Category: நிமிர்-தலையங்கம்

பெரியாரியம் : வேர்களைத் தேடி…

இந்த இதழில் –  பெரியாரியலின் பன்முகப் பார்வைகளை அலசும் ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 2019 ஆகஸ்ட் 22 முதல் 25 வரை தஞ்சையில் “வேளாங்கன்னி கலை அறிவியல் கல்லூரி” காட்சி ஊடகத் துறை மற்றும் ‘ரிவோல்ட்’ அமைப்பு இணைந்து ‘ஊடகங்களில் பகுத்தறிவு மற்றும் சமூக நீதியின் வேர்களைத் தேடி’ எனும் தலைப்பில் ஆய்வரங்கம் ஒன்றை நடத்தின. அதில் பங்கேற்று ஆய்வாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பெண்ணியவாதிகள், பெரியாரியம் குறித்து விரிவான ஆய்வுக் கருத்துகளை முன் வைத்தனர். பெரியாரியம் பற்றிய பல தொகுப்பு நூல்களை உருவாக்கிய பசு. கவுதமன் முயற்சியில் இந்த ஆய்வரங்கம் நடந்தது. அரங்கில் உரையாற்றிய தோழர்கள், எழுத்து வடிவில் வழங்கிய கட்டுரைகள் இந்த இதழில் இடம் பெற்றுள்ளன. இனி வரும் இதழ்களிலும் ஆய்வுக் கட்டுரைகள் தொடர்ந்து வெளி வரும். கடவுள் – மத எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு என்ற எல்லையோடு பெரியாரியம் சுருக்கப்பட்டு விடுகிறது. மாறாக பெரியார் ஏன் இந்த...

காந்தி 150

காந்தி 150 காந்தியின் 150ஆவது பிறந்த நாளில் காந்திய சிந்தனைகள் விவாதப் பொருளாகியிருக்கிறது. காந்தியின் தீண்டாமை ஒழிப்பு, கதர், மதுவிலக்கு உள்ளிட்ட சமுதாயக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டதால் தான் பெரியார் காங்கிரசில் சேர்ந்து, அந்தக் கொள்கைகளுக்காக கடுமையாக உழைத்தார். அதே சமுதாயப் பார்வையில் காங்கிரஸ் வகுப்புவாதி பிரதிநிதித்துவம் என்ற சமூகங்களுக்கிடையிலான ஏற்றத் தாழ்வுகளைப் போக்கும் சம உரிமைப் பங்கீட்டுக்கு முன்வரவேண்டும் என்ற கொள்கைக்கு கட்சிக்குள்ளே போராடினார். பார்ப்பனப் பிறவி ஆதிக்கவாதிகள் அதற்கு உடன்படவில்லை. காந்தியார் திட்டவட்டமான நிலை எடுக்க முடியாத ஊசலாட்டத்தில் இருந்தார். காங்கிரசை விட்டு வெளியேறிய பெரியார், அதற்குப் பிறகும் காந்தியாரின் தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட சமுதாயக் கொள்கைகளை ஆதரித்தே வந்தார். 1927இல் பெங்களூரில் காந்தியை நேரடியாக சந்தித்து உரையாடிய பிறகே காந்தியை எதிர்க்கத் தொடங்கினார். காந்தியின் சமூகச் செல்வாக்கு பார்ப்பனியத்தை வளர்ப்பதற்கு பார்ப்பனர்களால் பயன்படுத்தப்படுவதை உணர்ந்த பெரியார், காந்தியின் ‘பிம்பத்தை’ தகர்ப்பது பார்ப்பனிய எதிர்ப்புக்கான தேவை என்பதை உணர்ந்திருந்தார். சமூகத்தில்...

புத்தம் மதமல்ல; மார்க்கம்!

விநாயகன் சிலை ஊர்வலங்கள் மதம் சார்ந்தவை அல்ல; மதத்தின் அரசியலுக்காகவே நடத்தப்படுகின்றன. எனவே இதைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து ‘பெரியார் கைத்தடி’யை குறியீடாக்கி எதிர் ஊர்வலங்களை நடத்தி வந்தது. இந்த ஆண்டு எதிர்வினையாக புத்தர் சிலை ஊர்வலத்தை சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் நடத்தினார்கள். இந்துத்துவ மதவாத அரசியலுக்கு மாற்றாக மக்கள் சமத்துவத்தை மார்க்கமாக்கி பரப்பிய புத்தர் எதிர்வினையாக முன்னிறுத்தப்பட்டார். இது குறித்து பல விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன. விவாதங்கள் தொடங்கும்போதுதான் பார்வையும் தெளிவாகும்; அந்த வகையில் விவாதங்களை வரவேற்கவே வேண்டும். இந்து மதத்திலிருந்து வெளியேறி அம்பேத்கர் – புத்த மார்க்கம் தழுவியபோது, எடுத்த உறுதிமொழிகளில் ஒன்று – ‘இராமன், விநாயகன்’ உருவங்களை வணங்க மாட்டோம் என்பதாகும். பெரியார் 1953ஆம் ஆண்டு விநாயகன் சிலை உடைப்புப் போராட்டத்தை நடத்தினார். அதற்கு அவர் தேர்வு செய்த நாள் புத்தர் பிறந்த நாளாகக் கொண்டாடப் படும் மே 27ஆம் தேதி. “என்னை கீழ்...

ஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி!

இந்தியா என்பது ஒரு தேசமாகவே உருவாகவில்லை. பல்வேறு பண்பாடு, மொழி, பேசும் மாநில மக்கள் வாழும் ஒரு துணைக் கண்டம். அரசியல் சட்டமே அப்படித்தான் கூறுகிறது. ஆனால் பெரும்பான்மை பலத்துடன் அதிகாரத்துக்கு வந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி, இந்தியாவை ஒற்றை ஆட்சி நோக்கி வேகவேகமாக இழுத்துச் செல்வதற்கான சட்டங்களை அதிரடியாக அமுல்படுத்தி வருகிறது. இந்தியாவின் ஒருமைப்பாடு என்பதன் அடித்தளம் மாநிலங்களின் தன்னாட்சியிலும் கூட்டாட்சி தத்துவத்திலும் தான் அடங்கியிருக்கிறது. அவைகள் தகர்க்கப்படும்போது இந்தியாவின் ஒருமைப்பாடும் வேகமாக தகரும் நிலைதான் உருவாகும் என்பதை பார்ப்பனியம் உணர மறுக்கிறது. இனங்களின் அடையாளம், உரிமைகள் பறிக்கப்படும்போதும் அடையாளங்கள் அழிக்கப்படும் போதும் விடுதலைக்கான போராட்டங்களும் போர்களும் தொடங்கி விடும் என்பதுதான் வரலாறு கூறும் படிப்பினை. இந்தியாவிலே தனி மாநிலம் கோரி போராடிய நாகாக்கள், போடோக்கள் இரஷ்யாவிலிருந்து பிரிந்து போக போராடி வரும் செச்சென்ஸ் (ஊhநஉhநளே) மக்கள், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து போக போராடும் பலுசிஸ்தான், இந்தோனேசியாவிலிருந்து பிரிந்து போக...

தமிழர்கள் சோதனை எலிகளா?

2017ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றம் ஒருமித்து நிறைவேற்றிய ‘நீட்’ விலக்கு கோரும் மசோதாவை தமிழ்நாடு அரசுக்குத் திருப்பி அனுப்பி விட்டதாக நடுவண் அரசின் உள்துறை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறது. இரண்டாண்டுகள் தமிழக சட்டமன்றமும் தமிழக மக்களும் இது குறித்து இருட்டிலேயே வைக்கப்பட்டிருக்கிறார்கள். நடுவண் அரசின் இந்த துரோகத்துக்கு ஒரு வகையில் தமிழ்நாடு அரசும் பொறுப்பேற்க வேண்டும். இராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் நீண்டகாலம் அடைக்கப்பட்டிருந்த ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் உரிமை தமிழக அரசுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த அடுத்த சில நாட்களிலேயே அவர்கள் விடுதலையை தமிழக சட்டமன்றத்தில் அறிவித்த அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா நடுவண் அரசுக்கு 3 நாள் கெடு விதித்தார் என்பது வரலாறு. அவரது வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிக் கொண்டிருக்கும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி ‘நீட்’ மசோதாவை திருப்பி அனுப்பி 2 ஆண்டுகாலம் ஓடிய பிறகும் அதை வெளிப்படுத்தாமலே மவுனம் சாதித்திருக்கிறது. தமிழ்நாட்டு...

இந்து தேசியத்தை எதிர்கொள்வது எப்படி? விவாதங்கள் தொடங்கட்டும்!

இந்தியா இந்துக்களுக்கான தேசம் என்ற பெருமிதத்தோடு அதன் “பெருமைமிகு” பாரம்பர்யத்தை மீட்டெடுப்பதை அரசியல் முழக்கத்துடன் இணைப்பதே பா.ஜ.க. – சங்பரிவாரங்களின் அரசியலுக்கான அடித்தளம். அந்தக் கற்பிதங்களை உணர்வுகளாக்கி வாக்குகளாக மாற்றுவதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தேசப் பெருமையோடு தேசத்தின் பாதுகாப்பையும் சாதுர்யமாக பிணைத்துக் கொண்டுதான் பார்ப்பனியமும் தன்னைத் தொடர்ந்து ஆதிக்க சக்தியாகத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ‘மனுசாஸ்திரம் வர்ணாஸ்ரமம்’ என்ற நஞ்சு – இந்த தேசக் கட்டமைப்புக்குள் எவரும் அடையாளம் கண்டு கொள்ளாமல் பதுங்கி நிற்கிறது. பார்ப்பன கொடுங்கோன்மைக்கும் அதன் சமூக அரசியல் ஆதிக்கத்துக்கும் எதிராகப் போராடிய பெரியார், தேசிய எதிர்ப்பையும் அதில் ஏன் இணைத்தார் என்ற வரலாற்று உண்மை – இப்போது புரிந்திருக்கும்.  சமூக ஆய்வாளர்கள் பலரும் இப்போது இது குறித்து வெளிப்படையாக எழுதத் தொடங்கியிருப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். “தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து பெருமைமிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி என்றென்றும் அடிமைகளாக...

வடநாட்டார் ஆதிக்கம்

வடநாட்டார் ஆதிக்கம்

தமிழகத்தில் நடுவண் அரசுப் பணிகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு பிற மாநிலத்தவர் குறிப்பாக வடநாட்டுக்காரர்கள் ஏராளமாகக் குவிக்கபட்டு வருவதற்கு தமிழ்நாட்டில் வலிமையான போராட்டங்கள் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. பல்வேறு மொழி பண்பாடு இனங்களின் கூட்டமைப்பான இந்திய துணைக் கண்டத்தில் மொழி வழி மாநிலப் பிரிவினருக்குப் பிறகு அரசுகளின் இறையாண்மை காக்கப்படவேண்டும். அரசியல் சட்டமே இந்தியாவை அரசுகளில் ஒன்றியம் என்று தான் (ருniடிn டிக ளுவயவநள) வரையறுக்கிறது. அதன் காரணமாகவே நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு நிறுவனங்கள் மண்டலவாரியாகப் பிரிக்கப்பட்டு அந்தந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் நோக்கத்தோடு வேலைவாயப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தன. 145 மத்திய அரசு நிறுவனங்களுக்கான பதவிகள் மத்திய தேர்வாணை யத்தால் 7 மண்டலங்கள் 2 துணை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்ட முறைகளை மாற்றி அகில இந்தியத் தேர்வுகள் வழியாக தோந்தெடுக்கப்படும் முறைக்கு மாற்றப்பட்டதால் மாநில பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டு வடநாட்டுக்காரர்...

அய்ந்தாண்டு அடக்குமுறைக்கு பாடம் புகட்ட வேண்டிய தருணம்

மோடியின் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி கடந்த 5 ஆண்டுகளாக அதிகாரத்தைப் பயன்படுத்தி பார்ப்பனிய சர்வாதிகாரத்தையே கட்டவிழ்த்துவிட்டது. மீண்டும் வேதகாலம் திரும்பி விட்டதாகவே பார்ப்பனியம் பூரித்தது. தமிழ்நாட்டில் பெரியார் இயக்கமும் – அதன் வழி வந்த ‘திராவிட அரசியலும்’ உருவாக்கிய உரிமைகள் அனைத்தும் படிப்படியாகப் பறிக்கப்பட்டன. தமிழ்நாடா? வடநாடா? என்று வியக்க வைக்கும் நிலைக்கு அனைத்து துறைகளிலும் வடநாட்டார் குவிக்கப்பட்டனர். ஆளுநர் அதிகாரம் பெற்றவர்களாக்கப்பட்டனர். பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று பேசக் கூடிய துணிவைப் பார்ப்பனர்கள் பெற்றனர். நீட் திணிப்பு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, வாழ்வுரிமையைக் குலைக்கும் நச்சுத் திட்டங்கள் திணிப்பு என்று அடுக்கடுக்கான படையெடுப்புகள் நடந்தன. தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசின் அதிகாரத்தை பா.ஜ.க. தனது பொம்மலாட்ட ‘வலையத்துக்குள்’ கொண்டு வந்தது. ஆளும் கட்சியை உடைப்பது; இணைப்பது; மிரட்டுவது என அத்தனை அஸ்திரங்களையும் பயன்படுத்தியது. கருத்துரிமைகள் நசுக்கப்பட்டன. தமிழ்நாட்டில் சமூக செயல்பாட்டாளர்கள் மக்கள் பிரச்சினைக்காக மதவெறி...

அவமதிப்புகளைப் புறந்தள்ளிய ‘தொண்டறம்’

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நூற்றாண்டு இது. அவமானம் – அவமதிப்புகளைச் சுமந்து கொண்டு – பெரியாரின் ஆயுள் நீட்டிப்புக்கு தன்னையே ஒப்படைத்துக் கொண்டவர். ‘உங்கள் உடலைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எனக்கு பலரும் யோசனை கூறுகிறார்கள். ஆனால் எனக்கு உதவிட நம்பிக்கையாக செயல்பட ஒருவர்கூட வரவில்லையே’ என்று பெரியார் கேட்டபோது, ‘இதோ நான் வருகிறேன்’ என்று ஓடோடி வந்தவர். தமிழகத்தின் பொது வாழ்க்கையிலேயே மணியம்மையார்-பெரியார் திருமண ஏற்பாடுபோல் கடும் புயலை உருவாக்கிய வேறு ஒரு நிகழ்வு இருந்திருக்க முடியாது. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சி உருவாவதற்கே இத்திருமணமே காரணமாக முன் வைக்கப்பட்டது. அப்போது கவர்னர்  ஜெனரலாக இருந்த பெரியாரின் நெருக்க நண்பரான இராஜகோபாலாச்சாரி என்ற பார்ப்பனர் அறிவுரைப்படியே பெரியார் இந்த ஏற்பாட்டைச் செய்தார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. வழக்கம்போல் பெரியார் இந்த அவதூறுகளை புறந்தள்ளினார். குற்றச்சாட்டுகள் வரும்போதெல்லாம் அதை உடைத்து, தனது நெஞ்சைத் திறந்துக் காட்டி தன்னை நேர்மையாளராக நிரூபித்துக்...

அண்ணா தந்த அறிவாயுதங்கள்

அண்ணாவின் 50ஆவது நினைவு நாளில் அவரது எழுத்தும் பேச்சும் தமிழின விடுதலைக்கான அறிவாயுதங்களாகத் திகழ்ந்து கொண்டிருக் கின்றன. குறுகிய காலம் தான் அவர் முதல்வர். அவரது முப்பெரும் சாதனைகள் – இப்போது தமிழகத்தின் தனித்துவத்துக்கான வரலாற்று அடையாளங்களாக நிலை பெற்றுவிட்டன. தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இந்திய தேசிய வரைபடத்தில் தமிழ்நாடு மட்டுமே சமூகநீதி மண்ணாக அடையாளம் காட்டுகிறது. மும்மொழித் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டிலிருந்து இந்தியை விரட்டினார். அதுவே இந்திய தேசியத்துக்குள் தமிழகம் தன்னை முழுமையாக ‘கரைத்துக் கொள்ளாது’ என்பதை உணர்த்தி நிற்கிறது. புரோகித மந்திரங்கள் வழியாக நடத்தப்படும் திருமணங்கள் மட்டுமே திருமணத்தை உறுதிப்படுத்தும் என்ற வேத மரபைத் தகர்த்து சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட வடிவம் தந்தார். தமிழரின் பண்பாடு வேத மரபுக்கு முரணானது என்பதை இந்தச் சட்டம் உரத்து முழக்கமிடுகிறது. மாறி வரும் அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு மாநில சுயாட்சி முழக்கத்தை முன் வைத்தார். அந்த உரிமை...

திசை வழிகாட்டிய திருச்சிப் பேரணி

டிசம்பர் 23இல் திருச்சியில் 160க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஓரணியாய் கருஞ்சட்டையுடன் திரண்டு, “தமிழ்நாட்டில் பார்ப்பனிய மதவெறி சக்திகளுக்கு இடமில்லை; தமிழ்நாட்டின் கனிமவள சுரண்டலைத் தடுத்து நிறுத்துவோம்” என்ற எச்சரிக்கை செய்திருக்கிறது. பெரியார் இறப்புக்குப் பிறகு பிறந்த பல்லாயிரக்கணக்கான  இளைஞர்களின் போர்ப் பாசறை என்றே கூற வேண்டும். பெரியார் தனது மரண சாசனமாக விட்டுச் சென்ற தமிழின விடுதலையை சூளுரையாக ஏற்றிருக்கிறது இந்தப் பேரணி. விரல்விட்டு எண்ணக்கூடிய சில ஊடகங்களைத் தவிர, ஏனையவை கட்டுப்பாடாக இந்தப் பேரணியின் செய்திகளையே இருட்டடிப்பு செய்து விட்டன. பெரியார் பேசிய திராவிடம், ‘தமிழரின் இழிவு ஒழிப்பு – தன்னுரிமைக்கான குறியீட்டுச் சொல்’ என்ற உண்மையைத் திரித்து பெரியாரை தமிழருக்கு எதிராக நிறுத்த முயன்ற குழுக்களின் ‘பிரச்சார மாயை’ வெற்றி பெறாது என்று காட்டியிருக்கிறது பேரணியில் திரண்ட இளைஞர்களின் கூட்டம். ஜாதி ஒழிப்பு; ஜாதியின் உற்பத்தி சக்திகளான இந்து மதம்; பார்ப்பனியம்; அதை மூளையில் சுமந்து நிற்கும் ஜாதி...

அண்ணா தந்த அறிவாயுதங்கள்

அண்ணாவின் 50ஆவது நினைவு நாளில் அவரது எழுத்தும் பேச்சும் தமிழின விடுதலைக்கான அறிவாயுதங்களாகத் திகழ்ந்து கொண்டிருக் கின்றன. குறுகிய காலம் தான் அவர் முதல்வர். அவரது முப்பெரும் சாதனைகள் – இப்போது தமிழகத்தின் தனித்துவத்துக்கான வரலாற்று அடையாளங்களாக நிலை பெற்றுவிட்டன. தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இந்திய தேசிய வரைபடத்தில் தமிழ்நாடு மட்டுமே சமூகநீதி மண்ணாக அடையாளம் காட்டுகிறது. மும்மொழித் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டிலிருந்து இந்தியை விரட்டினார். அதுவே இந்திய தேசியத்துக்குள் தமிழகம் தன்னை முழுமையாக ‘கரைத்துக் கொள்ளாது’ என்பதை உணர்த்தி நிற்கிறது. புரோகித மந்திரங்கள் வழியாக நடத்தப்படும் திருமணங்கள் மட்டுமே திருமணத்தை உறுதிப்படுத்தும் என்ற வேத மரபைத் தகர்த்து சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட வடிவம் தந்தார். தமிழரின் பண்பாடு வேத மரபுக்கு முரணானது என்பதை இந்தச் சட்டம் உரத்து முழக்கமிடுகிறது. மாறி வரும் அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு மாநில சுயாட்சி முழக்கத்தை முன் வைத்தார். அந்த உரிமை...

நடுவண் ஆட்சியின் துரோகங்கள்

நடுவண் ஆட்சியின் துரோகங்கள்

தூத்துக்குடி மக்களை கதிர்வீச்சுக்கு உள்ளாக்கி  மக்களை நோயாளிகளாக மாற்றிய ‘ஸ்டெர்லைட்’ நிறுவனம் மீண்டும் அதிகாரத் திமிருடன் தூத்துக்குடியில் மக்கள் எதிர்ப்புகளை மதிக்காமல் நுழையத் துடிக்கிறது. 100 நாள் போராட்டத்தின் இறுதியில் காவல்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு 13 உயிர்களை பலி கொடுத்தனர் தூத்துக்குடி மக்கள். உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் தீர்ப்பை வழங்கிய பார்ப்பன நீதிபதி கோயல் ஓய்வு பெற்ற சில மணி நேரங்களிலே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆனார். முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் இந்த ஆலை பற்றிய ஆய்வை நடத்த ஒரு குழுவையும் அமைத்தார். குழுவில் தமிழகத்தைச் சார்ந்த நீதிபதியை இணைத்தால் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவான முடிவு வந்துவிடும் என்பதால் அந்தக் கோரிக்கையை நிராகரித்தார். இப்போது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று அகர்வால் குழு பச்சைக்கொடி காட்டிவிட்டது. தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்து தவறு என்றும்...

“கோயில் பக்கம் திரும்பாதே!”

“கோயில் பக்கம் திரும்பாதே!”

உலகில் எந்த ஒரு மதமும் தங்கள் மதத்தினர் வழிபாட்டுக்கு வரும்போது ‘உள்ளே வராதே’ என்று தடுப்பது இல்லை. ஆனால் இந்த நாடே இந்துக்களுக்கானது; நாம் அனைவருமே இந்துக்கள்; பிற மதத்தவர் – அன்னியர்” என்று  பேசுகிறவர்கள்தான். ‘இந்து’ வழிபாட்டுக்கு உரிய கோயில்களில் சமூகத்தின் சரி பகுதியாக இருக்கும் பெண்களைப் பார்த்து, “கோயிலுக்கு வராதே” என்று தடுக்கிறார்கள். “தீண்டாமை அனைத்து வடிவங்களிலும் தடை செய்யப்படுகிறது” என்று சட்டம் அமுலில் உள்ள ஒரு நாட்டில் அந்த சட்டத்தின் உணர்வுகளை மதித்து உச்சநீதிமன்றம், பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளித்த பிறகும், பா.ஜ.க.வும் சங்பரிவாரங்களும் கேரள மாநில காங்கிரசும் கைகோர்த்துக் கொண்டு, பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் வழிபட வருவதைத் தடுத்து நிறுத்துகிறார்கள். ‘தீண்டப்படாத மக்கள்’ கோயில் நுழைவுக்குக்கூட சம்பிரதாயங்களைக் காட்டியே பார்ப்பனர்கள் தடுத்தனர். 1947ஆம் ஆண்டு அனைத்து ஜாதியினருக்கும் ‘ஆலயப் பிரவேசம்’ வழங்கும் சட்டம் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டபோது சம்பிரதாயங்களான ‘ஆகமவிதிகளும்’ மாற்றப்பட்டன என்பது வரலாறு....

பெண் விடுதலைக்கு வலிமை சேர்க்கும் தீர்ப்புகள்

பெண் விடுதலைக்கு வலிமை சேர்க்கும் தீர்ப்புகள்

பார்ப்பனியம் கட்டமைத்த ஜாதி அமைப்பை வாழ்வியல் போக்காக நிலைநிறுத்தி வரும் இரண்டு முக்கிய நிறுவனங்களாக ‘குடும்பம்’, ‘திருமணம்’ என்பவற்றைக் குறிப்பிடலாம். இந்த இரண்டு நிறுவனங்கள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பது நடைமுறைக்கும் எதார்த்தத்துக்கும் சாத்தியமானதல்ல என்றாலும், இந்த நிறுவனங்களின் ‘இறுக்கம்’ தளர்த்தப்பட்டாக வேண்டும் என்பதில் முற்போக்கு சிந்தனையாளருக்கு கருத்து மாறுபாடு இருக்க முடியாது. வேறு மொழியில் கூற வேண்டுமானால் ‘குடும்ப – உறவுகள்’ – திருமண உறவுகளிடையே நிலவும் ‘ஜாதியம்’ நீக்கம் பெற்று இந்த அமைப்புகள் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும். பெண் விடுதலைக்கான தத்துவத்தை ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் வழியாக அறிவுப் பெட்டகமாக சமூகத்துக்கு வழங்கிச் சென்றிருக்கிற பெரியார், பெண்ணடிமையைக் காப்பாற்றும் இந்த நிறுவனங்கள் மீது கேள்வி எழுப்புகிறார். இந்த திசை வழியில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று இந்தியத் தண்டனைச் சட்டத்தில் இடம் பெற்றிருந்த காலாவதியாகிப் போன 377ஆவது பிரிவை உச்சநீதிமன்றம் நீக்கியிருப்பதாகும். இதன் மூலம்...

மக்கள் பேராதரவோடு நடந்த பரப்புரை

மக்கள் பேராதரவோடு நடந்த பரப்புரை

‘கல்வி – நமது உரிமை; வேலை வாய்ப்பு – நமது வாழ்வு; சுயமரியாதை – நமது அடையாளம்’ என்ற முழக்கங்களுடன் திராவிடர் விடுதலைக் கழகம் 7 நாட்கள் நடத்திய பரப்புரை இயக்கத்துக்கு (2018 ஆக.20 முதல் 26 வரை) மக்கள் பேராதரவை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆக. 26, 2018இல் பெரம்பலூரில் நடந்த நிறைவு விழா மாநாட்டில் பயணக் குழு பொறுப்பாளர்கள் பரப்புரைக்குக் கிடைத்த ஆதரவையும் ‘நீட்’ தேர்வு நீக்கப்பட வேண்டும் என்பதில் மக்கள் காட்டிய உறுதியையும் பகிர்ந்து  கொண்டார்கள். மனுசாஸ்திரத்தைக் காட்டி பார்ப்பனர்கள் பெரும்பான்மை மக்களை ‘சூத்திரர்’களாக்கி அதன் வழியாக கல்வி, வேலை வாய்ப்புகளைப் பறித்து வந்ததை எதிர்த்து சமூகநீதிக்கான போராட்டம் வலிமையாக நடந்தது தமிழ்நாட்டில்தான். நீதிக்கட்சி ஆட்சி காலங்களிலே ‘சுதந்திரத்துக்கு’ முன்பே தொடங்கிய இந்தப் போராட்டம், பார்ப்பனர்களால் எதிர்க்கப்பட்டாலும், நீதிமன்றங்கள் வழியாக தடைபட்டாலும், தடைகளைத் தகர்த்து முன்னேறியது. கடவுள்-மத நம்பிக்கையாளர்களும் கல்விக்கான முக்கியத்துவத்தை உணர்ந்தனர். விளிம்பு நிலை மக்களும் தங்கள் பிள்ளைகளின்...

காலத்தின் சாட்சி

காலத்தின் சாட்சி

பார்ப்பன பனியாக்களின் அதிகார மய்யமான ‘இந்தியா’வில் அந்த அதிகார மய்யங்களுக்கு எதிராக செயல்படத் துணியும் ஒரு பிரதமர், எப்படி தூக்கி வீசப்படுவார் என்பதற்கு காலத்தின் சாட்சியாக நிற்பவர் வி.பி.சிங். பாபர் மசூதி இடிப்பையொட்டி எழுந்த பம்பாய் கலவரத்தின்போது அவர் ‘தண்ணீர் குடிக்காமல்’ நடத்திய ‘உண்ணாவிரதப்’ போராட்டத்தால் அவரது சிறுநீரகம் செயலிழந்தது. பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசுப் பதவிகளில் 27 சதவீத இடஒதுக்கீட்டுக்காகப் பிறப்பித்த ஆணை அவரது பிரதமர் பதவியை பறித்தது. ராஜீவ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தபோது சொந்தக் கட்சி என்பதையும் தாண்டி பாதுகாப்புத் துறையில் நடந்த ஊழலுக்கு எதிராக நடத்திய போராட்டத்தால் அவரை காங்கிரஸ் நீக்கியது. ஆதிக்க சக்திகளிடம் குவிந்து கிடந்த அதிகாரங்களை மக்களிடம் பகிர்ந்து கொள்ள அவர் முயற்சித்தார். அலமாரிகளில் முடங்கிக் கிடந்த மண்டல் அறிக்கையை வெளியே எடுத்து மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டு ஆணையைப் பிறப்பித்தார். மசூதியை இடித்துத் தள்ளிய மதவெறி சக்திகளை எதிர்த்துப் போராடினார்....

ஒரு நாத்திகரின் 75 ஆண்டு பொது வாழ்வுப் பயணம்

75 ஆண்டுகால பொது வாழ்க்கை; 50 ஆண்டு காலம் ஒரு அரசியல் இயக்கத்துக்குத் தலைமை என்பது வரலாற்றில் எப்போதாவது நிகழும் ஒரு அபூர்வ நிகழ்வு. இந்து பார்ப்பனியம் கட்டமைத்த ஜாதிய ஒடுக்குமுறை சமூக அமைப்பில் கடைக்கோடிப் பிரிவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு  சமூகத்தின் இளைஞர் – சமூகத் தடைகளைக் கடந்து அரசியல் அதிகாரத்தை எட்டிப் பிடித்ததே மகத்தான சாதனைதான். அந்த சாதனைக்குப் பெயர் கலைஞர்! இதையே தனது சமூகப் புரட்சித் தொண்டுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி என்று பூரித்தவர் பெரியார். அந்த சாதனையை சமூகத்துக்குப் பிரகடனப்படுத்தவே கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற பெரியார், அதற்கு தனது சொந்த நிதியை வழங்க முன் வந்தார். இது சூத்திரர்களால் – சூத்திரர்களுக்காக நடக்கும் ஆட்சி என்று சட்டமன்றத்திலே ஒரு முதல்வராக கலைஞர் பிரகடனம் செய்தபோது, அது ‘சூத்திர இழிவு’ ஒழிப்புக்கான பெரியாரின் களப்போருக்கு சூட்டப்பட்ட மகுடம் என்றே சொல்ல வேண்டும். அதே சூத்திர இழிவு...

தென் மாநிலங்களில் கூட்டாட்சியை நோக்கி…

‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்று தமிழ்நாட்டில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் வீதிதோறும் ஒலித்த உரிமை முழக்கம். இப்போது களத்தில் மக்களின் குரலாக தென் மாநில ஆட்சிகளின் பிரகடனமாகும் வரலாற்றுப் போக்கு உருவாகியிருக்கிறது. இந்தியத் துணைகண்டத்தில் அடைப்பட்டுக் கிடக்கும் தேசிய இனங்களின் தனித்தன்மைகளை அழித்து உருவாகும் ஒற்றை இந்திய அமைப்புதான் பார்ப்பனிய இந்துத்துவ கலாச்சாரத் திணிப்பை செயல்படுத்துவதற்கான தளம் என்ற பா.ஜ.க. சங்பரிவாரங்களின் இலக்கும் – ஒரே உரிமம், ஒரே அனுமதியுடன் பரந்த சந்தையை பெறும் வாய்ப்புள்ள ஒற்றை இந்தியாவே பன்னாட்டு பெரும் முதலாளிகளின் பெரு விருப்பம் என்ற இலாபவேட்டை இலக்கும் இணைந்து நிற்கும் சூழலில் தென்மாநிலங்களின் உரிமைக் குரல் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,14ஆவது நிதி ஆணையம், தென் மாநில வளர்ச்சிகளை முடக்கும் நிதி ஒதுக்கீடு கொள்கைகளை சுட்டிக்காட்டி முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். ஆந்திர முதல்வரும் தெலுங்கானா முதல்வரும் நடுவண் அரசின் புறக்கணிப்பைக்...

ஆண்டாளும் ‘தேவதாசி’ மரபும்

ஆண்டாளும் ‘தேவதாசி’ மரபும்

‘ஆண்டாள்’ தேவதாசி மரபைச் சார்ந்தவராக இருக்கலாம் என்று கவிஞர் வைரமுத்து, ஆய்வாளர் ஒருவர் கருத்தை மேற்கோள் காட்டியதற்காக வைணவப் பார்ப்பனர்கள் வீதிக்கு வந்து போராடிய காட்சிகளை தமிழகம் பார்த்தது. கவிஞர் வைரமுத்து கூறிய கருத்தில் மாறுபாடு இருந்தால் அதை ஆதாரங்களோடு மறுக்கலாம்; விவாதங்களும் உரையாடல்களும் நடத்தலாம். ஆனால், ‘ஆண்டாள்’ குறித்தோ அல்லது ‘வேதமதம்’ குறித்தோ எவரும் விமர்சிக்கக்கூடாது என்பதும், அது இந்துக்களுக்கு விரோதம் என்றும் ஜீயர்கள் வன்முறை மிரட்டல்களில் இறங்குவதும்தான், இவர்கள் பேசும் ‘சகிப்புத் தன்மை’ என்பதன் இலக்கணமா என்று கேட்கிறோம். ‘ஆண்டாள்’ என்பதே ஒரு கற்பனை என்று வைணவப் பார்ப்பனர் களின் அரசியல் குரு இராஜகோபாலாச்சாரியார் எழுதிய கட்டுரையை இந்த இதழில் வெளியிட்டிருக்கிறோம். ‘திரிவேணி’ என்ற வைணவர்களுக்கான இதழே இந்தக் கட்டுரையையும் 1946ஆம் ஆண்டில் வெளியிட்டிருக்கிறது. ஜீயர்கள் இதற்கு என்ன பதிலைக் கூறப் போகிறார்கள்? பக்தி இலக்கியங்கள்தான் தமிழை வளர்த்தன என்று அவ்வப்போது தமிழ்நாட்டின் பக்தி மேடைகளிலிருந்து குரல்கள் ஒலித்து...

முதலாம் ஆண்டில்…

முதலாம் ஆண்டில்…

நிமிர்வோம், தனது ஓராண்டு பயணத்தை கடந்து வந்திருக்கிறது. 2016 டிசம்பர் 24இல் சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய வேத மரபு எதிர்ப்பு மாநாட்டில் முதல் இதழ் வெளி வந்தது. (இடையில் ஓர் இதழ் மட்டும் வெளி வரவில்லை) இது ஓர் இயக்கத்தின் இதழ்தான். ஆனாலும் இதன் உள்ளடக்கத்தை இயக்கத்தோடு குறுக்கி விடாது, பெரியாரின் கருத்தாயுதமாக விரிந்த தளத்தில் வளத்தெடுக்கவே விரும்புகிறோம். சமூக மாற்றத்துக்கான சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களுக்கு ‘நிமிர்வோம்’ தனது பக்கங்களை எப்போதும் திறந்தே வைத்திருக்கும். குறிப்பாக பெரியாரிய – அம்பேத்கரிய – மார்க்சிய சிந்தனைகளின் ‘உருத்திரட்சி’யான இளம் படைப்பாளிகளின் ‘அறிவுசார்’ அணியை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே நமது விருப்பம். இது காலத்தின் தேவை என்பதை கவலையோடு உணர்ந்திருக்கிறோம். ‘உலக மயமாக்கல்’ வந்த பிறகு சமூகத்தில் நிகழ்ந்து வரும் அரசியல், பொருளியல், பண்பாட்டு சிதைவுகளுக்கிடையே சமூக மாற்றத்துக்கான பயணம், கடும் நெருக்கடிக்குள்ளாகி நிற்கிறது. இதைக் கடந்து செல்வதற்கான திட்டங்கள் செயல் உத்திகளோடு...

கருத்துரிமைக்கு தடை போட்டால்…

கருத்துரிமைக்கு தடை போட்டால்…

தேர்தல் அரசியல் கட்சிகளிலும் ஜனநாயக அமைப்பு முறைகளிலும் மக்கள் நம்பிக்கைகளை இழந்து விட்டார்கள் என்பதை ஆங்காங்கே மக்கள் நடத்தும் போராட்டங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. மக்களின் வாழ்வாதாரங்களை முடக்குதல், இயற்கை வளங்களைச் சுரண்டுதல், பெரும் தொழில் நிறுவனங்கள்- பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக மக்கள் உரிமைகளைப் பறிக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குதல், ஜாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதில் அலட்சியம் காட்டுதல் என்று நீண்ட பட்டியலிட முடியும். விரக்தி அடைந்த மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் உணர்ந்து, அவர்களுக்காக மக்களைத் திரட்டும் போராட்டங்களை தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத இயக்கங்கள், உள்ளூர் அமைப்புகள், சுற்றுச் சூழலாளர்கள், ஜாதி ஒழிப்பு அமைப்புகள்தான் களமாடி வருகின்றன. குறிப்பாக சமுதாய அக்கறை கொண்ட இளைஞர்கள், இந்த இயக்கங்களை முன்னெடுத்து வருகிறார்கள் என்பது நம்பிக்கையூட்டும் செய்தி. இந்த இயக்கங்களை கடுமையாக ஒடுக்கிட ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் காவல்துறை செயல்பட்டு வருகிறது. அமைதி வழியிலான ஆர்ப்பாட்டங்கள், மறியல், பட்டினிப் போராட்டம், முற்றுகைப் போராட்ட வடிவங்கள்தான்...

பெண் போராளிகளின்அறைகூவல்

பெண் போராளிகளின்அறைகூவல்

திராவிடர் விடுதலைக் கழகம் கடந்த அக்.7ஆம் தேதி சென்னையில் நடத்திய நிகழ்வு – ஜாதி ஒழிப்பு முயற்சிக்கான புதிய முன்னெடுப்பு என்றே கூற வேண்டும். ஜாதி ஒழிப்புக்கு முன்னுரிமை தந்து எழுதி வரும் பத்திரிகையாளர் ஜெயராணி, ‘கக்கூஸ்’ ஆவணப் படத்தைத் தயாரித்து கையால் மலம் எடுக்கும் அவலத்தை பொது வெளியில் விவாதத்துக்குள்ளாக்கிய திவ்யபாரதி, ஜாதி வெறியர்களின் கொலை வெறிக்கு காதலித்து கைப்பிடித்த காதலரை பறிகொடுத்தும், ஜாதி ஒழிப்புக் களத்தில் அர்ப்பணித்து நிற்கும் உடுமலை கவுசல்யா, கதிராமங்கலம், நெடுவாசலில் மக்கள் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களை எதிர்த்து மக்களிடம் துண்டறிக்கை வழங்கியதற்காக குண்டர் சட்டத்தை சந்தித்த வளர்மதி, ஜாதி கடந்த பொது வாழ்வகத்தை உருவாக்கி ஒடுக்கப்பட்ட மக்களின்  வாழ்வுரிமை அவர்கள் மீதான ஜாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்து தீரத்துடன் போராடி வரும் மக்கள்  மன்றத் தோழர் மகேசு, பெண்கள் சந்திப்பு, குழந்தைகள் பழகு முகாம் என்று ஓயாது பெரியாரியலைப் பரப்பி வரும் ஆசிரியர் சிவகாமி...

‘பெரியார் மண்’

‘பெரியார் மண்’

தமிழ்நாட்டின் அரசியல் சமுதாயக் களம் பெரியார் பாதையை நோக்கி குவிந்து வருகிறது. ஊடக விவாதங்கள் ஆனாலும், பொது மேடைகள் ஆனாலும் உச்சரிக்கப்படும் சொற்றொடர் “இது பெரியார் மண்” என்பதாக மாறி விட்டது. ‘பெரியார் மண்’ என்று பெருமையோடு சமுதாய எதிரிகளிடம் மார்தட்டி தன்மானத் தமிழர்கள் கூறும் நிலையை உருவாக்கியதற்கு பெரியார் தந்த விலை சாதாரணமானதல்ல. தமிழகத்தின் ‘தனித்துவத்தை’ உருவாக்குவதற்கு பெரியாரின் தனித்துவமான போராட்டப் பாதைகளையும் தனித்துவமான சிந்தனைகளையும் இனமானத்துக்காக தன்மானத்தையே பலியிட்ட தியாகங்களையும் இந்த மண்ணின் உரமாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார். ‘மக்கள் மனம் புண்படுமே; ஏற்க மாட்டார்களே” என்பது பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் தனக்கு சரியென்றுபட்டதை மக்களிடம் கூறியே தீரவேண்டும் என்ற மனத் திடம் அவரது முதல் வலிமை. எதைச் சொன்னால் மக்களை தன் பக்கம் ஈர்க்க முடியும் என்பதை அறவே ஒதுக்கி விட்டு, அதனால் கிடைக்கும் புகழ் மயக்கத்திலிருந்து முழுமையாக தன்னை விடுவித்துக் கொண்டது. பெரியாரின் இரண்டாவது மிகப் பெரும் வலிமை...

‘வந்தே மாதரம்’ வேண்டாம்!

‘வந்தே மாதரம்’ வேண்டாம்!

நீதிமன்றங்கள் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைப் போல கருத்துகளை தெரிவிப்பது வழக்கமாகிவிட்டது. தங்கள் முன்வரும் வழக்கு விசாரணையின் வரம்புகளைக் கடந்து கருத்துகளை வழங்கும் ‘உபதேச மேடைகளாக’ நீதிமன்றத்தை மாற்றி விடுகிறார்கள். மண்டல் பரிந்துரை தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் பட்டியல் இனப்பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டைத் தடை செய்து, வழக்குக்கு தொடர்பில்லாத பிரச்சனையில் தலையிட்டு தீர்ப்பளித்தது. தமிழ்நாட்டில் ஒரு உயர்நீதிமன்றத் தீர்ப்பில் கோயிலுக்கு வரக் கூடிய பக்தர்களின் “ஆடை ஒழுங்கு” குறித்து தீர்ப்பளித்தது. வழக்கு விசாரணைக்கும் இந்தத் தீர்ப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இப்போது சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து கல்வி நிலையங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வாரம் ஒரு நாள் “வந்தேமாதரம்“ பாடலைப் பாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு வந்த வழக்கு “வந்தே மாதரம்“ எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தது என்பதாகும். ஒரு தேசத்தில் தேசபக்தியை வளர்ப்பதாகக் கருதப்படும் ஒரு பாடல். எந்த மொழியில் எழுதப்பட்டது என்பதற்கே நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்து...

பொதுத் தொண்டு ஒன்றே பெருமையைச் சேர்க்கும்

பொதுத் தொண்டு ஒன்றே பெருமையைச் சேர்க்கும்

ஒருவன் தனக்காக என்று ஏதேனும் காரியம் செய்து கொள்வதென்றால் அக்காரியம் பொதுமக்களுக்கான நற்காரியத்தைச் செய்து, அவர்களுடைய அன்புக்கும் பாராட்டுதலுக்கும் பாத்திரமாவதுதான்; இம்மாதிரிப் பலர் கூடி தன் மறைவுக்காக வருத்தப்படும் அளவுக்குப் பொதுத் தொண்டு ஆற்றுவது தான்.இதுவே ஒருவன் தனக்கெனச் செய்து கொள்ளும் காரியமாகும். மற்ற காரியமெல்லாம் தன் மனைவி மக்களுக்காகச் செய்யப்பட்டதாகக் கொள்ளப்பட்ட போதிலும் அவை ஊருக்குச் செய்யப்பட்டதாகத்தான் கண்டவர்களுக்குச் செய்ததாகத்தான் போய்விடும். ஒருவன் எவ்வளவு தான் சொத்துச் சேர்த்து வைத்துவிட்டுப் போனாலும் அது அவனுக்குப் பெருமை அளிக்காது; அதற்காக அவனுக்கு யாரும் மரியாதை செய்யவும் மாட்டார்கள். அச் சொத்து, மறைவின் போது அவனுடன் செல்வது இல்லை. ஒவ்வொருவரும் எந்த வகையில் இருந்தாலும், தங்கள் நேரத்தின் ஒரு பகுதியை, உழைப்பின் ஒரு பகுதியை, ஊதியத்தின் ஒரு பகுதியை , பொதுத் தொண்டிற்காக, ஏனைய மக்களுக்காகச் செலவிட வேண்டும். அதுதான் தனக்கென்று செய்து கொள்வதாகும்; மறைந்த பிறகும் தன் பெயர் நிலைத்து நிற்கச்...