Category: தமிழ்நாடு அறிவியல் மன்றம்

‘தமிழ்நாடு மாணவர் கழக’ பயிற்சி முகாம் காஞ்சியில் கருத்துச் செறிவுடன் நடந்தது

‘தமிழ்நாடு மாணவர் கழக’ பயிற்சி முகாம் காஞ்சியில் கருத்துச் செறிவுடன் நடந்தது

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கான பயிற்சி ஜூன் 30, ஜூலை 1, 2018 தேதிகளில் காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தில் சிறப்புடன் நடைபெற்றது. சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக ஒத்துழைப்புடன் தமிழ் நாடு மாணவர் கழகம் நடத்திய இந்தப் பயிற்சி வகுப்பை மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவகுமார் ஒருங்கிணைத்தார். பயிற்சியில் 45 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 20 பேர் மாணவிகள். முதல் நாள் காலை 10 மணியளவில் மக்கள் மன்றத் தோழர்களின் புரட்சிகரப் பாடல்களுடன் வகுப்புகள் தொடங்கின. தோழர்கள் அறிமுகத்தைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மாணவர் பயிற்சியின் நோக்கங்களை விளக்கினார். தொடர்ந்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, ‘கல்வி – நம்முன் உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் பேசினார். ‘உயிரினம் சிந்திக்கத் தொடங்கியபோதே உருவாகிவிட்டது கற்றல் செயல்பாடு. மூளையின் புரிதல் சக்தியோடு கற்பது வழியாக செயல்படக் கூடிய கல்வி செயல்பாட்டை பள்ளியில் அடைத்த தால் பள்ளிக்...

தமிழ்நாடு மாணவர் கழகம் – மாணவர்களுக்கு நடத்தும் பயிற்சி முகாம்

தமிழ்நாடு மாணவர் கழகம் – மாணவர்களுக்கு நடத்தும் பயிற்சி முகாம்

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் ஏற்பாடாகி வருகின்றன. ஜூன் 23, 24 நாட்களில் பயிற்சி நடக்கும். (இடம் – பின்னர் அறிவிக்கப்படும்) சமூக நீதி – வரலாறு  – கல்வித் துறை சந்திக்கும் ஆபத்துகள் குறித்து கல்வியாளர்கள், வகுப்புகளை நடத்துவார்கள். நுழைவுக் கட்டணம் : ஒருவருக்கு இருநூறு ரூபாய். (ரூ.200) முன் பதிவுக்கு : 9688310621 பெரியார் முழக்கம் 24052018 இதழ்

குழந்தைகள் பழகு முகாம் தள்ளி வைப்பு

குழந்தைகள் பழகு முகாம் தள்ளி வைப்பு

மே மாதம் தொடங்க இருந்த குழந்தைகள் பழகு முகாம் தவிர்க்க இயலாத காரணங்களால் செப்டம்பர் மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாள், இடம் பின்னர் அறிவிக்கப்படும். – ஆசிரியர் சிவகாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம் பெரியார் முழக்கம் 17052018 இதழ்

குழந்தைகள் பழகு முகாம் – 2018 : 5 நாட்கள்

குழந்தைகள் பழகு முகாம் – 2018 : 5 நாட்கள்

முன் பதிவு ஆரம்பம் வரும் 2018 மே மாதம் கோடைக்கால பள்ளி விடுமுறையில் தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் ‘குழந்தைகள் பழகு முகாம்’ (5 நாட்கள்) நடைபெற உள்ளது. குழந்தைகள் பழகு முகாமில் – கற்பனைத் திறன் வளர்த்தல், படைப்பாற்றல் பெருக்குதல், குழு உரையாடல், கதை உருவாக்கல், ஓவியப் பயிற்சி, கவிதை புனைதல், கட்டுரை வரைதல், அறிவியல் சார்ந்த விளையாட்டுகள் – உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். தேதி, இடம், கட்டணம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும். கோடையில் கொண்டாடுவோம்! பள்ளி விடுமுறையை பயனுள்ள தாக்குவோம் ! 10 வயது முதல் 15 வயது முடிய உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். முன் பதிவு அவசியம். பதிவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள : ஆசிரியர் சிவகாமி தலைவர் தமிழ்நாடு அறிவியல் மன்றம் அலைபேசி எண் : 87785 43882 வாட்ஸ் அப் எண் : 99437 48175 பெரியார் முழக்கம் 12042018 இதழ்