Category: தமிழ்நாடு மாணவர் கழகம்

ஆளுநருக்கு கண்டனம்

ஆளுநருக்கு கண்டனம்

சென்னை : தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பட்டமளிக்கும் கடமையைச் செய்யாமல் தவிர்த்தல் மற்றும் மாநில அரசுக்கு எதிரான ஆளுநரின் போக்கை கண்டித்தும், மருத்துவ கலந்தாய்வு நடத்தும் உரிமையை மாநில அரசிடமிருந்து பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு, சார்பில் ஜுன் 16, காலை 9 மணியளவில், ஆளுநர் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் இரண்யா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.  உடன் சென்னை மாவட்டக் கழக செயலாளர் இரா.உமாபதி மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 22062023 இதழ்

சிறைத் துறைக்கு மாணவர் கழகம் நூல் அன்பளிப்பு

சிறைத் துறைக்கு மாணவர் கழகம் நூல் அன்பளிப்பு

சென்னை 46ஆவது புத்தகக் கண்காட்சியில் சிறைத் துறை சார்பில் நூல் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய “மரண தண்டனை ஒழிப்போம்” உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நூல்கள் சிறைவாசிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. தோழர்கள் உதயகுமார், பிரவீன், வழக்கறிஞர் அன்பரசன், புகழ் பொன் வளவன் அருண், மகிழவன், விஷ்ணு, பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26012023 இதழ்

சுயமரியாதையின் அடையாளம் மாநில சுயாட்சி ச. தேன்மொழி (தமிழ்நாடு மாணவர் கழகம்)

சுயமரியாதையின் அடையாளம் மாநில சுயாட்சி ச. தேன்மொழி (தமிழ்நாடு மாணவர் கழகம்)

ஏப்.14, 2022 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய அம்பேத்கர் பிறந்தநாள், சமத்துவ நாள்  கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம். மாநில சுயாட்சியின் அடிப்படை நோக்கம் சுயமரியாதைத் தத்துவம். மாநில சுயாட்சி என்ற வார்த்தைக்கு, மாநிலங்களின் அடிப்படை உரிமை, பொருளாதாரச் சுதந்திரம், அனைவருக்கும் சமமான சரி நிகர் வாழ்வாதாரம், இன உணர்வு என்ற பல்வேறு கோணங்களில் அர்த்தங்களைப் பார்த்திருப்போம், படித்திருப்போம். ஆனால் இவை எல்லாவற்றிர்க்கும் மேலாக “சுயமரியாதை” என்ற தத்துவமே மாநில சுயாட்சியின் அடி வேராக விளங்குகிறது என உறுதியாகக் கூறலாம். மாநில சுயாட்சி திராவிடத்தின் கொள்கை : 1962 அக்டோபர் வேலூர் சிறையில் இருந்து விடுதலையான பின் மாநில சுயாட்சிக்காக அண்ணா முன் வைத்த முழக்கம் “திராவிட நாடு பிரிவினையைக் கைவிட்டு விட்டோமே தவிர அதனைக் கேட்பதற்கு உரிய காரணங்கள் அப்படியே இருக்கின்றன. அந்தக் காரணங்களை நான் விட்டுவிடவில்லை” என்றார். நமது பள்ளிப்பருவத்திலேயே படித்து இருப்போம் இந்தியா ஒரு மத...

பாலின குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி: தமிழ்நாடு மாணவர் கழகம் முடிவு

பாலின குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி: தமிழ்நாடு மாணவர் கழகம் முடிவு

சென்னை, தமிழ்நாடு மாணவர் கழக ஆலோசனை கூட்டம், கழகத் தோழர் இரண்யா தலைமையில்  05.12.2021 அன்று மதியம் திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் தொடரும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக விசாகா கமிட்டி பாலியல் கல்வி மற்றும் பாலின சமத்துவக் கல்வியை நடைமுறைப்படுத்த அனைத்து மாணவர் அமைப்பு மற்றும் முற்போக்கு அமைப்புகளை இணைத்து விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான நடைபயணம் மேற்கொள்வது எனவும், பெருகி வரும் போதை மற்றும் மதுப்பழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாவதிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தச் செய்வது, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தோழர்களையும் மாணவர்களையும் சந்தித்து மாணவர் கழக கட்டமைப்பை வலுப்படுத்துவது என்னும் முடிவு செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 09122021 இதழ்

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம் 17.10.2021

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம் 17.10.2021

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம் 17.10.2021 அன்று காலை 11 மணியளவில், ஈரோடு பிரியாணிபாளையத்தில் நடைபெற்றது. சென்னிமலை கார்மேகம் வரவேற்பு கூறினார். யாழினி, யாழிசை ஆகியோர் பகுத்தறிவுப் பாடல் பாடினர். தமிழ்நாடு மாணவர் கழகம் பற்றியும், கலந்துரையாடலின் நோக்கம் பற்றியும் திருப்பூர் சந்தோஷ், ‘இட ஒதுக்கீட்டிற்கு வந்திருக்கும் ஆபத்து, நீட் தேர்வின் பாதிப்புகள், மதவாத சக்திகளின் சமூக சீர்கேட்டுச் செயல்பாடுகள் ஆகியவை பற்றியும், அவற்றிற்கு எதிர்வினையாற்ற ஒரு வலுவான, சமூகநீதியைக் கொள்கையாகக் கொண்ட மாணவர் அமைப்பின் தேவை’ குறித்து தனது அறிமுக உரையில் குறிப்பிட்டார். நிகழ்விற்கு திருப்பூர் சந்தோஷ் தலைமை வகித்தார். தொடர்ந்து, சென்னை, திருப்பூர், குமாரபாளையம், மேட்டூர், சேலம், சென்னிமலை, அன்னூர், பல்லடம், மேச்சேரி, பொள்ளாச்சி, பழனி ஆகிய பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். பின்னர் அவர்கள் தங்களது கருத்துக்களை கூறினர். அதன் மீதான கலந்துரையாடலும் நடைபெற்றது....

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் இணைய வழி கருத்தரங்குகள் – நூல் வாசிப்பு நிகழ்வுகள் இளைய தலைமுறையின் எழுச்சி

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் இணைய வழி கருத்தரங்குகள் – நூல் வாசிப்பு நிகழ்வுகள் இளைய தலைமுறையின் எழுச்சி

கொரானா ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு மாணவர் கழக முகநூல் தளத்தில் மாணவர்கள், தோழர்கள் புத்தக வாசிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும், அதனை ஊக்குவிக்கும் வகையிலும் ‘நூல் அறிமுகம்’ என்னும் நிகழ்வை நடத்தினர். ஒரு நூலின் கருத்தினை காணொளியில் பேசி தொடர்ச்சியாக பதிவு செய்து வந்தனர். தோழர்கள் திருப்பூர் தேன்மொழி, திருப்பூர் பிரசாந்த்,  கொளத்தூர் கனலி, மேட்டூர் மதிவதனி, மேட்டூர் அறிவுமதி, திருப்பூர் கனல்மதி, திருப்பூர் தென்றல், திருப்பூர் சந்தோஷ் ஆகியோர் பங்கேற்றனர்.  மேலும் பெரியாரிய  கருத்துக்களை பாடல் களாகப் பாடியும், வாசகங்களாக பேசியும் சமூக வலைதளத்தில் குழந்தைகளும் தோழர்களும் பதிவு செய்து வந்தனர்.  ஜூன் 25ஆம் தேதி  சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் 89ஆவது பிறந்தநாளில் அவரின் சாதனைகளைப் போற்றும் வகையில் தொடர் காணொளியிலும் தோழர்கள் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்தனர். தோழர்கள் மதிவதனி, ரம்யா, பிரசாந்த், கனலி, தேன்மொழி, விஷ்ணு, வைத்தீஸ்வரி, கனல்மதி, அறிவுமதி, சந்தோஷ் ஆகியோர் காணொளியில் பேசினர். கல்வி...

மதவாதிகளுக்கு சட்டவிரோதமாக துணைபோகும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருப்பூர் 25102018

மதவாதிகளுக்கு சட்டவிரோதமாக துணைபோகும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருப்பூர் 25102018

கண்டன ஆர்ப்பாட்டம் ! அக்.25 – திருப்பூர். மதவாதிகளுக்கு சட்டவிரோதமாக துணைபோகும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை : ”தோழர் கொளத்தூர் மணி”, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வழிகாட்டும் இந்திய அரசியல் சட்ட சாசனத்திற்கெதிராக கல்விக்கூடங்களில் மதமூட நம்பிக்கைகளை வளர்க்க மதவாதிகளுக்கு துணைபோய் தன் கடமையிலிருந்து தவறி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குற்றம் இழைக்கும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை உடனடியாக பணி நீக்கம் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ! நாள் : 25.10.2018 வியாழக்கிழமை. நேரம் : மாலை 4.00 மணி இடம் : மாநகராட்சி அலுவலகம் அருகில், திருப்பூர். கண்டன உரை : தோழர் துரைவளவன்,மாநில துணைசெயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி. தோழர் அபுதாஹிர்,மாவட்டத்தலைவர்,SDPI கட்சி, தோழர் சம்சீர் அஹமது,மாவட்டச்செயலாளர்,SFI. தோழர் தேன் மொழி,மாவட்டச்செயலாளர்,...

தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்தும் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்தும் பயிற்சி வகுப்பு

நாள் :  30.6.2018, 1.7.2018 (சனி, ஞாயிறு) இடம் :  மக்கள் மன்றம், காஞ்சிபுரம் முதல் நாள் 30.06.2018 சனிக் கிழமை காலை 9.30 மணி     :     தோழர்கள் அறிமுகம் காலை 10 – 1 மணி   :     பிரின்ஸ் கசேந்திர பாபு  (கல்வி -நம்முன் உள்ள சவால்கள்) மதியம் 1 – 2 மணி    :     உணவு இடைவேளை மதியம் 2- 3.30 மணி  :     தேவா  (மாணவர்களின் திறன் மேம்பாடு) மாலை 4- 5.30 மணி   :     விடுதலை இராசேந்திரன் (தனியார் துறையில் இடஒதுக்கீட்டின் தேவை) மாலை 5.30 – 6.30 மணி     :     இன்றைய பயிற்சி வகுப்பு குறித்து தோழர்கள் கலந்துரையாடல் இரண்டாம் நாள் : 01.07.2018 ஞாயிறு காலை 10 – 1.00 மணி      :     மருத்துவர் எழிலன்  (மூட நம்பிக்கை) மதியம்  1...

கல்வி வேலை வாய்ப்பு உரிமை கோரி தமிழ்நாடு மாணவர்க் கழகம் ஆர்ப்பாட்டங்கள்

கல்வி வேலை வாய்ப்பு உரிமை கோரி தமிழ்நாடு மாணவர்க் கழகம் ஆர்ப்பாட்டங்கள்

திருப்பூரில் : திருப்பூர் 02-05 2018 புதன்கிழமை காலை 11 மணி அளவில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக தமிழக மாணவர்களின் கல்வி வேலை வாய்ப்பு உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சியின் முன்பு நடைபெற்றது. 1)            தமிழக அரசு இயற்றிய ‘நீட்’ விலக்கு தொடர்பான சட்ட மசோதாவுக்கு இசைவு கோரியும், 2)            கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25ரூ மாணவர் இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்தக் கோரியும், 3)            பட்டியலின பழங்குடி மாணவர்களின் பொறியியல் படிப்பைத் தடுக்கும் அரசாணை 51,52 யை இரத்து செய்து முன்பு இருந்ததுபோல அரசாணை92 ஐ நடைமுறைப்படுத்தக்  கோரியும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கோரிக்கை மனு ஆட்சியர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. நிகழ்வில்  தேன்மொழி (மாவட்ட அமைப்பாளர் – டி.எஸ்.எப்.),  தமிழ் செழியன் (டி.எஸ்.எப்.), மதுலதா (டி.எஸ்.எப்.) ஆகியோர் உரையாற்றினர். வீ. சிவகாமி (தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம்), முகில் இராசு (மாவட்ட தலைவர்...

கல்வி உரிமைகளை வலியுறுத்தி மே 2இல் தமிழ்நாடு மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்

கல்வி உரிமைகளை வலியுறுத்தி மே 2இல் தமிழ்நாடு மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மாணவர் கழக கலந்துரையாடல் 22.4.18 அன்று சேலம் குரங்குசாவடியில் காலை 11 மணிக்கு துவங்கியது . மாணவர் கழக அமைப் பாளர் பாரி சிவக்குமார் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு மாணவர்களின் பல்வேறு சிக்கல்கள் குறித்து விளக்கி யும், மாணவர் கழகம் வரும் நாட்களில் எடுக்க வேண்டிய செயல் திட்டம் குறித்தும் பேசினார்.  மேலும் தோழர்களின் பல்வேறு கேள்வி களுக்கு கழகத் தலைவர் பதில் கூறினார். நிகழ்வில்  சென்னை இளவரசன்,  சேலம் நாகராஜ், விக்னேஷ் அறிவுமதி, இலக்கியன், திருப்பூர்  கனல்மதி, தேன்மொழி,  பொள்ளாச்சி சபரி, ஈரோடு பிரதாப், கோவை வைத்தீஸ்வரி, பிரசாந்த், நாமக்கல் மனோஜ், சேலம் விக்னேஷ் கவுதம் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: இந்தியாவுக்கே முன்மாதிரியாக சமூகநீதிக் கொள்கையை கடைப் பிடித்து வரும் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு ப்ளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்  சேர்க்கை நடைபெற்று...

தூத்துக்குடியில் தமிழ்நாடு மாணவர் கழகம் கல்லூரி மாணவர்களிடம் பரப்புரை !

தூத்துக்குடியில் தமிழ்நாடு மாணவர் கழகம் கல்லூரி மாணவர்களிடம் பரப்புரை !

தூத்துக்குடியில் தமிழ்நாடு மாணவர் கழகம் கல்லூரி மாணவர்களிடம் பரப்புரை ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட மாணவர் கழகம் சார்பாக 21.02.2018 அன்று “மாணவர்களே! இருள் சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்” எனும் தலைப்பில் தமிழக மாணவர்கள் எவ்வாறு இந்த இந்துத்துவ மோடி அரசால் பாதிக்கப்படுகிறார்கள், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாமான அரசுப் பணிகள் எவ்வாறு பிறருக்கு தாரைவார்க்கப்படுகின்றன, 60% இட ஒதுக்கீடு வைத்திருக்கிற தமிழ்நாட்டில் நமக்கான வேலை வாய்ப்பு தேர்வுகளில் வெளி மாநில மாணவர்கள் பெரும்பான்மையாக பங்கெடுக்கும் அளவிற்கு கதவை திறந்து விட்டுருக்கிற பா.ஜ.க. எடுபிடி அரசான தமிழக அரசின் நயவஞ்சகத்தை ஒரு துண்டறிக்கையாக தயார் செய்து அதை தூத்துக்குடியில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களிடம் பரப்பி விழிப்புணர்வை உண்டாக்கும் முயற்சியில் துண்டறிக்கை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.. இதற்கு கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. பல...

‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி” ஏன் ? விளக்கமளிக்கும் துண்டறிக்கை !

‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி” ஏன் ? விளக்கமளிக்கும் துண்டறிக்கை !

”தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி” ஏன் ? விளக்கமளிக்கும் துண்டறிக்கை ! தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் 02.03.2018 வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணியளவில் கொளத்தூர் பேருந்து நிலையம் அருகில் தோழர்களால் ”தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி” நடத்தப்பட்டது. நம் தாய்மொழி தமிழை இழிவுபடுத்தும் ஆரிய பார்ப்பனர்களின் போக்கை கண்டித்தும்,தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்து இம்மண்ணிற்கு தொடர்பே இல்லாத செத்துப்போன சமஸ்கிருத மொழியில் வாழ்த்துப்பாடலை பாடியிருக்கும் இந்து சனாதனவாதிகளுக்கு எதிராக தமிழ்மொழி வாழ்த்துப்பாடலை தோழர்கள் பொதுவெளியில் பாடி மக்களிடம் இதுகுறித்த பரப்புரைகளை மிக சிறப்பாக முன்னெடுத்தனர்.

”தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி”

”தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி”

”தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி” ”தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி” தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் 02.03.2018 வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணியளவில், சேலம் மாவட்டம், கொளத்தூர், மேட்டூர் பேருந்து நிலையங்களில் தோழர்களால் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஜெயேந்திரனாலும், சென்னை ஐ.ஐ.டி.யிலும் தமிழ் மொழி வாழ்த்து அவதிக்கப்பட்ட செய்திகளை விளக்கிக் கூறிவிட்டு, அனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவோம் எனக் கேட்டுக் கொள்ள எல்ல பேருந்துகளிலும் பொதுமக்கள் எழுந்துநின்று பாடினர். நம் தாய்மொழி தமிழை இழிவுபடுத்தும் ஆரிய பார்ப்பனர்களின் போக்கை கண்டித்தும்,தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்து இம்மண்ணிற்கு தொடர்பே இல்லாத செத்துப்போன சமஸ்கிருத மொழியில் வாழ்த்துப்பாடலை பாடியிருக்கும் இந்து சனாதனவாதிகளுக்கு எதிராக தமிழ்மொழி வாழ்த்துப்பாடலை தோழர் பொதுவெளியில் பாடி மக்களிடம் இதுகுறித்த பரப்புரைகளை மிக சிறப்பாக முன்னெடுத்தனர்.

மருத்துவ மாணவர்களின் மர்ம மரணங்களுக்குக் காரணம் யார்?

மருத்துவ மாணவர்களின் மர்ம மரணங்களுக்குக் காரணம் யார்?

சண்டிகாரில் உள்ள பி.ஜி.அய்.எம்.இ.ஆர் – மத்திய அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேல் பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்ற தமிழ்நாட்டு மாணவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் யு.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் பயின்றுவந்த தமிழக மாணவர் சரத்பிரபுவின் மர்ம மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. 2016-ல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த தமிழக மருத்துவ மாணவர் சரவணன் மர்ம மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சி விலகாத நிலையில் நடந்திருக்கும் மற்றொரு சம்பவம் இது. சரவணன் போலவே சரத்பிரபுவும் விஷ ஊசி செலுத்தப்பட்டே இறந்திருக்கிறார். சரவணன் மரணத்தைப் பொறுத்தவரை, அது ஒரு தற்கொலை என்றே எய்ம்ஸ் நிர்வாகமும், டெல்லி காவல் துறையும் சொல்லிவந்தன. ஆனால் பிரேத பரிசோதனை முடிவுகள், அது தற்கொலை அல்ல என்பதை உறுதிப்படுத்தின. இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வேறு விஷயம்! சில நாட்களுக்கு முன்பு,...

தமிழ்நாடு மாணவர் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகை-கைது

தமிழ்நாடு மாணவர் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகை-கைது

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி முன்னிலையில் பாரி சிவக்குமார் (மாணவர் கழக அமைப்பாளர்)  தலைமையில் நடந்தது. 21.01.18 அன்று மாலை 3 மணிக்கு, சென்னை பனகல் மாளிகை முன்பு டெல்லியில் மர்ம மரணம் அடைந்த திருப்பூரைச் சேர்ந்த மருத்துவர் சரத் பிரபு மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டியும், வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களின் தொடர் படுகொலையைக் கண்டித்தும், தோரட் பரிந்துரைகளை அமுல்படுத்தக் கோரியும் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களின் குறைகளைக் கேட்க பேராசிரியர் தகுதியுள்ள தனி அலுவலர் நியமிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச்  சென்ற கழக அமைப்பினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் சைதை மாநகர தொடக்கப் பள்ளியில் அடைக்கப்பட்டு, மாலை விடுதலை செய்யப்பட்டனர். பெரியார் முழக்கம் 22022018 இதழ்

இந்த உண்மைகளைப் படியுங்கள்; பரப்புங்கள்; பகிருங்கள்! மாணவர்களே! இருள்சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்!

இந்த உண்மைகளைப் படியுங்கள்; பரப்புங்கள்; பகிருங்கள்! மாணவர்களே! இருள்சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்!

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட – முற்போக்குச் சிந்தனை கொண்ட மாணவர்களே! நமது எதிர்காலம் இருள்மயமாகி வருவதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இந்தத் துண்டறிக்கையைப் படியுங்கள்! மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் வேலை இல்லாத் திண்டாட்டத்தில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களிலேயே தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்துவிட்டது என்ற அதிர்ச்சியான தகவல் தரப் பட்டிருக்கிறது. இந்தியாவில் வேலை கிடைக்காத இளைஞர்களின் தேசிய சராசரியைவிட (3.6) தமிழ்நாடு கீழாக நிற்கிறது (3.7). 2.45 இலட்சம் பொறியாளர்களும், 4307 டாக்டர் பட்டம் பெற்ற மாணவர்களும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக் கிறார்கள். 2017 மார்ச் 30 வரை வேலை வாய்ப்புக்காகப் பதிவு செய்து காத்திருக்கும் நமது இளைஞர்கள் 81.30 இலட்சம் பேர். பதிவு செய்யாமலே வேலை தேடி அலைவோர் இதைவிடப் பன்மடங்கு என்பதை சொல்லத் தேவை இல்லை. மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு...

உயர்கல்வி படிக்கச் சென்றால் மரணம்தான் பரிசா? – தமிழ்நாடு மாணவர் கழக துண்டறிக்கை

தமிழக மாணவர்களே! தமிழ்நாட்டிலிருந்து உயர்கல்வி படிக்கச் செல்லும் நமது மாணவர்கள், அந்தக் கல்வி நிறுவனங்கள்காட்டும் ‘பாகுபாடு’களாலும், ‘அவமதிப்பு’களாலும், ‘அழுத்தங்’களாலும் மரணத்துக்கு தள்ளப்படுகிறார்கள். தில்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் ‘எம்.டி.’ மேல் பட்டப் படிப்பு படிக்கச் சென்ற திருப்பூர் மாணவர் சரத் பிரபு, தனது அறையில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார் என்ற செய்தி நமது நெஞ்சை பிளக்கிறது. உயர் கல்வி பெற்ற ஒரு மருத்துவர் வரப் போகிறார் என்று அந்தக் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக் கனவு சிதைந்து போய் நிற்கிறது. இதேபோல்தான் புதுடில்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ உயர் மருத்துவக் கல்வி நிறுவனத்துக்கான தேர்வை 2016இல் எழுதி, தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே மாணவரான திருப்பூர் சரவணன், கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே விஷ ஊசி செலுத்திக் கொல்லப்பட்டார். நிர்வாகம் முதலில் தற்கொலை என சாதித்தது. விசாரணையில் கொலை என்பது உறுதியானது. மகனின் மரணத்துக்கு நியாயம் கேட்டு பெற்றோர்கள் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள்...

தமிழக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்!! 21012018

தமிழக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்!! மருத்துவக் கல்லூரி மாணவர் சரத்பிரபு டெல்லியில் படுகொலையை (மர்ம மரணம்) கண்டித்து தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் நடைபெறுகிறது. நாள் : 21.01.2018 (ஞாயிற்றுக்கிழமை)  நேரம் : மாலை 3 மணி இடம் : மத்திய கைலாஸ், சென்னை. வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களின் மர்ம மரணம் தொடர்கதையாகிவிட்டது. சென்ற ஆண்டு டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் படித்த திருப்பூரை சேர்ந்த மருத்துவர் சரவணன், சேலம் முத்துகிருஷ்ணன் ஆகியோர் இந்த ஆண்டு மருத்துவர் சரத் பிரபு. வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தியும், தொடரும் படுகொலைக்கு சிபிஐ விசாரணை வேண்டியும் தமிழர்களை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து #தமிழ்நாடு_மாணவர்_கழகம்நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம். வாய்ப்புள்ள தோழர்கள் கலந்து கொள்ளவும்.!! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363/9688310621

திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் ! 17012018

டெல்லியில் மருத்துவ மாணவர் சரத் பிரபு மர்ம மரணத்தை கண்டித்து தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். நாள் : 17.01.2018 புதன்கிழமை நேரம் : மாலை 4 மணி இடம்: மாநகராட்சி அருகில்,திருப்பூர் டெல்லி UCMS மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு பயின்று வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபு இன்று காலை சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமடைந்ததை கண்டித்தும், தொடர்ந்து தென் மாநில மாணவர்கள் டெல்லியில் கொல்லப்படுவதை கண்டித்தும், மாணவர் சரத் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வலியுருத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  

திருப்பூரில், தமிழ்நாடு மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் ! 01012018

திருப்பூரில், தமிழ்நாடு மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் ! தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக திருப்பூர் பகுதி பொறுப்பாளர் தோழர் கனல்மதி அவர்கள் வீட்டில் 01.01.2018 அன்று காலை 11.00 மணிக்கு தொடங்கி 2.30 மணிவரை கலந்துரையாடல் நடைபெற்றது. தமிழக மாணவர்களின் வேலை வாய்ப்பு உரிமையை பறிக்கின்ற வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நுழைவுத் தேர்வு சட்டத்தை கல்லூரி மாணவன்களுக்கு விளக்கும் வகையில் துண்டறிக்கை பரப்புரை செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தோழர்கள் தேன்மொழி,கனல்மதி, வைதீஸ்வரி,சபரி,விவேக் சமரன்,எழில்அரசி, மதுலதா,பிரசாந்த்,சுவேதா,மோகன்ராஜ்,பிரசாந்த், பாண்டிச்செல்வி,பிரபா,உகஸ்ரீ,முகிலன்,சுதன்,ராகுல் உள்ளிட்ட தமிழ்நாடு மாணவர் கழக தோழர்களும், சிறப்பு அழைப்பாளர்களாக ஆசிரியர் சிவகாமி,தோழர் முகில்ராசு, தோழர் மணிமொழி ஆகியோர் கலந்துகொண்டனர். ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட புதிய தோழர்கள் ஆர்த்தி,வினேத் இணையர் மதிய உணவு ஏற்பாட்டை செய்திருந்தனர்.

தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர்கள் கூட்டம் !

29/5/2016 அன்று காலை 10 மணிக்கு திருப்பூரில் வீரபாண்டி பிரிவு பெரியார் படிப்பகத்தில் தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட திவிக செயலாளர் முகில்ராசு வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில்,இடஒதுக்கீடு, தனியார்துறையில் இடஒதுக்கீடு, பொதுநுழைவுத் தேர்வு, அரசாணை 92, தனியார் பள்ளிகளில் 25%மாணவர் சேர்க்கை, தனியார் கல்விக்கொள்ளை, தாய்மொழிக்கல்வி, கட்டாய கல்வி உரிமைச்சட்டம் ஆகியவை குறித்தும் இன்னும் பிற கல்விஉதவித்தொகை வழங்கும் அரசாணை குறித்தும் தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் பாரி.சிவக்குமார் தொடக்கஉரையாற்றினார். இதனை தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு திவிக பரப்புரை செயலாளர் தோழர் பால்.பிரபாகரன் விளக்கம் அளித்தார். காலை நிகழ்வு மதியம் 1.30 மணிவரை நடைபெற்றது. மதிய உணவு மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. மீண்டும் மதியம் 2 மணிக்கு தோடங்கிய கூட்டம் 6.30 வரை தொடர்ந்தது .மதிய அமர்வில் திவிக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு தோழர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் புதிதாக...

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் ‘மாநில கலந்துரையாடல் கூட்டம்’

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் ‘மாநில கலந்துரையாடல் கூட்டம்’. நாள் : 29/5/2016,ஞாயிறு. நேரம் :காலை 10 மணி. இடம் : பெரியார் படிப்பகம், வீரபாண்டி பிரிவு, திருப்பூர் . ▪தமிழ்வழி கல்வியின் முக்கியத்துவம், ▪மருத்துவப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு, ▪பள்ளிகளில் சமஸ்கிருத திணிப்பு, ▪மாநில பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகத்தின் இடஒதுக்கீட்டுக்கெதிரான உத்தரவு, ▪சமச்சீர் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் ▪தமிழ்நாடு மாணவர் கழகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்படுகின்றன. இக்கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார் . ஆகவே தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தவறாமல் கலந்துகொள்ளவும். தொடர்புக்கு : பாரி.சிவக்குமார், மாநில அமைப்பாளர் 9688310621. முகில், அமைப்பாளர், திருப்பூர் மாவட்டம் 9566835387. முகில் ராசு,திருப்பூர் மாவட்ட செயலாளர் (திவிக) 9842248174