வெள்ள மீட்பு பணியில் திராவிடர் விடுதலைக் கழகம்

சென்னையில் பெய்துள்ள வரலாறு காணாத பெருமழையின் காரணாமாக அனைத்து தரப்பு மக்களும் தாங்கொணா துயரத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற வெள்ள மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள்.இந்த மக்கள் பணியில் திராவிடர் விடுதலைக் கழகமும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. சாதாரண உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் பணிகளை செய்து வரும் கழக தோழர்கள் உணவு தயாரித்து வழங்குதல்,உடைகளை விநியோகித்தல், படகு மூலம் வீடுகளில் சிக்கிகொண்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கழகத்தின் இப்பணிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிதியாகவும், உடைகள்,உணவு பொருட்களாகவும் தோழர்கள் பலர் வழங்கிவருகிறார்கள்.

நிதியாக,
கடலூர் பகுதிக்காக கத்தார் நாட்டைச் சேர்ந்த தோழர் காதர் மீரான் அவர்கள் வழியாக ரூ 1,10,000 (ரூபாய் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்) வழங்கியுள்ளார்கள். அத்தொகை கடலூர் ஆலப்பாக்கம் பகுதிக்காக செலவிடப்படுகிறது.
சென்னை பகுதிக்காக குவைத்தில் உள்ள கழக தோழர் செந்தில் அவர்கள் 50,000 (ரூபாய் ஐம்பதினாயிரம்) அளித்துள்ளார்கள்.

பொருட்களாக,
சேலம் மாணவர் மெய்யழகன் வழியாக ரொட்டி,பிஸ்கட் தலா 500,உடை 200 வழங்கியுள்ளார்கள்.

திருச்சியை சேர்ந்த கழக ஆதரவாளர் தோழர் ஊமை அழகிரி அவர்கள் 200 சட்டைகள் வழங்கியுள்ளார்கள்.அவை கடலூர் பகுதி மக்களுக்காக விநியோகிக்கப்பட்டது.

நேற்று கழக தோழர்களால் உணவு தயாரிக்கப்பட்டு சென்னையில் 1500 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.இன்றும் உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது.

கழகத்தின் இந்த வெள்ள மீட்பு பணிக்கு நிதியாக உதவ முன் வரும் தோழர்கள் கழகத்தின் அதிகாரபூர்வ வங்கி கணக்கு எண்ணில் தங்கள் நிதிகளை அளித்து உதவுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்,

PURATCHI PERIYAR MUZHAKKAM,
KVB,
ADAIYAR BRANCH,
CURRENT ACCOUNT NUMBER : 1257115000002041
IFSC CODE : KVBL0001257

தொடர்புக்கு :
தோழர்.உமாபதி,
சென்னை மாவட்ட செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம்,
7299230363

12295492_1673209109629649_4681232181695831718_n 12341348_1673209096296317_1151034108140481754_n 12342372_1673209116296315_6292894594401294626_n 12347661_1673209099629650_213891078000484994_n (1)

You may also like...