Category: விழுப்புரம்

கோயில் நுழைவு உரிமை கோரி கழகம் முற்றுகைப் போராட்டம்

கோயில் நுழைவு உரிமை கோரி கழகம் முற்றுகைப் போராட்டம்

  ஜாதி – தீண்டாமை – வன்கொடுமைக்கு எதிராக உரிய நடவடியை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் 15-06-2023 அன்று மாலை 3 மணியளவில்  நடைபெற்றது.   முற்றுகை போராட்டம் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் தலைமையில் நடைபெற்றது.   விழுப்புரம் மாவட்ட தலைவர் இளையரசன், செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் இராமர், கடலூர் மாவட்டத் தலைவர் மதன்குமார் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.   போராட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட கழகத் தலைவர் மதியழகன், கடலூர் மாவட்ட கழகச்  செயலாளர் சிவக்குமார்,  கள்ளக்குறிச்சி மாவட்ட கழக அமைப்பாளர் சாமிதுரை, கடலூர் மாவட்ட கழக அமைப்பாளர் சதீஷ், விடுதலை இசைக் குழு கார்த்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி பரப்புரை செயலாளர் விஜி, பகுத்தறிவு, தலித் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா மற்றும் தோழர்கள் ...

கள்ளக்குறிச்சியில் ‘பறிபோகும் மாநில உரிமைகள்’ விளக்கப் பொதுக்கூட்டம்

கள்ளக்குறிச்சியில் ‘பறிபோகும் மாநில உரிமைகள்’ விளக்கப் பொதுக்கூட்டம்

11-03-2023 அன்று மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நைனார்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது . கழக பரப்புரைச் செயலாளர் தூத்துகுடி பால்.பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள் விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூஆ.இளையரசன். கடலூர் மாவட்டத் தலைவர் மதன்குமார், கடலூர் மாவட்டச் செயலாளர் சிவக்குமார். கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் இராமர், மாவட்ட அமைப்பாளர் சாமிதுரை, மாவட்டத் துணைச் செயலாளர் வெற்றிவேல், நைனார்பாளையம் நடராஜ், பெரியார் வெங்கட், அசி.சின்னப்பா, தமிழர் பாவலர் கீர்த்தி, பெரியார் பிஞ்சு பாடகர் திராவிட மகிழன், நங்கவள்ளி கிருஷ்ணன், பிரபாகரன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டும் கருத்துரையாற்றியும் சிறப்பித்தார்கள். தோழர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு பேசப்பட்ட கருத்துகளை ஆர்வமுடன் கேட்டார்கள். பெரியார் முழக்கம் 23032023 இதழ்

விழுப்புரத்தில் ஜாதிக் கொடுமைகள்: களமிறங்க கழகத் தோழர்கள் முடிவு

விழுப்புரத்தில் ஜாதிக் கொடுமைகள்: களமிறங்க கழகத் தோழர்கள் முடிவு

விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 16-12-22 அன்று மாலை 4.30  மணியளவில்  கழக மாவட்டத் தலைவர் பூஆ.இளையரசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி,  அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், கழகத் தலைமைக் குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர்செல்வம்,  காவை. ஈஸ்வரன், ந. அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டு கழகம் விழுப்புரம் மாவட்ட அளவில் முன்னெடுக்க வேண்டிய  வேலைத் திட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் ஜாதி பிரச்சனைகள், தலித் மக்கள் சுடுகாட்டில் பிணத்தை அடக்கம் செய்வதில்  பிரச்சனைகள் பற்றி பத்திரிக்கைகளில் செய்திகள் வருகின்றன. இதுகுறித்து மாவட்ட கழகத் தோழர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம்  துணை நிற்க வேண்டும் என்றும் இன்றைய அரசியல் சூழல், கழக வார ஏடு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’...

அம்பேத்கர் நினைவு நாள்: கழக சார்பில் சிலைகளுக்கு மாலை

அம்பேத்கர் நினைவு நாள்: கழக சார்பில் சிலைகளுக்கு மாலை

அம்பேத்கர் நினைவுநாளை யொட்டி கழக சார்பில் பல்வேறு இடங்களில் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சென்னை : புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி, மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் அடையாறு அம்பேத்கர் மணிமண்டபத்தில் காலை 9:30 மணியளவில், இரண்யா  கொள்கை முழக்கங்களை எழுப்பி  மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு, கிருத்திகா மாலை அணிவித்தார். இறுதியாக, இராயப்பேட்டை வி.எம். தெரு படிப்பகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர்  படத்திற்கு தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் மாலை அணிவித்தார். தலைமைக் கழகப் பொறுப் பாளர்கள், மாவட்டப் பொறுப் பாளர்கள், பகுதி கழகப் பொறுப் பாளர்கள் உட்பட கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர். விழுப்புரம் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் 66ஆவது நினைவு நாளை யொட்டி விழுப்புரம் அரசு மருத்து வமனை எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அனிவித்து கொள்கை முழக்கம் உறுதியேற்பு...

சங்கராபுரத்தில் மாபெரும் எழுச்சி

சங்கராபுரத்தில் மாபெரும் எழுச்சி

  சங்கராபுரம் மாநாடு மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. புதுவை ‘விடுதலைக் குரல்’ இசைக் குழுவினர் லெனின் சுப்பையா பாடல்களைப் பாடி நிகழ்ச்சிக்கு எழுச்சியூட்டினர். சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு பங்கேற்றுப் பேசினார். ஏப்ரல் 3 ஈரோட்டில் நடைபெற்ற கழகத்தின் செயலவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, மாநில உரிமைகளைப் பறிக்காதே, கல்வி உரிமைகளைத் தடுக்காதே, மதவெறியைத் திணிக்காதே என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நமக்கான அடையாளம் திராவிட மாடல் என்று மண்டல மாநாடு நடத்துவது, அதனை விளக்கி மக்கள் மத்தியில் பரப்புரை செய்வது என்றும் தீர்மானிக்கப் பட்டது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்கள் இணைந்து மே 3 ஆம் நாள் சங்கராபுரத்தில் மாநாட்டினை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மாநாட்டின் நோக்கங்கள் அடங்கிய துண்டறிக்கைகள் 3000 எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டு மக்களிடையே பரப்பப்பட்டது. 27 இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டது. 500 சுவரொட்டிகள்...

விழுப்புரம், கோவையில் பரப்புரைப் பயணம்

விழுப்புரம், கோவையில் பரப்புரைப் பயணம்

விழுப்புரம்-கோவை மாவட்டங்களில் “நமக்கான அடையாளம் திராவிட மாடல்” பரப்புரை – மக்கள் பேராதரவுடன் நடந்தது. விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நமக்கான அடையாளம் திராவிட மாடல் என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் சந்திப்பு பரப்புரை பயணம் 23-04-22 அன்று காலை11 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் பூ.ஆ.இளையரசன் தலைமையில் கண்டமங்கலத்தில் தொடங்கியது.  பாக்கம் கூட்ரோடு, வளவனூர், கோலியனூர், விழுப்புரம் இரயில் நிலையம் நிறைவாக பழைய பேருந்து நிலையத்தில் இரவு 9 அளவில் நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் ம.க.இ.க கலைக் குழுவின் இசை நிகழ்ச்சி பிரகாஷ், ராஜ் ஆகியோர் மக்களைக் கவரும் வகையில் பாடல்களை பாடி சிறப்பித்தனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கை பரப்புரை செயலாளர் விஜி பகுத்தறிவு, பா. விஜய குமார், திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் தோழர்கள் அழகர், தமிழ், லிங்க...

சூர்யா திரைப்படம் பா.ம.க. மிரட்டலுக்கு பதிலடி

சூர்யா திரைப்படம் பா.ம.க. மிரட்டலுக்கு பதிலடி

செஞ்சி பாலசரவணா திரையரங்கில் 9.3.2022 அன்று நடிகர் சூரியா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று பா.ம.கவினர் கடிதம் முலம் மிரட்டல் விடுத்தனர். கடிதத்தை திரையரங்க உரிமையாளர் காவல்துறைக்கு அனுப்பி உள்ளார் . மறுநாள் 10.03.2022 பா.ம.கவினர் திரைப் படம் திரையிடக்கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திரையரங்கிற்கு ஒருநாள் பாதுகாப்பாக காவல்துறையினர் இருந்தனர். படம் பார்க்க வந்த ரசிகர்கள் மற்றும் மக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். பா.ம.கவினர் தொடர் மிரட்டலால் திரைப்படம் வெளியிடவில்லை. 11.03.2022 அன்று அம்பேத்கர் மக்கள் கட்சி மழைமேனிபாண்டியன், படம் பார்க்கச் சென்று கேட்டபோது நடந்த நிகழ்வுகளை சொல்லி படம் வெளியிட முடியாது என்றனர். அ.ம.கட்சியினர் வெளியிட சொல்லி கோசங்களை எழுப்பினர். நியூஸ் செவன் தொலைக்காட்சிக்கு அ.ம.கட்சி மழை மேனி பாண்டியன் பேட்டியளித்தார். இந்த தகவலறிந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் பெரியார் சாக்ரடீஸ் அரசியல் கட்சிகள் இயக்கங்களை ஒருங்கிணைத்து ஆலோசனை...

கழகத் தோழர் புதிய இல்லம்: சிற்பி ராஜன் திறந்து வைத்தார்

கழகத் தோழர் புதிய இல்லம்: சிற்பி ராஜன் திறந்து வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சாலை அனந்தபுரம் இராமநாதன் -சத்யா ஆகியோர் கட்டிய புதிய இல்லம் திறப்பு விழா 02-01-2022 அன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. நிகழ்வுக்கு தி.வி.க தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் தலைமை வகித்தார். திராவிடன் அப்துல் மாலிக் வரவேற்புரையாற்றினார், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ், கழக மாவட்ட தலைவர் பூஆ.இளையரசன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சேரன், விடாது கருப்பு நாத்திகன் ஆகியோர் வாழ்த்துரைக்கு பின் கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார் உரையாற்றினார். தொடர்ந்து, சிற்பி இராசன் இல்லத்தை திறந்து வைத்து சாமியார் களின் மோசடிகளை அம்பலப்படுத்தும் மந்திரமா? தந்திராமா? நடத்தி சிறப்புரை யாற்றினார்கள் இறுதியில் இராமநாதன் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுபெற்றது. இல்லத்திறப்பு நிழகழ்சியையொட்டி பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதியாக ரூ.1000 வழங்கினார்கள். நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பரப்புரை செயலாளர் விஜி, எழுச்சி திராவிடர்கள் அமைப்பாளர் விஜயகுமார், அனந்தபுரம் திமுக நகர செயலாளர்...

பெரியார் சாக்ரடீஸ் தந்தை நினைவு நாளில் கழக ஏட்டுக்கு நன்கொடை

பெரியார் சாக்ரடீஸ் தந்தை நினைவு நாளில் கழக ஏட்டுக்கு நன்கொடை

விழுப்புரம் மாவட்ட செயலாளர் பெரியார் சாக்ரடீஸ் தந்தை  கோவிந்தசாமி முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 30.12.2021 அன்று, செஞ்சி அத்தியந்தல் சாக்ரடீஸ் இல்லத்தில் மாலை 5 மணியளவில் நடைபெற்றது. பெரியார் சாக்ரடீஸ் தனது தந்தையின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு நிகழ்விற்கு வரவேற்புரை யாற்றினார். நிகழ்விற்கு கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் தலைமை வகித்தார். அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் சு. மழைமேணி பாண்டியன் படத்தை திறந்து வைத்தார். நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர் கலா நாராயணமூர்த்தி, பகுத்தறிவு பாடகர் காத்தவராயன், பெரியார் சிந்தனையாளர் நா. இராசநாயகம், திராவிடர் விடுதலைக் கழக விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.அ இளையரசன், மருத்துவர் தன்மானம் ஆகியோரின் நினைவேந்தல் உரையைத் தொடர்ந்து, கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர் விழுப்புரம் ந.அய்யனார் நிறைவுரையாற்றினார். கழகத் தோழர் பரிமளா நன்றி கூறினார். நினைவேந்தலில், பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக, பெரியார் சாக்ரடீஸ் ரூ. 1000/-, அம்பேத்கர்...

கழகப் பொறுப்பாளர்கள் மூன்றாம் கட்ட பயணம்: கழக ஏட்டுக்கு  சந்தா சேர்ப்பதில் தோழர்கள் ஆர்வம்

கழகப் பொறுப்பாளர்கள் மூன்றாம் கட்ட பயணம்: கழக ஏட்டுக்கு சந்தா சேர்ப்பதில் தோழர்கள் ஆர்வம்

மூன்றாம் கட்ட பயணமாக 1, 2, 3.12.2021 ஆகிய தேதிகளில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி பரப்புரைச் செயலாளர் பிரபாகரன் தலைமைக் குழு உறுப்பினர் விழுப்புரம் அய்யனார் ஆகியோர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களிடத்தில் கலந்துரையாடினர். தர்மபுரியில் 1.12.2021 அன்று காலை 11 மணி அளவில் பி அக்கரகாரம் நஞ்சப்பன் இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் வேணுகோபால், சந்தோஷ்,பரமசிவம் உள்பட பல பகுதிகளில் இருந்து தோழர்கள் பங்கேற்றனர் கழக செயல்பாடுகள் மற்றும் அரசு செயல்பாடுகள் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள புரட்சிப்பெரியார் முழக்கம் பெரும் உதவியாக இருந்தது என்றும், இந்த ஆண்டு கூடுதல் சந்தா சேர்ப்போம் என்றும் தோழர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் சிகர்ந்தப்பள்ளி மாவட்டச் செயலாளர் குமார் இல்லத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர்கள் ப.வாஞ்சிநாதன், குமார், கிருஷ்ணன் உள்பட 35 தோழர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர் மாவட்ட கழக...

பெரியார் சாக்ரடீஸ் தந்தையார் நினைவேந்தல் நிகழ்வு

பெரியார் சாக்ரடீஸ் தந்தையார் நினைவேந்தல் நிகழ்வு

விழுப்புரம் மாவட்ட கழகச் செயலாளர் பெரியார் சாக்ரடீஸ் தந்தை கோவிந்தசாமி கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி முடி வெய்தினார். கோவிந்த சாமி  நினைவேந்தல் நிகழ்வு 09.01.2021 சனிக் கிழமை மாலை 6 மணியள வில், மேல்மலையனூர், அத்தியந்தல் அண்ணா நகர், கு.பச்சையம்மாள் பெரியசாமி திடலில் நடை பெற்றது. நிகழ்விற்கு கழகத்தின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமை வகித்தார். பெரியார் சாக்ரடீஸ் வரவேற்பு கூறினார். கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கோவிந்தசாமியின் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். ஏ.கே.மணி – மதிமுக மாநில துணை செயலாளர், பா.செந்தமிழ்ச்செல்வன் –  திமுக, வெற்றிச்செல்வன் – விசிக மண்டல செயலாளர், சி.செல்வராஜி – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காத்தவராயன் – பகுத்தறிவு பாடகர் நெல்லிக்குப்பம், புதுவை கோகுல் காந்தி – தமிழக வாழ்வுரிமை கட்சி, பகுத்தறிவு விஜி – தமிழர் மாமன்றம், மருத்துவர் தன்மானம் ஆகியோர் கோவிந்தசாமியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பரிமளா...

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

சென்னை : புரட்சியாளர் டாக்டர்அம்பேத்கர் 63 ஆவது நினைவு நாளான டிசம்பர் 6 அன்று திராவிடர் விடுதலைக் கழகம்  சார்பில், சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் காலை 9 மணிக்கு கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கழகத் தோழர்கள் மாலை அணிவித்தனர். அதன் பின் மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜீ மாலை அணிவித்தார். இராயப்பேட்டை, பத்ரி நாராயணன் நினைவு நூலகத்தில் உள்ள அம்பேத்கர் படத்திற்கு சைதை அன்பரசன் மாலை அணிவித்தார், கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கோவை : கோவை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் வடகோவை, உணவு கிடங்கில் உள்ள  அம்பேத்கர் சிலைக்கு கொள்கை முழக்கங்கள் எழுப்பி  மாலை அணிவிக்கப்பட்டது, இராதாகிருஷ்ணன் சாலையில் வாழக்காய் மண்டியில் அம்பேத்கர் அவர்களின் உருவப் படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது. தோழர்கள் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், நிர்மல் குமார், வெங்கட், லோகு, மாதவன் சங்கர்,  இயல்,  விஷ்ணு, பார்த்திபன் ...

பெரியார் கொள்கை விளக்கக் கூட்டங்கள்

பெரியார் கொள்கை விளக்கக் கூட்டங்கள்

குமாரபாளையத்தில் : 28.09.2019 அன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு, மு.கேப்டன் அண்ணாதுரை தலைமை வகிக்க, மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி, மாவட்ட செயலாளர் சரவணன், காளிபட்டி பெரியண்ணன், இராசிபுரம் பிடல் சேகுவேரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வின் தொடக்கமாக காவை இளவரசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின் கோபி வேலுச்சாமி, பகுத்தறிவுக் கருத்துக்களை நகைச்சுவையாக எடுத்துக் கூறினார். இறுதியாக கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வின் மோசடிகள் போன்றவற்றைப் பற்றி விரிவாக உரை நிகழ்த்தினார். குமாரபாளையம் பகுதி  மோகன் நன்றி கூறினார். பொதுக் கூட்டத்திற்கு காளிப்பட்டி, திருச்செங்கோடு, பள்ளிபாளையம், இராசிபுரம், ஈரோடு, பவானி பகுதிகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் இல்லம் திராவிடமணி இல்லத்தில் தோழர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மதுரையில் :  30...

கழகப் பரப்புரைப் பயண விளக்கக் கூட்டங்கள்

கழகப் பரப்புரைப் பயண விளக்கக் கூட்டங்கள்

வேட்டைக்காரன் புதூரில் : மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரைப் பயண விளக்கப் பொதுக்கூட்டம் 26.08.2019 அன்று மாலை 6 மணிக்கு  பொள்ளாச்சி வேட் டைக்காரன் புதூரில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஒன்றியச் செயலாளர் அரிதாசு தலைமை வகித்தார்.  ஒன்றிய தலைவர் அப்பாதுரை முன்னிலை வகித்தார். நிகழ்வில் கழக பொருளாளர் துரைசாமி, செயற்குழு உறுப்பினர் மடத்துகுளம் மோகன், கோவை மாவட்ட செயலாளர் வெள்ளியங்கிரி உரையாற்றினர். முனைவர் சுந்தர வள்ளி,  திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினர். தோழர்கள் வினோதினி – மணி இணையர்களின் குழந்தைக்கு நிறைமதி என கழகத் தலைவர் பெயர் சூட்டினார். சபரிகிரி நன்றி கூறினார். இந்நிகழ்வில், திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, ஆனமலை பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரத்தில் : மண்ணின் மைந்தர்களின் உரிமை மீட்பு பயணத் தின்  பிரச்சார பயண விளக்க  பொதுக் கூட்டம் 26.08.2019 அன்று மாலை 5 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட...

சென்னை-விழுப்புரம்-கோபியிலிருந்து பரப்புரைப் பயணம் தொடங்கியது பொது மக்கள் பேராதரவு

சென்னை-விழுப்புரம்-கோபியிலிருந்து பரப்புரைப் பயணம் தொடங்கியது பொது மக்கள் பேராதரவு

‘தமிழ்நாட்டை வஞ்சிக்காதே; சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரில் குலக் கல்வியைத் திணிக்காதே; தமிழ்நாட்டை வடநாடாக்காதே!’ என்ற முழக்கங்களுடன் திராவிடர் விடுதலைக் கழகத்தின் 6 முனை பரப்புரைப் பயணங்கள் தொடங்கின. சென்னையிலிருந்து சென்னை பரப்புரைக் குழு ஆகஸ்டு 25 காலை 10 மணிக்கு இராயப்பேட்டை பெரியார் சிலையிலிருந்து பயணத்தைத் தொடங்கியது. மே 17, இயக்கத் தோழர்களின் பறை இசையுடன் நிகழ்வுகள் தொடங்கின. பயணத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பயணக் குழுவினரை வாழ்த்தி உரையாற்றி கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். பொதுச் செயலாளர்விடுதலை இராசேந்திரன் பயணத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார். சென்னை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் துரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் ரூதர் கார்த்திக் பயணக் குழுவினரை வாழ்த்தி உரையாற்றினர். தொடர்ந்து பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரத்தில் பரப்புரை நடந்தது. மக்கள் திரளாகக் கூடி நின்று கருத்துகளைக் கேட்டனர். துண்டறிக்கைகளை விருப்பத் துடன்...

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

  ‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில்  முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை  வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன்...

கட்டமைப்பு நிதி : மாவட்டங்கள் தீவிரம்

கட்டமைப்பு நிதி : மாவட்டங்கள் தீவிரம்

விழுப்புரம் கழகம் தீவிரம் விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்தாய்வு கூட்டம்  20.04.2019 அன்று காலை 10.30 மணிக்கு  நடைபெற்றது மாவட்ட கழகத் தலைவர் பூஆ. இளையரசன் ஒருங்கிணைத்தார், மாவட்டச்  செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்திற்கு தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.   கழகத்தின் அடுத்தகட்ட செல்பாடு மற்றும் தலைமைக் கழக அலுவலகத்திற்கான நிதியை விரைவாக. மே 15 க்குள் வசூலித்து கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. மே மாத இறுதியில் பொதுக்கூட்டம் மற்றும்  பயிற்சி வகுப்பு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது மாவட்ட துணைத் தலைவர் சிறீதர், ஒன்றிய பொறுப்பாளர்கள் பாபு,  கிருஷ்ணராஜ், மூர்த்தி மற்றும் தோழர்கள் கெஜராஜ், சிலம்பரசன், அருண், திருமாவளவன், சிறீநாத், மதியழகன், வசந்த்  ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு கழகம் தீவிரம் கழகக் கட்டமைப்பு நிதி தொடர்பான, திருச்செங்கோடு  நகர திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் 28.04.2019 மாலை...

விழுப்புரத்தில் பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாடு

விழுப்புரத்தில் பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாடு

23.2.2019 அன்று மாலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தின் அருகில் பேராசிரியர் கல்யாணி ஒருங்கிணைப்பில் நடந்த பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாட்டில் முன்னாள் அமைச்சர் க. பொன்முடி உரைக்குப் பின்  திராவிடர் விடுதலைக்  கழகத் தலைவர் கொளத்தூர் மணி,  பழங்குடி மக்கள் மீது அரசும் காவல்துறையும் எப்படி நடந்து கொள்கிறது என்பதை விளக்கி சிறப்புரையாற்றினார். நிறைவுரையாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல். திருமாவளவன் பேசினார். முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க. பொன்முடி, சமூக சமத்துவப் படை தலைவர் ப. சிவகாமி, அய்.ஏ.எஸ்., மனித நேய மக்கள் கட்சி ப. அப்துல் சமது, த.நா. மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் டில்லி பாபு ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் தலைமை செயற்குழு உறுப்பினர் அய்யனார், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூஆ. இளையரசன், மாவட்டச் செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ், கடலூர் மாவட்டச் செயலாளர் பாரதிதாசன், அரியலூர் மாவட்ட அமைப்பாளர்  இராவண கோபால், திண்டிவனம் நகர...

கவிஞர் கலி. பூங்குன்றனுக்கு கழக சார்பில் கொளத்தூர் மணி வாழ்த்து

கவிஞர் கலி. பூங்குன்றனுக்கு கழக சார்பில் கொளத்தூர் மணி வாழ்த்து

23.02.19 அன்று செஞ்சி யில் ‘பெரியார் அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு பெரியார் சாக்ரட்டீஸ் (மாவட்ட செயலாளர்) தலைமையில்  நடைபெற்றது.  மாவட்டக் கழகத் தலைவர் பூஆ.இளைய ராசன் வரவேற்புரையாற்றி னார். நிகழ்ச்சியில்   பழங்குடி மக்கள் முன்னணி சுடரொளி சுந்தரம்,  த.மு.மு.க. சையத் உசேன்,  அம்பேத்கர் மக்கள் கட்சி மழைமேனிப் பாண்டியன் ,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் வெற்றிச்செல்வன்,  சி.பி.அய் வட்டச் செயலாளர் செல்வராசு, வர்த்தக சங்க விழுப்புரம் மாவட்டச் செயலாளர் கண்ணன்,   மதிமுக துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே மணி மற்றும்  தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். நிறைவுரையாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்ச்சி தொடங்கும்போது ஒரு மகிழ்ச்சியான தகவல் வந்துள்ளது திராவிடர் கழகத்தின் அடுத்தத் தலைவராக கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை திராவிடர் கழகத் தலைவர் தஞ்சையில் நடக்கும் மாநாட்டில் அறிவித்துள்ளார். எனவே கவிஞர் கலிபூங்குன்றன் அவர்களுக்கு நம்...

செஞ்சியில் பெரியார் அன்றும் இன்றும் கருத்தரங்கு 23022019

செஞ்சியில் பெரியார் அன்றும் இன்றும் கருத்தரங்கு 23022019

விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 23 -02-19 அன்று செஞ்சியில் பெரியார் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் கருத்தரங்கு பெரியார் சாக்ரட்டீஸ் தலைமையில்  நடைபெற்றது.  மாவட்ட கழக தலைவர் பூஆ.இளையரசன் வரவேற்பு உரையாற்றினார். நிகழ்சியில்   பழங்குடி மக்கள் முன்னனி தோழர் சுடரொளி சுந்தரம்,  த.மு.மு.க சையத் உசேன்,  அம்பேத்கர் மக்கள் கட்சி மழைமேனிப்பாண்டியன் ,  விடுதலைசிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தோழர் வெற்றிச்செல்வன்,  சி.பி.அய் வட்டச் செயலாளர் தோழர் செல்வராசு, வர்த்தக சங்க விழுப்புரம் மாவட்ட செயலாளர் தோழர் கண்ணன்,   மதிமுக துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே மணி, மற்றும்  தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். நிறைவுரையாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் நிகழ்சி தொடங்கும்போது ஒரு மகிழ்ச்சியான தகவல் வந்துள்ளது திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை திராவிடர் கழக தலைவர் தஞ்சையில் நடக்கும் மாநாட்டில் அறிவித்துள்ளார். எனவே...

விழுப்புரம் மாவட்டம் பிரிப்பு: வரவேற்று கழக சார்பில் சுவரொட்டிகள்

விழுப்புரம் மாவட்டம் பிரிப்பு: வரவேற்று கழக சார்பில் சுவரொட்டிகள்

தமிழகத்தில் பெரிய மாவட்டமாக இருந்து வந்தது விழுப்புரம் மாவட்டம். பொதுமக்கள் தங்களது பல்வேறு துறை சார்ந்த வேலைகளுக்காகவும்  மாவட்ட ஆட்சியர் சந்திப்பதற்கும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதியதாக கல்லக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கும்படி தமிழக அரசுக்கு பொதுமக்களும் கட்சிகளும் இயக்கங்களும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தன. இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கல்லக்குறிச்சி புதிய மாவட்டமாக அறிவித்த தமிழக அரசை  வாழ்த்தி நன்றி தெரிவிக்கும் விதமாக கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கல்லக்குறிச்சி மாவட்டத்தில் போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டன. பெரியார் முழக்கம் 07022019 இதழ்

விழுப்புரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழக விழுப்புரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 19-12-2018 (தி.பி-2049- புதன்) அன்று நடைபெற்றது. கூட்டத்தில் அமைப்பு செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர் செல்வம், அய்யனார், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். 2019ஆம் ஆண்டிற்கான நிகழ்வுகள் குறித்தும், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மற்றும் ‘நிமிர்வோம்’ மாத இதழ் உறுப்பினர் சேர்க்கைக் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. ‘புரட்சிப் பெரியார் முழக்கத்’திற்கான 97  உறுப்பினர்களுக்கான தொகை 9400  ரூபாயை  கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கப்பட்டது. கீழ்க்கண்ட பொறுப்பாளர்களை கழகத் தலைவர் அறிவித்தார். விழுப்புரம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்களாக  தலைவர் – க.மதியழகன், செயலாளர் – க.இராமர், துணைச் செயலாளர்-மு.நாகராசன், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட ஒருங்கிணைப் பாளர்- அ.பெரியார் தாசன், அறிவியல் மன்ற அமைப்பாளர்- வீ.முருகன், மாவட்ட அமைப்பாளர்- சி- சாமிதுரை, ரிசிவந்திய ஒன்றிய அமைப்பாளர்- இரா.கார்மேகம்,...

அம்பேத்கர் நினைவு நாளில் கழகத்தினர் சூளுரை ஜாதி அடையாளம் அல்ல; அவமானம்

அம்பேத்கர் நினைவு நாளில் கழகத்தினர் சூளுரை ஜாதி அடையாளம் அல்ல; அவமானம்

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் சிலைகளுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு சூளுரை எடுத்தனர். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு பேரணியாக வந்து மு.நாகராஜ் (அறிவியல் மன்ற அமைப்பாளர்) தலைமையில்  மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு சூளுரை எடுத்தனர். இந்நிகழ்வில் கழகத்தின் மாவட்ட அமைப் பாளர் சி.சாமிதுரை முன்னிலை வகித்தார். ஜாதி ஒழிப்பு, ஆணவப் படுகொலைக்கு தனி சட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி முழக்க மிட்டனர். இரா.துளசிராஜா, குமார், பாரதிதாசன், ராமச்சந்திரன் கார்மேகம், நீதிபதி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். சேலம் : திவிக சேலம் மாநகரம் சார்பாக 6.12.2018 அன்று சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் மற்றும் சேலம் மாநகர செயலாளர் பரமேஸ்குமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு  மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர். நிகழ்வில் மாநகர தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை: இந்திய...

தீபாவளி பட்டாசு: காவல்துறையிடம் விழுப்புரம் மாவட்டக் கழகம் மனு

தீபாவளி பட்டாசு: காவல்துறையிடம் விழுப்புரம் மாவட்டக் கழகம் மனு

தீபாவளி அன்று  2 மணிநேரம் மட்டும் பட்டாசு வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை  கடைபிடிக்க வேண்டுமென்றும்  அதை மக்களிடம் அறிவிப்பு செய்ய வேண்டும் என்றும் அரசு துறையில் பணியாற்றுபவர்கள் நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க நடவடிகை எடுக்கவும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  விழுப்புரம் கழக சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் , விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களுக்கும் அரசு நிர்வாகங்களுக்கும் 4.11.2018 அன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால் அவர் வீட்டிற்கு சென்று கடிதம் கொடுக்கப்பட்டது. விழுப்புரம் கிழக்கு மாவட்ட கழகத் தலைவர் பூஆ.இளையரசன், மாவட்ட அமைப்பாளர் சிறீதர் ஆகியோர் அதிகாரிகளை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர்.   பெரியார் முழக்கம் 29112018 இதழ்

மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்

மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்

காஞ்சிபுரம் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்  18-10-2018 அன்று மாலை 5 மணிக்கு தினேஷ்குமார் தலைமையில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் மற்றும் தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி முன்னிலையில் நடைபெற்றது . புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் இதழ்களுக்கு சந்தா சேர்த்தல், தெருமுனைக் கூட்டம், கருத்தரங்கம்  நடத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் தென்சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், செங்குட்டுவன், தெள்ளமிழ்து, ரவிபாரதி, கரிகாலன், ஆண்டனி, ராஜேஷ், அருண் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கராபுரம் :  18.10.2018 வியாழன் மாலை 4மணி அளவில் திராவிடர் விடுதலை கழக மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் சங்கராபுரம் வட்டம் கடுவனூரில் சி. சாமி துரை இல்லத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கழகத் தலைமைக் குழு உறுப்பினர் நா.அய்யனார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல்களும், பி.ஜே.பி.யினால் மக்கள் படும் அவலம் , பெரியாரியல் பற்றிய தமிழ்...

மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் சங்கராபுரம் வட்டம் கடுவனூரில் 18102018

மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் சங்கராபுரம் வட்டம் கடுவனூரில் 18102018

18/10/2018 வியாழன் மாலை 4மணி அளவில் திராவிடர் விடுதலை கழகத்தினுடைய மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் சங்கராபுரம் வட்டம் கடுவனூரில் தோழர் சி.சாமிதுரை அவர்களின் வீட்டில் நிகழ்வு நடந்தது , இந்த கலந்தாய்வுக் கூட்டதிற்க்கு திராவிடர் விடுதலை கழகத்தின் தலைமை செயற்க்குழு உறுப்பினர் தோழர் நா.அய்யனார் அவர்கள் தலைமையேற்றார், இந்த கலந்தாய்வுக் கூட்டதில் பெரியார் போராட்டமும் ,தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல்களும் ,பி.ஜே.பி.யினால் மக்கள் படுகின்ற அவல நிலை , பெரியாரியல் பற்றிய தமிழ் தேசியவாதிகளின் குழப்பமான குற்றம் பற்றியும்,அமைப்பின் கட்டுப்பாடு ,தனிநபர் ஒழுக்கம் ,புரட்சிப் பெரியார் முழக்கத்திற்க்கு சந்தா சேர்த்தல் , இறுதியாக தோழர்களின் கேள்வியான பற்றிய விளக்கம் ஆகியவற்றை குறித்து தோழர்களிடம் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கலந்தாய்வுக் கூட்டதில் மாவட்ட தலைவர் தோழர் .மதியழகன் , மாவட்ட அமைப்பாளர் தோழர் சி.சாமிதுரை , அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் .நாகராஜ் , தமிழ் நாடு மாணவர் ஒருங்கினிப்பாளர் தோழர் வீ.வினோத் ,சங்கராபுரம்...

கடுவனூரில் கழகத் தலைவர் பங்கேற்ற கூட்டம்

கடுவனூரில் கழகத் தலைவர் பங்கேற்ற கூட்டம்

1.10.2018 அன்று விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா, தமிழர் கல்வி உரிமை மீட்பு விளக்கப் பொதுக் கூட்டம், பாக்கம் கிராமத்தில் மாலை 5 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக கடுவனூர் பேருந்து நிறுத்தம் அருகிலிருந்து பாக்கம் பொதுக் கூட்டம் மேடை வரை தோழர்கள் பறையிசையுடன் பேரணியாக வந்தனர். கடுவனூர் – பாக்கம் இரண்டு ஊர்களில் பெரியார் சிந்தனை பலகை திறப்பு, கல்வெட்டு திறந்து கழகக் கொடியையும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஏற்றி வைத்தார். இந்நிகழ்வைத் தொடர்ந்து, பொதுக் கூட்டம் கழகத் தோழர்களின் ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவு பாடல்களுடன் தொடங்கியது. பெரம்பலூர் தாமோதரன் ‘மந்திரமல்ல, தந்திரமே’ என்ற அறிவியல் கலை நிகழ்ச்சியைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. இரா. துளசிராஜா தலைமை வகித்தார். என்.மா. குமார், தே. இராமச்சந்திரன், மு. நாகராஜ், சா. நீதிபதி,  கே.வே. ராஜேஷ், சி. ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகிக்க ச.கு....

திராவிடர் இயக்க பணிகளும் கலைஞர் பங்களிப்பும் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

திராவிடர் இயக்க பணிகளும் கலைஞர் பங்களிப்பும் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

திராவிடர் இயக்க பணிகளும் கலைஞர் பங்களிப்பும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் 17.09.18 அன்று  மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. எழுத்தாளர் வி.எம்.எஸ் சுபகுணரஜன்,  பேராசிரியர் கல்யாணி, ஆசிரியர்  இராமமூர்த்தி ஆகியோர் உரைக்குப் பின் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியை மருதம் இரவி கார்த்திகேயன்   ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, கழகத் தலைவரை சால்வை அணிவித்து வரவேற்று நிகழ்ச்சி முடியும் வரை அமர்ந்து கேட்டுகொண்டிருந்தார். தி.மு.க. கட்சித் தோழர்கள், அய்.ஏ.எஸ் பயிற்சி மாணவர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழக செயற்குழு உறுப்பினர் அய்யனார்,  விழுப்புரம் கிழக்கு மாவட்டத் தலைவர் பூஆ.இளையரசன்,  செஞ்சி பெரியார் சாக்ரட்டீஸ்,  சென்னை தம்பி மண்டேலா, நடராசன், தமிழக வாழ்வுரிமை கட்சி புதுச்சேரி பரப்புரை செயலாளர் விஜி,  இளங்கோவன்,  பெரியார் கணேசன், அழகர் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 27092018 இதழ்

கழகச் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை

கழகச் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை

பேராவூரணி: தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பேராவூரணி ஆவணம் சாலை முகத்தில் அமைந் துள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம்,  நகர அமைப்பாளர் கலைச்செல்வன், மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் கருப்பையா, மதிமுக பொறுப்பாளர்கள் குமார், கண்ணன், மணிவாசன், தேனி ஆல்பர்ட், தமிழக மக்கள் புரட்சி கழகப் பொறுப்பாளர்கள் பைங்கால் மதியழகன், வீரக்குடி ராஜா, சத்துணவு ஊழியர்கள் சங்க பொறுப்பாளர் முத்துராமன், அறநெறி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் வனராணி, ஜேம்ஸ்,   முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கீ.ரே. பழனிவேல், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், பேராசிரியர் ச.கணேஷ்குமார், திரைப்படப் பாடலாசிரியர் செங்கை நிலவன், பெரியார் அரும்புகள் அறிவுச் செல்வன், அரும்புச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு : தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்தநாளான...

”திராவிட இயக்கப்பணிகளும், ‘கலைஞர்’ அவர்களின் பங்களிப்பும்” – கருத்தரங்கம் விழுப்புரம் 17092018

”திராவிட இயக்கப்பணிகளும், ‘கலைஞர்’ அவர்களின் பங்களிப்பும்” – கருத்தரங்கம் விழுப்புரம் 17092018

”திராவிட இயக்கப்பணிகளும், ‘கலைஞர்’ அவர்களின் பங்களிப்பும்” எனும் தலைப்பில் ”கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி” அவர்கள் கருத்துரையாற்றுகிறார். நாள் : 17.09.2018,திங்கள் நேரம் : மாலை 5.00 மணி. இடம் : தளபதி அரங்கம்,கலைஞர் அறிவாலயம், விழுப்புரம். எழுத்தாளர் சுபகுணராஜன்,பேராசியர் பா.கல்யாணி ஆகியோரும் கருத்துரையாற்றுகிறார்கள்.

கலைஞருக்கு கழக சார்பில் சென்னையில் வீரவணக்கப் பேரணிகள்!

கலைஞருக்கு கழக சார்பில் சென்னையில் வீரவணக்கப் பேரணிகள்!

கலைஞர் மறைவுக்கு கழக சார்பில் சென்னையில் வீர வணக்கப்பேரணி நடத்தப்பட்டது. பல்வேறு ஊர்களில் வீர வணக்க நாள் கூட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை : திராவிட அரசியலின் பெருமைக்குரிய அடையாளம் டாக்டர் கலைஞருக்கு 08.08.2018 காலை 11 மணிக்கு அண்ணாசிலையி லிருந்து இராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலையை நோக்கி தோழர்கள் வீரவணக்க முழக்கத்தோடு நடந்து வந்து இறுதி வீரவணக்கத்தை செலுத்தினார்கள். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகரன் ஆகியோர் டாக்டர் கலைஞரின் உருவப்படத்திற்கு இறுதி மரியாதை செலுத்தி வீர வணக்க உரையாற்றினர். தென் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார். இறுதியாக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நாமக்கல் : கலைஞருக்கு, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோட்டில் ஞாயிறு (12.8.2018) காலை 10 மணியளவில் திருச்செங்கோடு நகரத் தலைவர் சோமசுந்தரம் தலைமை வகிக்க, மாவட்ட...

வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீர்த்துப் போவதை எதிர்த்து விழுப்புரத்தில் கழகம் பிரச்சாரம்

வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீர்த்துப் போவதை எதிர்த்து விழுப்புரத்தில் கழகம் பிரச்சாரம்

தாழ்த்தப்பட்ட – பழங்குடி இன மக்களாக கருதப்படுகின்ற மக்களின் உரிமைக்கு ஆதரவாக உள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உள்ள விதிமுறைகளை தளர்வடையச் செய்து அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிக்கின்ற விதமாக  தீர்ப்பு வழங்கியுள்ள உச்சநீதிமன்றத்தைக் கண்டித்தும் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்யக் கோரியும்  2.7.2018 அன்று  திராவிடர் விடுதலைக் கழகம், மார்க்சிஸ்ட் (இந்திய) கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சின்னசேலத்தில்  தொடர்வண்டி (இரயில்) மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக   விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக்  கழகத் தோழர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தளர்வடையச் செய்கின்ற புதிய சட்டத்திருத்தத்தால்  ஏற்படுகின்ற தீமைகள்  குறித்து கொசப்பாடி, பூட்டை, அரசம்பட்டு, செந்தமிழ்பட்டு, சங்கராபுரம், வன்னஞ்சூர், அத்தியூர், கொளத்தூர், அரியலூர், பாக்கம், தொழுவந்தாங்கள், கடுவனூர் ஆகிய பகுதி மக்களிடம் சென்று  விளக்கிக் கூறி பிரச்சாரம் செய்தனர். பெரியார் முழக்கம் 26072018 இதழ்

கடுவனூரில் குழந்தைகள் பழகுமுகாம்

கடுவனூரில் குழந்தைகள் பழகுமுகாம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக  விழுப்புரம் மாவட்டம் கடுவனூரில்  மாவட்ட அறிவியல் மன்ற அமைப்பாளர்  மு.நாகராசன் தலைமையில்  குழந்தைகள் பழகு முகாம்  நிகழ்ச்சி நடத்தப்பட்டன. இயக்கத் தோழர் அய்யனார் நிலத்தில் 23.05.2018  புதன்கிழமை அன்று  பந்தல் அமைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டன. 5 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்புவரை (ஆண், பெண்) 90 மாணவர்கள்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியாளராக  தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர்  ஆசிரியர் சிவகாமி வருகை புரிந்து  பயிற்சி அளித்தார்.  சிவகாமி மகள் கனல், காலை முதல் மாலை வரை பேய், பிசாசு, கடவுள், மதம் போன்ற பொய்யானவைகளை  விளக்கியும் உலகம் எப்படி தோன்றியது உயிர் எப்படி தோன்றியது போன்ற அறிவியல் – விஞ்ஞானம் சார்ந்தவைகளை பற்றியும் விளக்கமாக மாணவர்களுக்கு கற்பித்தனர். பழகுமுகாமில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் பொய்யான சாதி, மதம், கடவுள் சார்ந்த சிறு நாடகங்களை மாணவர்கள் நடத்தியது சிறப்பாக இருந்தன....

விழுப்புரத்தில்  புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

விழுப்புரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

விழுப்புரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! திராவிடர் விடுதலைக் கழகம் விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் 14.04.2018 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அம்பேத்கர் சிலைக்கு கழகத்தினர் மாலை

அம்பேத்கர் சிலைக்கு கழகத்தினர் மாலை

திருப்பூர் : மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 127 வது பிறந்த நாள் விழா 14.04.2018 சனிக் கிழமை காலை 10.00 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை அருகே நடைபெற்றது. கழக பொருளாளர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ் வில் புரட்சியாளரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கவிஞர் கனல் மதி வாசிப்பில் கழகத் தின் ‘ஜாதி ஒழிப்பு உறுதிமொழி’ ஏற்பு கழகத் தோழர்களால் ஏற்கப்பட்டது. நிகழ்வின் இடையே பெரியார் பிஞ்சுகள் யாழினி, முத்தமிழ் ஆகி யோரின் பிறந்த நாள் அவ்விடத் திலேயே கேக் வெட்டி கொண்டாடப் பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. கழகத்தின் மாவட்டத் தலைவர் முகில் ராசு, மாநில அறிவியல் மன்ற தலைவர் சிவகாமி, மாவட்டக் கழகச் செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர பொறுப்பாளர் மாதவன், மாணவர் கழக தேன்மொழி, இணைய தள...

போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

அய்.பி.எல். சுவர் விளம்பரம் : கழகத் தோழர்கள் அழித்தனர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் தோழர்கள் மற்றும் மந்தவெளி விசாலாட்சி தோட்டம் பகுதி தோழர்கள் இணைந்து 05.04.2018 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிக்காக வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழித்து அதன் மேல் “ஐபிஎல் வேண்டாம்” – “காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்” என்று எழுதி எதிர்ப்பைத் தெரிவித்தனர். மந்தவெளி இரயில் நிலையம் முற்றுகை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி தோழர்கள் மற்றும் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சார்ந்த மக்கள் இணைந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மத்திய அரசைக் கண்டித்து 06.04.2018 காலை 11 மணிக்கு மந்தவெளி இரயில் நிலையத்தை கண்டன முழக்கத்தோடு முற்றுகை யிட்டனர். மந்தவெளி இரயில் தடத்தில் இறங்கி கண்டன முழக்கமிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மந்தவெளி திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். விழுப்புரத்தில் அஞ்சலகம்...

என் எல் சி முற்றுகைப் போராட்டம் 10042018 நெய்வேலி

என் எல் சி முற்றுகைப் போராட்டம் 10042018 நெய்வேலி

அண்ணன் பண்ருட்டி வேல்முருகன் அவர்கள் தமிழக வாழ்வுரிமை  கூட்டமைப்பின் சார்பாக எண்ணற்ற பல அமைப்பு சார்ந்த தலைவர்களும், தமிழர் நலம் சார்ந்த பல தலைவர்களும் சிறப்பு மிக்க பல ஆளுமைகளும், காவிரி மேலாண்மை வாரியம் வேண்டி மிகச்சிறப்பான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!!! திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்கள் தலைமையில் கடலூர் மாவட்டம் நட.பாரதிதாசன் தலைமையிலும் விழுப்புரம் மாவட்டம் தோழர் ராமர் தலைமையிலும் நாகப்பட்டினம் மாவட்டம் தோழர் விஜி மற்றும்  தோழர் மகேஷ் இவர்கள் தலைமையிலும், மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இளையராஜா அவர்களும் புதுச்சேரி மாநிலம் தோழர் லோகு அய்யப்பன் அவர்கள் தலைமையிலும், புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் தோழர் தீனா மற்றும் தோழர் பரத் அவர்கள் தலைமையிலும், அரியலூர் மாவட்ட செயலாளர் தோழர் கோபால் இராமகிருட்டினன் அவர்களும் தோழர் அறிவழகன் ஆசிரியர் அவர்கள் தலைமையில் சில தோழர்களும் மற்றும் சில பொது நல தோழர்களுடன் நெய்வேலி முற்றுகையில் பெருந்திரளாக தலைவர் தலைமையில் திவிக சார்பாக கலந்து கொண்டனர் புகைப்படங்களுக்கு

எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!

எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!

எச். ராஜாவைக் கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் உருவ பொம்மை எரிப்புகள் நடந்தன. குமரி மாவட்டத்தில் 07-03-2017 புதன் கிழமை, காலை 11.00 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறீநாத்திடம் புகார் மனு வழக்குரைஞர் வே.சதா (மாவட்டத் தலைவர்) தலைமையில் தமிழ்மதி (மாவட்டச் செயலாளர்), நீதி அரசர் (தலைவர், பெரியார் தொழிலாளர் கழகம்), சூசையப்பா (முன்னாள் மாவட்டத் தலைவர்), அப்பாஜி (வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர், தி.மு.க), வைகுண்ட ராமன், வின்சென்ட் ஆகியோரால் வழங்கப் பட்டது. ஆனைமலை : கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின்  ஒருங் கிணைப்பில் அனைத்து கட்சிகளின் சார்பில் 07-03-2018 மாலை 5 மணிக்கு ஆனைமலை முக்கோணத்தில் நடைபெற்றது. ஆனைமலை நகரச் செயலர் வே.அரிதாசு தலைமையில், நகர தலைவர் சோ.மணிமொழி முன்னிலையில் நடைபெற்றது. கண்டன உரையாக நாகராசு (திராவிடர் கழகம்), பரமசிவம் (சிபிஎம் ), மணிமாறன்  (வெல்ஃபேர் பார்ட்டி), அப்பன்குமார் (விசிக), சாந்துசாகுல்அமீது (இந்திய...

எச் இராஜாவை வளைக்கும் சட்டப்பிரிவுகள்

எச் இராஜாவை வளைக்கும் சட்டப்பிரிவுகள்

ராஜாவை வளைக்கும் சட்டப் பிரிவுகள்! பெரியார் சிலை பற்றி பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா சமூக வலைதலத்தில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ராஜாவின் பதிவைத் தொடர்ந்தே திருப்பத்தூரில் பெரியார் சிலை தாக்கப்பட்டது. எனவே தமிழகத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டு, நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் செயல்படும் ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழக விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயரட்சகன் புகார் அளித்தார். அதன் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால், வழக்குபதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதுபற்றி ஜெயரட்சகன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் வழக்கறிஞர் துரை அருணிடம் பேசினோம். “பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஹெச்.ராஜா தொடர்ந்து இரு தரப்பினருக்கிடையில் பகைமையை மூட்டும் வகையில் பேசிவருகிறார். சமூக...

விழுப்புரம் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்  விழுப்புரம் மாவட்ட கடுவனூர் கிராமத்தில் 11-02-2017 அன்று நடத்தப் பட்டது. கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர். மா.குப்புசாமி தலைமை வகித்தார். கடந்த  2017  மே 21 முதல்  11-02-2018 வரை இயக்கம் சார்பாக மாவட்ட அளவில் நடத்தப்பட்ட  செயல் பாடுகள் குறித்தும் – போராட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மற்றும் ‘நிமிர்வோம்’ சந்தா சேர்பது சார்பாகவும் பேசப்பட்டன. வருகின்ற ஏப்ரல் 14- அன்று அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டும் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் பிறந்த நாள் நினைவாகவும் கழம் சார்பாக பொதுக்கூட்டம் நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.மே மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஒரு வார அளவில் தமிழகத்தின் தனித்தன்மையை காப்போம் என்ற தலைப்பில் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 01032018 இதழ்

அரசே! குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடு! விழுப்புரத்தில் தலைவிரித்தாடும்  ஜாதி வன்கொடுமை

அரசே! குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடு! விழுப்புரத்தில் தலைவிரித்தாடும் ஜாதி வன்கொடுமை

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்துக் குட்பட்ட கிராமங்களில் தலித் குடும்பங்கள் மீதான கொலை வெறித் தாக்குதல்கள், பாலியல் துன்புறுத்தல்கள், ஜாதி ஆதிக்கச் சக்திகளால் தொடர்ந்து நடப்பது அதிகரித்து வருகிறது. வழக்கம்போல காவல்துறை தலித் மக்கள் மீதான தாக்குதல் என்றால் அலட்சியம் காட்டுவது போலவே இதிலும் செயல்பட்டு வருகிறது. தற்போது திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தில் வசித்து வந்த தலித் குடும்பத்தைச் சார்ந்த ஆராயி (4), அவரது மகள் தனம் (15), மகன் சமையன் (10) ஆகியோர் மீது மர்ம நபர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறுவன் சமையன் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்துவிட்டார். உயிருக்குப் போராடிய நிலை யில் ஆராயியையும் அவரது மகள் தனத்தையும் முதலில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்து, அங்கு பிராணவாயு (ஆக்ஸிஜன்) இல்லாததால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

சங்கராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சங்கராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் பெரியார் நினைவு நாளை முன்னிட்டு  பெரியாரின் கனவாக இருந்த அனைத்து சாதி யினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கையை  தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகம் சார்பாக (23-12-2017) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்  க.இராமர், செ.வே.ராஜேஷ்,  பூ.ஆ. இளையரசன், க.மதியழகன், ந.அய்யனார் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக இராஜேந்திரன், தமிழ்ச் சங்கம் சார்பாக கவிஞர் முருகேசன் ஆகியோர் உரையாற்றினார்கள். பெரியார் முழக்கம் 11012018 இதழ்

அரசு தேர்வாணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்!

தமிழ்நாட்டின் அரசுப் பணிகளுக்கு பிற மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. திருச்சி : திருச்சி மாவட்ட கழகச் சார்பாக 14.12.2017 வியாழன் காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையத்தைக் கண்டித்து, அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டத் தலைவர் துரை. தாமோதரன் தலைமை வகித்தார். பல் மருத்துவர் எஸ்.எஸ். முத்து, திருவரங்க நகரச் செயலாளர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்துரை வழங்கியோர்: செந்தில் (இளந்தமிழகம்), வின்செட் (மாநகரத் தலைவர், த.பெ.தி.க.), பாலாஜி (மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மே 17 இயக்கம்), வழக்குரைஞர் தமிழழகன் (ஆசிரியர், ‘தமிழ்க்காவிரி’), அன்பழகன் (பெரியார் பாசறை), பஷீர் அகமது (மக்கள் உரிமை மீட்பு இயக்கம்), வழக்குரைஞர் பொற்கொடி ஆகியோர்.  டார்வின்தாசன் (கழக மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்) நன்றியுரையாற்றினார்.  தோழர்கள் குணா, முருகானந்தம், மு.மனோகரன், டி.வி.மெக்கானிக் மணி, அவரது துணைவியார்,...

விழுப்புரத்தில் ஜாதி ஒழிப்புப்  போராளிகளுக்கு வீர வணக்க நாள்

விழுப்புரத்தில் ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீர வணக்க நாள்

விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியார் தலைமையில் ஜாதி ஒழிப்பிற்காக சட்ட எரிப்பு போரட்டத்தில் உயிர்நீத்த, சிறைசென்ற போராளிகள் 60 ஆம் ஆண்டு நினைவும் தமிழீழத் தலைவன் பிரபாகரன் 63 ஆவது பிறந்தநாள் நிகழ்வும் 26.11.17 காலை 10 மணியளவில்  வனத்தாம்பாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் ஜெயரட்சகன், மாவட்ட செயலாளர் இராவண இராமன், மாவட்ட அமைப்பாளர் சிறீதர் நிவேதிதா, பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தலைவர் தீனா,  பெலிக்ஸ், கிளை பொறுப்பாளர்கள் பாபு,  தமிழ், சிறீநாத், விசிக பொறுப்பாளர் தெய்வ நாயகம் மற்றும் அப்பகுதித் தோழர்கள் திரளாக பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 30112017 இதழ்

விழுப்புரத்தில் ”தமிழர் உரிமை மீட்பு மாநாடு” 05102017

விழுப்புரத்தில் ”தமிழர் உரிமை மீட்பு மாநாடு” விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், தந்தை பெரியாரின் 139 வது பிறந்த நாளை முன்னிட்டு.. நாள் : 05.10.2017 வியாழக்கிழமை நேரம் : மாலை 5 மணி இடம் : நயனார்பாளையம்,தந்தை பெரியார் பள்ளி முன்பு. சிறப்புரை ; தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம்.

சென்னை பரப்புரைக் குழுவின் பயண எழுச்சி

சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் பங்கேற்ற  சமூக நீதி – சமத்துவப் பரப்புரைப் பயணம் குறித்த செய்தித் தொகுப்பு. 7.8.2017 அன்று காலை 10 மணியளவில் தாம்பரம் அம்பேத்கர் சிலை அருகில் பரப்புரை நடைபெற்றது. இதில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் (காஞ்சிபுரம்) அக்பர் அலி தலைமையில் பரப்புரைக் குழுவினருக்கு வரவேற்பு அளித்து ஜாகீர் உசேன் உரை நிகழ்த்தினார். பின் இரா. உமாபதி, விரட்டுக் கலைக் குழு ஆனந்த், விழுப்புரம் அய்யனார் ஆகியோருக்கு சால்வை அணிவித்தனர். ம.தி.மு.க.வை சார்ந்த தாம்பரம் மணி வண்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.2000 நன்கொடை அளித்தார். பிறகு 12 மணியளவில் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில் பரப்புரை  நடைபெற்றது. பொத்தேரியில் தெள்ளமிழ்து, தினேஷ் ஆகியோர் தலைமையில் பரப்புரைக் குழுவினருக்கு பறை முழக்கத்துடன் வரவேற்பு அளித்தும், மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்தனர். கூடுவாஞ்சேரி ராஜேஷ் ரூ.500 நன்கொடை அளித்தார். மாலை 4 மணியளவில் சிங்கபெருமாள் கோயில்...

சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டத்தை நிறைவேற்று! – நடைபயணம் விழுப்புரம் 15062017

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் சாமுவேல்ராஜ் தலைமையில், ”சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டத்தை நிறைவேற்று!” என்ற கோரிக்கையை முன்வைத்து 25 தோழர்களுடன் நடைபயணத்தை 9-6-2017 அன்று சேலத்தில் தொடங்கினர்.. பயணக்குழு வழியில் உள்ள கிராமங்களில் உரை, பாடல்கள், நாடகங்கள் வழியாக கோரிக்கையை விளக்கியவாறு 15 நாட்கள் பயணித்து சென்னையை அடைகின்றனர்.. 15-6-2017 அன்று மாலை விழுப்புரத்துக்கு அருகில் உள்ள அரசூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாவட்டக் கழகத் தலைவர் மதியழகன், கழகத் தோழர் மகாலிங்கம், கண்ணன் ஆகியோரோடு பயணக் குழுவினரை வரவேற்று அவர்களுடன் விழுப்புரம் வரை நடந்துசென்றனர். விழுப்புரத்தில் நடந்த பயணக் குழு வரவேற்புப் பொதுக் கூட்டத்தில், மாநில ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் தோழர் வாலண்டினா, பயணக்குழுத் தலைவர் தோழர் சாமுவேல்ராஜ், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் பயண நோக்கங்களை விளக்கி சிறப்புரையாற்றினர்.

கழகத் தலைவர் தலைமையில் விழுப்புரம் மாவட்ட கழக கலந்துரையாடல் 21052017

21.05.2017 மாலை 3 மணிக்கு விழுப்புரம் (மா) தி.வி.க மாவட்ட கலந்தாய்வு கூட்டம் சங்கராபுரம் வாசவி மஹாலில் நடைபெற்றது கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். தோழர்கள் க.ராமர், பெரியார் வெங்கட், கா.மதி, ந.வெற்றிவேல், இளையரசன், சி.சாமிதுரை, தீனா( புதுச்சேரி), ந.அய்யனார் (த.செ.கு) உரையாற்றினர். கழகத் தலைவர் சிறப்புரையாற்றினார். மா.குமார் நன்றி உரையாற்றினர். கூட்டத்தில் கழக இதழ்கள் ‘பெரியார் புரட்சி  முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கு சந்தா சேர்த்தல் மற்றும் கழகத்தின் அடுத்தகட்ட செயல் பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் கிழக்கு, மேற்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். விழுப்புரம் கிழக்கு (மா) பொறுப் பாளர்கள்: இளையரசன் (மாவட்டத் தலைவர்), தினேஷ் (மா.செ), ஸ்ரீதர் (மா.அ), அழகு முருகன் (மா.து.த), பெரியார் ஜெயரக்சன் (மா.து.செ), விழுப்புரம் மேற்கு மாவட்டம், க. மதியழகன் (மா.த), க.ராமர் (மா.செ), சி.சாமிதுரை (மா.அ), ம.குப்புசாமி (மா.து.செ), மு.நாகராஜ் (த.அ.ம. மாவட்ட அமைப்பாளர்), வீ.வினோத் (த.மா.க. மாவட்ட அமைப்பாளர்),...

விழுப்புரம் மாவட்டத்தில் 30 தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

விழுப்புரம் மாவட்டத்தில் 30 தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் வனத் தாம்பாளையம் கிராமத்தில் இளையரசன் இல்லத்தில் நடைபெற்றது. ஜனவரி 8 மாலை 3 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் சிவராந்தகம், பள்ளி மேளயனூர், மருதூர் வனத்தாம் பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து முப்பது தோழர்கள், இளையரசன் தலைமையில் கழகத்தில் இணைந்தனர். பின் புதிய தோழர்களிடம் கழகச் செயல்பாடுகள் குறித்து விழுப்புரம் அய்யனார் உரை யாற்றினார். இந்நிகழ்வில் புதுச்சேரி தீனா, மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் க. இராமன்,  கி. சாமிதுரை, மா. குமார், சென்னை ஜான் மண்டேலா ஆகியோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 02022017 இதழ்