Category: கேள்வி பதில்

வினா விடை

வினா விடை

பழனி கோயில் கொடி மரத்தின் அருகே இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய அனுமதி இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் – மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தீர்ப்பு பழனி கோயிலில் கொடிமரமே கிடையாது என்கிறார் ஆன்மீகப் பேச்சாளர் சுகி.சிவம். பாஜக கொடிமரம் ஒன்றை நட்டு, அறிவிப்பு பலகையை தொங்கவிடலாமா? இஸ்லாமிய நாடான அபுதாபியில் அரசர் ஆதரவோடு இந்து கோயிலை திறந்து அங்கே நாட்டின் பெருமையை பேசினார் மோடி – செய்தி அங்கே கோயில் கட்டுவார்கள், இங்கே மசூதி இடிப்பார்கள் உலகிலேயே ‘விதவைகள்’ அதிகம் வாழும் நாடு இந்தியா – உலக பொருளாதார மன்றம் ஆளுநரே! உங்கள் சனாதனப் பெருமையில் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆண் சிங்கத்துக்கு அக்பர் பெயர்; பெண் சிங்கத்துக்கு சீதை பெயரா? ‘இந்து’க்களை புண்படுத்துகிறார்கள் – விஷ்வ இந்து பரிசத் வழக்கு ‘சிங்கங்களுக்கு’ ஜாதி, மதம் கிடையாது. “அசிங்கங்கள்” தான் இதற்கு நீதிமன்றம் ஓடும் பெரியார் முழக்கம் 22022024

வினா விடை

வினா விடை

• ஒரே நாடு ஒரே தேர்தல் : ஒன்றிய ஆட்சி திட்டம் – செய்தி ஒரே ஜாதி, ஒரே மக்கள் என்ற திட்டத்தை எப்போது கொண்டுவர போறீங்க.. • அண்ணாமலை பிராமணர்களை புறக்கணிக்கிறார் – எஸ்.வி.சேகர் அப்படியா, விடாதிங்க; சத்ரு சம்ஹார யாகம் நடத்துங்க, நல்ல பலன் கிடைக்கும். • நெடுஞ்சாலை திட்டத்துக்கு கூடுதல் செலவு ஆகியுள்ளது என்று தான் சி.ஏ.ஜி அறிக்கை கூறுகிறது. அது ஊழல் அல்ல–- அண்ணாமலை அந்த கூடுதல் செலவுக்கே காரணம் ஊழல் இல்லையா என்பதுதான் கேள்வியே? • சனாதன தர்மத்தை எதிர்க்க எதிர்க்க அது வளரும் – தமிழிசை அப்படியா, சனாதன தர்மம் மாறவே மாறாததுன்னு சொன்னீங்க, இப்ப எப்படி வளரும். • திராவிட கட்சிகள் எனது பங்காளிகள், எதிரி அல்ல – சீமான் பயப்படாதிங்க சீமான், அவ்வளவு சீக்கிரம் கைது செய்யமாட்டாங்க. • நான் ஒரு முஸ்லிமாக இருந்தாலும் எனக்கு கோயில் கட்டினார்கள். அதுதான்...

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (4) பூணூலும் கருஞ்சட்டையும் ஒன்று தானா? ஒ. சுந்தரம்

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (4) பூணூலும் கருஞ்சட்டையும் ஒன்று தானா? ஒ. சுந்தரம்

பெரியார் இயக்கத்தை நோக்கி சமூக வலைதளங்களில் பார்ப்பனிய நேரடி – மறைமுக ஆதரவு சக்திகள் முன் வைத்து வரும் கேள்விகளுக்கு நெத்தியடி பதில். பகுதி 3 கேள்வி : ‘ஹிந்துக்கள்’ தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். முஸ்லிம்கள் பர்தா அணிகிறார்கள். ‘ஹிந்துக்கள்’ தாலி அறுக்கும் போராட்டம் நடத்திய நீங்கள், கிறிஸ்தர்கள் மோதிரம் கழற்றும் போராட்டமும், பர்தா கழற்றும் நிகழ்ச்சியும் நடத்தும் ஆண்மை இருக்கிறதா? பதில் : ‘தாலி’  அறுப்புப் போராட்டம் என தவறாகக் கூறுவது பற்றியும் ‘ஹிந்துக்கள்’ பற்றியும் ஏற்கெனவே விளக்கியாகிவிட்டது. சிறுபான்மை கிறித்துவ மக்கள் மோதிரம் மாற்றி, திருமண பந்தத்தைக் காட்டுவது, ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவிப்பது போல், இந்துக்கள் என்பாரும் ஆணும் பெண்ணுமாகவா தாலி கட்டிக் கொள்கிறார்கள்? இல்லையே! பெண்ணுக்கு மட்டும்தானே தாலி? கிறித்துவ சிறுபான்மை மக்களின், இஸ்லாமிய சிறுபான்மை மக்களின் பர்தா அணிதல் உட்பட்ட பழக்க வழக்கங்கள், அந்த மதக் குழுக்களின் அடையாளங்கள், அவற்றை மதித்து...

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (3) காந்தியிலிருந்து கவுரி வரை கொலை செய்தது யார்? ஒ. சுந்தரம்

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (3) காந்தியிலிருந்து கவுரி வரை கொலை செய்தது யார்? ஒ. சுந்தரம்

பெரியார் இயக்கத்தை நோக்கி சமூக வலைதளங்களில் பார்ப்பனிய- பார்ப்பனிய நேரடி – மறைமுக ஆதரவு சக்திகள் முன் வைத்து வரும் கேள்விகளுக்கு நெத்தியடி பதில். பகுதி 2 கேள்வி : நாட்டில் நடந்துள்ள கொலைகள், குண்டு வெடிப்புகள், கொள்ளைகள், ஹவாலா திருட்டுகள், இவற்றில் இந்துக்கள் பங்கு எவ்வளவு சதவிகிதம்? பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்ற விவரங்கள் உங்களிடம் உண்டா? அதை மேடையில் பட்டியலிடும் துணிவு இருக்கிறதா? பதில் : தேசியக் குற்றப் புலனாய்வு ஆய்வு மையத்திடம் கேட்க வேண்டிய கேள்வியை உள் நோக்கத்துடன் எம்மிடம் கேட்கிறீர். சிறுபான்மை முஸ்லீமானவர்களை குறை சொல்லும், குற்றம் சாட்டும் உங்கள் காவி வண்ண எண்ணம் எமக்குப் புரியாமலில்லை. கொலை, களவு, மோசடிக் குற்றங்களில் ஈடுபடுவோர் எவராயினும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. இவர்களுக்கு ஜாதி, மதம், கடவுள், இனம் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. ஏதாவது ஒரு பயன் நோக்கிச் செயல்படுவதே நோக்கமாய் கொண்டவர்கள். எனினும், பாபர்...

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (2) மதத்தைக் காப்பாற்ற உங்கள் கடவுள் வர மாட்டாரா? ஒ. சுந்தரம்

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (2) மதத்தைக் காப்பாற்ற உங்கள் கடவுள் வர மாட்டாரா? ஒ. சுந்தரம்

பெரியார் இயக்கத்தை நோக்கி சமூக வலைதளங்களில் பார்ப்பனிய சக்திகள் முன் வைத்து வரும் கேள்விகளுக்கு நெத்தியடி பதில். முதல் பகுதி கேள்வி : ‘தாலி’ அகற்றும் போராட்டம் நடத்திய உங்களுக்கு தாலி யோடு இருக்கும் எவரும், அவர் கணவரும் திராவிடர் கழகத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், பெரியார் டிரஸ்ட் உறுப்பினர் பதவிக்கும் தகுதி இழக்கிறார்கள் என்றும் ஒரு அறிக்கை விடும் தைரியம் உண்டா? பதில் : கேள்வியே தவறானது. ‘தாலி அகற்றும் போராட்டம்’ என ஒன்று எக்காலத்திலும் நடத்தப்படவில்லை. நிற்க. ‘தாலி’ பற்றிய பெரி யாரின் கருத்தென்பது, பெண்ணடிமை ஒழிப்பை மையமாகக் கொண்டது. இந்து திருமணச் சட்டப்படி, ஓமம் வளர்த்து, தீயை வணங்கி, ஏழுமுறை சுற்றி வந்து, தாலி கட்டி, நீரை வார்த்து, அதாவது பெண்ணை ஆணுக்கு ஒரு பொருளாகத் ‘தானம்’ கொடுப்பதாக சட்டத்தில் இருந்து வந்தது. இந்த முறை, பெண்ணை போகப் பொருளாக மட்டுமே காட்டுவதாக உள்ளதால், இதனை எதிர்த்து சுயமரியாதைத்...

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (1) ஒ. சுந்தரம்

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (1) ஒ. சுந்தரம்

பெரியார் இயக்கத்தை நோக்கி சமூக வலைதளங்களில் பார்ப்பனிய சக்திகள் முன் வைத்து வரும் கேள்விகளுக்கு நெத்தியடி பதில். கேள்வி: ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று ‘பிராமணனையே’ குறி வைக்கின்றீர்களே… தமிழகத்தில் ‘பிராமணரைத்’ தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா? அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா? பதில் : ‘பிராமணர் என்பது ஜாதி அல்ல; இது ‘வருணம்’ ஆகும். பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருண பேதங்களில் தலைமைத்துவம் தாங்கி, சாதிப் பாகுபாடுகளை உருவாக்கி மக்களை இழிவுபடுத்தி வருவதே ‘பிராமண’ வருணமாகும். பிரம்மாவின் முகத்தில் இருந்து தோன்றியதாகக் கூறப்படும் ‘பிராமண வருணத்தாருக்கு’ ஏனையோர் பணி செய்து கிடப்பதே கடமையாகும் என்பதால், கீழுள்ள அனைவரும், அவர்தம் சாதிகளும், பிராமணரின் ஏவலர்களாக, ஒரே வர்ணமாக ‘சூத்திரர்கள்’ எனக் குறிக்கப்பட்டு விட்டனர். ‘சூத்திரர்கள் யார்’ என மனுதர்ம சாஸ்திரத்தில் ஏழு வகையாக எழுதப்பட்டு,...

இணையத்தில் கேள்விகளுக்கு கழகத் தலைவர் பதில் 02-04-2016 – நாம் தமிழர் கட்சி

நமது கழகத்தின் இணைய தளத்தில், கேள்வி பதில் பகுதியில் இந்த வாரம் வந்த கேள்விகளுக்கு கழகத் தலைவரின் பதில் தோழர் பகலவன் நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு படித்தீர்களா? படித்திருந்தால் அதை பற்றிய நிறை குறையை பற்றி பகிரவும் தோழர் கொளத்தூர் மணி நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவு எமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்ததும் தேவையெனில் எழுதுவோம்.   தோழர் பகலவன் ஆந்திரா, கர்நாடக மற்றும் கேரளா மாநிலத்தவர்கள் தங்களை திராவிடர் என்று அடையாள படுத்துவது இல்லை. நாம் மட்டும் ஏன் நம்மை திராவிடர்கள் என அடையாளப்படுத்த வேண்டும்? தோழர் கொளத்தூர் மணி ஆந்திர மாநிலம் சித்தூரில்தான் திராவிடப் பல்கலைக் கழகம் உள்ளது. அதுபோலவே கர்நாடக மாநிலம் மைசூரில்தான் திராவிட மொழியியல் ஆய்வு மையம் உள்ளது. மற்றொரு காரணம், திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிந்த வடிவம்தான் …. தமிழ்> திரமிழ்>திரமிழ> திரமிட> திரவிட> திராவிட … என்று திரிந்தது என்று கூறுகிறோம். அவ்வாறிருக்க தனிமொழிப் பெருமிதத்தோடு விளங்கும் பிற திராவிட இனத்தவர் தங்கள்...