Category: திவிக

கழகத்தின் தேர்தல் பரப்புரைகள் தீவிரம் பாஜகவுக்கு எதிரான பரப்புரைகளுக்கு அமோக ஆதரவு!

கழகத்தின் தேர்தல் பரப்புரைகள் தீவிரம் பாஜகவுக்கு எதிரான பரப்புரைகளுக்கு அமோக ஆதரவு!

சேலம் : மேட்டூர் நகரக் கழக சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” பொதுக்கூட்டம் 06.04.2024 அன்று மேட்டூர் சின்ன பார்க் திடலில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மேட்டூர் நகரத் தலைவர் செ. மார்ட்டின் தலைமை தாங்கினார், கீ.கோ.தேன்மொழி வரவேற்புரையாற்றினார். கூட்டத்தின் தொடக்க நிகழ்வாக பாடகர் கோவன் கலைக் குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் செல்வேந்திரனின் இயக்கத்தில் “கலகக்காரன்” நையாண்டி தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராஜ், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, ம.க.இ.க பாடகர் கோவன் ஆகியோர் மோடி ஆட்சி தொடரலாமா? என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்கள். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மேட்டூர் நகர தி.வி.க.செயலாளர் சு.குமரப்பா நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேட்டூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கழகத்...

தயாநிதி மாறன் பெரியார் சிலைக்கு மரியாதை!

தயாநிதி மாறன் பெரியார் சிலைக்கு மரியாதை!

தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் தயாநிதிமாறன் 09.04.2024 அன்று திருவல்லிக்கேணி பகுதியில் வாக்கு சேகரிக்க வருகைதந்தார். அவருக்கு சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கழக படிப்பகம் முன்பு அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெரியார் முழக்கம் 11.04.2024 இதழ்

ஈரோடு இரத்தினசாமியின் தாயார் காலமானார்!

ஈரோடு இரத்தினசாமியின் தாயார் காலமானார்!

ஈரோடு : கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமியின் தாயார் மருதாம்பாள் (வயது 90) 08.04.2024 அன்று வயது மூப்பின் காரணமாக முடிவெய்தினார். ஈரோடு முத்தூர் கார்வழி ரைஸ்மில் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி மற்றும் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் 09.04.2024 அன்று அம்மையாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 11.04.2024 இதழ்

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

• பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி அவர்களை ஆதரித்து தெருமுனைக் கூட்டங்கள் ஏப்ரல் 6,7,8,9 ஆகிய 4 நான்கு நாட்கள் நடைபெற உள்ளன. இந்நிகழ்வின் இறுதியில், 7,8 ஆகிய நாட்களில் நடைபெறும் பொது கூட்டங்களில் தலைவர் கொளத்துர் மணி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சிகள் திராவிட இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக நடைபெறுகின்றன. • திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” என்ற தலைப்பில் இந்தியா கூட்டணியை ஆதரித்து நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் ஏப்ரல் 06,09 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மேட்டூர், கொளத்தூர், மேட்டூர் ஆர்.எஸ் உள்ளிட்ட மூன்று இடங்களில் நடைபெறவுள்ளது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதில் பாடகர் கோவன் குழுவினர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடைபெறும். பெரியார் முழக்கம் 04.04.2024 இதழ்

திருப்பத்தூரில் இல்ல திறப்பு விழா

திருப்பத்தூரில் இல்ல திறப்பு விழா

திருப்பத்தூர் : வாணியம்பாடியை அடுத்துள்ள புல்லூர் கிராமத்தில் கழக வாணியம்பாடி செயலாளர் சுரேஷ்-இன் இல்லத் திறப்பு விழா மற்றும் கழக கொடியேற்று விழா 17.3.2024 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. விழாவின் தொடக்க நிகழ்வாக ஜெய்கர் – மருது ஆகியோரின் இசை நிகழ்ச்சி அமைந்தது. விழாவை நிலா தொகுத்து வழங்கினார். விழாவிற்கு வேலூர் மாவட்டத் தலைவர் திலிபன், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.ப.சிவா, மாவட்டப் பொருளாளர் த.சதிஷ் சமத்துவன், பேர்ணாம்பட்டு நகரச் செயலாளர் பார்த்திபன், கஜேந்திரன், ஆசிரியர் பாஸ்கரன், செந்தில், வேலூர் சதிசு, ரேனு, பேர்ணாம்பட்டு ஒன்றிய செயலாளர் அரவிந்த் செயசூர்யா, அமல்ராஜ், முரளி தன்மானன், வழக்கறிஞர் பாலகுமாரன், வழக்கறிஞர் திராவிட பாண்டியன், ஆனஸ்ட், செ.ராஜி, செல்வக்குமார், புருசோத்தமன், செல்வக்குமார், செயக்குமார், சிலம்பரசன், பிரவினா, வைரமணி, சுகந்தி யாழினி, கனல்விழி, கயல்விழி, யாழ்வெண்பா, மோகேஷ் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். விசிக மண்டலச் செயலாளர் இரா.சுபாசு சந்திர...

திமுக வேட்பாளர்களுக்கு நேரில் வாழ்த்து!

திமுக வேட்பாளர்களுக்கு நேரில் வாழ்த்து!

மதுரை : இந்தியா கூட்டணியின் மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசனை மதுரை மாவட்டச் செயலாளர் மா.பா.மணிஅமுதன் தலைமையில் 31.03.2024 அன்று கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். மேலும் இந்திராநகர் பிடி.காலனி, தகர பிள்ளையார் கோவில் தெரு, செல்லூர், மேலத் தோப்பு, கீழத் தோப்பு, மதிச்சியம், நெல்பேட்டை, ஒபுளாபடித்துறை, முனிச்சாலை, அந்தோணி மூப்பனார் தெரு, அனுப்பானடி உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்தனர். இதில் மாவட்டத் தலைவர் காமாட்சிப் பாண்டி, மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி, முருகேசன், கண்ணன் காமாட்சி உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். சென்னை : எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியனை 30.03.2024 அன்று கழகத் தோழர்கள் சந்தித்து தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். கடந்த 8 மாதங்களாக சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்...

ஈரோடு, ஆத்தூரில் தேர்தல் பரப்புரை

ஈரோடு, ஆத்தூரில் தேர்தல் பரப்புரை

ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! என்ற முழக்கத்தோடு 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனைக்கல் மேடு, மணிக்கூண்டு, உடையம்பட்டி, நரசிங்கபுரம், முல்லைவாடி, ராஜேந்திரா பேக்கரி உள்ளிட்ட ஆறு இடங்களில் பிப்ரவரி 25ஆம் தேதி தொடங்கி மார்ச் 15 வரை நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்க நிகழ்வாக பெரியார் விழுதுகள் ரிஷிவிந்தன் – அரவிந்தன் ஆகியோரின் பகுத்தறிவுப் பாடல்கள் மற்றும் மகேந்திரன் – கணபதி குழுவின் அரசியல் நையாண்டி நடைபெற்றது. செல்வராஜ், வெங்கடேஷ், கார்த்திகேயன் ஆகியோர் பரப்புரைக் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஈரோடு : ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதியான மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திராவிடர் விடுதலைக் கழகமும் சமூகநீதி கூட்டமைப்பும்...

பாஜகவின் சட்டவிரோத முயற்சி தகர்ப்பு!

பாஜகவின் சட்டவிரோத முயற்சி தகர்ப்பு!

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகம் அருகில் 27.02.2024 அன்று பாஜகவினர் தேர்தல் பணிமனையை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். தகவலறிந்த திருவல்லிக்கேணி பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் நேரில் சென்று உரிய அனுமதியின்றி இங்கு பாஜகவினர் தேர்தல் பணிமனையை திறக்க முயற்சிக்கின்றனர். எனவே காவல்துறை இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த பின்பு பாஜக தேர்தல் பணிமனை அமைக்கும் முயற்சியை கைவிட்டது. பெரியார் முழக்கம் 04.04.2024 இதழ்

பெரியார் முழக்கத்திற்கு ரூ.5,000 வளர்ச்சி நிதி

பெரியார் முழக்கத்திற்கு ரூ.5,000 வளர்ச்சி நிதி

சென்னை : வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன் குடும்பத்தினரின் இல்லத் திறப்பு விழா 14.04.2024 அன்று அயன்புரம் முனுசாமி தெருவில் நடைபெறுகிறது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று பெரியார் – அம்பேத்கர் – மார்க்ஸ் கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தந்தை பெரியார் இல்ல கல்வெட்டை திறந்து வைக்கிறார். இல்லத் திறப்பு விழாவின் மகிழ்வாக கழக வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம் இதழுக்கு ரூ.5000/- வளர்ச்சி நிதி வழங்கியுள்ளார். தொடர்புக்கு : 9445109323, 7550178401 பெரியார் முழக்கம் 04.04.2024 இதழ்

கோவை, சேலம், சென்னை வேட்பாளர்களுக்கு நேரில் வாழ்த்து!

கோவை, சேலம், சென்னை வேட்பாளர்களுக்கு நேரில் வாழ்த்து!

ஈரோடு : இந்தியா கூட்டணியின் ஈரோடு நாடாளு மன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கே.இ.பிரகாஷ் 22.03.2024 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். கோவை : எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை 26.03.2024 அன்று கோவை மாநகர மாவட்டக் கழக நிர்வாகிகள் சந்தித்து தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். கோவை மாவட்டக் கழகச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், மாவட்ட அமைப்பாளர் புரட்சித் தமிழன், மாநகரத் தலைவர் நிர்மல் குமார், மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன், மாதவன், சதீஷ், பொங்கலூர் கார்த்தி, வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர். சேலம் : சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை 27.03.2024 அன்று சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் தலைமையில் கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும்...

ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து கழக செயலவை தீர்மானம்

ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து கழக செயலவை தீர்மானம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவைக் கூட்டம் 21.03.2024 வியாழக்கிழமை அன்று ஈரோடு பவானி சாலையில் உள்ள கே.கே.எஸ்.கே மஹாலில் நடைபெற்றது. செயலவை கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமை தாங்கினார். கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம.இளங்கோவன் அறிமுக உரையாற்றினர். தொடர்ந்து கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் காணொளி வாயிலாக சென்னையில் இருந்து கூடியிருந்த தோழர்கள் மத்தியில் நேரலையில் உரையாற்றினார். அவர் தனது உரையில் கழகம் கடந்து வந்த பாதை, ஆற்றிய பணிகள், நம் முன் இருக்கும் சவால்கள், பரப்புரையில் புதிய யுக்திகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம், சமூக வலைதள பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து விரிவாக உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கழக மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட, மாநகர பொறுப்பாளர்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரும் பாஜக அரசை வீழ்த்த வேண்டிய அவசியம் குறித்தும், திமுக கூட்டணியை ஆதரித்து தாங்கள் செய்த பரப்புரைகள் குறித்தும், அதில்...

சென்னை: புதிய தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

சென்னை: புதிய தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

சென்னையைச் சேர்ந்த தௌஃபிக் மற்றும் லியோ மார்ஷல் ஆகிய இரு இளைஞர்கள் 02.03.2024 அன்று சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். சென்னை கிண்டியை சேர்ந்த ஐ.டி ஊழியரான அபிநந்தன் கிருஷ்ணன், 17.03.2024 அன்று சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார். உடன் அருண்குமார், அருண்கோமதி, அன்னூர் விஷ்ணு. இந்நிகழ்வு இராயப்பேட்டை வி.எம் தெரு பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம், நாராயணக் குப்பத்தைச் சேர்ந்த இரா.வீரமணி – ஏ.கார்ஷீலா ஆகியோரின் இணையேற்பு விழா 22.02.2024 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. பெரியார் முழக்கம் 21032024 இதழ்

கோவை ஃபாருக்கின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்

கோவை ஃபாருக்கின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்

கோவை : இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கோவை மாநகர் மாவட்டக் கழக செயல்வீரர் தோழர் ஃபாரூக்கின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் 16.03.2024 அன்று காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய முற்போக்கு கூட்டியக்கத் தலைவர் யூ.கலாநாதன் அவர்களின் படத்தை தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். நிகழ்வை ததிசுக தலைவர் நேருதாசு தலைமை தாங்கினார். இதில் தோழமை இயக்கத்தினர் கலந்து கொண்டு நினைவேந்தல் உரையாற்றினர். ஜின்னா மாச்சு, வழக்கறிஞர் PUCL பாலமுருகன் ஆகியோர் ஃபாரூக் வழக்கு நடைபெறுவது குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் மறைந்த தோழர் ஃபாரூக் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கழக சார்பில் மாநகரத் தலைவர் நிர்மல் குமார், செயலாளர் வெங்கடேசன், அமைப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் புரட்சித்தமிழன், சதீஷ், இராஜாமணி, நவீன், அறிவுக்கனல் கலந்து கொண்டனர்‌ பெரியார் முழக்கம் 21032024 இதழ்

கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், ஆத்தூர், மதுரையில் பரப்புரைகள் தீவிரம்

கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், ஆத்தூர், மதுரையில் பரப்புரைகள் தீவிரம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! என்ற முழக்கத்தோடு 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல்கட்ட பரப்புரைக் கூட்டமானது மார்ச் 15,16 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. மார்ச் 14ஆம் தேதி மூரார்பாளையம், கள்ளக்குறிச்சி மந்தைவெளி, சின்ன சேலம் பேருந்து நிலையம், நைனார்பாளையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் கா.மதியழகன் தலைமை தாங்கினார். இதில் மக்கள் அதிகாரம் கள்ளக்குறிச்சி மாவட்டப் பொறுப்பாளர் ராமலிங்கம், சின்ன சேலம் விசிக ஒன்றியச் பொருளாளர் மைக்கேல், அஜித், வழக்கறிஞர் ஆனந்த், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் க. ராமர், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.ஆ.இளையரசன், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் சாக்ரடீசு, விசிக தலித் சந்திரன் தபெதிக மாவட்டச் செயலாளர் செ.பிரபு ஆகியோர் பரப்புரைக் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்கள். இரண்டாவது நாளாக 16.3.2024 அன்று மு.நாகராஜ்...

குருவரெட்டியூர் மகேஸ்வரி காலமானார் பெண்கள் முன்னின்று இறுதி நிகழ்வுகளை செய்தனர்

குருவரெட்டியூர் மகேஸ்வரி காலமானார் பெண்கள் முன்னின்று இறுதி நிகழ்வுகளை செய்தனர்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் குருவரெட்டியூர் தோழர் நாத்திகசோதி அவர்களின் இணையர் தோழர் மகேஸ்வரி அவர்கள் 13.03.2024 காலை மறைவுற்றார். அவரது கண்கள் ஈரோடு அரசன் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழக பெண் தோழர்கள் மறைந்த அம்மையாரின் உடலை சுமந்து சென்று இறுதி ஊர்வலத்தை தலைமை ஏற்று நடத்தினர். இறந்தவர்களின் உடலை பெண்கள் சுமக்க கூடாது, சுடுகாடு வரை பெண்கள் வர கூடாது என்ற மூடத்தனத்தை மறுத்து. மத, ஜாதிய சடங்குகளை மறுத்து பெண்களே முன்னின்று இறுதி நிகழ்வுகளை நடத்தினர். இந்நிகழ்வு குருவரெட்டியூர் பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இறுதி நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் திராவிடர் கழக, திராவிடர் விடுதலைக் கழக, மாநில மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக மறைந்த தோழர் மகேஸ்வரி அவர்களின் பட திறப்பும் நினைவேந்தல்...

பெரியார் பெருந்தொண்டர் இனியன் பத்மநாபன் காலமானார்

பெரியார் பெருந்தொண்டர் இனியன் பத்மநாபன் காலமானார்

திருச்சி : பெரியார் பெருந்தொண்டரும், ஈரோடு மாவட்டக் கழக ஆலோசகருமான அய்யா இனியன் பத்மநாபன் (97) வயது முதிர்வினால் 15.03.2024 அன்று முடிவெய்தினார். அவரது உடல் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது. அய்யாவின் உடலுக்கு ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் எழிலன், கிருட்டிணன், பிரபு, திருப்பூர் சங்கீதா, தனபால், முத்து ஆகியோர் கழகக் கொடியைப் போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார்கள். அவரது உடலை கழகப் பெண் தோழர்களே சுமந்து சென்றனர். பின்னர் எந்தவித மூட சடங்குகளுமின்றி அவரது உடல் எரியூட்டப்பட்டது. இறுதி நிகழ்வில் மணப்பாறை பாலசுப்பிரமணியம், வையம்பட்டி ஒன்றியப் பொறுப்பாளர் – துரை காசிநாதன், திமுக தலைமைக் கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழக நகரச் செயலாளர் சி.எம்.எஸ்.ரமேஷ், விசிக நகரச் செயலாளர் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு அய்யாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். பெரியார் முழக்கம் 21032024 இதழ்

சேலத்தில் மோடிக்கு கருப்புக் கொடி

சேலத்தில் மோடிக்கு கருப்புக் கொடி

இன்று 19.03.2024 சேலத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்காக வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை, சேலம் மாநகர செயலாளர் ஆனந்தி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியார் முழக்கம் 21032024 இதழ்

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு; ஈரோடு செயலவைக் கூட்டத்தில் தீர்மானம்

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு; ஈரோடு செயலவைக் கூட்டத்தில் தீர்மானம்

21.03.2024 வியாழன் அன்று ஈரோடு, கே.கே.எஸ்.கே மகாலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். இந்தியாவில் நடப்பது அரசியல் போராட்டம் அல்ல: ஆரிய திராவிடப் போராட்டம் என்றார் பெரியார். நாடு சுதந்திரம் பெற்றது என்று அறிவிக்கப்பட்ட போது இது சுதந்திரம் அல்ல; பார்ப்பன பனியாவுக்கு அதிகாரத்தை மாற்றும் நாள் என்பதே பெரியாரின் நிலைப்பாடு. பெரியார் எச்சரித்த அந்த போராட்டம் தான் எதிர்வரும் தேர்தல் களத்தில் மைய கருத்தியலாக உருப்பெற்று இருக்கிறது. ஆரியம், சனாதனம் என்ற முகமூடியுடன் களத்திற்கு வந்துள்ளது. திராவிடம் தனது உண்மையான அடையாளத்தோடு சனாதனத்தை எதிர்கொண்டு வருகிறது. திராவிட சனாதன (பார்ப்பனியம்) முரண்பாடுகள் கூர்மை அடைந்து வருகின்றன. கோடான கோடி விளிம்பு நிலை இந்து மக்கள் சனாதனம் சுமத்திய சுரண்டல் அநீதிகளுக்கு பலிகடாவாக்கப்பட்டனர். இதை நேர் செய்வதற்கு சமூக நீதி, அதிகார பங்கீடு, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை,...

சென்னையில் எழுச்சியோடு நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சி

சென்னையில் எழுச்சியோடு நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சி

சென்னை : அன்னை மணியம்மையார் 105வது பிறந்தநாள் மற்றும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மகளிர் சந்திப்பு நிகழ்வு 10.03.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. பிரீத்தி வரவேற்புரை யாற்றினார். தொடர்ந்து கழகத் தோழர்கள் இரண்யா, தேன்மொழி, ரம்யா ஆகியோர் பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்துரை வழங்கினர். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் தோழர் சிவகாமி, சமூக செயற்பாட்டாளர்கள் அக்னி – மரக்கா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். மதிய உணவிற்கு பிறகு தோழர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நிறைவாக யாழினி நன்றி கூறினார். திருப்பூர் : உடுமலையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் 08.03.2024 அன்று நடந்த மகளிர் தின விழாவில் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 15032024...

கொளத்தூரில் தோழர் செல்லமுத்துவின் நினைவேந்தல் நிகழ்ச்சி

கொளத்தூரில் தோழர் செல்லமுத்துவின் நினைவேந்தல் நிகழ்ச்சி

சேலம் : கொளத்தூர் நிர்மலா பள்ளி ஆசிரியரும் கழகத் தோழருமான செல்வேந்திரனின் தந்தை பெ.செல்லமுத்து கடந்த 04.03.2024 அன்று முடிவெய்தினார். அவரது உடலுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பெ. செல்லமுத்துவின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம் 10.03.2024 அன்று கொளத்தூர், உக்கம் பருத்திக்காட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. முன்னதாக மறைந்த தோழர் பெ. செல்லமுத்துவின் படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்திற்கு கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் இரா. விஜயகுமார் தலைமை தாங்கினார், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார், உக்கம்பருத்திக்காடு கிளைத் தலைவர் சுப்பிரமணியம், TNEB ஈரோடு பெ.அன்புச்செழியன், மருத்துவர் வ.ப.வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் கண்ணம்மாள், நிர்மலா மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ம.விஜய் அமுல்ராஜ் ஆகியோர் தோழர் செல்லமுத்து அவர்களுடனான தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்....

திருப்பூர், கடலூர், மதுரையில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்” பொதுக்கூட்டம்!

திருப்பூர், கடலூர், மதுரையில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்” பொதுக்கூட்டம்!

திருப்பூர் : திருப்பூர் மாவட்டக் கழக சார்பில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!” எனும் முழக்கத்தோடு 2024 பாராளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் 05.03.2024 அன்று குன்னத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு குன்னத்தூர் பகுதிப் பொறுப்பாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார், குன்னத்தூர் சின்னச்சாமி, திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, தமிழ்நாடு மாணவர் கழக மகிழவன், தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் முகில் ராசு, கழக சமூக வலைதளப் பொறுப்பாளர் பரிமளராசன் ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி சிறப்புரையாற்றினார். 15 வேலம்பாளையம் பொறுப்பாளர் மாரிமுத்து நன்றி கூறினார். இதில் மாநகர அமைப்பாளர் மாதவன், சரஸ்வதி மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கடலூர் : கடலூர் மாவட்டக் கழக சார்பில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!”...

காஞ்சி பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர்!

காஞ்சி பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர்!

காஞ்சிபுரம் : பாசிச பாஜகவை வீழ்த்துவோம்! ஜனநாயக இந்தியாவைக் கட்டமைப்போம்! என்ற கொள்கை முழக்கத்தோடு காஞ்சி மக்கள் மன்றத்தின் பேரணி – பொதுக்கூட்டம் – கலை நிகழ்ச்சிகள் 09.03.2024 அன்று காஞ்சி பெரியார் நினைவுத் தூண் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ரவிபாரதி, பெங்களூர் சித்தார்த்தன், அருண்குமார், எட்வின் பிரபாகரன், சூர்யா, மயிலை குமார், அன்னூர் விஷ்ணு, உதயா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 15032024 இதழ்

பெரியார் முழக்கம் இதழுக்கு ரூ.1,000 வளர்ச்சி நிதி

பெரியார் முழக்கம் இதழுக்கு ரூ.1,000 வளர்ச்சி நிதி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம், நாராயணக் குப்பத்தைச் சேர்ந்த இரா.வீரமணி – ஏ.கார்ஷீலா ஆகியோரின் இணையேற்பு விழா 22.02.2024 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஈரோடு இரா.வீரமணி, கழகத் தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வை கழக கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் க.இராமர் ஒருங்கிணைத்தார். முன்னதாக விடுதலைக் குரல் குழுவின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இணையேற்பு விழாவின் மகிழ்வாக மணமக்கள் கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழ் வளர்ச்சி நிதியாக ரூ.1000/- நன்கொடையாக வழங்கினார்கள். பெரியார் முழக்கம் 15032024 இதழ்

மார்ச் 22-இல் கழக செயலவை கூடுகிறது!

மார்ச் 22-இல் கழக செயலவை கூடுகிறது!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில செயலவைக் கூட்டம் ஈரோட்டில் மார்ச் 21 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடைபெற உள்ளது. நாள் : 21.03.24 வியாழன் நேரம் : காலை 9.30 மணி முதல் இடம் : கே.கே.எஸ்.கே மகால், பவானி சாலை, ஈரோடு. பொருள் : • 2024 பாராளுமன்றத் தேர்தலில் கழகத்தின் நிலைப்பாடு. • கழகத்தின் எதிர்கால செயல் திட்டங்கள். • நடைபெற்று வரும் பரப்புரை பயண அனுபவங்கள். கழகத்தின் செயலவை உறுப்பினர்கள் (மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்கள்) இந்த செயலவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். – தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். 11.03.2024 பெரியார் முழக்கம் 15032024 இதழ்

தோழர் திலீபன் உள்ளிட்டோர் மீதான வழக்கு ரத்து

தோழர் திலீபன் உள்ளிட்டோர் மீதான வழக்கு ரத்து

வேலூர் : ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கழகத் தலைவர் திலீபன், பெரப்பேரி கிராமத்தில் பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை அகற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த எதிர்த்தரப்பு தோழர் திலீபனை கடுமையாகத் தாக்கியது. தோழர் திலீபனை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி 17.04.2023 அன்று ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கழக சார்பில் பானாவரம் காவல்நிலையம் முற்றுகையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கழகத் தோழர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 01.03.2024 அன்று தீர்ப்பானது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 40க்கும் மேற்பட்டோர் மீது போடப்பட்ட வழக்குப்பதிவை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி ஆனந்த வெங்கடேசன். இந்த வழக்கில் கழக சார்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் 07032024 இதழ்

வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு கழகம் ஆதரவு

வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு கழகம் ஆதரவு

சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றுவரும் உண்ணா விரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வழக்கறி ஞர்களை கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா‌.உமாபதி ஆகியோர் 02.03.2024 அன்று சந்தித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தங்களது ஆதரவை தெரிவித்தனர். இராஜேஷ், அருண் கோமதி, எட்வின் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 1-இல் ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் திருப்பூர் மகிழவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 07032024 இதழ்

உடுமலையில் கழக சார்பில் பரப்புரை இயக்கம்

உடுமலையில் கழக சார்பில் பரப்புரை இயக்கம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! தெருமுனைக் கூட்டங்கள் 20.02.24 மற்றும் 21.02.24 ஆகிய இரு நாட்கள் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது. உடுமலை பேருந்து நிலையம் முன்பு, பெதப்பம்பட்டி, துங்காவி, காரத் தொழுவு, கணியூர், வடதாரை பூளவாடி பிரிவு, ஐந்து முக்கு, பேரறிஞர் அண்ணா சிலை, மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதில் மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் கணக்கன், ஒன்றிய செயலாளர் சிவானந்தம், ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், உடுமலை பகுதி பொறுப்பாளர் இயல்,கழகப் பொருளாளர் துரைசாமி, கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், கழக திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து, தமிழ்நாடு மாணவர் கழகம் மகிழவன், திவிக தாராபுரம் நகரப் பொறுப்பாளர் செல்வராசு, திருப்பூர் அய்யப்பன், சரசுவதி, விசிக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார், திராவிட இயக்கத் தமிழர் பேரவை தங்கவேல், உடுமலை முற்போக்கு கூட்டமைப்பு...

நங்கவள்ளியில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் பொதுக்கூட்டம்

நங்கவள்ளியில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் பொதுக்கூட்டம்

சேலம் : சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் தானாபதியூரில் இந்து முன்னணியின் தடையைத் தகர்த்து சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! 2024 தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் 03.03.2024 அன்று தானாபதியூர் பகுதியில் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் பறை முழக்கம் மற்றும் சர்வாதிகார BJP அரசின் அவலங்களை விளக்கி பாடல்கள் பாடப்பட்டது. தொடர்ந்து கார்ப்பரேட் சாமியார்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் காவை இளவரசன் அவர்களின் மந்திரமல்ல – தந்திரமே என்கின்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. வனவாசி நகர செயலாளர் பழ.உமாசங்கர் வரவேற்புரை நிகழ்த்த மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு தலைமையுரையாற்றினார். தொடர்ந்து கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் சக்திவேல், தானாபதியூர் தி.மு.க.இளைஞரணி சந்திரசேகரன், இளம்பிள்ளை திவ்யா, நங்கவள்ளி CPI ஒன்றியச் செயலாளர் பழ. ஜீவானந்தம், தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் திருமதி வழக்கறிஞர் முத்து...

கோவையில் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கம்; கழக ஏட்டுக்கு 75,000 நன்கொடை

கோவையில் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கம்; கழக ஏட்டுக்கு 75,000 நன்கொடை

திராவிட இயக்கத் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் 55ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்டக் கழக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கம் 02.03.2024 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்றது. எம்.ஆர்.இராதா கலைக்குழுவின் பகுத்தறிவுப் பாடல்களுடன் கருத்தரங்கம் தொடங்கியது. சூலூர் தமிழ்செல்வி கருத்தரங்கை தொகுத்து வழங்கினார். மாவட்ட அமைப்பாளர் புரட்சித் தமிழன் தலைமை தாங்கினார், மாதவன் சங்கர் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து “கோயில்களும் சமூகநீதியும்” என்ற தலைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழக தேசிய செயலாளர் வழக்கறிஞர் ச.பாலமுருகன், திராவிட முன்னேற்றக் கழக கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் அன்புச் செழியன், திராவிட இயக்க செயல்பாட்டாளர் லோகநாயகி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “அறிஞர் அண்ணாவும் தமிழ்நாடும்” என்ற தலைப்பில் நிறைவுரையாற்றினார். கருத்தரங்கின் முடிவில் ஜெகதீசன், கார்த்திக் ஆகியோர் கழகத் தலைவர் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு கழகத்...

கழகத்தின் தெருமுனைக் கூட்டங்களுக்கு மக்களிடம் வரவேற்பு! சேலம், திண்டுக்கல், சென்னையில் முழுவீச்சில் பரப்புரை!

கழகத்தின் தெருமுனைக் கூட்டங்களுக்கு மக்களிடம் வரவேற்பு! சேலம், திண்டுக்கல், சென்னையில் முழுவீச்சில் பரப்புரை!

சென்னை : சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! பரப்புரைக் கூட்டங்கள் வட சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை, சைதாப்பேட்டை கங்கையம்மன் கோயில் தெரு, சேத்துப்பட்டு அம்பேத்கர் திடல், மங்களாபுரம், ஓட்டேரி அஞ்சு லைட், ஜாயின்ட் அலுவலகம், அயன்புரம் உள்ளிட்ட இடங்களில் பிப்ரவரி 20 முதல் பிப்ரவரி 24 வரை நடைபெற்றது. உமாபதி – பொன்ராஜ் குழுவின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சி மற்றும் ஈரோடு பேரன்புவின் ராப் இசை பாடல்களுடன் ஒவ்வொரு கூட்டமும் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், எட்வின் பிரபாகரன், அருண் கோமதி, பெரியார் நம்பி, மக்கள் அதிகாரம் காமராஜ், துணைவேந்தன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். மேற்கண்ட கூட்டங்களை வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தட்சிணாமூர்த்தி, ஏசு குமார், ராஜன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். திண்டுக்கல் : சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!...

சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளித்து காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். சென்னை : நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ‘சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்’ என்ற தலைப்பில் சேலம் மேட்டூரில் உள்ள தானாபதியூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் பிப்ரவரி 24ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்தத் திராவிடர் விடுதலைக் கழகம் திட்டமிட்டிருந்தது. இந்தக் கூட்டத்தை நடத்த சேலம் ஜலகண்டபுரம் காவல்நிலையத்தில் அனுமதி கேட்டுக் கடந்த பிப்.10ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. ஆனால், சட்ட ஒழுங்கைச் சுட்டிக்காட்டியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று கூறியும் கூட்டம் நடத்த அனுமதி மறுத்து சேலம் ஜலகண்டபுரம் காவல்துறை அந்த மனுவை நிராகரித்தது. இதை எதிர்த்தும், சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த...

சென்னையில் ஆணவப் படுகொலை!

சென்னையில் ஆணவப் படுகொலை!

சென்னை : வேளச்சேரி அருகே உள்ள பள்ளிக்கரணையில் பிரவீன் என்கிற ஆசிக் என்ற இளைஞர் 24.02.2024 அன்று ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். தகவலறிந்து சென்னை மாவட்டக் கழகத்தின் அறிவுறுத்தலின் படி மடிப்பாக்கம் பகுதிச் செயலாளர் ம. கி. எட்வின் பிரபாகரன், அட்டி அருண் ஆகியோர் பிரவீனின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதில் கழகத் தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், மக்கள் குடியரசு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜான் மண்டேலா ஆகியோர் பங்கேற்றனர் பின்னர் வழக்கறிஞர் ரமேஷ் பெரியார், அருள் ஜெகன், ஏதுசாமி, மோகன் உள்ளிட்ட தோழர்களை சந்தித்து ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். சென்னை போன்ற மாநகரங்களிலேயே ஆணவப் படுகொலை செய்யும் அளவுக்கு ஜாதியவாதிகளுக்கு துணிச்சல் அதிகரித்திருப்பது கவலைக்குரிய ஒன்று. ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான கடுமையான சட்டத்தை அமல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழ்நாடு அரசு இதுகுறித்து உடனடியாக பரிசீலிக்க வேண்டியது அவசியமாகிறது....

பரப்புரையில் பம்பரமாய்ச் சுழலும் திண்டுக்கல் – சென்னை மாவட்டங்கள்

பரப்புரையில் பம்பரமாய்ச் சுழலும் திண்டுக்கல் – சென்னை மாவட்டங்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டக் கழக சார்பில் 2024 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! பரப்புரை இயக்கம் 11.02.2024 அன்று நெய்காரபட்டி, காவலப்பட்டி, வேலாயுதம்பாளையம் புதூர், பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், வயலூர், மிடாப்பாடி, குமாரபாளையம், குருவன்வலசு, தாழையூத்து, சின்னக்கலையம்புத்தூர், மானூர், நரிக்கல்பட்டி, மேல்கரைப்பட்டி, கீரனூர், தொப்பம்பட்டி, வாகரை, புளியம்பட்டி, அமரபூண்டி, விருப்பாச்சி, சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, மாட்டுப்பாதை, கணக்கன்பட்டி, பொருளூர், கள்ளிமந்தயம், கொ.கீரனூர், I.வாடிப்பட்டி, சக்கம்பட்டி, சிந்தலப்பட்டி, அம்பிளிக்கை, இடையகோட்டை, மார்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, வெரியப்பூர், கேதையறும்பு, லெக்கயன்கோட்டை, அத்திக்கோம்பை, தும்பிச்சம்பட்டி, ஒட்டன்சத்திரம் இரயில் நிலையம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம், மூலச்சத்திரம், ஸ்ரீராமபுரம், கன்னிவாடி, தருமத்துப்பட்டி, ஆத்தூர், சித்தயன்கோட்டை, செம்பட்டி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் பத்து நாட்களாக தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. புளியம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தை கவனித்த பெரியார் தொண்டர் ஒருவர் மாலை ஒன்றை வாங்கி பெரியார் படத்திற்கு மாலை அணிவித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது....

ஜாதி மறுப்பு இணையர்களுக்கு மதுரையில் பாராட்டு விழா

ஜாதி மறுப்பு இணையர்களுக்கு மதுரையில் பாராட்டு விழா

மதுரை : காதலர் தினத்தையொட்டி மதுரை மாவட்டக் கழக சார்பில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் வாசுகி வரவேற்புரையாற்றினார், மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.பா.மணி அமுதன் தலைமை தாங்கினார். ஆதித்தமிழர் கட்சித் தலைவர் கு.ஜக்கையன், அதிமமுக பொதுச் செயலாளர் பசும்பொன்.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் வெ.கனியமுதன், தமிழ்ப்புலிகள் கட்சி தென்மண்டல பொறுப்பாளர் கனகராஜ் ஆகியோர் உரையாற்றினார்.. முன்னதாக ஜாதி மறுப்பு இணையர்களுக்கு தமிழ்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் இன்குலாப் ஆகியோர் நினைவுப் பரிசினை வழங்கினர். தொடர்ந்து ஜாதி மறுப்பு இணையேற்பு நடத்தி சட்ட போராட்டம் நடத்தும் தோழர்களான கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரனுக்கு ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் நினைவுப் பரிசு வழங்கினார். தமிழ்நாடு ஜாதி மறுப்பு இணையர் நலச் சங்க செயலாளர் ரமேசு...

திருச்சியில் தெருமுனைக் கூட்டங்கள்

திருச்சியில் தெருமுனைக் கூட்டங்கள்

திருச்சி : திருச்சி மாவட்டக் கழக சார்பில் வைக்கம் நூற்றாண்டு மற்றும் எது திராவிடம்? எது சனாதனம்? என்ற தலைப்பில்  3.2.2024 அன்று திருவெறும்பூர் பேருந்து நிலையம், காட்டூர் கைலாஷ் நகர், காட்டூர் கடைவீதி உள்ளிட்ட இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தை குணராஜ் தொடங்கி வைத்தார். டார்வின் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத் தலைவர் தாமோதரன், மந்திரமில்லை! தந்திரமே!  பகுத்தறிவுக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா கருத்துரையாற்றினார். நிறைவாக குமரேசன் நன்றி கூறினார். நிகழ்வில் மணிகண்டன், சர்மிளா, ஜெய சீனிவாசன், அசோக், ஆறுமுகம், மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 15.02.2024

சேலம் மாவட்டக் கழகம் சார்பில் 525 சந்தாக்களை ஒப்படைப்பு

சேலம் மாவட்டக் கழகம் சார்பில் 525 சந்தாக்களை ஒப்படைப்பு

சேலம் கிழக்கு – மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்  10.02.2024 அன்று சேலம் கருப்பூர் சக்தி இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு பெரியார் முழக்க சந்தா தொகை ஒப்படைப்பு மற்றும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையாக  “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் ;சமூக ஒற்றுமையைக் காப்போம்” என்ற தலைப்பில் தெரு முனைக் கூட்டங்கள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. 11.02.2024 ஞாயிறு அன்று நங்கவள்ளியில் பொதுக் கூட்டத்துடன் பரப்புரையை தொடங்கி, சேலம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டு பெரியார் முழக்க சந்தா முதல் தவணையாக சேலம் மாவட்டத்தின் சார்பாக (கிழக்கு – மேற்கு) 525 சந்தாவிற்கு தொகையினை கழகத் தலைவரின் முன்னிலையில் தோழர்கள் ஒப்படைத்தனர். வருகின்ற 18.2. 2024 ஞாயிற்றுகிழமை எஞ்சிய பெரியார் முழக்க சந்தாக்களையும் மாவட்ட தலைமையிடம் ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மாவட்டத்திற்கான...

நாடாளுமன்றத் தேர்தலில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் எழுச்சியோடு தொடங்கியது கழகத்தின் பரப்புரை

நாடாளுமன்றத் தேர்தலில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் எழுச்சியோடு தொடங்கியது கழகத்தின் பரப்புரை

பிப்ரவரி 2-ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற கழகத் தலைமைக் குழுவில், “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!” என்ற முழக்கத்தோடு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பல்வேறு மாவட்டங்களிலும் கழகத்தின் பரப்புரைக் கூட்டங்கள் பொதுமக்களின் வரவேற்போடு எழுச்சியோடு தொடங்கி நடைபெற்று வருகின்றன. சென்னை: சென்னை மாவட்டத்தின் முதல் பரப்புரைக் கூட்டம் 10.02.2024 அன்று வேளச்சேரி காந்தி சாலையில் பொதுக்கூட்டமாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் எட்வின் பிரபாகரன் தலைமை தாங்கினார். இரண்யா வரவேற்புரையாற்றினார். பாடகர் கோவன் பங்கேற்ற ம.க.இ.க கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகளுடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. கழகத் தோழர் பேரன்பு ராப் பாடல்கள் பாடினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் இரா.உமா, கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் ஆகியோர் 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் பேராபத்துக்களை மக்களிடம் விளக்கிப் பேசினர். திராவிட முன்னேற்றக்...

கொளத்தூரில் “எது திராவிடம்? எது சனாதனம்?” பொதுக்கூட்டம்

கொளத்தூரில் “எது திராவிடம்? எது சனாதனம்?” பொதுக்கூட்டம்

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாள் பொதுக்கூட்டம் கொளத்தூர் நகர கழக சார்பில் 23.12.2023 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள கழக செயல்வீரர் இளஞ்செழியன் நினைவரங்கில் நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சியோடு பொதுக்கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார் தலைமை தாங்க, கொளத்தூர் நகர தலைவர் சி. ராமமூர்த்தி வரவேற்புரையாற்றினார். திமுக கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் ம. மிதுன் சக்கரவர்த்தி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை. ஈஸ்வரன், மேற்கு மாவட்டச் செயலாளர் சி. கோவிந்தராசு கிழக்கு மாவட்டத் தலைவர் க. சக்திவேல், நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், கிழக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் தங்கதுரை, மேட்டூர் நகரச் செயலாளர் சு குமாரப்பா, தி.மு.க. கொளத்தூர் நகரச் செயலாளர் பெ. நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் சதாசிவம், கழக தலைமைக்குழு...

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அது பின்வருமாறு:- சென்னை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை மாவட்டக் கழக சார்பில்  இராயப்பேட்டை, சிம்சன், எம்ஜிஆர் நகர், தியாகராயர் நகர், மயிலாப்பூர், கலைஞர் கருணாநிதி நகர், நங்கநல்லூர், பிவி நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கழகம் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது.   இந்நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழக பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். கோவை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கோவை மாவட்டக் கழக சார்பில் காந்திபுரம் பெரியார் சிலைக்கு கழகத் தோழர் கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை...

சந்தாக்களை விரைந்து அனுப்புங்கள்!

சந்தாக்களை விரைந்து அனுப்புங்கள்!

2024 ஜனவரி 15 முதல் அடுத்த ஆண்டுக்கான “பெரியார் முழக்கம்” சந்தா புதுப்பிக்கப்பட உள்ளதால், கழகத் தோழர்கள் மாவட்ட வாரியாக புதிய சந்தாக்களை விரைவாக 8973341377 என்ற எண்ணிற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். விடுதலை இராசேந்திரன், ஆசிரியர் புரட்சிப் பெரியார் முழக்கம் பெரியார் முழக்கம் 28.12.2023 இதழ்

நாட்காட்டி தயார்!

நாட்காட்டி தயார்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் 2024 ஆண்டிற்கான நாட்காட்டி தயார்! விலை : ரூ.70 (ரூபாய் எழுபது மட்டும்) + அஞ்சல் செலவு தனி குறைந்த எண்ணிக்கையிலேயே நாட்காட்டி அச்சிடப்படுவதால் தேவைப்படும் தோழர்கள் விரைந்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். முன்பதிவிற்கு, தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர், 9941759641 பெரியார் முழக்கம் 28.12.2023 இதழ்

கழகத் தலைவரிடம் வாழ்த்து

கழகத் தலைவரிடம் வாழ்த்து

தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கும் தோழர் லாவண்யா 21.12.2023 வியாழனன்று கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அதன் மகிழ்வாக கழக ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழ் வளர்ச்சி நிதியாக ரூ.2000/- வழங்கினார். பெரியார் முழக்கம் 28.12.2023 இதழ்

கழக வெளியீடுகளுக்கு ரூ.3 லட்சம் நன்கொடை ; கோபி இராம.இளங்கோவன் வழங்கினார்

கழக வெளியீடுகளுக்கு ரூ.3 லட்சம் நன்கொடை ; கோபி இராம.இளங்கோவன் வழங்கினார்

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் பெரியாரின் 50-வது நினைவு நாள் பொதுக்கூட்டம், 24.12.2023 அன்று மாலை 6.00 மணிக்கு குருவரெட்டியூர் பெரியார் திடல், தோழர் பிரகலாதன் நினைவரங்கில் சிறப்பாக நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகசோதி கூட்டத்திற்கு தலைமை வகிக்க, வேல்முருகன் வரவேற்புரையாற்றினார். மறைந்த தோழர் பிரகலாதன் படத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார். நிகழ்வின் தொடக்கத்தில் கோபி யாழ் திலீபன், அறிவுக்கனல் ஆகியோர் பாடல்கள் பாடினர். தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமிக்கு அடுத்ததாகப் பேசிய, கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், திராவிடம் – சனாதனம் குறித்து உரையாற்றினார். அப்போது, தோழர்கள் கழக வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொண்ட இராம. இளங்கோவன், அதற்கு முன்னுதாரணமாக கழக நூல் வெளியீட்டு திட்டங்களுக்காக தனது தனிப்பட்ட நிதியாக ரூ. 3,00,000. (மூன்று இலட்சம் ) வழங்குவதாக அறிவித்து, தலைவர் கொளத்தூர்...

இராசிபுரம் – கொளத்தூரில் திராவிட இயக்க சாதனை விளக்கக் கூட்டங்கள்

இராசிபுரம் – கொளத்தூரில் திராவிட இயக்க சாதனை விளக்கக் கூட்டங்கள்

கழகம் சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவருகிறது. கொளத்தூர் : கொளத்தூர் ஒன்றியக் கழக சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டம் 11-12-2023 அன்று மாலை 5மணிக்கு 9வது தெருமுனைக் கூட்டம் கோவிந்தப்பாடியிலும், 10வது தெருமுனைக் கூட்டம் கத்திரிப்பட்டி மலையாள தெருவிலும் நடைபெற்றது. டி.கே.ஆர் இசைக் குழுவின் பகுத்தறிவுப் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. திமுக கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார், மாணவர் அணி துணை அமைப்பாளர் சதாசிவம், முன்னாள் தலைவர் முனுசாமி, கிளைச் செயலாளர் கணேசன், செட்டிப்பட்டி கிளைச் செயலாளர் பழனிச்சாமி, குள்ளவீரன்பட்டி ஈஸ்வரன், கண்ணன் நெசவாளர் அணி, சுப்பிரமணி, தேவராஜ், பரத், இளங்கோ, கார்த்தி, குமார், கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொளத்தூர் நகரத் தலைவர் இராமமூர்த்தி, தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், வழக்கறிஞர் கண்ணகி,...

பெரியார் நினைவுநாள் : கழகம் முன்னெடுக்கும் நிகழ்ச்சிகள்

பெரியார் நினைவுநாள் : கழகம் முன்னெடுக்கும் நிகழ்ச்சிகள்

ஈரோடு வடக்கு : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்ட நிறைவுப் பொதுக்கூட்டம் 24.12.2023, ஞாயிறு மாலை 6 மணியளவில் குருவரெட்டியூர் பிரகலாதன் நினைவரங்கத்தில் நடைபெறுகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். சேலம் : சேலம் மாவட்டக் கழகம் சார்பில் 119 தெருமுனைக் கூட்டங்களை எழுச்சியுடன் நடத்தி முடித்துள்ளது. 120வது கூட்டம் பொதுக்கூட்டமாக 23.12.2023 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெறுகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். நிகழ்வில் டி.கே.ஆர் இசைக் குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெறும். தஞ்சாவூர் : பேராவூரணி கழகம் சார்பில் பெரியார் 50வது நினைவு நாள் – வைக்கம் நூற்றாண்டு – அம்பேத்கரின் 67வது நினைவுநாள் – எது திராவிடம்? எது சனாதனம்? கொள்கை...

கழக ஏட்டுக்கு அன்பு தனசேகர் நன்கொடை

கழக ஏட்டுக்கு அன்பு தனசேகர் நன்கொடை

கழகத் தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகரின் தந்தை தே. குப்புசாமி அவர்களின் 90வது பிறந்தநாள் விழா மற்றும் சந்திரா – குப்புசாமி ஆகியோரின் 60வது மணிவிழா, 17.12.2023 ஞாயிறு மாலை 6 மணிக்கு சைதாப்பேட்டை புனித தோமையர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.   இந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மக்கள் நல்வாழ்வு  மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். தொடர்ந்து அன்பு தனசேகர் “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழ் வளர்ச்சி நிதியாக ரூ.10,000 – யை கழகத் தலைவரிடம் வழங்கினார். இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், திமுக பொதுக்குழு உறுப்பினர் சைதை மா.அன்பரசு, குகன், சேத்துபட்டு இராசேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 21.12.2023 இதழ்

கழக நாட்காட்டி தயார்!

கழக நாட்காட்டி தயார்!

2024ம் ஆண்டுக்கான திராவிடர் விடுதலைக் கழக நாள்காட்டி தயாராக உள்ளது. தமிழுக்கும், தமிழர்களுக்காகவும் உழைத்த வெளிநாட்டு அறிஞர்களின் வண்ணப் புகைப்படங்கள் அடங்கிய நாள்காட்டி. தொடர்புக்கு : தபசி குமரன் – 99417 59641 தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் 21.12.2023 இதழ்

மதுரையில் சட்ட எரிப்பு நாள் – கழகத் தலைவர் பங்கேற்பு

மதுரையில் சட்ட எரிப்பு நாள் – கழகத் தலைவர் பங்கேற்பு

1957ல் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகள் எரித்து சிறை சென்ற – உயிர்நீத்த பெரியார் தொண்டர்களின் வீரஞ்செறிந்த வரலாற்றை நினைவுகூறும் சிறப்புக் கருத்தரங்கம் 10.12.2023 ஞாயிறு அன்று மாலை 5 மணிக்கு மதுரை மணியம்மை பள்ளியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மாவட்டக் கழக காப்பாளர் தளபதி தலைமை தாங்கினார், வாசுகி முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி வரவேற்புரையாற்றினார்.புரட்சிக் கவிஞர் பேரவை நாகபாலன், புரட்சிக் கவிஞர் மன்றம் பொறுப்பாளரும், மணியம்மை பள்ளி தாளாளருமான வரதராசன் ஆகியோர் தொடக்கவுரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவு எரிப்பு போராட்டத்திற்கான காரணங்களையும், பெரியார் தொண்டர்களின் வீரஞ் செறிந்த போராட்ட வரலாற்றையும் நினைவு கூர்ந்து சிறப்புரையாற்றினார். முன்னதாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய “அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு” நூலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் திருவெறும்பூர் அரசெழிலன்...

நம்பியூரில் சனாதன மோசடிகள் விளக்கம்

நம்பியூரில் சனாதன மோசடிகள் விளக்கம்

ஈரோடு வடக்கு : ஈரோடு வடக்கு மாவட்டக் கழக சார்பாக  03.12.2023  ஞாயிறு மாலை 04.30 மணியளவில் நம்பியூர் அஞ்சானூர் சமத்துவபுரத்தில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூடக்கரை கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டக் கழக அமைப்பாளர் கோபி நிவாசு, நம்பியூர் ரமேசு ஆகியோர் தொடக்க  உரையாற்றினார். தொடர்ந்து தலைமைக் கழக பேச்சாளர் கா.சு.வேலுச்சாமி, கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். அடுத்தக் கூட்டம் கூடக்கரையில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூடக்கரை பகுதி திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுப்பு (எ) சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தொடர்ந்து கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் நிறைவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எலத்தூர் செல்வக்குமார், கோபி அருளானந்தம், சத்தி முத்து, சித்தா பழனிச்சாமி, சின்னதம்பி, நம்பியூர் ஒன்றியச் செயலாளர் இரமேஷ், சிவராஜ், கூடக்கரை செல்வன், வழக்குரைஞர் தமிழரசன், பன்னீர் செல்வம், இராவணன், ராஜன் பாபு, குட்டி, புலவன்சிறை நடராஜன்,...

நங்கவள்ளியில் அம்பேத்கர் நினைவுநாள் கூட்டம்

நங்கவள்ளியில் அம்பேத்கர் நினைவுநாள் கூட்டம்

சேலம் : நங்கவள்ளி ஒன்றியக் கழக சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 67வது நினைவு நாளை ஒட்டி எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டம் 06.12.2023 அன்று புதன் மாலை 4 மணியளவில் வனவாசி மேல் ரோடில் நடைபெற்றது. டி.கே.ஆர் குழுவின் இசை நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் பொ.கிருஷ்ணன் தலைமை வகித்தார், ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், வனவாசி நகர தலைவர் செந்தில்குமார், நங்கவள்ளி அ.செ. சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நங்கவள்ளி நகரச் செயலாளர் சு.பிரபாகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், தலைமைக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சக்திவேல், சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏற்காடு தேவபிரகாஷ், CPI நங்கவள்ளி ஒன்றியக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், திராவிடத் தமிழர் கட்சி மாநில அமைப்பு செயலாளர் சீ.செல்வமுருகேசன், வனவாசி நகர செயலாளர் பழ.உமாசங்கர் ஆகியோர்...