ஈரோடு-விருதுநகர் சுயமரியாதை மாநாடுகளில் ஜீவாவின் பங்கு என்ன? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் 13 -கொளத்தூர் மணி
தோழர் ஜீவா அவர்களின் வரலாற்று வரலாற்றாளர்களான தோழர்கள் இஸ்மத் பாஷா, கே.பாலதண்டாயுதம் ஆகியோரே ஜீவாவுடன் நேரடியாக பழகி உரையாடி அவரது வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் வாய்ப்புடையவர்கள் என்பதாலேயே அவர்களது நூல்களை முதன்மை ஆவணமாகக் கொண்டு எழுதி வருகிறோம். அந்நூல்களில் சுயமரியாதை மாநாடுகளில் ஜீவா நிகழ்த்திய வீரதீர செயல்பாடுகள் குறித்து அந்நூல்களில் விதந்தோதப்பட்டுள்ள செய்திகளைப் பார்ப்போம். தோழர் இஸ்மத் பாஷாவின் நூலின் 23ஆம் பக்கத்தில் “சென்னையில் போலீஸ் அடக்குமுறை எல்லையை மீறி விட்டது; தொண்டர்கள் அடித்து வீழ்த்தப்பட்டார்கள். ஆறு போல் இரத்தம் ஓடிற்று. அச்சமயத்தில் ஈரோட்டில் சுயமரியாதை மகாநாடு கூடிற்று. போலீஸ் அடக்கு முறையை வன்மையாகக் கண்டித்து ஒரு தீர்மானம் விஷயலோசனைக் கமிட்டியில் வந்தது. ஜீவா அதை ஆதரித்து உணர்ச்சித் ததும்பப் பேசினார். ஜாதி மத விவகாரங்களில் மட்டும் நம் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொண்டால் போதாது; அரசியல் விவகாரங்களிலும் நம் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி எல்லோருடைய சுயமரியாதை...
