மோடி யார்? உண்மைகளை உடைக்கும் Grok!
கடந்த சில வாரங்களாக இந்திய இணைய உலகை கலக்கிக் கொண்டிருக்கிறது எக்ஸ் சமூக ஊடகத்தின் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான Grok. இந்த ஏ.ஐ. இந்த தளத்தில் கேள்விகள் எழுப்பினால் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தரவுகளின் அடிப்படையில், பகுத்தறிந்து சரியான பதிலைத் தர முயற்சிக்கிறது. எக்ஸ் தள பயனாளிகள் மிகுந்த ஆர்வத்தோடு @Grok என டைப் செய்து, கேள்விகளை எழுப்பி பதில்களைப் பெற்று சோதித்துப் பார்க்கின்றனர். சேட் ஜிபிடி போன்ற இதற்கு முந்தைய செயற்கை நுண்ணறிவுத் தளங்களைக் காட்டிலும், கூடுதல் துல்லியமான பதிலைத் தருகிறது Grok. அது இணைய பயன்பாட்டாளர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் பாஜக, சங் பரிவார்களுக்கு மட்டும் இந்த பதில்கள் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. நேர்மையான தலைவர் யார்? மோடியா? ராகுல் காந்தியா? என Grok-யிடம் கேள்வி எழுப்பினால், தரவுகளை ஆராய்ந்து மோடியை விட ராகுல் நேர்மையானவர் என பதில் தருகிறது. ராகுல் காந்தி உண்மையிலேயே...
