பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?

வாங்க வரலாறு பேசுவோம் பரப்புரை பயணம்..

இப்போதைய பேசுபொருளாய் எதிர்மறையாய் உருவாக்கப்பட்டிருக்கிற அரசியல் சூழலை ,நேர்மறையாய் எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு உருவானது இந்த பரப்புரைப் பயணம். திராவிடர் விடுதலைக் கழகத்தால் தமிழ்நாட்டின் ஐந்து முனைகளில் இருந்து 16-3- 2025 அன்று புறப்பட உள்ள இந்த பரப்புரை பயணம் 22-3-2025 அன்று மயிலாடுதுறையில் சங்கமித்து நிறைவு விழாவாக நிறைவடைய உள்ளது.
பயணத்தில் பறை இசை, கொள்கைப் பாடல்கள், கலைநிகழ்ச்சிகள், விளக்க உரைகள் இடம்பெறும்.பயண வழித்தடத்தில் துண்டறிக்கை வழங்கல் இயக்க நூல்கள் விற்பனையும் உண்டு. பயண வழித்தடத்தில் உள்ள கழக அமைப்புகள் பரப்புரை இடம், உணவு, தங்கும் இடம் போன்றவற்றை ஏற்பாடு செய்தும் ஒவ்வொரு நாள் முடிவிலும் பொதுக் கூட்டங்கள் நடத்தியும். பயணம் சிறக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். விரிவான தகவல்கள் அடுத்த இதழில் வெளியிடப்படும்.
பெரியார் முழக்கம் 20022025 இதழ்

You may also like...