Category: இணையத்தில் இருந்து

அண்ணாமலையின் பொய் – புரட்டுக்கு ஆணித்தரமான பதிலடி – க.கனகராஜ் – சிபிஎம்

அண்ணாமலையின் பொய் – புரட்டுக்கு ஆணித்தரமான பதிலடி – க.கனகராஜ் – சிபிஎம்

வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவதை அண்ணாமலை வழக்கமாக வைத்திருக்கிறார். அது தவறு என்று மற்றவர்கள் சுட்டிக்காட்டினாலும் அதற்காக வருத்தம் தெரிவிப்பதும் கிடையாது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு  அரசின் கடன் ரூ.8.23 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது என்றும், இது வரலாறு காணாத உயர்வு என்றும் ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் ரூ.3.8 லட்சம் கடன் இருக்கிறது என்றும் தமிழ்நாடு அரசை கடுமையாக சாடியுள்ளார்.  தமிழ்நாடு அரசின் கடன் நிலை குறித்து  அண்ணாமலையின் விமர்சனம் ஒருபுறமிருக்க, எல்லா வளங்களையும், வரிகளையும் வாங்கி வைத்துக் கொண்டு மாநிலங்க ளை அல்லல்பட வைக்கும் ஒன்றிய அரசு எப்படி கடன் வாங்கியிருக்கிறது என்பதை அவர் வசதியாக மறந்து விட்டு மார்தட்டி அலைகிறார். சமீபத்தில் புயல், மழை, வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ஒரு பைசாகூட கொடுப்ப தற்கு இன்றளவும் மோடி அரசாங்கம் முன் வரவில்லை. இதுதவிர, ஒவ்வொரு ஒன்றிய அரசின் திட்டத்திலும் மாநில அரசுகளை சிக்க வைத்து திண்டாட வைப்பதை...

இராஜராஜசோழன் நடத்திய பார்ப்பனிய ஆட்சி

இராஜராஜசோழன் நடத்திய பார்ப்பனிய ஆட்சி

இராஜ இராஜ சோழன் பதவிக்கு வருவதற்கு முன்பே நடந்த சம்பவங்கள் தான் ‘பொன்னியின் செல்வன்’ கதைக்களமாக இருந்தாலும் சோழ மன்னர்கள் அனைவருமே பார்ப்பனர்களின் அடிமை ஆட்சியைத் தான் நடத்தி வந்திருக்கிறார்கள் என்பதே  உண்மையான வரலாறு. “தமிழ்த் தேசியத்திற்கு முன்னோடி”, “தமிழர்களின் பொற்காலம்” என்று வர்ணிக்கப்படுற இராஜ ராஜனைப் பற்றிய கல்வெட்டு ஆராய்ச்சி மற்றும் வரலாற்று அறிஞர்களின் நூல்களைப் பார்க்கும் பொழுது இராஜராஜசோழன் ஆட்சி தமிழர்களின் பொற்கால ஆட்சியாக இருக்கவில்லை பார்ப்பனர்களுக்கே அது பொற்காலமாக விளங்கியிருக்கிறது என்பது தெளிவாகிறது! பார்ப்பனர்களை சேனாதிபதிகளாகவும், அவைத் தலைவர்களாகவும், அரியணை யேற்றி அழகு பார்த்தவன் இராஜராஜன்! களப்பிரர்கள் காலத்தில் காயடிக்கப்பட்ட பார்ப்பன மேலாதிக்கம், மீண்டும் தலை விரித்தாடியது இராஜராஜன் காலத்தில். அருண்மொழித் தேவன் என்ற தமிழ்ப் பெயரை இராஜராஜசோழன் என்று வடமொழிக்கு மாற்றிக் கொண்டவன்! அடிமைகள் சோழர் காலத்தில் அடிமை முறை இருந்ததை பல்வேறு கல்வெட்டுகள் சுட்டிக் காட்டுகின்றன. தாசியின் மக்கள், பெற்றோரால் விற்கப்பட்டவர் போன்ற பலவகையான...

மாவீரர் நாள் பாடல்

மாவீரர் நாள் பாடல்

மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி. வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி. விழிமூடி, இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி. இழிவாக வாழோம், தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி. தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! – இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம் – அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம். எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமும் வணங்குகின்றோம் – உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம் சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது – எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது. எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை...

தமிழ்த்தேசியமும், தந்தை பெரியாரும்! – தோழர் திருமாவேலன்

தமிழ்த்தேசியமும், தந்தை பெரியாரும்! – தோழர் திருமாவேலன்

தோழர் ப.திருமாவேலன் அவர்களின் முக்கியமான கட்டுரை. தமிழ்த்தேசியமும், தந்தை பெரியாரும்! அனைவருக்கும் மீண்டும் ஒரு அன்பான வணக்கம். ‘தமிழ்த் தேசியமும், தந்தை பெரியாரும்” என்கின்ற தலைப்பு எனக்குத் தரப்பட்டு இருக்கிறது. உண்மையில் ஒரு வில்லங்கமான தலைப்பு எனக்குத் தரப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் பொருளற்று, இன்னும் சொன்னால், அதனுடைய உண்மையான சித்தாந்தங்களை உண ராமல், அதற்கான எந்த அர்ப்பணிப்பு உணர்வும் இல்லாமல், அதற்கான தத்துவார்த்த பின்புலங்கள் எதுவும் தெரியாமல், பல்வேறு சிந்தனையற்ற மனிதர் களின் கையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வார்த்தை இருக்குமானால், அதற்குப் பெயர்தான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை தந்தை பெரியார் என் கின்ற வார்த்தைக்குள் இருக்கிறது; அவருடைய வாழ்க் கைக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியத்தினுடைய பிதாமகர்கள் என்று இன்றைக்குத் தங்களுக்குத்...

புரட்சியாளர் அம்பேத்கர் நூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள தொகுதிகளைப் பற்றிய சுருக்கமான தகவல்கள்

புரட்சியாளர் அம்பேத்கர் நூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள தொகுதிகளைப் பற்றிய சுருக்கமான தகவல்கள்

டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள நூல் தொகுதிகளைப் பற்றிய சுருக்கமான தகவல்களை இங்கே பார்ப்போம். 1. ஜாதி ஒழிப்பு, மொழிவாரி மாகாணம், வீரரும் வீர வழிபாடும் முதல் தொகுதி 1. சாதி பற்றியவை, 2. மொழி வாரி மாகாணங்கள் குறித்து, 3. வீரரும், வீர வழிபாடும் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் இந்தியாவில் சாதிகள், அவற்றின் அமைப்பியக்கம், தோற்றம், வளர்ச்சி ஆகியன பற்றிப் பேசுகிறார் அம்பேத்கர்.  பல மானுடவியல் அறிஞர்களின் கூற்றுகளிலிருந்து மேற்கோள்களைச் சுட்டிக்காட்டி, சாதியின் தோற்ற இலக்கணத்தை விளக்கும் அம்பேத்கர் சாதித் தீவிரத்தில் அகமணமுறை எப்படிப் பங்களித்து வருகிறது என்று குறிப்பிடுகிறார்.  அடுத்து, சாதியை ஒழிக்க சமுதாய அமைப்பை எப்படிச் சீர்திருத்த வேண்டும் என்று தகுந்த வாதங்களை எடுத்து வைக்கிறார். நூலின் இரண்டாவது பகுதியில், மொழிவாரி மாகாணங்களினால் எழும் சிரமங்களையும், அனுகூலங்களையும் விவாதித்து, சிரமங்களைத் தீர்ப்பதற்கான வழிவகைகளையும் கூறுகிறார். மூன்றாவது பகுதி, மகாதேவ் கோவிந்த்...

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பெரியார் நூல் ஒரு பார்வை  –   மா.பொழிலன்

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பெரியார் நூல் ஒரு பார்வை – மா.பொழிலன்

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பெரியார் நூல் ஒரு பார்வை  –   மா.பொழிலன் மா. பொழிலன்:  pozhilantamizh@gmail.com பாவலரேறு  ஐயா பெருஞ்சித்திரனார்  அவர்களின்  எழுத்தாற்றல், நூலாக்கங்கள் குறித்தெல்லாம் மணிக்கணக்காக, நாள் கணக்காகப் பேசிக் கொண்டிருக்கவும், எழுதிடவும் இயலும். அதே போல் மறு அச்சாக்கம் செய்யப்பெற்று அண்மையில் வெளிவந்துள்ள ஐயா அவர்களின் நான்கு நூல்களுள் செயலும் செயல் திறனும், ஓ…ஓ.. தமிழர்களே!, சாதி ஒழிப்பு  குறித்தெல்லாம் விரிவாக, அறிந்திட ஏராளமான செய்திகள் உள்ளன. இந்நிலையில், ஐயா அவர்கள் ‘பெரியார்’ குறித்து எழுதிய கட்டுரைகள், பாடல்களின் தொகுப்பாகவே இந்நூல் வெளி வந்துள்ளது. அண்மையில் பெரியார்  படத்தைத் தீயிட்டுக் கொளுத்தவும், அவர் படத்தின் மீது சிறுநீர் பெய்து இழிவுபடுத்தியதுமான நிகழ்வுகள் நடைபெற்ற சூழலில் பெரியார் குறித்து அறிய வேண்டுவதும், ஆய்வு செய்ய வேண்டுவதும், இன்றியமையாததாகவே எண்ணுகிறோம். பெரியாரின் படத்தைச் சில நாள்களுக்கு முன்னர் எரித்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்களோ வைதீகக் கருத்துடைய வர்களோ மட்டும் அல்லர்; தமிழ்த்தேசம் தேவை என்பதாகக்...

பெரியார் என்ன பெருங்கேடரா….?  – தென்மொழிச் செல்வன் கொழுமம் ஆதி

பெரியார் என்ன பெருங்கேடரா….? – தென்மொழிச் செல்வன் கொழுமம் ஆதி

பெரியார் என்ன பெருங்கேடரா….?                                                    – தென்மொழிச் செல்வன் கொழுமம் ஆதி கடந்த மார்ச்சுத் திங்களில் சென்னையில் நிகழ்ந்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு பாடல்தொகுப்பு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். அங்கு நிகழ்வரங்கின் நுழைவாயிலில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நூல்களுள் நாம் வெளியிட்ட தூயதமிழ்ப்பெயர்கள் – நூலினையும் விற்பனைக்கு வைத்திருந்தோம்.  மேற்பார்வைக்கு எம்முடன் வந்த சிறுவன் ஒருவனை அமர்த்தியிருந்தேன்.  அந்தத் தூயதமிழ்ப் பெயர்கள் நூலின் முன்அட்டையில் திருவள்ளுவர் படமும் பின்அட்டையில் பாவாணர், பாவேந்தர், பாவலரேறு படங்களுடன் பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் படமும் அச்சிட்டிருந்தோம்.  அந்த நூலைப் பார்த்த தோழர் ஒருவர், அதிலிருந்த பெரியாரின் படத்தைப் பார்த்து, “இவனைப் போட்டிருப்பதால் தான் இதை வாங்க யோசிக்கிறேன்…” என்றாராம்.  நிகழ்வின் இறுதியில் நாங்கள் புறப்படும்போதுதான் இதை அந்தச் சிறுவன் எங்களிடம்...

பெரியார் நினைவு நாள் – சென்னை – 24-12-2010 கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

பெரியார் நினைவு நாள் – சென்னை – 24-12-2010 கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

ரஷ்யாவில் தைத்துவிட்ட செருப்பை எடுத்துகொண்டு இங்குள்ள காலை வெட்டியவர் அல்ல பெரியார். இங்குள்ள காலை அளந்து பார்த்து செருப்பு தைத்தார் அதுதான் தனி தமிழ்நாடு போராட்டம். [24-12-2010 – சென்னை – தா.செ.மணி] இன்று பெரியாரின் நினைவு நாளில் நாம் கூடியிருக்கிறோம். வழக்கமாக பெரிய அளவில் எடுக்கப்படும் பிறந்தநாள் விழாக்களை விட, நினைவு நாள் விழாக்கள்தான் மிகவும் தேவையானதும், பொருத்தமானதும் என்று நாம் கருதுகிறோம். பிறந்த நாள் விழாக்ககளை அந்தந்த தலைவர்கள் வாழுகின்ற காலம் வரை எடுப்பார்கள், அவர்களிடம் இருந்து ஏதாவது பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு. இப்பொழுதெல்லாம் பார்க்கிறோம், அவர்களுக்கெல்லாம் கூச்சமாக இருக்கிறதோ இல்லையோ, அவர்களுக்கு கொடுக்கும் அடைமொழிகளை பார்த்து நமக்கு கூச்சமாக இருக்கிற அளவிற்கு, பல்வேறு அடைமொழிகளை கொடுத்து சுவரொட்டிகளிலும், பதாகைகளிலும் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் மறைந்துவிட்ட தலைவர்களுக்கு நினைவு நாள் எடுப்பது என்பதுதான், அவர்களுடைய கொள்கைகளை, அவர்கள் ஆற்றிய தொண்டினை, அவற்றை நாம் தொடர்ந்து எடுத்து செல்லவேண்டிய தேவையை,...

ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி – பி.எஸ். கிருஷ்ணன்

ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி – பி.எஸ். கிருஷ்ணன்

இந்திய சமூகத்தில் ஒடுக்கப்படுகிற மக்களுக்கான இணையற்ற போராளி பி.எஸ்.கிருஷ்ணன். 1956-ல் ஐஏஎஸ் அதிகாரியாக ஆந்திர மாநிலத்தில் பதவியேற்றதிலிருந்து, மத்திய அரசின் செயலர் முதற்கொண்ட பல பதவிகளில் பணியாற்றியபோதும், ஓய்வு பெற்ற பின் மறையும் வரையும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக ஓயாமல் உழைத்தவர். பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர், அந்த சமூகங்களுக் குட்பட்ட மதச் சிறுபான்மையினரின் முன்னேற்றத் துக்காகத் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வந்தவர். இந்திய அரசு அதிகாரிகளில் பி.எஸ்.கிருஷ்ணனின் வாழ்வும் பணியும் அரிதினும் அரியவை. பார்ப்பன சமூகத்தில் பிறந்த அவர், சாதிகளை மேலிருந்து கீழ் நோக்கி அடுக்கும் பார்ப்பனியத்துக்கு எதிரான போரில் தன்னை உறுதியான சிப்பாயாக இணைத்துக் கொண்டார். எல்லாச் சமூகங்களும் சம இடம் நோக்கி நகர கீழேயுள்ள சமூகங்கள் மேல் நோக்கி வருவதற்கான இடங்களை உருவாக்குவதும் அதற்கான தடைகளை உடைப்பதும் முக்கியம் என்று கருதிச் செயல்பட்டார். “சாதி அமைப்பு இந்தியக் கலாச்சாரத்தின் கொடிய குற்றம்” என்பது...

அரசியல் மணி என்னும் அணையா விளக்கு!

அரசியல் மணி என்னும் அணையா விளக்கு!

தமிழக அரசியல் வரலாற்றை எழுதும் யாராலும் தவிர்க்க முடியாத பெயர் மணியம்மை. தி.மு.க என்னும் அரசியல் கட்சி உருவாகக் காரணமாக இருந்தவர், தமிழகத்தில் முதன்முதலாக ஓர் இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய பெண், உலகளவில் ஒரு நாத்திக இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய பெண் என்னும் சிறப்புகள் மணியம்மைக்கு உண்டு. இத்தகைய வரலாற்றுச்சிறப்புமிக்க மணியம்மையின் நூற்றாண்டுவிழா இந்த ஆண்டு தொடங்குகிறது. 1920, மார்ச் 10-ல் வேலூரில் கனகசபை – பத்மாவதி தம்பதிக்குப் பிறந்தவர் காந்திமதி. கனகசபையும் பத்மாவதியும் பெரியாரின் கொள்கைகளில் பற்றுகொண்டவர்கள். கனகசபையின் நண்பர், தனித்தமிழ் ஆர்வலர் கு.மு.அண்ணல்தங்கோ காந்திமதிக்கு ‘அரசியல் மணி’ என்னும் பெயரைச் சூட்டினார். கே.அரசியல்மணி என்பது கே.ஏ.மணி என்றாகி, ‘மணியம்மையார்’ என்று காலத்தில் நிலைத்தது. 1943-ல் அரசியல்மணியின் தந்தை இறந்தார். ஒருமாதத்திலேயே இயக்கப்பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டார் மணியம்மை. பேச்சாளராக, கட்டுரையாளராக, போராட்டங்களில் பங்கெடுப்பவராக மணியம்மையின் இயக்க வாழ்க்கை அமைந்தது. திராவிடர் கழகக் கொடியின் தத்துவம், பெண்ணுரிமை, அண்ணல் அம்பேத்கர்...

சக்தி-கௌசல்யா திருமணத்தை ஒட்டி எழுந்த குற்றச்சாற்றுகள் – அறிக்கை

சக்தி-கௌசல்யா திருமணத்தை ஒட்டி எழுந்த குற்றச்சாற்றுகள் – அறிக்கை

முந்தைய அறிக்கை   தியாகு / கொளத்தூர் மணி                  13.01.2019 அனைவருக்கும் வணக்கம். 2018 திசம்பர் சக்தி-கௌசல்யா திருமணத்தை ஒட்டி எழுந்த குற்றச்சாற்றுகள் குறித்து நாங்கள் இருவரும் சேர்ந்து 29.12.2018இல் வெளியிட்ட அறிக்கையின் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் ஊடகங்களிலும் பிற வழிகளிலும் நடந்த விவாதங்களைக் கவனத்தில் கொண்டுள்ளோம். பலதரப்பட்டவர்களும் கிளப்பிய புரளிகளுக்கும் அவதூறுகளுக்கும் நடுவில் எங்கள் அறிக்கையைப் புரிந்து கொண்டு சமூகப்பொறுப்புடன் நிலையெடுத்த தோழர்கள், நண்பர்களுக்கு நன்றி! பாதிப்புற்றதாக முன்வந்த தரப்பாரிடமிருந்து எங்கள் அறிக்கைக்குப் பிறகு ஒரு நீண்ட மடல் வரப்பெற்றோம். அது எங்கள் அறிக்கையைப் பெரும்பாலும் மறுதலிப்பது போல் அமைந்திருந்ததால் அவர்கள் எழுப்பிய ஒவ்வொரு கூறு குறித்தும் எங்கள் விளக்கத்தை அவர்களுக்கு எழுதியனுப்பினோம். இதன் பிறகு இத்தனை நாளாகியும் அவர்களிடமிருந்து மறுமொழி இல்லாததால் எங்கள் விளக்க மடலைப் பொதுவெளியில் முன்வைக்கிறோம். இந்தச் சிக்கலில் எழுப்பப்பட்ட பல குற்றாய்வுகளுக்கும் வினாக்களுக்கும் இது விடையாக அமையும் என நம்புகிறோம். தியாகு / கொளத்தூர்...

தியாகு — கொளத்தூர் மணி அறிக்கை

தியாகு — கொளத்தூர் மணி அறிக்கை

தியாகு — கொளத்தூர் மணி அறிக்கை சக்தி தொடர்பாக… 1) சக்தி-கௌசல்யா திருமணத்துக்குப் பின் சக்தி மீது எழுந்த குற்றச்சாற்றுகளும் அவை குறித்து சமூக ஊடகங்களில் இடம் பெற்ற கருத்துகள், எதிர்க் கருத்துகளும் கவலைக்குரிய முறையில் வளர்ந்து சென்று கொண்டிருந்த நிலையில், அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசித் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் பாரதி மற்ற நண்பர்களையும் இணைத்துக் கொண்டு முன்முயற்சி செய்தார். அவர்கள் இந்தச் சிக்கலில் முதன்மைத் தொடர்புள்ள இருதரப்பினரிடமும் ஒப்புதல் பெற்று, ததேவிஇ தலைமைக்குழு உறுப்பினர் தியாகு, திராவிடர் -விடுதலைக் கழகத் தலைவர், கொளத்துர் தா.செ. மணி ஆகிய எங்கள் இருவரிடமும் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தனர். நாங்கள் இருவரும் 27/12/2018 காலை 10 முதல் இரவு 9 மணி வரை திவிக அலுவலகத்தில் அமர்ந்து, சக்தி-கௌசல்யாவையும், சக்தி மீது குற்றச்சாட்டு கூறியவர்கள், சான்றளிக்க முன்வந்தவர்கள், சக்தி-கௌசல்யா திருமணத்தில் தொடர்புள்ளவர்கள் என்று பலதரப்பட்டவர்களையும் விசாரித்தோம்....

‘பசுமை’ வழிச்சாலையை எதிர்த்துப் பேசினாலே கைதா? கழகம் கண்டனம்

‘பசுமை’ வழிச்சாலையை எதிர்த்துப் பேசினாலே கைதா? கழகம் கண்டனம்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை – சேலம் இடையே அரூர் வழியில் 8 வழி பசுமைச் சாலை அமையவிருப்பதாக அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடியும் சட்டசபையில் அறிவித் துள்ளார். இதன் பின்னணி உள்நோக்கம் குறித்த ஒரு தகவல் சமூக ஊடகங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது. இது குறித்து அந்த பதிவில், “மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை – சேலம்இடையே அரூர் வழியில் 8 வழி பசுமைச் சாலை அமையவிருப்பதாக அறிவித்துள்ளார். இதன் மதிப்பீடு பத்தாயிரம் கோடி ரூபாய், தமிழ் நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துமனை அமைக்காத, மருத்துவ கல்லூரி அமைக்காத மத்திய அரசு ஏன் புதிய சாலையமைக்க பத்தாயிரம் கோடியை செலவிடுகிறது என்று ஆராய்ந்தீர்களா? அந்த பத்தாயிரம் கோடியும் மக்கள் வரிப்பணம் அமையவிருக்கும் சாலை யானது கார்ப்பரேட் நிறுவனமான ஜிண்டாலுக்காக.  ஜிண்டால் என்ற ஒற்றை நிறுவனத்தின் தேவைக்காக தமிழர்களின் நிலமும், கனிம வளமும் களவாடப்பட இருக்கிறது, ஜிண்டால் தன் நிறுவனத்தின் மூலம்...

கபாலி – கோயில் சொத்துக்களை விழுங்கும் ஆத்தீகர்கள்

கபாலி – கோயில் சொத்துக்களை விழுங்கும் ஆத்தீகர்கள்

“கோயில் சொத்துகளை எல்லாம் நாத்திகம் பேசும் திராவிடக் கட்சியினர் விழுங்கி வருகின்றனர். இந்து தர்மத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், அறநிலையத்துறையிடம் இருந்து கோயில்களை பிடுங்கி, சுதந்திரமான ஆன்மீகவாதிகள் அடங்கிய வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்” என்று இந்து முன்னணி கோரி வருகிறது. மயிலை (சென்னை) கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும்  இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஹிந்துக்கள் 471 பேரில் சில முதலியார்கள், நாடார்கள் தவிர ஆகப் பெரும்பான்மையினர்  அய்யர்-அய்யங்கார்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாடகை கொடுக்காத ப்ராடுகளின் பட்டியலில் முக்கியமானது பாரதிய வித்யா பவன். கதர் அணிந்த காக்கி டவுசர் பேர்வழியும்,  காந்தி கொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றியவருமான கே.எம்.முன்ஷியால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் பாரதிய வித்யா பவன்....

எச் இராஜாவை வளைக்கும் சட்டப்பிரிவுகள்

எச் இராஜாவை வளைக்கும் சட்டப்பிரிவுகள்

ராஜாவை வளைக்கும் சட்டப் பிரிவுகள்! பெரியார் சிலை பற்றி பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா சமூக வலைதலத்தில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ராஜாவின் பதிவைத் தொடர்ந்தே திருப்பத்தூரில் பெரியார் சிலை தாக்கப்பட்டது. எனவே தமிழகத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டு, நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் செயல்படும் ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழக விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயரட்சகன் புகார் அளித்தார். அதன் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால், வழக்குபதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதுபற்றி ஜெயரட்சகன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் வழக்கறிஞர் துரை அருணிடம் பேசினோம். “பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஹெச்.ராஜா தொடர்ந்து இரு தரப்பினருக்கிடையில் பகைமையை மூட்டும் வகையில் பேசிவருகிறார். சமூக...

அமேசானின் தானியங்கி சூப்பர் ஸ்டோர் பொருளாதார சுரண்டலை உறுதி செய்யும் முதலாளித்துவ கட்டமைப்பு

அமேசானின் தானியங்கி சூப்பர் ஸ்டோர் பொருளாதார சுரண்டலை உறுதி செய்யும் முதலாளித்துவ கட்டமைப்பு

அமேசான் நிறுவனம் அமெரிக்காவில் 100% தானியங்கி சூப்பர் ஸ்டோரை அமைத்திருக்கிறது. ஒரே ஒரு வேலையாள் கூட இல்லாத இது அறிவியல் வளர்ச்சியின் உச்ச கட்டம். நவீன விஞ்ஞானம் இயந்திரங்கள் மனிதனை உடல் உழைப்பிலிருந்து விடுவித்திருக்கின்றன. மனித உழைப்பை எளிதாக்கி, மனிதன் அதிக நேரத்தை தன் குடும்பத்தோடும், பொழுது போக்குக்காகவும் செலவிடலாம் என்கிற நிலையை உருவாக்கி இருக்கிறது. எந்த அறிவியல் கண்டுப்பிடிப்பும் தனி மனிதனால் கண்டுபிடிக்கப்படுவதாக தோன்றினாலும், உண்மை அப்படி இல்லை. உலக வரலாற்றில் மனித சமுதாயத்தின் வளர்ச்சியின் விளைவே அறிவியல் வளர்ச்சியும், மனித வாழ்வின் அனைத்து மேம்பாடுகளும். அமேசானின் அமெரிக்காவில் அமைத்திருக்கும் தானியங்கி சூப்பர் ஸ்டோர் மனித சமூகத்தின் வளர்ச்சியின் பெருமைக்குரிய மைல்கல். இதன் பலன்கள் மனித குலத்தின் பலனாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். அதனால் மிச்சப்படுத்தப்பபட்ட மனித உழைப்பின் பலன். தொழிலாளர்கள் வேலை நேரக் குறைப்பாக, பொருளாதாரப் பயன்கள் சமூக மேம்பாட்டின் உயர்வாக மாற வேண்டும். ஆனால் இதற்கு நேர் மாறாக...

பெரியார் குறித்து மு.க. ஸ்டாலினுக்கு முக்கிய விளக்கம்:  கொளத்தூர் மணி

பெரியார் குறித்து மு.க. ஸ்டாலினுக்கு முக்கிய விளக்கம்: கொளத்தூர் மணி

தி இந்து தமிழ் நாளிதழில் தி.மு.க. செயல்தலைவர் முக. ஸ்டாலின்  பேட்டி அளித்துள்ளார். அதில் ஒரு கேள்வியாக, “உங்கள் அப்பா பெரியார் பாதையைத் தேர்ந்தெடுத்தார். உங்கள் பாதை அண்ணா பாதையா, பெரியார் பாதையா?” என்று கேட்கப்பட்டது. பெரியார் சிலையுடன் ஸ்டாலின் – பெருமாள் கோயிலில் துர்கா ஸ்டாலின் அதற்கு ஸ்டாலின், “ என் பாதை அண்ணா பாதை. அதேசமயம், அண்ணாவோட பாதையே பெரியார் பாதையோட நீட்சிதான்கிறதைச் சுட்டிக்காட்ட விரும்புறேன். நாத்திகராக இருந்த பெரியார்தான் ஆன்மிக உரிமைகள் எல்லா சமுகங்களுக்கும் கிடைக்கணும்னு இங்கே இறுதி வரைக்கும் போராடினார். என்னோட மனைவி கோயிலுக்குப் போற படங்களைப் போட்டு என்னை விமர்சிக்கிறாங்க. கல்யாணம் ஆன நாள்லேர்ந்து இது நடக்குது. ஒருநாளும் நான் தடுத்தது இல்லை. அது அவங்க நம்பிக்கை. விருப்பம். ஒரு பெண் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கங்கிறதுக்காகவே அவங்களோட விருப்பங்களைக் கைவிடணும்கிறது அடக்குமுறை. நான் அதைச் செய்ய மாட்டேன். எங்கம்மா சாமி கும்பிடுவாங்க. தலைவர் தடையா இருந்தது இல்லை....

800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள்..!!!

800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள்..!!!

800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள்..!!!! ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த கிருத்தவ பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..???? 800 ஆண்டுகள் ஆண்ட முகலாய பேரரசுகள், பெரும்பான்மை மக்களை அடிமைபடுத்திய இந்து மனு தர்ம கோட்பாட்டினை எதிர்க்கவே இல்லை. ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்….??? அவை நாம் என்னவென்று பார்ப்போம்… பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும், வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த இந்து மனு தர்ம்ம சட்டத்தை பிரிடிஷ்சார்கள் ஏற்றுக்கொள்ளாமல், சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிபடையில் 1773 ஆம் ஆண்டு பிரிடிஷ் அரசு சட்டத்தை எழு✍த தொடங்கியது. சத்திரியர்கள் மட்டுமே சொத்து...

தமிழ் ஒரு நீசபாஷை; தமிழில் பேசியபின் ஸ்நானம் செய்க! — காஞ்சி சங்கர மடத்தின் தமிழின் மீதான துவேஷம்..

தமிழ் ஒரு நீசபாஷை; தமிழில் பேசியபின் ஸ்நானம் செய்க! — காஞ்சி சங்கர மடத்தின் தமிழின் மீதான துவேஷம்..

தமிழ் ஒரு நீசபாஷை; தமிழில் பேசியபின் ஸ்நானம் செய்க! — காஞ்சி சங்கர மடத்தின் தமிழின் மீதான துவேஷம்.. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச் சாரியார் எழுதிய “இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற நூலிலிருந்து… காஞ்சி சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதியும் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரும் திருவிடை மருதூர் சத்திரத்தில் உரையாடிக் கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பேசிக் கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக்கூட நாங்கள் பேசிக் கொள்வது புரியாது. “ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?’’ என்று மகா பெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன். “உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்? புரிந்து நடந்து கொள்..’ என்றேன். சங்கராச்சாரியார் தமிழைப் பேசினால். அவர் தீட்டுப்பட்டு விடுவார்; காரணம் தமிழ் நீஷப்பாஷை. தமிழை நீஷப்பாஷையான பிராமணோத்தமர் பேசினால்., அவர்...

இதயத்தை பிசையும் மாணவர் பிரகாஷின் மரண வாக்குமூலம் !

இதயத்தை பிசையும் மாணவர் பிரகாஷின் மரண வாக்குமூலம் !

மன உளைச்சலுக்கு ஆளான பிரகாஷ், கடந்த 25.10.2017 அன்று மாலை தனது முகநூல் பதிவில் “ இனி கல்லூரிக்கு என்னால் வரமுடியாது. என்னை மிகவும் இழிவு படுத்துகிறார்கள். எனது படிப்பையும் முடிக்க விடமாட்டார்கள். நான் சாகபோகிறேன்” என கடிதம் எழுதிவிட்டு, தனது மரணவாக்குமூலத்தை வீடியோவாக தனது மொபைலில் பதிவிட்டிருக்கிறார். சென்னை எழும்பூரில் உள்ள கவின் கலைக் கல்லூரியில் சிராமிக் துறையில் (பீங்கான்) இறுதியாண்டு படித்து வந்த மாணவர் பிரகாஷ் கடந்த 25-10-2017 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷ் – சுயமாக வரைந்த ஓவியம். வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன், தாமரை தம்பதியனருக்கு இரண்டு மகன்கள். பார்த்திபன் அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக பணிபுரிகிறார். அவரது மூத்த மகன் பிரதாப், பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது இளையமகன் தான் பிரகாஷ். சிறு வயது முதலே கலைகளில்...

என்னை விடுதலைப் பெண்ணாக்கியவர் -பெரியார்

அனைவருக்கும் அன்பு வணக்கம். நாம் ஒவ்வொருவரும் இரு கண்களைக் கொண் டுள்ளோம். கண்கள் என்பது நம் எதிரிலே இருக்கும் பொருட்களை மனிதர்களை நிகழ்வுகளை பார்ப்பதற்கு கருவியாகப் பயன்படுகிறது. ஆனால் பேருந்து நிலையத்தில் நமை நோக்கி நெருங்கி வந்து ஒரு இளைஞர் இந்த பஸ் எங்க போகுதுனு கொஞ்சம் பாத்து சொல்லுங்க எனக் கேட்டால் நாம் உடனே சொல்வோம் அல்லது மனதுக்குள்ளாவது நினைத்துக் கொள்வோம் ஏன் இவனுக்குக் கண்ணில்லையா என்று. அவனுக்குக் கண்கள் இருக்கிறது. ஆனால் கல்விக்கண் இல்லையானால் கண்ணிருந்தும் அவனைக் குருடனாகத்தான் இந்த சமூகம் பார்க்கும். கல்விக்கண் இல்லையானால் அவர் கண்ணுடைய வராக இருந்தாலும் வெறும் புண்ணுடையவர் என்று வள்ளுவர் சொல்கிறார். இதேபோல் நான் என் பெற்றோர் மூலம் இந்த மண்ணுக்கு வந்தேன். என் மனம் எந்த இலக்கும் இல்லாமல் நோக்கமும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது. அடுத்த மனிதன் வலி அறியாது எனக்கான வாழ்வை மட்டுமே ஒரு காலம் வரை வாழ்ந்தேன்....

பெரியாரின் விடுதலைப் பெண் தோழர் கௌசல்யா கடிதம்

அனைவருக்கும் அன்பு வணக்கம். நாம் ஒவ்வொருவரும் இரு கண்களைக் கொண்டுள்ளோம். கண்கள் என்பது நம் எதிரிலே இருக்கும் பொருட்களை மனிதர்களை நிகழ்வுகளை பார்ப்பதற்கு கருவியாகப் பயன்படுகிறது. ஆனால் பேருந்து நிலையத்தில் நமை நோக்கி நெருங்கி வந்து ஒரு இளைஞர் இந்த பஸ் எங்க போகுதுனு கொஞ்சம் பாத்து சொல்லுங்க எனக் கேட்டால் நாம் உடனே சொல்வோம் அல்லது மனதுக்குள்ளாவது நினைத்துக் கொள்வோம் ஏன் இவனுக்குக் கண்ணில்லையா என்று. அவனுக்குக் கண்கள் இருக்கிறது. ஆனால் கல்விக்கண் இல்லையானால் கண்ணிருந்தும் அவனைக் குருடனாகத்தான் இந்த சமூகம் பார்க்கும். கல்விக்கண் இல்லையானால் அவர் கண்ணுடையவராக இருந்தாலும் வெறும் புண்ணுடையவர் என்று வள்ளுவர் சொல்கிறார். இதேபோல் நான் என் பெற்றோர் மூலம் இந்த மண்ணுக்கு வந்தேன். என் மனம் எந்த இலக்கும் இல்லாமல் நோக்கமும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது. அடுத்த மனிதன் வலி அறியாது எனக்கான வாழ்வை மட்டுமே ஒரு காலம் வரை வாழ்ந்தேன். மனிதன் என்பவன்...

தோழர் கொளத்தூர் மணி-க்கு துணை நிற்போம்! மதவாத-சாதிவெறி சக்திகளுக்கு பாடம் புகட்டுவோம்!!

தோழர்.கொளத்தூர் மணி-க்கு துணை நிற்போம்! மதவாத-சாதிவெறி சக்திகளுக்கு பாடம் புகட்டுவோம்!! ************************* முத்துராமலிங்கத்தைப் பற்றி மரியாதைக் குறைவாகப் பேசியதாக தோழர்.கொளத்தூர் மணி மீது இந்து மதவாத சக்திகளால் தூண்டப்பட்ட சாதி வெறியர்கள் தங்களது வன்மத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். முத்துராமலிங்கம் குறித்த அவரது பேச்சிற்கு சாதிப் பாசம் அப்பட்டமாக வெளிப்படும் வண்ணம் இதுகாறும் தங்களை முற்போக்காளராகக் காட்டி வந்த பலரும் ்எதிர்வினையும் அறிவுரையும் வாரி வழங்கி வருகிறார்கள். முத்துராமலிங்கத்தைப் முக்கி முக்கி புகழ்ந்து தள்ளுகிறார்கள். இந்நிலையில் சாதிவெறித்தனத்தின் உச்சபட்ச நடவடிக்கையாக தோழர்.மணி கடந்த 01.08.2017 அன்று மதுரைக்குள் செல்லவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார். முத்துராமலிங்கம் என்பவர் முதுகுளத்தூர் கலவரத்திற்கு முழுமுதற் காரணமாக இருந்தவர். சனநாயகப்பூர்வமாக சாதியாதிக்கத்திற்கு எதிராக தனது தன்மான உணர்வை வெளிப்படுத்திய காரணத்திற்காகவே இமானுவேல் சேகரனை கொலை செய்வதற்கு துணை நின்றவர். தன் சாதியைச் சார்ந்த அப்பாவி உழைக்கும் மக்களுக்கு சாதி வெறியூட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்முறையை ஏவியவர். இதனால் மறவ்ர்,பள்ளர்...

இஸ்லாமியப் பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள், கிருத்தவ பிரிட்டிஷாரை ஏன் எதிர்த்தார்கள்?

இஸ்லாமியப் பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள், கிருத்தவ பிரிட்டிஷாரை ஏன் எதிர்த்தார்கள்?

1200 ஆண்டுகள் ஆண்ட முகலாயப் பேரரசுகள், பெரும்பான்மை மக்களை அடிமைப்படுத்திய இந்து மனுதர்மக் கோட்பாட்டினை எதிர்க்கவே இல்லை. ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்மச் சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள். அவை என்னவென்று பார்ப்போம்… பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும், வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த இந்து மனு தர்ம சட்டத்தை பிரிட்டிஷார்கள் ஏற்றுக்கொள்ளாமல், சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 1773ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு சட்டத்தை எழுதத் தொடங்கியது. • சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை இருந்ததை, 1795ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது. • 1804இல் பெண் சிசு கொலை தடுப்புக்கான...

இந்தி பேசும் மாநிலங்களைவிட அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிக்கிறது தமிழ்நாடு

இந்தி பேசும் மாநிலங்களைவிட அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிக்கிறது தமிழ்நாடு

வெங்கைய நாயுடு இந்தி படிக்காத தமிழ்நாட்டை  இந்தி படிக்கும் மாநிலங் களோடு ஒப்பிட்டு பார்க்கச் சொன்னார் ஒப்பிட்டுப் பார்ப்போம். ஹிந்தியும் அவசியமில்லை, வெங்கைய நாயுடுவும் இந்தியாவிற்கு  அவசியமில்லை என்றே தோன்றியது. அரசாங்க புள்ளிவிவரங்களை சிறிது விரிவாக பார்ப்போம். உயர் கல்வி பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம். தமிழ் நாடு – 38.2ரூ. பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 17.6ரூ; மபி – 17.4ரூ; உபி – 16.8ரூ; ராஜஸ்தான் – 18.0ரூ; இந்திய சராசரி : 20.4ரூ. கல்வி நிலையங்களின் தரம் 2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (HRD) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி, முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது...

கவிஞர் சுகிர்தா ராணி கவிதை தொகுப்பு – மாட்டுக்கறி

மாட்டுக்கறியே என் வாழ்க்கை மாட்டுக்கறியே என் கொண்டாட்டம் மாட்டுக்கறியே என் திருவிழா மாட்டுக்கறியே என் வாழ்வு மாட்டுக்கறியே என் உணவு நான் பிறந்து கண்விழித்தபோது உலர்ந்த உப்புக்கண்டத்தின் பெருவாசனையே எனக்கு முதல் சுவாசம். கைகால்களை உதைத்து உதைத்து நான் வீறிட்டு அழுதபோது என் குடிசைவீட்டுத் தாழ்வாரத்தில் செருகியிருந்த எலும்புத் துண்டுகளே எனக்குக் கிலுகிலுப்பை. பசிக்காக உதடுகளைச் சப்புக் கொட்டியபோது இரவடுப்பில் வேக வைக்கப்பட்ட மாட்டிறைச்சிச் சாறே எனக்குத் தாய்ப்பால். கறியின்மீது கவிழ்ந்திருக்கும் மஞ்சள்நிற கொழுப்புத் துண்டுகளை உச்சிவெயிலில் உலர்த்தியெடுத்து பனியென உருகும் ஊன்நெய்யில் சுட்டு எடுப்பதே என் பலகாரம். மாட்டுக்கறித் துண்டுகளை நீளவாக்கில் அரிந்தெடுத்து வீட்டின் முற்றத்தில் கொத்தாக வெட்டப்பட்ட முட்செடியின் நெருங்கிய கிளைகளில் பரப்பிவைத்து உலர்த்துகையில் கருப்புத் துணியேந்தி காகம் விரட்டுவதே எனக்குப் பொழுதுபோக்கு. களிமண்ணால் தேய்த்துக் குளித்து ஆடையணிந்து வெளிச்செல்கையில் என்மீது வீசும் புலால் நாற்றமே எனக்கு நறுமணத் தைலம். . வார்களால் இழுத்துக் கட்டப்பட்டு இடுப்பு இறக்கத்தில்...

டெலிகிராப் இதழ் தோழர் ஃபாரூக் படுகொலை செய்தி

டெலிகிராப் இதழ் (Telegraph India) இசுலாமிய அடிப்படைவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்ட தோழர் பரூக் குறித்து எழுதியுள்ள கட்டுரை : https://www.telegraphindia.com/117…/…/7days/story_143977.jsp

கோவை ஃபாரூக் படுகொலை குறித்த அண்ணன் கொளத்தூர் மணி

கோவை பரூக் படுகொலை குறித்த அண்ணன் கொளத்தூர் மணியின் தீர்க்கமான பேச்சுக்கு நன்றி.. இஸ்லாத்தை மறுத்து, கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்ட காரணத்திற்க்காக, இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கோவையைச் சேர்ந்த பெரியார் திராவிடர் கழக அன்பு சகோதரர் பாரூக் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், அண்ணன் கொளத்தூர் மணியின் ஒரு மணி நேர பேச்சை முழுமையாக நேற்று கேட்டேன். பரூக்கின் கொலையை செய்தவர் பரூக்கோடு கடந்த சில மாதங்களாக திட்டமிட்டே உடன் சுற்றித் திரிந்த ஒரு இஸ்லாமியர் என்றும், கொலையை செய்த பிறகும், மருத்துவமனையில் வந்து அழுது நாடகம் ஆடி இருக்கும் அளவுக்கு குரூரர் என்ற செய்தியும் கேட்டு அதிர்ச்சி தான்.அந்த திடீர் இஸ்லாமிய நண்பர் மீதான சந்தேகம் இருந்ததையும் பரூக் உணர்ந்தே இருந்திருக்கிறார் என்பது இன்னும் கூடுதல் அதிர்ச்சி. பரூக்கின் உடல் பிணக்கூராய்வு நேரத்தில் நானூறு வெகுஜன மக்கள் குறிப்பாக பெரியார் திராவிட கழகர்கள் மருத்துவமனை முன்பு கூடி...

பாரூக்கின் தந்தை அளித்த பேட்டி

கத்தியால் வெட்டிய போதும் கடவுள் இல்லை என்று கூறியிருக்கிறார் என் மகன். பாரூக்கின் தந்தை ‘தமிழ் இந்து’ நாளேட்டுக்கு அளித்த பேட்டி: கோவை உக்கடம் லாரிப்பேட்டைக்கு அருகில் உள்ள பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ளது, கடவுள் மறுப்பில் தீவிரம் காட்டியதால் கொல்லப்பட்ட ஃபாரூக்கின் சிறிய வீடு. ஃபாரூக்கின் மனைவி ரஷீதா(31) குர்ஆன் துவா செய்து கொண்டு இருந்தார். அவரைச் சுற்றிலும் கண்ணீருடன் உறவினர்கள். ‘‘நாங்கள் யாரும் எம் மார்க்கத்துக்கு விரோதிகள் அல்ல. தினமும் 5 வேளை நமாஸ் செய்பவர்கள். தவறாது நோன்பு மேற்கொள்பவர்கள். ஃபாரூக்கின் பிள்ளைகள் அப்ரீத்(13), ஹனபா(8) ஆகியோர் இஸ்லாமிக் அராபிக் பள்ளியில்தான் 1, 6-ம் வகுப்பு படிக்கிறார்கள். எந்த நிலையிலும் மார்க்கத்தைத் தாண்டி நடக்குமாறு ஃபாரூக் எங்களிடம் கூறியதில்லை. அதனால், அவரின் கடவுள் மறுப்புக் கொள்கைக்கும் நாங்கள் எதிராக நிற்கவில்லை. அதற்காக கொலைகூட செய்வார்களா? வேதத்தை முழுமையாகப் படித்து, புரிந்துகொள்ளாதவர்களாலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார். கடவுள் எதையும் மன்னிக்கக் கூடியவர்....

சகிப்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடு ‘தமிழ் இந்து’ தலையங்கம்

‘தமிழ் இந்து’ நாளேடு மார்ச் 24ஆம் தேதி பாரூக் படுகொலைக் குறித்து எழுதிய தலையங்கம். கோவையில் நடந்திருக்கும் இளைஞர் ஃபாருக் கொலை அதிர்ச்சியைத் தருகிறது. இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் மோசமான சூழலின் வெளிப்பாடு என்பது அதிர்ச்சியைத் தாண்டி ஆழ்ந்த கவலையை உருவாக்கு கிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து செய லாற்றிவந்த ஃபாருக், சமூகத்தின் சாதி, மதப் பாகுபாடு களையும் மூடநம்பிக்கைகளையும் சாடிவந்தவர். தொடர்ந்து இறைமறுப்புக் கொள்கைகளைப் பேசிவந்தவர். அவருடைய செயல்பாட்டின் காரணமாகவே நடந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் சகிப்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடு. தமிழகத்துக்கு நாத்திகப் பிரச்சாரம் புதிதல்ல. அதற்கென்று நீண்ட நெடிய மரபு இங்கு இருக்கிறது. குறிப்பாக, நவீன அரசியல் வரலாற்றில் சாதிக்கு எதிராக இங்கு பெரியார் தொடங்கிய கலகம் அதன் மையத்திலேயே கடவுளுக்கும் மதத்துக்கும் எதிரான குரலைத் தாங்கியது. ஆத்திகர்கள் இதற்குக் காலம் முழுவதும் கடுமையாக எதிர்வினையாற்றி வந்திருக்கிறார்கள். ஆனால், அது ஆகப் பெருமளவில்...

“தமிழகத்தின் தாராளச் சூழலை நாம் இழந்திடலாகாது!”

“தமிழகத்தின் தாராளச் சூழலை நாம் இழந்திடலாகாது!”

“தமிழகத்தின் தாராளச் சூழலை நாம் இழந்திடலாகாது!” (நன்றி : தமிழ் இந்து நாளிதழ், தலையங்கம். 24.03.2017) கோவையில் நடந்திருக்கும் இளைஞர் ஃபாருக் கொலை அதிர்ச்சியைத் தருகிறது. இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் மோசமான சூழலின் வெளிப்பாடு என்பது அதிர்ச்சியைத் தாண்டி ஆழ்ந்த கவலையை உருவாக்குகிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயலாற்றிவந்த ஃபாருக், சமூகத்தின் சாதி, மதப் பாகுபாடுகளையும் மூடநம்பிக்கைகளையும் சாடிவந்தவர். தொடர்ந்து இறைமறுப்புக் கொள்கைகளைப் பேசிவந்தவர். அவருடைய செயல்பாட்டின் காரணமாகவே நடந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் சகிப்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடு. தமிழகத்துக்கு நாத்திகப் பிரச்சாரம் புதிதல்ல. அதற்கென்று நீண்ட நெடிய மரபு இங்கு இருக்கிறது. குறிப்பாக, நவீன அரசியல் வரலாற்றில் சாதிக்கு எதிராக இங்கு பெரியார் தொடங்கிய கலகம் அதன் மையத்திலேயே கடவுளுக்கும் மதத்துக்கும் எதிரான குரலைத் தாங்கியது. ஆத்திகர்கள் இதற்குக் காலம் முழுவதும் கடுமையாக எதிர்வினையாற்றி வந்திருக்கிறார்கள். ஆனால், அது ஆகப் பெருமளவில் கருத்துத் தளத்திலேயே...

கடவுள் இல்லை என்று சொன்னால்… கோவை கொடூரம்

கடவுள் மறுப்பு, மத – சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு ஆகிய கொள்கைகளைத் தீவிரமாகப் பேசிவந்த காரணத்தால், கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மத அடிப்படைவாதிகள் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். கோவையில் உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர், ஃபாரூக். இவர், திராவிடர் விடுதலைக் கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். கடவுள் மறுப்பாளராக இயங்கி வந்த ஃபாரூக், முற்போக்குச் சிந்தனையுடன், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசிவந்தார். மார்ச் 16-ம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது அவரது செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. பேசி முடித்தவுடன், ‘என் நண்பன் கூப்பிடறான். என்னன்னு கேட்டுட்டு வந்திடறேன்’ எனக் குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு, மோட்டார் சைக்கிளில் கிளம்பிச் சென்றுள்ளார். உக்கடம் பகுதியில் மாநகராட்சிக் கழிவுநீர் பண்ணை அருகே சென்றபோது, அங்கு காத்திருந்த சிலர் திடீரென ஃபாரூக்கை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த ஃபாரூக், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் இஸ்லாமியர் என்பதால், கொலையாளிகள் இந்துக்களாக இருக்கலாம் என்ற...

தோழர் ஃபாரூக்கை யாராலும் கொல்ல முடியாது!

திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் ஃபாரூக்கை துடிதுடிக்க கொன்று போட்டிருக்கின்றார்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள். தோழர் ஃபாரூக் ஒரு இஸ்லாமியராகப் பிறந்தும் தன்னுடைய கொள்கையாக குரானைத் துறந்து, பெரியாரியத்தை ஏற்றுக் கொண்டவர். பேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் தொடர்ச்சியாக கடவுள் நம்பிக்கைக்கு எதிராகவும், மத நம்பிக்கைக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தவர். அவருடைய வாட்ஸ்அப் குரூப்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400 பேர்வரை இருந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலான நபர்கள் பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு உடையவர்களாய் இருந்துள்ளனர். இது இஸ்லாமிய மத வெறியர்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் தனது குழந்தைகள் கையில் ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லை’ என்ற முழக்கம் இருக்கும் பதாகைகளைக் கொடுத்து அதைப் புகைப்படம் எடுத்து பதிவிட்டிருக்கின்றார். தன்னுடைய குழந்தைகளை வருங்காலத்தில் நாத்திகர்களாக வளர்க்கப் போவதாகவும் சபதம் செய்திருக்கின்றார் தோழர் ஃபாரூக் அவர்கள். அதனால் இஸ்லாமிய மத வெறியர்களின் கடும் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கின்றார். ஆனால்...

பன்னாட்டு நிறுவனங்களை கொழுக்க வைக்க தமிழக மக்கள் மீது மின் கட்டணச் சுமையா? (2)

பன்னாட்டு நிறுவனங்களை கொழுக்க வைக்க தமிழக மக்கள் மீது மின் கட்டணச் சுமையா? (2)

மத்திய அரசின் தனியார் மயக் கொள்கையை 1990 ஆம் ஆண்டுகளில் கொண்டு வந்த காங்கிரஸ் – மன்மோகன் கூட்டணியும், மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மின்சார ஒழுங்குமுறை வாரியத் தின் (மின்சார வாரியத்திற்கான நீதிமன்றம்) நடவடிக்கையே இதற்குக் காரணமாகும். தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தமக்கு மின் உற்பத்தியில் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று கேட்கும் போதெல் லாம் அந்தத் தொகையையும், சில சமயங்களில் அதற்குக் கூடுதலான தொகையையும் மின்சார ஒழுங்குமுறை வாரியம் நம் மினசாரத் துறையிட மிருந்து வாங்கிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கை பெரும்பாலான நமது நலனுக்குப் புறம்பாகவே அமைந்துள்ளது. நம்மைக் கடன் சுமையில் ஆழ்த்தும் செயலையே அது செய்திருக்கிறது. அதோடு நிற்காமல், பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போதுமான மின்சாரம் அளிப்ப தாலும், மிகச் சலுகை விலையில் தடையில்லா மின்சாரம் வழங்குவதாலும் ஏற்படும் நட்டம் அனைத்தையும் நம்மிடமிருந்து வசூலிக்கும் செயலிலும் அது ஈடுபட்டு வருகிறது. வேறு எவருக்காகவோ சலுகை அளிக்க...

சாதி மலம் மண்டி கிடக்கும் உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி திருத்தள சாதி கல்லறை

சாதி மலம் மண்டி கிடக்கும் உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி திருத்தள சாதி கல்லறை

Dear All, I visited world famous shrine Velankanni on 16.02.2017 to study its very worst side. Still maintaining the cemeteries based on the caste. 1. Dalit Cemetery, 2. Masuvathi Cemetery (For Orphans and the peoples got inter-caste marriage), 3. Fisherman Chettiyar Cemetery, 4. Nadar Cemetery, 5. Mukkulathor and Vellalar Cemetery. Even today the Dalits could not participate in the Pascal drama during the Easter. The novena before the festival in September 8th each day allotted for each caste except the Dalits. Just before 5 years the Dalits claimed the rights of celebrate 6th day novena on every 4th of August....

மெக்கால்லே கல்வித் திட்டம்

மெக்கால்லே கல்வித் திட்டம்: கீழே ஒரு சிறிய படம் மெக்கால்லே இந்தியக் கல்வி குறித்து இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் ஆற்றிய ஒரு உரையின் ஒரு பகுதி என்றும், அதில் சொல்லியிருப்பதாக… “அவர் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் சென்றதாகவும் ஒரு திருடனையோ ஒரு பிச்சைக்காரனையோ எங்கும் காண முடியவில்லை என்றும் இந்த தேசம் அவ்வளவு பண்பாடு நிறைந்ததாகவும் ஆன்மீக பலம் பொருந்தியதாகவும் உள்ளது. எனவே அதை அடிமைப் படுத்த நாம் அவர்களின் தொன்மையான கல்வி முறையை ஒழித்து விட்டு ஆங்கில வழி கல்வியைப் பயன்படுத்தலாம்.” பார்ப்பனியம் அவிழ்த்து விட்ட மிகப் பெரிய பொய்களில் இதுவும் ஒன்று. இன்று வரையிலும் அந்தப் பொய் நிலைத்து நிற்கிறது. அவர் அதை இங்கிலாந்துப் பாராளு மன்றத்தில் சொன்னதாகச் சொல்லப் படும் 2-2-1835 ஆம் தேதி அவர் இங்கிலாந்தில் இல்லை. அவர் இந்தியாவில் இருந்தார். சரி அவர் சொன்னது அவருடைய நாட்குறிப்பில் இருக்கும் என்று தோண்டி எடுத்துப் பார்த்தால் ஆயிரம்...

ஜல்லிக்கட்டுக்காக கொதித்தெழும் அப்பாவி இளைஞர்கள்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சென்னை மெரினாவில் மிகப்பெரிய அளவில் பேரணி நடைபெற்று உள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாத போதும், அதை வலியுறுத்தி நடந்த போராட்டங்கள் என்பது மிகக்குறைவே. தமிழக அரசியல் கட்சிகள், சில தேவர் சாதி அமைப்புகளைத் தவிர பெரிய அளவில் ஆதரவு இருக்கவில்லை. அப்படி இருக்கும்போது இந்த ஆண்டு அதுவும் தமிழகம் முழுவதும் எப்படி இது போன்ற திட்டமிடப்பட்ட போராட்டங்கள் நடைபெறுகின்றது என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது. பேஸ்புக்கில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, இத்தனை ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள் என்று சொல்வது மோசடியானதாகவே தெரிகின்றது. குறிப்பாக சென்னையில் போராட்டத்தை Care and Welfere என்ற அமைப்பு நடத்தியுள்ளது. இது ஒரு அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும். இந்த அமைப்புக்கும், ஜல்லிக்கட்டுக்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லை. அவர்களது...

ஜல்லிக்கட்டு மீதான பண்பாட்டு மயக்கமும், நாட்டு மாடுகள் மீதான திடீர் அக்கறையும்

எங்களது ஊர்ப் பகுதிகளில் ஒரு சொலவடை உண்டு. ‘மாடுமுட்டிப் பய’ என்பார்கள். என்ன என்று பெரியவர்களிடம் கேட்டால் சொல்வார்கள், “மாடு நம்மை முட்ட வந்தால் புத்தியுள்ளவங்க என்ன பண்ணுவோம்… விலகி நிற்போம். ஆனா இவன் என்ன பண்ணுவான்னா மாட்டுக்குச் சமமா மல்லுக்கு நிப்பான். அந்தளவுக்கு புத்திகெட்ட பய…” அதுபோன்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு செயல்தான் ஜல்லிக்கட்டு. மனித அறிவும், அறிவியல் தொழில்நுட்பமும் மேம்படாத காலத்தில் மாட்டை அடக்குவது அல்லது அணைத்து, வசப்படுத்துவது வீரமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த அறிவியல் தொழில்நுட்ப காலத்தில் மாட்டோடு மல்லுக்கு நிற்க எந்த அவசியமும் இல்லை. மாட்டை வசப்படுத்த ஆயிரம் வழிகள் இருக்கின்றன. மாட்டிற்கும், நமக்கும் என்ன பொருத்தம்? அதன் உருவ அளவு என்ன? நமது உருவ அளவு என்ன? அதன் கொம்புகள், வலுவான கால்கள் என்ன? நமது உடலமைப்பு என்ன? அதன் பலம் என்ன? நமது பலம் என்ன? அதோடு மோதி நமது பலத்தை நிரூபிக்க...

புனிதங்களைப் பொசுக்கியவர் : புகழ்பெற்ற அரசியல் அறிஞர் பார்வையில் பெரியார்!

பேராசிரியர் சுனில் கில்னானி இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். அவருடைய, ‘INCARNATIONS: INDIA IN FIFTY LIVES’ நூலில்… தந்தை பெரியார் குறித்து இடம்பெற்ற ‘SNIPER OF THE SACRED COWS’ கட்டுரை ஆசிரியரின் அனுமதி பெற்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது: இந்தியாவில் வாழும் அனைத்துப் பெண்களையும் தனியாகப் பிரித்து ஒரு தேசத்தை நாம் கட்டமைப்பதாக வைத்துக்கொள்வோம். இதை, ‘இந்தியப் பெண்கள் குடியரசு’ என்போம். இந்த நாட்டில், 60 கோடி பேர் இருப்பார்கள். ஆண்களால் மோசமாக ஆளப்படும் இந்தியாவுக்கு அடுத்த, பெரிய தேசமாக அது திகழும். அந்தத் தேசத்தின் மனிதவள வளர்ச்சிக் குறியீடானது மியான்மர், ருவாண்டா முதலிய நாடுகளுக்கு இடையே மோசமான இடத்தைப் பெறும். அந்தத் தேசத்தில் பள்ளிக்குச் செல்லும் சராசரி வருடங்கள் அதிர்ச்சி...

ஜோதிராவ் புலே – ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

இந்துத்துவ தத்துவஞானி ராதாகிருஷ்ணன் கொண்டாடப்படுகிறார்; கல்லடிப்பட்டு கல்விக்கூடங்கள் நடத்திய புலே இருட்டில் இருக்கிறார்! முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நல்ல ஆசிரியர் என்பதற்கான இலக்கணம் குறித்தும் அவர் மாணவர் சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் அவரவர் பாணியில் கருத்துக்களை அள்ளித் தெளிக்கிறார்கள். ஊடகமும் சமூக ஊடகங்களும் நிரம்பி வழிகின்றன. எந்த ஊடகமும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆசிரியர் சமுதாயத்துக்கும் மாணவர் சமுதாயத்தும் என்ன செய்தார் என்று எப்போதுமே சொல்வதில்லை. ராதாகிருஷ்ணன் யார்? ஆந்திராவின் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் ஒரு பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர் ராதாகிருஷ்ணன். கிறித்துவ மிஷனரி பள்ளிகளிலும் சென்னை கிறித்துவ கல்லூரியிலும் படித்த அவர், இளம் வயதிலேயே பேராசிரியராக நியமிக்கப்பட்டவர். இதெல்லாம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடந்தவை. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஊடாக இந்து சமூகம் சாதி படிநிலைகள் மூலம் அடிமைப் படுத்தி...

“திராவிடர் விடுதலைக் கழகம்” இது புதிய பெயரல்ல, புதிய முன்னெடுப்பு

“திராவிடர் விடுதலைக் கழகம்” இது புதிய பெயரல்ல, புதிய முன்னெடுப்பு

12-08-2012 ஞாயிறு அன்று காலை 10-00 மணிக்கு, ஈரோடு செல்லாயம்மாள் திருமண மண்டபத்தில், “இலக்கு நோக்கிய இலட்சியப் பாதையில் இணையும் தோழர்களின் சந்திப்பு”, கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முன்னதாக, கழகத் தலைவர் தலைமையில் தோழர்கள் திரளாக சென்று, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் 82 தலைமை செயற்குழு உறுப்பினர்களில் 51 உறுப்பினர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டனர். நேரில் வர இயலாத குமரி மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சதா, நெல்லை மாவட்ட அமைப்பாளர் காசிராசன், கடலூர் மாவட்டத் தலைவர் வடலூர் வெங்கடேசன் ஆகியோர் தொலைபேசி வழியாக தங்கள் ஆதரவை கழகத்தலைவரிடம் கூறியிருந்தனர். மூத்த பெரியார் பெருந்தொண்டர் ஈரோடு மாரப்பனார் தனது மகன் உடன் கலந்துகொண்டார், மேலும் ஈரோடு விடுதலை வாசகர் வட்டத் தலைவர் அறிவுக்கன்பன் என்கின்ற...

புதிய அமைப்பு ஏன்? – தோழர்கள் கொளத்தூர் மணி & விடுதலை.க.இராசேந்திரன்

புதிய அமைப்பு ஏன்? – தோழர்கள் கொளத்தூர் மணி & விடுதலை.க.இராசேந்திரன்

“பெரியாரியலில் உண்மையான பற்றுதலும் – அதை நிறைவேற்றித் தீரவேண்டும் என்ற உந்துதலும், அதற்கென இழப்புகளையும் சந்தித்துக் களப்பணியாற்றும் துடிப்பும் கொண்ட பெரியாரின் தொண்டர்கள் ஒன்று திரண்டு செயலாற்றவேண்டும் என்ற வரலாற்றுக் கட்டாயம்தான் இப்போது உருவாகி இருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகம்” இது 2001 ஆம் ஆண்டில் 5 பெரியாரிய அமைப்புகள் ஒன்றாக இணைந்து தந்தைபெரியார் திராவிடர் கழகமாகச் செயல்பட முன்வந்தபோது மக்கள் முன் வைத்த பிரகடனம், இந்த ஐந்து அமைப்புகளும் தங்கள் அமைப்புகளின் அடையாளங்களைவிட பெரியாரின் இலட்சியத்தை கொண்டு செலுத்தலே முதன்மையான பணியாக ஏற்றன என்பதை இந்தப் பிரகடனம் தெளிவுபடுத்துகிறது. ஆனால் அந்த இலட்சியத்தை அடையவே இயக்கம் என்ற பாதைமாறி, தங்கள் முந்தைய இயக்க அடையாளத்தை முன்னிறுத்தலே முதன்மை இலக்கு என்ற நிலை, பெரியார் திராவிடர் கழகத்திற்குள் உருவாக்கப்படுவதுதான் இன்றைய நெருக்கடிகளுக்குக் காரணமாகும். பெரியாரின் அடிப்படைத் தத்துவமான சாதிஒழிப்பு என்ற இலட்சியத்தையே தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்றுக்கொண்டது. அதன்...

மருத்துவ கல்வியில் பறிபோகும் தமிழக மாணவர்களின் எதிர்காலம் – அலசல்

சில வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்த ஒரு சிறுமியை பற்றி கேள்வி பட்டிருக்கிறோம்.. அதற்கு பிறக்கும் அது போன்ற செய்திகள் வந்திப்பதாகவே நினைவு.. அவர்கள் ஏன் சிகிச்சைக்காக தமிழகத்திற்கு வர வேண்டும்?.. இந்தியாவின் ஹைடெக் நகரங்களான மும்பை டெல்லி பெங்களூர் போன்றவற்றை எல்லாம் விட்டு விட்டு.. என்பதில்தான் மருத்துவத்தில் தமிழகம் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது என்பது புரியும்.. மருத்துவத்திலும், மருத்துவக் கல்வியிலும் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக உள்ளது தமிழகம்தான். பிற மாநிலங்களில் இருந்தும் , வெளிநாடுகளிலிருந்தும் தமிழகத்துக்கு சிகிச்சைக்காக பலர் வருகின்றனர். ஆசியாவிலேயே சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் தமிழகமும் இருக்கிறது. திராவிடத்தால் வாழ்ந்தவர்களுக்கு கொஞ்சம் களுக்குன்னு இருக்கும் பேரவால்ல, விஷயம் அதுவல்ல மேல சொன்ன பெருமைகள் நம்மை விட்டு போக போகின்றன.. நீட் மருத்துவ நுழைவு தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறார்கள்.. இந்தியா முழுவதிற்கும் மருத்துவத்திற்கு ஒரே நுழைவு தேர்வு கொண்டு வர போகிறார்கள்.. நியாயந்தானேன்னு நம்மாளு வக்கணையா பேசுவான். உள்ளே இருக்கும் சாதிகளை புரிஞ்சுக்காம.. தமிழகத்தில் தான் அரசு மருத்துவ...

வரலாற்றுச் “சிரிப்பு” மிக்க வாக்குறுதி… பாமரன்

காஷ்மீரிகளின் தனித்துவம்….. படிக்க ஒருவேளை உங்களில் சிலருக்கு சலிப்பு வரலாம்…. என்னடா இப்பத்தான் இவன் 1947 க்கே வந்திருக்கான்….. எப்ப இவன் 2010 க்கு வர்றது? நாம எப்ப காஷ்மீரப் பத்தி தெரிஞ்சுக்கறது? என்று எரிச்சல் கூட வரலாம். ஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றை ஓரிரு வாரங்களுக்கு வாசிக்கவே நமக்குள் இத்தனை சலிப்பு என்றால் நானூறு…. ஐநூறு ஆண்டுகளாய் விடுதலைக்காக ஏங்கித் தவிக்கும் ஒரு இனத்துக்கு…. தொடர்ச்சியான அடக்குமுறைக்கும்…. அடிமைத்தனத்திற்கும் பலியாகிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்துக்கு எத்தனை சலிப்பும், எத்தனை எரிச்சலும், எத்தனை ஏமாற்றமும் இருக்கும்? ஆனால் அதிசயத்தக்க வகையில் அப்படி எதுவும் இல்லாமல் இன்னமும் அயராது போராடிக் கொண்டிருப்பதுதான் காஷ்மீர மக்களின் தனித்துவம். இனி தொடர்வோம்….. ”காஷ்மீரில் நிகழ்கின்ற சம்பவங்களை மத மோதல்களாகவே சித்தரிக்கின்ற வைதீக இசுலாமியர்களும் உண்டு. வைதீக இந்துக்களும் உண்டு. ஆனால் உண்மை இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டே நிற்கிறது. அந்த உண்மைக்கு இன்னும் கொஞ்சம் அருகில் செல்ல...

காஷ்மீரிகளின் தனித்துவம்….. பாமரன்

காஷ்மீர் – ஒரு முன்கதை சுருக்கம் சென்ற வாரம் ”ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் இவர்களிடம் இருந்து வருகிறது. நான் பார்த்தவரையில் இவர்கள் ஒரே மக்களாகவே இருந்து வருகிறார்கள். காஷ்மீரி இந்துவுக்கும், காஷ்மீரி முசுலீமுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் என்னால் காண முடியவில்லை. ஜம்மு, காஷ்மீர் ஆகியவற்றின் எதிர்காலத்தை காஷ்மீரிகளின் விருப்பமே தீர்மானிக்க வேண்டும் என என் அறிவு கட்டளையிடுகிறது.” – மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இன்று காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தினை இந்து முசுலீம் இடையிலான போராட்டம் என்றோ…… அல்லது இந்தியா பாகிஸ்தான் இடையிலான யுத்தம் என்றோ எண்ணிக் கொண்டிருந்தால்….. நாம் எங்கோ தவறான திசையை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தை ஓரளவுக்காவது நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு முன்னதாக காஷ்மீரி மக்களின்  தனித்துவமான பண்பாட்டைப் பற்றிப் புரிந்து கொண்டால்தான் அது சாத்தியப்படும். பெரும்பான்மையான மக்கள் இசுலாமியர்கள் என்றாலும் பெளத்தர்கள்….. சீக்கியர்கள்…....

காஷ்மீர் – ஒரு முன்கதை சுருக்கம் – பாமரன்

அரை நூற்றாண்டுக்கும் மேலாய் தொடர்ந்து கொண்டிருக்கும் காஷ்மீரின் துயரத்தை ஓரிரு பக்கங்களில் அடக்கிவிட முடியுமா என்ன? இது வரையிலும் இதுபற்றி வெளிவந்துள்ள நூற்றுக்கணக்கான புத்தகங்கள்….. ஆயிரக்கணக்கான கட்டுரைகள்…… மரியாதைக்குரிய நீதிபதிகளது உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகள்…. என எண்ணற்ற ஆதாரங்களை கரைத்துக் குடிக்காவிட்டாலும் பரவாயில்லை…. குறைந்தபட்சம் அதில் கால்பங்காவது கவனத்தில் கொள்ள வேண்டுமே.? ஏனெனில் இதனை எழுத முற்படுவது எனது கட்டுரைகளில் மேலும் ஒரு எண்ணிக்கையைக் கூட்டிக்காட்டும் என்பதைக் காட்டிலும்….. ரத்தம் சிந்த போராடிக் கொண்டிருக்கும் எவரையும் தப்பித்தவறிக் கூட தவறுதலாகக் காட்டிவிடக் கூடாது என்பதுதான் எனது தயக்கம். அந்த அச்சம்தான் என்னை இவ்வளவு நாளும் பிடித்தாட்டிக் கொண்டிருந்தது. “ராணுவத்தின் மீதே கலவரக்காரர்கள் கல்லெரிகிறார்கள்.” “அமைதியை நிலை நாட்ட வேறு வழியின்றி ராணுவம் துப்பாக்கிச் சூடு” “பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் தாக்குதல்” என அன்றாட தலைப்புச் செய்திகளை மட்டும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு நாமும் ஓய்வெடுக்கலாம்தான். ஆனால் இதுவெல்லாம் அப்படியே நூற்றுக்கு...

தவறவிடக் கூடாத ஆய்வு நூல்கள் – தோழர் பழ.அதியமான்

”தவறவிடக் கூடாத ஆய்வு நூல்கள்” எனும் தலைப்பில் தோழர் பழ.அதியமான் அவர்கள் 30.05.2016 தமிழ் இந்து நாளிதழில் சிந்தனைக் களம் பகுதியில் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் புத்தாயிரத்தில் வந்த சில முக்கிய நூல்கள் என குறிப்பிட்டுச் சொல்லியுள்ள புத்தகங்களில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை வெளியீட்டாளராக கொண்ட பெரியார் திராவிடர் கழக பதிப்பகம் சார்பில் வெளியிட்ட ”குடி அரசு 1925-1938 பெரியாரின் எழுத்தும் பேச்சும்” தொகுதிகள் குறித்து பதிவு செய்துள்ளார்.இவை இணையத்திலும் கிடைக்கின்றன என கூறியும் உள்ளார். இணையத்தில் இத்தொகுதிகளை படிக்க விரும்புவோர் கீழ்காணும் இணைப்பில் உள்ள கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று கழக வெளியீடுகள் எனும் தலைப்பின் கீழ் சென்று படிக்கலாம். http://dvkperiyar.com/?cat=76