கழகப் பொறுப்பாளர் விஜயகுமார் தந்தை முடிவெய்தினார்.

கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமாரின் தந்தை இராம. கண்ணதாசன் (வயது 68) 09.12.2023 அதிகாலை 4 மணியளவில் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் உள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார்.

அவரது உடலுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார்.

பேராசிரியர் சரஸ்வதி, கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன் மற்றும் கடலூர், சேலம், சென்னை மாவட்டத் தோழர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்

You may also like...