10% இட ஒதுக்கீட்டைக் கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம்

கடலூர் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், 15.10.2022, அன்று காலை 10 மணியளவில், கடலூர் மஞ்ச குப்பம்  தலைமை தபால் நிலையம் அருகில்,  “உச்சநீதிமன்றத்தின் மற்றொரு அயோத்தி தீர்ப்பு” என்ற தலைப்பில்  உயர்சாதி பிரிவினருக்கு வழங்கிய 10% இடஒதுக்கீட்டை கண்டித்தும்,  ஒன்றிய அரசு ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சனாதனத்தின் குரலாக உச்சநீதிமன்ற தீர்ப்பு, பொருளாதர அளவுகோல் இடஒதுக்கீட்டுக்கு பொருந்தாது, 10% இடஒதுக்கீடு, இடஒதுக்கீட்டு முறையையே சீர்குலைக்கும், சமூகநீதியை சீர்குலைக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகிய முழக்கங்களை முன்னிறுத்தி கண்டன முழக்கமிடப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின்  தொடக்க நிகழ்வாக விடுதலைக் குரல் கலைக்குழுவினர் கொள்கை பிரச்சார பாடல்களை பாடினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட செயலாளர், ர.சிவகுமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர், அ.மதன்குமார் வரவேற்று நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

ஆ.சதிசு – மாவட்ட அமைப்பாளர், சிவா – இளைஞரணி மாவட்ட அமைப்பாளர், பிரேம் – தமிழ்நாடு மாணவர்க் கழக மாவட்ட அமைப்பாளர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, கமல் – விசிக, ராம்குமார் – தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம், பிரகாஷ் – தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம், தங்க சேகர் – தமிழ் மீனவர் விடுதலை வேங்கை, விஜி பகுத்தறிவு –  தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கார்த்திகேயன் –  விடுதலைக் குரல் கலைக்குழு, ரவி – மக்கள் அதிகாரம், தென். சிவகுமார் -திராவிடர் கழகம், அறிவழகன் – மாவட்ட அமைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் மன்றம், பூ.ஆ. இளையரசன் – மாவட்டத் தலைவர் விழுப்புரம் திராவிடர் விடுதலைக் கழகம் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் –

தி.ச. திருமார்பன், பெரியாரிய சிந்தனையாளர் வழக்கறிஞர் – வீ.அழகரசன்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் செயலாளர் – முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இள. புகழேந்தி ஆகியோரும் கண்டன  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரை யாற்றினர். இறுதியாக முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.

 

பெரியார் முழக்கம் 24112022 இதழ்

You may also like...