Category: தென்சென்னை

வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு கழகம் ஆதரவு

வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு கழகம் ஆதரவு

சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றுவரும் உண்ணா விரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வழக்கறி ஞர்களை கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா‌.உமாபதி ஆகியோர் 02.03.2024 அன்று சந்தித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தங்களது ஆதரவை தெரிவித்தனர். இராஜேஷ், அருண் கோமதி, எட்வின் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 1-இல் ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் திருப்பூர் மகிழவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 07032024 இதழ்

சென்னையில் ஆணவப் படுகொலை!

சென்னையில் ஆணவப் படுகொலை!

சென்னை : வேளச்சேரி அருகே உள்ள பள்ளிக்கரணையில் பிரவீன் என்கிற ஆசிக் என்ற இளைஞர் 24.02.2024 அன்று ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். தகவலறிந்து சென்னை மாவட்டக் கழகத்தின் அறிவுறுத்தலின் படி மடிப்பாக்கம் பகுதிச் செயலாளர் ம. கி. எட்வின் பிரபாகரன், அட்டி அருண் ஆகியோர் பிரவீனின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதில் கழகத் தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், மக்கள் குடியரசு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜான் மண்டேலா ஆகியோர் பங்கேற்றனர் பின்னர் வழக்கறிஞர் ரமேஷ் பெரியார், அருள் ஜெகன், ஏதுசாமி, மோகன் உள்ளிட்ட தோழர்களை சந்தித்து ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். சென்னை போன்ற மாநகரங்களிலேயே ஆணவப் படுகொலை செய்யும் அளவுக்கு ஜாதியவாதிகளுக்கு துணிச்சல் அதிகரித்திருப்பது கவலைக்குரிய ஒன்று. ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான கடுமையான சட்டத்தை அமல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழ்நாடு அரசு இதுகுறித்து உடனடியாக பரிசீலிக்க வேண்டியது அவசியமாகிறது....

களைகட்டிய பொங்கல் நிகழ்ச்சிகள் சென்னையில் மேயர் பிரியாராஜன் பங்கேற்பு

களைகட்டிய பொங்கல் நிகழ்ச்சிகள் சென்னையில் மேயர் பிரியாராஜன் பங்கேற்பு

திருவல்லிக்கேணி பகுதி சார்பில் 24-ஆம் ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் 07.01.2024, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளை திமுக இளைஞரணி மேற்கு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் 13.01.2024, சனிக்கிழமை நடைபெற்றது. “மாணவக் கலைஞர்கள் குழுவின்” பறையிசை – ஒயிலாட்டம் – மரக்கால் ஆட்டம் – தீச்சிலம்பம் – மயிலாட்டம் – மாடாட்டம் – புலி ஆட்டம், Dude’z in Madras குழுவின் ராப் இசை, U Won Dance Crewe பகுதி மாணவிகளின் நடனம், கானா சுதாகர்‌ – புரட்சிமணியின் மக்களிசை சங்கமம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பரிசளிப்பு விழாவுக்கு மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமை தாங்கினார். இராஜேசு வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் வணக்கத்துக்குரிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, 119வது வார்டு மாமன்ற...

மொழிப்போர் தியாகிகள் நினைவிடங்களில் மரியாதை

மொழிப்போர் தியாகிகள் நினைவிடங்களில் மரியாதை

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளான ஜனவரி 25ஆம் தேதி அன்று சென்னை மூலக்கொத்தலத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் நடராசன் – தாளமுத்து – தருமாம்பாள் அம்மையார் ஆகியோரின் நினைவு இடங்களில் கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் இரவி பாரதி, வடசென்னை துரை உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர். பெரியார் முழக்கம் 01.02.2024 இதழ்

சென்னை, திண்டுக்கல்லில் கலந்துரையாடல் கூட்டங்கள்

சென்னை, திண்டுக்கல்லில் கலந்துரையாடல் கூட்டங்கள்

திருவல்லிக்கேணி : கழக திருவல்லிக்கேணி பகுதிக் கலந்துரையாடல் கூட்டம் 27.01.2024 அன்று இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில்  பகுதிச் செயலாளர் ப.அருண்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நடந்து முடிந்த 24ஆம் ஆண்டு பொங்கல் விழா வரவு – செலவு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் பகுதி கழக செயல்வீரர்களுக்கு பயிலரங்கம், வருகிற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 27.01.2024 அன்று மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அடுத்தகட்டப் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். பின்னர் பழனி அ.கலையம்புத்தூர் ஊராட்சி வண்டிவாய்க்காலில் அமைந்துள்ள தந்தை பெரியார் படிப்பகத்தை பார்வையிட்டனர். இதில் மாக்சிம் கார்க்கி, ராஜா, பெரியார், நாச்சிமுத்து, கபாலி, சங்கர், ஆயுதன், உஷாராணி, இம்ரான்...

சென்னையில் இணையதளப் பிரிவு கருத்தரங்கம்

சென்னையில் இணையதளப் பிரிவு கருத்தரங்கம்

கழகத்தின் இணையதளப் பிரிவு கருத்தரங்கம் சென்னை மாவட்ட இணையதளப் பிரிவு பொறுப்பாளர் இரண்யா தலைமையில் 26.03.2023 அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாநாட்டுச் செய்திகளை முன்னெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. யூடியூபில் செயல்பட வேண்டிய அவசியம், யூடியூப் சேனல்களைத் தொடங்கி இயக்குவது குறித்த அடிப்படையான தகவல்கள், சமூக வலைத்தளமான டிவிட்டரில் செயல்பாடுகளை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கருத்தரங்கில் பேசப்பட்டது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., நாம் தமிழர் உள்ளிட்ட அமைப்புகள், கட்சிகளால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறுகளை முறியடிக்க, தோழர்கள் சமூக வலைதளங்களை எவ்வாறு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம் என்பது குறித்து சில முன்னணி யூடியூபர்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். இறுதியாக திருப்பூர் மகிழவன் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 30032023 இதழ்

உணர்வுகளைப் பகிர்ந்த பெண்கள் சந்திப்பு

உணர்வுகளைப் பகிர்ந்த பெண்கள் சந்திப்பு

அன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் மகளிர் தின பெண்கள் சந்திப்பு நிகழ்வு, 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை சென்னை கழகத் தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் தொங்கி மாலை 5.30 வரை நடைபெற்றது. நிகழ்விற்கு தேன்மொழி தலைமை ஏற்று நடத்தினார். ஜெயந்தி வரவேற்புரை நிகழ்த்தினார். மதிவதனி அன்னை மணியம்மையார் குறித்து தொடக்கவுரை ஆற்றினார். குறளரசி மற்றும் ஆதித்யா ஆகிய இருவரும் திராவிட இயக்கத்தின் பெண் தலைவர்களான அன்னை நாகம்மையார், தோழர் கண்ணம்மாள், அன்னை சத்தியவாணிமுத்து, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், குஞ்சிதம் அம்மையார், டாக்டர் எஸ்.தருமாம்பாள் ஆகியோரது வாழ்க்கைக் குறிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். அடுத்த நிகழ்வாக தோழர்கள் பல்வேறு தலைப்புகளில் கருத்துரையாற்றினர். றடிஆஹசூ – உடலும், உளவியலும் – தேன்மொழி; பெண்களின் சுயமரியாதையை நிலைநாட்டும் திராவிட மாடல் (அன்றும்-இன்றும்) – ரம்யா; குடும்ப கௌரவத்தின் அடையாளம் பெண்கள் (உருட்டுகளும், புரட்டுகளும்) – அறிவுமதி; சட்டம் பேசாதே! டாக்டர் அம்பேத்கர் பெற்றுத்தந்த பெண்ணிய உரிமைகள் –...

அர்ச்சகர் சட்டம்: மதுரை நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

அர்ச்சகர் சட்டம்: மதுரை நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீரங்கம் குமார வயலூர் கோவிலில் அனைத்து சாதி அர்ச்சகர் சட்டத்தின்படி மூன்று அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் ஒருவர் பார்ப்பனர். ஏனைய இரண்டு பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களின் நியமனம் செல்லாது என்றும், இதற்கு முன்பு பணியில் இருந்த பார்ப்பனர்களுக்கே அர்ச்சகர் பணி கொடுக்கப்பட வேண்டும் என்றும், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் அளித்த தீர்ப்பைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு இவ்விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மார்ச் 9, 2023 மாலை 4 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் இரா. உமாபதி முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் தொடக்கமாக கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, காஞ்சிபுரம் ரவிபாரதி உரையாற்றினார். பின், தோழர் நாத்திகன், இரண்யா, ப்ரீத்தி ஆகியோர் ‘தூங்குறியா நடிக்கிறியா ரங்கநாதா?’ பாடல்களைப் பாடினர். அனைத்து சாதியினர் அர்ச்சகர் பயிற்சி மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரங்கநாதன், பணி...

கழக ஏட்டுக்கு சந்தா: கழகக் கிளைகள் தீவிரப் பணி

கழக ஏட்டுக்கு சந்தா: கழகக் கிளைகள் தீவிரப் பணி

கொளத்தூர் : 04.12.2021 சனி மாலை 5.30 மணியளவில், கொளத்தூர் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் தலைமையிலும், மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்களாகக் கீழ்க்கண்ட தோழர்கள் நியமிக்கப்பட்டனர். கொளத்தூர் நகரம்: நகரத் தலைவர் -இராமமூர்த்தி, நகரச் செயலாளர் – பா.அறிவுச்செல்வன், பொருளாளர் – சூ. இனியன், காவலாண்டியூர் கிளைக் கழகத் தலைவர் – இராசேந்திரன், துணைத் தலைவர் – சேகர், செயலாளர் – தங்கராசு, இணைச் செயலாளர் – சந்தோஷ், பொருளாளர் – சின்ராசு, உக்கம்பருத்திக்காடு செயலாளர் – செல்வம், ஒருங்கிணைப்பாளர்கள் – கோமதி, சித்ரா, ஒன்றிய குழு ஒருங்கிணைப்பாளர்கள் – சித்துசாமி, விஜயகுமார், ஒருங்கிணைப்பு குழு தோழர்கள் – சுதா, இளவரசன், சுரேஷ், சக்தி குமார், இளைஞர் குழு ஒருங்கிணைப்பாளர் – செல்வேந்திரன், இளைஞர் குழு தோழர்கள் – சூ. இனியன், பா.அறிவுச்செல்வன், சந்தோஷ், இராமன்,...

யாழ் பிரபா- மணிகண்டன் இணையேற்பு ஒப்பந்த விழா

யாழ் பிரபா- மணிகண்டன் இணையேற்பு ஒப்பந்த விழா

கழகத் தோழர் யாழ் இரவி- திராவிடச்செல்வி இணையரின், மகள் யாழ் பிரபா- மணிகண்டன் ஆகியோரின் இணையேற்பு ஒப்பந்த விழா 2.09.2021  மாலை 6 மணியளவில், மேடவாக்கம் ஆ’ள பார்ட்டி ஹாலில் நடைபெற்றது. திராவிடச் செல்வி மறைந்த கழகப் பேச்சாளர் கீசகனின் மகள் வயிற்றுப்  பேத்தி ஆவார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று இணையேற்பை நடத்தி வைத்தார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், புதிய குரல் ஓவியா, தமிழக மக்கள் முன்னணி பொழிலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கழக ஏட்டிற்கு நன்கொடையாக ரூ. 2000/- வழங்கினர். பெரியார் முழக்கம் 04112021 இதழ்

‘கறுப்பர் கூட்டம்’ நாத்திகன் விடுதலை; உற்சாக வரவேற்பு

‘கறுப்பர் கூட்டம்’ நாத்திகன் விடுதலை; உற்சாக வரவேற்பு

‘கறுப்பர் கூட்டம்’ நாத்திகன்,   19.2.2021 மாலை 7 மணியளவில் சென்னை புழல் சிறையிலிருந்து விடுதலையாகி, சென்னை இராயப்பேட்டை, வி.எம் தெரு, பெரியார் படிப்பகம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து சென்னை மாவட்ட கழகச் செயலாளர் உமாபதி வரவேற்று உரையாற்றினார். நாத்திகன் வரவேற்பில் சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் ரூதர்புரம் கார்த்தி, தோழர்கள் அரங்க குணசேகரன், பார்த்திபன், வளர்மதி ஆகியோரும் உடனிருந்தனர். நாத்திகன் வழக்கை கழக வழக்கறிஞர் துரை அருண் நடத்தினார். பெரியார் முழக்கம் 04032021 இதழ்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கை அறிக்கை, இஸ்ரோ முன்னாள் அதிகாரி கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் 2018 டிசம்பர் மாதம் தயாரிக்கப்பட்டு, 2019 ஜூன் 1ஆம் தேதி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலைதளத்தில் தேசிய கல்வி கொள்கை அறிக்கை ஆங்கிலம், இந்தியில் மட்டும் வெளியானது. வெளியானதிலிருந்து 30 நாட்களுக்குள் கருத்து சொல்ல வேண்டும் என்று அரசு கால நிர்ணயமும் அறிவித்திருந்தது. பல மொழிகள் பேசக்கூடிய மாநிலங்கள் இருந்தும் மாநில மொழிகளில் அறிக்கை வெளியாகவில்லை என்று எதிர்ப்பு வந்தவுடன் தேசிய கல்வி கொள்கை சுருக்கமான வரைவை தமிழில் வெளியிட்டார்கள். இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம்  ஓராண்டுக்கு முன்பே 2019 செப்டம்பர் 17 இல் பரப்புரை பயணத்தை நடத்தியது. ‘சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தை திணிக்காதே’ என்ற முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் கழகம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை பயணத்தை மேற் கொண்டது. பயணம் பள்ளிபாளையத்தில் நிறைவுற்றது. செப்டம்பர் 20ஆம்...

நீலச் சட்டைப் பேரணி : கழகம் தயாராகிறது

நீலச் சட்டைப் பேரணி : கழகம் தயாராகிறது

சேலம் – சேலம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம், 16.11.2019 அன்று சேலம் இளம்பிள்ளை நகர அமைப்பாளர் தனசேகர் இல்லத்தில் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்குக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சேலம் மாவட்டத் தலைவர் கருப்பூர் சக்தி, கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கலந்துரையாடல் கூட்டத்தில், நீலச் சட்டைப் பேரணிக்கு தோழர்கள் அதிகளவில் பங்கேற்பது, சேலத்தில் அலுவலகம் அமைப்பது, கிளைக் கழக பயிற்சி வகுப்புகள், மாணவர் பிரச்சினைக்கான துண்டறிக்கைகளை கல்லூரி முன்பு மாணவர்களிடத்தில் கொடுப்பது போன்ற கருத்துக்கள் தோழர்களால் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இறுதியாக கழகத் தலைவர், தோழர்களிடத்தில் கழகச் செயல்பாடுகள் மற்றும் நீலச் சட்டைப் பேரணிக்கு அதிகளவில் பங்கேற்பதன் நோக்கம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். கலந்துரையாடலில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சேலம் மாநகரத் தலைவர், சேலம் சரவணன் (மூணாங்கரடு), கிழக்கு...

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

  ‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில்  முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை  வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன்...

கழக சார்பில் தமிழர் திருநாள் விழாக்கள்

கழக சார்பில் தமிழர் திருநாள் விழாக்கள்

திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பல்வேறு பகுதிகளில் கழகத் தோழர்கள் தமிழர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு விழாக்களை எழுச்சியுடன் நடத்தினர். சென்னையில் கழகம் நடத்தும் 18ஆம் ஆண்டு பொங்கல் விழா வழக்க மான உற்சாகம், கலை நிகழ்வுகளுடன் ஜன.12ஆம் தேதி இராயப்பேட்டை ‘பத்ரி நாராயணன்’ படிப்பகம் எதிரே வி.எம். சாலையில் நடந்தது. அதிர்வு குழுவினர் பறை இசை பழந்தமிழர்க் கலை நிகழ்வுகள், கிராமியப் பாடல்கள், ஜாதி ஒழிப்புப் பாடல் களோடு சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்தினர். அதைத் தொடர்ந்து ‘அருண் டிரம்ஸ்’ குழுவினரின் கானா மற்றும் திரையிசை நிகழ்ச்சி நடந்தது. பெரியார், அம்பேத்கர் பாடல்களும், நீட் எதிர்ப்பு, அனிதாவுக்கு வீர வணக்கம் செலுத்தும் கானா பாடல் களும் பாடப்பட்டன. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் என்று அனைத்துக் கட்சிகளையும் கழகத் தோழர்கள் ஒருங்கிணைத்து இந்த விழாவை நடத்தி வருகிறார்கள். பகுதி வாழ் குழந்தைகள், சிறுவர்கள், வெவ்வேறு வேடங்களில் பங்கேற்றுப் பேசும் மாற்றுடைப்...

தமிழக முதலமைச்சர் இல்லம் முற்றுகைப் போராட்டம் ! சென்னை 25112017

தமிழக முதலமைச்சர் இல்லம் முற்றுகைப் போராட்டம் ! சென்னை 25112017

தமிழக முதலமைச்சர் இல்லம் முற்றுகைப் போராட்டம் ! நாள் : 25.11.2017 சனிக் கிழமை நேரம் : காலை 11 மணி இடம் : கிரீன்வேஸ் சாலை, சென்னை. ஆயிரம் விளக்கு, திடீர் நகர் போன்ற பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் ஏழை மக்களை கார்ப்ரெட் நலனுக்காக கட்டாய வெளியேற்றம் செய்யும் தமிழக அரசை கண்டித்து. அனைத்து இயக்க தோழர்களும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்களும் ஒன்றிணைந்து… நாளை 25.11.2017 காலை 11 மணிக்கு கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள தமிழக முதலமைச்சர் இல்லம் முற்றுகைப் போராட்டம். தொடர்புக்கு : தோழர்.இரா.உமாபதி 7299230363 மாவட்டத் தலைவர் திராவிடர் விடுதலைக்கழகம்.

சென்னை பரப்புரைக் குழுவின் பயண எழுச்சி

சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் பங்கேற்ற  சமூக நீதி – சமத்துவப் பரப்புரைப் பயணம் குறித்த செய்தித் தொகுப்பு. 7.8.2017 அன்று காலை 10 மணியளவில் தாம்பரம் அம்பேத்கர் சிலை அருகில் பரப்புரை நடைபெற்றது. இதில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் (காஞ்சிபுரம்) அக்பர் அலி தலைமையில் பரப்புரைக் குழுவினருக்கு வரவேற்பு அளித்து ஜாகீர் உசேன் உரை நிகழ்த்தினார். பின் இரா. உமாபதி, விரட்டுக் கலைக் குழு ஆனந்த், விழுப்புரம் அய்யனார் ஆகியோருக்கு சால்வை அணிவித்தனர். ம.தி.மு.க.வை சார்ந்த தாம்பரம் மணி வண்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.2000 நன்கொடை அளித்தார். பிறகு 12 மணியளவில் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில் பரப்புரை  நடைபெற்றது. பொத்தேரியில் தெள்ளமிழ்து, தினேஷ் ஆகியோர் தலைமையில் பரப்புரைக் குழுவினருக்கு பறை முழக்கத்துடன் வரவேற்பு அளித்தும், மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்தனர். கூடுவாஞ்சேரி ராஜேஷ் ரூ.500 நன்கொடை அளித்தார். மாலை 4 மணியளவில் சிங்கபெருமாள் கோயில்...

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை தாக்குதலுக்குள்ளான மக்களுக்கு சென்னை மாவட்ட கழகம் நிதியுதவி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை தாக்குதலுக்குள்ளான மக்களுக்கு சென்னை மாவட்ட கழகம் நிதியுதவி

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடந்த மாணவர்கள் எழுச்சியை அடக்கும் பொருட்டு தமிழக காவல்துறையின் காட்டுமிராண்டி தன தாக்குதலுக்கு ஆளான நடுக்குப்பம், ரூதர்புரம், மாட்டாங்குப்பம் பகுதி தலித் மக்களுக்கு அனைத்திந்திய மாணவர் அமைப்பு சார்பாக பொருளுதவியும், நிதியுதவியும் மாணவர் அமைப்பு நிர்வாகி தோழர் அன்பு தலைமையில், பேராசிரியர் ராமு. மணிவண்ணன் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதில் பேராசிரியர் ராமு. மணிவண்ணன் மற்றும் தமிழ்நாடு மாணவர் அமைப்பு சென்னை மாவட்ட செயலாளர் தோழர். ஜெயபிரகாஷ், திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட செயலாளர் தோழர். இரா. உமாபதி, திவிக தோழர்.இரா. செந்தில் குமார் (FDL) கலந்துக் கொண்டு உதவிகளை வழங்கினர். மாணவர் அமைப்பை சார்ந்த தோழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை கள ஆய்வு செய்து, அவர்களில் அதிகம் பாதிக்கப் பட்டிருந்த முப்பது குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு பொருளுதவியும், மருத்துவ உதவி தேவைப்பட்ட மூன்று குடும்பத்தினருக்கு பண உதவியும் வழங்கினர். உதவிகள் பெற்ற...

அறிவியல் பரப்புரை பயணத்திற்கு புது பொலிவுடன் பிரச்சார வாகனம்

நம்புங்கள் அறிவியலை … நம்பாதீங்க சாமியர்களை … அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை … மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சார வாசகங்கள் மற்றும் அதன் மடமையை வலியை விளக்கும் புகைப்படங்கள் அடங்கிய பதாகையை பேருந்து முழுவதும் ஓட்டும் பணி சென்னை திவிக சார்பில் இராயப்பேட்டை பத்ரி படிப்பகத்தில் இரவு முழுவதும் நடந்தது … அனைத்து விதமான பிரச்சார சுவரொட்டிகளோடு பாமர மக்களுக்கு மிக எளிதாக புரியும்வண்ணம் பலவண்ணத்தில் பேருந்தின் நாற்புரமும் ஒட்டி முடிக்கப்பட்டது

சென்னை மாவட்ட கலந்துரையாடல் 30062016

30062016 அன்று மாலை 5:30 மணிக்கு பொதுச்செயலாளர் தலைமையில் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் துவங்கியது . சென்னை மாவட்ட செயலாளர் தோழர். இரா .உமாபதி உரையை துவங்கி வைக்க , அதைத் தொடர்ந்து மாவட்ட மாணவரணி செயலாளர் ஜெயபிரகாசு தலைமை செயலவையின் தீர்மாணத்தை வாசித்தார். அதை தொடர்ந்து தலைமை நிலைய செயலாளர் தோழர் .தபசி குமரன் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தோழர் . அன்பு தனசேகரன், தோழர் அய்யனார், வழக்கறிஞர் தோழர். துரை அருண் போன்ற நிர்வாகிகளும் , மாவட்ட தோழர்களும் அவர்களின் கருத்தை தொடர்ச்சியாக பதித்தனர் . சமஸ்கிருத திணிப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் பற்றியும், பிரச்சார பயணம் பற்றியும் , அடுத்தக்கட்ட மாவட்ட செயல்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினர் . நிகழ்வின் முடிவாக பொதுச்செயலாளர் கேள்விகள் அனைத்திற்கும் விளக்கமாக நீண்ட உரையாற்றினார் . அவரின் உரை தோழர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தரும் விதமாக அமைந்தது ....

பா.ஜ.க.வின் கல்யாண ராமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு !

பா.ஜ.க.வின் கல்யாண ராமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு ! பாஜக பொறுப்பாளர் கல்யாண ராமன் தொடர்ச்சியாக சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகவும்,கலவரத்தை தூண்டும் விதமாகவும்,பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் விதமாகவும் பேசியும்,சமூக வலை தளங்களில் எழுதி வருவதற்க்காகவும், திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை ஒருமையிலும், திவிக தோழர்களை கும்பல்கள் என்றும் முகநூலில் பதிவுசெய்த பாஜக கல்யாண ராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று (10.02.2016) காலை பதினோரு மணியளவில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன் தலைமையில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அப்போது ஊடகங்களுக்கு பேட்டியளித்த திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி அவர்கள் ”இதுபோன்ற நடவடிக்கைகளை கல்யாணராமன் போன்ற பாஜகவினர் தொடர்ந்தால் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம்’ என தெரிவித்தார்.

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – சென்னை புகைப்படங்கள்

சென்னையில் ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் நேற்று 01.02.2016 திங்கள் மாலை 3.00 மணியளவில் ரோகித் வெமுலாவின் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் . ஒத்த கருத்துள்ள அமைப்புகளோடு இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் திவிக வழக்கறிஞர்கள் அருண்,திருமூர்த்தி, ஊடகவியலாளர் தோழர் கவின் மலர், வாலாசா வல்லவன் மா.பெ.பொ.க, குமார் த.பெ.தி.க., தமிழ்நாடு தலித் பெண்கள் இயக்கம் அரக்கோணம், வே.மதிமாறன் எழுத்தாளர், SDPI தலைவர் தேஹலான் பாகவி, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தோழர் ம.வேழவேந்தன் நன்றி கூற மாலை ஆறரை மணியளவில் ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது.

9 வது நாளாக திராவிடர் விடுதலைக்கழகத்தின் தொடர்ந்த வெள்ள மீட்புப்பணி

9 வது நாளாக திராவிடர் விடுதலைக்கழகத்தின் தொடர்ந்த வெள்ள மீட்புப்பணி

9 வது நாளாக (10.12.2015) சென்னை திராவிடர் விடுதலைக்கழகத்தின் தொடர்ந்த வெள்ள மீட்புப்பணி ! வெள்ள நிவாரணப்பணியில் தொடர்ந்து 9 வது நாளாக பணி செய்த திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் 10.12.2015 அன்று நிவாரண பணிகள் மேற்கொண்ட இடங்கள் : குன்றத்தூர்,பெருங்குடி,கல்குடி நிவாரண பொருட்களுடன் 1500 பேருக்கு உணவும் வழங்கப்பட்டது. தோழர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட வெள்ள நிவாரணப்பொருட்கள் விவரம் : ‘கோபி ‘ : ஆயில் -850 கிலோ , மைதா – 1 மூட்டை, அரிசி – 10 மூட்டை, அரிசி – 5 மூட்டை, நாப்கின் – 100 பீஸ், மருந்து – 1 பெட்டி, பாய் – 1 கட்டு, பிஸ்கட் – 2 பெட்டி, ஈரோடு : பெட்சீட் – 150, துணி – 1 பண்டல்.

தலைநகரில் தமிழர் நீதி ஆர்ப்பாட்டம் 0

தலைநகரில் தமிழர் நீதி ஆர்ப்பாட்டம்

ஆகஸ்டு 30 – இந்த நாள், சர்வதேச காணாமல் போனவர்கள் நாள்’ என உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது. காணாமல் போனவர்களின் உலகு தழுவிய போராட்டத்தில் தமிழகத் தமிழர்களாகிய நாமும் தோழமை கொள்வோம்! ஆயிரக்கணக்கில் நம் மக்களை காணாமல் போனவர்களாக தொலைத்து நிற்கிறோம் என்ற உண்மையை இந்த நாளில் நினைவில் நிறுத்துவோம்! சர்வதேச காணாமல் போனவர்கள் நாளை முன்னிட்டு… ஆகஸ்டு 31 திங்கள் காலை 10 மணியளவில் சென்னை அடையார் காந்தி நகர், ஐ.நா.வின் யுனிசெஃப் அலுவலகம் எதிரில் தமிழர் நீதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழர் வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் பங்கேற்கின்றார்கள். பெரியார் முழக்கம் 27082015 இதழ்