம்மையாரை மணம் முடித்தார். 1902  சாதி ஒழிப்பு கலப்பு திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சாதியினர், மதத்தினருடன் சமபந்தி போஜனம் நடத்தினார். 1907  காங்கிரசில் ஆர்வம். ஈரோட்டில் பிளேக் நோய் பரவிய போது யாரும் முன்வராத நிலையில் துணிந்து மீட்பு பணி ஆற்றினார். 1909  தனது தங்கையின் மகளுக்கு விதவை மறுமணம் செய்வித்தார். 1917  பொதுநலத் தொண்டர் ஈரோடு நகர் மன்றத் தலைவர் ஆனார். 1920  காங்கிரசில் சேரும்போது 29 புதுப் பொறுப்புகளை தூக்கி எறிந்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். 1921  கள்ளுக்கடை மறியலில் பங்கேற்றுச் சிறை சென்றார். 1924  வைக்கம் போராட்டம். வ.வே.சு. அய்யரின் சேரன்மாதேவி குருகுலத்தின் வருணாசிரம நடவடிக்கையை எதிர்த்தார். 1925  குடி அரசு ஏடு துவக்கம். காஞ்சிபுரம் காங்கிரசு மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானம் கொண்டுவர முயன்று தோல்வி. காங்கிரசை விட்டு வெளியேறினார். 1927 ...

69. மக்கள் ஒட்டகங்களல்ல!

69. மக்கள் ஒட்டகங்களல்ல!

சராசரி வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள், யுத்ததிற்கு முன்னால் 100 புள்ளி என்றால், யுத்தத்தின் பயனாக ஆலோசகர் சர்க்காரில் 300 புள்ளி ஆக உயர்ந்தது. இந்த நிலை இந்துஸ்தான் சுயராஜ்ஜிய சர்க்கார்தரும் விபரம். அதாவது மார்க்கெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் அமைப்பை வைத்துக் கொண்டு எடுத்த கணக்கு. கருப்புச் சந்தையின் விலை வாசியை வைத்துக் கொண்டால் இன்னும் எத்தனை 100கள் அதிகமாகுமோ? வந்த சுயராஜ்ஜியத்தால் வாழ வேண்டிய மக்களுக்கு ஒன்றும் வாட்டம் தீர இல்லை யென்றாலும், நாட்டில் நடமாடும் பண்டங்களுக் கெல்லாம் விலையேற்றமா? என்கிற உணர்ச்சி ஊசி மருந்து ஏற்றப்படுவதைப்போல், இந்நாட்டில் சராசரி வாழ்க்கைத் தரத்தில் உள்ள ஒவ்வொருவரின் மனதிலும் ஏறும் படியான நிலைமை வளர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையை – உணர்ச்சி குடியேறுவதை, கண்டு சுயராஜ்ஜிய சர்க்கார் ? பிரச்சார விளம்பரங்களின் பலனாகவே காலந்தள்ளிவிட முடியும் என்கிற,  பெரும் நம்பிக்கையுடைய சர்க்கார், கலங்கவே செய்கிறார்கள். ஆனால் ஏற்படுங்கலக்கம், அதிகாரத்திற்கு ஆட்டங்கொடுத்து...

68. பல்கலைக் கழகத்தில் பார்ப்பனர்!

68. பல்கலைக் கழகத்தில் பார்ப்பனர்!

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், ஆண்டு தவறினாலும், கலாட்டா தவறாது என்கிற ஒரு கெட்ட பெயரை எப்படியும் சம்பாதித்துத்தர வேண்டுமென்று சிலர் கங்கணங்கட்டிக் கொண்டிருக் கிறார்கள் என்றுதான் முடிவுகட்டவேண்டியிருக்கிறது. சமீபத்தில் நடந்த ஸ்தாபகர்தினக் கொண்டாட்டத்திற்குச் சென்னை மேயர் வரவழைக்கப் பட்டிருந்தாராம். விருந்தினராக வந்த மேயருடன், பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், விருந்தினர் மனையில் பேசிக்கொண்டிருந்தபோது சில மாணவர்கள் சென்று கலவரஞ்செய்து இருவரையும் சிறைவைத்துவிட்டார்களாம். எப்படியிருக்கிறது படிப்பு! 18 மணி நேரங்கழித்துத்தான் துணை வேந்தர் விடுதலை செய்யப் பட்டிருக்கிறார். விருந்தினரான மேயர்கூறி சமாதானங்கள் ஏற்றுக் கொள்ளப் படாமல், மேயருக்குமட்டும் 11/2 மணி நேரம் தாமதித்து விழா நிகழ்ச்சிக்குச் செல்ல விடுதலை கொடுக்கப் பட்டது எனச் சொல்லப்படுகிறது. இந்தச் சிறைவைப்புக்குக் காரணம், ஸ்தாபகர் விழா கொண்டாடக்கூடாது என்கிற நன்றி கொல்லும் குணம் மேலோங்கி நின்றதுதான் என்பது வெளிப்படை. இந்த சில மாணவர்கள் தங்கள் குறைகளைப்பற்றிய ஒரு அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள். அதில், துணை வேந்தர் பல்கலைக் கழகத்தைவிட்டு நீக்கப்பட வேண்டும்;...

67. பட்டாபிஷேகம்!

67. பட்டாபிஷேகம்!

இராம இராஜ்ஜியத்துக்குப் பட்டாபிஷேகம் 1950 ஜனவரி 26-ந் தேதி என்று வதிஸ்டர் வமிசத்தினர் நாள் குறித்துவிட்டனர். இராமாயண வதிஸ்டர், நாடாளக் குறிப்பிட்ட நாள், இராமன் காடேக வேண்டிய நாள் ஆக ஆகிய இப்போது இந்துஸ்தான ஆக ஆகிய இப்போது இந்துஸ்தான வதிஸ்டவமிசத்தோர் குறிப்பிடும் இந்த 1926 எப்படியும் மாறப்போவதில்லை என்று உறுதி கூறுகிறார்கள். நம் காங்கிரஸ் தோழர்கள் ஏகாதிபத்தியம் என்று சொல்லுவதற்குப் பதிலாகக் கண்டுபிடித்த மற்றொரு பழமையான – அர்த்த புஷ்டியான சொல் இராம ராஜ்ஜியம் என்பதை அவர்களே நெடுங்காலமாக விளக்கிவந்திருக்கிறார்கள். ஏகாதிபத்தியத்திற்குப் புதைகுழி தோண்டிவிட்டோம், கண்காணாச்சீமைக்குக் கப்பலேற்றிவிட்டோம் என்று பேசிய அவர்களே, ஏகாதிபத்திய சிம்மா சனத்திற்கு அதைப்போன்ற மற்றொன்றே ஏற்றது என்று முடிவு கட்டிவிட்டார்கள். அந்த முடிவுப்படிதான் இந்துஸ்தான் ஏகாதிபத்தியம் உருவாகிவிட்டது என்றுகூறி  அதற்குப் பட்டாபிஷேகம் அதாவது அந்த ஏகாதிபத்தியம் ஆட்சிக்கு வரும் நாள் ஜனவரி 1926 என்று கூறுகிறார்கள். புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஏகாதிபத்தியம் என்கிற ஈயத்திற்கு ஜனநாயகம்...

66. தீ நாள்!

66. தீ நாள்!

என்றைக்கோ ஒரு காலத்தில் ஒரு அசுரன் இருந்தானாம். அந்த அசுரன் ஒரு பன்றிக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். இந்த விசித்திரப் பிறவியான அசுரன் தேவர்களை பூலோகப் பிராமணர்களை யெல்லாம் கொடுமைப் படுத்தினானாம். இதனால் தன்பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக் கொன்றொழித்தாராம். செத்துப் போனதைப் பூலோகமக்கள் எல்லாரும் கொண்டாடிக் களிப்படைய வேண்டுமென்று செத்துப்போன அந்த அசுரன் கேட்டுக் கொண்டானாம். அந்தப்படியே ஆகட்டும் என்று மாகவிஷ்ணு திருவாய் மலர்ந்தாராம். ஆகவேதான் தீபாவளிப் பண்டிகையை நாம் கொண்டாடுகிறோம்; கொண்டாட வேண்டும் என்று இன்றைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. தீபாவளிப் பண்டிகைக்கு ஆதாரமான இந்தக் கதையின் பொய்த் தன்மையையும், இதனால் இந்த நாட்டு மக்களுடைய மானம் –  சுயமரியாதை எவ்வாறு அழிக்கப்பட்டு வருகிறது என்பதையும், இந்த அர்த்தமற்ற பண்டிகையால்  நாட்டுக்கு எவ்வளவு பொருளாதாரக்கேடும் சுகாதாரக்கேடும் உண்டாகிறது என்பதைப்பற்றியும் சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாளிலிருந்தே விளக்கப்பட்டு வருகிறது. சுயமரியாதைக்காரர்கள் – திராவிடக் கழகத்தாரர்களுடைய இந்த விளக்கம், தவறானது என்றோ,...

65. திருவாரூர் மாநாடு!

65. திருவாரூர் மாநாடு!

திராவிடக் கழகத்தின் – சுயமரியாதை இயக்கத்தின் – பெயரியாரின் பெரும்படைக்கு, என்றைக்குமே முன் வரிசையில் நிற்கும் தஞ்சை மாவட்டத்தில், தஞ்சை மாவட்டகழக மாநாடு, திருவாரூரில் இந்த மாதம் 2ந் தேதி நடந்து முடிந்திருக்கிறது. இந்த மாநாடு, பெயரளவில் ஒரு மாவட்ட மாநாடு என்று கூறப்படவேண்டியதாய் இருக்கின்றது என்றாலும், இயக்க வரலாற்றில் சிறந்த இடத்தை – தனி இடத்தைப் பெற்றிருக்கும் மாநாடு என்பது முக்காலும் உண்மையாகும். ஆய்ந்தோய்ந்து பாராமல் பெற்ற அன்னையை வெட்டுவதே அருமைச் சேய்களின் கடன் என்கிற பெரு நீதியை யுணர்த்த வந்த நவீன. பரசுராமர்களால், உண்டு பண்ணப்பட்ட சலசலப்புக்குப் பின்னால் – ஏன், திராவிடக் கழகத்தைச் செல்லாக் காசாக்கி விடுவோம் என்ற அந்த நவீன வர்த்தகர்களின் நாணயத்தை நம்பி, அந்த நிலை எப்பொழுது? எப்பொழுது? என்று ஏங்கித் துடித்துக்கொண்டிருந்த ஆளவந்தோர்களின் அசையா நம்பிக்கைக்குப் பின்னால் –  நம்பிக்கைக்கு நற்சாட்சியாக, நாங்களிதோ புதுக்காசு தயாரித்து விட்டோம் என்று அவர்கள் அறிவித்தற்குப் பின்னால்,...

64. கம்யூனிஸ்ட்டுகளுக்குத் தடை!

64. கம்யூனிஸ்ட்டுகளுக்குத் தடை!

பொதுமக்களிடமிருந்து தங்களுக்கு எவ்வித அனுதாபமோ, ஆதரவோ கிடைக்காதென்பதைக் கண்ட கம்யூனிஸ்ட்டுகள், வேறு வழியின்றி, தற்போது குழப்பம் உண்டுபண்ணவும், அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளவும் முயற்சிக்கின்றனர் இது நமது சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சட்ட விரோதமானதென்று, ஏன்தடை விதித்தோம் என்பதை விளக்கி மாகாண சர்க்கார் கொடுத் திருக்கும் அறிக்கையில் காணப்படும் குற்றச்சாட்டு. இந்தக் காரணத்தைக் கூறி, சென்னை மாகாணத்திலுள்ள பல வகையான 19 தொழிலாளர் சங்ககளுக்கு, கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கத்தில் அவைகள் இருக்கின்றன வென்பதாக அவைகள் எல்லாவற்றையும் சர்க்கார் தடைப்படுத்தியிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்காக நாம்வக்காலத்து வாங்குவதோ, கம்யூனிஸ்ட் கட்சியினரின் மீது சர்க்கார் சாட்டியிருக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்து, அப்படிப்பட்ட தீச்செயல்களுக்குப் பரிந்து பேசவேண்டுமென்பதோ நம் கருத்தல்ல. தடைப்படுத்தப் பட்டிருக்கும் 19 வகையான தொழிற் சங்கங்களிலும், பங்கு கொண்டிருக்கும் தொழிலாளிகளைப் பிரித்தால் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். நேரடியாக சர்க்காருக்கு வருமானத்தைத் தரும் தொழில் நிலையங்களில் வேலை செய்து வரும் தொழிலாளிகள். தனிப்பட்ட முதலாளிகளின் லாபப் பெருக்கத்திற்காக...

63. சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்!

63. சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்!

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று முடிவு கட்டியதாம் ஒரு குள்ள நரி. இப்படி முடிவு கட்டிய நரியினுடைய கதையை வாசகர்கள் அறிவார்கள். தேமதுரமான திராட்சைக் கனிகள்! சிந்தியவற்றி லிருந்து தின்று பார்த்துத் தெரிந்து கொண்டிருந்த உண்மைதான் அது. ஆனால் இப்போது எட்டாத உயரத்தில் அல்லவா இருக்கிறது? எத்தனை முறைதான் மூர்ச்சையை அடக்கிக் கொண்டு எழும்பி எழும்பிக் குதிப்பது? கண் விழி பிதுங்க, கால்கள் தள்ளாட என்கிற நிலைமை எவ்வளவு நேரத்திற்குத்தான் நீடிக்க முடியும்? அது புத்திசாலியான நரி! எத்தனை பாடுபட்டாலும் தன் முயற்சியால் அது தனக்குக் கிடைக்கமாட்டாது என்பது திட்டவட்டமாகத் தெரிந்துவிட்டது! இருந்தாலும் உடம்பு ஒத்துழைக்காதபோது, எண்ணத்துக்குக் காரணமாய் நிற்கும் மனது ஆசைப்பட்டு என்னபயன்? ஆகவேதான், புத்திசாலியான அந்த நரி ஆசையை அகற்றக் கண்டு பிடித்ததாம் இந்த முடிவை. இதை திராட்சை என்று நினைத்தால்தானே இனிப்பும் ? அதனை நுகர முடியாத தவிப்பும். புளி….. படுபுளி….. என்று நினைத்தால்……. நினைக்க...

62. அரங்கேற்ற நாடகம் ஏன்?

62. அரங்கேற்ற நாடகம் ஏன்?

தென்னாடு வடநாட்டிற்கு அடிமைதானாம். நிரந்தர அடிமையாகவே இருந்துதீர வேண்டியது தானாம். வடநாட்டு ஆதிக்க வெறியர்களின் ஆதிக்கத்திற்குத் தென்னாட்டிலிருந்து அவர்களால் பிடித்து வைக்கப்பட்டவர்கள் இதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டு விட்டார்கள். சாஸ்வத அடிமை சாசனத்தில், அடிமைகளின் பிரதிநிதி எனக் கூறிக்கொண்டு வெளிப்படையாகக் கையொப்பமும் போட்டுவிட்டனர். பலநாட்களாய் அ.நி. சபையில்கடும் விவாதத்தில் இருந்து வந்ததுபோல் பேசப்பட்ட இந்தி மொழிப் பிரச்சனையானது, இந்தி என்கிற ஒரு மொழி மட்டும்தான் இந்தத் தேசத்தில் உள்ள எல்லோராலும் பேசப்பட வேண்டியமொழி (தேசீய மொழி) என்பதாக சட்டஅங்கீhரம் பெற்றுவிட்டது இந்த மாதம் 14ம் தேதி. பரிதாபத்துக்குரிய செய்தி! திராவிடனின் ஜீவனில் கை வைத்துவிட்ட முயற்சி! அ.நி.சபையில் இந்தி பிரச்சனை கடுமையான தகராறில் இருந்து கொண்டிருக்கிறது என்றுவந்த செய்தி யெல்லாம் உண்மையில் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட ? முன்னேற்பாட்டோடு கூடிய நாடகம்தானோ என்றுதான் எவரும் நினைக்கவேண்டியிருக்கிறது. ஏனென்றால் அ.நி.சபையில் விவாதத்திற்கு உரியதாய் இருந்த பிரச்சனை இந்தியும், இந்தியினும் பல மடங்கு சிறந்த...

61. வேறு யாருக்கு வேலை?

61. வேறு யாருக்கு வேலை?

பஞ்சம்! பஞ்சம்!! பஞ்சம்!!! உணவுக்குப் பஞ்சம், உடைக்குப் பஞ்சம், குடியிருக்க வீட்டுக்குப் பஞ்சம் என்று இந்துஸ்தானம் முழுவதிலும் ஏகக் குரலாயிருப்பதைத் தான் இந்த நாளில் கேட்க முடிகிறது. இந்தப் பஞ்சங்களைப் போக்க, எப்படி எப்படியோ மண்டைகளை உடைத்துக் கொண்டுதான் பார்க்கிறோம், ஆனால் ஒன்றும் பயனில்லை என்று தான் சேர்ந்து அழுகிறார்கள் இந்துஸ்தான் சர்க்காரும். பஞ்சங்களைப் போக்க – பற்றாக்குறையை ஒழிக்க உருப்படியான நடவடிக்கை ஏதாவது எடுக்கப்பட்டிருக்கிறதா என்றால், எல்லாம் வாய் வீராப்போடு முடிந்து விடுகிறது. நாட்டிலுள்ள பெரும்பான்மையோர், அறிவைப்பெருக்க ஆதரவு இல்லாதவர்களாய் – இருட்டறையில் உழன்று கொண்டு, பஞ்சங்களுக்கு பலியாகி, எண்ணற்ற நோய்களுக்கு ஆளாகி, வாழ்வையே ஒரு பெருஞ் சுமையாகக் கருதிக் கொண்டு, என்றைக்கு இந்த உலகத்தை விட்டு, எப்படி ஒழிந்துபோவோம் என்கிற சிந்தனையையே தியானமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தியானம் கலைந்து உலகத்தில் அவர்களை மீண்டும் நடமாடவைக்க – நல்வாழ்வு தழைக்க மார்க்கமில்லா மலில்லை. மார்க்கம் தெரிய வில்லை என்றோ, தெரியப்படுத்தவில்லை...

60. கடவுள்

60. கடவுள்

வினா :      கடவுளைப்பற்றிய பொதுவாக ஜனங்கள் கொண்டிருக்கும் கருத்துக்களை விளக்கிக் கூறு. விடை      :      கடவுள்வான மண்டலத்தையும், பூமியையும், அதிலுள்ள சகல சராசரங்களையும்படைத்தவன் என்று மக்களில் பெரும்பாலார் நம்புகிறார்கள். வினா :      அப்புறம்? விடை      :      கடவுள் சர்வஞானமுடையவனாம், யாவற்றையும் பார்க்கிறானாம். பிரபஞ்ச முழுதும் அவனது உடமையாம். சர்வவியாபியாம். வினா :      கடவுள் ஒழுக்கத்தைப்பற்றி மக்கள் என்ன சொல்லுகிறார்கள். விடை      :      அவன் நீதிமானாம்; புனிதனாம். வினா      :      வேறு என்ன? விடை      :      அவன் அன்பு மயமானவனாம். வினா      :      கடவுள் அன்பு மயமானவனென்று ஜனங்கள் எப்பொழுதும் நம்புகிறார்களா? விடை      :      இல்லை. மக்கள் அறிவும் ஒழுக்கமும் உயர உயர கடவுள் யோக்கியதையும் விருத்தியடைந்து கொண்டே போகிறது. வினா :      உன் கருத்தை நன்கு விளக்கிக்கூறு. விடை      :      காட்டாளன் கடவுள் ஒரு காட்டாளனாகவும், திருடனாகவும் இருந்தான். அராபித் தலைவன் கடவுளான ஜாப் ஒரு கீழ்...

59. ஆரியர் இயல்பு

59. ஆரியர் இயல்பு

ஜர்மானியர்கள் தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். நம் நாட்டுப் பார்ப்பனர்களும் தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறார்கள். இந்துமத ஆதாரங்களும் ஆரிய மதம், ஆரியக் கடவுள்கள், ஆரிய மன்னர்களின் கதைகள் என்பதாகத்தான் இருந்து வருகின்றன. புராண ஆராய்ச்சிக்காரர்களும், பண்டிதர்களும், சரித்திர ஆராய்ச்சிக்காரர்களும், பாரதம், ராமாயணம் மற்ற புராதனக் கதைகள் ஆகியவைகளில் வரும் சுரர், அசுரர் என்கின்ற பெயர்களையும், ராக்ஷதர்கள் தேவர்கள் என்கின்ற பெயர்களையும், ராமன் அனுமான் என்கின்ற பெயர்களையும், ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவையே பிரதானமாய்க் கொண்டவை என்பதாகவும் தீர்மானித்துப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். மேல் நாட்டுச் சரித்திரக்காரர்களும், சிறப்பாக அரசாங்கத்தார்களும் மேல்கண்ட ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவை ஒப்புக்கொண்டு அந்தப்படியே ஆதாரங்கள் ஏற்படுத்திப் பள்ளிப் பாடமாகவும் வைத்து வந்திருக்கிறார்கள். அரசியல்காரர்களில் தீவிரக் கொள்கை கொண்ட தேசீயவாதிகள், சமதர்மக்காரர்கள், பொதுவுடமைக்காரர்கள் என்று சொல்லப்படுகின்ற தோழர் ஜவகர்லால் நேரு போன்றவர்களும், தங்களது ஆராய்ச்சிகளில் ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவுகளை ஒப்புக்கொண்டும், சரித்திரங்களில் இருந்துவரும் ஆரியர்...

58. பகுத்தறிவும் கடவுள் வாக்கும்!

58. பகுத்தறிவும் கடவுள் வாக்கும்!

வினா :      வேதங்களுக்கு ஜனங்கள் அதிக மதிப்புக் கொடுக்கக் காரணம் என்ன? விடை      :      வேதங்கள் இல்லையானால் ஒழுக்கங் கெட்டுவிடும் என்ற பயமே அதற்குக் காரணம். வினா :      அத்தகைய பயத்துக்கு ஏதாவது ஆதாரமுண்டா? விடை      :      இல்லவே இல்லை. வேதங்களின் பெயரால் எவ்வளவோ பயங்கரக் குற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. மாறாக வேதங்களையே நம்பாத அநேகர் உத்தமர்களாக இருந்திருக்கிறார்கள். வினா :      எப்பொழுதாவது கடவுள் பிரத்தியட்சமாகி வேதத்தை அருளியதுண்டா? விடை      :      இல்லை சுமார் 5000 வருஷங்களுக்குமுன் கடவுள் வேதத்தை அருளியதாகவே நம்பப்படுகிறது. வினா :      அதற்குமுன் உலகத்தில் ஒழுக்கம் இருந்ததில்லையா? விடை      :      நிச்சயமாக ஒழுக்கம் இருந்தே வந்தது. அதற்குமுன் மக்களும், சமூகங்களும் தேசங்களும் இருந்தே வந்திருக்கின்றன. வினா :      உலகத்திலுள்ள ஒவ்வொரு தேசத்தாருக்கும் கடவுள் தனித்தனி வேதம் அருளியதாகவே பொதுவாக நம்பப் படுகிறது. விடை      :      இல்லை. யூதர்களுக்கு மட்டும் கடவுள் வேதம் அருளியதாகவே பொதுவாக நம்பப்படுகிறது. வினா :     ...

57அ. என் கை கீழே, உன் கை மேலே

57அ. என் கை கீழே, உன் கை மேலே

ஒருபார்ப்பன யாசகர் :- அய்யா பிரபுவே யேதாவது தர்மம் கொடுங்கள் உங்களுக்கு மகா புண்ணிய முண்டு. பிரபு : போம்வோய், போய் எங்காவது பாடுபடுமேன். மண்ணு வெட்டினாலும் தினம் 8-அணா சம்பாதிப்பீரே. கொட்டாப் புளியாட்டமாய் இருந்துகொண்டு வடக்கயிறாட்டமாக பூணூல் போட்டுக் கொண்டு பிச்சைக்குவர்றீரே வெட்கமில்லையா? யாசகக்காரன் : என்னமோ பிரபுவே தங்கள் கை மேலாகிவிட்டது, என் கை கீழாகிவிட்டது என்னவேண்டுமானாலும் தாங்கள் சொல்லக்கூடும். பிரபு : மேலென்ன, கீழென்ன இதற்காக நீர் ஏன் பொறாமைப்படுகிறீர். கடையில் 10-அணாபோட்டால் ஒரு நாட்டு (க்ஷவரக்) கத்தி கிடைக்கும் வாங்கிக்கொண்டுபோய் வாய்க்கால் கரையில் உட்காரும்; எத்தனை பேர் தலைக்கு மேல் உம்ம கை போகுதுபாரும் உமக்கென்னத்துக்கு உம்ம கைக்கு மேல் நம்ம கை போகிறதே என்கிற பொறாமை. யாசகக்காரன்  :  சரி நான் போய் வருகிறேன். பகவான் இப்படித் தங்களைச் சொல்லவைத் தான், நம்மளைக் கேட்கவைத்தான் தங்களை நொந்து என்ன பயன். பிரபு : அப்படியானால்...

57. பிழைத்துப் போகட்டும்!

57. பிழைத்துப் போகட்டும்!

அறிஞர்கள் என்று பெயர் கொடுக்கப்பட்டு, அது சிலகாலம் வழக்கத்திலும் வழங்கிவிடுமென்றால், பிறகு அந்த அறிஞர்கள் என்பவர்கள் அறிஞர்கள் என்கிற பட்டத்தையே கைமுதலாகக்கொண்டு, எவ்வளவு பிற்போக்கான நடவடிக்கைகளையும் துணிச்சலுடன் மேற்கொள்வதைப் பார்க்கிறோம். அந்த நேரத்திலும் அறிஞர்கள் என்கிற அந்தப் பட்டம் தங்களுக்கு நல்ல பாதுகாப்பாகவே இருந்துக் கொண்டிருக்கும் என்றும் நம்புகிறார்கள். இப்பேர்ப்பட்டவர்களின் இந்த நம்பிக்கை, இந்த நாட்டில் பெரும்பாலும் பொய்ப் பித்துவிடுவதுமில்லை. ஆந்திராப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தோழர் சி.ஆர்.ரெட்டி அவர்கள், இந்தப் பட்டியலில் இப்போது தம் பெயரையும் பதிவு செய்துகொண்டிருக்கிறார். தோழர் ரெட்டி அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகப் பொதுமன்றத்தில் சில விரிவுரைகள் ஆற்றுவார் என்கிற வரிசையில், பேசிவரும் பேச்சுக்களினாலேயே இந்தப் பதிவைப் பதிந்து கொண்டிருக்கிறார். மக்கள் மன்றத்தில் காங்கிரஸ் நாளுக்கு நாள் கரைந்து கொண்டு வருகிறது. மேலும் மேலும் சாயம் வெளுக்காமல் இருப்பதற்காகத் தலைமைப் பீடத்தில் இருப்பவர்கள் பயத்தினாலும், நயத்தினாலும் என்னென்ன காரியங்களையெல்லாம் செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படியும்...

  56. மனிதன்

  56. மனிதன்

வினா :      மனிதன் என்றால் என்ன? விடை      :      பகுத்தறிவுள்ள ஒரு பிராணி. வினா :      மனிதன் தோன்றி எவ்வளவு காலமாயிற்று? விடை      :      லட்சக்கணக்கான வருஷங்களாயிற்று. வினா :      அவனுடைய பூர்வீகர் யார்? விடை      :      முலையுண்ணும் பிராணிகள். வினா :      அது உனக்கு எப்படித் தெரியும்? விடை      :      மக்கள் உறுப்புகளின் அமைப்பு, கலப்பு, வேலை முறை முதலியவைகளைக் கவனித்தால் மனிதனும் ஒரு பிராணிக்கு ஒப்பாகவே இருக்கிறான். வினா :      மனிதனுக்கும் பிராணிகளுக்கும் பொதுவாக இருக்கும் சில அம்சங்களை விளக்கிச் சொல். விடை      :      மற்றப் பிராணிகளுக்கு இல்லாத தசை நாரோ, எலும்போ உறுப்புகளோ மனிதனுக்கு இல்லவே இல்லை. வினா :      இவ்வளவுதானா? விடை      :      மனித உடலும், மிருக உடலும் ஒரேமாதிரி பொருள்களாலேயே ஆக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு உடல்களிலும் ஒரே மாதிரியான அங்க அமைப்பே காணப்படுகின்றன. இரண்டு உடல்களும் ஒரே மாதிரியான ஜனன மரண விதிகளுக்கே கட்டுப்பட்டிருக்கின்றன. வினா...

55. சகுணம் சோதிடம்

55. சகுணம் சோதிடம்

மத சித்தாந்தங்களிலுள்ள நம்பிக்கையே மாந்தரின் பகுத்தறிவைச் சிதைத்து, அவர்களை ஜோதிட தீர்க்க தரிசிகள் என்று சொல்லப் படுகின்றவர்களின் மாயவலைகளில் எளிதில் அகப்படுமாறு செய்கின்றது. மறைவாக உள்ள இடத்தைக் காணவேண்டுமென்பதில் மனிதனுக்கு ஆவல் அதிகம்; அதனால் இனி வரப்போகும் எதிர்கால சம்பவங்களை முன்னமே உணர்ந்து, அவைகளால் தனக்கு, தற்காலத்திலிருந்து கஷ்ட நிஷ்டூரங்கள் ஒழிவதற்கு ஏதாவது வழியுண்டாவென்பதுபற்றி அளவு கடந்த ஆசையோடும் விசாரிக்கத் தொடங்குகின்றான். பூசாரிகளும், மத குருக்களும் எதிர்காலத்தைப்பற்றி முன்னமே அறிந்துகொண்டிருப்பதாக எப்பொழுதும் கூறிக்கொண்டிருக்கின்றனர். தேவதைகளுக்குப் பலியிடப்படும் பிராணிகளைத் தும்மல், துடித்தல் முதலிய நடவடிக்கைகளைக் கவனித்தல்; பறவைகள் பறந்து போகும் திசைகளைப் பார்த்தல்; அந்நாட்டினருக்கு ஏற்பட்ட யுத்தம் முதலிய சம்பவங்களை வேத பாராயணம் பண்ணுதல்; காண்டிராவின் கதை; முதலிய இவைகள் கிரேக்கர், உரோமர் என்பர்கள் எதிர்கால சம்பவங்களை அறிவதற்கு அடையாளங்களாக மேற் கொண்டார்களென்பது நன்கு விளங்குகின்றன. இன்னும் மந்திரவாதிகளென்ன, மையிட்டுக் குறி பார்க்கின்றவர்க ளென்ன, ஜோதிட ரேகை சாஸ்திரக்காரர்களென்ன; தீர்க்கதரிசிகளெனப் படுவோரென்ன –...

53. மொழிவாரிப் பிரிவினை

53. மொழிவாரிப் பிரிவினை

கன்னடமும், களிதெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும் உன்னுதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும், தமிழ்ப் பெண்ணே! நீ பாட்டியாகிவிடவில்லை. உலகில் உன்னைப் போன்ற மற்ற பெண்கள் எல்லாம் கூனிக்குறுகி சிலர் பாட்டியாகி ? மலர்ச்சியின்றி ? நடைப் பிணமாகிவிட்டனர். சிலர் செத்த இடத்திலே புல்லும் முளைத்துவிட்டது. ஆனால் அன்றிருந்த நிலைக்கு (முற்றும்) அழிவின்றி நீயோகன்னிப் பெண்ணாக விளங்குகிறாய். உன்னை வாயார மனமார வாழ்த்துகிறேன், போற்றுகிறேன். ஏன்? நான் வாழ, என் மொழியினர் வாழ என்றார் பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே, மனோன்மணியம் என்ற நாடகத்தை எழுதிய பேராசிரியர் சுந்தரம்பிள்ளை. ஆசிரியர் சுந்தரம்பிள்ளை ஒரு சுயமரியாதைக்காரரோ, சுயமரியாதை இயக்கத்தின் ஒரு பிரிவான திராவிடக்கழகத்தை சேர்ந்தவரோ அல்ல. மாறாக, சுயமரியாதை இயக்கத்துக்கு நேர் விரோதமான சைவமதத்தில், பழுத்த ஒரு சைவப்பழமாக, பல ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர். அவர் கூறுகிறார் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுவம் போன்ற பல மொழிகள் தமிழில் இருந்து பிறந்தன என்றும், அத்தனை மொழிகளும்...

54. பகுத்தறிவும் கடவுள் வாக்கும்!

54. பகுத்தறிவும் கடவுள் வாக்கும்!

வினா :      மதம் என்றால் என்ன? விடை      :      உண்மையில் நம்பிக்கை. வினா :      உண்மை என்றால் என்ன? விடை      :      ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப்பற்றி பரிபூரண ஞானமே உண்மை. வினா :      உண்மையில் நம்பிக்கை என்றால் என்ன? விடை      :      அப்பேர்ப்பட்ட பூரணஞானம் வாழ்க்கையின் உயரிய லட்சியத்தைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானது என்ற நம்பிக்கையே உண்மையில் நம்பிக்கை எனப்படும். வினா :      உண்மையில் உள்ள நம்பிக்கையை எப்படி நிரூபித்துக் காட்டுவது? விடை      :      தன் உயர்வான ? தெளிந்த ? அறிவுக்குப் பொருத்தமாக நடப்பதினால் நிரூபித்துக்காட்டலாம். வினா :      உண்மை அல்லது பரிபூரண ஞானத்தை எப்படி அடைவது? விடை      :      அனுபவத்தினாலும் பயிற்சியினாலும் அடையலாம். வினா :      வேறு வழியில்லையா? விடை      :      இல்லை. வினா :      மதத்தைப்பற்றி நீ கூறிய வியாக்கியானம் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட வியாக்கியானம்தானா? விடை      :      தெய்வ நம்பிக்கையும் தெய்வ அருளைப் பெற்ற மதாசிரியர்கள்...

52. பாதுகாப்புச் சட்டம்!

52. பாதுகாப்புச் சட்டம்!

சென்ற வாரக்கடைசியில் சென்னைக் கவர்னர் பெயரால் வெளியிடப்பட்டிருக்கும் சென்னைப் பொதுஜன பாதுகாப்புச் சட்டம் 1949-ம் வருஷம் என்கிற முத்திரையைத் தாங்கிக் கொண்டு, மிக மிகப் பலமாகப் பழுதுபார்க்கப்பட்டு ? கெட்டியாக்கப்பட்டிருக்கிறது. அதாவது மனிதர்கள் மிருகங்களை எப்படி அடைத்து வைத்துத், தங்கள் சௌகரியத்துக்குத் தகுந்தபடி எப்படி அதைப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்களோ, அதே தத்துவத்தை அனுசரித்து, தங்களுக்கு வேண்டாத மனிதர்களை யெல்லாம் (பேசி எழுதிவாதிட்டு விடமுடியாத) மிருகங்களாகப் பாவித்து, இன்றைய அரசாங்கம் தன் சௌகரியத்துக்குத் தகுந்தபடி பயன்படுத்திக் கொள்ளும் என்பதான சட்டம் பூரண உருவமாக்கப் பட்டிருக்கிறது. அன்னிய வெள்ளையர்கள் ஆண்டுகொண்டிருந்த அந்தக் காலத்தில் – நாஸீஸ, பாஸீஸ வெறியர்களின் ஆதிக்கப்போட்டி உலகை அலைக் கழித்த நேரத்தில் வெள்ளையனே வெளியேறு என்கிற வெத்து வேட்டை முழக்கி, இந்த நாட்டுப் பொதுமக்களின் நலத்திற்காகவே நூற்றுக்கு நூறு பயன் பட்டுக் கொண்டிருக்கும் தண்டவாளங்களைப் பெயர்த்தல், தந்திக்கம்பிகளை அறுத்தல், தபால் நிலையங்கள் – கோர்ட்டு வகையராக்களைக் கொளுத்துதல் போன்ற நாசவேலைகளில்...

51. கடவுள் சக்தி!

51. கடவுள் சக்தி!

நமது கடவுள்கள் சக்தி மிகவும் அதிசயமானதாகும். அதாவது நமது கடவுள்கள் உலகில் மக்களை அக்கிரமங்கள் செய்யவொட்டாமல் தடுக்கமுடியாதாம். ஆனால், மக்கள் சந்து பொந்துகளிலும், மூலை முடுக்குகளிலும் யாருக்கும் தெரியாமல் செய்த குற்றங்களையும் மனதினால் நினைத்த அக்கிரமங் களையும் பார்த்தும் ஒன்றுகூட விடாமல் பதியவைத்தும், அதற்குத் தகுந்தபடி தீர்ப்புக் கூறி, தண்டனை  கொடுக்கவும், அதற்காக நரகத்தில் ஆழ்த்திவைக்கவும், மற்றும் பல ஜன்மங்கள் கொடுத்து, அவைகளில் கஷ்டப் படுத்திவைக்கவும் முடியுமாம். நமது கடவுள்கள் சக்தி எவ்வளவு அதிசயமானது! அதிலும் மகமதியர்களுடைய கடவுளும், கிறிஸ்துவர்களுடைய கடவுளும் மனிதன் செத்தபிறகு, எல்லார் குற்றம் குறைகளையும் ஒன்றாய்ப் பதியவைத்திருந்து, ஏதோ அதற்கு இஷ்டப்பட்ட நாளில் அதாவது ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லா மக்களையும் அவர்கள் புதைக்கப்பட்ட புதைகுளியிலிருந்து எழுப்பிக் கணக்குப் பார்த்து ஒரே அடியாய் தீர்ப்புச் சொல்லி விடுமாம். இந்துக்களுடைய கடவுள்கள் அதாவது, சைவர்கள் கடவுள்களுக்கும், வைணவர்களுடைய கடவுள்களுக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியாகவே அவ்வப்போது அவனைச் சுட்டு எரித்தபின்...

50. கட்டாயக் கல்வியும் – ஆச்சாரியாரும்

50. கட்டாயக் கல்வியும் – ஆச்சாரியாரும்

மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றுவிடக்கூடாது என்பதில் ஆரிய முன்னோர்களைப் போல, உலகிலே வேறுஎவருமே நடந்து கொண்டதாகத் தெரியவில்லை. பார்ப்பனீயம் வகுத்த சமுதாய அமைப்பில் ? நாற்சாதி முறையில், என்றைக்கும் மேற்சாதியாகவே இருந்து வரும் என்று சொல்லப்படுகிற ஒரு சிறு கூட்டத்தினரின் நன்மையையும் ? வாழ்வையும் ஒட்டியே வருணாச்சிரமம் வகுக்கப்பட்டது. நாம் சொல்ல வேண்டியதில்லை என்ன காரணத்திற்காக வருணாசிரமம் என்பதை அந்த ஆரிய முன்னோர்களே விளக்கிச் சென்றிருக்கிறார்கள். இந்த வருணாச்சிரம அமைப்பைக் காப்பாற்றினால்தான், மேற்சாதியினரான சிறு கும்பலுக்கு, சுகபோக வாழ்வு நிரந்தரமாக இருந்துவரும் என்பதை அறிந்த அவர்கள், வருணாச் சிரமத்தை விட்டு விலகிவிடத் தூண்டும் கல்வியறிவை, முக்கியமாகத் தாழ்ந்த சாதியினர் பெற்றுவிடக்கூடாது என்கிற போக்கை, மிரட்டியும், பயப்படுத்தியும், கொடுமைப்படுத்தியும் கைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதையும் நாம் சொல்லவேண்டியதில்லை. அவர்களுடைய மனுதர்மங்களே அதற்குச் சாட்சி. இந்த நெடுங்கால அமைப்பு முறைக்கு ஒரு அளவு ஆட்டங் கொடுக்கவைத்தது வெள்ளையரின் நுழைவு அதாவது வருணாச்சிரம வழியைவிட்டு, அவனவன்...

49. பிரார்த்தனைப் பித்தலாட்டம்!

49. பிரார்த்தனைப் பித்தலாட்டம்!

பிரார்த்தனை என்பது இன்று உலகில் மக்கள் சமூகம் எல்லோரிடத்திலும் அதாவது கடவுளால் மக்கள் நம்பும் எல்லோரிடத்திலும் இருந்து வருகிறது. இது எல்லா நாட்டிலும் எல்லா மதக்காரர் களிடத்திலும் இருந்து வருகிறது. பிரார்த்தனை என்பதற்கு ஜபம், தபம், வணக்கம், பூசனை, தொழுகை முதலிய காரியங்களும் பெயர்களும் சொல்லுவதுண்டு. இவையெல்லாம் கடவுளை வணங்கி தங்களுக்கு நன்மை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவதேயாகும். தனக்கு வேண்டியவற்றை எல்லாம் அதாவது இம்மையில் இவ்வுலகில் யுக்தி, செல்வம், சுகம், இன்பம், ஆயுள், கீர்த்தி முதலியவைகளும், மறுமையில் மேல்லோகத்தில் பாவமன்னிப்பு, மோட்சம், நல்ல ஜென்மம் முதலியவைகளும் கிடைக்க வேண்டும் என்கிற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. இந்த பிரார்த்தனையின் அஸ்திவாரம், உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும், அவர்சர்வவல்லமையும் சர்வவியாபகமும், சர்வமும் அறியும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட அக்கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியத்திலும் சித்தி பெறலாம் என்பது மானவைகள்தான்...

48அ. என் பெயரால்

48அ. என் பெயரால்

என்பேரால் விடுதலையில் 28-07-149ம் தேதி பிரசுரிக்கப் பட்டிருந்த வருத்தமும், விஞ்ஞாபனமும் என்னும் சேதிக்கு ஆதாரமான பொய்க்கடிதத்தை அனுப்பிக் கொடுக்கும்படி சென்னைக்கு டிரங்க் டெலிபோன் பேசி வரவழைத்துப் பார்த்தேன்.  அது திராவிடர் கழகத் தலைமைக் காரியாலய (லெட்டர் பேப்பர் – ஸிளமிமிள³ ணைழிஸ்ரீள³) காகிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அடியில் ஈ.வெ.ராமசாமி, தலைவர், திராவிடர் கழகம் என்று கையொப்பமிடப்படிருக்கிறது. அக்கடிதத்தின் மேல் கவரில் (போஸ்ட் கவரில்) கோயமுத்தூர் ஜில்லாவில், அவிநாசிக்குப் பக்கமான கரவலூர் – லுழி³ழிஸழியிலி³ள (தமிழில் கருவலூர் உச்சரிப்பு) என்ற ஒரு பிராஞ்ச போஸ்டாபீசில் போஸ்ட் செய்த தபால் சீல் போடப்பட்டிருக்கிறது என்று தெரிய முடிகிறது. தமிழில் கருவலூர் என்று சொல்லுவார்கள். அக்கடிதத்தின் மேல் கவரின் பின்புறம் அவினாசி போஸ்டாபீஸ் முத்திரையுள்ள சீலும் (முத்திரை இடப்பட்டு) இருக்கிறது. கடிதத்தில் தேதி 28-07-1949 என்று போடப்பட்டிருக்கிறது. இதில் 8-மாத்திரம் சிறிது விளம்பி எழுதப்பட்டதாக இருக்கிறது. கோயமுத்தூர் சீலில் 27-ந் தேதி முத்திரையும், அவினாசிசீலில் 27ந்தேதி முத்திரையும்,...

48. வாழ்க தியாகராயர்!

48. வாழ்க தியாகராயர்!

செய் நன்றி மறவாத  தமிழன், ஏன் திராவிடன் எவனுமே மறக்கக் கூடாத ஒரு பெயர் தியாகராயர். சமுதாயத்தில் சண்டாளர்களாய் – தீண்டப்படாதவர்களாய் ஆக்கப்பட்டு; இந்நாட்டிற்கு உரிய சொந்த மக்களாக இருந்தும் ஏதும் உரிமை அற்றவர்களாகி; கல்வித் துறையில் கடைசித் தரத்தில் நின்று, கல்விக்கும் நமக்கும் காத தூரம் என்று நம்ப வைக்கப்பட்டு; உத்தியோகம் என்றால் அது உயர் குலத்தோரின் தனியுரிமை, நாம் ஒதுங்கி வாழ்வதே நமக்கு ஏற்றது என்று வைக்கொண்டு நடந்த மக்கள், இன்று ஓரளவுக்காவது எல்லாத் துறைகளிலும் முன்னேறியிருக்கிறார்கள் என்றால், இந்த முன்னேற்றத்திற்கும் வித்து ஊன்றிய ஒருவர் வள்ளல் தியாகராயர்தான். இன்றைக்கு நாம் அல்லாதவர் என்கிற பெயரை வெறுக்கிறோம். இந்த நாட்டைப் பரம்பரை பரம்பரையாக ஆண்ட நாங்கள் – இந்த நாட்டின் பூர்வகுடிகளாகிய நாங்கள், ஏன் அல்லாதவர் என்கிற பட்டயத்தைப் பெறவேண்டும் என்று ஆத்திரத்தோடு கேட்கிறோம். எந்தக் காரணத்தினாலும் அல்லாதவர் என்கிற குறிப்பு எங்களுக்குப் பொருந்தாது என்பதை நிரூபித்துவிட்டோம். ஆனால்...

47. தைரியமான மசோதா!

47. தைரியமான மசோதா!

சென்னை மந்திரிசபையினர்,  நவம்பர் மாதத்தில் கொண்டுவரப் போகிறோம் என்று சொல்லி, இப்போது பொதுமக்கள் கருத்தறிய வெளியிட்டிருக்கும் சென்னை விவசாயிகள் மசோதாவையே தைரியமானது என்று கூறுகிறோம். இப்படி ஒரு மசோதா கொண்டு வந்து சட்ட மாக்கினால்தான், உண்மையில் உணவு நெருக்கடியை ஒழித்துக்கட்ட முடியும் என்கிற முடிவுக்கு வந்ததானது, மந்திரிசபையினரின் தைரியத்தை மட்டுமல்ல, இப்போதைய நிலையில் பிரச்சினைக்கு எது பரிகாரம் என்பதையும் ஓரளவு காட்டுகிறது. முதலில் மசோதாவின் அடிப்படையை ? சாராம்சத்தைக் குறிப்பிடுவோம். 1. (சென்னை மாகாணத்தில்) பயிரிடப்படாமல் தரிசு நிலங்களாகப் போட்டுவிடுவதை அனுமதிக்க முடியாது.  2. உணவுப் பொருள் விளைவிக்க வேண்டிய நிலத்தில், வியபார லாப நோக்கத்தோடு வேறு பயிர்கள் பயிரிடுவதை அனுமதிக்க முடியாது.  நிலங்களில் இத்தகைய விதைகளையே, இன்ன வகையான பயிரையே சாகுபடி செய்யவேண்டுமென்பதைச் சர்க்கார் வரையறுக்கும். 3. ஒரு நிலத்தின் சாகுபடியில் போதிய திறமை காட்டப்படவில்லை என்றால், திறமை இல்லாதவர் கையை விட்டு நிலத்தின் நிர்வாகத்தை மாற்றவும் – நிலத்தையே...

46. வாழ்க்கைக்கு மதம் வேண்டுமா?

46. வாழ்க்கைக்கு மதம் வேண்டுமா?

மக்கள் வாழ்க்கை நாகரீகமாய் நடத்தப்பட மதம் வேண்டுமென்பது மதக்காரர்களுடைய வாதமாகும். இப்படிப்பட்ட வாதமும் தங்கள் தங்கள் மதம்தான் மனித சமூக நாகரீக வாழ்க்கைக்கு ஏற்றது என்பது ஒவ்வொரு மதக்காரர்களின் பிடிவாதமுமாகும். மதமில்லாமல் உலகில் எவ்வளவோ ஜீவகோடிகளும், பல மக்களும் வாழ்க்கை நடத்தவில்லையா? என்று கேட்போமேயானால், அதற்குப்பதில் சாதாரண அசேதன வாழ்க்கை வாழலாமே ஒழிய நாகரீமான வாழ்க்கை நடத்த முடியாது என்றும், அதற்காகத்தான் மதமில்லாவிட்டால் மக்கள் நாகரீக வாழ்க்கை நடத்தமுடியா தென்று சொல்லப்படுவதாகவும் சொல்லுவார்கள். அதற்காக வேண்டியே மதவாதிகள் மதத்தைப்பற்றி பிரச்சாரங்களும், விளம்பரங்களும் செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட விளம்பரங்களும், பிரச்சாரங்களும் புராணங்களாலும், படங்களாலும், கதைகளாலும், நடிப்புகளாலும், கோவில்களாலும் மற்றும் பல சாதனங்களாலும் செய்து வருகிறார்கள். இவ்வளவோடு நிற்காமல், கடவுளற்ற, மதமற்ற உலகத்தில் மக்கள் பல கொடுமைகளையும், தீமைகளையும், ஹிம்சைகளையும் அடைவது போலவும், அசுர ஆட்கியே நடைபெறுவதாகவும் கட்டுகள் கட்டி மக்களைப் பயமுறுத்துகிறார்கள். மேலும், கொள்ளை நோய்களும் துஷ்ட தேவதைகளின் கோபத்தின் பலன் என்றும்,...

45. காங்கிரசைக் கலைத்துவிடுவதே நலம்

45. காங்கிரசைக் கலைத்துவிடுவதே நலம்

காங்கிரசின் மீது துவேஷமுடையவர்கள் என்று, தவறாக நம்மீது குற்றஞ்சுமத்தப்படும் நிலைக்கு ஆளாகியிருக்கும் நாம் கூறுவதல்ல இது. காங்கரசினால் அசல் ராமராஜ்ஜியத்திற்கு, அதாவது பச்சவர்ணாச்சிரமத்துக்கு இடம் கிடைத்தும் அது பூர்ணமாக இல்லாது போய் விட்டதே என்று வேதனைப்படும், விஷப்பாம்புகளின் அய்க்கியமான இந்துமகாசபையினர் கூறுவதுமல்ல. நாடு முழுவதும் நம்மை வெறுத்தொதுக்கினால், நாளை நமக்குப்பின் நம் ஆட்களாயிருந்து நாட்டை ஆளவேண்டுமே என்று திட்டம் போட்டு, அதற்காக இன்றைய ஆளவந்தார்களால் தயாரிக்கப்பட்ட சோஷியலிஸ்டுகள் கூறுவதல்ல இது. கொள்ளைக்காரர்களாகவும் கொலைகாரர்களாகவும் காங்கிரஸ்க hரர்களால் பேசப்பட்டு வரும் இந்தியக் கம்யூனிஸ்டுகளால் கூறப்பட்டதுமல்ல. இந்து ஸ்தானத்தின் பிரதம மந்திரி தோழர் ஜவஹர்லால் அவர்கள் லக்னோ காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் இந்த மாதம் 18ம் தேதி திருவாய் மலர்ந்தருளியது இது! பண்டிதரவர்கள் எவ்வளவுதான் மூடிவைக்க வேண்டமென்று, எத்தனையோ ஜால வித்தைகளெல்லாம் செய்து பார்த்தபிறகுதான் இந்த முடிவுக்கு வருத்தத்தோடு வந்திருக்கிறார். எங்குபார்த்தாலும் லஞ்சக் காட்சிகள்! எங்கு திரும்பினாலும் லஞ்சப் புகார்கள்! இவற்றைக் கண்டு கூட...

44. பெரியார் – மணியம்மை திருமணம்

44. பெரியார் – மணியம்மை திருமணம்

பெரியார் – மணியம்மை திருமணம் 09-07-1949 பிற்பகல் 3.30க்கு சென்னையில் ஜில்லா திருமண ரிஜிஸ்டரார் முன் சட்டப்படி முறைப்படி நிறைவேறி விட்டது. பெரியார் வயது 70. மணியம்மை வயது 31. பெரியார் பிறந்தது பிரமாதி ஆண்டு புரட்டாசித் திங்கள் 2-ம் தேதி. மணியம்மை பிறந்தது சித்தார்த்தி ஆண்டு மாசி திங்கள் 27ம் தேதி.  மணியம்மை இயக்கத் தொண்டுக்கு ஆகவும் பெரியார் பாதுகாப்புக்கு ஆகவும் என்று கருதி தனது வீட்டாரிடம் அனுமதிபெற்று வீட்டாராலேயே அனுப்பப்பட்டு, பெரியாரிடம் வந்து சேர்ந்து இன்றைக்கு 6-ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டன. மணியம்மை பக்குவமடைந்து இன்றைக்கு 17-ஆண்டுகள் ஆகின்றன. மணியம்மையின் தந்தையார் காலமாகி இன்றைக்கு 6 ஆண்டுகள் ஆகின்றன. மணியம்மையாரின் தந்தையார் இருக்கும்போதே மணியம்மை பக்குவம் அடைந்து, 10-ஆண்டுகளுக்கு மேலாகவே தந்தையார் வீட்டில் திருமணபேச்சே பேசபடாமல் இயக்க உணர்ச்சி பேச்சே பேசப்பட்டு தந்தையார். தன் மகளை இயக்கத்தொண்டே செய்துகொண்டிருக்க ஆசைப்பட்டு விட்டு இருந்தவர். மணியம்மை திருமணத்தைப்பற்றி யாராவது தந்தையாரைக் கேட்டால்,...

43. பழிவாங்கும் உணர்ச்சி!

43. பழிவாங்கும் உணர்ச்சி!

குடி அரசுக்கு ஜாமீனாக ஏன் 3000 ரூபாய் கட்ட வேண்டுமென்பதற்குக் காரணங்களை(!) சர்க்கார் நமக்குத் தெரிவித்து விட்டார்கள். 07-08-1949-ல் செய்தியும் ? சிந்தனையும் என்ற தலைப்பில் காந்தியார் காலட்சேபம் பற்றி வந்த செய்தியையொட்டி எழுதிய ஒரு கிண்டல் குறிப்பு குற்றமாம். அதே தேதியில் அதே தலைப்பில் சாந்தூர் சமஸ்தான நிர்வாகம் பற்றி வந்த செய்தியை ஒட்டிய ஒரு கிண்டல் குறிப்பு மற்றொரு குற்றமாம். மேற்படி தேதியில் கற்பனை என்ற வரிசையில், அக்கரகாரம் என்ற தலைப்பில், புதுமைப் பித்தனின் பொன்னகரம் என்ற கதையின் தழுவலாக அடிக்குறிப்புப்போட்டு எழுதப்பட்டிருக்கும் ஒரு கட்டுக்கதை இன்னொரு குற்றமாம். 28-08-1949-ல் ஆச்சாரியார் தவிப்பு அம்மையார் மறுப்பு என்கிற தலைப்பில் எழுதியிருக்கும் ஒரு துணுக்குச் செய்தியும் அதன்கீழ் இதன்ரகசியம் என்ன? என்கிற தலைப்புப் போட்டு எழுதப்பட்டிருக்கும் துணுக்குச் செய்தியும் ஒரு குற்றமாம். 04-09-1948-ல் பச்சிளங் கருவைச் சிதைக்கும் பாதகமான ஆட்சி என்கிற தலைப்பில், கர்ப்பிணியை கார் ஏற்றி நடுக்காட்டில் கொண்டுவிட்ட...

42. என்ன சமாதானம்?

42. என்ன சமாதானம்?

கடவுள் என்ற வார்த்தை ஒரு குறிப்பற்றதாய் இருந்துவருகிறது.  கடவுள் என்ற வார்த்தை தோன்றி எவ்வளவு காலம் இருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. அப்படியிருந்தும் கடவுள் என்றால் என்ன? என்று இன்று எப்படிப்பட்ட ஆஸ்திகராலும் சொல்ல முடிவதில்லை. ஆகவே ஒவ்வொரு ஆஸ்திகனும், தனக்குப் புரியாத ஒன்றையே ? தன்னால் தெரிந்து கொள்ள முடியாததும், பிறருக்கு விளக்க முடியாததுமான ஒன்றையே, குரங்குப் பிடியாய்ப் பிடித்துக்கொண்டு கடவுள் என்று கட்டி அழுகிறான். கடவுளுக்கு லக்ஷணமோ, இலக்கியமோ, குறிப்போ ஏதாவதொன்று விளக்கமாய்ச் சொல்லக் கூடியநிலைமை ஏற்பட்டிருந்தால், இவ்வளவு காலத்துக் குள்ளாகக் கடவுள் சங்கதியில் இரண்டி லொன்று, அதாவது உண்டு, இல்லை என்கின்ற ஏதாவது ஒரு முடிவுக்கு உலக மக்கள் வந்திருப் பார்கள். கம்பர்கூட சீதையின் இடையை வர்ணிக்கும்போது, சீதையின் இடையானது கடவுள்போல் இருந்தது என்று வர்ணிக்கிறார். அதாவது கடவுள் எப்படி உண்டோ, இல்லையோ என்பதாகச் சந்தேகப்படக் கூடியதாய் இருக்கின்றதோ, அதுபோல் சீதையின் இடையானது கண்டுபிடிக்கமுடியாத அவ்வளவு...

41. ஈ.வெ.ரா. அறிக்கை!

41. ஈ.வெ.ரா. அறிக்கை!

தோழர்களே! கட்டாய இந்தி எதிர்ப்பு நடவடிக்கையில் நான் தீவிரமாய் ஈடுபடப்போவதால் ஏற்படக்கூடிய விளைவு, உடுமலைப் பேட்டையில் நான் 144 தடையுத்தரவை மீறியதற்காக என்று சர்க்கார் நடத்தப் போவதாகத் தெரியவரும் காரியத்தின் விளைவு, சென்னையில் 2 மாதத்துக்கு முன் நான் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சின் பேரில் சர்க்கார் ஏதோ நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாய்த் தெரிய வருவதால் அதனால் ஏற்படும் விளைவு, ஆகிய மூன்று விளைவுகளுக்கும் நான் ஆளாகத் தயாராய் இருக்க வேண்டியவனாக இக்கிறேன். ஆதலால், அதற்குள் நான் இதற்கு முந்திய அறிக்கையில் தெரிவித்தபடி இயக்க நடப்புக்கு, இயக்கப் பொருள்களுக்கு நான் ஒரு ஏற்பாடு செய்ய வேண்டியவனாக இருக்கிறேன். என்மீது ஏற்படும் வழக்குகளுக்கு எதிர்வாதம் செய்வதில் நான் நம்பிக்கை இல்லாதவனாக இருப்பதால், சர்க்கார் கேஸ்தொடர்ந்தால் நான் தண்டனை அடைய வேண்டியது என்பது தவிர, வேறு முடிவு எதிர்பார்ப்பதற்கு இல்லை. மற்றும் எனக்கு என்னைத் தலைவனென்று சொல்லிக்கொண்டும், என்னைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டும்...

40. ஜாமீன் ரூ. 3000!

40. ஜாமீன் ரூ. 3000!

விடுதலை, திராவிட நாடு ஆகியவற்றிற்கு ஜாமீன் கேட்ட நம் சுயராஜ்ஜிய சர்க்காரின் கிருபா கடாட்சம் இப்போது நம்மீது பாய்ந்திருக்கிறது. இந்த கிருபைக்கு நாம் 3000 ரூபாய் பரிசாகக் கொடுக்க வேண்டுமாம். ஆம்! குடி அரசுக்கு ஜாமீன் ரூ.3000ம் என்கிறது பத்திரிகைச் செய்தி. இந்த ஜாமீன் நடவடிக்கையை யொட்டிய உத்திரவு எதுவும் இன்னும் நம் கைக்குக்கிடைக்க வில்லை. எதற்காக – என்ன காரணத்தைச் சாக்காகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது, அந்த உத்திரவைப்பெற்ற பிறகுதான் நாம் ஆதாரபூர்வமாக தெரிந்து கொள்ளமுடியும். குடிஅரசு ஆரம்பித்து சுமார் இந்த 25-வருஷங்களுக்குள் எத்தனையோ முறை, என்னென்ன மோ காரணங்களுக்காக என்று, இந்த ஜாமீன் கிஸ்திகளும் வழக்கு நடவடிக்கை தர்பார்களும் நடந்திருக்கின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால் குடிஅரசின் ஆயுட் காலத்தில், 2-வருஷத்துக்கொரு நடவடிக்கை என்கின்ற வீதாச்சாரத்திலேயே நடந்து வந்திருக்கின்றன என்று கூறலாம். ஆனால் அத்தனையும் வெள்ளைக்கார அந்நியனான ஆங்கிலேயனுடைய ஆட்சியில். அதாவது இந்தியநாட்டில் இந்திய மக்களுக்குப் பேச்சு சுதந்திரமில்லை,...

39. இறக்குமதி மோகம் என்று தீருமோ?

39. இறக்குமதி மோகம் என்று தீருமோ?

வடக்கே காவடி எடுப்பது என்பதும், வடக்கேயிருந்து தலைவர்கள் (வடக்கே இருந்து வந்தாலே தலைவர்கள் தானே) வருவது என்பதும், இங்கே அவர்கள் சமாதானம் செய்வது, பேரம் பேசுவது, விசாரணை செய்வது என்பதும் நமது திராவிடக் காங்கிரஸ் தோழர்களுக்கு ஏனோ வெட்கமாகத் தெரிவதில்லை. ஒரு வேலை பழக்கத்தின் முதிர்ச்சியோ என்னவோ, அந்த வெட்க உணர்ச்சி மரத்துப்போய் விட்டது போலும். எப்படி என்றால் நரகல் எடுப்பவனுக்கு நரகலின் நாற்றம் எப்படித் தெரியாதோ அதுபோல. வடக்கே இருந்து முன்பு காந்தியார் வந்தார். தோழர் காமராஜரைக் கிளிக் என்று அப்போது வருணித்தார். தமிழ் நாட்டு ராஷ்டிரபதி என்று பட்டம் கட்டிவிடப்பட்ட பேர்வழியின் நிலைமையே, தவித்துத் தாளம் போட வேண்டிய நிலையாய் இருக்கும்போது, மற்ற அப்பாவிகள் என்ன செய்ய முடியும்? வடக்கே இருந்துவரும் இந்த இறக்குமதிகள் எல்லாம், பெரும்பாலும் பார்ப்பனருடைய கண்காணிப்பில், தயவில், விளம்பரத்தில் இங்கு வந்து போவது என்பது வழக்கமாகி விட்டது. இந்த இறக்குமதிகள் மட்டுமல்ல, நம் நாட்டுப்...

38. பார்வதி – பரமசிவன் அழுகை

38. பார்வதி – பரமசிவன் அழுகை

பார்வதி     :      எனது பிராணநாதனாகிய ஒ சிவபெருமானே! ஆகாயத்தில் பறக்கின்ற கெருடன்   என்கிற பட்சியைப்பார்த்து பலர் காலையிலும் மாலையிலும் கன்னங்கன்னமாயப் போட்டுக் கொள்ளுகிறார்களே அது எதற்காக நாதா? பரமசிவன்  :      கண்மணி! இது உனக்குத் தெரியாதா? கருடன் நமது அடிமையாகிய மகா விஷ்ணுவுக்கு  வாகனமல்லவா? அதனால் விஷ்ணு பக்தர்களில் சிலர் கருடனைக்கண்டால் கன்னத்திலடித்துக கொள்ளுகிறார்கள். பார்வதி     :      ஒஹோ! அப்படியா சங்கதி! சரி, அப்படியானால் நமது அடிமை வாகனத்திற்கு இவ்வளவு மதிப்பு இருக்கும்போது, நம்முடைய வாகனமாகிய காளைமாட்டைக் கண்டால் ஏன் யாரும் கன்னத்திலடித்துக் கொள்வதில்லை? அன்றியும் வண்டியில் கட்டி ஓட்டுகிறார்கள்; ஒடை அடிக்கிறார்கள், செக்கில் கட்டி ஆட்டுகிறார்கள்,       அடித்துக்கூடத் தின்று விடுகிறார்களே அது ஏன்? பரமசிவன்  :      நம்முடைய பக்தர்களுக்கு அவ்வளவு பக்தி இல்லை. நன்றாகச் சாம்பலைப் பூசிக் கொள்ளத்தான் தெரியும். நமது வாகனத்தினிடத்தில் பக்தி காட்டத் தெரியாது. பார்வதி     :      அதுதான் போகட்டும், நமது குமாரனாகிய கணபதியின் வாகனமாகிய...

37. விடுதலைக்கு ஜாமீன்!

37. விடுதலைக்கு ஜாமீன்!

திராவிடர் கடமை என்ன? நம் விடுதலைக்கு மீண்டும் 10,000 ரூபாய் ஜாமீன். சென்ற வருஷங்கட்டிய ரூபாய் இரண்டாயிரத்தையும் பறிமுதல் செய்துவிட்டோம், இந்த வருஷத்தில் இன்னும், 10,000 ரூபாய் கட்டு! இன்றேல்…..என்கிறது நம் பார்ப்பனீய சுயராஜ்ஜிய சர்க்கார். திராவிட நாடும் ரூ.3,000 ஜாமீன் கட்டவேண்டுமாம். விடுதலை திராவிடர்களுக்காகப் பாடுபடக்கூடிய ஒரே ஒரு தினசரிப் பத்திரிகை. இது தோன்றி 10, 15 ஆண்டுகளாகத் திராவிடர் வாழ்வையே தன் குறிக்கோளாகக்கொண்டு, எவ்வளவு அமைதியான முறையில், எத்தனை கஷ்ட நஷ்டங்களுக்கிடையேயும் மனஞ் சலியாமல், பலாத்கார உணர்ச்சியில் நாடு இறங்கி விடக்கூடாதே என்கிற பெருங்கவலையோடு பாடுபட்டு வருகிறது என்பதை, நாட்டு நிலையில் அக்கரையுடைய எவரும் அறிந்திருக்கவேண்டும். திராவிடர்களுடைய கல்விக்காக ? செல்வத்திற்காக ? மானத்திற்காக ? பெருமைக்காக ? எல்லா வகையிலும் முன்னேறி இந்நாட்டு மக்களும் உலக மக்களோடுச் சரிசமானமாக வாழ வேண்டு மென்பதற்காக பாடுபடக்கூடிய ஒரேஒரு தினசரி விடுதலை. பார்ப்பனர்களின் தில்லு முல்லுகளையும், சூழ்ச்சி வேலைப்பாடுகளையும் அம்பலப்படுத்தி,...

36. நாஸ்திகர்களே சமதர்மவாதிகள்!

36. நாஸ்திகர்களே சமதர்மவாதிகள்!

சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை ? இது ஆங்கிலத்தில் உள்ள சோஷியலிசம் என்னும் வார்த்தைக்குத் தமிழ் மொழிபெயர்ப்பாகக் கையாளப்படுகிற தென்றாலும், சோஷியலிசம் என்ற வார்த்தையே தேசத்துக்கு ஒருவிதமான அர்த்தத்தில் பிரயோகிக்கப் படுகிறது. அநேகமாக அவ்வார்த்தை அந்தந்த தேச நிலைமைக்கும், தகுதிக்கும், சௌகரீயத்துக்கும் அரசாங்கத்துக்கும் தகுந்தபடிதான் பிரயோகிக்கப்படுகின்றது. சில இடங்களில் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டும், சில இடங்களில் சட்ட திட்டங்களுக்கு மீறினதாயும் உள்ள பொருள்களுடன் சமதர்மம் என்கின்ற வார்த்தைப் பிரயோகிக்கப்படுகிறது ஆகவே சோஷியலிசத்துக்கு, இதுதான் அர்த்தம் என்று வரையறுக்க, அவ்வார்த்தையில் எவ்விதக் குறிப்பும் இல்லை. சில இடங்களில் சோஷியலிசத்துக்கும், பொது உடைமை என்பதற்கும் பேதமே இல்லாமல் அர்த்தம் இருந்துவருகிறது. சில இடங்களில் வெகு சாதாரண விஷயத்துக்கும் அப்பெயர் இருந்து வருகிறது. சில இடங்களில் பொதுவுடைமை வேறாகவும் சமதர்மம் வேறாகவும் இருந்துவருகின்றன. இங்கும் ? சமதர்மம் என்கின்றவார்த்தைக்கு, சமூகத்துறையிலும் பொருளாதாரத் துறையிலும் மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவமாய் (பேதமின்றி) வாழவேண்டும்...

35. மித்திரன் காலித்தனம்!

35. மித்திரன் காலித்தனம்!

ஊருக்கு ஒரு வழி என்றால் ஒன்றரைக் கண்ணனுக்கு ஒரு வழி என்று சொல்லுவதுண்டு. தென்னிந்தியாவுக்கு இந்தத் தனி பெருமை (குருட்டுத் தன்மை) வாங்கிக் கொடுப்பதுதான், தற்போது இங்கு அதிகாரம் செலுத்துவோரின் (திராவிடமந்திரிகளின்) ஆசை! அதாவது சென்னை மந்திரிசபையில் உள்ளவர்கள் குருடர்களாய் நடந்து கொள்கிறார்கள். அதனால் சென்னை மாகாணத்துக்கே ஒரு களங்கம். இவர்கள் தனி வழியில் செல்ல, அவர்கள் சொல்லும் வாதம் மிகக் குயுக்தியானது. அதாவது சென்னையிலுள்ள திராவிட மந்திரிகள், மற்ற மாகாணங்களோடு கருத்து ஒற்றுமையில்லாமல் வேறான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் வாதம்யுக்திக்கு ? அறிவுக்கு மாறுபட்டது. இதைப் பார்க்கும்போது இவர்கள் குயுக்தி வேலைக்காரர்கள் ? அறிவுக்கு மாறுபாடான அறியாமைச் செயலைச் செய்பவர்கள். சுருக்கமாக அழிவு வேலைக்காரர்கள். தென்னிந்தியாவில் அதிகாரம் வகிப்பவர்களின் தனி சொரூபம் வெளியாகியிருக்கிறது. அதாவது திராவிட மந்திரிகள் வேஷக்காரர்கள், அவர்கள் பல வேஷமும் போடுவார்கள். உண்மையான அவர்களின் சொரூபம் இது என்று கண்டுபிடிக்க முடியாது. இப்போது வேஷங்...

34 தாழ்த்தப்பட்டோர் விடுதலையும் அரசியல் உரிமையும்

34 தாழ்த்தப்பட்டோர் விடுதலையும் அரசியல் உரிமையும்

தாழ்த்தப்பட்டோர் விடுதலையும் அரசியல் உரிமையும், இதை தாழ்த்தப்பட்டோர், விடுதலை, அரசியல், உரிமை என நான்கு வகையாகப் பிரிக்கலாம். இந்த நான்கைப்பற்றித்தான் தனித்தனியாக விளக்க வேண்டியவனாக உள்ளேன். இவைகளை முறையே தனித் தனியாக விளக்கிய பிறகே, இவ்விஷயத்தைப் பற்றிப்பேச ஒருவாறு இயலும். முதலில் தாழ்த்தப்பட்டார் என்பவர் யார்? அவர்களுடைய நிலை என்ன? என்பதை எடுத்துக் கொள்வோம். தாழ்த்தப்பட்டார் யார்? தாழ்த்தப்பட்டார் என்பது ஆதித்திராவிடர்கள் என்று சிலர் கருதுகின்றனர். சிலர் பஞ்சமர்கள் என்றும், புலையர்கள் என்றும் இன்னும் இவ்விதமாகக் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் தாழ்த்தப்பட்டார் யார்? என்றால், தங்களுக்கு மேல் உயர்ந்தவர்களில்லை என்று கருதுகிற ஒருசாரார் தவிர, ஒருவருக்கு மேல் ஒருவர் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களத்தனை பேரும் தாழ்த்தப்பட்டவரேயாகும். என்பது எமது அபிப்பிராயம். சிலர் ஒரு சாராருக்குத் தாழ்த்தப் பட்டவராகவும், சிலர் இரண்டு பேருக்குத் தாழ்த்தப்பட்டாராகவும், சிலர் மூன்று, நான்கு, அய்ந்து முதலிய பேருக்குத் தாழ்த்தப்பட்டவராகவும் இருக்கின்றனர். பார்க்கின் இவர்கள் யாவரும் தாழ்த்தப்பட்டாரேயாகும்....

33. இந்த முறை சரிதானா?

33. இந்த முறை சரிதானா?

இந்திய யூனியன் சுயராஜ்ஜிய ஆட்சியை, மக்களாட்சி அதாவது மக்களே மக்களையாளும் ஜனநாயக ஆட்சி என்பதாக காங்கிரஸ்காரர்கள் வருணித்துக் கொண்டு வருகிறார்கள். இந்த சுயராஜ்ஜிய ஆட்சியைப் பார்ப்பன பனியாக்களின் ஏகாதிபத்திய ஆட்சியென்றும், சூத்திரன் என்றைக்குமே தேவடியாள் பிள்ளையாக இருந்து வருவதற்குப் பலமாக அஸ்திவாரம் போடும் ஆட்சி என்றும், திராவிடன் எந்தத் துறையிலும் முன்னேறிவிடக் கூடாது என்கிற வேதத்தின் கூச்சலை நடப்பில் மெய்ப்பிக்கப் போகும் ஆட்சி என்றும் நாம் அடிக்கடி எடுத்துக்கூறி வந்திருக்கிறோம். இந்த இரண்டு வகையான கருத்தில் எது உண்மை? எது பொய்? என்பதை நன்றாய்த் தெரிந்து கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பம் பொது மக்களுக்குத் தரப்பட்டிருக்கிறது இந்திய யூனியன் அரசியல் நிர்ணய சபையினரால். இந்த அரசியல் நிர்ணய சபையின் யோக்கியதையைப் பற்றி, அதாவது 100-க்கு 4-பேர் வோட்டர்களாய் இருந்த ஒரு அமைப்பில், மிரட்டியும், ஏமாற்றியும், வெறியைக் கிளப்பியும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுள், நியமனம் செய்யப் பட்டவர்களைக் கொண்டு அமைக்கப் பட்டிருக்கும் அ.நி.சபையின் தகுதியில்லாமையைப் பற்றி,...

32. பார்ப்பனத் தந்திரம்!

32. பார்ப்பனத் தந்திரம்!

காக்கையும் குருவியும் குருவி      :      ஒ காக்கையே! நீ எவ்வளவுதான் கஷ்டப் பட்டாலும், பார்ப்பனர்களை ஜெயித்து விடலாம் என்றோ, அல்லது அவர்களுடைய புரட்டுகளை வெளியாக்கிவிடலாம் என்றோ நினைப்பாயேயானால், அது அவ்வளவும் பகற் கனவுதான். காரியத்தில் சுலபத்தில் முடியும் காரியம் அல்ல. அடியோடு தடியடியாய் அடித்தால் அதுவும் ஒரு சமயம் முடியும். காக்கை     :      என்ன குருவியே! இப்படிச் சொல்லுகின்றாய்? பார்ப்பான் சங்கதி எடுத்ததெல்லாம் புரட்டாயிருக்கின்றது. அவன் சொல்வதெல்லாம் புளுகாயிருக்கின்றது. இதை வெளிப்படுத்த முடியாது என்கின்றாயே உனக்கு என்ன அவனிடத்தில் அவ்வளவு      பயம்? குருவி      :-     எனக்குப் பயம் ஒன்றுமில்லை, நீபார்ப்பனத் தந்திரத்தை சரியாய் உணரவில்லை. தெரிந்திருந்தால் இவ்வளவு லேசாக அவனை மதித்திருக்கமாட்டாய். காக்கை     :      சரி நீ உணர்ந்த விஷயத்தைத்தான் சொல்லு பார்ப்போம். குருவி      :      சொல்லட்டுமா? காக்கை     :      சொல்லு சொல்லு. குருவி      :      முதலாவது பார்ப்பான் எந்த விஷயத்தைச் சொல்ல வந்தாலும்  அது உன் கண்ணுக்கும் மனத்துக்கும், அறிவுக்கும்...

31. சுயராஜ்ஜியத்தில் வேறு சுய ஆட்சி ஏன்?

31. சுயராஜ்ஜியத்தில் வேறு சுய ஆட்சி ஏன்?

சுய ஆட்சியா? இது வரி ஆட்சியா? திருவரங்க நகரமன்ற வரவேற்புக்கு பெரியார் பதில் திருவரங்கம் மே.24 இன்று மாலை திருவரங்கம் நகர மன்றத்தின் சார்பில் திராவிடத் தந்தை பெரியாரவர்களுக்கு ஒரு வரவேற்பு வைபவம் பெருஞ் சிறப்புடன் நடைபெற்றது. நகர மன்றத் துணைத் தலைவர் தோழர் என். ராஜகோபாலன் நகரமன்றத்தின் சார்பில் ஒரு வரவேற்பிதழ் படித்துக் கொடுத்தார். பெரியாரவர்கள் வரவேற்புக்குப் பதிலளிக்கையில். ஸ்தல ஸ்தாபனங்கள் என்பன அந்தந்த ஸ்தல மக்களைச் சுயஆட்சிக்குத் தகுதியுடையவர் களாகப் பழக்குவதற்காகவே முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நோக்கத்திற்கு மாறாக, நாளடைவில் நகர மன்றங்களுக்கும், நாட்டாண்மைக் கழகங்களுக்கும் உள்ள அதிகாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டு, இன்று சுயாட்சி என்பது சொல்லளவில்தான் என்று சொல்லப்பட வேண்டிய நிலையில் வந்துவிட்டது. இந்தியா வெள்ளையரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த போது, ஒவ்வொரு நகரங்களிலும், ஜில்லாக்களிலும் அந்தந்த மக்களுக்குச் சுய ஆட்சிக்கான ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்ட தென்றால், இன்று இந்தியாவுக்கே சுய ஆட்சி கொடுக்கப்பட்டு, நாடு முழுவதுமே...

30. வெங்கட்டராமனிஸம்

30. வெங்கட்டராமனிஸம்

16 மாதங்களுக்கு முன்னால், கொலை வெறியர்கள் கூடிய மதவெறி ஸ்தாபனமான ராஷ்டீரியசுயம் சேவக்சங்கத்திற்கு, இந்திய யூனியன் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, சட்ட விரோதமான ஸ்தாபனம் என்கிற மரணப்படு குழியைத் தோண்டினோம் என்று கூறியது. ஆனால் மதவெறி கொல்லப்படவில்லை. கொல்லப்படாத மதவெறிக்குத்தான் புதைகுழி அந்தப் புதைகுழியும், மதவெறி என்பதினுடைய உடம்பில் எந்த முக்கிய பாகத்தையும் பாதித்து விடக்கூடாது என்கிற கவலையோடும் அக்கரையோடும் தோண்டப் பட்டது. என்றுதான் சொல்லப்பட்டது. அதாவது இந்துமகா சபையின் ஒரு உட்பிரிவான சேவாசங்கத்திற்குத்தான் சட்டவிரோத ஸ்தாபனம் என்கிற பெயரேதவிர சேவாசங்கத்திற்குத் தாயும் தந்தையுமாயிருக்கிற இந்துமகா சபைக்கு அப்படி ஒரு பெயரில்லை என்று சொல்லியது. இப்படி நோகாமல் அடிக்கிறேன், ஒயாமல் அழு என்பது போல தடை விதிக்கப்பட்டிருந்தும், இந்தத் தடைபோடப்பட்ட காலத்திலிருந்தே, இந்தத் தடையைத் தவிடுபொடியாக்கவேண்டும் என்று தீர்மானித்துச் சுமார் 15 மாத காலமாகவே, அதற்கு வேலை செய்துவருகிறது ஆரியம், ஒரு பரப்பிர்மத்தின் ரூபத்தில். ஆரியத்தின் மாபெரும் கோட்டை என்று பார்ப்பனர்கள்...

29.  திராவிடர் கழகமே தொழிலாளர் ஸ்தாபனம்  அறியாமையால் அந்தோ! படுமோசம். பொன்மலையில் பெரியார்

29. திராவிடர் கழகமே தொழிலாளர் ஸ்தாபனம் அறியாமையால் அந்தோ! படுமோசம். பொன்மலையில் பெரியார்

22-05-1949-ம் நாளில் பொன்மலை திராவிட வாலிபர்கழக 8-வது ஆண்டு விழாவில் மத்திய திராவிடர் கழகத் தலைவர் தோழர் தி.பொ.வேதாசலம் தலைமையில் பெரியார் ஆற்றிய பேருரை. பேரன்புமிக்க தலைவரவர்களே, தாய்மார்களே, தோழர்களே! இன்று நடைபெறும் இவ்வாண்டு விழாவிலே நான் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது குறித்துப் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். மற்றும் என்னைப் பெருமைப்படுத்தி வாழ்த்துரைகள் வழங்கிய தொழிற் சங்சங்களுக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியறி தலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். பெருமைப்படுகிறேன் தொழிலாளர் நிறைந்த இப்பகுதியிலே திராவிட வாலிபர்கழகம் 8-ஆண்டுகளாக வேலை செய்து வருவதையறிந்து நான் பெருமைப் படுகிறேன். காரணம் என்ன? தொழிலாளருக்கு உள்ளபடியே பாடுபடும் ஸ்தாபனம் திராவிடர் கழகம் ஒன்றுதான் என்பதுவேயாகும். மற்ற ஸ்தாபனங்கள் தொழிலாளர்க்கும். முதலாளிக்கும் இடையேயிருந்து தங்கள் தங்கள் நலனைச் சாதித்துக் கொள்பவைகள் என்பதே எனது அழுத்தந்திருந்தமான எண்ணமாகும். இவ்வபிப்பிராயம் இன்று நேற்றல்ல எனக்கு ஏற்பட்டது கடந்த 30 ஆண்டுகளாகவே இந்தக் கருத்து எனக்கு இருந்துவருகிறது. இன்றைய நிலையில்...

28. புதிய மந்திரிசபையும் இந்தியும்

28. புதிய மந்திரிசபையும் இந்தியும்

இப்போது குமாரசாமி ராஜா அவர்களைப் பிரதமராகக் கொண்ட சென்னை மாகாணப் புதிய மந்திரிசபை, இந்த மாகாணத்தில், முக்கியமாகத் தமிழ் நாட்டைப் பொறுத்த வரையிலுமாவது, பழைய மந்திரிசபையின் இந்திக் கொள்கையிலிருந்து, ஒரளவு மாறுதலைச் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டிருப்பதைக் கண்டு அந்த ஆசையைத் தமிழ் மக்கள் வரவேற்பார்கள். பழைய இந்திக் கொள்கையில் ஏதோ ஒரு தவறுதல் – திருத்தவேண்டிய பிழைபாடு இருக்கிறது என்பதை ஸ்துலமாகவாவது உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மாத்திரமல்ல, பிழைபாட்டைத் திருத்திக் கொள்வதற்கும் முயற்சிக்கிறோம் என்பதாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்களே, அந்த அளவுக்காவது வரவேற்கத்தானே வேண்டும். இந்தி நுழைப்பு ? கட்டாயமாகத் தமிழ்படிக்கும் நூத்துக்குப் பத்துபேரும் படித்தாக வேண்டும் என்கிற ஏதேச்சாதிகார ஆணை ? பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆச்சாரியாரால் பிறப்பிக்கப்பட்டு, அவர் மந்திரிசபை ஓடிப்போக வேண்டிய நிலை ஏற்பட்டவுடன், அந்தத் திட்டமும் இந்த நாட்டை விட்டு ஒடிப்போன திட்டமாகும். மேலும் நூற்றுக்கணக்கான தாய்மார்களும், ஆயிரக்கணக்கான கட்டிளங் காளையரும் பச்சிளங் குழந்தைகளோடும், நாட்டுமக்களின் தந்தையோடும்,...

27. நாஸ்தீகமும் சமதர்மமும்

27. நாஸ்தீகமும் சமதர்மமும்

என்னை நாஸ்தீகன் என்று சொல்லுகிறவர்கள் நாஸ்தீகன் என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டு சொல்லுகிறார்களோ அந்த அர்த்தத்தில் நான் நாஸ்தீகன்தான் என்பதை வலியுறுத்திச் சொல்லு கின்றேன். நாஸ்தீகத்திற்குப் பயந்தவனானால் ஒரு காரியமும் செய்ய முடியாது. அதிலும், சமதர்மக் கொள்கையைப் பரப்ப வேண்டுமானால் நாஸ்தீகத்தினால்தான் முடியும். நாஸ்தீகமென்பதே சமதர்மம் என்று பெயர். அதனால் ருஷியாவையும் நாஸ்தீக ஆட்சி என்கிறார்கள். பௌத்தரையும் நாஸ்தீகம் என்றதற்குக் காரணம், அவர் சமதர்மக் கொள்யைப் பரப்ப முயற்சித்ததால்தான். நாஸ்தீகம் என்பது சமதர்மக் கொள்கை மாத்திரமல்ல, சீர்திருத்தம் அதாவது ஏதாவது ஒருபழைய கொள்கைகளை மாற்ற வேண்டுமானால் அந்த மாற்றத்தையும், ஏன், எவ்விதச்சீர்திருத்தத்தையுமே நாஸ்தீகம் என்றுதான் யதாபிரியர்கள் சொல்லித்திரிவார்கள். எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ அங்கு எல்லாம் இருந்துதான் நாஸ்தீகம் முளைக்கின்றன. கிறிஸ்துவையும், மகமது நபியையும் கூட நாஸ்தீகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கும் அவர்களது சமதர்மமும், சீர்திருத்தமும்தான்  காரணமாகும். துருக்கியில் பாட்சாவும், ஆப்கானியஸ்தான் அமீரும் நாஸ்தீகர்கள் என்று அழைக்கப்பட்டதற்கும்...

26. காங்கிரஸ் திராவிடத் தோழர்களுக்கு!

26. காங்கிரஸ் திராவிடத் தோழர்களுக்கு!

வகுப்புகள் ஜாதிகள் ஒழிய வேண்டும் என்கிறார்கள்; ஆனால், பார்ப்பனர்களை மட்டும் திட்டுகிறார்களே ஏன்? இது காங்கிரஸ் ஊழியர் மாநாட்டில் பேசிய ஒரு தியாக சொரூபி திராவிடக் கழகத்தின் போக்கை, அதன் நடவடிக்கையை எந்த அளவு உணர்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல் நம்மீது ? கழகத்தின் மீது சாட்டியிருக்கும் குற்றச்சாட்டு. இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை, இந்த அய்ந்தேக்கர் வாலாக்கள் மட்டும்தான், வேறு பேச்சுப் பேசுவதற்குப் வகையோ, அதற்கான வேலைத் திட்டமோ இல்லாமல், ஏதோ பேசியாக வேண்டும், அதுவும் காரசாரமாயிருக்க வேண்டும் என்று நினைத்துப் பேசிக்கொண்டு வருகிறார்கள் என்பதல்ல; பொதுவாகவே பல திராவிடத் தோழர்களும் அதாவது தியாக மூர்த்திகள் அல்லாத பல திராவிட தோழர்களும் அப்படித்தானோ என்று மயங்குகிறார்கள் அல்லது மயங்கத் தகுந்த நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த மயக்கத்தை ? தவறான எண்ணத்தை ? திரிபு உணர்ச்சியைப் போக்கும் முறையில் திராவிடக்கழகம் பத்திரிகைகளிலும், மேடைகளிலும் விளக்கி வந்திருக்கிறது என்றாலும், அந்த விளக்கத்தைப்...

25. மந்திரிசபைப் பேரம்!

25. மந்திரிசபைப் பேரம்!

அத்தியாயம் முடிவுற்றது இதைக் கூறியவர் தோழர் பிரகாசம் அய்யர். மந்திரிசபை எவ்ளவு அகலமாக நீளும் – எவ்வளவு அகலமாக நீட்ட முடியும் என்கிறரப்பர் இழுப்புப் போட்டியில், ஒரு முனையில் நின்று இழுத்துக் கொண்டிருந்த தோழர் பிரகாசம்தான், சரியாக ஒரு மாச இழுப்பலுக்குப் பிறகு, அத்தியாயம் முடிவுற்றது என்று சோகம் வழிந்து கசியக் கூறியிருக்கிறார். இந்த மாதம் 2-ந் தேதி. தோழர் பிரகாசத்திற்குப் பின்னால் நின்று கொண்டு, அவருக்குத் தலையால் முட்டுக்கொடுத்து உதவி புரிந்து வந்த சகாத் தோழர் சுப்பராயனோ, இந்தப் போட்டி முடிவில் வாய் மூடி மௌனியாகி விட்டார். ஒருவேளை பலமாக முட்டுக் கொடுத்ததால் ஏற்பட்டிருக்கும் மூச்சுத் திணறல் காரணமாக இருந்தாலும் இருக்கலாம். ரப்பர் இழுப்புப் போட்டியில் சுப்பராயனுக்காக வேலை செய்து வந்த தோழர் காமராஜரும், சுப்பராயன் நிலையைத்தான் அடைந்திருக்கிறார். காமராஜரின் சகாவாக காமராஜரால் காட்டப்பட்டு வரும் பிரதமர் ராஜாவோ நடக்கிறபடி நடக்கட்டும், அசரப்போட்டு விடுவோம் என்கிற சலிப்பை அடைந்துவிட்டார். சட்டசபை...