திருப்பூரில் எழுச்சியுடன் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் 22.04.2018 ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில்ஜீவா நகர், ரங்கநாதபுரத்தில் நடைபெற்றது. சு.பிரசாத் தலைமை தாங்கினார். தோழர்கள் சரத், பவித்ரா, ஜெயா, இந்துமதி, சரசம்மா,சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சின்னு வரவேற்புரையாற்றினார்.

முதல் நிகழ்வாக ‘கியோ குசின்’ தற்காப்புக்கலை தோழர்களால் தற்காப்பு கலை நிகழ்ச்சி நிகழ்த்திக் காட்டப்பட்டது. பகுத்தறிவுப் பாடல்களை யாழினி, யாழிசை, இசைமதி ஆகியோர் பாடினர்.  காவை இளவரசன் ‘மந்திரமா? தந்திரமா?’ அறிவியல் விளக்க நிகழ்ச்சி பொது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் கனல் மதி, தேன்மொழி, பிரசாந்த் உரையைத் தொடர்ந்து,  தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி நகைச்சுவையாக பகுத்தறிவுக் கருத்துக்களுடன் உரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுக்கூட்டத்திற்கு உழைத்த தோழர்களுக்கு புத்தகங்களை பரிசளித்து, புரட்சியாளர் அம்பேத்கர் பணி குறித்து சிறப்புரையாற்றினார். நகுலன்  நன்றியுரையுடன் பொதுக்கூட்டம் நிறைவடைந்தது.

பொதுக் கூட்டத்திற்கு முன் பேராசிரியர் சுபவீ “வானியலும்,ஜோதிடமும்” எனும் குறுவட்டு அப்பகுதியில் ஒலிபரப்பப்பட்டது. சுமார் 50 ஜோதிடர்கள் வாழும் அப்பகுதியில் பொதுமக்களிடையே பேராசிரியர் சுபவீ ஜோதிடம் குறித்த இந்த ஆய்வுரை நன்கு சென்று சேர்ந்து மிகுந்த வரவேற்பையும் பெற்றது. பொதுமக்களில் பலர் நேரில் வந்திருந்து பாராட்டுக்களை தெரிவித்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் முழக்கம் 03052018 இதழ்

You may also like...