மகளிர் தின மாநாடு – கோபி 15042018
மகளிர் தின மாநாடு – கோபி – 15.04.2018.
திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக கோபிசெட்டிபாளையத்தில் 15.04.2018 ஞாயிறு அன்று பெண்ணே எழு விடுதலை முழக்கமிடு மகளிர் தின மாவட்ட மாநாடு பெரியார் திடலில் நடைபெற்றது.
மாநாட்டின் முதல் நிகழ்வாக நிமிர்வு கலைகுழவினரின் பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோவை இசைமதி மற்றும் திருப்பூர் பெரியார் பிஞ்சு யாழினி ஆகியோர் பெரியார் மற்றும் அம்பேத்கர் பாடல்களை பாடினார்கள்.
அதனை தொடந்து பெண்கள் பங்கேற்ற வழக்காடு மன்றம் நடைபெற்றது. அதில் பெண்கள் ஒவ்வொரு இடத்திலும் எவ்வாறு அடிமைபடுத்த படுகிறார்கள் என்பது பற்றியும் அதற்கான தீர்வு குறித்தும் வழக்காடு மன்றம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் முடிவுற்றதும் பொதுகூட்ட மேடை நிகழ்வு தொடங்கியது.
நிகழ்விற்கு தோழர் மணிமொழி அவர்கள் தலைமை ஏற்க தோழர் கோமதி வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து தோழர் சிவகாமி அவர்கள் மாநாடு தீர்மானத்தை வாசித்தார். அதனை தொடர்ந்து ஆவணப்பட இயக்குனர் தோழர் திவ்யபாரதி,தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவகாமி, கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி ஆகியோர் மாநாட்டு சிறப்புரையாற்றினார்கள்.தோழர் நதியா நன்றி கூறினார். மாநாடு சிறப்பாக நடைபெற கள பணியாற்றிய பெண் தோழர்களுக்கு கழகத்தலைவர் நினைவு பரிசு வழங்கி சிறப்புசெய்தார்.
மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய தோழர் திவ்யபாரதி அவர்களுக்கு தோழர் பிரேமா,தோழர் சிவகாமி அவர்களுக்கு தோழர் நாத்திக இராணி, கழகத்தலைவர் அவர்களுக்கு தோழர் கற்பகம் ஆகியோர் நினைவுபரிசுகளை வழங்கினார்கள்.
மாநாட்டில் ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பிரச்சார வாகனத்தை அறிமுகம் செய்து இனிவரும் மாதங்களில் கிராம பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற இவ்வாகனம் பயன்படுத்தப்படும் எனவும் கழகத்தின் மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் அறிவித்தார். மாநாட்டின் இறுதி வரை பொது மக்கள்மற்றும் தோழர்கள் பெரும்திரளாக கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் கோமாதா பிரியாணி பரிமாறப்பட்டது. மாநாடு சிறப்பாக நடைபெற கழக ஆண் மற்றும் பெண்தோழர்கள் வேறுபாடு இன்றி சிறப்பாக களப்பணியாற்றினார்கள்.