Category: திருவண்ணாமலை

பெரியார் முழக்கம் இதழுக்கு ரூ.1,000 வளர்ச்சி நிதி

பெரியார் முழக்கம் இதழுக்கு ரூ.1,000 வளர்ச்சி நிதி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம், நாராயணக் குப்பத்தைச் சேர்ந்த இரா.வீரமணி – ஏ.கார்ஷீலா ஆகியோரின் இணையேற்பு விழா 22.02.2024 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஈரோடு இரா.வீரமணி, கழகத் தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வை கழக கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் க.இராமர் ஒருங்கிணைத்தார். முன்னதாக விடுதலைக் குரல் குழுவின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இணையேற்பு விழாவின் மகிழ்வாக மணமக்கள் கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழ் வளர்ச்சி நிதியாக ரூ.1000/- நன்கொடையாக வழங்கினார்கள். பெரியார் முழக்கம் 15032024 இதழ்

அம்பேத்கர் நினைவு நாள்: கழக சார்பில் சிலைகளுக்கு மாலை

அம்பேத்கர் நினைவு நாள்: கழக சார்பில் சிலைகளுக்கு மாலை

அம்பேத்கர் நினைவுநாளை யொட்டி கழக சார்பில் பல்வேறு இடங்களில் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சென்னை : புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி, மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் அடையாறு அம்பேத்கர் மணிமண்டபத்தில் காலை 9:30 மணியளவில், இரண்யா  கொள்கை முழக்கங்களை எழுப்பி  மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு, கிருத்திகா மாலை அணிவித்தார். இறுதியாக, இராயப்பேட்டை வி.எம். தெரு படிப்பகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர்  படத்திற்கு தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் மாலை அணிவித்தார். தலைமைக் கழகப் பொறுப் பாளர்கள், மாவட்டப் பொறுப் பாளர்கள், பகுதி கழகப் பொறுப் பாளர்கள் உட்பட கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர். விழுப்புரம் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் 66ஆவது நினைவு நாளை யொட்டி விழுப்புரம் அரசு மருத்து வமனை எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அனிவித்து கொள்கை முழக்கம் உறுதியேற்பு...

முதலாம் ஆண்டு நினைவு மற்றும் தோழமை உறுதி ஏற்பு தினம்

ஆந்திராவில் அப்பாவி தமிழக கூலித் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட ”முதலாம் ஆண்டு நினைவு மற்றும் தோழமை உறுதி ஏற்பு தினம்.” கடந்த ஆண்டு இதே ஏப்ரல் 7ந்தேதி ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்பு அதிரடிப் படையால் அநியாயமாய் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக கூலித் தொழிலாளர்களின் முதலாமாண்டு நினைவும், அவர்கள் குடும்பங்களுக்கான ஆதரவு மற்றும் பாதுகாப்பிற்கான தோழமை உறுதி ஏற்பு நாளும், 7-4-2016 வியாழன் அன்று, திருவண்ணாமலை சாரண சாரணியர் பயிற்சிக் கூடத்தில், மக்கள் கண்காணிப்பகம், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடந்தது. நினைவேந்தலைத் தொடர்ந்து நடந்த தோழமை உறுதியேற்பு நிகழ்வு மக்கள் கண்காணிப்பின் இயக்குநர் ஹென்றி திபேன் தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் கல்விமணி உள்ளிட்டோர் உரையாற்றினர். உரைகளில் இது தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், இனி மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டன.