கழகத்தின் பரப்புரைகள் – ஆர்ப்பாட்டங்கள் பள்ளிப்பாளையத்தில் ஆசிபாவுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் சார்பில் இந்துத்துவ வெறியர்களால் வன்புணர்ந்து கொல்லப்பட்ட ஆசிஃபாவிற்கு நீதி கேட்டும், இந்துத்துவ பாஜக அரசைக் கண்டித்தும் திராவிடர் விடுதலைக் கழகம், தோழமைக் கட்சிகள் ஒன்றிணைந்து பள்ளிப்பாளை யத்தில் 17.4.2018 அன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மாவட்டப் பொருளாளர் முத்துப்பாண்டி தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலையில்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகம், தமுமுக, பு.இ.மு. தோழர்கள் கண்டன  உரைக்குப் பிறகு கழக அமைப்பாளர் ஈரோடு ரத்தினசாமி கண்டன உரையாற்றினார்.

ஆசிபாவும் தேசத் துரோகியா?

சென்னை-மயிலாடுதுறையில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

சிறுமி ஆசிபாவை இந்துத்துவா கும்பல், வன்புணர்ச்சி செய்து படுகொலை செய்ததைக் கண்டித்து சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 20.4.2018 மாலை 4 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகே பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிகார வெறியில் மனிதத்தைக் கொல்லாதே; ஆசிபாவும் தேசத் துரோகியா? பச்சிளங் குழந்தைகளையும் சீரழிக்கும் மதவெறியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இளம் தமிழகம் அமைப்பைச் சார்ந்த செந்தில், குணங்குடி அனிஃபா (மனித நேய மக்கள் கட்சி), சைலேந்திரர் (தமிழர் விடியல் கட்சி), தெகலான் பாகவி (எஸ்.டிபி.அய். தலைவர்), திருமுருகன் காந்தி (மே 17) ஆகியோர் கண்டன உரையாற்றினர். காஞ்சி மாவட்டக் கழகப் பொறுப்பாளர் இரவி பாரதி நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் வேழவேந்தன், இரா. உமாபதி, ஏசுகுமார், செந்தில் எஃப்டி.எல்., மயிலை சுகுமார், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் உள்ளிட்ட கழகத் தோழர்களும், திருமூர்த்தி, அருண், ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர் களும், தமிழ்ப்புலிகள் அமைப்பைச் சார்ந்த நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட தோழர்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். கழகத் தோழர் இரண்யா ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் ஏப்.16 அன்று ஆசிபா படுகொலையைக் கண்டித்து மயிலாடுதுறை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ஆர்ப்பாட் டத்தில் இளையராஜா, மகேசு, செந்தில், நடராஜ், மகாலிங்கம் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் பங்கேற்றன.

பெரியார் முழக்கம் 03052018 இதழ்

You may also like...