புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் – திருப்பூர் 22042018

‘புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் – திருப்பூர் – 22.04.2018.”

திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் 22.04.2018 ஞாயிறு அன்று மாலை 6.00 மணியளவில் திருப்பூர்,ஜீவா நகர், ரங்கநாதபுரத்தில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு தோழர் சு.பிரசாத் தலைமை தாங்கினார்.

தோழர்கள் சரத்,பவித்ரா,ஜெயா,இந்துமதி, சரசம்மா,சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தோழர் சின்னு அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

முதல் நிகழ்வாக ‘கியோ குசின்’ தற்காப்புக்கலை தோழர்களால் தற்காப்புகலை நிகழ்ச்சி நிகழ்த்திக் காட்டப்பட்டது.

பகுத்தறிவுப்பாடல்களை தோழர்கள் யாழினி,யாழிசை, இசைமதி ஆகியோர் பாடினர்.

”காவை இளவரசன்”அவர்களின் ‘மந்திரமா?தந்திரமா?’ அறிவியல் விளக்க நிகழ்ச்சி பொதுமக்களிடம் நல்ல வரவேற்ப்பைப்பெற்றது.

தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் கனல் மதி,தேன்மொழி,பிரசாந்த் ஆகியோரும் சிறப்பாக பேசினார்கள்.

தலைமைக்கழக பேச்சாளர் தோழர் ‘கோபி வேலுச்சாமி’ அவர்கள் நகைச்சுவையாக பகுத்தறிவுக்கருத்துக்களுடன் உரையாற்றினார்.

நிறைவாக கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் பொதுக்கூட்டத்திற்கு உழைத்த தோழர்களுக்கு புத்தகங்களை பரிசளித்து புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பணி குறித்து சிறப்புரையாற்றினார்.

இப்பொதுக்கூட்டத்தில் கழக பொருளாளர் துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றத்தலைவர் வீ.சிவகாமி, மாவட்டத்தலைவர் முகில்ராசு, மாவட்டச் செயலாளர் நீதிராசன்,இணையதள பொறுப்பாளர் விஜயகுமார்,மாவட்ட அமைப்பாளர்கள் சங்கீதா,அகிலன், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் தேன்மொழி, தமிழ்நாடு மாணவர் கழக மாநகர அமைப்பாளர் கனல்மதி,கழக புறநகர் அமைப்பாளர் பிரசாந்த்,கோவை மாவட்ட த.மா.க பொறுப்பாளர் வைதீசுவரி,பொள்ளாச்சி த.மா.க. அமைப்பாளர் சபரி,வெள்ளிங்கிரி, அரிதாசு, வினோதினி மடத்துகுளம் மோகன், நாமக்கல் மாவட்ட செயலாளர் முத்து பாண்டி கோவை மாநகர செயலாளர் நிர்மல்,ஜெயந்த், சென்னிமலை மாணவர் கழகத்தின் நவீன்,சர்மிளாஉள்ளிட்ட கழகத் தோழர்களும் அப்பகுதி வாழ் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

தோழர் நகுலன் அவர்கள் நன்றியுரையுடன் பொதுக்கூட்டம் நிறைவடைந்தது.

பொதுக் கூட்டத்திற்கு முன் பேராசிரியர் சுபவீ அவர்களின் “வானியலும்,ஜோதிடமும்” எனும் குறுவட்டு அப்பகுதியில் ஒலிபரப்பப்பட்டது. சுமார் 50 ஜோதிடர்கள் வாழும் அப்பகுதியில் பொதுமக்களிடையே பேரா.சுபவீ அவர்களின் ஜோதிடம் குறித்த இந்த ஆய்வுரை நன்கு சென்று சேர்ந்து மிகுந்த வரவேற்ப்பையும் பெற்றது. பொதுமக்களில் பலர் நேரில் வந்திருந்து பாராட்டுக்களை தெரிவித்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சிக்களுக்கு கூட அப்பகுதியில் இவ்வளவு கூட்டம் கூடுவதில்லை எனும் அளவிற்கு பெருந்திரளாக அந்த பகுதி மக்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்து கூட்டத்தை சிறப்பித்தனர். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் அதற்கு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிப்போம் என கலந்து கொண்ட பொதுமக்களில் பல கழகத் தோழர்களிடம் உறுதியளித்தது மேலும் உற்சாகத்தை அளித்தது.

Image may contain: 24 people, people smiling

You may also like...