நாகர்கோயிலில் அம்பேத்கர் நினைவு நாள் கூட்டம்

அம்பேத்கர் 127ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 14.4.2018 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நாகர்கோவில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு தெருமுனைப் பரப்புரைக் கூட்டம் வழக்குரைஞர் வே. சதா (மாவட்ட தலைவர்) தலைமையில் நடைபெற்றது. விஷ்ணு வரவேற்புரை யாற்றினார். தோழர்கள் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சவகர், தமிழ் மதி, நீதி அரசர், ஜெயன், சூசையப்பா ஆகியோர் உரையாற்றினர். கூட்டத்தில் மஞ்சுகுமார், சந்தோஸ், இராம சுப்ரமணியன், சுசீலா, சாந்தா உள்ளிட்ட தோழர்கள் கலந்துக்கொண்டனர். அனீஸ் நன்றிகூற கூட்டம் முடிவுற்றது.

பெரியார் முழக்கம் 03052018 இதழ்

You may also like...