Category: நிமிர்-கட்டுரைகள்

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம்

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம்

நிமிர்வோம் 17 ஆவது வாசகர் வட்டம்,  சென்னை தலைமை அலுவல கத்தில் 30.01.2021 அன்று மாலை 6 மணி யளவில் தொடங்கி நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் நாசர் புரூனோ, ‘சாதியின்  குடியரசு’ என்ற புத்தகத்தை திறனாய்வு செய்து உரையாற்றினார். இறுதியாக திராவிட இயக்க ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை, திமுக பொதுக்குழு உறுப்பினர் சைதை மா. அன்பரசன் விளக்கி உரையாற்றி னார். நிகழ்வை பெரியார் யுவராஜ் ஒருங்கிணைத்து, தொகுத்து வழங்கினார். பெரியார் முழக்கம் 04022021 இதழ்

நாடார் வரலாறு கறுப்பா? காவியா? – நூல் மதிப்பீட்டு உரை

நாடார் வரலாறு கறுப்பா? காவியா? – நூல் மதிப்பீட்டு உரை

‘#நாடார் வரலாறு கறுப்பா? காவியா?’ என்ற நூலை சமூக வரலாற்றுச் சான்றுகளுடன் எழுதியிருக்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய். தடைகள் எதிர்ப்புகளைக் கடந்து நீதிமன்ற அனுமதி பெற்று வந்திருக்கும் இந்த நூல் நாடார் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களின் சமூக வரலாறுகளை விவரிக்கிறது. இந்திய நிலப்பரப்பில் ஒடுக்கப்பட்டோர் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். இடுப்பில் குடம் வைத்துக் கொள்ளக்கூடாது; நகைகள் அணியக்கூடாது; ஆதிக்கவாதிகள் புதிதாக கோயில் கட்டினால், அதில் ஒடுக்கப்பட்டோர் குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட வேண்டும்; தலைப்பாகை அணியக்கூடாது; மீசை வைத்துக் கொள்ளக்கூடாது; ஓட்டு வீடுகளை கட்ட தடை; கோயிலுக்குள் நுழைய தடை; மார்பை மறைக்கத் தடை என்று இன்னும் எவ்வளவோ கொடுமைகளை ஒடுக்கப்பட்டோர் சந்தித்துள்ளனர். “ஆதிக்கவாதிகள், ஒடுக்கப்பட்டோர்” போன்ற பதங்கள் #துல்லியமில்லாதவை. ஒடுக்கப்பட்டோருள் ஆதிக்கவாதிகளும் உண்டு; ஆதிக்கவாதிகளுள் ஒடுக்கப்பட்டோரும் உண்டு. நாடார்களும் மேலே கண்ட ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகினர்; பிறரை ஒடுக்கவும் செய்தனர். 1931இல் திருவிதாங்கூர் சமஸ்தான ஒடுக்கப்பட்டோர் (Depressed Classes) பட்டியலில் “நாடார்” பெயர் உள்ளது....

சுற்றுச் சூழலில் ஜாதியம் – பார்ப்பனியம் – நக்கீரன்

பார்ப்பனியம் என்பது ஒரு சமூகக் கோட்பாடு. எப்படி முதலாளியம், மார்க்சியம், சூழலியம் போன்றவை ஒரு கோட்பாடோ, அதுபோன்றே இதுவும் ஒரு கோட்பாடு. சிலர் திரிப்பது போல இது இனவெறுப்பு சொல்லல்ல. பெரியார் திரும்பத் திரும்பச் சொன்னது போல எதிரி ‘பார்ப்பனர்’ அல்ல, ‘பார்ப்பனியம்’ என்கிற கோட்பாடு மட்டுமே. ஏனெனில் இந்தக் கோட்பாடுதான் ‘சாதியம்’ என்கிற அறமற்ற சிந்தனையை இம்மண்ணில் விதைத்தது. இந்தப் புரிதலோடு ‘சூழலியலில் சாதியம்’ என்கிற இக்கட்டுரைக்குள் நுழைய வேண்டுகிறேன். இந்த கருத்தரங்கிற்கு முதலில் இடப்பட்டிருந்த பெயர் ‘பெரியாரின் வேர்களைத் தேடி…’ என்பதாகும். அதனை முகநூலில் பதிவிட்டவுடன் ஓர் இயற்கை அன்பர் என்னிடம், ‘பெரியாருக்கும் சூழலியலுக்கும் என்ன தொடர்பு?” என்று கேட்டார். பெரியாருக்கும் சூழலியலுக்கும் ஒரு தொடர்பும் இல்லைதான். ஏனெனில் அவருடைய காலத்தில் தற்காலத்தைப் போல சூழலியல் சீரழிவு எதுவும் ஏற்படவில்லை. அதனால் அதைப் பேசவேண்டிய அவசியம் அவருக்கு ஏற்படவில்லை. சூழலியல் குறித்து பெரியார் எதையும் சிறப்பாக பேசிவிடவில்லை என்றாலும்...

பெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும் – முனைவர் இந்திரா

அனைத்து சமயங்களுமே பெண்களுக்கு எக்காலத்திலும் எதிரானவையே என்பது தெளிவான ஒன்று. சமயங்கள் எந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப் பட்டதோ அதைச் செய்யாமல் பெண்களை அடிமை செய்வதையும் அடக்குதலையுமே காலம் காலமாக செய்து கொண்டிருக்கின்றன. பெண்களை மையமாகக் கொண்டே அனைத்து அடிமைச் சடங்கு களையும் சமயம் என்ற ஆணாதிக்க உணர்வு ஏற்படுத்தி இதன் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டதோடு இன்றளவும் தொடர்ந்து கொண்டி ருக்கிறது. எனவேதான் பெரியார் சமயம் என்பது மிகப் பொய் கற்பனை என்றும், முழுப்பொய் என்றும் மக்களை குறிப்பாக பெண்களை ஏமாற்றுவதற்காவே ஏற்படுத்தப்பட்டதென்றும் கூறுகிறார். அன்றிலிருந்து இன்றுவரை பெண்கள் என்றாலே மென்மை யானவள் என்ற கருத்து நிலவுகின்றது.  அவள் இயல்பாகவே அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற குணங்களை உடையவள் என்று கூறப்படுகிறது. ‘அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்தல் நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப’                 – (களவு 8) என்று தொல்காப்பியார் கூறுகின்றார். இவ்வியல்புகளை உடையவராக பெண்கள் இருப்பதால்தான் தலைவி தன் காதலைத்...

கற்பின் பெயரால் …- ஓவியா அன்புமொழி

பொதுதளத்தில் பெண் உரிமை பேசும் ஆண்கள் கூட அவர்கள் ஒருவரை இழிவு செய்யப் பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகள் எல்லாம் பெண்ணின் உடல் சார்ந்துதான் இருக்கும். இன்றைக்கும்  இந்த  சமூகத்தில் பெண்களை அடிமைப்படுத்த  இங்கு பயன்படுத்தும் வார்த்தை கற்பு. இந்த வார்த்தை  ஒன்று தான் பெண்களின் உடல் மீதான வன்முறையை காலம் காலமாக நிகழ்த்தி கொண்டுவருகிறது. கற்பு  என்ற ஒன்றை வைத்து சங்க கால  இலக்கியம் முதல்  இன்றுள்ள  ஊடகம் வரை பெண்களை ஒரு புனித பிம்பமாக சித்தரித்து வருகிறது. இந்த புனித பிம்பத்தையும் , அடிமைத் தனத்தையும் முதலில் எதிர்த்து அதில் எந்த புனிதமும் இல்லை புடலங்காயும் இல்லை என்று போட்டு உடைத்த, உலகில்  ஒரே தலைவர் தந்தை பெரியார் மட்டுமே. இன்னும் ஒரு படி மேலே சென்று கற்பு  என்ற வார்தையை பகுபதமா பகாபதமா என்று அதன் இலக்கணத்தையே ஆராய்ந்து  கற்பு என்ற ஒன்று இருக்குமேயானால் அது ஒழுக்கம்  சார்ந்தது ...

பெரியார் கருத்தியலின் அய்ந்து முக்கியக் கூறுகள் – பேராசிரியர் ந. முத்துமோகன்

வரலாறு என்றால் என்ன? என்ற கேள்விக்கு, கார்ல் மார்க்ஸ், வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என்று பதில் கூறினார். வரலாறெங்கும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடு, மோதல் தொழில்படுகிறது என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். பெரியார் வருணங்கள், சாதிகள், இனங்கள் ஆகியவற்றுக்கிடையிலான முரண்பாடுகளும் மோதல்களும் போராட்டங்களும் தான் வரலாறு என்றார். பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் இருபதாம் நூற்றாண்டு முழுவதையும் தழுவி நிற்கும் அரசியல் செயல்பாட்டுப் பரப்பைக் கொண்டவர். இருபதாம் நூற்றாண்டில் மேற்கிலும் கிழக்கிலும் அறியப்பட்ட கொள்கைப் போக்குகளை சராசரித் தேவைகளுக்கு மேலான அளவுக்கு அவர் அறிந்திருந்தார். சனநாயகம், குடியரசுக் கொள்கை, சோசலிசம், மார்க்சியம், அராஜகம் போன்ற அரசியல் கொள்கைகளை அவர் அறிந்திருந்தார். மேற்கில் பிரஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி போன்ற மிகப் பெரும் சம்பவங்களின் கொள்கைப் பின்புலங்களை அவர் அறிந்திருந்தார். மேற்கு நாடுகளில் விஞ்ஞானத் தொழில் புரட்சி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது, அவற்றை அடிப்படையாகக் கொண்டு தத்துவங்களிலும் உலகப்பார்வைகளிலும் புரட்சி நடக்கத் தொடங்கி...

பெரியாரும் இந்தியப் பொதுவுடைமையாளர்களும்: உறவும் முரணும் – க. காமராசன்

பெரியார் கம்யூனிஸ்டுகளுடனான முரணுறவைப் பெரும்பாலும் நட்பானதாகப் பார்த்தார். எண்ணற்ற கம்யூனிஸ்ட்களுடன் மிக நெருக்கமான தனிப்பட்ட உறவைப் பேணினார் என்பதற்கு அக்கம்யூனிஸ்ட்கள் எழுதிய நினைவுக்குறிப்புகள் சான்றுகளாக உள்ளன. தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி (1879-1973) நீண்ட நெடுவாழ்வு வாழ்ந்து மறைந்த தமிழகச் சிந்தனையாளர்; தத்துவவாதி; அரசியல் வாணர்; சாதிமுறை ஒழிப்புப் போராளி. அவர் இந்தியத் தேசிய காங்கிரசில் அரசியல் பொது வாழ்வைத் தொடங்கினார்; சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றை உருவாக்கி தமிழக அரசியல் உலகில் சுமார் அய்ம்பது ஆண்டுகள் (1925-1973) ஒளி குன்றா நட்சத்திரமாகத் திகழ்ந் தார். பெரியார் எப்போதும் தன்னை ‘சமதர்மி’ என்றே அழைத்துக் கொண்டார். பெரியாருடைய ‘சமதர்ம’த்தை ‘சுயமரியாதை சமதர்மம்’ என்று ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை சுட்டுவார். பெரியார் அரசியல் வானில் உலாவிய காலத்தில் தான் தமிழகத்தில் பொது வுடைமை இயக்கமும் உரு பெற்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோன்றி, வளர்ந்து, பிளவுபட்டது. 1938ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்...

பெரியார் பார்வையில் ‘காதல்’ – கனல்மதி

“அன்பு நட்பு ஆசை ஆகியவற்றைத் தாண்டி காதல் என்பது புனிதமானது என்று உலகில் நிலவும் கருத்து ஆண் பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்கிறது.” பெரியாரின்  பெண்ணுரிமைச் சிந்தனை மற்ற சீர்திருத்தவாதிகள் கொண்டிருந்த பெண்ணுரிமை மீதான பார்வையை விட மிக ஆழமானதாகவும் நுணுக்கமானதாகவும் இருக்கிறது. அன்றைய பார்ப்பனிய ஆதிக்கம் நிறைந்த சமூகத்தில் பார்ப்பனர்களின் வேத சட்டங்களின்படி பெண்களை இச்சமூகம் வீட்டுப் பிராணிகளாய், அதை விடவும் அடிமைத் தன்மையுடன் தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்தி இருக்கிறது. இன்றும் மனுநூல் கூறும் விதிகள் வரிகள் மாறாமல் நம் சமூகத்தில் மிகச் சாதாரணமாக நடைமுறையில் இருப்பதும் பல இடங்களில் தொடர்ந்து மனுநூல் வரிகளையே மக்கள் பேசிக்கொண்டு செல்வதையும் பார்க்க முடிகிறது. காதல் என்பதைப் பற்றியோ, அல்லது ஆண்களும் பெண்களும் தங்கள் இணையைத் தேர்ந்தெடுப்பது பற்றியோ மனுதர்மம் சிந்திக்கக் கூட இடமளிக்கவில்லை. குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்து வைத்து, பின் கணவன் உயிருடன் இல்லை எனில் காலம்...

பெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம் – செந்தில், இளந்தமிழகம்

ஒவ்வொரு சிந்தனையாளருக்கும் ஓர் அற அடிப்படை என்று உண்டு. வள்ளுவரைப் பொருத்தவரை அவரது அற அடிப்படை என்பது வாய்மை, பொய்யாமை ஆகும். மார்க்சைப் பொருத்தவரை உழைப்பு, அறம். சுரண்டல் அறமற்றது. பெரியாரைப் பொருத்தவரை மாந்த நிகர்மை என்பதே அறம். தமிழர்களின் புதுமைக் கால வரலாற்றில் இருந்து பிரித்தெடுக்க முடியாத பெரியார் மீது குற்றாய்வுகள் மட்டுமின்றி அவதூறுகளும், வெறுப்புரைகளும் அதிகம் பரப்பப்படும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். இந்திய, தமிழக வரலாற்றுப் போக்கில் பெரியாரை நாம் புரிந்து கொள்வது எப்படி? இதனை உள்ளூர் வரலாறு மட்டுமின்றி உலகளாவிய வரலாற்றுப் போக்கின் ஊடாகப் பார்க்க வேண்டி இருக்கிறது. வரலாற்றுத் திருப்பம்: பெரியார் என்றால் அவரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் என்பதில் இருந்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அன்றைய தமிழக அரசியல் வெளி, இந்திய அரசியல் வெளி எப்படி இருந்தது? ஆங்கிலேயக் குடியேற்றத்திற்கு எதிரான இந்திய தேசிய இயக்கமே இந்தியா முழுவதும் மைய நீரோட்ட...

பெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’ – கொளத்தூர் மணி

பெரியாரை மூலத்தில் படிப்போம் என்பது தான் நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிற செய்தி, எனவேதான், குடிஅரசு என்ற இதழை தொகுத்துத் தர வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டோம். பெரியாரைப் பற்றி விளக்க வருபவர்கள், அவர்கள் விருப்பத்திற்கு விளக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரே பிரம்மச் சூத்திரத்திற்கு வெவ்வேறு உரையெழுதினார்கள். உரை எழுதப்பட்டதெல்லாம் தனித்தனி மதமாக மாறியது. சங்கரர் எழுதிய உரை, இராமானுஜர் எழுதிய உரை போன்றவை தனித்தனி மதங் களாகிப் போனது அது போன்று ஆகிவிடக் கூடாது. பெரியார் தன் நீண்ட வாழ்நாளில் அறிஞர்களை நோக்கி பார்த்து எழுதியவராக இருந்தது இல்லை. பாமரர்களைத் தேடிச் சென்று, அவர்களுடைய மொழியில், அவர்களின் அளவுக்கு இறங்கிச் சென்று, பேசிய உரைகள் தான் அவர்களுடையச் சிந்தனைகளாக அதிகம்  நாம் பெறுகிறோம்.எழுதியதை விட பேசியது தான் அதிகம்.  பெரியார், கோட்பாட்டு ரீதியாக, கோட்பாடு களுக்கு உள்ளடக்கி தனியாக எதையும் எழுதவில்லை. எனவே அதைப் புரிந்து கொள் பவர்கள் அதற்கு ஆளுக்கொரு விளக்கும் கொடுத்...

தேசியக் கல்விக் கொள்கை: விளிம்பு நிலை மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதி

1920ஆம் ஆண்டு வரை, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பெண்களுக்குப் பட்டம் அளிக்கப்படவில்லை. ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘விலங்குப் பண்ணை’ (யniஅயட கயசஅ), ‘1984’ போன்ற புதினங்கள் இன்றும் பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. எழுத்தறிவு இல்லாதவர் களுக்கு ஓட்டுரிமை இல்லை என்ற நிலையைக்கூட வரலாறு பதிவு செய்திருக்கிறது. இவை அனைத்தும், கல்வி என்பது ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் பெற்றுத்தரும் என்பதற்கான அடையாளச்சான்றுகள். துப்பாக்கிகளைவிடவும் புத்தகங்களைப் பார்த்து பயப்படும் ஆட்சி யாளர்கள் உண்டு என்பதைத்தான் கல்வி என்னும் கருவி காலந்தோறும் நிரூபித்து வருகிறது. அதனாலேயே அது எந்தவிதத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது என்பதையும் உற்று நோக்க வைக்கிறது. ‘இந்தியாவில் மையப்படுத்தப்பட்ட கல்வி (ஐனேயை உநவேசநன நனரஉயவiடிn) என்பதே குறிக்கோள்’ எனத் தொடங்கும் தேசியக் கல்விக்கொள்கை, என்னவெல்லாம் பேசி இருக்கிறது என்பதை எவ்வளவு உற்று நோக்குகிறோமோ, அதைப் போலவே அதை எப்படிப் பேசியிருக்கிறது என்பதையும் பார்ப்பது அவசியம். கல்வி என்பது, எப்படிப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்? கல்வியாளர்...

இராமானுஜர் சீர்திருத்தம் – நாமத்தை பூணூலை காப்பாற்றியதே தவிர சமத்துவத்தை உண்டாக்கியதா? பெரியார்

நிதானமும், சாந்தமும், பொறுமையும், கட்டுப்பாடும் கொண்டு வெறுப்பில்லாமலும், துவேஷமில்லாமலும் நல்ல வார்த்தையும், கூட்டுறவிலும், நயமாகவும், கெஞ்சியும் நமது நாட்டில் எத்தனை காலமாக (சீர்திருத்தம்) செய்து வந்திருக்கிறது? இதுவரை செய்து வந்த சீர்திருத்தங்கள் என்ன ஆயிற்று? இன்னும் எத்தனை நாளைக்குப் பரீட்சைப் பார்ப்பது என்கிற விஷயங்களை யோசித்தால் மேற்கண்ட வார்த்தைகள் சீர்திருத்தத்திற்கு விரோதிகளா யுள்ளவர்களிடம் மரியாதை பெறுவதற்காகவும், தங்களது சொந்த புகழுக்காகவும், பெருமைக் காகவும் பேசப்பட்ட வார்த்தைகள் அல்லது பலவீனத்தின் தோற்றம் என்று ஏற்படுமே ஒழிய வேறொன்றுமே இருக்காது. சிலர் இம் மாதிரியான நமது அபிப்பிராயத்திற்கு விரோத மாய் சில பெரியோர்களான விவேகானந்தர், காந்தி முதலியோர்களுடைய வார்த்தைகளை எடுத்துக் காட்டுவார்கள். இம்மாதிரியான அப்பெரியோர்களுடைய வார்த்தைக்கு நான் முற்றும் முரண்பட்டவன் என்பதை நான் கண்ணியமாய் ஒப்புக் கொள்ளுகிறேன். காரணம், அவ்வார்த்தைகள் சொன்ன பெரியோர்களை சுவாமியாகவும், மகாத்மாவாகவும் மக்கள் கொண்டாடினார்கள்; கொண் டாடுகிறார்கள்; படம் வைத்து பூசிக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவ்வார்த்தைகளால் சீர்திருத்தம் வேண்டிய...

கீதையின் வஞ்சகப் பின்னணி (3) கடவுள் மறுப்பாளர்களை இழிவுபடுத்தும் ‘கீதை’

பிரேம் நாத்பசாஸ் ஆங்கிலத்தில் எழுதிய நூலை – தமிழில் ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’ எனும் தலைப்பில் விடியல் பதிப்பகமும், சூலுர் வெளியீட்டகமும் இணைந்து வெளியிட்டுள்ளன. 1975ம் ஆண்டு, இந்நூலை எழுதிய பிரேம்நாத் பசாஸ் – ஒரு காஷ்மீரி. தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு – கடவுள் மறுப்புக் கொள்கைக் கண்ணோட்டத்தோடு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது இதன் தனிச் சிறப்பாகும். பெரியார் இயக்கத்துக்கான வரலாற்று ஆவணம் என்று கூறுமளவுக்கு, ஏராளமான வரலாற்றுச் செய்திகளை உரிய ஆதாரங்களுடன் தொகுத்தளித்துள்ளது. அதிலிருந்து சில முக்கிய பகுதிகள்:   ட    இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலான வாரன் ஹேஸ்டிங்ஸ் வேண்டு கோளை ஏற்று, கி.பி.1785இல் சார்லஸ் வில்கின்ஸ் என்பவர் முதன்முதலாக கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பல மேலை நாட்டு ஆய்வாளர்கள், இதற்குப் பிறகு தான் கீதையை ஆராய்ச்சி செய்யத் துவங்கினர். ட    ரிக் வேத காலத்தில் கருநிறம் கொண்ட ‘அரக்கனாக’ ஆரியர்களால் ஒதுக்கப்பட்ட...

கடவுளுக்கும் அறிவியலுக்கும் இடையிலான வழக்கு

வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட கலிலியோவின் வாக்குமூலம் மதம் அறிவியலாளர்களைக் கொடூரமாக தண்டித்தது. கலிலியோ பூமியே சூரியனை சுற்றுகிறது என்ற கண்டுபிடிப்புக்காக கத்தோலிக்க சபையின் எட்டாம் அர்பன் கலிலியோவை வீட்டுச் சிறையில் வைத்தார். இறுதிக்காலம் முழுவதையும் சிறையிலேயே அவர் கழித்தார். மதச்சபை முன் அவர் துணிவுடன் அளித்த வாக்குமூலம் இது. “கலிலியோ கலிலியாகிய நான் 1633ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22-ம் தேதியாகிய இன்று இந்தச் சபையின் முன்னால் எனது வாக்கு மூலத்தை அளிப்பதற்காக வரவழைக்கப்பட்டிருக் கிறேன். மதிப்புக்குரிய நீதிபதிகளும் மரியாதைக் குரிய அதிகாரிகளும் கற்றறிந்த கணவான்களும் இந்த அரங்கில் குழுமியிருக்கிறீர்கள். உங்கள் முன்னால் இந்த எளிய கைதி மிகுந்த பணிவோடு ஒரு சில வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது எனக்கு எதிரான வழக்கு மட்டுமல்ல. கடவுளுக்கும் அறிவியலுக்கும் இடையிலான வழக்கு. நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் இங்கே மோதிக்கொள்கின்றன. சூரியனை எதிர்க்க பூமி திரண்டு வந்திருக்கிறது. பகுத்தறிவுக்கு எதிராகப் பரலோகம் களம் இறங்கியிருக்கிறது. தேவனோடு...

கார்ப்பரேட் வரிக் குறைப்பு… பொருளாதார மந்த நிலையை சரி செய்யுமா? வரியைக் குறைத்திருக்க வேண்டியது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அல்ல… மக்கள் விரும்பி செலவு செய்யும் பொருள்களுக்குத்தான்.

“இந்தியப் பொருளாதாரத்தை சீர்செய்ய, மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் குளிர்காய்ந்து வருவது என்னவோ பெரு நிறுவனங்கள்தான். மோடி தலைமையிலான அரசு, இதை மறுபடியும் மறுபடியும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது’’ என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். கார்ப்பரேட் வரிக்குறைப்பு சில தினங்களுக்கு முன்பு, ‘‘இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை உருவாகவில்லை. சிறப்பாகத்தான் செயல்பட்டுக்கொண்டிருக் கிறது’’ என்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன். பிறகு அவரே, ‘‘இந்தியப் பொருளா தாரத்தில் மந்தநிலை கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது’’ என்றும் தெரிவித்தார். அத்துடன், மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி, “பொருளாதார மந்தநிலையை சீர்செய்வதற்காகவும், ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்கிலும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படு கின்றன’’ என்றார். இந்த நிலையில், சமீபத்தில் கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சிலின் 37ஆவது கூட்டத்தில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன். அந்த அறிவிப்பின்படி, `‘உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கார்ப்பரேட் வரி, 30 சதவிகிதத்திலிருந்து 25.2 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது....

ஆய்வாளர்கள் பார்வையில் பெரியார்

‘40 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்ட பெரியார் இன்று உயிரோடு இருந்திருந்தால் ‘தேசவிரோதிகளின்’ பட்டியலில் எந்த இடத்தில் இருப்பார் என்பதைக் கற்பனை செய்யத் தேவையில்லை. தமிழகத்தில் பெரி யாரைக் கொண்டாடுபவர் களும் இருக்கிறார்கள், வெறுப் பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இரண்டு தரப்பு களிலுமே அவர் தவிர்க்க வியலாத ஆளுமையாகவே இருக்கிறார். தமிழகத்துக்கு வெளியே குறிப்பாக ஆய்வுப் புலத்தில் பெரியாரை எப்படிப் பார்க்கிறார்கள்? வரலாற்றாளர் ராமச் சந்திர குஹா, நவீன இந்தியாவை வடிவமைத்த 21 சிற்பிகளில் ஒருவராக பெரியாரைக் கருது கிறார். தனது ‘மேக்கர்ஸ் ஆஃப் மாடர்ன் இந்தியா’ நூலில் காந்தி, தாகூர், அம்பேத்கர் வரிசையில் பெரியாரையும் சேர்க்கிறார். ‘புரட்சிகர சீர்திருத்தவாதி’ என்பது பெரியாரைப் பற்றிய அவரது கட்டுரையின் தலைப்பு. குஹாவின் நூலில் பெரியாரின் வாழ்க்கைச் சுருக்கத்தோடு அவரது தேர்ந் தெடுக்கப்பட்ட எழுத்தும் பேச்சும் மொழி பெயர்க்கப் பட்டு சேர்க்கப்பட்டுள்ளன. 1927இல் ஆகஸ்ட்டில் குற்றாலத் திலும் அதே ஆண்டு அக்டோ பரில் சென்னை பச்சையப்பன்...

இதுதான் கீதை குழப்பமும் முரண்பாடும்

கீதை மற்றொன்றையும் செய்கிறது என்று ஆய்வறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். எந்தவித உரிமையும் அளிக்கப்படாமல் வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு சமூகரீதியிலும் பொருளியல் ரீதியிலும் பின்னுக்கு தள்ளப்பட்ட மக்கள் எதையும் கேட்காமல், எந்தத் தேவைக்கும் குரல் எழுப்பாமல் ஆமைகளைப்போல் அடங்கிக் கிடப்பதற்கான மனப்பான்மையை இந்நூல் உருவாக்குகிறது. வளர்க்கிறது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்கின்ற மூடநம்பிக்கையை இவர்கள் மனத்தில் விதைத்து எவ்வித எழுச்சியும் ஏற்படாமல் கவனித்துக் கொள்ளும் கேவலமானதையும் கீதை செய்கிறது. அர்ச்சுனனின் அய்யங்களைத் தீர்க்கும் வகையில் கிருஷ்ணன் கூறியதாக எழுதப்பட்ட பாடல்கள் குழப்பத்தைத்தான் ஏற்படுத்துகின்றன. போரிடுவது சத்திரிய ஜாதி தர்மம். ஆகவே போரிடு. அறைகூவலை ஏற்றுப் போரிடு. இல்லையேல் கோழை எனத் தூற்றப்படுவாய். போரிட்டு வென்றால் அரச உரிமை. ஆகவே போரிடு. போரில் மாண்டாலும் மேல் உலகப் பதவி கிடைக்கும். எனவே போரிடு. என்றெல்லாம் போரிடத் தூண்டியவன் கிருஷ்ணன். அடுத்த நிமிடத்தில் “ஆசையைத் துறந்து,...

பகுத்தறிவுப் பாவலர் உடுமலை நாராயண கவி பா. விஜய் செப்டம்பர் 25-ந் தேதி உடுமலை நாராயண கவி பிறந்தநாள்.

கவிஞன் மானுடத்தின் ராஜ கம்பீரம். தோற்றத்தால் இளைத்தாலும், செல்வத்தால் சிறுத்தாலும் சீற்றத்தால் நிமிர்ந்து நிற்கும் ஆளுமையுடையவன் கவிஞன். யார் விமர்சிப்பினும் தன் படைப்பை உலகின் உச்சியில் வைத்து போற்றிக் கொள்வான். தன் கண்ணீரை யும் வியர்வையுமே தன் படைப்புகளுக்கு பாசனமாக ஊற்றிக் கொள்பவன். அப்படி ஒரு ஆளுமை கவிஞர்தான் உடுமலை நாராயண கவி. சக மனிதனை மதித்தாலே தன் கிரீடம் சரிந்து விடும் என்று கருதும் படைப்பாளி அல்ல அவர். ஒரு ஏழை விவசாயக் குடும்பத்திலே பிறந்து கோடம்பாக்கம் மூலம் பாட்டொலிக்கும் திசையில் எல்லாம் தன் பாட்டுக் குதிரை பறந்த போதும் அதே இயல்போடு அதே இதயத்தோடு வாழ்ந்த ஒரு அற்புத ஒளிக்கீற்று அவர். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப் பேட்டையில் உள்ள பூவிளைவாடி எனும் சின்ன ஊரில் முத்தம்மாள், கிருஷ்ணசாமி தம்பதியருக்கு பிறந்த இவர் நாராயணசாமியாகவே அழைக்கப் பட்டார். வறுமை இவரை வாழ்க்கையில் செதுக்கியது. பசி ஒரு கட்டத்தில் வயிற்றுக்கு பழகிப்பழகி...

கீழடி: வெளிச்சத்துக்கு வரும் ஆய்வுகள்

கீழடி ஆய்வை முடித்துவிட்டு ஒரு பக்க அறிக்கையோடு விடைபெற்றது மத்திய தொல்லியல் துறை. தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்விற்குப் பிறகே உண்மைகள் வெளிவரத் தொடங்கின. உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது, சென்ற வாரத்தில் தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கீழடி தொடர்பான அறிக்கை. “கீழடியில் கிடைத்த கட்டுமான அமைப்புகள் முதிர்ச்சி பெற்ற சமூகத்தின் அடையாளம். எழுத்தறிவும், சிறந்த கைவினைத் தொழில்நுட்பமும், உள்நாடு மற்றும் வெளிநாடு வணிக வளமும் கொண்ட இந்நாகரிகத்தின் காலம் கிமு 600” என்று அது கூறுகிறது. அதாவது, கீழடியின் வயது 2600 என்று கூறும் அந்த அறிக்கை, அந்தக் கால கட்டத் திலேயே எழுத்தறிவு பெற்ற சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்ததையும் விரிவான ஆதாரங்களோடு நிறுவ முயல்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கண்ட முயற்சியின் விளைவு இது என்பதையும், கீழடியை அணுகும் விதத்தில் இனியேனும் மத்திய அரசு சிறப்புக் கவனம் அளிக்க...

பெரியாரை விமர்சிக்கும் ‘தமிழ் தேசியர்’களின் குழப்பம் ப. திருமாவேலன்

மறைமலை அடிகள், பாவாணர், இலக்குவனார் முன் வைத்த கருத்துகளைப் படித்துவிட்டு பிறகு பெரியாரிய எதிர்ப்பாளர்கள் பேச வரட்டும். தமிழ்நாட்டில் பொருளற்று, இன்னும் சொன்னால், அதனுடைய உண்மையான சித்தாந்தங்களை உணராமல், அதற்கான எந்த அர்ப்பணிப்பு உணர்வும் இல்லாமல், அதற்கான தத்துவார்த்த பின்புலங்கள் எதுவும் தெரியாமல், பல்வேறு சிந்தனையற்ற மனிதர்களின் கையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வார்த்தை இருக்குமானால், அதற்குப் பெயர்தான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை தந்தை பெரியார் என் கின்ற வார்த்தைக்குள் இருக்கிறது; அவருடைய வாழ்க் கைக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியத்தினுடைய பிதாமகர்கள் என்று இன்றைக்குத் தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டிருக்கின்ற பழைய ராஜராஜ சோழன்கள், பழைய பலவேட்டு அறிஞர்கள், தங்களின் இழந்த ஜமீன்களை மீண்டும் மீட்பதற்காக இற்றுப்போன தங்களுடைய ஜரிகைக் குல்லாக்களோடு எத்தனை நாடகங்களைப் போட்டாலும், தமிழ்த் தேசியத்தினுடைய இயக்கம் என்பதை மீட்டெடுக்க...

இதுதான் கீதை பிறப்பிலேயே பேதம்

மனிதகுலம் பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரித்து அறியப்படுகின்றனர் என்று கீதை கூறுகிறது. அத்யாயம் 18 பாடல் 41இல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ப்ராஹ்மண க்ஷத்ரிய விசாம் சூத்ராணாம் ச பரந்தப கர்மாணி ப்ரவிபக்தானி ஸ்வபாவப் பிரனவர் குணை செயல்களின் அடிப்படையிலும் இயற்கையில் அமைந்துள்ள குணங்களின் அடிப்படையிலும் இப்பிரிவினைகள் என்கிறது கீதை. நான்கு வர்ணங்களுக்கும் பொறுப்புகளை வரையறுத்துவிட்டு, அடுத்தவர்க்கான கடமைகளை ஏற்று அரைகுறையாக செய்வதைவிட அவரவர்க்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செவ்வனே செய்வதுதான் சரி என்கிறது கீதை. வேறு வகையில் சொன்னால், அவனவன் ஜாதித் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்கிறது கீதை. பார்ப்பனர் வேதம் படித்து படிப்பிக்க வேண்டுமாம். இப்பொழுது என்ன நிலை? பார்ப்பனர் எல்லாத் தொழிலையும் செய்கிறார்கள். அதைப் போலவே சத்திரியரும். பாதுகாப்புப் பணியில் எல்லா ஜாதிக் காரர்களும் உள்ளனர். இதிலும்கூடத் தலைமையில் பார்ப்பனர்கள்! யார் நடக்கிறார்கள் கீதைப்படி? இந்துக்களுக்குக் கீதை எங்கே வழிகாட்டு கிறது? பொய் சாட்சி சொல்பவன்கூட கீதையில்...

வணிக மயமாகும் வழிபாடுகள் கோயில் உண்டியலில் காசு போட வேண்டும் என்று எந்த புராணம் கூறுகிறது?

மனித வாழ்க்கையில் எல்லோருக்கும் பிரச்சனை உள்ளது. எல்லா மனிதர்களுக்கும் ஏதாவதொரு வகையில் கஷ்டம் இருக்கிறது. அன்றாட உணவுக்கும், பிழைப்புக்கும் வழியில்லாமல் தெருவோரங்களில் வீடின்றி வாழும் மனிதர்கள் நம் கண்முன்னே நடமாடுகின்றனர். நமது துயரத்துக்குக் காரணம் என்ன என்பதை யோசிப்பதைத் தவிர்த்து, கடவுளே என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்று என்று சொல்லிவிட்டு, அடுத்த நாளை நகர்த்த ஒரு நம்பிக்கை தேவையாக இருக்கிறது. கடவுள் எங்கே இருக்கிறார் என்பதற்கு மார்க்சியத்தின் பதில் இதோ… “இரக்கமில்லாத இந்த உலகத்தில் கருணையின் வடிவமாகவும், இதயமில்லாத இந்த உலகத்தின் இதயமாகவும், ஏதுமற்ற ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சாக கடவுள் இருக்கிறார்”. கடவுளை பல தரப்பட்ட மக்களும் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல வழிமுறைகளில் வழிபட்டு வருகின்றனர். தினமும் உழைத்துக் களைத்த உழைக்கும் வர்க்கத்தினர் தன் குடும்பத்தோடு கோவில்களுக்கு சென்று வந்தால், தம் மனபாரம் குறைந்ததாக நம்புகின்றனர். அவ்வழிபாட்டுக்கு தன் உழைப் பின் ஒரு பகுதியை செலவிடவும் செய்கின்றனர். உழைக்கும் வர்க்கத்தில் பெரும்பகுதி...

இதுதான் கீதை தேர் எரிந்தது – ஏன்?

பாரதப் போர் பாண்டவர்க்கு வெற்றியாக முடிந்த பின்னர் தேரிலிருந்து இறங்குமாறு அர்ச்சுனனிடம் கூறுகிறான் கிருஷ்ணன். பகவானான கிருஷ்ணன்தான் முதலில் இறங்க வேண்டும் என்கிறான் அர்ச்சுனன். இதை ஏற்காத கிருஷ்ணன், அர்ச்சுனனைக் கீழே இறங்குமாறு அதட்டுகிறான். அவனும் கீழே இறங்கி நின்றான்.  அதன் பிறகு தேரில் இருந்து கிருஷ்ணன் இறங்குகிறான். அவன் இறங்கிய அடுத்த நொடியில் தேர் எரிந்து சாம்பலானது. அதிர்ச்சியடைந்த அர்ச்சுனன் கேட்டானாம், “யாரும் நெருப்பு வைக்காமல் தானாகவே தேர் எரிந்தது எப்படி?” என்று கேட்டானாம். அதற்கு கிருஷ்ணன் கூறிய பதில்தான் அவன் எப்பேர்ப்பட்ட கபடன்! அயோக்கியன் என்பதை எடுத்துக் காட்டும். “எவ்வளவோ முறைகேடுகளைக் கையாண்டுதான் இந்தப் போரில் உங்களை வெற்றி பெறச் செய்தேன், தெரியுமா? நியாயத்திற்குப் புறம்பான செயல்கள்தான் தேர் எரிந்ததற்குக் காரணம். நான் தேரில் அமர்ந்திருந்ததால் தான் தேர் எரியவில்லை; நான் இறங்கியதும் தேர் எரிந்து விட்டது” என்றானாம். அர்ச்சுனன் இறங்காமல், கிருஷ்ணன் முதலில் இறங்கியிருந்தால் தேரும் அர்ச்சுனனும்...

‘இந்தி-இந்துஸ்தானி’ உருவானது எப்போது? தேவ்தான் சௌதுரி – தமிழாக்கம்: எஸ்.வி. ராஜதுரை

ஆங்கிலம் அன்னிய மொழி; ‘இந்தி’ இந்தியாவின் மொழி என்று பா.ஜ.க.வினர் பேசி வருவது உண்மையல்ல. ‘இந்துஸ்தானி’ என்ற மொழியை உருவாக்கியதே ஒரு பிரிட்டிஷ்காரர்தான் என்பதை சான்றுகளுடன் நிறுவுகிறது கட்டுரை.   காலஞ்சென்ற எனது தாய்வழிப் பாட்டி – 1940களில் கொல்கத்தாவில் தத்துவ இயலும் உயிர் இயலும் படித்தவர் – நான் சிறுவனாக இருந்த போது ஒருமுறை என்னிடம் கூறினார்: “நவீன ஹிந்தி மொழியின் பிறப்பிடம் கொல்கத்தா, அங்குதான் அது கொல்கத்தா விலுள்ள வில்லியம் கோட்டையில் ஆங்கிலேயர்களால் புதிதாக உருவாக்கப்பட்டது.” அண்மையில் நடத்தப்பட்ட ‘ஹிந்தி நாள்’ நிகழ்ச்சிகளில், ஹிந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்று உரத்துச் சொல்லப் பட்டதை செய்தித்தாள்களில் படிக்கும்போது, என் பாட்டியின் சொற்கள் நினைவுக்கு வந்தன. அவர் சொன்னதைப் பரிசீலிக்கவும் உண்மையைக் கண்டறியவும் முனைந்தேன். ‘மறைக்கப்பட்ட உண்மை’களை அறிந்துகொள்ளவும் ஹிந்தியின் ‘இரகசிய வரலாற்றை’ப் புரிந்து கொள்ளவும் விரும்பினேன். நான் கண்டறிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்; இந்தியாவிலுள்ள மொழிகள் பற்றிய...

நிமிர்வோம் தடைகளைத் தகர்த்து / அக்டோபர் 2019 மாத இதழ்

நிமிர்வோம் தடைகளைத் தகர்த்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் அக்டோபர் 2019 மாத இதழ் வெளிவந்துவிட்டது…. 📚 *தலையங்கம் – காந்தி 150 !* 📖 *பகவத் கீதை தத்துவ நூலா.?* 💥 *கீழடி: துரோகமும் வெளிச்சமும்* 📝 *இந்தி- இந்துஸ்தாணியை உருவாக்கியது யார்?* ❗ *பெரியாரை விமர்சிக்கும் தமிழ்தேசியர்களின் குழப்பம்!* இன்னும் அரசியல் பதிவுகளோடு….. தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 💰அஞ்சல் வழியாக பெற – ₹ 300/- (ஆண்டு கட்டணம்) 💰தனி இதழ் விலை – ₹ 20/- *தொடர்புக்கு : 7299230363*, *7373684049*

கீதையின் வஞ்சகப் பின்னணி (2) ஒழுக்க நெறியை கீதை ஏன் வளர்க்கவில்லை?

பிரேம் நாத்பசாஸ் ஆங்கிலத்தில் எழுதிய நூலை – தமிழில் ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’ எனும் தலைப்பில் விடியல் பதிப்பகமும், சூலுர் வெளியீட்டகமும் இணைந்து வெளியிட்டுள்ளன. 1975ம் ஆண்டு, இந்நூலை எழுதிய பிரேம்நாத் பசாஸ் – ஒரு காஷ்மீரி. தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு – கடவுள் மறுப்புக் கொள்கைக் கண்ணோட்டத்தோடு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது இதன் தனிச் சிறப்பாகும். பெரியார் இயக்கத்துக்கான வர லாற்று ஆவணம் என்று கூறுமள வுக்கு, ஏராளமான வரலாற்றுச் செய்திகளை உரிய ஆதாரங்களுடன் தொகுத்தளித்துள்ளது. அதிலிருந்து சில முக்கிய பகுதிகள்: சென்ற இதழ் தொடர்ச்சி ட    “கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி” என்று பெரியார் கூறிய கருத்துகள் – தங்களைப் புண்படுத்துவதாகப் பார்ப்பனர்கள் கூக்குரலிடுவது வாடிக்கை யாக இருக்கிறது. ஆனால், கீதையில் “வேதாந்தங்களை”த் தவிர (பார்ப்பனிய கருத்துகள்) மற்றக் கருத்துகளைப் பின்பற்று கிறவர்களுக்கு, தந்துள்ள...

அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?

உலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவது பின்லாந்து. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற ஆயுதத்தை வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை. அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்? ‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’ (OCED- organisation for economic co-operation and development) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். இதற்கு PISA-Programme for international students assessment என்று பெயர். மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்து கொள்ளலாம். இந்த ஆய்வில் உலகின் மற்ற நாடுகள் பின்வரிசையில் இருக்க… பின்லாந்து எப்போதும் முன்வரிசையிலேயே இடம் பிடிக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில்? பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. ஒன்றரை...

சனி திசையில்  சனி புத்தி குத்தூசி குருசாமி

சனி திசையில் சனி புத்தி குத்தூசி குருசாமி

“இந்த ஜோஸ்யர்களைப் போலப் பித்தலாட்டக்காரர்களை நான் பார்த்ததே யில்லையப்பா! எந்த ஜோஸ்யராவது நடக்கப் போவதைச் சரியாகச் சொல்லிக் கேட்டிருக் கிறாயா?” என்றேன், எதிரில் வந்து நின்ற என் நண்பர் சொக்கனிடம். “நடந்து போனதை மட்டும் என்ன, சரியாய்ச் சொல்லிக் கிழிக்கிறார்களோ? எல்லாம் பார்த்தாச்சப்பா! ஒரு தடவை என் அப்பா என் தங்கைக்கு திருமணம் செய்வதற்காக ஜாகதத்தை எடுத்துக் கொண்டு போனார். சுமார் 6 மணி நேரம் பார்த்துவிட்டு ரொம்ப சந்தோஷத்தோடு 10 ரூபாய் பணமும் கொடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார். ‘என்ன சொன்னார் ஜோசியர்’ என்று கேட்டேன். ‘அடுத்த மூன்று மாதத்திற்குள் கலியாணம் நிச்சயம் ஆகியே தீருமென்றும், புருஷன் ரொம்ப நெருங்கிய  சொந்தமா யிருப்பானென்றும், ஒரு இலட்ச ரூபாய்க்குக் குறையாத சொத்துள்ளவனென்றும், நல்ல படிப்பாளியென்றும் சொன்னார்!’ என்றார் என் தகப்பனார். இதைக் கேட்டுக் கொண்டே வந்த என் தாயார், ‘அது சரி! அவள் ஜாதகத்தைத்தான் தஞ்சாவூருக்கு அனுப்பியிருக்கிறோமே நகல் இல்லையென்று கூட சொல்லிகிட்டு...

பார்ப்பனியம் கட்டமைத்த ஜாதிய ‘அடுக்கு அதிகாரம்’ யுவால் நோவா ஹராரி

உலகம் முழுதும் அண்மையில் விற்பனையில் முதலிடம் பெற்றுள்ள நூல், யுவால் நோவோ ஹராரி எழுதிய ‘சேப்பியன்ஸ்’ என்ற மனித குல வரலாறு, 30 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பார்ப்பனர்கள் திணித்த ‘ஜாதி – அடுக்கு முறை’ அதிகாரம் குறித்தும் அது கடவுளால் உருவாக்கப்பட்டது என்ற புரோகிதர்கள் புரட்டுகளையும் விளக்கும் பகுதி இது. சாதி அமைப்பு முறையைக் கடைப் பிடிக்கின்ற இந்துக்கள், பிரபஞ்ச சக்திகள்தான் ஒரு சாதியை இன்னொரு சாதியைவிட உயர்ந்ததாக ஆக்கியிருப்பதாக நம்புகின்றனர். படைப்புக் குறித்து இந்துக்கள் கொண்டுள்ள கட்டுக்கதைகளில் மிகப் பிரபலமான ஒன்று இப்படி அமைந்துள்ளது. ‘புருஷம் (சமஸ்கிருதத்தில் புருஷ்) என்ற ஒரு பண்டைய ஜீவனின் உடலிலிருந்து கடவுளர் இவ்வுலகத்தைப் படைத்தனர். புருஷத்தின் கண்ணிலிருந்து சூரியனும், அதன் மூளையிலிருந்து சந்திரனும், அதன் வாயிலிருந்து பிராமணர்களும்,  அதன் கைகளிலிருந்து சத்திரியர்களும், அதன் தொடைகளிலிருந்து வைசியர்களும்,  அதன் கால்களிலிருந்து சூத்திரர்களும் படைக்கப் பட்டனர்’. நீங்கள் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டால், பிராமணர்களுக்கும்...

பணமதிப்பு நீக்கத்திலிருந்தே தொடங்கிவிட்டது பொருhளதார பின்னடைவு

இந்தியப் பொருளாதார சூழல் தற்போது எப்படி இருக்கிறது என்பது கண்கூடாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. பல முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றன. நுகர்வு குறைந்துள்ளது. உற்பத்தி அதள பாதாளத்தில். தனியார் முதலீடு முற்றிலும் பூஜ்யமாக இருக்கிறது. அரசும் பொருளாதாரத்தை மீட்க பல சலுகைகளை, அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், அடிப்படையில் ஒரு விஷயத்தை அரசு நினைவில்கொள்ள மறுக்கிறதோ என்று தோன்றுகிறது. ஜார்கண்டில் 40 வயதான விவசாயி ஒருவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தை நம்பி தன்னுடைய விவசாய நிலத்தில் கிணறு வெட்டினார். இப்போது கிணறு இருக்கிறது. ஆனால், அவர் உயிரோடு இல்லை. வெட்டிய கிணற்றிலேயே குதித்து தற்கொலை செய்துகொண்டு இறந்து விட்டார். அவருடைய தற்கொலைக்குக் காரணம், அரசு தர வேண்டிய மானியத்தை தராததுதான். இன்றைய இந்தியப் பொருளாதாரத்தின் நிலையும் கிட்டதட்ட இதுதான். ஒரு தனிநபருக்கு அரசு சரியான நேரத்தில் கொடுக்க வேண்டிய...

அம்பேத்கர் பற்றிய கட்டுக் கதைகளுக்கு மறுப்பு எட்வின் பிரபாகரன்

அம்பேத்கர் வாழ்ந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி, அவரை இந்துவயப்படுத்த பல முயற்சிகள் நடந்தன; நடக்கின்றன. தலித் மக்களை கவர, அம்பேத்கரை தங்கள் அடையாளமாகக் காட்ட, சங் பரிவார் அமைப்பினர் தவறுவதில்லை. அம்பேத்கரை இந்துவயப்படுத்த பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆர் எஸ் எஸ்காரர் அருண் ஷோரி எழுதிய “Worshipping False Gods” போன்ற நூல்கள் கடந்த காலங்களில் வெளிவந்தன. அதன் தொடர்ச்சியாக தற்போது ம. வெங்கடேசன் என்பவரை வைத்து “இந்துத்துவ அம்பேத்கர்” என்ற நூலை உருவாக்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ். “பெரியாரின் மறுபக்கம்” என்ற நூலை எழுதியவரும் இவரே!! ஆர் எஸ் எஸ் ஒருபுறம் அம்பேத்கரை தங்கள்வயப்படுத்த முயன்று வரும் நிலையில், மறுபுறம் காந்தியவாதிகளோ, அம்பேத்கரை தூற்றியும், காந்தியை போற்றியும் நூல்களை வெளியிட்டுள்ளனர். “காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்கு செய்தது என்ன?” என்பது 400 பக்கங்களுக்கு மேல் அம்பேத்கர் எழுதிய விமர்சன நூலாகும். இந்நூலுக்கு எதிராக, காந்தியின் வேண்டுகோளின்படி, இருவர் மறுப்பு எழுதியுள்ளனர். பா....

பெரியார் பிறந்த நாள் சிந்தனை “காமராசருக்கு எதிர்ப்பில்லாத நிலையை நாம்தான் உருவாக்கினோம்”

நான் இப்புவியில் 85 ஆண்டுகள் வாழ்ந்து 86-வது ஆண்டில் புகுகிறேன். இந்த நாட்டில் மக்கள் வாழும் சராசரி வயது 10 ஆண்டுகளுக்கு முன் 32 வயதாக இருந்து, இன்று 48 வயதாக மாறியுள்ள இக்காலத்தில் ஒரு மனிதன் 85 ஆண்டு வாழ்ந்து, அதுவும் ஓய்வு என்பதை அறியாத தொண்டும், சுகம் என்பதை அறியாத வாழ்வும், கிடைத்ததைத் தின்று கொண்டு, வாய்த்த இடத்தில் தூங்கிக் கொண்டு திரிந்த நான் 85 ஆண்டு வாழ்ந்து விட்டேன் என்றால் என் ஆயுளைப்பற்றி நான் பாராட்டிக் கொள்ள வேண்டாமா ? என்ன செய்து சாதித்துவிட்டாய்?  என்று நீங்கள் கேட்கலாம். அதற்குப் பதில் நீங்களே (வாசகர்கள்) தான் தேடிப்பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஓய்வு ஒழிச்சல் இன்றி, சோம்பல் கழிப்பிணித் தனமின்றி உழைத்தேன். திருட்டு, புரட்டு, மோசடி இன்றி வெள்ளையாய் நடந்து கொண்டேன். என் நடத்தையில் பல தவறுகள், தகாத காரியங்கள் ஏற்பட்டு இருக்கலாம். என்னையே நீதிபதியாகக் கொண்டு...

பெரியார் பிறந்த நாள் சிந்தனை தன்னைப் பற்றி பெரியார்

காலில் விலங்கோடு திரிந்த சிறுவன் தன் பிற்காலத்தில் சமூகத்தின் விலங்கொடிக்கத் தயாரானார். பெரியார்  தன்னைப் பற்றி சுய விமர்சனத்தோடு எழுதிய கட்டுரை. சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925இல் என்னால் துவக்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும். அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அதன் கொள்கை என்ன? அது ஏன் துவக்கப்பட்டது? என்கின்ற விஷயம் முதலில் எடுத்துக்கூற வேண்டியது அவசியமல்லவா? அதற்கு முன் என்னைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னால் தான் என்னைப் பொறுத்தவரை நான் செய்தது சரியா, தப்பா? என்பது விளங்கும். எனக்கு சிறு வயது முதற்கொண்டு ஜாதியோ மதமோ கிடையாது. அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டிருந்திருப்பேன். அது போலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்ய வேண்டுமென்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரே என்றோ தண்டிப்பாரே என்றோ கருதி (எந்தக் காரியத்தையும்) செய்யாமல் விட்டிருக்க...

வங்கிகள் இணைப்பு : நிர்மலா சீதாராமன் வாதங்கள் சரியா? ர. பிரகாஷ்

பொருளாதார வீழ்ச்சி சரி செய்யப்படும் என்று கூறியுள்ள நிர்மலா சீதாராமன், அதற்குப் பின்னால் அறிவித்து வரும் அறிவிப்புகள், மேற்கொள்ளும் செயல்கள் யாவும் நாட்டு மக்களுக்கு அச்சத்தை மேலும் அதிகரிக்கவே செய்திருக்கிறது.   தொடர்ந்து 2ஆவது முறையாக பாஜக ஆட்சியமைத்து 100 நாட்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் சிறு குறு நிறுவனங்கள் முதல்  ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பெரு நிறுவனங்கள் வரை கடுமையான தொழில் மந்தத்தை எதிர் கொண்டுள்ளதாக அன்றாடம் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அசோக் லேலாண்ட், டிவிஎஸ், மாருதி போன்ற முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் ஊழியர்களுக்குக் கட்டாய விடுமுறை அளித்து  நெருக்கடியை  சமாளிக்க முயன்று வருகின்றன. பார்லே ஜி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் 10ஆயிரம் பேரை நீக்கத் திட்டமிட்டுள்ளது. பொருளாதார மந்த நிலையைச் சமாளிக்க முடியாமல் பல சிறு குறு நிறுவனங்கள் மூடுவிழா கண்டு வருகின்றன. கோவையில் வட இந்திய தொழிலாளர்கள் மட்டும் சுமார் 40 ஆயிரம் பேர்  வேலையிழந்து சொந்த ஊர்...

மாநில அடையாளங்களை அழிப்பதால் உருவாகும் ஆபத்து – பிரேர்ணா சிங் –

மாநிலங்களின் தனித்துவத்தை அழித்து ஒற்றை தேசியமாக இந்தியாவை மாற்றத் துடிக்கிறது பா.ஜ.க.வின் நடுவண் ஆட்சி. மாநிலங்களுக்கான அடையாள உணர்வுதான் வளர்ச்சிக்கும் சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் ஆதார சுருதியாக இருக்கிறது என்பதை ஆய்வு நோக்கில் முன் வைக்கிறது, கட்டுரை. நாம் வாழும் இடம்தான் நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. அருகருகே உள்ள வெவ்வேறு நாடுகளில் குழந்தைகள் இறப்பு விகிதம் தொடங்கி கல்வி என்று பல்வேறு விஷயங்களில் மிகப் பெரிய வேறுபாடுகள் இருப்பதை உணர முடியும். அமெரிக்காவின் ஹெய்ட்டி மாநிலத்தில் பிறக்கும் குழந்தை, அங்கிருந்து 50 மைல்கள் தொலைவில் உள்ள கியூபாவில் பிறக்கும் குழந்தையை ஒப்பிட – தனது முதல் பிறந்த நாளைக் கொண்டாடும் வாய்ப்பை 12 மடங்கு அதிகம் பெற்றிருக்கிறது. அதேபோல், நீங்கள் மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கீனா பாஸோவில் பிறந்தவர் என்றால், அண்டை நாடான கானாவுடன் ஒப்பிடும்போது நீங்கள் கல்வியறிவு பெறாதவராக இருப்பதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். ஒரே தேசத்தின்...

நமஸ்காரம் சொன்னதற்காக நாக்கை வெட்டிய பேஷ்வா பார்ப்பனர்கள்

மராட்டியர் ஆட்சியில் பார்ப்பனர்களைத் தவிர வேறு எவர் ஒருவர் வேத மந்திரத்தை உச்சரித்தாலும் அவருடைய நாக்கு அறுக்கப்படும். உண்மையாகவே பல பொற்கொல்லர்களின் நாக்கு அவர்கள் வேதத்தை உச்சரித்தார்கள் என்பதற்காகவே அறுக்கப்பட்டது. மும்பை மாகாணத்தில் மிகவும் உயர்வான குலத்தினரான சோனார்கள் (பொற் கொல்லர்கள்) பஞ்சகச்சம் வேட்டி (ஐந்து மடிப்பு) கட்டக் கூடாது என்று தடுக்கப்பட்டார்கள். வணக்கம் தெரிவிக்கும்போது நமஸ்காரம் எனும் சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர்கள் தடுக்கப்பட்டார்கள். இதன் பொருட்டு அரசு செயலாளர் பொற்கொல்லர்கள் குலத் தலைவருக்கு எழுதிய மடலின் வாசகம் வருமாறு: “மாண்புமிகு ஆட்சி மன்றக் குழுவின் தலைவர், பொற்கொல்லர்கள் வணக்கம் தெரிவிக்கும் வேளையில் நமஸ்கார் என்னும் சொல்லை பயன்படுத்துவதைத் தடுப்பது முறை என்று கருதி இந்த ஆணையையும் அரசின் தீர்மானத்தை உங்களுடைய மொத்த சமூகமும் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு முன்னதாக தெரிவிக்குமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இதைப் பின்பற்றுவதில் கவனம் எடுத்துக் கொள்ளவும். ஆணைப்படி அரசு செயலாளர்...

கீதையின் வஞ்சகப் பின்னணி புரோகிதர் மேலாதிக்கம் – உருவான வரலாறு

பிரேம் நாத்பசாஸ் ஆங்கிலத்தில் எழுதிய நூலை – தமிழில் ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’ எனும் தலைப்பில் விடியல் பதிப்பகமும், சூலுர் வெளியீட்டகமும் இணைந்து வெளியிட்டுள்ளன. 1975ம் ஆண்டு, இந்நூலை எழுதிய பிரேம்நாத் பசாஸ் – ஒரு காஷ்மீரி. தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு – கடவுள் மறுப்புக் கொள்கைக் கண்ணோட்டத்தோடு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது இதன் தனிச் சிறப்பாகும். பெரியார் இயக்கத்துக்கான வர லாற்று ஆவணம் என்று கூறுமள வுக்கு, ஏராளமான வரலாற்றுச் செய்திகளை உரிய ஆதாரங்களுடன் தொகுத்தளித்துள்ளது. அதிலிருந்து சில முக்கிய பகுதிகள்: ட    700 சமஸ்கிருத கவிதைகளைக் கொண்டது பகவத்கீதை. ட    கீதை – இந்துமதத்தின் புனித நூலாகவும் – வழிகாட்டியாகவும் லட்சிய நூலாகவும் போற்றப்படுகிறது. அது மிகச் சிறந்த லட்சிய நூலாக இருந்திருக்குமானால், அந்த நூல் வெளிவந்த காலத்தில் நிலவிய மனித குலத்தின் சிக்கலான பிரச்சினைகளையும், கடும் துயரங்களையும் முன்னிலைப்படுத்தி விவாதித்திருக்க வேண்டும். கீதை அதைச்...

சமண-புத்த மதங்களை அழித்தது யார்? சைவத்தின் மதமாற்ற வன்முறைக்கான வரலாற்றுச் சான்றுகள்

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மதமாற்றங்கள் செய்து வருகின்றன என்று உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநான் ஒரு தீர்ப்பில் கூற கடும் எதிர்ப்பு வந்தவுடன் அப்பகுதியை திரும்பப் பெற்றுக் கெண்டார். உண்மையில் தமிழ்நாட்டில் சமண-பவுத்த மடங்களை அழித்து சைவமாக்கியதோடு அதற்காக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டதும், சைவர்கள்தான் என்பது வரலாறு.  அதற்கான வரலாற்றுச் சான்றுகளை முன் வைக்கிறது இக்கட்டுரை. கி.பி. அய்ந்து ஆறு ஏழாம் நூற்றாண்டு களில் தமிழ் நாட்டில் சமண சமயமும் பவுத்த மதமும் பெரிதும் செழித்து வளர்ந்திருந்தது. சைவ வைணவ மதங்கள் முடங்கிக் கிடந்தன. மக்களில் பெரும்பாலோர் சமணராகவும் பௌத்தராகவும் இருந்தனர். நாட்டை ஆண்ட மன்னர்களும் சமண பவுத்த மதங்களைத் தழுவியிருந்தனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சைவ அடியார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் ‘பக்தி’ இயக்கத்தை ஆயுதமாகக் கொண்டு சமண பவுத்த மதங்களை அழித்திட முற்பட்டனர். ‘சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப்படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல்,...

தேசிய விருதுகளில் புறக்கணிக்கப்படும் தமிழ்த் திரைப்படங்கள்

திரைப்படங்களுக்காக இந்திய அரசால் வழங்கப்படும் 66ஆவது தேசிய விருதுப் பட்டியல் ஆகஸ்ட் 9 அன்று வெளியாகியிருக்கிறது. எந்த விருது அறிவிப்புக்கு பின்னரும் பாராட்டுகள், கைகுலுக்கல்கள் ஆகியவற்றுக்கிடையே சில சர்ச்சைகளும் எட்டிப்பார்ப்பது வழக்கம். ஆனால் இந்த விருது அறிவிப்பு தமிழ்த் திரையுலகினர், பார்வையாளர்கள் மத்தியில் அதிகப்படியான சலசலப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி யுள்ளது. இந்தியாவில் மூன்றாவது பெரிய திரையுலகமாக இருப்பது தமிழ்த் திரையுலகம் தான். அதிகளவிலான கலைஞர்கள், தொழி லாளர்கள் பணியாற்றும் இதிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 200 படங்கள் வரை வெளியாகின்றன. பெரும் வணிகத்தை தன்னுள் வைத்துள்ள தமிழ்த் திரைத்துறையில் தரமான படங்களும் மற்ற மொழிகளைவிட அதிகமாகவே வெளியாகி வருகின்றன. முன்பைவிட சர்வதேச தளத்தில் தமிழ்ப் படங்கள் விருதுகளை அள்ளிவருகின்றன. ஆனால் தேசிய விருது அறிவிக்கும்போது மட்டும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமா புறக்கணிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுவது வாடிக்கையாகிறது. சிறந்த படம், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர்,...

கடும் நெருக்கடியில் இந்திய பொருளாதாரம்

ரிசர்வ் வங்கி தொடர்ந்து நான்காம் முறையாக (சநயீடி சயவந) வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. அதுவும் எதிர்பார்ப்புகளுக்கு மிகையாக 35 புள்ளிகள் குறைத்தது. சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல, ஒட்டுமொத்த பொது மக்களின் தேவை மற்றும் தனியார் முதலீட்டை அதிகப்படுத்தும் நோக்கில் வட்டி விகிதத்தை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார். இதே காரணத்தைக் குறிப்பிட்டுத்தான் கடந்த பிப்ரவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் நடந்த நான்கு நிதிக் கொள்கை கூட்டத்திலும் தொடர்ந்து வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. இது வரும்காலங்களிலும் தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்து வருகின்றது. ஆனால், தனியார் முதலீட்டை ஊக்குவித்து பொருளாதார வளர்ச்சியினை உயர்த்த எடுக்கப்பட்ட இந்த வட்டி குறைப்பு முயற்சிகள் எந்த ஒரு பலனையும் இதுவரை தரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. சொல்லப் போனால் தனியார் முதலீடும் பொருளாதார வளர்ச்சியும் மேலும் தொடர்ந்து சரிந்து கொண்டேதான் வருகின்றன....

திருக்குறளை வெறுத்த பார்ப்பனர்: அயோத்திதாசர் தரும் தகவல்

திருக்குறள் தாழ்ந்த வருணத்தாரால் இயற்றப்பட்ட நூல் ஆதலால் பிராமணர்கள் அதை வெறுத்தனர். இந்தக் கருத்தினை அயோத்திதாசர், எல்லீஸ் துரையுடன் நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் மூலம் விளக்குகிறார். 1796இல் சென்னைக்கு வந்த எல்லீஸ் துரை தமிழ் கற்க விருப்பம் கொண்டு சில தேர்ந்த ஆசிரியர்கள் மூலம் அதனை நிறைவேற்றிக் கொண்டார். அயோத்திதாசரின் பாட்டனார் எல்லீஸ் துரைக்குத் திருக்குறள் நூல் ஒன்றினைக் கொடுத்து அனுப்பினார். இதைப் படித்த எல்லீஸ் துரை இதற்கு விளக்கமளிக்குமாறு ஆசிரியர்களைக் கேட்க, அப்பிராமணர்கள் அது தீண்டத்தகாத நூல், திருவள்ளுவர் தீண்டத்தகாதவர் என்று கூற எல்லீஸ் அவர்களுக்குத் திருக்குறள் மீது அதிக ஆர்வம் உண்டானது. நூல் கொடுத்தனுப்பியவரை வரவழைத்துப் பிராமணர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்களே ஏன் என்று கேட்க அவர் கூறிய பதில் வருமாறு: “எங்களுக்கும் இவர்களுக்கும் விரோதம். எங்கள் வீதிக்குள் பிராமணர் வந்தால் உங்கள் பாதம் இட்ட இடம் பழுதாகிவிடும் என்று சொல்லிக் கொண்டு இவர்களைத் துரத்தி பிராமணர்கள் வந்த வழியிலும்...

‘குறளு’க்கு ‘குரல்’ கொடுத்த பெரியார் – முனைவர் மு.பா. குப்புசாமி

திருக்குறள் குறித்து பெரியார் தெரிவித்த கருத்துகள் – நடத்திய மாநாடுகள் – மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்து ஒரு பார்வை. பெரியாரது முக்கியக் கொள்கைகளில் ஒன்று கடவுள் மறுப்பாகும். கடவுள் பெயரால்தான் அனைத்துச் சீர்கேடுகளும் நடைபெறுகின்றன என்பதும் சமூகம் சீர் அடைய வேண்டுமானால் கடவுள் பற்றிய கற்பிதங்கள் உடைபட வேண்டும் என்பதும் பெரியார் கருத்து. சைதாப்பேட்டை திருவள்ளுவர் மன்றத்தில் பெரியார் கடவுளைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: தமிழனுக்கு எப்போதும் உருவக் கடவுள் இருந்ததில்லை. கடவுள் சக்தியை விஞ்ஞான அறிவு மீறி வருகிறது. அறிவுக்கு மதிப்பு மிகுந்து கடவுளுக்கு மதிப்பு மங்கி வருகிறது. சுகாதார அதிகாரிகளால் மாரியாத்தாள் மதிப்பிழந்தாள். திருக்குறளின் வெற்றி மெய்மை அறிவொளியின் வெற்றி (‘விடுதலை’ 9.11.1949) – எனக் குறிப்பிடுகின்றார். திருவள்ளுவர் கடவுள் பெயரால் பிரிந்து கிடக்கும் மக்களைப் பற்றிக் குறிப்பிடும் குறளினை பெரியார் மேற்கோள் காட்டுகிறார். “எந்த நாட்டில், சாதிப் பற்றியும், மதங்கள் பற்றியும் கடவுள்கள் பற்றியும் கூட்டங்கள் இருந்து...

இசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2) “நாடகங்களில் கருத்துகளே வேண்டும்; இசையைத் தவிர்க்க வேண்டும்” என்றார் பெரியார் முனைவர் வே. இராமசாமி

இசை நாடகத் துறையில் பெரியார் இயக்கம் நடத்திய கலகம் குறித்து முனைவர் வே. ராமசாமி எழுதிய நூலிலிருந்து இரண்டாம் பகுதி இது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதி, குத்தூசி குருசாமி இரணியனாக நடித்த நாடகத்தில் பெரியாரின் தலைமை உரை. நாடகம் குறித்த அவரது ஆழமான சிந்தனையை வெளிப்படுத்துகிறது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதி, குத்தூசி குருசாமி இரணியனாக நடித்த நாடகத்துக்கு தலைமையேற்று சென்னையில் பெரியார் பேசினார். பெரியார் தன் தலைமையுரையில், “….. இங்கு சங்கீத வித்வான்களே நாடக மேடையைக் கைப்பற்றிக் கொண்டதானது, நாடகக் கலையைச் சங்கீதம் அழித்துவிட்டது என்றும், மக்களது நாடகாபிமானமும் சங்கீதத்தில் திருப்பப்பட்டு விட்டது என்றும்தான் கருத வேண்டும். நாடகம் நடிக்கப்படும் கதைகள் விஷயமும், தற்கால உணர்ச்சிக்கும் தேவைக்கும் சீர்திருத்த முறைக்கும் ஏற்றதாயில்லாமல் பழமையைப் பிரச்சாரம் செய்யவும், மூட நம்பிக்கை, வர்ணாச்சிரமம், ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வு, பெண்ணடிமை, பணக்காரத் தன்மை முதலிய விஷயங்களைப் பலப்படுத்தவும் அவைகளைப் பாதுகாக்கவும் தான்...

கும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்?

பயங்கரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று நடுவண் ஆட்சி கடும் ஒடுக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்து சமூக செயல்பாட்டாளர் களையும் சிறுபான்மை மக்களையும் குறி வைக்கிறது. வடமாநிலங்களில் ‘பசு’ மாட்டின் பெயராலும் ‘தீண்டாமை’ ஜாதி வெறியினாலும் தலித் சிறுபான்மை மக்களை கும்பலாகத் திரண்டு அடித்தே சாகடிக்கிறார்கள். (டுலn உhiபே) இதை ஒரு பயங்கரவாதமாகக் கருதுவதற்கு மோடி ஆட்சி தயாராக இல்லை. வெறுப்பின் வெளிப்பாடான இத்தகைய பயங்கரவாதம் ஒரு காலத்தில் கருப்பின மக்களுக்கு எதிராக அமெரிக்காவில் வெள்ளை நிற வெறியர்களால் நடத்தப்பட்டது. நிறவெறிக் கும்பல்களால் அடித்தே கொல்லப் படும் இந்த பயங்கரவாதத்தைக் குற்றமாக அங்கீகரிக்க அமெரிக்காவுக்கு 100 ஆண்டுகள் தேவைப்பட்டன. 1918ஆம் ஆண்டிலிருந்து இதைக் கிரிமினலாக்கும் மசோதாக்கள் வந்த போதெல் லாம் அமெரிக்க காங்கிரஸ் நீர்த்துப் போகச் செய்து அமுலாக்காமல்  தடுத்து விட்டது. இறுதி யாக 2018ஆம் ஆண்டு தான் அனைத்து அமெரிக்க மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடிய சட்டமானது. நிறவெறி வெளிப்பாட்டின் உச்சகட்ட...

காஷ்மீர்: வரலாறும் துரோகமும் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த வரலாற்றுப் பின்னணியையும்

370 சிறப்புப் பிரிவு வழங்கிய உரிமைகளை படிப்படியாக இந்திய அரசு பறித்ததால் அம்மக்களிடையே உருவான எதிர்ப்பையும் சுருக்கமாக விவரிக்கிறது, கட்டுரை. தங்கள் வாழ்வுரிமை பறிபோகும் என்ற பதற்றமே காஷ்மீர் மக்களை அலைக்கழிக்கிறது என்பதைப் பார்க்க மறுப்பவர்களால் காஷ்மீர் பிரச்சனையை புரிந்து கொள்ள இயலாது. இந்தியா விடுதலை பெற்றபோது 601 சமஸ் தானங்கள் இருந்தன. இதில் 552 சமஸ்தானங்கள் இந்தியாவோடும், 49 சமஸ்தானங்கள் பாகிஸ்  தானோடும் இணைந்தன. மற்ற 3 சமஸ்தானங்கள் எவரோடும் இணைய மறுத்தன. ஜுனாகட் சமஸ்தானம் ஹைதராபாத் சமஸ்தானம் காஷ்மீர் சமஸ்தானம் ஜுனாகட் சமஸ்தானத்தின் நவாப், தனது சமஸ்தானத்தை பாகிஸ்தானோடு சேர்ப்பதாக அறி வித்தார். இந்துக்கள் அதிகம் இருந்த இங்கு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. 1948 பிப்ரவரி 7ல் இந்திய அரசாங்கம் படைகளை அனுப்பி, மக்களிடம் நேர்முக வாக்கெடுப்பு நடத்தி, இதனை இந்தியாவுடன் இணைத்தது. ஹைதராபாத் சமஸ்தானம் (இன்றைய தெலுங்கானா பகுதி) மிகப்பெரியது. இங்கு மன்னராக இருந்த நிஜாம் இந்தியாவுடன்...

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து…. திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஆகஸ்டு 2019 மாத இதழ்

*”நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து….* திராவிடர் விடுதலைக் கழகத்தின் *”ஆகஸ்டு 2019″* மாத இதழ் வெளிவந்துவிட்டது…. 📚 *தலையங்கம் – ஒற்றை ஆட்சி முறையில் வேத காலத்தை நிறுவ முயற்சி* 📖 *காஷ்மீர்: வரலாறும், துரோகமும்- சிறப்புக் கட்டுரை* 💥 *புரோகிதர் மேலாதிக்கம் உருவான வரலாறு* 📝 *கடும் நெருக்கடியில் இந்திய பொருளாதாரம்-ஓர் அலசல்* ❗ *தேசிய விருது: தமிழ்ப் படங்கள் புறக்கணிப்பு* இன்னும் அரசியல் பதிவுகளோடு….. தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 💰அஞ்சல் வழியாக பெற – ₹ 300/- 💰தனி இதழ் விலை – ₹ 20/- *தொடர்புக்கு : 7299230363*, *7373684049*

பெரியார் இயக்க மேடைகளின் தனித்துவம்! புத்தக விற்பனை – கேள்விகளுக்கு பதில் – புள்ளி விவரப் பேச்சுகளுடன் நடந்தன பெரியார் – அண்ணா கூட்டங்கள் – பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியம்

நவீன அரசியலில் தமிழ்நாடு எழுச்சி பெற்ற நூற்றாண்டின் சாட்சியங்களில் ஒருவர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன். நம் காலத்தின் முக்கியமான சமூகவியல் ஆய்வாளர்களில் ஒருவரும் இடதுசாரி புலமையாளருமான சிவசுப்பிரமணியன், தமிழ்நாட்டின் வெகு மக்களுக்கு எப்படி ஜனநாயகத்தைக் கற்பிப்பதாகவும் வளர்த்தெடுப்பதாகவும் அண்ணாவின் அரசியல் இருந்தது என்பதையும் திராவிட இயக்கம் எப்படி இங்கே ஒரு அறிவொளியை உண்டாக்கி யது என்பதையும் மிக விரிவாகப் பேசுகிறார்.   அண்ணாவின் காலத்துக்குக் கொஞ்சம் முன்பிருந்து நாம் கதையைத் தொடங்கலாமா? அரசியல், ஜனநாயகம் இவையெல்லாம் வெகு மக்களுக்குப் புதிதுதானே! சுதந்திர இந்தியாவில்தான் சாமானியருக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. சரியாக, ஜனவரி 26, 1950-ல் இந்தியா குடியரசாகிறது; நான்கு மாதங்களுக்கு முன்னால் செப்டம்பர் 17, 1949 அன்று திமுக பிறக்கிறது. முதல் தேர்தலில் திமுக போட்டி யிடவில்லை, 1957-ல் நடந்த இரண்டாவது தேர்தலில் தான் அது போட்டியிட்டது என்றாலும் ஒரு முழு அரசியல் கட்சிக்கான ஆகிருதியோடுதான் முன்பிருந்தே அது நடந்துகொண்டது. பேச்சு, எழுத்துக்கு அது...

பார்ப்பனர்கள் நடத்தும் யாகங்களின் புரட்டு வடநாட்டு புரோகிதரே அம்பலப்படுத்துகிறார்

புரோகிதர்களை வைத்து யாகங்களை நடத்தும் வேதகாலப் பண்பாடு இன்று அரசியல் பண்பாடாகி விட்டது. மழைக்காக தேர்தல் வெற்றிக்காக மட்டுமல்ல; அரசு விழாக்களிலும்கூட யாகங்கள் நடக்கின்றன. புரோகிதர்களின் தொழிலாக மாறியுள்ள இந்த யாகத்தின் மோசடிகளை ஆதாரங் களுடன் விளக்குகிறது இக்கட்டுரை. கட்டரையாளர் ஒரு வடநாட்டுப் புரோகிதர்) உலகத்தின் எந்த நாட்டின் வரலாற்றை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். மதத் தலைவர்களின் கையில் அரசியல் அதிகாரம் முழுவதும் சிக்கிக் கொண்டுவிட்ட காலம் ஒன்று கட்டாயம் இருக்கும். ஐரோப்பாவில் போப்பாண்டவர் எத்தனையோ பேரை மத விரோதிகள் என்று கூறி படுகொலை செய்வித்திருக்கிறார். இந்தியாவில் இதே உரிமையைப் புரோகித வர்க்கம் பெற்றிருக்கிறது. யாத்திரை கிளம்ப வேண்டுமா, வீடுகட்ட வேண்டுமா, திருவிழா அல்லது திருமணம் நிகழ்த்த வேண்டுமா, வியாபாரம் தொடங்க வேண்டுமா, புரோகிதர் வராமல் நடக்காது. மத விஷயங்களில் புரோகிதர்கள் இதே வேலையைத்தான் செய்து வந்திருக்கிறார்கள். இந்தியர்கள் பொதுவாகவே மதத்தில் மிகுந்த பற்றுதல் உடையவர்கள். புரோகிதத் தொழில் என்றுமே ‘பிராமணர்கள்’...

பிரிட்டிஷ்காரர்கள் துப்பாக்கி முனையில் உருவாக்கியதே ‘இந்தியா’

இந்தியாவின் பன்முகத் தன்மையை அழித்து ஒற்றை தேசம்; ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்கத் துடிக்கிறார்கள் பா.ஜ.க. – பார்ப்பன பரிவாரங்கள். இந்தியா எப்போதும் ஒரே நாடாக இருந்தது இல்லை என்பதே வரலாறு. மௌரியப் பேரரசு, கி.மு. நான்காம் நூற்றாண்டில் மகதத்திலிருந்து நர்மதை நதிக்கரை வரையில் தனது ஆதிக்கத்தைப் பரப்பியது. கலிங்கம் நீங்கலாகத் தக்காணத்தில் மற்ற பெரும் பகுதியைப் பிந்துசாரன் தன்னாட்சிக்குக் கொண்டு வந்தான். அசோகன் கலிங்கத்தை வென்றான். ஆக, தமிழகத்தின் மூவேந்தர் ஆட்சியைத் தவிர இந்தியத் துணைத் கண்டத்திலிருந்த எல்லாத் தனி நாட்டுப் பகுதிகளும் மௌரியர்களால் ஒரு குடையின் கீழ்க் கொண்டு வரப்பட்டன. ஆனால் அரசியல் விற்பன்னர்களான மௌரியர்கள், தங்களது பேரரசை நிலை நாட்டியவுடன், தமது மைய அரசின் கீழ் சில இன்றியமையா அதிகாரங்களை மட்டும் வைத்துக் கொண்டு, அந்தந்த தனி நிலப் பகுதிகள் தன்னாட்சியை இழக்காத நிலையில் மத்தியத்தின் மேலாட்சியை மட்டும் நிறுவினர். தனி நாடுகளின் சுதந்திரத்திற்கும், மொழி, பண்பாடுகளுக்கும் எவ்வகையிலும்...

சங்க காலத்தில் ஜாதியம் இல்லையா? கவிஞர் தணிகைச் செல்வன்

புலவர் செந்தலை கவுதமன், ஜாதி ஏற்றத்தாழ்வுகள் உருவானது 800 ஆண்டுகளுக்கு முன்பு தான் என்றும், சங்க காலத் தமிழர் வாழ்வில் இருந்த திணை மரபு – ஜாதி மரபு அல்ல என்றும் கடந்த ‘நிமிர்வோம்’ இதழில் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு மாறுபட்ட சிந்தனைகளும் உண்டு. தொல்காப்பியர் காலத்திலேயே ‘வர்ணாஸ்ரம்’ ஊடுறுவத் தொடங்கிவிட்டது என்பதற்கும் சான்றுகள் முன்வைக்கப்படுகின்றன. இது குறித்த இரு தரப்பு விவாதங்களை யும் ‘நிமிர்வோம்’ முன் வைக்கிறது. இது குறித்து கவிஞர் தணிகைச் செல்வன் கட்டுரையை ‘நிமிர்வோம் பதிவு செய்கிறது. பழந்தமிழகத்தில் சாதிகள் இல்லை என்பதற்குச் சான்றாகக் குறுந்தொகை நூலில் உள்ள ஒரு பாடலைத்தான் பலர் பயன்படுத்துவது வழக்கம். “யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” – அந்தப் பாட்டு ஒரு பெண் தன் காதலனை நோக்கிக் கூறுவதாக...