ஆதித் தமிழர் பேரவை நடத்திய தீபாவளி எதிர்ப்பு கருத்தரங்கம்
தீபாவளி பண்டிகை என்பது தமிழர்களின் துக்கநாள் என்று அறிவித்த துணிவு , தந்தை பெரியார் ஒருவருக்கே இருந்தது, அதை பின்பற்றி ஆதித்தமிழர் பேரவை கடந்த மூன்று ஆண்டுகளாக தீபாவளியை புறக்கணித்து மக்களிடையே தொடர் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ஆதரவாகக் குரல் தந்த ஒத்த கருத்துடைய ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து கருத்தரங்கம் ஒன்றை ஆதித் தமிழர் பேரவை ஈரோட்டில் அக்.18ஆம் தேதி ‘தீபாவளி’ நாளில் நடத்தியது. ‘தீபாவளி’யை தமிழர்கள் புறக்கணிக்க இந்த கருத்தரங்கம் வேண்டுகோள் விடுத்தது. சாதிவெறி, மதவெறி, ஆதிக்க தலித் வெறி, அடிப்படை மதவெறி, ஆணவப் படுகொலைகள், பெண்கள் மீதான வன்முறைகள், கருத்துரிமை பறிப்பு, கல்வி உரிமை சிதைவு, மாநில உரிமை மறுப்பு என நீளும் பார்ப்பனிய பயங்கரவாதத்தால் நாட்டை மீண்டும் மனுவின் கொடுங்கோலுக்கு அழைத்துச் சென்று, ஒரே நாடு, ஒரே மொழி, ஒற்றை கலாச்சாரம் என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை நடைமுறைப்படுத்தி, வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய ஒன்றியத்தின் அரசியல்...