Category: புலனச் செய்திகள் யூனிகோடு

541 பெண் போராளிகளின் அறைகூவல்

அக்டோபர் 07ஆம் தேதி சென்னையில் பெரம்பூர் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகம் களத்தில் நிற்கும் பெண் போராளிகளை இணைத்து மாபெரும் ஜாதி ஒழிப்புப் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி இருக்கிறது. மிகக் குறிப்பிடத்தக்க சிறப்புடன் நடந்த இந்த மேடையில் “பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தை சார்ந்த போராடுகிற நெடுவாசல், கதிராமங்கலம் மக்களின் போராட்டத்தை ஆதரித்து துண்டறிக்கை கொடுத்தார் என்பதற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வளர்மதி, எப்போதும் மக்கள் போராட்டத்தில் நிற்கும் மக்கள் மன்றத்தை சார்ந்த மகேசு, ஜாதி வெறிக்கு அன்பு காதலனை பறிகொடுத்த உடுமலை கவுசல்யா, கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி, எழுத்தாளர் ஜெயராணி, தமிழ்நாடு அறிவியல் மன்றத்தினுடைய பொறுப்பாளர் ஆசிரியர் சிவகாமி என்று பெண்கள் ஒரே மேடையில் இணைந்து, ஜாதி சங்கங்களை புறக்கணித்து சுயஜாதி மறுப்பாளராக இருங்கள் என்று அறைகூவல் கொடுத்தார்கள்”. ஆயிரக்கணக்கில் இளைஞர்கள், பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் அந்த நிகழ்வுக்கு திரண்டிருந்தார்கள். ஜாதி ஒழிப்புக் களத்தில் இளைஞர்கள் இறங்கிவிட்டார்கள்....

511 அரியலூர் அனிதா தற்கொலை –  நீட் தேர்வின் உயிர்ப்பலி 01092017

511 அரியலூர் அனிதா தற்கொலை –  நீட் தேர்வின் உயிர்ப்பலி 01092017

  அரியலூர் அனிதா தன் வாழ்வை முடித்து கொண்டுவிட்டார். “+2 தேர்வில் 1176 மதிப்பெண்களை பெற்று மருத்துவ கனவுடன் வாழ்ந்த ஒரு மாணவி. நீட் தேர்வு அவரை பழிவாங்கி விட்டது. கிராமத்தில் இருந்து வந்த ஒரு தலித் பெண். தந்தை மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருப்பவர். கழிப்பறை இல்லாத வீடு. உச்சநீதிமன்றம் வரை சென்று சமூகநீதிக்காக அவர் போராடி பார்த்தார்”. “ஓராண்டுக்கு நாங்கள் விதிவிலக்கு தருகிறோம் என்று கூறிவிட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு தர முடியாது என்று பாஜ.க எடுத்த கல்வி துரோக கொள்கை அனிதாவை பழிவாங்கி விட்டது. மாநில அரசும் தன்னுடைய அர்ப்ப அரசியல் நலனுக்காக கொத்தடிமை ஆட்சியாக மாறிப் போய் ஜெயலலிதா நீட் தேர்வில் எடுத்த உறுதியான முடிவை எடுக்காமல் தமிழக மக்களுக்கு மகத்தான துரோகத்தை எடுத்துவிட்டது”. மருத்துவ கல்லூரியின் கதவுகள் தனக்காக திறந்திருக்கும் என்று நம்பிக்கையில் வாழ்ந்த அனிதாவுக்கு இப்போது மருத்துவமனையின் கதவுகள் அந்த பெண்ணின் உடல்...

502 விநாயகர் சிலைகளை வைக்கும் இந்து அமைப்புகளுக்கு ஒரு கேள்வி”  22082017

502 விநாயகர் சிலைகளை வைக்கும் இந்து அமைப்புகளுக்கு ஒரு கேள்வி” 22082017

  தமிழ்நாட்டில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து மகா சபா, சிவசேனா என்று பல்வேறு பெயர்களில் இயங்கும் சிறு சிறு குழுக்கள் அத்தனையும் பாரதீய ஜனதா கட்சியின் தூசிப்படைகள். தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி அமைவதற்காக அடித்தளம் அமைத்து கொடுப்பதற்காக செயல்படும் இயக்கங்கள். இந்த அமைப்புகள் தான் விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு தீவிரமாக பாடுபட்டு கொண்டிருக்கின்றன. அவர்களை பார்த்து நாம் கேட்கிற கேள்வி ஒன்று உண்டு. இப்போது, “மோடியின் பாரதீய ஜனதா கட்சி கொண்டு வந்திருக்கிற நீட் தேர்வானலும், போராடுகிற விவசாயிகளை அடிமைப்படுத்துகிற பிரச்சனையாக இருந்தாலும், சிறுகுறு தொழிலாளர்களை ஒடுக்குகிற ஜி.எஸ்.டி வரி திட்டத்தை கொண்டு வந்திருக்கிற திட்டமாக இருந்தாலும், மண் வளத்தை பாதிக்கிற ஓ.என்.சி யின் எரிவாயு எடுக்கின்ற திட்டமாக இருந்தாலும், இத்தனை திட்டங்களாலும் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும்பான்மை இந்துக்கள் தான்”. இந்த இந்துக்கள் உரிமைகளை மோடி ஆட்சி பறிக்கிறதே என்பதை எதிர்த்து குரல் கொடுக்காத...

497 T.T.V.தினகரன் அணி பா.ஜ.க.விடம் சரணடைந்து விட்டதற்கான அறிகுறிகள் 18072017

497 T.T.V.தினகரன் அணி பா.ஜ.க.விடம் சரணடைந்து விட்டதற்கான அறிகுறிகள் 18072017

அஇஅதிமுக அதிகாரப்பூர்வ ஏடான “நமது எம்.ஜி.ஆர்” பத்திரிக்கையில் “காவி அடி கழகத்தை அழி” என்ற கவிதை ஒன்று மூன்று நாட்களுக்கு முன்பு வெளி வந்தது. பாரதீய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்தது அந்த கவிதை. பரபரப்பாக மூகநூலில் பதியப்பட்டதும் கூட. பாரதீய ஜனதா கட்சி, அஇஅதிமுகவை மூன்றாக பிளந்து கட்சியை ஒழிப்பதற்கு சதி செய்கிறது. மாநிலங்களின் உரிமைகளை குறுக்கு வழியில் தலையீட்டு தடுக்கிறது என்று கடுமையான விமர்சனங்களை கொண்ட அந்த கவிதை. அந்த கவிதையை எழுதியவர் பத்திரிக்கை ஆசிரியராக இருந்த “மருது அழகுராஜ்”. சித்ரகுப்தன் என்ற புனை பெயரில் அந்த கவிதையை எழுதியிருந்தார் மருது அழகுராஜ். இப்போது இந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தினகரன் இதற்கான உத்தரவை பிறப்பித்திருப்பதாக ஆங்கில நாளோடு ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. தினகரன் இதை பற்றி கூறுகையில் அழகுராஜ் சித்ரகுப்தன் என்ற பெயரில் எழுதிய கவிதை கழகத்தின் கொள்கைக்கு எதிரானது என்று குறிப்பிட்டிருக்கிறார். ” நீண்ட விடுமுறையில்...